ஞாயிறு, 15 ஜனவரி, 2017

இறைநேசர்களும் அவர்களால் இந்த சமுதாயம் அடைந்த நன்மைகளும்!

بسم الله الرحمن الرحيم

இறைநேசர்களும் அவர்களால் இந்த சமுதாயம் அடைந்த  நன்மைகளும்!

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62)
நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின்  நல்லடியார்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை ; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். ( அல்குர்ஆன் : 10:62)
الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (63))
10:63 . அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன்
நடந்து கொள்வார்கள். 10:64 .

لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (64
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித
மாற்றமுமில்லை இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.

ஒரு மனிதனுக்கு வாழ்வில் பயமோ துன்பமோ அறவே இல்லை என்ற நிலை இருக்குமானால் அதைவிட ஒரு சிறந்த கிருபை என்ன இருக்க முடியும்?. அந்த நற்பேறு ஒரு நல்லடி யாருக்கு மட்டுமே  கிடைக்கும் என்றால் நம்மை நாம் நல்லடியாராக மாற்றிக் கொள்வதற்கு எது தடையாக இருக்க முடியும்? இவ்வுலகில் மட்டுமல்ல மறுமையில் நல்லடியார்களுக்கு சொர்க்கத்தைத் தந்து அவர்களுக்கென தனிப்பட்ட தேனாய் பாலாய் இனிமையாய் சுவையாய் உதித்தோடும் 'தஸ்னீம்' என்ற
நீரோடையையும் அவர்களுக்கென அல்லாஹ் உருவாக்கி இருக்கிறான், என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا (6) ‏سورة الدهر .
'அது சொந்தமாக அல்லாஹ்வுடைய நல்லடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதை அவர்கள்
விரும்பிய இடமெல்லாம் ஓடச் செய்வார்கள்' (76:6) என்கிறது திருமறை!

அங்கு அவர்கள் பஞ்சணைகளில் சாய்ந்தவர்களாக அந்த தேனாற்றின் சுவையை அருந்தி அல்லாஹ்வை துதி செய்தவர்களாக அமர்ந்திருப்பார்கள்.

ﻭﺃﺧﺮﺝ ﺍﺑﻦﻴﺒﺔ ﻭﻋﺒﺍﻟﻠﻪ ﺑﻦ ﻓﻲ ﺯﻭﺍﺋﺪ ﺍﻟﻤﺴﻨ ﺴﻠﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻟﻘﻴ ﻌﺎﺫ ﺑﻦ ﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺤﻤ ﻓﻘﻠ : ﻭﺍﻟﻠﻪ ﺇﻲ ﻷ ﻟﻠﻪ .
ﻗﺎﻝ :" الْمُتَحَابُّونَ فِي اللهِ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ يَغْبِطُهُمْ بِمَكَانِهِمُ النَّبِيُّونَ وَالشُّهَدَاءُ " قَالَ ثُمَّ: خَرَجْتُ فَأَلْقَى عُبَادَةَ بْنَ الصَّامِتِ قَالَ: فَحَدَّثْتُهُ بِالَّذِي حَدَّثَنِي مُعَاذٌ فَقَالَ: عُبَادَةُ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَرْوِي عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: " حَقَّتْ مَحَبَّتِي عَلَى الْمُتَحَابِّينَ فِيَّ، يَعْنِي نَفْسَهُ وَحَقَّتْ مَحَبَّتِي لِلْمُتَنَاصِحِينَ فِيَّ وَحَقَّتْ مَحَبَّتِي عَلَى (1) الْمُتَزَاوِرِينَ فِيَّ، وَحَقَّتْ مَحَبَّتِي عَلَى الْمُتَبَاذِلِينَ فِيَّ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ يَغْبِطُهُمْ بِمَكَانِهِمُ النَّبِيُّونَ وَالصِّدِّيقُونَ "رواه احمد 22782  الطبراني في معجم الكبير 16579 .

அபூமுஸ்லிம் (ரஹ்) சொல்கிறார்கள்.
நான் ஹிமஸ் என்ற பகுதியில் முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்களை சந்தித்து நான் உங்களை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்று சொன்னேன். அப்பொழுது அவர்கள் என்னிடம் சுபச் செய்தி பெறுங்கள் ஏனெனில் நாயகம் சொன்ன ஹதீஸை நான் கேட்டு  இருகின்றேன். யார் அல்லாஹ்விற்காக பிரியப்பட்டார்களோ மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இருப்பார். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை கண்டு  நபிமார்களும் போரில் தன்னுயிர் நீத்த ஸுஹதாக்களும் ரோஷப்படுவர்கள்.
அபூமுஸ்லிம் (ரஹ்) சொல்கின்றார்
இதற்கு பின் நான் அங்கிருந்து புறப்பட்டேன் உபாதாபின் மித்(ரலி)
அவர்களை சந்தித்து முஆது எனக்கு சொன்ன ஹதீஸை அவரிடம் அறிவித்தேன் அப்போது உபாதா ஹதீஸ் குத்ஸியை எனக்கு அறிவித்தார். அல்லாஹ் சொல்கின்றான்... எனக்காக வேண்டி பிரியப்படுபவர்கள் எனக்காக சந்தித்து கொள்பவர்கள்
எனக்காக தங்களுக்கு இடையில் செலவு செய்பவர்கள் இவர்களுக்கு என்று அன்பு உறுதியாகி விட்டது இப்படிப்பட்டவர்கள் மறுமையில் ஒளி நிரம்பிய மேடையில் வீற்றிருப்பார்கள் இவர்களை கண்டு நபிமார்கள் சித்தீகீன்கள் ரோஷப்படுவர்கள். .
நூல் : தப்ஸீர் துர்ருல் மன்ஸூர்.+ அஹ்மத் ஹதீஸ22782 .

2 . @@@@@@@@@

வலிமார்கள் . என்றால் யார் ?
الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (63))
10:63 . அவர்கள் ஈமான் கொண்டு  (முழுமையாக தக்வா-) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். 10:64 .

இறைநேசர்கள் என்றால் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தருகிற நல்லறங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் வெறுப்பைப் பெற்றுத்தருகிற தீய செயல்களில் ஈடுபடாமல் தொடர்ந்து தங்களை தற்காத்துக்
கொண்டிருப்பார்கள் என்று இமாம் முல்லா அலிகாரீ (ரஹ்)  வர்கள் தங்களின் ஷரஹ்ஃபிக்ஹூல் அக்பர்  எனும் நூலில் ( பக்கம் 95 ) குறிப்பிடுகிறார்கள்..  

3 . @@@@@@@@@

இறை நேசர்களுடன் தொடர்பு.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ (119)
 “ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹுவை அஞ்சுங்கள் (தக்வா செய்யுங்கள்) மேலும் சாதிக்கீன்களுடன் (தோழமை கொண்டு ) இருங்கள்”.(9:119) என்னும் திருவசனமும்
வலியுறுத்துகிறது. .

ﻋﻦ ﺍﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺍﻥ ﺍﻟﻌﻴﻦ ﻟﺘﺪﺧﻞ ﺍﻟﺮﺟﻞ ﺍﻟﻘﺒﺮ ‏( ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள் : கண் திருஷ்டி ஒருவனை கப்ரில் நூழைத்து விடும்
(அறிவிப்பவர் : அபூ ஹூரைரா ரலி நூல் : இப்னு மாஜா )

இந்த ஹதீஸை கொஞ்சம் கவனமாக பாருங்கள் இதில் மிக பெரிய விளக்கம் இருக்கிறது ! ஒரு சாதாரண மனிதனுடைய தீய பார்வைக்கே ஒருவனை மௌத்தாக்கும் (மரணத்தைஏற்படுத்தும்)
சக்தி இருக்குமானால்  ஏன் ?......  இறைநேசம் பெற்ற இறைநேசர்களின் அன்பு பார்வைக்கு அவன் வாழ்வை சீர்திருத்தம் பெற செய்யும் ஆற்றல் இருக்காதா ?

 ﺭﻭﻯ ﺍﻹﻣﺎﻡ ﺃﺣﻤﺪ ﻓﻲ ﻣﺴﻨﺪﻩ ﻭﺍﺑﻦ ﺣﺒﺎﻥ ﻓﻲ ﺻﺤﻴﺤﻪ ﻭﺍﻟﺤﺎﻛﻢ ﻓﻲ ﻣﺴﺘﺪﺭﻛﻪ
ﻭﻏﻴﺮﻫﻢ ﻋﻦ ﻋﺒﺎﺩﺓ ﺑﻦ ﺍﻟﺼﺎﻣﺖ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ
ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻧﻪ ﻗﺎﻝ " اضمنوا لى ستا من أنفسكم أضمن لكم الجنة: اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا ائتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم ". ﺍﻧﻈﺮ
ﺍﻟﺴﻠﺴﻠﺔ ﺍﻟﺼﺤﻴﺤﺔ ﻟﻸﻟﺒﺎﻧﻲ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ ﺭﻗﻢ ‏( 1470
ஆறு பண்புகளுக்கு நீங்கள் உறுதி தாருங்கள். நான் உங்களுக்கு
சுவர்க்கத்திற்கு உத்திரவாதம் தருகிறேன். 1. நீங்கள் பேசினால் வாய்மையே பேச வேண்டும். 2. வாக்களித்தால் நிறைவேற்ற
வேண்டும். 3. நம்பி கொடுக்கப்பட்டால், அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 4. உங்கள் கற்பை காக்க வேண்டும்.
5. உங்கள் பார்வையைத் தாழ்த்த வேண்டும். 6. உங்கள் கரங்களை (தீமையிலிருந்து) விலக்கிக் கொள்ள வேண்டும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர் : ஹள்ரத் உபாதா பின் ஸாமித் (ரளி) அவர்கள் (நூல்:அஹ்மது)

போலியான பொருள்கள் நிறைய சந்தைக்கு வந்து விட்டது
என்பதனால் நாம் உயிர் வாழ தேவையான நல்ல தரமான
பொருள்களை தேடி வாங்காமலில்லை. நம் உயிரைவிட மேலான
இறைநம்பிக்கையை உணர்வாக ஆக்கி நம்மை முழுமையான
மனிதாக வாழச்செய்யும் நல்லடியார்களின் இடைவிடா தோழமையை வேண்டி இறைவனிடம் கையேந்துங்கள். ஒவ்வொரு தொழுகையிலும் என்னை நேர் வழியில் செலுத்துவாயாகஎன நாம் உள்ளத்தால்  உருகி கேட்டால் நேரான வழியினை இறைவன் காட்டிட வழி பிறக்கும் !

4 . @@@@@@@@@

இறைநேசர்களின் உபதேசங்கள்

லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள்  தங்கள் மகனுக்கு செய்த உபதேசம் உலகம் முடியும்  காலம்  வரை உலக மக்கள் அனைவரும் பின்பற்றியொழுகக் கூடிய சிறப்பான
 உபதேசமாகும். அல்லாஹ்வை மட்டும் வணங்கு,   ல்லாஹ்விற்கு
இணைவைக்காதே ,சகமனிதர்களைப் பார்த்து முகத்தை திருப்பாதே, பெருமை அடிக்காதே, கர்வம் கொள்ளாதே ,சப்தத்தை உயர்த்தாதே,  நடுநிலையை பேணு. இதில் எந்த ஒன்று எவரிடத்தில் இல்லையோ அவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்,மாறாக வெறுப்பான் என்று முத்தாய்ப்பான உபதேசங்களைக் கூறினார்கள்.

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (18)
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். 31:18

وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ (19)
''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடை பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்). 31:19

மனிதர்களில் சிலர் இப்படியும் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்பதை நன்கறிந்த இறைவன் தன் தூதர் லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக அவர்களின் மகனுக்கு மேற்காணும் அறிவுரைகளை கூறச் செய்து அதை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கி அருளிய இறுதி வேதம்  திருமறைக்குர்ஆனிலும் இடம் பெறச் செய்தான். .

5 . @@@@@@@@@

இறைவனை நேசிக்கின்ற மக்களின் பட்டியலில் நாம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. சக மனிதன் மீது அன்பு
காட்டி சேவை செய்பவர்களாக இருந்தாலே போதும். அப்போது
இறைவன் யாரை நேசிக்கிறானோ அவர்களின் பட்டியலில் நாம் நிச்சயம் இடம் பெறுவோம். அதுதானே பெரும் பேறு...!

மக்கள் சேவைக்கு சிரமம் தேவையில்லை. எங்கும் எப்போதும்
செய்யலாம். பணக்காரன் மட்டும் பிறருக்கு உதவ முடியும், ஓர்
ஏழையால் முடியாது என்று இதில் சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது. படித்தவர்கள் மட்டுமே தொண்டு செய்ய முடியும், பாமரனால் எதுவும் முடியாத என்று ஒதுங்கிவிடவும் முடியாது.
எல்லோராலும் எப்போது வேண்டுமானாலும் செய்யும் நல்ல
சேவையே பிறர் நலனுக்குப் பாடுபடுதல். இதைத்தான் இஸ்லாம்
வணக்கம் எனும் பட்டியலில் சேர்த்து பெருமைப்படுத்துகிறது.

                     ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யுத்த களத்திற்குச்  செல்ல சன்மார்க்க பணிக்காக பொருளுதவி
செய்யுமாறு ஆர்வமூட்டிக் கொண்டிருந்த போது ஒவ்வொரு
நபித்தோழர்களும் தமது பங்களிப்பை நபிகளாரிடம் வந்து
கொடுத்தார்கள். அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே!என்
பொருளாதாரத்தில் சரி பாதியை இதோ அல்லாஹ்விற்காக
வைத்துள்ளேன்என்று கூறி கொடுத்தார்கள். அதைக் கேட்ட
நபிகளார் நீர் அல்லாஹ்விற்காக அர்ப்பணித்ததிலும், உன் குடும்பத்திற்காக  எடுத்து வைத்துக் கொண்டதிலும்
அல்லாஹ் பரக்கத் - அபிவிருத்தியை நல்குவானாக!
என துஆச் செய்தார்கள். நூல்: உஸ்துல் காபா, பாகம்:1, பக்கம்:523  அல்-இஸாபா, பாகம்:1, பக்கம்:1559.

6 . @@@@@@@@@

இறை நேசர்களின் மார்க்கப் பணிகள்

அஹ்மது கபீர் ரிஃபாயீ (ரஹ்) அவர்கள் தம் தவமடத்தில் திங்கள்  வியாழன் தவிர ஏனைய நாட்கள் ஃபிக்ஹு, தப்ஸீர், ஹதீது
 ஆகியவற்றைத் தம் சீடர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள். திங்களும், வியாழனும் லுஹர் தொழுகைக்குப்பின் நாற்காலியில்
அமர்ந்து மக்களுக்கு உபதேசம் பண்ணுவார்கள். லட்சக்கணக்கான மக்கள் அந்த  உபதேசம் கேட்டு நன்மை அடைவார்கள். ரிபாயி நாயகம் அவர்கள் தன் முரீத் அப்துஸ் ஸமீஉ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களுக்கு எழுதிய அறிவுரைகள் ஹிகமுர் ரிபாயிஎன்னும் பெயருடன் விளக்குகின்றன.
..
அழைப்புப் பணியில் முன்னோர்கள்.

அழைப்பு பணி செய்பவர்கள் முதலில் தம்மை தாமே திருத்திக் கொண்டு தீமையான செயல்களை விட்டும் தவிர்ந்தவர்களாக நல்லொழுக்கம் உடையவர்களாக மாற வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் கூறுகின்ற சொல்லுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். மேலும் காது கொடுத்து கேட்பார்கள். ஆரம்ப காலத்தில்  இஸ்லாம் அதிவேகமாக பரவியதற்கு முக்கிய காரணம் என்னவெனில் மற்றவர்கள் முஸ்லிம்களின் நல்லொழுக்கங்களைப் பார்த்தே இஸ்லாத்திற்கு வந்தார்கள்.

இதற்கு உதாரணமாக:
அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அரேபிய வணிகர்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்ததைக் கூறலாம். தற்காலத்தில், முன்னால் கிறிஸ்தவ மத போதகரும்
 தற்போதைய இஸ்லாமிய அழைப்பாளருமான ஷெய்ஹு யூசுப்
எஸ்டஸ் அவர்கள் மிக எளிமையான நல்லொழுக்கம் உடைய எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரை பார்த்து இஸ்லாத்தில் இணைந்ததைக் கூறலாம்.

அதேபோல் பிரித்தானியாவைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு ஒருவர் நல்லுழுக்கம் உடைய முஸ்லிம் சிறுவர்களைப் பார்த்து இஸ்லாத்தை தழுவியதைக் கூறலாம்.  .

இப்படி முஸ்லிம்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இஸ்லாத்தைத் தழுவியர்களின் பட்டியல் எண்ணிலடங்காதவை. எனவே நல்லொழுக்கம்  என்பது ஒரு அழைப்பாளருக்கு இன்றியமையாததாக இருக்கிறது.  சத்தியத்தை எடுத்துரைப்பதில்
நேர்மை :

ஸ்பெயினின் கலீஃபாக இருந்த அப்துர் ரஹ்மான் இப்னு ஹகம் அவர்கள் ஒரு சமயம் மாலிக் (ரஹ்) அவர்களின் மாணவர் அபூ முஹம்மத் யஹ்யா அந்த லூயி ரஹ் அவர்களை அழைத்து
தலைமை நீதிபதியாக வந்து பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு
அழைப்பு விடுத்தார் . நான் குர்ஆனையும்  ஹதீஸையும் கற்றது பணம் சம்பாதிக்க  அல்ல , மாறாக இந்நாட்டில் கல்வியைப் பெருக்க வேண்டும்.அதன் மூலம் நேர்மையான மக்களை உருவாக்க  வேண்டும் என்பதற்காகவே நான் கல்வி கற்றேன் எனக் கூறி நீதிபதி பதவியை ஏற்க மறுத்து விட்டார்கள் .

ஒரு தடவை கலீஃபா தமது சொந்தப் பிரச்சனை  ஒன்றுக்காக மார்க்க அறிஞர்களின் சபையை ஒன்று கூட்டினார். அங்கே யஹ்யா (ரஹ்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள் . இமாம் அவர்களே! நேற்று நான் நோன்பை முறித்து விட்டேன். அதற்கான கஃப்பாரா குற்றப்பரிகாரம் என்ன ?என்று யஹ்யா (ரஹ்) அவர்களை நோக்கி வினவினார் கலீஃபா . அல்லாஹ் அல் குர் ஆனில், 1. ஓர் அடிமையை விடுவித்தல் 2. அறுபது ஏழைகளுக்கு உணவளித்தல் 3. இரண்டு மாதம் - 60 நாட்கள் தொடர் நோன்பிருத்தல் இம்மூன்றில் ஒரு வழியில் பரிகாரம் தேட வேண்டும் என அறிவுறுத்துகின்றான் . கேள்வி நேரடியாக துணிவு படைத்த ஹல்ரத் யஹ்யா  (ரஹ்)அவர்களை நோக்கி கேட்கப்பட்டதால் மற்ற அறிஞர்கள் மெளனமாய் இருந்தார்கள் . தொடர்ந்து 60 நாட்கள் நோன்பு வைப்பதுதான்  தங்கள் குற்றத்திற்கான பரிகாரம் என கலீஃபா அவர்களிடம் தெரிவித்தார்கள் .

அரசவையை விட்டு வெளியே வந்ததும் ஏனைய உலமாக்கள் எளிதான இரண்டு பரிகாரங்களைக் கூறாமல் ஏன் கலீஃபாவுக்கு கடுமையான பரிகாரத்தை தேர்ந்தெடுத்துக் கூறினீர்கள்?என்று  தம் செய்தனர் . உடனே , யஹ்யா அவர்கள் ஓர் அடிமையை விடுவிப்பதோ  அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பதோ நாடாளும் ஓர் ஆட்சியாளருக்கு பெரிய காரியமே அல்ல . அறுபது நாட்கள் நோன்பிருக்கும் போதுதான் , தான் செய்த குற்றத்தின் தன்மை தெரியும். இல்லையேல் இறைவன் விஷயத்தில் கலீஃபா நேர்மை தவறிடும்  நெறிபிறந்திடும் வாய்ப்பு அதிகம்  உள்ளது .
ஆகையால் தான் அத்தகைய பரிகாரத்தை தேர்ந்தெடுத்தேன்என்றார்கள் .

இந்த உம்மத்தின் நற்பெரும் நான்கு இமாம்களும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஆட்சியாளர்களின் கடும்  அடக்கு முறைக்கு
உள்ளாக்கப்பட்டார்கள் .எனினும் அவர்கள் ஒரு போதும் நேர்மை தவறி நடந்திட முற்பட்டதில்லை .

அறிவுலக மாமேதை அபூ ஹனீபா ரஹ் அவர்கள் ஆட்சியாளர் மன்ஸீர் அவர்களால் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள் . கிலாஃபத் - ராஷிதாவுக்குப் பின்னர் ஆட்சியாளர்களின் நேர்மை கேள்விக்குறியானதை உணர்ந்த இமாம் அவர்கள் இஸ்லாமிய சட்டத்துறையை மறுசீரமைப்பு செய்ய ஓர் அமைப்பை ஏற்படுத்தினார்கள் . அந்த அமைப்பில் தமது மாணவர்களையே
உறுப்பினர்களாக ஆக்கினார்கள் . ஒருமுறை இவ்வமைப்பில்
பணியாற்றுகிறவர்களின் புலமையைப் பற்றி இமாம் அவர்கள் மொத்தம் 36 பேர் இவ்வமைப்பில் உள்ளனர் . இவர்களில் 28 பேர்கள்   நீதிபதிகளாகவும் 6 பேர்கள்  பத்வா வழங்கும் முஃப்தீயாகவும் 2 பேர்கள்  நீதிபதிகளையும், முஃப்தீக்களையும்
உருவாக்கும் ஆற்றல் படைத்தோர் என்று குறிப்பிட்டார்கள்”. ( நூல்: அஹ்காமுல் குர் ஆன் பாகம்:1, பக்கம்:81 நன்றி: இஸ்லாமிய
ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும், தமிழ் நூல் : பாகம் 2)

7 . @@@@@@@@@

அழைப்புப் பணியின் தாக்கம்

மக்கள் நன்மைகளை விட்டும் வெகு வேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்ப சுகம், உலகாதாயம் என்பவற்றில் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று
கொண்டிருக்கின்றனர்.  உதாரணமாக, வட்டி, ஹராம் என்பது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையாகும். இந்த வட்டியின்  பக்கம் வாருங்கள் என தொலைக்காட்சி, வானொலி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் அழைப்பு விடுக்கின்றன. பத்திரிக்கையில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், இனிப்பான திட்டங்கள் என அன்றாடம்  வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு தீமைகள்  புயலாக வீசும் போது  உண்மை  இறைவிசுவாசி தானுண்டு தன் பாடுண்டு என்று இருக்கமுடியுமா? அவர்களது உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்கள், ஊரார் அனைவரும் அழிவின்பக்கம் விரைந்து  சென்று கொண்டிருக்கும் போதுஇவர் கண்டு கொள்ளாமல் இருப்பது அறிவுக்கு பொருந்துமா? இதனை பின்வரும் சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.
عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ»
427. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(வும்) தாங்கள் அபீ ஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை


حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ (18)
 சுலைமான் (அலை) அவர்கள் தன் பட்டாளத்துடன் போகும் போது , ஒரு எறும்பு தனது மற்ற எறும்பு கூட்டங்களைப் பார்த்து,
எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய படையினரும் தாம்
அறியாமலேயே உங்களை திண்ணமாக மிதித்து விட வேண்டாம். 27:18 எனக்கூறியது. 

இந்த சம்பவம் மூலம் ஓர் எறும்பு தனது மற்றைய எறும்புகள்
அழிந்துவிடக்கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கரையை உணரமுடிகிறது. ஓர் எறும்பே சமூக உணர்வுடன் நடந்திருக்கும்போது, எமது சகோதர  சகோதரிகள் ஷிர்கிலும் பித்அத்துக்களிலும், ஹராத்திலும் மூழ்கியிருக்கும் போது இந்த செயல்கள்  மூலம் தம்மைதாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும்போது நாம் தடுக்காது இருக்கலாமா? அப்படியிருந்தால் இந்த எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா
சென்றிடுவோம்.!

சுஃப்யானுத் தவ்ரி(ரஹ்) அவர்கள்
கூறினார்கள், நன்மையைக் கொண்டு  ஏவி தீமையைத் தடுப்பவர்களுக்கு மூன்று பண்புகள் அவசியமாகும். a) ஏவுவதை தெரிந்திருக்க வேண்டும். b) தடுப்பவைகளை தவறு என்று
தெரிந்திருக்க வேண்டும் c) ஏவும் போதும் தடுக்கும்போதும்
நீதமாகவும் மிருதுவாகவும் சொல்ல வேண்டும்.

2. தவறைக்காணும் போது மூன்று முறைகளில் ஒன்றை கையாள
வேண்டும். a) கையால் தடுப்பது. இது குறிப்பிட்டவர்களுக்கே பொருந்தும். தந்தை தன் பிள்ளையை கட்டுப்படுத்துவது, அரசர் தன்
பிரஜைகளை, கணவன் மனைவியை இவ்வாறு இது நீண்டு கொண்டே போகும்... .) b) நாவால் தடுப்பது  c) மனதால்  வெறுப்பது

«مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ».
அபூ ஸஈதுல் குத்ரீ ( ரலி ) அவர்கள் மூலமாக அறிவிக்கப்படுகிறது... நபி  (ஸல் ) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.உங்களில் யார் தவறைக் காணுகின்றார்களோ அதை கையால் தடுக்கட்டும், அதற்கு முடியவில்லையென்றால் நாவால் தடுக்கட்டும், அதற்கும் முடியவில்லையென்றால் மனதால் வெறுக்கட்டும் அதுதான் ஈமானின் குறைந்த அளவு என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)

8 . @@@@@@@@@

இங்கே ஒரு தகவலை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்களில் மிகச் சிறந்தவர் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் )அதன் பிறகு மற்ற நபிமார்கள் அதன் பிறகு நமது  நபியின் தோழர்களான சஹாபாக்கள் அதன் பிறகு இறைநேசர்கள் என்பதே சிறப்பிற்குரிய மனிதர்களைப் பற்றிய நமது கொள்கையாகும். அந்த அடிப்படையில் நபித்தோழர்களான சஹாபாக்கள் அனைவரும் மிக உயர்ந்த இறைநேசர்கள் ஆவர். நபித்தோழர்களுக்குப் பின் வந்த எந்த இறைநேசரும் சஹாபாக்களின் அந்தஸ்தஸ்திற்கு ஈடானவர்கள் அல்ல.

இமாம் ஷாபி (ரஹ்) அவர்களிடம் முஆவியா (ரலி) சிறந்தவரா உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) சிறந்தவரா என்று கேட்கப்பட்டது .  இமாம் ஷாபி (ரஹ்) கூறினார். முஆவியா (ரலி) யின் குதிரையின் குளம்படி மண்ணுக்கு கூட உமர் பின் அப்துல் அஜீஸ் ஈடாக முடியாது.

எனவே அவ்லியாக்கள் எனப்படும் இறைநேசர்களின் அந்தஸ்து
நபித்தோழர்களின் அந்தஸ்திற்கு கீழ் தான் என்பதையும், இறைநேசர்கள் தங்களுடைய மார்க்க் சமூகப் பணியினால் தான் சமூகத்தின் கவனத்திற்கு வந்தார்கள் என்பதையும் மறந்து
விடக்கூடாது. இந்த நல்லடியார்கள் நமக்கு இறையச்சத்தையும்
இறைத்தூதரின் மீது பற்றையும் மார்க்கத்தின் மீது பிடிப்பையும் உருவாக்கினாகள். தாம் வாழ்ந்த காலத்தில் மக்களை நல்வழிப்படுத்த அதிக முயற்சி செய்தார்கள்.

أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: مَرُّوا بِجَنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ» ثُمَّ مَرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا، فَقَالَ: «وَجَبَتْ» فَقَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَا وَجَبَتْ؟ قَالَ: «هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا، فَوَجَبَتْ لَهُ الجَنَّةُ، وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا، فَوَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ»

நூல்: புகாரி 1367.அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்ற போது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உறுதியாகி விட்டது என்றார்கள்.

மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்ற போது அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், உறுதியாகி விட்டது எனக் கூறினார்கள். உமர் (ரலி) எது உறுதியாகி விட்டது? எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள் எனக் கூறினார்கள். நூல்: புகாரி1367. .

இறை நேசர்களால் இந்த சமுதாயம் பெற்ற நன்மைகள்  என்ன?
பொதுவாக இறைநேசர்களின் மீதான பற்றையும் மரியாதையையும்
நினைவு கூர்ந்து அவர்களுடைய அறிவுரைகளை ஞாபகப்படுத்திக் கொள்கிற மாதமாகும் . நபி தன்னை பகிரங்கமாக பிரகடனப்படுத்த வேண்டும். இறைநேசர்கள் பகிரங்கமாக அறியப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலருக்கும் தாம் ஒரு வலி என்பது தெரியாமலே கூட இருக்கலாம்.. அதனால் இறைநேசர்களும்  உலகிற்கு வெளிப்பட வில்லை. சிலர்  அவர்களுடைய அபாரமான சமூக சேவையின் காரணமாக அடையாளம் காணப்பட்டார்கள் .சரியான மார்க்கத்தை கடைபிடிக்க உதவிய காரணத்தால் மக்கள் அவர்களை பெரிதும் மதித்தார்கள்.

9 . @@@@@@@@@

இறைநேசர்கள் செய்த பணி....
மக்களை இஸ்லாத்திற்கு அழைத்தார்கள். முஸ்லிம்களுக்கு சரியான மார்க்கத்தை சொல்லிக் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற வழி காட்டினார்கள்.சமூக சீர்திருத்தப் பணிகள் பலவற்றை திறம்படச் செய்தார்கள் . அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்க் உழைத்தார்கள். அக்கிரமச் சக்திகளுக்கு எதிராகப் போரடினார்கள்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் ஹிஜிரி 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
அவருடைய காலத்தில் அப்பாஸிய கலீபாக்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. உலகில் முஸ்லிம்கள் மிகுந்த செல்வாக்கோடு
வாழ்ந்த காலம் அது.  கல்வி, கலை, அறிவியல், மருத்துவம். என முக்கியத்துறைகள் அனைத்திலும் முஸ்லிம்கள் சிறந்து விளங்கினார்கள். மற்றவர்கள் தமது தேவைகளுக்காக முஸ்லிம்
நாடுகளையே நம்பியிருந்த காலம் அது. அங்கே இரண்டு வகையான தீமைகள் பெருகி வந்தன. 1. அறிவியல் துறையில் முன்னேறிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மார்க்கத்தின் உயிரோட்டமான ஆன்மீக சிந்தனைகளிலிருந்து விலகிச் சென்று
கொண்டிருந்தார்கள். படிப்பறிவு மேலோங்கி பக்தி குறைந்து
கொண்டிருந்தது. 2. ஆன்மீக வாதிகள் என்று அறியப்பட்டோர்
ஷரீஅத்தின் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த இரண்டு சூழ்நிலைகளையும்
அடியோடு மாற்றினார் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் !
ஞானம் மிக்க அவரது உபதேசங்கள் மனித உள்ளங்களை தட்டி எழுப்பி மார்க்கத்தின் பாதைக்கு அழைத்து வந்தன. கணக்கிலடங்காதோர் அவரால் நேர் வழி பெற்றனர். அவரது உரையை கேட்க ஒருசமயம்பக்தாது நகருக்கு 90 ஆயிரம் பேர்
திரண்டதாக வரலாறு சொல்கிறது.அந்த சபையை பற்றி ஆச்சரியமூட்டும் வகையில் பேசப்படுகின்றன. ஏராளமானோர் அவரது பேச்சில் திருந்தினர். அதனால் மக்கள் அவரை பேச்சாளராக போற்றினர். ஒரு முக்கியமான காலகட்டத்தில்
முஸ்லிம் சமூகத்தின் மனப் போக்கை மார்க்கத்தை நோக்கி திருப்பியதால தான் அவர் முஹியித்தீன என்று அழைக்கப்பட்டார்.
அன்னாரின் மற்றுமொரு சிறப்பு, ஆன்மீகம் தரீக்கா என்பது ஷரீஅத்தை மீறி நடப்பதல்ல  என்பதை ஆணித்தரமாக உணர்த்தினார்.

இஸ்லாம் பக்தியின் பெயரால் தவறான வழியில் செல்லாமல் காப்பாற்றப் பட்டது. அவரது வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்ச்சி
ஒரு நாள் "தூரப்போ ஷைத்தானே" என்று அவர் துப்பினார்.
சீடர்கள் காரணம் விசாரித்தனர். என்னிடம் வந்த சைத்தான் அல்லாஹ் பேசுவது போல நடித்து என்னைப் பாராட்டி விட்டு ஹராம் அனைத்தும் இன்று முதல் உமக்கு ஹலால் என்றான்.
 அவனை விரட்டினேன் என்றார். அது சைத்தான் என எப்படி கண்டு  கொண்டீர் என சீடர்கள் கேட்டனர்.  ஹராம் ஹலால் என்பது... பெருமானாரோடு முடிந்து விட்டது. வேறு யாருக்கும் அதில் அதிகாரம் கிடையாது அதை வைத்து அவனை அடையாளம் கண்டு கொண்டேன் என்றார்.சைத்தான் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) யிடம் சொன்னான் இதே போல நாற்பது பேரை
ஏமாற்றி யிருக்கிறேன் நீர் மார்க்க ஞானம் பெற்றிருந்ததால் தப்பித்துவிட்டீர். ஜிலானி (ரஹ்) அவர்கள் அனைத்து
தரீக்கா பிரிவினரையும் இணைத்து மாபெரும் மாநாடுகளை நடத்தி தரீக்கா பற்றீய புரிந்துணர்வை ஏற்படுத்தினார். அதனால்
நக்ஷபந்தி தரீக்காவினர் ஜீலானி (ரஹ்) அவர்களை எங்களுடையவும் உங்களுடையவும் ஷைகு என்று அழைப்பதுண்டு. ஜிலானி ரஹ் அவர்களின் முயற்சியின் விளைவாவாகத்தான் பல தரீக்காக்களும் இணைந்த பொதுவான ஷைகுகளும் தரீக்காகளும் உருவாயின. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மார்க்கம்  தளர்வுற்றிருந்த நேரத்தில் ஜீலானி ரஹ்
அவர்கள் ஆற்றிய பணியின் விளைவாக முஸ்லிம்  சமூகம் மிகப் பெரும் மலர்ச்சியை கண்டது. அதனால் தான் மக்கள் அவரை
முஹ்யித்தீன் என்று அழைத்தார்கள்.

10 . @@@@@@@@@

அன்னாரது அறிவுரைகளும் உபதேசங்களும் இன்றும் கூட உள்ளத்தை உருக்குபவையே! கிட்டத்தட்ட இதே காலத்தில் ஜீலானி (ரஹ்) அவர்களின்  தொடர்பிற்கு பிறகு இந்தியாவிற்கு திரும்பி வந்தவர் தான் அஜ்மீர் காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி அவர்கள். அவர்தான் வட இந்தியாவில் இஸ்லாம் பரவ காரணமாக இருந்தார்.
அவருடைய முயற்சியால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு 90 இலட்சம் மக்கள் இஸ்லாமை தழுவியதாக ஆர்னால்டு
தாயன்பி என்ற அறிஞர் கூறுகிறார். காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி அவர்கள், இந்தியாவில் நிலவிய சாதிக் கொடுமைக்கு எதிராக போராடினார். சாமாண்ய மக்களுடைய வசதிகளுக்காக உழைத்தார்.
அவர்களுகு நிதி பெற்றுத்தருவதற்காக தானே நேரடியாக
அரசர்களிடம் சென்றார்.
தமிழகத்தில் மிகப் பிரபலமாக இருக்கிற நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா ஏர்வாடி ஸையது இபுறாஹீம் பாதுஷா (ரஹ்) ஆகியோரும் முஸ்லிம் சமூகத்து மக்களுக்கு மார்க்கத்திலும் சமூகத்திலும் முன்னேற்றம் காண உதவிவர்களே என்பது அவர்களுடைய வரலாறுகளை படித்தால் அறிந்து கொள்ள முடியும் . ஒவ்வொரு பகுதியிலும் கிராமத்திலும் இறைநேசர்களாக அடையாளம் காணப்படுகிறவர்களின்  வரலாற்றை தேடி ஆராய்ந்து பார்த்தால் அவர்களால் இந்த சமூகம் அடைந்த  நன்மைகளை புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். வலி மார்கள் பெரும்பாலும் தங்களது உரைகளால் உலகியல் மோகத்தில் மூழ்கியிருக்கும் மக்களை அல்லாஹ்வின் எதார்த்த சக்தியை நோக்கி திருப்பி
விட்டனர்.
11 . @@@@@@@@@

ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) ஹ்ஜிரி 3 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் – 221 -298 உயிரோட்டமிக்க சொற்பொழிவால் மக்கள் மனங்களில்
இறை நம்பிக்கையை இறையச்சத்தை விதைத்தார். இறைவனின் மீது நம்பிக்கை தவ்க்குல் வைத்து செயலாற்றாதிருப்பது இறைவனை சோதிப்பதாகும். தன் திறமையால் எல்லாம் நிகழ்கின்றன  என்று நினைப்பது இறைவனை அலட்சியம் செய்வதாகும். தோற்றத்தினால் அல்ல; குணத்திலாயே ஒரு நபர் மனிதராக தோன்றுகிறார். மனதுக்கு கட்டுப்படுவதே முறை கேடுகளுக்கு மூல காரணம். அல்லாஹ்வின் படைப்புக் களிலிருந்து பாடம் படிக்காத கண்ணை விட குருட்டுத் தனம் மேல். இறைவனை துதிக்காத நாவை விட ஊமைத்தனம் மேல். உண்மையை செவியேற்காத காதை விட செவிட்டுத்தனம் மேல். அல்லாஹ்வை வணங்காத உடலை விட மரணம் மேல்.


எனவே இறைநேசச் செல்வர்களான அவ்லியாக்கள் செய்த கடும் தவம் வணக்க வழிபாடுகள் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் போன்ற அறப்பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுகளை நினைத்து நாமும் வணக்க வழிபாடுகள் அறப்பணிகள் செய்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.
கிருபையுள்ள அல்லாஹ்  நம் அனைவரையும் உண்மையான உறுதியான வெற்றி பெற்ற ஸுன்னத் வல் ஜமாஅத்தில் நிலை பெற வைப்பானாக ! ஆமீன்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.