வியாழன், 26 டிசம்பர், 2019

இறை இல்லத்தின் மூலமாக இலவசமாக பெறலாம்.


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

இறை இல்லத்தின் மூலமாக இலவசமாக பெறலாம்.


ஒருவன் தன் இலட்சியத்தை அடைந்து விட வெற்றி வாகை சூடிட நின்று களமாட ஒரு தளம் வேண்டும் .
அது போன்று நாளை மறுமையில் மனிதன் வெற்றி பெற நின்று களமாடிட மாபெரும் தளமாக பள்ளிவாசலை அல்லாஹ் அமைத்துள்ளான் .
அதனை சரியாக பயன்படுத்தினால் நாளைக்கு வெற்றி . இல்லை என்றால் மாபெரும் தோல்வியைத் தழுவிடும் நிலை ஏற்படும்.


1 . @@@@@@@


ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏
இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது.
(அல்குர்ஆன் : 22:32)


இறைவனுடைய சின்னங்கள் :

இறைவன் விதித்த ஹராம்/ஹலால் / கடமையாக்கிய / தடுத்த சட்டதிட்டம்.
அல்குர்ஆன்/காஃபா-கிப்லா/சபா மர்வா மலை /எல்லா மஸ்ஜித் இதுபோன்று எதுவெல்லாம் இறைவனுடைய சின்னங்களாக இருக்கின்றதோ அவைகளுக்கு செய்ய வேண்டிய மதிப்பும் மரியாதையும் செய்ய வேண்டிய முறையில் எந்தவிதக் கூடுதல் குறைவின்றி செய்தாக வேண்டும்.


எனவே ஆண்கள் மஸ்ஜிதில் தான் தொழுக வேண்டும்.  வாகனிக்காமல் கால்நடையாக வருவது.
முன்கூட்டியே வந்து அமர்வது.  தொழுதுவிட்டு தாமதமாக செல்வது.
நறுமணம் பூசிக்கொண்டு நல்ல அழகிய ஆடையுடன் (ஆண்கள்) வருவது .
நிதானமாக பயபக்தியோடு தொழுவது .
இது எல்லாம் அல்லாஹ்வுடைய இறை சின்னங்களுக்கு மரியாதை செய்யக் கூடியதாக அமையும்.


எனவே பீடி சிகரெட் போன்ற துர்நாற்றத்துடன் வருவது.
அலங்கோலமான ஆடையுடன் வருவது.
காக்கா கொத்துவது போல அவசரமாகத் தொழுகுவது. இதுபோன்ற செயல்பாடுகளால் இறைவனுடைய அந்த அடையாள சின்னங்கள் உதாசீனப் படுத்தப்படும் .



2 . @@@@@@@


போனஸாக கிடைக்கும் நன்மைகளே தாராளம் தாராளம் .
தொழுகை & ஜமாஅத்(க்குரிய நன்மை தனி .

A . வேலையே செய்யாமல் கூலி.


647 -  ﺃﺑﺎ ﻫﺮﻳﺮﺓ، يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :    صَلَاةُ الرَّجُلِ فِي الْجَمَاعَةِ تُضَعَّفُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ وَفِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ ضِعْفًا ،
وَذَلِكَ أَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ، ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لَا يُخْرِجُهُ إِلَّا الصَّلَاةُ ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ ،
فَإِذَا صَلَّى لَمْ تَزَلِ الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَيْهِ مَا دَامَ فِي مُصَلَّاهُ ، اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ اللَّهُمَّ ارْحَمْهُ ،
وَلَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا انْتَظَرَ الصَّلَاةَ .
وفي رواية مسلم ﻓﻲ ﺻﻼﺓ، ﻣﺎ ﻟﻢ ﻳﺤﺪﺙ،
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.

அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான்.

அவர் தொழுமிடத்தில் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர்.
தங்கள் பிரார்த்தனையில் 'இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!' என்றும் கூறுவார்கள்.

உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார் உளுவுடன் இருக்கும் வரை'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 647.
அத்தியாயம் : 10. பாங்கு


குறிப்பு# வீட்டிலேயே உளூ செய்யனும்.
வாகனிக்காமல் கால்நடையாக செல்லனும் .
அப்படி சென்றான் ஒவ்வொரு கால் எட்டுக்கும் மாபெரும் நன்மை.
முன்னாடியே போய் சும்மா இருந்தாலும் நன்மை.
தொழுகை முடிந்த உடன் வெளியேறாமல் கொஞ்ச நேரம் இருக்கனும் உளுவுடன்.


B . வேலை ஒரு மணி நேரம் கூலி இரண்டு மணி நேரத்திற்கு.

6599 عن ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ اﻟﻌﺎﺻﻲ، ﻳﻘﻮﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻣﻦ ﺭاﺡ ﺇﻟﻰ ﻣﺴﺠﺪ اﻟﺠﻤﺎﻋﺔ ﻓﺨﻄﻮﺓ ﺗﻤﺤﻮ ﺳﻴﺌﺔ، ﻭﺧﻄﻮﺓ ﺗﻜﺘﺐ ﻟﻪ ﺣﺴﻨﺔ، ﺫاﻫﺒﺎ ﻭﺭاﺟﻌﺎ " (1)
____________
(1) ﺻﺤﻴﺢ ﻟﻐﻴﺮﻩ،

முஸ்னது அஹ்மது என்ற கிதாபில் விரிவான விளக்கத்துடன் வந்திருக்கின்றது. பள்ளிக்கு செல்லும் பொழுதும்  திரும்பி வரும்போதும் இதுபோன்ற நன்மை கிடைக்கும் என்பதாக


ﻋﻦ ﺃﺑﻲ ﺑﻦ ﻛﻌﺐ، ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﺭﺟﻞ ﻻ ﺃﻋﻠﻢ ﺭﺟﻼ ﺃﺑﻌﺪ ﻣﻦ اﻟﻤﺴﺠﺪ ﻣﻨﻪ، ﻭﻛﺎﻥ ﻻ ﺗﺨﻄﺌﻪ ﺻﻼﺓ، ﻗﺎﻝ: ﻓﻘﻴﻞ ﻟﻪ: ﺃﻭ ﻗﻠﺖ ﻟﻪ: ﻟﻮ اﺷﺘﺮﻳﺖ ﺣﻤﺎﺭا ﺗﺮﻛﺒﻪ ﻓﻲ اﻟﻈﻠﻤﺎء، ﻭﻓﻲ اﻟﺮﻣﻀﺎء، ﻗﺎﻝ: ﻣﺎ ﻳﺴﺮﻧﻲ ﺃﻥ ﻣﻨﺰﻟﻲ ﺇﻟﻰ ﺟﻨﺐ اﻟﻤﺴﺠﺪ، ﺇﻧﻲ ﺃﺭﻳﺪ ﺃﻥ ﻳﻜﺘﺐ ﻟﻲ ﻣﻤﺸﺎﻱ ﺇﻟﻰ اﻟﻤﺴﺠﺪ، ﻭﺭﺟﻮﻋﻲ ﺇﺫا ﺭﺟﻌﺖ ﺇﻟﻰ ﺃﻫﻠﻲ، ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻗﺪ ﺟﻤﻊ اﻟﻠﻪ ﻟﻚ ﺫﻟﻚ ﻛﻠﻪ»

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அன்சாரி ஸஹாபிகளில்) ஒரு மனிதர் இருந்தார். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அவரைவிட வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் வேறு எவரையும் நான் அறிந்திருக்கவில்லை. அவர் எந்தவொரு தொழுகையையும் தவறவிடமாட்டார். எனவே அவரிடம், "நீங்கள் ஒரு கழுதை வாங்கிக்கொண்டால் நன்றாயிருக்குமே! அதன் மீது பயணம் செய்து காரிருளிலும் கடும் வெப்பத்திலும் (தொழுகைக்கு) வரலாமே?" என்று "கேட்கப்பட்டது" அல்லது "(அவ்வாறு) நான் கேட்டேன்". அதற்கு அவர், "எனது இல்லம் பள்ளிவாசலுக்கு அருகிலேயே அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது .
(ஏனெனில்,) நான் பள்ளிவாசலுக்கு நடந்துவருவதும் (பள்ளி வாசலில் இருந்து) இல்லத்தாரிடம் திரும்பிச் செல்வதும் எனக்கு (நன்மைகளாக)ப் பதிவு செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு வழங்கிவிட்டான்" என்று கூறினார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் பல அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது
ஸஹீஹ் முஸ்லிம் : 1180.

அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்.


ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தால் வேலை பார்த்த நேரம் மட்டுமே கூலி தரப்படுமே .
தவிர வீட்டிலிருந்து
வேலைக்காக  தயாரான நேரங்களும் அதற்காக வாகனனித்த நேரங்களும் வேலையை முடித்து திருப்பி செல்லும் நேரங்களும் கணக்காக கருதப்படாது . கூலி கிடையாது .

ஆனால் அல்லாஹ் அந்த நேரங்களையும் செயல்களையும் நன்மை கூலி நிறைந்ததாக தருகின்றான்.


3 . @@@@@@@


வெளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَبُّ الْبِلَادِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا وَأَبْغَضُ الْبِلَاد إِلَى الله أسواقها» . رَوَاهُ مُسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 1190.
அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்

ஆனால் நம்முடைய செயல்பாடு வெளக்குமாறுக்கு பட்டுக் குஞ்சம் என்ற பழமொழிக் கொப்ப
எங்கே (-மஸ்ஜித்) இருந்தால் மாபெரும் நன்மையயோ அங்கு காக்கா கொத்துவது போல   கொத்திவிட்டு பறந்து விடுகின்றோம் .
எங்கே (-கடை வீதி) இருந்தால் பெரும் குழப்பங்களும் விபத்துகளும் பாவங்களும் நிறைந்திருக்குமோ அங்கு நாம் மூழ்கி குளிக்கின்றோம்.
இது திருத்தப்பட வேண்டிய ஒரு காரியம்.


4 . @@@@@@@

தொழுகை பயபக்தியுடையோருக்கு இன்பமாக . முனாபிக்கிற்க்கு  பாரமாக-சுமையாக தெரியும் . நீ எந்த வகையில் இருக்கிறாய் .

وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ‏ 
(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்.
(அல்குர்ஆன் : 2:45)



أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :    لَيْسَ صَلَاةٌ أَثْقَلَ عَلَى الْمُنَافِقِينَ مِنَ الْفَجْرِ وَالْعِشَاءِ ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا ، لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ الْمُؤَذِّنَ فَيُقِيمَ ، ثُمَّ آمُرَ رَجُلًا يَؤُمُّ النَّاسَ ، ثُمَّ آخُذَ شُعَلًا مِنْ نَارٍ فَأُحَرِّقَ عَلَى مَنْ لَا يَخْرُجُ إِلَى الصَّلَاةِ بَعْدُ .

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை.
அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.
இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் (தக்க காரணமின்றி) தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 657.
அத்தியாயம் : 10. பாங்கு


தெருவில் இறங்கி போராட தயார் . ஆனால் ஒரு தொழுகைக்கு வருவதற்கு  தயக்கம் என்றிருந்தால் தொழுகை இன்பமா பாரமா என்பதை உணர்ந்து முனாஃபிக்கா என்பதை பிரித்து அறியலாம்.


5 . @@@@@@@


பத்து பைசா செலவளிக்காமல்  ஹஜ் உம்ரா செய்திடலாம்.

535 -  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ
பஜ்ர் தொழுகை ஜமாத்தோடு தொழுது விட்டு சூரியன் உதயம் (ஆகி 20 நிமிடம்) ஆகும் வரை திக்ர் செய்து அங்கேயே இருந்தால் பூரணமான ஒரு ஹஜ்,மேலும் ஒரு உம்ரா செய்த நன்மை கிடைத்து விடுகிறது ,

நூல் திர்மிதி : ஹதீஸ் 535. அறிவிப்பாளர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்.

இந்த ஹதீஸ் ஹஸன் என்ற தரம் கொண்டதாகும்.

வாரத்தில் ஞாயிறு போன்ற விடுமுறையில் ஹஜ் & உம்ரா செய்ய தயாராகுவோம் .



6 . @@@@@@@


பல்லாயிரம் ஆண்டுகள் வணங்கிய நன்மை பெற்றிடலாம்

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، قَالَ: سمعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ، وَبَكَّرَ وَابْتَكَرَ، وَمَشَى، وَلَمْ يَرْكَبْ فَدَنَا مِنَ الْإِمَامِ، فَاسْتَمَعَ، وَلَمْ يَلْغُ، كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا " (1)
ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ 496 ﻭﺃﺑﻮ ﺩاﻭﺩ 345 ﻭاﻟﻨﺴﺎﺋﻲ ﻭاﺑﻦ ﻣﺎﺟﻪ وأحمد 16161 + 16173
________________

(1) إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح، غير أن صحابيه لم يخرج له إلا أصحاب السنن.
வெள்ளிக்கிழமை அன்று தலையை கழுகி உடல் முழுவதும் குளித்து . வெகு சீக்கிரம் புறப்பட்டு . வாகனத்தில் ஏறாமல் நடந்தே (ஜும்மாவுக்கு) சென்று இமாமுக்கு அருகில் அமர்ந்து கொத்பாவை வீனாக்கிடாமல் கூர்மையாக செவியேற்றால் நடந்த ஒவ்வொரு கால் எட்டுக்கும் ஒரு வருடம் முழுவதும் நின்று வணங்கிய நன்மையும் . நோன்பு பிடித்த நன்மையும் கிடைத்து விடும்.

ஜும்ஆ தொழுக அதிகாலையில் செல்ல வேண்டும்.
நடந்து செல்ல வேண்டும்.
வாகனத்தில் அல்ல.
வாகனத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை என்றால் கொஞ்சம் தூரமாக அதனை நிறுத்திவிட்டு நான்கு எட்டுகள் கூடுதலாக நடக்கவேண்டும்.


நல்அமல்களை தேடித்தேடி செய்யக்கூடிய நல்ல மக்களாகவும் . நிறைவான நன்மை பெற்ற வெற்றியாளர்களாகவும்  அல்லாஹ் ஆக்கி வைப்பானாக