வியாழன், 1 ஜூன், 2017

அல்லாஹ்வின் கருணை மழை பொழியட்டும்.

அல்லாஹ்வின் கருணை மழை பொழியட்டும்.

قوله تعالي : "وسعت رحمتي كل شيء".

قول النبي صلي الله عليه وسلم : "ان رحمتي سبقت غضبي"

அல்லாஹூ தஆலாவின் கருணை என்பது இந்த உலகை இயக்கும் ஓர் மந்திரச் சொல்லாகும். இறைவனின் கருணை இல்லாமல் இங்கு எதுவும் அசையாது அந்த கருணைகள் நிரம்பிய ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்களில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

அவனுடைய விசேஷமான ஒரே ஒரு கருணையின் மூலம் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் .
عن أبي هريرة -رضي الله عنه- قال: سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول: (جعل الله الرحمة في مائة جزء، فأمسك عنده تسعة وتسعين جزءاً، وأنزل في الأرض جزءاً واحداً، فمن ذلك الجزء يتراحم الخلق حتى ترفع الفرس حافرها عن ولدها خشية أن تصيبه) رواه البخاري.

அல்லாஹ் ரஹ்மத்தை நூறு பங்குகளாக்கி தன்னிடம் 99 ரஹ்மத்துகளை வைத்துக் கொண்டு ஒரு பங்கை இந்த உலகத்திற்கு இறக்கி வைத்தான் அந்த ஒரு பங்கு ரஹ்மத்தை கொண்டு தான் படைப்பினங்கள் தங்களுக்கிடையே இறக்கம் காட்டிக் கொள்கின்றன குதிரை தன் குட்டியின் மீது கால் குளம்பு படாதிருக்க காலை உயர்த்துவதும் இந்த கருணையினால் தான். (நூல்: புகாரி)

وفي رواية له: (إن الله خلق الرحمة يوم خلقها مائة رحمة فأمسك عنده تسعاً وتسعين رحمة، وأرسل في خلقه كلهم رحمة واحدة، فلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمة لم ييأس من الجنة، ولو يعلم المؤمن بكل الذي عند الله من العذاب لم يأمن من النار).
வேறு ரிவாயத்தில் காஃபிர்கள் அல்லாஹ்விடம் உள்ள ரஹ்மத்துகளை அறிந்திருப்பார்களானால் சுவனத்தில் இருந்து நிராசையாக மாட்டார்கள். முஃமின்கள் அல்லாஹ்விடம் உள்ள வேதனையை அறிந்தால் நரகிலிருந்து நிம்மதியாக இருக்க மாட்டார்கள். என்றும் வந்துள்ளது.

தனது நேசர்களின் மீது கருணை காட்டல்.

قال تعالى: إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ {الأعراف:56}.
அல்லாஹ்வின் அருள் நல்லடியார்களுக்கு சமீபமாக உள்ளது.

وقال تعالى: إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ يَرْجُونَ رَحْمَةَ اللَّهِ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ{البقرة:218}.
நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்;. மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.

திருமறை குர்ஆனில் இறைவன் தனது ரஹ்மத்தை  தனது நபிமார்களுக்கும் நேசர்களுக்கும்  இக்கட்டான சிரமமான நேரங்களில்  எல்லாம் இறக்கியதை காணலாம்.

இப்ராஹீம் அலை அவர்களை நெருப்புக் குண்டத்தில் போடப்பட்ட சமயம்.
" قلنا ينار كوني بردا وسلاما على ابراهيم "
என்றும்,
யூனுஸ் அலை மீன் வயிற்றில் விழுங்கப் பட்ட சமயம்.
"و نجيناه من الغم"
என்றும்,
அய்யூப் அலை பிணியால் சோதிக்கப் பட்ட சமயம்.
فكشفنا ما به من ضر وآتيناه اهله و مثلهم معهم رحمة من عندنا.....
என்றும்,
நபி மூஸா அலை அவர்களையும் அவர் தம் கூட்டத்தினரையும், ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றிய போது
يبني اسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم....
என்றும்.
இறைவன் தனது கருணையை வெளிப்படுத்தினான். இக்கட்டான எல்லா  சமயங்களிலும் அவனுடைய ரஹ்மத் தான் நம்மை பாதுகாக்கிறது.

அல்லாஹ் படைப்பினங்களை  படைப்பதற்கு முன்பே அர்ஷின் மீது பதிவு செய்து வைத்தான் " என் கருணையாகிறது என் கோபத்தை  மிகைத்து விட்டது"

حدثنا أبواليمان أخبرنا شعيب حدثنا أبوالزناد عن الأعرج عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إن الله لما قضى الخلق كتب عنده فوق عرشه إن رحمتي سبقت غضبي( رواه البخاري )

இறைவன் தன் மீது விதியாக்கிக் கொண்ட இந்த விதியினால் தான் தவறு செய்பவர்களும் இறைவனின் அருட்கொடைகளை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَٰكِنْ يُؤَخِّرُهُمْ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ

மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். (-Sura An-Nahl, Ayah 61)

தனக்கு மாறு செய்பவர்களின் மீதும் இறைவனின் கருணை.

அல்லாஹ்வின் கருணை எவ்வளவு விசாலமானது என்றால் அவன் தனது அடியார்களில முஸ்லிம்கள், காஃபிர்கள்
என வேறுபடுத்தாமல் பொதுவாக ஒரு அறிவிப்பு செய்கிறான்.

"قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ"
"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
(-Sura Az-Zumar, Ayah 53)

هذه الآية الكريمة دعوة لجميع العصاة من الكفرة وغيرهم إلى التوبة والإنابة وإخبار بأن الله تبارك وتعالى يغفر الذنوب جميعا لمن تاب منها ورجع عنها وإن كانت مهما كانت وإن كثرت وكانت مثل زبد البحر ولا يصح حمل هذه على غير توبة لأن الشرك لا يغفر لمن لم يتب منه

அல்லாஹ்வின் கருணைக்கு எல்லை இல்லை தனக்கு மாறு செய்தாலும் நீங்கள் என் அடியார்களே உங்களுடைய எத்தகைய பாவத்தையும் பொருட்படுத்த மாட்டேன் நான் மன்னித்து விடுவேன் என்று பொதுப் பிரகடனம் செய்கின்றான்.
قال البخاري
« 4810 » حدثنا إبراهيم بن موسى أخبرنا هشام بن يوسف أن ابن جريج اخبرهم قال يعلى إن سعيد بن جبير أخبره عن ابن عباس رضي الله عنهما أن ناسا من أهل الشرك كانوا قد قتلوا فأكثروا وزنوا فأكثروا فأتوا محمدا صلى الله عليه وسلم فقالوا إن الذي تقول وتدعو إليه لحسن لو تخبرنا أن لما عملنا كفارة فنزل « والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون » ونزل « قل يا عبادي الذي أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله » وهكذا رواه مسلم « 122 » وأبو داود والنسائي « كبرى 11449 » من حديث ابن جريج عن يعلى بن مسلم المكي عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما به المراد من الآية الأولى قوله تعالى « إلا من تاب وآمن وعمل عملا صالحا » الآية
இணை வைப்பாளர்களில் ஒரு கூட்டம் அவர்கள் கொலை, விபச்சாரம் என நிறைய பாவங்களை செய்து விட்டு நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் வந்து நீங்கள் எதை கூறுகிறீர்களோ, இன்னும் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அது மிக நல்லது என்கினும் எங்கள் பாவத்தை மன்னிக்கும் படியான தகவல்களை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்ட போது இந்த ஆயத் இறங்கியது.

وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ ۚ وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًا

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا

கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன் 25:68,69,70)

பின்பு பின்வரும் வசனம் இறங்கியது .

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ"
இது அவர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
وقال الإمام أحمد « 5/275 » حدثنا حسن حدثنا ابن لهيعة حدثنا أبو قبيل قال سمعت أبا عبد الرحمن المري يقول سمعت ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما أحب أن لي الدنيا وما فيها بهذه الآية « قل يا عبادي الذين أسرفوا على أنفسهم » إلى آخر الآية فقال رجل يا رسول الله فمن أشرك فسكت النبي صلى الله عليه وسلم ثم قال ألا ومن أشرك ثلاث مرات تفرد به الإمام أحمد
இந்த ஆயத் இறங்கிய போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் இந்த ஆயத்திற்கு பகரமாக முழு உலகமும் கிடைப்பதை நான்  பிரியப் பட மாட்டேன்.
இந்த ஆயத் இறங்கிய போது ஒரு மனிதர் கேட்டார் இணை வைப்பாளர்களாக இருந்தாலுமா? (அல்லாஹ் மன்னிப்பான்?)
என்று நபி ஸல் அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள் பின்பு இணை வைப்பாளராக இருந்தாலும் சரியே என்று மூன்று முறை கூறினார்கள்.

وقال الإمام أحمد « 4/385 » أيضا حدثنا سريج بن النعمان حدثنا نوح بن قيس عن أشعث بن جابر الحداني عن مكحول عن عمرو بن عبسة رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم شيخ كبير يدعم على عصا له فقال يا رسول الله إن لي غدرات وفجرات فهل يغفر لي فقال صلى الله عليه وسلم ألست تشهد أن لا إله إلا الله قال بلى وأشهد أنك رسول الله فقال صلى الله تعالى عليه وعلى آله وسلم قد غفر لك غدراتك وفجراتك تفرد به أحمد
அஹ்மது இமாம் தனித்து அறிவிப்பு செய்கிற செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் ஒரு முதியவர் கைத்தடியை ஊன்றியவாறு தள்ளாடிக் கொண்டு வந்து நான் நிறைய பாவங்களை செய்து விட்டேன் எனக்கு ஏதாவது தவ்பா உண்டா? எனக் கேட்டார் அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் "நீர்  அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்கு உரியவர் யாரும் இல்லை என்று சாட்சி சொல்கிறீரா? என்று கேட்க அதற்கவர் ஆம் நான் நீங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன் என்றார் அதற்கு நபியவர்கள் உன் தவறுகளையும், பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விட்டான் என்றார்கள்.

இவ்வுலகைப் பொருத்த வரை அல்லாஹ் ஷிர்க் உள்ளிட்ட அனைத்து பெரும் பாவங்களையும் தனது பெரும் கிருபையால் மன்னித்து  விடுகிறான் இறைவனின் கிருபை மறுமையிலும் தொடருவதற்கு ஷிர்கை விட்டும் நீங்கியிருப்பது நிபந்தனையாகும்.

وقال جل جلاله « لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب اليم » ثم قال جلت عظمته « أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم » وقال تبارك وتعالى « إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا » قال الحسن البصري رحمة الله عليه انظروا إلى هذا الكرم والجود قتلوا أولياءه وهو يدعوهم إلى التوبة والمغفرة.
இறைவன் மூன்றில் மூன்றாமவன் என்று கூறிய கிறிஸ்தவர்கள் குறித்து பேசி விட்டு  அவர்கள் இதிலிருந்து தவிர்ந்திருக்க இல்லையானால் துன்புறுத்தும் வேதனை உள்ளது என்று கூறும் இறைவன்..... அவர்கள்  திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கக் கூடாதா? என்று தன் கருணை மழையை பொழிகிறான்.

إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنين.....
"நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு." (-Sura Al-Buruj, Ayah 10)


ஹஸன் பஸரீ (ரஹ்) கூறுவார்கள். 'இந்த ஆயத்தில் இறைவன் தன் அடியார்களை நேசர்களை வேதனை செய்தவர்களை பற்றி பேசுகிற பொழுது கூட அவர்கள் தவ்பா செய்யாவிட்டால் துன்புறுத்தும் வேதனை உள்ளது என்று கூறுகிறான்...
தன் நேசர்களை வேதனை செய்தவர்களை கூட தவ்பாவின் பக்கம் அழைக்கிறான் அவன் கருணை எவ்வளவு விசாலமானது.

(தஃப்ஸீர் இப்னு கஸீர்)

அவனுடைய கருணையிலிருந்து யாரும் தேவையற்றிருக்க முடியாது.

நபி அய்யூப் அலை அவர்கள் பெரும் செல்வந்தராக இருந்தார்கள். இறைவன் அவர்களை பெரும் பிணியைக் கொண்டு சொதித்த பின்னர் மீண்டும் செல்வங்களை திரும்பக் கொடுத்தான்  அவர்கள் ஒரு நாள் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கிற போது அல்லாஹ் நபியை சோதிக்க நாடி தங்க வெட்டுக் கிளிகளை மழை போல இறக்கினான் இதைப் பார்த்த அய்யூப் நபி அலை அவர்கள் குளிப்பதை விட்டு விட்டு வெட்டுக் கிளிகளை பொறுக்கலானார்கள். இறைவன் கேட்டான் அய்யூபே நான் உனக்கு போதுமான அளவு செல்வத்தை தரவில்லையா? பிறகு ஏன் இந்த தங்க வெட்டுக்கிளிகளை பொறுக்குகிறீர்கள்? என்று கேட்க நபி அய்யூப் அலை அவர்கள் கூறினார்கள் யா அல்லாஹ்! நான் எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் உன் கருணையை விட்டும் தேவையற்றிருக்க முடியாது எனவே நான் உன் அருளால் நீ இறக்கி வைத்த இந்த தங்க வெட்டுக்கிளிகளை அள்ளினேன் என்றார்கள். (நூல் : இஸ்லாஹீ குதுபாத்)

6098 حدثنا آدم حدثنا ابن أبي ذئب عن سعيد المقبري عنأبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن ينجي أحدا منكم عمله قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمة سددوا وقاربوا واغدوا وروحوا وشيء من الدلجة والقصد القصد تبلغوا
ஹஜ்ரத் அபூஹூரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். உங்களில் யாரையும் அவருடைய அமல் காப்பாற்றாது. ஸஹாபாக்கள் வினவினார்கள் உங்களையுமா? அல்லாஹ்வின்தூதரே! நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் "என்னையும் என் அமல் காக்காது அல்லாஹ் அவன் கருணையால் என்னை சூழ்ந்து கொண்டாலே தவிர....

நபிகள் நாயகமே அல்லாஹ்வின் கருணையை ஆதரவு வைத்துள்ள திலையில் நாம் எந்தளவு பேராதரவுடன் அமல் செய்ய வேண்டும்,

قال صلى الله عليه وسلم: "إنما يرحم الله من عباده الرحماء"، فمن جاد على عباد الله، جاد الله عليه بالعطاء والفضل،
அல்லாஹ் கருணையானவன் எனவே "தன் அடியார்களில் கருணை உள்ளம் கொண்டவர்களுக்கே மிக்க கருணை காட்டுகிறான்" என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் இந்த ரமலான் மாதத்தில் நம் மீது  கருணை மழை பொழிந்திருப்பதைப் போல நாமும் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்கவும்,தேவையுள்ளவர்களுக்கு நம் பொருளாலும், உடல் உழைப்பாலும் உதவி செய்வதை இறைவன் பிரியப்படுகிறான்.

அவ்வாறு நாம் செய்தால் அவர்களின் நன்மைகளில் குறைவேதுமின்றி நிறைவாக நமக்கும் வழங்கி பெரும் கிருபை செய்ய இறைவனின் ரஹ்மத் எதிர் நோக்கியுள்ளது.

இறைவனின் கருணைகளை வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாது.வற்றாத அவனுடைய கருணைகளை இம்மையிலும் மறுமையிலும் அடைந்து கொள்கிற பெரும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கிடுவானாக ஆமீன்.