புதன், 25 ஜனவரி, 2017

குடியரசு தினமும் சமூக நல்லிணக்கமும்

بسم الله الرحمن الرحيم
குடியரசு தினமும்  சமூக நல்லிணக்கமும்
******************************************
தாயின் கருவறையில் இருந்து தரையில் கால் தடம் பதித்தது முதல் மன்னறை சென்றடையும் வரை யாருக்கும் அடிமைப் பட்டு முடங்கிடாமல் முழு சுதந்திரமாக வாழ வேண்டும்ஆட்சி தலைவருக்கு கட்டுப் படவேண்டும்..உரிமைகள் பறிக்கப் படுமானால் பொங்கி எழ வேண்டும்கூட்டாக-பன்மை சமூகமாக வாழும்போதும் இறைகொள்கை / வணக்க வழி பாடுகளில் வளைந்து கொடுக்க கூடாது..ஆனாலும் இறை கொள்கை / வணக்கம் தவிர உள்ள பிற விஷயங்களில் மற்றவர்களை கண்டிப்பாக  அரவணைத்து அனுசரித்து வாழ வேண்டும்.
عَسَى اللّٰهُ اَنْ يَّجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِيْنَ عَادَيْتُمْ مِّنْهُمْ مَّوَدَّةً وَاللّٰهُ قَدِيْرٌ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏  
உங்களுக்கும்அவர்களுள் உள்ள உங்களுடைய எதிரிகளுக்கும் இடையில்அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தி விடக்கூடும். (இதற்கும்அல்லாஹ் ஆற்றலுடையவனே!   அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(
அல்குர்ஆன் : 60:7)
1 . @@@@@@@@@
குடியரசு என்றால் ?
குடியரசு என்றால் குடிமக்களின் அரசு என்று பொருள்அதாவது மக்களாட்சி என்று அர்த்தம்மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம்இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடுஇப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்தியாவும் குடியரசு நாடானது.
ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது என்று பாடப் புத்தங்களில் படித்திருப்பீர்கள் அல்லவாஅரசியல் அமைப்புச் சட்டம் என்றால் என்ன தெரியுமாநாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்.
டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள்இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதுஅதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்அதனால்தான் உங்களுக்கு விடுமுறையும் கிடைக்கிறது.
இந்தியா அடிமை நாடாக எவ்வாறு மாறியது ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை சிறிய அரசர்கள்பெரிய அரசர்கள்பேரரசர்கள் எனத் தங்கள் எல்லையைப் பொறுத்து ஆட்சி செய்தார்கள்இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லைஇப்படிப் பிரிந்து சிதறி கிடந்ததாலும்ஒற்றுமை இல்லாததாலும் ஆங்கிலேயர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள்தந்திரமாக மன்னர்களிடம் பேசி நம் நாட்டுக்குள்ளே நுழைந்து பின்னர் நம்மை அடிமைப்படுத்தினார்கள்.
குடியரசு தினம் ஏன் ?
ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லைமன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று இருந்தார்கள்.
அது மட்டுமல்லமன்னர்கள் ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம்மக்கள் சுயமாகச் சிந்திக்க முடியாதுசுதந்திரம் பற்றி நினைக்கவும் முடியாதுமன்னர் இறந்துபோனால்உடனே அவருடைய மகன் மன்னராகிவிடுவார்இதைத்தான் முடியாட்சி அல்லது மன்னராட்சி என்று சொல்லுவார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்று சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் நினைத்தார்கள்வாரிசு உரிமை உள்ள மன்னராட்சி முறை கூடாது என்று நினைத்தார்கள். மக்கள் பங்கு கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள்அதற்கு நாடு குடியரசாக இருப்பது அவசியம் என்றும் முடிவு செய்தார்கள்.
நன்றி http:/tamil.thehindu.com/
குடியரசு தினம் / சுதந்திர தினத்தை நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டும்
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمَّا قَدِمَ المَدِينَةَ، وَجَدَهُمْ يَصُومُونَ يَوْمًا، يَعْنِي عَاشُورَاءَ، فَقَالُوا: هَذَا يَوْمٌ عَظِيمٌ، وَهُوَ يَوْمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى، وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ، فَصَامَ مُوسَى شُكْرًا لِلَّهِ، فَقَالَ «أَنَا أَوْلَى بِمُوسَى مِنْهُمْ» فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ
ஸஹீஹ் புகாரி  3397. இப்னு அப்பாஸ்(ரலிஅறிவித்தார் நபி(ஸல்அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10வதுநாளில் (யூதர்கள்நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ்(ரலிகுறிப்பிடுகிறார்கள் - யூதர்கள், 'இது மாபெரும் நாள்மூஸா(அலைஅவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; (அடிமையாக்கி கொடுமை படுத்திக் கொண்டிருந்தஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்மூழ்கடித்(து சுதந்திரம் தந்)தான்.. எனவேமூஸா(அலைஅவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்என்று கூறினார்கள்நபி(ஸல்அவர்கள், 'நான் அவர்களை விட மூஸா அவர்களுக்குமிக நெருக்கமானவன்என்று கூறிவிட்டுஅந்த நாளில் தாமும் நோன்பு நோற்றுதம் தோழர்களுக்கும் (உபரியானநோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.
2 .@@@@@@@@@ஆட்சி/ஆட்சியாளர்களின் இலக்கணம்.
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»ஸஹீஹ் புகாரி 2554. இறைத்தூதர்(ஸல்அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளேஉங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான்அவர்களை (பராமரித்த விதம்குறித்து அவன் விசாரிக்கப்படுவான்பெண்தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள்அவர்களை (பராமரித்த விதம்குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்அடிமைதன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான்அவன் அதை (பாதுகாத்த விதம்குறித்து விசாரிக்கப்படுவான்ஆகநீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளேஉங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலிஅறிவித்தார்.
65 - (1855)  عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ، وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ، وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ، وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ»، قِيلَ: يَا رَسُولَ اللهِ، أَفَلَا نُنَابِذُهُمْ بِالسَّيْفِ؟ فَقَالَ: «لَا، مَا أَقَامُوا فِيكُمُ الصَّلَاةَ، وَإِذَا رَأَيْتُمْ مِنْ وُلَاتِكُمْ شَيْئًا تَكْرَهُونَهُ، فَاكْرَهُوا عَمَلَهُ، وَلَا تَنْزِعُوا يَدًا مِنْ طَاعَةٍ
3778. 
அவ்ஃப் பின் மாலிக் (ரலிஅவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள், "உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில்அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள்உங்களை அவர்கள் நேசிப்பார்கள்உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள்அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள்உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில்நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்உங்களை அவர்கள் வெறுப்பார்கள்நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள்அவர்கள் உங்களைச் சபிப்பார்கள்என்று கூறினார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் தூதரேஅவர்களுக்கெதிராக நாங்கள் வாள் ஏந்தலாமா?" என்று கேட்கப்பட்டதுஅதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள், "வேண்டாம்உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்). உங்கள் ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கும் (மார்க்கத்திற்கு முரணாண செயல்கள்எதையேனும் கண்டால்அந்த ஆட்சியாளரின் செயல்பாட்டை வெறுப்பீர்களாககட்டுப்படுதலில் இருந்து உங்கள் கையை விலக்கிவிடாதீர்கள்என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 33. ஆட்சியதிகாரம்
3 .@@@@@@@@@ஆட்சிதலைமை பொறுப்பு தானாக வந்தால் அது மதிப்பை உயர்த்தும்.
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ، لاَ تَسْأَلِ الإِمَارَةَ، فَإِنَّكَ إِنْ أُوتِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِنْ أُوتِيتَهَا مِنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا -[128]-، وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ، فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَكَفِّرْ عَنْ يَمِينِكَ وَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ
6622. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலிஅறிவித்தார்நபி(ஸல்அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவேஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதேஏனெனில், (நீகேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்விடப்படுவாய். (இறைவின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்உதவி அளிக்கப்படும்நீ ஒரு சத்தியம் செய்துஅது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடுசிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துஎன்றார்கள்3 ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 83. சத்தியங்களும் நேர்த்திக்கடன்களும்
பதவி மோகம் பிடித்து அதை தேடி பிச்சைக்காரன் போல் அலைந்து பொருக்கினால் இப்படி தான் கேவளம் அடைய நேரிடும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ القِيَامَةِ، فَنِعْمَ المُرْضِعَةُ وَبِئْسَتِ الفَاطِمَةُ
7148. இறைத்தூதர்(ஸல்அவர்கள் கூறினார்கள்நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள்ஆனால்மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள்பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்தான் இன்பமானதுபாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானதுஎன அபூ ஹுரைரா(ரலிஅறிவித்தார்அபூ ஹுரைரா(ரலிஅவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளதுஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 93. நீதியும் நிர்வாகமும்
4 .@@@@@@@@@
ஆட்சியாளன் எவ்வளவு அநியாயம் செய்கிறான்.தட்டிக் கேட்க ஆளே இல்லையா?
அநியாயக்காரன் தனக்கு தானே குழி பறிக்கிறான்.
وَكَذٰلِكَ جَعَلْنَا فِىْ كُلِّ قَرْيَةٍ اَكٰبِرَ مُجْرِمِيْهَا لِيَمْكُرُوْا فِيْهَا‌  وَمَا يَمْكُرُوْنَ اِلَّا بِاَنْفُسِهِمْ وَمَا يَشْعُرُوْنَ‏  
அன்றிஇவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பாவிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கின்றோம்அங்கு அவர்கள் விஷமம் (செய்ய சதிசெய்து கொண்டிருப்பார்கள்எனினும்அவர்கள் தங்களுக்கேயன்றி (மற்றெவருக்கும்சதி செய்துவிட முடியாது. (இதனைஅவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் : 6:123)
நவினாலோ கையினாலோ உரிய தண்டனை உங்களால் கொடுக்க முடியாது.. அல்லாஹ்விடமே விட்டு விடுவோமே.
قُلْ لِّلَّذِيْنَ اٰمَنُوْا يَغْفِرُوْا لِلَّذِيْنَ لَا يَرْجُوْنَ اَيَّامَ اللّٰهِ لِيَجْزِىَ قَوْمًا بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏  
(
நபியே!) இறைநம்பிக்கையாளர்களிடம் நீர் கூறிவிடும்யார் அல்லாஹ்விடமிருந்து தண்டனைகுறிய கெட்ட நாள் வருவது பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர்களின் நடவடிக் கைகளைக் கண்டுகொள்ளாது விட்டுவிடுங்கள் மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அல்லாஹ்வே நேரடியாக  கொடுப்பான். (அல்குர்ஆன் : 45:14)
(அல்குர்ஆன் : 45:14)
وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ‌  اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ‏
(நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீங்கள் எண்ண வேண்டாம்அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காதுதாமதப்படுத்தி வருவதெல்லாம்திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடியதொரு மறுமைநாள் வரும் வரையில்தான்!(அல்குர்ஆன் : 14:42)
مُهْطِعِيْنَ مُقْنِعِىْ رُءُوْسِهِمْ لَا يَرْتَدُّ اِلَيْهِمْ طَرْفُهُمْ‌  وَاَفْـِٕدَتُهُمْ هَوَآءٌ ‏ 
(
அந்நாளில்இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்டஇவர்களுடைய பார்வை மாறாது, (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்செயலற்று விடும். (அல்குர்ஆன் : 14:43)
5 .@@@@@@@@@
பன்மை சமூகதில் முஸ்லிம்கள் ?
வணக்கம் இறை நம்பிக்கை கொள்கை அல்லாத பிற காரியங்களுக்காக நாமும் அவர்களுடன் தோள் கொடுக்கலாம் .ஒரு மதத்தவர் பிற மதத்வருக்கு உதவ வேண்டும் என்ற நிகரில்லா ஒரு ஐக்கியத்த்தை குர்ஆன் போதிக்கின்றது
اۨلَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ‌  وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا‌  وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُه  اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ  இவர்கள் (எத்தகையவரென்றால்,) தங்களுடைய இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக நியாயமின்றி தங்கள்  வீடுகளிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டார்கள்மனிதர்களில் (அநியாயம் செய்யும்சிலரைசிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காத வரையில் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும்அவர்களுடைய மடங்களும்யூதர்களுடைய ஆலயங்களும்அல்லாஹ்வுடைய திருப்பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும்அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான்நிச்சயமாக அல்லாஹ் மிகப் பலவானும்அனைவரையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.
(
அல்குர்ஆன் : 22:40)
வரலாற்றில் இரு சரித்திரம்
1. 
உமர் (ரலி)அவர்கள் இறை தூதர்களின் உறைவிடமான பைத்துல் முகத்தஸை முஸ்லிம் களின் ஆளுமையில் மீட்டி எடுத்து பின்பு அங்கு இருந்த கிரிஸ்தவர்களின் / யூதர்களின் கோவிலை இடிக்க வில்லைமுன்பு போல் அதில் தொடர்ந்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கினார்கள் .
2. கையை விட்டும் நழுவிய பைத்துல் முகத்தஸை சலாஹுதீன் அய்யூப்பி (ரஹ்கி.பி.1187 அக்டோபர் முஸ்லிம்களின் ஆளுமையில் மீட்டி எடுத்தர்கள் . அப்போது அந்த கோவிலை இடிக்க நினைத்த போது இடிக்க கூடாது . ஏனெனில் உங்களுக்கு முன்பு உமர் (ரலி)அவர்கள் இதை வெற்றி கொண்ட போது இடிக்கவில்லை .என சக முஸ்லிம் கூறி தடுத்தார்கள் . எனவே அது அவ்வாறே பாதுகாப்புடன் அவர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கினார்கள் .
لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏  
(
நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும்உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும்நீங்கள் நன்மை செய்வதையும்அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லைநிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான்.
(
அல்குர்ஆன் : 60:8)
6 . @@@@@@@@@
A . 
சிலை வணங்கிகளான மக்கவாசிகளுடன்  ஹுதைபியா உடன்படிக்கை செய்திருந்தார்கள்
B . அநீதத்திற்கு எதிரான் ஹில்புல் புலூல்” என்ற நற்பணி இயக்கத்தில் நபியாகும் முன்பே உருப்பினராக இருந்து களம் கண்டார்கள் .
C . (வேதக்காரர்களானயூதர்களுடன் ஒப்பந்தம்
معاهدة مع اليهود
நபி (ஸல்அவர்கள் மதீனாவில் அரசியல் அமைப்புசட்ட ஒழுங்கு ஆகிய அனைத்திலும் முதன் முதலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள்அதன் மூலம் மதீனாவில் புதிய இஸ்லாமிய சமுதாயத்திற்கும்சமூகத்திற்குமான அடித்தளத்தை மிக ஆழமாக உறுதிப்படுத்தினார்கள்.
இரண்டாம் கட்டமாகமுஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்தத் துவங்கினார்கள்அதற்குக் காரணம்முழு மனித சமுதாயமும் நிம்மதிபாதுகாப்புநற்பயன்கள்நல்லுறவுகள் கிடைக்கப்பெற வேண்டும்ஒரே ஒருமைப்பாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான்ஆகவே சுயநோக்கங்களும்இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல்,பெருந்தன்மையுடன் நடத்தல்விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை நபி (ஸல்அமைத்தார்கள்.
மதீனாவிற்கு அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள்இவர்கள் முஸ்லிம்களின் மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்தாலும் வெளிப்படையாக
முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டைசச்சரவு செய்யவுமில்லைஎனவே நபி (ஸல்யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையை ஏற்படுத்திக்
கொண்டார்கள்.
” யூதர்களுக்கு அவர்களது செல்வத்திலும்மதத்திலும் முழு சுதந்திரம் அளித்தார்கள்.
அவர்களை மதீனாவை விட்டு விரட்ட வேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றோ அவர்கள் நாடவுமில்லை
அதைச் செய்யவுமில்லை.
நபி (ஸல்அவர்கள் யூதர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது நாம் பார்ப்போம்:
1) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள்முஃமின்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராக கருதப்படுவர்இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை
உண்டுமுஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டுஇவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற
யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.
2- وإن بينهم النصح والنصحية، والبر دون الإثم .
யூதர்களுக்கும்முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல்ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல்உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.
3) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
4-  وإن بينهم النصر على من دَهَم يثرب . . على كل أناس حصتهم من جابنهم الذي قبلهم .
யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும்தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும்ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாகக வேண்டும்.
இந்த உடன்படிக்கையும்ஒப்பந்தமும் உறுதிபெற்றதால் மதீனாவும்மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறி அதற்குத் தலைநகரம் மதீனாவாக விளங்கியது. ( ரஹீகுல் மக்தூம்;பக்கம் 193)
எனவே நாமும் நம் நாட்டிலும் மாநிலத்திலும் நம்ஊர்களிலும் இதை கடை பிடித்தால் இலகுவாக தாவா செய்ய வழி கிட்டும்பாதுகாப்பு கிட்டும்.
@@@@@@@@@உரிமை பறிக்கப் பட்டால் அநியாயம் நடந்தால்  மதம் கடந்து போராட வேண்டும் .
2480 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»
2480. 
இறைத்தூதர்(ஸல்அவர்கள் கூறினார்கள்: தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்ஆவார். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலிஅறிவித்தார். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَ: «فَلَا تُعْطِهِ مَالَكَ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي؟ قَالَ: «قَاتِلْهُ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي؟ قَالَ: «فَأَنْتَ شَهِيدٌ»، قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ؟ قَالَ: «هُوَ فِي النَّارِ»
ஒரு நபித் தோழர் கேட்டார் நபியே (ஸல்ஒருவன் என் உடமையை பறிக்கிறான் . நபி (ஸல்நீ கொடுக்க கூடாது.அவர்என்னோடு சண்டையிட்டால்?. நீயும் சண்டையிடு
உன்னை கொன்றுவிட்டால் நீ உயிர் தியாகிநீ அவனை கொன்றுவிட்டால் அவன் பாவி நரகம் செல்வான்.. ஹதீஸ்:முஸ்லிம்.
عصر الخلافة الراشدة - (1 / 126)كما كان يحقق في شكاوى الرعية ضدهم، ولما ضرب ابن لعمرو بن
العاص أحد الأقباط وبلغ عمر شكواه، أراد أن يقتص للقبطي وخاطب عمراً بعبارته
المشهورة: " متى استعبدتم الناس وقد ولدتهم أمهاتهم أحرارا " 01
அம்ருபின்ஆஸ் அவர்களின் மகன் கிப்தி கூட்டத்தைச்சார்ந்த ஒருவரை (அனியாயமாகஅடித்து விட்டபொழுது உமர் ரலி அவர்களிடம் கிப்தி முறையிட்டார் பலிவாங்க விரும்பினார்.உமர் ரலி அவர்கள் அதை நிறைவேற்றினார்கள்.