بسم الله الرحمن الرحيم
நுகர்வோர் நலன் காத்த இஸ்லாம்
أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ
الْمُخْسِرِينَ (181) وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ (182)
وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْوَلَا
تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ [الشعراء: 183]
ﻋﻦ ﺭاﻓﻊ ﺑﻦ ﺧﺪﻳﺞ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِ، أَيُّ
الْكَسْبِ أَطْيَبُ؟ قَالَ: " عَمَلُ الرَّجُلِ بِيَدِهِ وَكُلُّ بَيْعٍ
مَبْرُورٍ » . ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ
@@@@@@@
மார்ச் 15 ஆம் தேதி உலக
நுகர்வோர் தினம். டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம்.
ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட
தினங்களை அறிவித்து அதன் மூலம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டுமென்பதே
நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. எனினும் வருடத்தில் அந்த ஒரு தினத்தில் மட்டும் அது
தொடர்பாக விழாக்கள் நடத்துவதால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது.
பொருட்களைத் தயாரிப்பவர்கள் உற்பத்தியாளர்கள். அவற்றை
வாங்கி பயன்படுத்துபவர்கள்,நுகர்வோர்கள் ஆவர். நாம் வாழ்நாள் முழுவதும் நுகர்வோர்களாக
இருக்கிறோம். உணவு, மருந்து,துணி, வீட்டு உபயோகப் பொருட்கள்,தொலைபேசி வசதி, மருத்துவ சேவை
போன்ற பல சேவைகளைப் பெறுகிறோம்.
இதில் எடை குறைப்பு, கலப்படம்,உரிய பில்
வழங்காமை, போலியான கம்பெனி இப்படி நுகர்வோரின் உரிமை மீறல் பட்டியல்
நீண்டு கொண்டே போகிறது. சந்தையில் எந்த சரக்கை வாங்கினாலும் எந்த சேவையை
பெற்றாலும் இது நிஜமா? போலியா? என்ற பயம் உள்ளத்தை ஆட்கொண்டு விடுகிறது.
2 . @@@@@@@
எனவே நுகர்வோரின் உரிமை பாதுகாப்புக்காக இஸ்லாம் கூறும் வழி
முறைகள்-கட்டாய சட்டத்தை காண்போம்.
A.ஹலாலான வழியில் சம்பாதித்தல்
2072- َ صحيح البخاري عَنِ الْمِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا أَكَلَ أَحَدٌ
طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ
اللَّهِ دَاوُدَ- عَلَيْهِ السَّلاَمُ- كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ)).
2072. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவர் தம் கையால்
உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள்
தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.” என மிக்தாம்(ரலி)
அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி
மற்றவர்களிடம் கையேந்தி உதவி நாடித் திரிவது கூடாது.மேலும்
ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டிய உணவை பெறுவதற்கு உழைக்க வேன்டும் வேறு எவருக்கும்
சுமையாக இருந்து வாழ்க்கையை கழித்தலாகாது.அவ்வாறு பொருளை தேடுவதும் ஹலாலான வழியில்
இருத்தல் வேண்டும்.
B . ஹராமான வழியில் சம்பாத்தியம் செய்பவனின் துஆ
ஏற்கப்படாது.
2393- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ
لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ
بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ
وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} وَقَالَ: {يَا أَيُّهَا
الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ})). ثُمَّ ذَكَرَ
الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ
يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ
حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ.
1844. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் ”மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான்.
அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும்
கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை)
ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள்.
நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51).
”நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து
உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி
பாராட்டுங்கள் (2:172). பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். ”அவர் தலைவிரி
கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம்
கரங்களை வானை நோக்கி உயர்த்தி ”என் இறைவா, என் இறைவா” என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு
தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது;
அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட
உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை)
ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 12. ஜகாத்
C . ஹராமான வழியில் பொருளீட்டுவது மறுமை நாளின்
அடையாளம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((يَأْتِي عَلَى
النَّاسِ زَمَانٌ، لاَ يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلاَلِ
أَمْ مِنَ الْحَرَامِ)).
2059. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”தாம் சம்பாதித்தது
ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!” என அபூ
ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 34. வியாபாரம்
D . ஹராமினால் பரக்கத் இழந்து விடும் .நல்லறங்கள்
ஏற்கப்படாது.
ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻋﻦ ﺭﺳﻮﻝ
اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﻻ -[845]- ﻳﻜﺴﺐ ﻋﺒﺪ ﻣﺎﻝ ﺣﺮاﻡ ﻓﺘﻴﺼﺪﻕ ﻣﻨﻪ ﻓﻴﻘﺒﻞ ﻣﻨﻪ
ﻭﻻ ﻳﻨﻔﻖ ﻣﻨﻪ ﻓﻴﺒﺎﺭﻙ ﻟﻪ ﻓﻴﻪ ﻭﻻ ﻳﺘﺮﻛﻪ ﺧﻠﻒ ﻇﻬﺮﻩ ﺇﻻ ﻛﺎﻥ ﺯاﺩﻩ ﺇﻟﻰ اﻟﻨﺎﺭ. ﺇﻥ اﻟﻠﻪ ﻻ
ﻳﻤﺤﻮ اﻟﺴﻴﺊ ﺑﺎﻟﺴﻴﺊ ﻭﻟﻜﻦ ﻳﻤﺤﻮ اﻟﺴﻴﺊ ﺑﺎﻟﺤﺴﻦ ﺇﻥ اﻟﺨﺒﻴﺚ ﻻ ﻳﻤﺤﻮ اﻟﺨﺒﻴﺚ» . ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ
ﻭﻛﺬا ﻓﻲ ﺷﺮﺡ اﻟﺴﻨﺔ
நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவன்
விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால்
அந்த தர்மம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தனக்காகவும் தன்
வீட்டாருக்காகவும் அதிலிருந்து செலவிட்டால் பாக்கியம் அற்றதாகவே இருக்கும்.அதனை
விட்டு விட்டு அவன் இறந்துவிட்டால் அவனது நரகப் பயணத்திற்கு சாதகமாகத்தான் அது
விளங்கும்.அல்லாஹ் தீமையை தீமையின் வாயிலாக அழிப்பதில்லை.மாறாக தீய செயலை
நற்செயலின் வாயிலாக அழிக்கின்றான். ஓர் அசுத்தம் இன்னோர் அசுத்தத்தை அழிப்பதில்லை.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ( ரலி) அறிவித்தார்.
(மிஷ்காத்) (அஹ்மத்)
3 . @@@@@@@
A
. நேர்மையாக நடத்தல்
ﻋﻦ ﺭاﻓﻊ ﺑﻦ ﺧﺪﻳﺞ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِ، أَيُّ الْكَسْبِ أَطْيَبُ؟ قَالَ: " عَمَلُ
الرَّجُلِ بِيَدِهِ وَكُلُّ بَيْعٍ مَبْرُورٍ » .
ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ
அல்லாஹ்வின் தூதரே! யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம் எது?
என்று பெருமானார் ( ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள் ஒருவன் தன்
கையால் உழைப்பதும் - மோசடி செய்யாமல் பொய் பேசாமல் ஒருவன் நடத்தும் வாணிபமும்தான்
என்று கூறியதாக ராஃபி பின் கதீஜ் ( ரலி) அறிவித்துள்ளார்கள்.
-
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَفَعَهُ قَالَ
إِنَّ اللَّهَ يَقُولُ أَنَا
ثَالِثُ الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ فَإِذَا خَانَهُ
خَرَجْتُ مِنْ بَيْنِهِمَا
". ﺭﻭاﻩ
ﺃﺑﻮ ﺩاﻭﺩ 2936
ﻭﺯاﺩ ﺭﺯﻳﻦ: «ﻭﺟﺎء اﻟﺸﻴﻄﺎﻥ»
நபிகள் நாயகம் ( ஸல்) கூறினார்கள். இறைவன் கூறுகின்றான்.
ஒரு வியாபாரத்தின் பங்குதாரர்கள் இருவர் எதுவரை ஒருவரையொருவர் மோசடி செய்ய
மாட்டார்களோ அதுவரை நான் அவர்களுடன் இருக்கின்றேன் ஆனால் ஒரு பங்குதாரர் இன்னொரு
பங்குதாரரை மோசடி செய்யும்போது நான் அவ்விருவருக்கிடையில் இருந்து வெளியேறி
விடுகிறேன். அங்கு ஷைத்தான் வந்து விடுகிறான்.
இந்த ஹதீஸே குத்ஸியை அபூஹூரைரா ( ரலி) அறிவித்தார்கள்.
B . நேர்மை தவறினால்
1138 - عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِ الْمِكْيَالِ وَالْمِيزَانِ إِنَّكُمْ قَدْ
وُلِّيتُمْ أَمْرَيْنِ هَلَكَتْ فِيهِ الْأُمَمُ السَّالِفَةُ قَبْلَكُمْ
பெருமானார் ( ஸல்) அவர்கள் அளந்தும் நிறுத்தும் வணிகம்
செய்யும் வியாபாரிகளை நோக்கி நீங்கள் எத்தகைய இரு பணிகளுக்குப் பொருப்பாளர்களாக
ஆக்கப்பட்டிருக்கின்றீர்களெனில் அவற்றின் காரணமாக உங்களுக்கு முன் சென்றுபோன
சமூகங்கள் அழிந்து விட்டிருக்கின்றன என்றார்கள். ( திர்மிதி1138)
அளவையிலும் நிறுத்தலிலும் நீங்கள் தவறான வழிமுறையைக்
கையாண்டால் அதாவது ஒரு பொருளை வாங்கும் போது ஒரு விதத்திலும் விற்கும்போது வேறு
ஒரு விதத்திலும் நடந்து கொண்டால் அத்தகையச் செயல் உங்களை மட்டுமின்றி
சமுதாயத்தையும் அழி்த்து விடும். அளவையிலும் நிறுத்தலிலும் குறைவு செய்து
கொண்டிருந்த வாணிபக் கூட்டத்தாரைப்பற்றி குர்ஆனில் விளக்கமாக கூறப்படுகிறது.நேரிய வழியில்
வணிகம் செய்யும் முறைகள் அவர்களுக்கு காண்பிக்கப்பட்ட பின்னும் அவர்கள் அவற்றை
ஏற்காது போகவே இறைவனால் அழித்தொழிக்கப்பட்டார்கள்.
ஷுஐப் (அலை) அவர்களின் சமுதாயத்தினர் அளவை, நிறுவையில் மோசடி
செய்ததையும் அவர்களின் அழிவுக்கு அதுவே காரணமாக அமைந்தது என்றும் அல்குர்ஆன்
கூறுகிறது..
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ
شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ
قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ
وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ #
الأعراف: 85
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا
قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ وَلَا تَنْقُصُوا
الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِنِّي أَرَاكُمْ بِخَيْرٍ وَإِنِّي أَخَافُ
عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٍ (84)
وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ
وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا
تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ [هود: 85]
أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ
الْمُخْسِرِينَ (181) وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ (182) وَلَا
تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْوَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ
مُفْسِدِينَ [الشعراء: 183]
4 . @@@@@@@
. நுகர்வோர் நலனை பாதிக்கும் காரணங்களை ஆராய்ந்து அதை தடை செய்துள்ளது இஸ்லாம்.
A . பொய்ச் சத்தியம் செய்தல் கூடாது
2793 -[4] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ ﺃﺑﻲ ﻗﺘﺎﺩﺓ
ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ
«إِيَّاكُمْ
وَكَثْرَةَ الْحَلِفِ فِي الْبَيْعِ، فَإِنَّهُ يُنَفِّقُ، ثُمَّ يَمْحَقُ» . ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ
பெருமானார் ( ஸல்) அவர்கள் வணிகர்களுக்கு எச்சரிக்கை செய்த
வண்ணம் கூறினார்கள்.
உங்களுடைய பொருளை விற்பனை செய்வதில் அதிகமாக சத்தியம்
செய்வதை் தவிருங்கள். ஏனென்றால் அது ( தற்காலிகமாக) வானிபத்தைப் பெருக்கினாலும்
இறுதியில் அருள்வளத்தை இல்லாதொழித்து விடும். ( முஸ்லிம்)
வியாபாரி தரமற்ற ஒரு பொருளைக் குறித்து இதுதான் அதற்குரிய
விலை இப்பொருள் தரமிக்கது நயமானது என்று சத்தியமிட்டு உத்தரவாதமளித்தால்
அப்போதைக்கு வேண்டுமானால் அவருடைய பசப்பு வார்த்தைகளில் மயங்கி மக்கள் அப்பொருளை
வாங்கிவிடக்கூடும். ஆனால் உண்மை வெளிப்படும் போது எவருமே அவருடைய கடையின் பக்கம்
திரும்பியே பார்க்கமாட்டார்கள். பிறகு அவருடைய வியாபாரம் மந்தமாகி இறுதியில்
சீரழிந்து போகின்றது.
306- صحيح مسلم ِّ عَنْ أَبِي ذَرٍّ عَنِ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ
الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ
أَلِيمٌ)) قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ثَلاَثَ مِرَارٍ. قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ
اللَّهِ قَالَ: ((الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ
بِالْحَلِفِ الْكَاذِبِ))
. 171. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ”மூன்று பேரிடம்
மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்;
அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான்
உண்டு” என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை
கூறினார்கள். நான், ”(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்;
அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு, ”தமது ஆடையை
(கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த
உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்
ஆகியோர்(தாம் அம்மூவரும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்
அல்லாஹ் பேசமாட்டான் பார்க்கமாட்டான் என்பதன் கருத்து. அவன்
அவர்களை வெறுப்பான் அவர்களிடம் அன்பும் பாசமும் காட்டமாட்டான் என்பதாகும். ஒருவர்
பிறர்மீது வெறுப்பு கொள்ளும்போது அவர்கள் பக்கம் அவர் திரும்பி பாராமலும்.
பேசாமலும் இருப்பதை நாம் காண்கின்றோமல்லவா?
B . குறைகளை
மறைத்து விற்பனை செய்யக் கூடாது.
2273 - ( وعن واثلة قال :
قال رسول الله صلى الله عليه وسلم : { " لَا يَحِلُّ لِأَحَدٍ يَبِيعُ شَيْئًا أَلَّا
يُبَيِّنُ مَا فِيهِ، وَلَا يَحِلُّ لِمَنْ يَعْلَمُ ذَلِكَ أَلَّا يُبَيِّنُهُ
" } رواه أحمد )
.
பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவன் ஒரு பொருளை
விற்கின்றான். ஆனால் அதிலுள்ள குறையை அவன் சுட்டிக் காட்டவில்லையென்றால் அது
அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல. ஒருவன் பொருளிலுள்ள குறையை அறிகின்றான். ஆனால் அதனைத்
தெளிவாக எடுத்துரைக்கவில்லையென்றால் அதுவும் அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல.
C . ஏமாற்றக் கூடாது
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ
فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ
الطَّعَامِ؟» قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَفَلَا
جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ
مِنِّي» صحيح مسلم
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள்.
அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே
அவர்கள் ”உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று
கேட்டார்கள். அதற்கு அவர், ”இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின்
தூதரே!” என்றார். அப்போது அவர்கள், ”ஈரமானதை மக்கள்
பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று
கேட்டுவிட்டு, ”மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று
கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம்
D . இன்றைய பரிதாப நிலை .
இன்றய காலகட்டத்தில் உணவுப் பொருட்களில் எத்தனையோ
கலப்படங்கள் செய்யப்படுகிறது
அவற்றில் சில புள்ளிவிவரங்களை அறியலாம். பாலில் தண்ணீர்.
அரிசியில் கல், பருப்பில் கேசரி பருப்பு, மஞ்சள் பொடியில்
லீடு குரோமேட், தானியா பொடியில் சாணி பொடி மற்றும் ஸ்டார்ச், நல்ல மிளகுவில்
காய்ந்த பப்பாளி விதைகள், வத்தல் பொடியில் செங்கல் மற்றும் மரப்பொடி, தேயிலையில்
மரப்பொடி மற்றும் உளுந்து தோல், கடுகில் ஆர்ஜிமோன் விதைகள், பச்சை பட்டாணியில்
பச்சை சாயம், நெய்யில் வனஸ்பதி போன்ற கலக்கப்படுகின்றன.http://www.dinamalar.com/news_detail.asp?id=1372537
Published: September 30, 2015
கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் பிரபல
நிறுவனங்கள் விற்றுவரும் பல பாக்கெட்களில் பாமாயில், பருத்திவிதை
எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது நுகர்வோர் அமைப்பின் ஆய்வில்
தெரியவந்துள்ளது.
‘தூய்மையான கடலை எண்ணெய்,நல்லெண்ணைய்யை
சமையலில் சரியான அளவில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது’ என்று சமீபகால
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒருசில
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் விலை குறைவான பாமாயில்,பருத்திவிதை
எண்ணெய்,தவிட்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்து கடலை எண்ணெய்
என்ற பெயரில் விற்பது இந்திய நுகர்வோர் சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை, விழுப்புரம், சேலம்,தருமபுரி, திருச்சி, ஈரோடு ஆகிய 6மாவட்டங்களில் 14நிறுவனங்களின்
கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்களை எங்கள் அமைப்பை
சேர்ந்தவர்கள் சோதனை செய்தனர். தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கிவரும் சென்னை
கிண்டி கிங்க்ஸ் பரிசோதனைக் கூடம் உட்பட 3பரிசோதனைக்
கூடங்களில் இவை சோதனை செய்யப்பட்டன. அவற்றின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
‘கடலை எண்ணெய்’ என்று விற்கப்பட்ட 4 பிராண்டுகளின்
பாக்கெட்களில் முழுக்க பாமாயில் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் பருத்திவிதை
எண்ணெய் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் 90 சதவீதம் பாமாயில்,
10 சதவீதம் கடலை எண்ணெய் இருந் தது. ஒரு சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50 சதவீதம் பாமாயில்,
50 சதவீதம் பருத்திவிதை எண்ணெய் இருந்தது..
இவ்வாறு எம்.ஆர்.கிருஷ்ணன் கூறினார்.http://tamil.thehindu.com/tamilnadu
5 . @@@@@@@
பதுக்கல் செய்வது கூடாது
மக்களுக்கு தேவையான பொருள்களைக் கடைத் தெருவிற்கு கொண்டு
வராமல் பதுக்கி வைத்து விலை ஏறுவதை எதிர்பார்த்திருப்பது விலை ஏறும்போது கடைத்
தெருவிற்கு கொண்டு வந்து அதிக விலையில் விற்பது இதற்கு பெயர்தான் பதுக்கல்.இத்தகைய
மனநிலை வணிகர்களிடம் உண்டு.எனவேதான் பெருமானார் ( ஸல்) அவர்கள் இந்த மனநிலை
இருப்பதை கண்டித்தார்கள்.
2892 -[1] (ﺻﺤﻴﺢ) ﻋﻦ ﻣﻌﻤﺮ ﻗﺎﻝ: ﻗﺎﻝ
ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «
«مَنِ احْتَكَرَ فَهُوَ
خَاطِئٌ» » . ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ
பதுக்கல் செய்பவன் பாவியாவான் என்றார்கள். (நூல் ; முஸ்லிம்)
2895 -[4] (ﻟﻢ ﺗﺘﻢ ﺩﺭاﺳﺘﻪ) ﻋﻦ ﻋﻤﺮ
ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: « " مَنِ احْتَكَرَ عَلَى
الْمُسْلِمِينَ طَعَامَهُمْ، ضَرَبَهُ اللهُ بِالْإِفْلاسِ، أَوْ بِجُذَامٍ " » . ﺭﻭاﻩ اﺑﻦ ﻣﺎﺟﻪ ﻭاﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ ﺷﻌﺐ اﻹﻳﻤﺎﻥ. ﻭﺭﺯﻳﻦ ﻓﻲ ﻛﺘﺎﺑﻪ
2892 எவர் முஸ்லிம்களுக்கு உணவு தானியம் கிடைக்காமல் போவதற்காக பதுக்கல் செய்வாரோ அவருக்கு அல்லாஹ்
வெண் குஷ்டத்தையும் வறுமையையும் தருவான் என்று நபி ( ஸல்) கூறினார்கள் என உமர்
பின் கத்தாப் ( ரலி) அறிவித்தார்கள். (
இப்னு மாஜா)
2897 -[6] (ﻟﻢ ﺗﺘﻢ ﺩﺭاﺳﺘﻪ) ﻭﻋﻦ ﻣﻌﺎﺫ
ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ:
"بِئْسَ الْعَبْدُ الْمُحْتَكِرُ، إِنْ أَرْخَصَ اللَّهُ
الأَسْعَارَ حَزِنَ، وَإِنْ أَغْلاهَا اللَّهُ فَرِحَ"". ﺭﻭاﻩ اﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ ﺷﻌﺐ اﻹﻳﻤﺎﻥ ﻭﺭﺯﻳﻦ ﻓﻲ ﻛﺘﺎﺑﻪ
முஆத் ( ரலி) அறிவிக்கின்றார்கள் நான் பெருமானார் ( ஸல்)
அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டிருக்கின்றேன்: தேவையான பண்டங்களை
பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கின்றான்! அல்லாஹ் பொருள்களின் விலையை
மலிவாக்கி விட்டாலோ இவன் துக்கப்படுகின்றான் ! விலை ஏறிவிட்டாலோ மகிழ்ச்சி
கொள்கின்றான்!
6 .@@@@@@@
வியாபாரிகளிடம் தர்ம சிந்தனை வேண்டும்.
வியாபாரிகளிடம் அளவை நிறுத்தலில் மிகவும் கவணம் வேண்டும்.
சில வேளை தாம் அறியாமல் ஏதாவது தவறு நிகழ்ந்து விடுவதற்குரிய வாய்ப்பு இருப்பதால்
குற்றங்களை அழிப்பதற்காக தர்மம் செய்வது நல்லது
2798 -[9] (ﺻﺤﻴﺢ) عَنْ قَيْسِ بْنِ أَبِي غَرَزَةَ قَالَ كُنَّا فِي عَهْدِ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُسَمَّى السَّمَاسِرَةَ فَمَرَّ بِنَا
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمَّانَا بِاسْمٍ هُوَ
أَحْسَنُ مِنْهُ فَقَالَ يَا مَعْشَرَ
التُّجَّارِ إِنَّ الْبَيْعَ يَحْضُرُهُ اللَّغْوُ
وَالْحَلْفُ فَشُوبُوهُ بِالصَّدَقَةِ. ﺭﻭاﻩ
ﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﻟﺘﺮﻣﺬﻱ ﻭاﻟﻨﺴﺎﺋﻲ ﻭاﺑﻦ ﻣﺎﺟﻪ
கைஸ் அபூகர்ஸா ( ரலி) அறிவிக்கின்றார்கள்
நபி ( ஸல்) அவர்களுடைய காலத்தில் வியாபாரிகளான நாங்கள்
ஸமாஸிரா ( புரோக்கர்கள்) என்று அழைக்கப்பட்டு வந்தோம். ஒரு சமயம் நபிகள் நாயகம் (
ஸல்) அவர்கள் எங்களுக்கு அருகில் நடந்து சென்றார்கள். அப்போது அண்ணலார் இந்த
பெயரைவிட சிறந்த பெயரை எங்களுக்கு தந்தார்கள்.அண்ணலார் கூறினார்கள் வணிகக்
கூட்டத்தாரே! சரக்கை விற்பதில் வீண்பேச்சுக்களைப் பேசுவதற்கும் பொய் சத்தியம்
செய்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது.எனவே நீங்கள் உங்கள் வியாபாரத்தில் தர்மத்தையும்
கலந்து விடுங்கள்.
مسند أحمد ط الرسالة - 24842 - عَنْ أَنَسٍ، قَالَ: بَيْنَمَا عَائِشَةُ فِي بَيْتِهَا إِذْ سَمِعَتْ
صَوْتًا فِي الْمَدِينَةِ، فَقَالَتْ: مَا هَذَا؟ قَالُوا: عِيرٌ لِعَبْدِ
الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَدِمَتْ مِنَ الشَّامِ تَحْمِلُ مِنْ كُلِّ شَيْءٍ،
قَالَ: فَكَانَتْ سَبْعَ مِائَةِ بَعِيرٍ، قَالَ: فَارْتَجَّتِ الْمَدِينَةُ مِنَ
الصَّوْتِ، فَقَالَتْ عَائِشَةُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، يَقُولُ: " قَدْ رَأَيْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ يَدْخُلُ
الْجَنَّةَ حَبْوًا "، فَبَلَغَ ذَلِكَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ،
فَقَالَ: إِنْ (2) اسْتَطَعْتُ لَأَدْخُلَنَّهَا قَائِمًا، فَجَعَلَهَا
بِأَقْتَابِهَا، وَأَحْمَالِهَا فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ .
ஒருமுறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் வீட்டில் இருந்த சமயம் மதீனாவில்
பெரும் ஆரவார சப்தம் வந்ததைச் செவியுற்று இது என்ன ஆரவாரம் என்று கேட்டார்கள்
.அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ( ரலி) அவர்களின் வணிகச் சரக்கு
ஒட்டகைகள் ஷாம் தேசத்திலிருந்து பலவகையான மூட்டைகளுடன் வந்துள்ளன என்று
மக்கள் பதிலளித்தனர்.700 ஒட்டகைகள் அவை அவற்றின் சப்தத்தால் மதினாவே எதிரொலித்துக்
கொண்டிருந்தது.
அப்போது ஆயிஷா ( ரலி) அவர்கள் நிச்சயமாக அப்துர் ரஹ்மான்
பின் அவ்ஃப ( ரலி) அவர்கள் சுவனத்தில் அமர்ந்து தவழ்ந்தவர்களாக நுழையக்
கண்டேன் என நாயகம் அவர்கள் கூறியதைக் கேட்டுள்ளேன் என்று
கூறினார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ( ரலி) அவர்களுக்கு இந்தச் செய்தி
கிடைத்தபோது என்னால் முடிந்தால் இன்ஷா அல்லாஹ் (நன்மைகள்-தர்மம் மிக அதிகம் செய்து
தலை நிமிர்ந்து) நடந்த நிலையில் சுவர்க்கத்தில் நுழை(ய முயற்சி செய்) வேன் என்று
கூறியவர்களாக அவ்வொட்டகைகள் அனைத்தையும் அவற்றின் பொதிகளுடன் அல்லாஹ்வின் பாதையில்
அர்ப் பணித்து விட்டார்கள் ( முஸ்னது அஹ்மத் 24842)
மற்றொருமுறை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்( ரலி)
அவர்கள் தமது நிலம் ஒன்றை உஸ்மான் ( ரலி) அவர்களுக்கு விற்று.அவற்றை ஜூஹ்ரா
கிளையாரின் ஏழைகளுக்கும் முஹாஜிர்களுக்கும் முஸ்லிம்களின் அன்னையரான நபி ( ஸல்)
அவர்களின் துணைவியருக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். நான் அன்னை ஆயிஷா ( ரலி)
அவர்களிடம் அவர்களின் பங்கைக் கொண்டுசென்றபோது இதைக் கொடுத்தனுப்பியவர் யார்
எனக் கேட்க நான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்( ரலி) அவர்கள் கொடுத்தார்கள்
என்றேன்.உடனே அன்னை ஆயிஷா ( ரலி) அவர்கள் எனக்குப் பின்னர் உங்கள்மீது
பொறுமையாளர்களே பரிவு காட்டுவர்.அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்( ரலி) அவர்களுக்கு
அல்லாஹ் சுவனத்தின் ஸல்ஸபீல் என்னும் பானத்தைப் புகட்டுவானாக எனப் பெருமானார் (
ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.( முஸ்னது அஹ்மத்)
7 .@@@@@@@
உலகையே திரும்பி பார்க்க வைத்த முஸ்லிம்
வியாபாரிகள் .
இன்றய உலகில் பேசப்படும் பெரும்பாலான பெரிய வியாபாரிகள்
வட்டி மோசடி பதுக்கல் ஊழல். ரவுடியிசம்.அடாவடி. அரசியல் பின்புலம் போன்ற
வன்மங்களின்றி நிலைத்திருக்க முடியாது என்பது ஊரறிந்த இரகசியம் அவர்களுக்குத்
தோதுவாக மீடியாக்களின் தப்புத் தாளங்கள் வேறு.
ஆனால் பதிநான்கரை நூற்றாண்டுகளுக்கு முன்பு மீடியாக்களோ
அரசியல் பின்புலமோ.ரவுடிசமோ இன்றி உண்மை நேர்மை.நம்பிக்கை.நாணயம்.பிறர் நலம் நாடல்
போன்ற நற்குணங்களை மட்டும் மூலதனமாகக் கொண்டு ஒரு வியாபாரி உலகையே திரும்பிப்
பார்க்க வைத்தார்.தமது வியாபாரத் திறமையால் உலக வரலாற்றாசிரியர்களால் இன்றும்
வியந்து புகழ்ந்து பேசப்படுகிறார். அந்தப் பட்டியலில் எடுத்துக் காட்டுக்காக
ஒருவரை மட்டும் மேலே அப்துர் ரஹ்மான் இப்ன் அவப் ரலி குறிப்பிடப்படுள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.