வியாழன், 30 மார்ச், 2017

ஒற்றுமையே பலம்.

ஒற்றுமையே பலம்.

قول الله عز وجل :
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا.

قول النبي صلى الله عليه وسلم :
"لَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ" (رواه البخاري

இறைவன் ஒரு தந்தை ஒரு தாயிலிருந்து மனித சமூகத்தை படைத்தது அனைவரும்  ஒரு தாய் மக்களைப் போல ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதற்குத் தான்.  எப்போது நன்மையில் தீமை கலந்து அல்லாஹ்வின் நாட்டப்படி  இறைவனுக்கு மட்டும்  வழிப்படுவது என்ற நிலை மாறி ஷைத்தானின் சூழ்ச்சிகளில் சிக்கி  மனித குலம் இறைவனுக்கு மாறு செய்ய துவங்கியதோ அன்று துவங்கிய கருத்து வேற்றுமை இன்று பலமாகி ஒரே இறைக் கோட்பாடுகளைக் கொண்ட இஸ்லாமிய சமூக மக்களிடமும் பரவி இன்று அவர்களை சீரழித்து வருகிறது.

ஏக இறைவனை நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் அவர்களின் உலக காரியங்களில் மட்டுமல்ல  அவர்களின் மார்க்க காரியங்களிலும் கருத்து வேறுபாடுகளிள் சிக்கித் தவிக்கிறார்கள். இதனால் இவர்களின் உலக வாழ்வும்,மறு உலக வாழ்வும் வலுவிழந்து சூனியமாகிக் கொண்டிருக்கிறது.

ஆம் ஒற்றுமையை தொலைத்தவர்களை கருத்து வேறுபாடுகளில் திளைப்பவர்களை திருமறையில் இறைவன் அப்படித்தான் குறிப்பிடுகிறான்.


وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன்- 8: 46)

ஒற்றுமையின் வலிமை.

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 4:103 )

மதீனாவில் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்(اوس-خزرج) என்ற  இரு சமூகத்தினரின் மோசமான  நிலையை எடுத்துக் கூறி இஸ்லாத்தை ஏற்ற பிறகு அவர்களின் உயர்வான உன்னதமான நிலையையும் இறைவன் கோடிட்டு காட்டுகிறான்.
உஹது போர்க்களத்தில் உயிர் போகும் தருவாயில் கூட  இவர்கள் தங்களை விட பிறருக்கு முன்னுரிமை கொடுத்து  கடும் தாகத்திலும் நீர் புகட்டி  உதவிய மயிர்கூச்சரியும் நிகழ்வுகள் எல்லாம் ஒற்றுமையின் தாக்கங்களே!

இஸ்லாத்தில் தொழுகையில் துவங்கி ஏனய எல்லா வணக்கங்களிலும் இறைவன் ஒற்றுமையை வலியுறுத்துகிறான். ஒரே காலத்தில் ஒரே நேரத்தில் நோன்பு நோற்கிறோம், ஒரே காலத்தில் ஒரே இடத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றுகிறோம். யுத்த களத்திலும், தொழுகையின் ஜமாஅத்திலும் நாம் ஒன்று பட்டு நிற்பதை இறைவன் விரும்புகிறான்.
ஒன்று பட்டு செய்யும் வணக்கங்களுக்கு தனித்து செய்யும் வணக்கங்களை விட மேன்மையையும், அபரிமிதமான நன்மைகளையும் இறைவன் வழங்குகிறான். அதற்கு காரணம்  ஒன்று பட்டு செய்யும் செயல்களில் பலம் அதிகம் என்று நமக்கு உணர்த்தவே!

إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُمْ بُنْيَانٌ مَرْصُوصٌ

எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் 61:4)

ஒற்றுமையாக செயல்படுவது மனிதனின் சாமர்த்தியம் அல்ல இறைவனின் கருணை அதற்கு நாம் முயற்சி செய்வதோடு இறைவனிடம் இறைஞ்சிடவும் வேண்டும்.

وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ ۚ لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ

மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 8:63)

இஸ்லாமிய சமூகம் பகைமை மறந்து இறைவனுக்காக  ஒன்று பட்டிருந்த காலமெல்லாம் உலகை ஆட்சி செய்து கொண்டிருந்தது.

حينما وقع الخلاف المشهور بين علي بن أبي طالب -رضي الله عنه- ومعاوية بن أبي سفيان، وكان الحقّ مع أمير المؤمنين عليّ، حاول قيصر الروم استغلال الفرصة ليتوصّل إلى مآربه،
فأرسل إلى معاوية يقول: "من قيصر ملك الرّوم إلى معاوية بن أبي سفيان، أمّا بعد، علِمنا بما وقع بينكم وبين علي بن أبي طالب، فلو أمرتني أرسلت لك جيشا يأتون إليك برأسه"،
فردّ عليه معاوية: "من معاوية بن أبي سفيان إلى هرقل، أمّا بعد: أخَوان تشاجرا فما بالك تدخل فيما بينهما، إن لم تخرس، أرسلت إليك بجيش أوله عندك وأخره عندي، يأتونني برأسك أقدّمه لعلي بن أبي طالب".
(تاريخ الإسلام)
இஸ்லாமிய கலீஃபா ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் அவர்களிடம் கருத்து வேற்றுமை கொண்டிருந்த  ஹஜ்ரத்  அமீர் முஆவியா ரலி அவர்களுக்கு ரோமானிய மன்னன் ஹிர்கலிடமிருந்து கடிதம் வந்தது 'தான்  படையை னுப்பி அலீ  ரலி அவர்களின் தலையை கொண்டு வர உதவுவதாக  எழுதப்பட்டிருந்தது,  ஹஜ்ரத்  முஆவியா ரலி அவர்கள் பதில் எழுதினார்கள்! '"சகோதரர்கள் இருவருக்கு மத்தியில் நடக்கும் உள் பிரச்சினையில் நுழைய நீ யார்?  நீ விலகிக் கொள்ளவில்லை என்றால் நான்  உனக்கு எதிராக  ஒரு  ெரும்படையை அனுப்புவேன் அதன் துவக்கம் என் மண்ணில் இருந்து உன் நாடு வரை பரவியிருக்கும் அவர்கள் உன் தலையை கொய்து வருவார்கள் அதை அலீ ரலி அவர்களிடம் நான்  சமர்ப்பிப்பேன்'" என்று கூறினார்கள்.


எனவே தான் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்களை  இஸ்லாமிய எதிரிகளால்  வீழ்த்த முடியவில்லை. மார்க்கம் என்று வந்து விட்டால் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டிருந்தார்கள் ஸஹாபாக்கள்.

அல்லாஹ்வின் உதவி ஒன்றுபடுவதில் உள்ளது.
عن عبد الله ابن عمر رضي الله عنهما قال ,قال رسول الله صلى الله عليه وسلم" يد الله مع الجماعة" رواه البخاري
وفي رواية.....
إن الله لا يجمع أمتي أو قال : أمة محمد على ضلالة ويد الله مع الجماعة ، ومن شذ شذ إلى النار

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ்வின் உதவி ஒன்றுபட்டு செயல்படுவதில் இருக்கிறது.
என் சமூகம் வழிகேடுகளில் ஒன்றிணையாது. யார் ஒன்று படுவதிலிருந்து விலகி தனித்திருப்பாரோ அவர் நரகிலும் தனித்திருப்பார்"
(நூல் : புகாரி )

இறைவன் பல இடங்களில்  நம்மை ஒன்று படுத்தும் படியான வார்த்தைகளைக் கொண்டு தான் அழைக்கிறான்
... ان الذين آمنوا " என்று
நம் பெயரைக் கொண்டு வமிசப் பெயரைக் கொண்டோ பிரிக்க அவன் விரும்பவில்லை. அல்லாஹ்வின் மீது  நம்பிக்கை கொண்டோரே! என்று நம்மை ஒன்றுபடுத்தி ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகிறான்.
அதே போல அவனிடம் பிரார்த்திக்கும் வழிமுறையை கூட "إياك نعبد وإياك نستعين " என்று ஒன்று பட்டு அழைக்கும் படி கற்றுக் கொடுக்கிறான்.

பல தெய்வங்களை வணங்கக் கூடிய மாறுபட்ட கொள்கைக் கோட்பாடுகளைக் கொண்ட இஸ்லாமிய எதிரிகள் கூட நமக்கு எதிராக செயல்படுவதில் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால் ஒரே இறைவனை வணங்கக் கூடிய ஒரே மார்க்கத்தை பின்பற்றக் கூடிய நாம் மார்க்கத்தை பாதுகாப்பதற்குக் கூட கருத்து வேறுபாடு களைக் களைந்து ஒன்று பட தயாராகுவதில்லை என்பது வேதனைக்குரியது.

உலகெங்கிலும் இஸ்லாமிய எதிர்ப்பில் வல்லரசு நாடுகள் தொடங்கி எல்லா நாடுகளும் கைகோர்த்து செயல்படுகிறார்கள் நம் நாட்டில் பாசிச சக்திகள் வலுவடைந்து வருகிறது.
இன்னும் இந்தியா முழுவதிலும் அவர்கள் ஆட்சி அமைக்க முயன்று வருகிறார்கள். ஒரு உபி மாநிலத்தில் அவர்கள் பெற்ற  பெரும்பான்மைக்கே  என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கருத்து வேற்றுமைகளை  களைய வேண்டியதன் அவசியம்.

لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ ۗ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ ۚ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ

மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
(அல்குர்ஆன் 13:11)

நாம் இறைவனுக்காக ஒன்று பட்டிருந்த காலமெல்லாம் அவனுடைய உதவி கிடைத்தது. நாம் சுயநலவாதிகளாக மாறி விட்டதால் அவனுடைய சோதனையை எதிர் கொள்கிறோம்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் வளர்ச்சியில் பொறாமை கொள்வதும், அனைவரும் தலைமையை விரும்புவதும், எந்தத் தலைமைக்கும் கட்டுப்பட்டு நடக்க மறுப்பதும், மார்க்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்ய முன் வராததும், இன்ன பிற ஒற்றுமையை குலைக்கும் காரியங்களால் பிரிந்து மேய்ந்து கொண்டிருக்கும் ஆட்டுக் கூட்டத்தை ஓநாய்கள் வேட்டையாடுவதைப்  போல நம்மை எதிரிகள் வேட்டையாட எத்தனிக்கிறார்கள்.
மார்க்கத்திற்காக நாம் ஒன்று படாமல் உலக ஆசையில் திளைத்தால் இப்படி ஒரு நிலை ஏற்படும் என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

عن أبي عبد السلام، عن ثوبان، قال قال رسول الله صلى الله عليه وسلم: «يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها»، فقال قائل: ومِن قلة نحن يومئذ؟ قال: «بل أنتم يومئذٍ كثير، ولكنكم غثاء كغثاء السيل، ولينزعن الله من صدور عدوكم المهابة منكم، وليقذفن في قلوبكم الوهن»، فقال قائل: يا رسول الله وما الوهن ؟ قال: «حب الدنيا، وكراهية الموت».

"நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் " விரைவில் ஒரு காலம் வரும் அப்போது விருந்தளிப்பவன் விருந்துக்கு அழைப்பதைப் போல உங்களுக்கு எதிராக (தாக்குதல் நடத்த) மற்ற சமூகத்தினர் தங்களுக்குள் அழைத்துக் கொள்வார்கள். அப்போது ஒருவர் கேட்டார் நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாலா? (இந்த தாக்குதல்) என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் மாறாக நீங்கள் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தின் நுரை போல நிறைய எண்ணிக்கையில் இருப்பீர்கள். உங்கள் எதிரிகளின் உள்ளத்தில் உங்கள் மீதான பயத்தை அல்லாஹ் எடுத்து விடுவான்.  உங்கள் உள்ளத்தில் "وهن"  யை அல்லாஹ் போட்டு விடுவான். அப்போது ஒருவர் وهن என்றால் என்ன என்று கேட்டார். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் உலக ஆசையும், மரணத்தின் மீதான வெறுப்பும்"
(நூல் - அபூதாவூத்)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் என் சமூகம் 73 கூட்டமாக பிரியும் அவர்களில் என்னுடைய என் தோழர்களுடைய வழிமுறையை பின்பற்றும் ஒரு கூட்டத்தை தவிர மற்ற அனைவரும் நரகம் புகுவார்கள்.

فقد روى أبو داود عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم بلفظ: افترقت اليهود على إحدى أو اثنتين وسبعين فرقة، وتفرقت النصارى على إحدى أو اثنتين وسبعين فرقه، وتفترق أمتي على ثلاث وسبعين فرقة. وفي بعض الروايات : كلها في النار إلاَّ واحدة هي الجماعة. رواها أحمد وأبو داود وابن ماجه وفي بعضها : ما أنا عليه وأصحابي. رواها الترمذي .
நம் பிரிவினை இதே நிலையில் தொடர்ந்தால் அது மிக ஆபத்தான விளைவில் கொண்டு போகும்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நம் பிரிவினையால் உருவான அனைத்து இயக்கங்களும் நாங்கள் தான் நபிவழியில் இருக்கிறோம் என்று மார் தட்டிக் கொள்கிறார்கள் இந்த குழப்பமான காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக நாம் மார்க்கத்திற்காக சுயநலம் மறந்து  ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

நமக்குள் பொறாமை, குரோதம் களைவோம்.

عن أبي هريرة رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : لا تحاسدوا ، ولا تناجشوا ، ولا تباغضوا ، ولا تدابروا ، ولا يبع بعضكم على بيع بعض ، وكونوا عباد الله إخوانا ، المسلم أخو المسلم ، لا يظلمه ، ولا يخذله ، ولا يكذبه ، ولا يحقره ، التقوى هاهنا - ويشير إلى صدره ثلاث مرات - بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم ، كل المسلم على المسلم حرام : دمه وماله وعرضه رواهمسلم .

5010. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ அவருக்குத் துரோகமிழைக்கவோ அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம், ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்.

உலகில் மட்டுமல்ல மறுவுலகிலும் நாம் சுவனத்தில் நுழைவதை இந்த துற்குணங்கள் தடுத்து விடும். அல்லாஹ் சுவனவாசிகளின் தன்மை குறித்து குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ

மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
(அல்குர்ஆன் 15:47)

இவ்வுலகிலேயே நாம் தீய குணங்களை களைந்து பொறுமை காத்தால் மறுவுலகில் எந்த சிரமமும் இல்லை.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 4:200)

முஃமின்களுக்கு இவ்வுலகில் சோதனைகளும் சிரமங்களும் ஏற்படுவது இயல்பு தான் என்கினும், அதை நாமே வரவழைத்துக் கொள்வது முஸீபத்தாகும்.நம்முடைய பிரிவினைகள் தான் எதிரிகளுக்கு துணிவை தந்துள்ளது. யார் பாதிக்கப்பட்டாலும் இங்கே கேட்க நாதியில்லை என்று அவர்கள் நம் உயிர்களையும், உடைமைகளையும், உயிரினும் மேலான ஷரீஅத் சட்டங்களையும் சேதப் படுத்த முனைந்துள்ளனர்.

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ
அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
(அல்குர்ஆன் 42:30)

அப்படி தீங்குகள் வந்து விட்டால் நாம் பொறுமையோடு அதை எதிர் கொள்ள வேண்டும். நம் செயல்களை சீர்திருத்திக் கொண்டு மன உறுதியோடு நாம் போராடினால் அல்லாஹ்வின் உதவி நமக்கு என்றும் இருக்கிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2: 153)

நம் உயிருக்கோ, உடைமைகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளலாம் நம் உயிரினும் மேலான ஷரீஅத்திற்கே பாதிப்பு என்கிற போது நம் வலிமையை ஒன்றுபட்டு  வெளிப்படுத்தி மார்க்கத்தை பாதுகாத்திட வேண்டும்.
அந்த உறுதியும்' மன வலிமையும் வந்து விட்டால் நமக்கு யாரும் தடைக்கற்களாக இருக்க முடியாது அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தினரை குறித்து தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இப்படி கூறினார்கள்.

من حديث الْمُغِيرَةِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "لَنْ يَزَالَ قَوْمٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى النَّاسِ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ". البخاري (3640)، ومسلم (1921).

என் சமூகத்தில் ஒரு கூட்டம் பிற மக்களை (மார்க்கத்தின் விஷயத்தில்) மிகைத்தவர்களாக அல்லாஹ்வின் கட்டளை (கியாமத் ) வரும் வரை நீடித்திருப்பார்கள். (நூல் :புகாரி, முஸ்லிம்)

அப்படிப்பட்ட ஒன்றுபட்ட ஒற்றுமைக்கு இலக்கணமான சமுகமாக நம்மையும் நம் வழித்தோன்றல்களையும், வல்ல இறைவன் தேர்ந்தெடுத்துக் கொள்வானாக ஆமீன்.