செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

கேளுங்கள் தரப்படும்


بسم الله الرحمن الرحيم

*கேளுங்கள் தரப்படும்*
******************************
قال تعالى: ﴿ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ ﴾ [البقرة: 186].

عن سلمان الفارسي قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إن ربَّكم تبارك وتعالى حييٌّ كريمٌ، يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردهما صِفرًا؛ "أي خاليتين")؛ (حديث صحيح) (صحيح أبي داود - للألباني - حديث 1320).

ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகிலும் மறுஉலகிலும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பல முயற்சிகளை செய்கின்றான் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ வியாபாரம் விவசாயம் தொழிற்சாலை இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்கிறான் மறு உலக வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய தொழுகை நோன்பு   இன்னும் பல வணக்க வழிபாடுகளை செய்கிறான். ஆனால் இவைகள் அனைத்தையும் செய்வதுடன் துஆ ( பிரார்த்தனையும்) வும் இருந்தால் தான் அவன் ஈருலகிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் துஆ செய்வதை ஒரு முக்கிய வணக்கமாக கூறுகின்றது.

*துஆ என்றால் என்ன ?*

الدُّعاء: هو إظهار غاية التذلُّل والافتقار إلى الله، والاستكانة له؛ (فتح الباري لابن حجر العسقلاني جـ 11 صـ 98)
அல்லாஹ்விடம் தேவைகளை கேட்பதும் முழுமையாக பணிவை வெளிப்படுத்துவதுமாகும்.


*துஆ செய்வதின் அவசியம் பற்றி அண்ணல் நபி( ஸல்) அவர்களின் அமுத மொழிகள்*
******************************************
(1) روى الترمذي عن أبي هريرة رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: ((ليس شيءٌ أكرمَ على الله تعالى من الدُّعاء))؛ (حديث حسن) (صحيح الترمذي - للألباني - حديث 2684).
துஆவைவிட அல்லாஹ்விடம் சங்கைக்குரியது எதுவுமில்லை

(2) روى الترمذي عن أبي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((مَن لم يسأَلِ اللهَ، يغضَبْ عليه))؛ (حديث حسن) (صحيح الترمذي - للألباني - حديث 2686).
யார் அல்லாஹ்விடம் தமது தேவையை கேட்கவில்லையோ அவன்மீது அல்லாஹ் கோபமடைகின்றான்.

قال المباركفوري - رحمه الله -: لأن تركَ السؤال تكبرٌ واستغناءٌ، وهذا لا يجوز للعبد.

ஏன் கோபம் அடைகின்றான் என்பதற்கான விளக்கத்தை இமாம் முபாரக்பூரி அர்கள் சொல்லித் தருவார்கள்
காரணம் இறைவனிடம் துஆ செய்வதை விடுவது கர்வம் கொள்வதும் , அவன் தேவையில்லை என்று புறக்கணிப்பதுமாகும்.
قال الشاعرٌ:
اللهُ يَغْضَبُ إن ترَكْتَ سؤالَه ♦♦♦ وبُنَيُّ آدمَ حين يُسأَلُ يغضَبُ
(تحفة الأحوذي بشرح الترمذي - المباركفوري - جـ 9 - صـ 221).

(3) روى أبو داود عن سلمان الفارسي قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إن ربَّكم تبارك وتعالى حييٌّ كريمٌ، يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردهما صِفرًا؛ "أي خاليتين")؛ (حديث صحيح) (صحيح أبي داود - للألباني - حديث 1320)
அல்லாஹ் மிகவும் வெட்கப்படக்கூடியவன் ஒரு அடியான் கையேந்தி அவனிடம் கேட்டுவி்ட்டால் அவன் கையை வெருங்கையாக விடுவதை அல்லாஹ் வெட்கப்படுகிறான். (அதாவது அவன் கேட்டதை கொடுக்காமல் இருக்க வெட்கப்படுகிறான்)

روى الترمذي عن أنس بن مالكٍ، قال: سمعتُ رسول الله صلى الله عليه وسلم يقول: ((قال الله تبارك وتعالى: يا بنَ آدمَ، إنك ما دعوتني ورجوتني غفرتُ لك على ما كان فيك ولا أبالي، يا بنَ آدم، لو بلغت ذنوبُك عَنان السماء ثم استغفرتَني غفرتُ لك ولا أبالي، يا بنَ آدم، إنك لو أتيتَني بقراب (بملء) الأرض خطايا، ثم لقيتني لا تشركُ بي شيئًا، لأتيتُك بقرابها مغفرةً))؛ (حديث صحيح) (صحيح الترمذي - للألباني - حديث 2805).

*துஆவிற்கு "களா கத்ரையே-விதி" மாற்றும் வல்லமை உண்டு*

يَمْحُوْا اللّٰهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ‌ ‌ وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ‏ 
எனினும், அவன் (அதில்) நாடியதை அழித்து விடுவான்; (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான். (அனைத்திற்கும்) அசல் பதிவு அவனிடத்தில் இருக்கிறது. (அதன்படி எல்லா காரியங்களும் தவறாது நடைபெறும்.)
(அல்குர்ஆன் : 13:39)


روى الترمذي عن سَلْمان الفارسي قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((لا يرُدُّ القضاءَ إلا الدُّعاء، ولا يَزيدُ في العُمرِ إلا البِرُّ))؛ (حديث حسن) (صحيح الترمذي - للألباني - حديث 1238).

நம்முடைய தலையெழுத்தாக எழுதப்பட்ட தலைவிதியையும் கூட மாற்றி அமைத்து தரக்கூடிய ஆற்றல் துஆவுக்கு மட்டும் உண்டு. வயசில் பரக்கத்து வேண்டுமென்றால் உபகாரம் செய்ய வேண்டும். ஹதீஸ் திர்மிதீ.


قال الإمام الشوكاني - رحمه الله -: في هذا الحديث دليلٌ على أنه سبحانه يدفع بالدُّعاء ما قد قضاه على العبد، وقال أيضًا: الدُّعاء مِن قدر الله عز وجل، فقد يَقضي اللهُ على عبده قضاءً مقيدًا بألا يدعوه، فإن دعاه اندفع عنه؛
(تحفة الذاكرين للشوكاني - صـ 35: صـ 36).

களாகத்ரு இருவகை உண்டு
1. மாற்ற முடியாத கலாகத்ர்
2.  துஆ கேட்டால் மாற்றப்படும் என்று முடிவு செய்யப்பட்டது

*இறப்பிற்குப் பிறகும் துஆ நம்மை வந்து அடைகிறது.*

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ [الحشر: 10]

"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
(அல்குர்ஆன் 59:10)

*மரணித்து விட்ட தன் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளில் முக்கியமானது துஆவாகும்.*

عَنْ أَبِي أُسَيْدٍ مَالِكِ بْنِ رَبِيعَةَ قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِي سَلَمَةَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَبَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ أَبَرُّهُمَا بِهِ مِنْ بَعْدِ مَوْتِهِمَا؟ قَالَ: «نَعَمْ، الصَّلَاةُ عَلَيْهِمَا، وَالِاسْتِغْفَارُ لَهُمَا، وَإِيفَاءٌ بِعُهُودِهِمَا مِنْ بَعْدِ مَوْتِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لَا تُوصَلُ إِلَّا بِهِمَا» - (سنن ابن ماجه)

ஹஜ்ரத் அபூஉஸைத் மாலிகிப்னு ரபீஆ ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமுகத்தில் அமர்ந்திருந்த சமயம், பனீஸலமா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு வந்து,யாரஸூலல்லாஹ், என்னுடைய பெற்றோருடைய மரணத்திற்குப்பின் அவர்களுடன் அழகிய முறையில் நடந்துகொள்ள ஏதேனும் வழியுள்ளதா?'' எனக் கேட்டார்.ஆம்!'' அவர்களுக்காக துஆச் செய்வது,அல்லாஹுதஆலாவிடம் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது, அவர்களுடைய மரணத்துக்குப் பின் அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது,அவர்களுக்கு யாருடன் உறவுமுறை உள்ளதோ அவர்களுடன் அழகிய முறையில் நடப்பது, அவர்களின் நண்பர்களைக் கண்ணியப்படுத்துவது ஆகியவை பெற்றோர்களுடன் நன்முறையில் நடப்பதாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் நூல்:இப்னு மாஜா

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ لَهُ الدَّرَجَةُ فِي الْجَنَّةِ، فَيَقُولُ: يَا رَبِّ أَنَّى لِي هَذِهِ؟، فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ "(-مصنف ابن أبي شيبة)
சொர்க்கத்தில் சிலருக்கு பதவி மிக உயர்ந்ததாக வழங்கப்படும் அப்போது அவர் கேட்பார் அல்லாஹ்வே எனக்கு எப்படி இவ்வளவு பெரிய பதவி கிடைத்தது ?
அது உங்களுடைய குழந்தைகள் செய்த (துஆ-)பாவமன்னிப்பின் காரணமாக என அதற்கு பதில் சொல்லப்படும்.
ஹதீஸ் முஸன்னப் இப்னு அபீஷைபா.


*ஜனாஸாவில் கேட்கப்படும் துஆவும் ஒரு எடுத்துக்காட்டு.*

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى عَلَى جِنَازَةٍ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ»
سنن ابن ماجه

எனவே துஆ நம் வாழ்வில் எவ்வளவு முக்கிய இடம் வகிக்கிறது என்றால், அதன் தொடர்பை நாம் பிறக்கும் முன்பே பெற்று விடுகிறோம் இறந்த பின்பும் அதன் பலனை பெற இருக்கிறோம் இடைப்பட்ட காலத்திலும் துஆவின் தேவையில் இருக்கிறோம்.

*துஆதான் நமது பலம்.*
*****************************
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ أَعْجَزَ النَّاسِ مَنْ عَجَزَ فِي الدُّعَاءِ، وَإِنَّ أَبْخَلَ النَّاسِ مَنْ بَخِلَ بِالسَّلَامِ " - شعب الإيمان
மக்களில் மிகவும் இயலாதவர் துஆச் செய்ய இயலாதவர், (துஆச் செய்யாதவர்) மக்களில் மிகவும் கருமித்தனம் உடையவர் ஸலாம் சொல்வதில் கருமித்தனம் செய்பவர்''என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஷுஅபுல் ஈமான்)

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த துஆவின் விஷயத்தில் நாம் கவனக்குறைவாக இருக்கலாமா? தயங்கலாமா?

*மூன்றிலொரு பலன் நிச்சயம் கிடைக்கும்.*

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو لَيْسَ بِإِثْمٍ وَلَا بِقَطِيعَةِ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ إِحْدَى ثَلَاثٍ إِمَّا أَنْ يُعَجِّلَ لَهُ دَعْوَتَهُ وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ يَدْفَعَ عَنْهُ مِنَ السوء مثلها) قال: إذا يكثر؟ قال: (الله أكثر) - الأدب المفرد

மூன்றிலொரு பலன் நிச்சயம் கிடைக்கும்.
கேட்டது கிடைக்கும் அல்லது துஆவின் பலன் மறுமையில் நன்மையாக கிடைக்கும் அல்லது அதற்கு பகரமாக நமக்கு நடக்கவிருந்த ஆபத்து நீக்கப்படும்.ஹதீஸ் .



*துஆ ஏற்கப்படுவதற்கு அதிகவாய்ப்புள்ள நேரங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.*

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي، فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ "- صحيح البخاري 1145

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்குஇறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான்அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால்அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம்பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்'என்று கூறுவான்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ1145.

عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ، قَالَ: «تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ، وَيُسْتَجَابُ دُعَاءُ الْمُسْلِمِ عِنْدَ إِقَامَةِ الصَّلَاةِ، وَعِنْدَ نُزُولِ الْغَيْثِ، وَعِنْدَ زَحْفِ الصُّفُوفِ، وَعِنْدَ رُؤْيَةِ الْكَعْبَةِ»- المعجم الكبير للطبراني

*துஆ ஏற்கப்பட சில நிபந்தனைகள்*
***********************************************
1 இறைவனிடம் மனம் உருகி கெஞ்சி பணிவோடு கேட்க வேண்டும்.

اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً‌ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‌ ‏ 
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 7:55)

2 அல்லாஹ் நம் துஆவை ஏற்றுக்கொள்வான் என்கின்ற நம்பிக்கையோடும் பொடுபோக்கு இல்லாமலும் கேட்க வேண்டும்.

(5) روى الترمذي عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((ادعوا اللهَ وأنتم موقنون بالإجابة، واعلموا أن اللهَ لا يستجيب دعاءً من قلبٍ غافلٍ لاهٍ)؛ (حديث صحيح) (صحيح الترمذي - للألباني - حديث 2766).
3 துன்பம் ஏற்படும்போது மட்டும் இறைவனை அழைக்காமல் இன்பமான நேரத்திலும் துஆச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

(4) روى الترمذي عن أبي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((مَن سره أن يستجيب اللهُ له عند الشدائد والكرب، فليُكثر الدُّعاء في الرخاء))؛ (حديث حسن) (صحيح الترمذي - للألباني - حديث 2693)

4. உங்களின் ஒரு கண்டிப்பாகவும்  விரைவாகவும் கபூல் ஆகவேண்டுமா. அதுபோன்ற தேவையுள்ள மற்றவருக்காக நீங்கள் அந்த தீஆவை செய்யுங்கள்.

" ﺩﻋﻮﺓ اﻟﻤﺮء اﻟﻤﺴﻠﻢ ﻷﺧﻴﻪ ﺑﻇﻬﺮ اﻟﻐﻴﺐ ﻣﺴﺘﺠﺎﺑﺔ، ﻋﻨﺪ ﺭﺃﺳﻪ ﻣﻠﻚ ﻣﻮﻛﻞ ﻛﻠﻤﺎ ﺩﻋﺎ ﻷﺧﻴﻪ ﺑﺨﻴﺮ، ﻗﺎﻝ اﻟﻤﻠﻚ اﻟﻤﻮﻛﻞ ﺑﻪ: ﺁﻣﻴﻦ ﻭﻟﻚ ﺑﻤﺜﻞ "

5281:நபி (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், "இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்" என்று கூறினார்கள்.

என உம்முத் தர்தா (ரலி) & அபுத் தரதா (ரலி) அவர்களும் அறிவிக்கிறாா்கள.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 48. பிரார்த்தனைகள்


5 அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டோ அல்லது நாம் செய்த நல் அமல்களைக் கொண்டோ வஸீலா தேடுவதின் மூலமும் துஆ ஏற்கப்படும்.

قال سبحانه: ﴿ أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا ﴾ [الإسراء: 57].
معنى التوسُّل:
التوسُّل: هو التقرُّب إلى الله تعالى بالأعمال الصالحة المشروعة؛ (مختار الصحاح للرازي - صـ 721).

قوله تعالى: ﴿ وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا ﴾ [الأعراف: 180].

روى الشيخانِ عن عبدالله بن عمر رضي الله عنهما، قال: سمعتُ رسول الله صلى الله عليه وسلم يقول: ((انطلق ثلاثة رهطٍ ممن كان قبلكم حتى أووا المبيت إلى غارٍ فدخلوه، فانحدرت صخرةٌ من الجبل فسدت عليهم الغار، فقالوا: إنه لا ينجيكم من هذه الصخرة إلا أن تدعُوا الله بصالح أعمالكم، وفي رواية لمسلم: فقال بعضهم لبعضٍ: انظروا أعمالًا عملتموها صالحةً لله فادعوا الله تعالى بها؛ لعل الله يفرجها عنكم))؛ (البخاري حديث 2272 / مسلم حديث 2743).

2272.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!என்று தமக்குள் கூறினர்.  அவர்களில் ஒருவர் இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!  மற்றொருவர், “இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, “முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.  மூன்றாமவர், “இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!என்று கூறினார். நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!என்று கூறினேன். அதற்கவர் அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!என்றார். நான் உம்மை கேலி செய்யவில்லை!என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!”  என அப்துல்லாஹ்வின் உமர்(ரலி) அறிவித்தார்.
(ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 37. வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்).


குர்ஆனிலும் ஹதீஸிலும் அல்லாஹ்விடம் துஆ கேட்கும் படி வலியுறுத்தி பல வசனங்கள் அருளப்பட்டுள்ளது.

قال تعالى: ﴿ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ ﴾ [البقرة: 186].

قال الإمام ابن جرير الطبري - رحمه الله -: وإذا سألك يا محمد عبادي عني: أين أنا؟ فإني قريبٌ منهم، أسمع دعاءهم، وأجيب دعوة الداعي منهم؛ (تفسير الطبري - جـ 3 - صـ 222).
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்என்று கூறுவீராக.
(அல்குர்ஆன் : 2:186)

நமக்கு ஏற்படக்கூடி சோதனைகளிலும் கஷ்டத்திலும் அதனை நீக்கும்படி அவனிடமே கேட்க வேண்டும் என்று இறைவன் கூறுகின்றான்

وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِىْۤ اَسْتَجِبْ لَـكُمْ اِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِىْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ 

உங்கள் இறைவன் கூறுகிறான்: என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் : 40:60)

اَمَّنْ يُّجِيْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوْٓءَ وَيَجْعَلُكُمْ خُلَفَآءَ الْاَرْضِ‌  ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ ‌ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ ‏ 

கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். (அல்குர்ஆன் : 27:62)

وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِى الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّاۤ اِيَّاهُ‌  فَلَمَّا نَجّٰٮكُمْ اِلَى الْبَرِّ اَعْرَضْتُمْ‌  وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا‏ 

இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 17:67)

ِ‌ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَيْهِ تَجْئَرُوْنَ‌‏ 

பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டு விட்டால் அவனிடமே (அதை நீக்குமாறு பிரலாபித்து) நீங்கள் முறையிடுகிறீர்கள்.
(அல்குர்ஆன் : 16:53)

*இப்றாஹீம் (அலை) கேட்ட துஆ*
****************************************
நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தம் குடும்பத்தினருக்காக செய்த துஆவை நமக்கு திருமறையில் இறைவன் எடுத்துக் கூறி நாமும் இதுபோன்று நம் குடும்பத்தின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என்று வலிறுருத்துகின்றான்.

رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ‏ 

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!
(அல்குர்ஆன் : 14:37)

رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌   رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآء
ِ‏ 
(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” (அல்குர்ஆன் : 14:40)

رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ 

எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” (என்று பிரார்த்தித்தார்).
(அல்குர்ஆன் : 14:41)

*மூஸா (அலை) கேட்ட துஆ*
***********************************
நல்ல கல்வி ஞானம் பெருகுவதற்கும் ஒரு காரியத்தில் உறுதியாக நிலைத்து நின்று வெற்றி பெருவதற்கும் மூஸா நபி கேட்ட துஆவை நமக்கு எடுத்துரைக்கின்றான் .

قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏ 
(அதற்கு மூஸா) கூறினார்: இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
(அல்குர்ஆன் : 20:25)
وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ‏ 
என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும்
வைப்பாயாக!
(அல்குர்ஆன் : 20:26)
وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ‏ 
என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
(அல்குர்ஆன் : 20:27)

*நபி அய்யூப்(அலை) கேட்ட துஆ*
*****************************************
நபி அய்யூப் (அலை) அவர்களுக்கு தீராத வியாதி ஏற்பட்ட போது பொறுமையை கடைபிடித்த அவர்கள் அவ்வியாதி நாவையும் தீண்டிய பொழுது இறைவனை திக்ரு செய்ய நாவு வேண்டுமே எனக்கருதி இறைவனிடம் தமக்கேற்பட்ட நோயை நீக்கும்படி துஆ செய்தார்கள் அவர்களின் துஆவை உடனே ஏற்று அவர்களுக்கு பூரண சுகத்தைத் தந்தான்.

وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‌ ‌‏ 

இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்என்று பிரார்த்தித் போது,
(அல்குர்ஆன் : 21:83)

فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ‌ وَّاٰتَيْنٰهُ اَهْلَهٗ و مِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰى لِلْعٰبِدِيْنَ‏ 

நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 21:84)

*நபி யூனுஸ் (அலை) கேட்ட துஆ*
****************************************
நபி யூனுஸ் அலை அவர்கள் தம் கூட்டத்தாருக்கு இறைவனைப் பற்றி  எச்சரிக்கை செய்து அவர்கள் அதை ஏற்காத போது இறைவனின் தண்டனை உங்களை நோக்கி வரும் எனக் கூறினார்கள் அதே போல இறைவனின் தண்டனை வானத்திலிருந்து வந்த போது அவர்கள் திருந்தி தவ்பா செய்தார்கள் அல்லாஹ் அவ்வேதனையிலிருந்து அவர்களை காப்பாற்றினான் யூனுஸ் நபியை தேடி அம்மக்கள் வரும் போது அவர் இறைவனின் அனுமதியின்றி அவ்வூரை விட்டு வெளியேறிவிட்டார்  கப்பலில் பயணம் செய்தார் கப்பல் புயல் காற்றால் தத்தலித்தது எஜமானனின் அனுமதியின்றி இக்கப்பலில் ஒருவர் பயணம் செய்கிறார் அவர் வெளியேற்றப்பட்டால் தான் கப்பல் சீராக செல்லும் என்பதாக சொல்லப்பட்டது அது நான் தான் என யூனுஸ் நபி ஒத்துக் கொள்ள அவர்கள் கடலில் போடப்பட்டார்கள் ஒரு பெரிய மீன் அவர்களை விழுங்கியது நாற்பது நாட்கள் மீன் வயிற்றில் துஆ செய்தார்கள் அந்த துஆவிற்குப்பின் இறைவன் மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றினான். அந்த துஆவை நமக்கும் திருக்குர்ஆனில் இறைவன் கற்றுத் தந்துள்ளான். இந்த விஷயத்தை நபி ( ஸல் ) அவர்கள் தோழர்களுக்கு சொன்னபோது யா ரசூலல்லாஹ்! இந்த துஆ அவர்களுக்கு மட்டுமா ? நமக்கும் வெற்றி கிடைக்குமா? எனக் கேட்டபோது நபி ஸல் அவர்கள் முஃமின்கள் அனைவர்களுக்கும் தான் என்றார்கள்.

، عن عبد الله بن رافع ، مولى أم سلمة زوج النبيّ صلى الله عليه وسلم ، قال: سمعت أبا هريرة يقول: قال رسول الله صلى الله عليه وسلم: " لَمَّا أَرَادَ اللهُ حَبْسَ يُونُسَ فِي بَطْنِ الحُوتِ ، أَوْحَى اللهُ إِلَى الحُوتِ: أَنْ خُذْهُ وَلا تَخْدِشْ لَهُ لَحْما وَلا تَكْسِرْ عَظْما، فَأَخَذهُ ، ثُمّ هَوَى بِهِ إلى مسْكَنِهِ مِنَ البَحْرِ ، فَلَمَّا انْتَهَى بِهِ إلى أَسْفَلِ البَحْرِ ، سَمِعَ يُونُسُ حِسًّا ، فَقَالَ فِي نَفْسِهِ: مَا هَذَا؟ قالَ: فَأَوْحَى اللهُ إِليْهِ وَهُوَ فِي بَطْنِ الحُوتِ: إِنَّ هَذَا تَسْبِيحُ دَوَابِّ البَحْرِ ، قَالَ: فَسَبَّحَ وَهُوَ فِي بَطْنِ الحُوتِ ، فَسَمِعَتِ المَلائِكَةُ تَسْبِيحَهُ ، فَقَالُوا: يَا ربَنّا إِنَّا نَسْمَعُ صَوْتا ضَعِيفا بِأَرْضِ غَرِيبَهٍ؟ قَالَ: ذَاكَ عَبْدِي يُونُسُ ، عَصَانِي فَحَبَسْتُه فِي بَطْنِ الحُوتِ فِي البَحْرِ ، قَالُوا: العَبْد الصَالِحُ الَّذِي كانَ يَصْعَدُ إِلَيْكَ مِنْهُ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ عَمَلٌ صَالِحٌ؟ قَالَ: نَعَم ْ، قَالَ: فَشَفَعُوا لَهُ عِنْدَ ذَلكَ ، فَأَمَرَ الحُوتَ فَقَذَفَه فِي السَّاحِلِ ، كما قالَ اللهُ تَبَارَك َ وَتَعالى: وَهُوَ سَقِيم

قوله تعالي:  وَ ذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّـقْدِرَ عَلَيْهِ فَنَادٰى فِى الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌  اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌
‌‏ 
இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்என்று பிரார்த்தித்தார்.
(அல்குர்ஆன் : 21:87)

فَاسْتَجَبْنَا لَهٗۙ وَنَجَّيْنٰهُ مِنَ الْـغَمِّ‌ وَكَذٰلِكَ نُـنْجِى الْمُؤْمِنِيْنَ‏ 
எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.
(அல்குர்ஆன் : 21:88)


*நபி ஜகரிய்யா (அலை) குழந்தை வேண்டி செய்த துஆ*
*************************************************
நபி ஜகரிய்யா (அலை) அவர்கள் குழந்தை வேண்டி அல்லாஹ்விடம் துஆ செய்தபோது அவர்களின் துஆவை ஏற்று குழந்தை பாக்கியத்தை தந்தான்.

قال الله تعالي: ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَـبْدَهٗ زَكَرِيَّا ‌  ‌‏ 
(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
(அல்குர்ஆன் : 19:2)
اِذْ نَادٰى رَبَّهٗ نِدَآءً خَفِيًّا‏ 
அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்). (அல்குர்ஆன் : 19:3)

قَالَ رَبِّ اِنِّىْ وَهَنَ الْعَظْمُ مِنِّىْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْ بِدُعَآٮِٕكَ رَبِّ شَقِيًّا‏ 
(அவர்) கூறினார்: என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.
(அல்குர்ஆன் : 19:4)

وَاِنِّىْ خِفْتُ الْمَوَالِىَ مِنْ وَّرَآءِىْ وَكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا فَهَبْ لِىْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ‏ 
இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! (அல்குர்ஆன் : 19:5)

يَّرِثُنِىْ وَيَرِثُ مِنْ اٰلِ يَعْقُوْبَ  ‌ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا‏ 
அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!
(அல்குர்ஆன் : 19:6)

يٰزَكَرِيَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰم اۨسْمُهٗ يَحْيٰى ۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِيًّا‏ 
ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).
(அல்குர்ஆன் : 19:7)

قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا وَّقَدْ بَلَـغْتُ مِنَ الْـكِبَرِ عِتِيًّا‏ 
(அதற்கு அவர்) என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார். (அல்குர்ஆன் : 19:8)

قَالَ كَذٰلِكَ‌ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْـٴًـــا‏ 
“(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்என்று இறைவன் கூறினான். (அல்குர்ஆன் : 19:9)

( குறிப்பு: இன்று குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் எத்தனையோ நேர்ச்சைகள் எங்கெங்கோ செல்கின்றனர்.  ஆனால் ஜவேளை தொழுது இறைவனிடம் மன்றாடி கேட்பதை மறந்து விடுகின்றார்கள்)


அல்லாஹ்விடத்தில் நேரடியாக கையேந்த கூடிய நல்ல பாக்கியசாளியாகவும். துஆ ஒப்புக் கொள்ளப்பட்ட நல்லடியாராகவும் நம்மை ஆக்கி வைப்பானாக.