بسم الله الرحمن الرحيم
உலகளாவிய அளவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதேன்?
**************************************************
قوله تعالى : ان الذين كفروا
ينفقون أموالهم ليصدوا عن سبيل الله...
قول النبي صلى الله عليه
وسلم :
عن تميم الداري رضي الله
عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : " ليبلغن هذا الأمر ما بلغ
الليل والنهار ولا يترك الله بيت مدر ولا وبر إلا أدخله الله هذا الدين بعز عزيز أو
بذل ذليل عزاً يعز الله به الإسلام وذلاً يذل الله به الكفر " أخرجه أحمد رقم ( 16998 )
அல்லாஹ்
அவனது பெரும் கிருபையால் நம்மை இஸ்லாமிய மார்க்கத்தில் நிலைக்கச் செய்திருக்கிறான்.
( மரணிக்கும் வரை நிலைத்திருக்கச் செய்வானாக ஆமீன்.) இந்த மார்க்கத்தை அழித்து விட
வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலம் தொட்டே எதிரிகள் பல சூழ்ச்சிகளை
செய்து வருகிறார்கள். இறைவன் திருமறையில் அதை இவ்வாறு குறிப்பிடுகிறான்.
إِنَّ الَّذِينَ كَفَرُوا
يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ ۚ فَسَيُنْفِقُونَهَا
ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ ۗ وَالَّذِينَ كَفَرُوا إِلَىٰ
جَهَنَّمَ يُحْشَرُونَ
நிச்சயமாக
நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள்
செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து
கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர்
அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில்
ஒன்று சேர்க்கப்படுவார்கள்.(அல்குர்ஆன்-8:36)
தங்களால்
இயன்ற அளவு உடல் உழைப்பால், பொருளாதார அர்ப்பணிப்பால், ஆலோசனைகளால், பதவி
அதிகாரங்களை பயன்படுத்தி இந்த மார்க்கத்தை நிர்மூலமாக்கிட முயல்கிறார்கள். ஆனால் ஏனோ
அக்காலம் தொடங்கி இக்காலம் வரை அதில் அவர்கள் தோல்வியே கண்டிருக்கிறார்கள். இஸ்லாத்திற்கு
எதிரான துர்பிரச்சாரங்கள் இஸ்லாம் வளர்வதற்கே
காரணமாக அமைகிறது.
يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا
نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ
كَرِهَ الْكَافِرُونَ
தம்
வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள்
- ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல்
இருக்க மாட்டான். (அல் குர்ஆன் - 9: 32)
இஸ்லாத்தை
இஸ்லாமியர்களை அழிப்பதன் மூலமாக அழித்து விடலாம் என நினைத்துக் கொண்டு இஸ்லாமிய எதிரிகள்
கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். அவர்கள் அறிய மாட்டார்கள் இஸ்லாமியர்களை அழித்தாலும்
இஸ்லாம் ஒரு போதும் அழியாது.
இதை
பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் தன்வசம் வைத்துள்ளான்.
إِنَّا نَحْنُ نَزَّلْنَا
الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
நிச்சயமாக
நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக
நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
(அல்
குர்ஆன் - 15:9)
இந்த
வேதத்தையும் இந்த வேதத்தில் கூறப்பட்ட இறைவனின் அங்கீகாரம் உள்ள இஸ்லாமிய மார்க்கத்தையும் அழிந்து விடாமல் இறைவன் பாதுகாப்பதால்
அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது.
நபிகள்
நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் இந்த மார்க்கம் உலகின் மூலை முடைக்குகள் எல்லாம் சென்றடையும்.
عن تميم الداري رضي الله
عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : " ليبلغن هذا الأمر ما بلغ
الليل والنهار ولا يترك الله بيت مدر ولا وبر إلا أدخله الله هذا الدين بعز عزيز أو
بذل ذليل عزاً يعز الله به الإسلام وذلاً يذل الله به الكفر " أخرجه أحمد رقم ( 16998 )
இந்த
மார்க்கம் உலகில் இரவு பகல் அடைந்த எல்லா இடங்களையும் அடையும் அல்லாஹ் எந்த களிமண்
வீடுகளிலும் (நகர்ப்புற வீடுகளிலும்,) எந்த உரோம கூடாரங்களிலும் (கிராமப்புற
வீடுகளிலும்) இஸ்லாத்தை அந்த வீட்டாரிடம் கண்ணியமாகவோ அல்லது கேவலப்பட்டோ நுழைவிக்காமல் விட மாட்டான் அந்த கண்ணியத்தின்
மூலம் அல்லாஹ் இஸ்லாத்தை கண்ணியப் படுத்துவான் இன்னும் அந்த இழிவைக் கொண்டு அல்லாஹ்
நிராகரிப்பை இழிவுபடுத்துவான். (நூல் :அஹ்மத் )
ஆனாலும்
இஸ்லாமியர்கள் தாக்கப் படுவது உலகெங்கிலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிரியாவில்
அதன் அதிபர் பஷார் அல் ஆஜாத் ரஷியா துருக்கி
ஈரான் போன்ற நாடுகளின் கூட்டுப் படைகளோடு சேர்ந்து கொண்டு தன் நாட்டு மக்களுக்கு
எதிராகவே தாக்குதல் நடத்தி பெரிய எண்ணிக்கையில்
மக்களை கொன்று குவித்து வருகிறான். அந்த மக்கள் நிம்மதியாக வாழ வழியின்றி அகதிகளாக
வெளியேறிச் சென்றாலும் மற்ற நாட்டினர் மனிதாபிமானமின்றி எல்லைகளை அடைத்து வைத்துக்
கொண்டு அந்த மக்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்.
உயிரை
பாதுகாக்க நாடு துறந்து சென்றவர்கள் கப்பல்களிலும், தோணிகளிலும்
கூட்டம் நிரம்பி கடலில் மூழ்கி இறந்தவர்கள் நிறைய. என அந்த மக்கள் படும் துயரங்களை
சொல்லிக் கொண்டே போகலாம்.
பர்மாவில்
புத்த மத துறவிகளாலும் அரசுப் படைகளின் அடக்குமுறையாலும் பாதிக்கப்பட்டு ரோஹிங்கயோ
முஸ்லிம்கள் நாட்டை விட்டு அகதிகளாக ஒருபுறம் வெளியேறிச் சென்று கொண்டிருக்கின்றனர்
மறுபுறம் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல முகாம்களில் அடைபட்டு அரசு படைகளின் தாக்குதல்களுக்கு
ஆளாகி வருகின்றனர்.
ஃபலஸ்தீன
முஸ்லிம்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களையும், அடக்குமுறைகளையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இவ்வாறாக
உலகில் இஸ்லாமியர்கள் வசிக்கும் எல்லா பகுதிகளிலும் சிறிது பெரிதுமாக தாக்குதல்கள்
நடந்து கொண்டு தான் இருக்கிறது.
நம்
நாட்டின் எல்லையில் காஷ்மீரில் நடக்கும் அநீதங்கள் அட்டூழியங்கள்.
சங்பரிவார
கும்பலால் நாட்டில் நடக்கும் பல்வேறு விதமான தாக்குதல்கள் என பட்டியல் நீண்டு கொண்டே
செல்கிறது.
இதற்கெல்லாம்
என்ன காரணம் இதற்கு முடிவில்லையா?
" பழம்
உள்ள மரம் தான் கல்லடி படும்" என்பது போல உண்மை மார்க்கமான இஸ்லாம் குறித்து இடித்து
பேசுவது, இஸ்லாமியர்களை
தாக்குவது போன்ற வன்முறைகள் இஸ்லாமிய பிரச்சாரத்தை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் துவங்கிய நாள் முதலே நடந்தேறி வருகிறது.
عن أبي عبد السلام، عن ثوبان،
قال قال رسول الله صلى الله عليه وسلم: «يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة
إلى قصعتها»، فقال قائل: ومِن قلة نحن يومئذ؟ قال: «بل أنتم يومئذٍ كثير، ولكنكم غثاء
كغثاء السيل، ولينزعن الله من صدور عدوكم المهابة منكم، وليقذفن في قلوبكم الوهن»،
فقال قائل: يا رسول الله وما الوهن ؟ قال: «حب الدنيا، وكراهية الموت».
"நபிகள்
நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் " விரைவில் ஒரு காலம் வரும் அப்போது விருந்தளிப்பவன்
விருந்துக்கு அழைப்பதைப் போல உங்களுக்கு எதிராக (தாக்குதல் நடத்த) மற்ற சமூகத்தினர்
தங்களுக்குள் அழைத்துக் கொள்வார்கள். அப்போது ஒருவர் கேட்டார் நாங்கள் எண்ணிக்கையில்
குறைவாக இருப்பதாலா? ( இந்த தாக்குதல்) என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
கூறினார்கள் மாறாக நீங்கள் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தின் நுரை போல நிறைய எண்ணிக்கையில்
இருப்பீர்கள். உங்கள் எதிரிகளின் உள்ளத்தில் உங்கள் மீதான பயத்தை அல்லாஹ் எடுத்து விடுவான். உங்கள் உள்ளத்தில் "وهن" யை அல்லாஹ் போட்டு விடுவான்.
அப்போது ஒருவர் وهن என்றால் என்ன
என்று கேட்டார். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் உலக ஆசையும், மரணத்தின்
மீதான வெறுப்பும்"
(நூல்
- அபூதாவூத் )
இஸ்லாமியர்களுக்கு
இருக்கக் கூடாத இரண்டு பண்புகள் நம்மில் குடிகொண்டதால் தான் நமக்கு இந்த அவலம் என்று
ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது. மேலும்
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
أخرجه أبو داود (3/ 18، رقم
2532)، ولفظه: «…وَالْجِهَادُ مَاضٍ مُنْذُ بَعَثَنِي اللهُ إِلَى أَنْ يُقَاتِلَ آخِرُ
أُمَّتِي الدَّجَّالَ، لَا يُبْطِلُهُ جَوْرُ جَائِرٍ، وَلَا عَدْلُ عَادِلٍ…»،
"மார்க்கத்தை
பாதுகாப்பதற்காக போராடுவது என்பது நான் நபியாக
அனுப்பப்பட்டது முதல் (கியாமத் நாள் வரை) என்
உம்மத்தின் கடைசி காலத்தில் வாழ்பவர்கள் தஜ்ஜாலிடம் போராடும் வரை நீடித்திருக்கும்
இதை எந்த நீதவானின் நீதமும், அநியாயக்காரனின் அநீதமும் தடுத்து நிறுத்த முடியாது என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்:
அபூதாவூத்)
இன்று மார்க்கப் போர் என்ற பெயரில் போராட்டங்கள் பல நடைபெற்றாலும்
அவைகளில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டிக் கொடுத்த எந்த வழிமுறைகளும் கடைபிடிக்கப்
படுவதில்லை. இறைவனின் மார்க்கத்தை உயர்த்துவது (اعلاء كلمة الله) என்பதை நோக்கமாக கொள்ளாமல் ஒரு வாழ்வாதாரப் போராட்டம் அல்லது இட ஒதுக்கீடு
கோரியோ, சமூக
நீதியை நிலைநாட்டவோ என்று குறுகிய மனப்பான்மையிலேயே
இன்றைய அநேக போராட்டங்கள் அமைந்துள்ளது.
அப்படியே
மார்க்கப் போர் என பிரகடனப்படுத்தப் பட்டாலும் அதில் ஒரே தலைமை இருப்பதில்லை பல குழுக்களாக
பிரிந்து போராடுவதால் நாம் பலவீனமடைந்து போகிறோம்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலத்தில் அனைத்து போர்களும் அவர்களின் தலைமையில் தான் நடந்தது
பின்னர் ஸஹாபாக்கள் காலத்திலும்' தாபியீன்கள் காலத்திலும் அந்தந்த கலீபாக்களின்
தலைமையில் தான் நடந்தது.
இறைவன்
திருமறையில் குறிப்பிடுகிறான்
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ
وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ
مَعَ الصَّابِرِينَ
இன்னும்
அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள்
கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள்
பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக
இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன்- 8: 46)
நம்
நிலையை படம் பிடித்து காட்டுவதாக இந்த குர்ஆன் வசனம் அமைந்துள்ளது.
இந்த
இந்திய நாட்டில் சிறுபான்மையின மக்களாக வாழும் நமக்குள்ளேயே எத்தனை கொள்கைகள், கருத்து
வேறுபாடுகள்?
சகிக்க
முடியாத அளவு ஒருவருக்கொருவர் ஏசிக் கொள்வதும், சாபமிடுவதும், காஃபிர்
என்று முத்திரையிடுவதுமாக பலவகையிலும் நாம் பலம் குன்றி இருக்கிறோம் இதை எதிராளிகள்
இலாவகமாக பயன்படுத்தி இஸ்லாமிய எதிர்ப்பை வன்
சொற்களாலும்,
வன்முறையாலும்
அறுவடை செய்கிறார்கள்.
ஸலாஹுத்தீன்
அய்யூபி ரஹ் அவர்கள் "பைதுல் முகத்தஸை" கைப்பற்றிய போது அங்குள்ள கிறிஸ்தவப்
பாதிரியார்கள் கருத்து வேற்றுமையிலும், இயேசு கிறிஸ்து இறப்பு குறித்த விவாத்திலும்
மூழ்கி இருந்தார்கள் . ஒரு பிரிவினர் இயேசு
வானின் பால் உயர்த்தப்பட்டார் எனவே வானம் தான் சிறந்தது என்றும்
மற்றொரு
பிரிவினர் பூமி தான் சிறந்தது ஏனென்றால் அவர் உயித்தெழுந்த பின்னர் பூமியில் தான் அடக்கம் செய்யப்பட்டார் என்றும் வாதத்தில் மூழ்கியிருந்த
போது அவர்களால் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போனது பைத்துல் முகத்தஸ் நம் வசமானது
. இதே பிழையை நாம் செய்தோம் இன்று பைத்துல் முகத்தஸ் எதிரிகளின் வசமானது.
(خطابات خالد سيف الله رحماني )
நாம்
கருத்து வேறுபாடு கொண்டு சண்டையிட்டுக் கொள்வது தான் நம் மீது பிறர் துணிவு கொள்வதற்குக்
காரணம்.
நம்முடைய
சில கருத்து வேறுபாடுகளுக்கு உலகஆசை, மரண பயம் சில வேளைகளில் காரணமாகிப்
போகிறது.
இஸ்லாமியர்கள் நிம்மதியாக வாழ நோக்கத்தில் வெற்றி பெற வழிமுறைகள்.
1.பொறுமை
காப்பது.
மார்க்கத்திற்காக
நாம் ஒன்று பட்டால் நாம் தான் வெற்றியாளர்கள். மக்காவில் சிறுபான்மையினர்களாக முஸ்லிம்கள்
இருந்த போது எதிரிகளின் தாக்குதல்களை பொறுத்துக் கொள்ளுமாறு அல்லாஹ் உபதேசித்தான்.
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ
إِلَّا بِاللَّهِ ۚ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقٍ مِمَّا يَمْكُرُونَ
(நபியே!)
இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே
இருக்க முடியாது அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும்
சூழ்ச்சிகளை பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்.
(அல்குர்ஆன்
-16:127)
2. ஒன்றுபட்டு
இறைவனின் உதவியோடு போராடுவது.
மதீனாவிற்கு
ஹிஜ்ரத் செய்த பின்னால் எதிரிகளின் தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
உஹதில் ஏற்பட்ட தற்காலிக தோல்வியை கண்டு துவண்டு
விடாமல் போரிடும் படி அல்லாஹ் உற்சாகப் படுத்திய
போது நீங்கள் உண்மை முஃமின்களாக இருக்கும் வரை நீங்கள் தான் வெற்றியாளர்கள் என்ற சுபச்
செய்தியையும் கூறினான்.
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا
وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
எனவே
நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள்
முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
(அல்குர்ஆன்
- 3:139)
நாம்
ஒருபுறம் சிறுபான்மையினராக பெரும் பான்மை சமூகத்தின் தாக்குதலை சகித்துக் கொண்டு இஸ்லாத்தில்
உறுதியோடு இருந்தாலும், நமக்கான தனித்துவத்தை பெரும்பான்மையை ஏற்படுத்த
பாடுபட வேண்டும். நமக்கான அதிகார பலத்தை ஏற்படுத்தி நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மக்காவை
வெற்றி கொண்டது போல நம் நாட்டில் நாம் இஸ்லாமிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இது
தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வரலாற்றில் இருந்து உலகெங்கிலும் சிறுபான்மை சமூகமாக வாழும் மக்கள் பெறும் படிப்பினை.
ஆனால் இதற்கான எந்த ஆயத்தப் பணிகளையும் செய்யாமல் மேலும் மேலும் நாம் இந்த நாட்டில்
பலஹீனப் பட்டு நம் சொந்த அடையாளங்களை இழந்து வருகிறோம். எதுவரை மார்க்கத்திற்காக கருத்து
வேற்றுமைகளை மறந்து நாம் ஒன்று பட மாட்டோமோ அதுவரை நம் மீதான தாக்குதல்களும் ஓயாது
நாம் நோக்கத்தை அடைந்து வெற்றி பெறுவதும் சாத்தியப் படாது.
இறைவனின்
தூய மார்க்கத்திற்காக நம்முடைய சமூக நீதி, வாழ்வாதாரப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து
போராட்டங்களையும் ஒருமுகப்படுத்தி ஒரே நோக்கமாக போராடினால் நமக்கான வெற்றி சமீபத்தில்
இருக்கிறது. இந்த மார்க்கத்தை வலுப்படுத்தாமல்
நாம் எந்த விதமான போராட்டத்தை முன்னெடுத்து சென்றாலும் அதில் தோல்வியும் காயமுமே நமக்கு
மிஞ்சும்.
நாம்
பார்க்கக்கூடிய உலகெங்கிலும் நடக்கும் போராட்டங்கள் வெற்றி அடையாததன் பின்னணி இது தான்
தனித்தனி குழுக்களாக (24-அமைப்புகளாக)
நாம் பிரிவுகளாக போராடி எந்தக் காலத்திலும் நோக்கத்தை அடைய முடியாது.
உண்மை
முஃமின்களாக கருத்து வேறுபாடுகளை களைந்து இறைவனின் மார்க்கத்திற்காக உலக ஆதாயங்களை
நாடாமல் யாருடைய தலைமைக்கும் கட்டுப்பட்டு ஸஹாபாக்களைப் போல மன உறுதியோடு நாம் போராடும்
நாள் தான் நம் எதிரிகள் நம்மைப் பார்த்து பயப்படும் நாளாக நமது சிரமங்களில் இருந்து
நாம் விடுபடும் நாளாக உலகெங்கிலும் நாம் தலைநிமிர்ந்து மார்க்கத்தை எடுத்துச் சொல்ல
ஏதுவாக அமையும் .
وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ
قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ
நீங்கள்
புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக்
கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.
(அல்குர்ஆன் 47:38)
மேலும்
இறைவனின் கட்டளைப்படி நேரான வழியில் நடக்கும் ஒரு சமூகம் கியாமத் வரை நிலைத்திருக்கும்
என்றும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
من حديث الْمُغِيرَةِ، قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "لَنْ يَزَالَ
قَوْمٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى النَّاسِ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ
وَهُمْ ظَاهِرُونَ". البخاري (3640)، ومسلم (1921).
என்
சமூகத்தில் ஒரு கூட்டம் பிற மக்களை (மார்க்கத்தின் விஷயத்தில்) மிகைத்தவர்களாக அல்லாஹ்வின்
கட்டளை (கியாமத் ) வரும் வரை நீடித்திருப்பார்கள். (நூல் :புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் இத்தகைய
கூட்டத்தில் அவன் கட்டளைப்படி நடந்து தன் மார்க்கத்தை நிலைநிறுத்திட பாடுபடும் நல்லடியார்கள் முஜாஹிதீன்களில் நம்மை தேர்ந்தெடுத்துக் கொள்வானாக!
நம்
சமூக மக்களுக்காக எல்லா வகையிலும் கருத்து வேறுபாடுகள் மறந்து போராடி அவர்களுக்கு நீதியை
பெற்றுத் தர நம்மை காரணியாக ஆக்குவானாக.
என்றும்
மிகைத்திடும் உண்மை முஃமின்களாக நம்மையும் நமது மனைவி மக்களையும் அல்லாஹ் பொருந்திக்
கொள்வானாக ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.