بسم الله الرحمن الرحيم
தண்ணீர்
ஒரு மகத்தான அருட்கொடை!
*******************************************
முன்னுரை:
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம்
மற்றும் கால்நடை வளர்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பல விவசாயிகள் இதனால் மரணமடைந்துள்ளார்கள்
நம் மாநிலம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீரின் மகத்துவத்தையும்.
அதனை பயன்படுத்தும் முறைகளையும் நாம் அவசியம் தெறிந்து கொள்வதோடு தற்பொழுது இந்த வறட்சி
நீங்கி செழிப்பான நிலை உருவாக நாம் செய்யவேண்டியது என்ன என்பதையும் இவ்வாரத்தில் கான்போம்.
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய மகத்தான அருட் கொடைகளில்
தண்ணீருக்கு எப்போதுமோ முன்னுரிமை உண்டு…………
1. தண்ணீர் அல்லாஹ்வின் ஓர் உன்னத அருட்கொடை.
عن أبي هريرة
رضي الله عنه يقول: قال رسول الله صلى
الله عليه وسلم: "أول ما يقال للعبد يوم القيامة: ألم أصحح جسمك وأرويك من
الماء البارد"؟ (صحيح إبن حبان : 7364)
மறுமை நாளில் ஒரு அடியானிடம் கேட்கப்படும் முதல்
(கேள்வி) உன் உடலுக்கு ஆரோக்கியத்தை நான் வழங்க வில்லையா? குளிர்ந்த தண்ணீரின் மூலம் நான் உன் தாகம் தீர்க்க
வில்லையா ? என்பதேயாகும்.
(ஸஹீஹ் இப்னு ஹிப்பான்: 7364)
2. தண்ணீரின் முக்கியத்துவம்.
**************************
1. தண்ணீர் உயிர்களை படைப்பதற்கு முக்கிய ஆதாரமாகும்.
وَجَعَلْنَا
مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ
اَفَلَا يُؤْمنونِ
உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து
படைத்தோம் (21-30)
قال الله عزّ
وجلّ: وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي َلَى
بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى
أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(النور: 45)
ஊர்ந்து செல்லக்கூடிய ஒவ்வொன்றையும் தண்ணீரிலிருந்தே
அல்லாஹ் படைத்தான். அவற்றில் சில தன் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன.அவைகளில் சில இரு
கால்களால் நடக்கின்றன. அவைகளில் சில நான்கு கால்களால் நடக்கின்றன. அல்லாஹ் தான் நாடியதை
படைக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீது சக்தி பெற்றவன்.
عن أبي هريرة
قال قلت : يا رسول الله انى إذا رأيتك طابت نفسي وقرت عيني فأنبئني عن كل شيء فقال
كل شيء خلق من ماء .......مسند أحمد :
7919
அபூஹூரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின்
தூதரே! நிச்சயமாக நான் உங்களை காணுகையில் என் உள்ளம் மகிழ்கின்றது. என் கண் குளிச்சியடைகின்றது.
ஆதலால் தாங்கள் எனக்கு ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு பொருளும் தண்ணீரிலிருந்தே படைக்கப்பட்டுள்ளது என்று பதில்
கூறினார்கள். (அஹ்மத்: 7919)
2. தண்ணீர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மட்டுமே
கிடைக்கப் பெறும் ஜீவாதாரமாகும்.
*****************************************
أَفَرَأَيْتُمُ
الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ (68)
أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ
(69) لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا
فَلَوْلَا تَشْكُرُونَ (الواقعة: 68 – 70).
நீங்கள் குடிக்கின்ற தண்ணீரை கவனித்தீர்களா? அதனை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நாடினால் அதனை (குடிக்கமுடியாத) உப்பு நீராக
ஆக்கி இருப்போம். எனவே நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
وَاَرْسَلْنَا
الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَيْنٰكُمُوْهُ
وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِيْنَ
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே
அனுப்புகிறோம்; பின்னர்
வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை
உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
(அல்குர்ஆன்
: 15:22)
3. உயிரற்ற பூமியை தண்ணீரைக் கொண்டே
அல்லாஹ் செழிப்படையச் செய்கின்றான்.
************************
وَهُوَ
الَّذِىْۤ اَرْسَلَ الرِّيٰحَ بُشْرًا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ وَاَنْزَلْنَا
مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۙ
இன்னும்,
அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக
அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும்
இறக்கி வைக்கிறோம்.
(அல்குர்ஆன்
: 25:48)
لِّـنُحْیِۦَ
بِهٖ بَلْدَةً مَّيْتًا وَّنُسْقِيَهٗ مِمَّا خَلَقْنَاۤ اَنْعَامًا وَّاَنَاسِىَّ
كَثِيْرًا
இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்.
(அல்குர்ஆன்
: 25:49)
4. தண்ணீர் தந்தோருக்கு நபிகளார் காட்டிய நன்றியுணர்வு
(கைமாறு)
******************************
عَنْ
عِمْرَانَ، قَالَ: كُنَّا فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، وَإِنَّا أَسْرَيْنَا حَتَّى كُنَّا فِي آخِرِ اللَّيْلِ، وَقَعْنَا
وَقْعَةً، وَلاَ وَقْعَةَ أَحْلَى عِنْدَ المُسَافِرِ مِنْهَا، فَمَا أَيْقَظَنَا
إِلَّا حَرُّ الشَّمْسِ، وَكَانَ أَوَّلَ مَنِ اسْتَيْقَظَ فُلاَنٌ، ثُمَّ
فُلاَنٌ، ثُمَّ فُلاَنٌ - يُسَمِّيهِمْ أَبُو رَجَاءٍ فَنَسِيَ عَوْفٌ ثُمَّ
عُمَرُ بْنُ الخَطَّابِ الرَّابِعُ - وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ إِذَا نَامَ لَمْ يُوقَظْ حَتَّى يَكُونَ هُوَ يَسْتَيْقِظُ، لِأَنَّا
لاَ نَدْرِي مَا يَحْدُثُ لَهُ فِي نَوْمِهِ، فَلَمَّا اسْتَيْقَظَ عُمَرُ وَرَأَى
مَا أَصَابَ النَّاسَ وَكَانَ رَجُلًا جَلِيدًا، فَكَبَّرَ وَرَفَعَ صَوْتَهُ
بِالتَّكْبِيرِ، فَمَا زَالَ يُكَبِّرُ وَيَرْفَعُ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى
اسْتَيْقَظَ بِصَوْتِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا
اسْتَيْقَظَ شَكَوْا إِلَيْهِ الَّذِي أَصَابَهُمْ، قَالَ: «لاَ ضَيْرَ - أَوْ لاَ
يَضِيرُ - ارْتَحِلُوا»، فَارْتَحَلَ، فَسَارَ غَيْرَ بَعِيدٍ، ثُمَّ نَزَلَ
فَدَعَا بِالوَضُوءِ، فَتَوَضَّأَ، وَنُودِيَ بِالصَّلاَةِ، فَصَلَّى بِالنَّاسِ،
فَلَمَّا انْفَتَلَ مِنْ صَلاَتِهِ إِذَا هُوَ بِرَجُلٍ مُعْتَزِلٍ لَمْ يُصَلِّ
مَعَ القَوْمِ، قَالَ: «مَا مَنَعَكَ يَا فُلاَنُ أَنْ تُصَلِّيَ مَعَ القَوْمِ؟»
قَالَ: أَصَابَتْنِي جَنَابَةٌ وَلاَ مَاءَ، قَالَ: «عَلَيْكَ بِالصَّعِيدِ،
فَإِنَّهُ يَكْفِيكَ»، ثُمَّ سَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
فَاشْتَكَى إِلَيْهِ النَّاسُ مِنَ العَطَشِ، فَنَزَلَ فَدَعَا فُلاَنًا - كَانَ
يُسَمِّيهِ أَبُو رَجَاءٍ نَسِيَهُ عَوْفٌ - وَدَعَا عَلِيًّا فَقَالَ: «اذْهَبَا،
فَابْتَغِيَا المَاءَ» فَانْطَلَقَا، فَتَلَقَّيَا امْرَأَةً بَيْنَ مَزَادَتَيْنِ
- أَوْ سَطِيحَتَيْنِ - مِنْ مَاءٍ عَلَى بَعِيرٍ لَهَا، فَقَالاَ لَهَا: أَيْنَ
المَاءُ؟ قَالَتْ: عَهْدِي بِالْمَاءِ أَمْسِ هَذِهِ السَّاعَةَ وَنَفَرُنَا خُلُوفٌ،
قَالاَ لَهَا: انْطَلِقِي، إِذًا قَالَتْ: إِلَى أَيْنَ؟ قَالاَ: إِلَى رَسُولِ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: الَّذِي يُقَالُ لَهُ
الصَّابِئُ، قَالاَ: هُوَ الَّذِي تَعْنِينَ، فَانْطَلِقِي، فَجَاءَا بِهَا إِلَى
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدَّثَاهُ الحَدِيثَ، قَالَ:
فَاسْتَنْزَلُوهَا عَنْ بَعِيرِهَا، وَدَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ بِإِنَاءٍ، فَفَرَّغَ فِيهِ مِنْ أَفْوَاهِ المَزَادَتَيْنِ - أَوْ
سَطِيحَتَيْنِ - وَأَوْكَأَ أَفْوَاهَهُمَا وَأَطْلَقَ العَزَالِيَ، وَنُودِيَ فِي
النَّاسِ اسْقُوا وَاسْتَقُوا، فَسَقَى مَنْ شَاءَ وَاسْتَقَى مَنْ شَاءَ وَكَانَ
آخِرُ ذَاكَ أَنْ أَعْطَى الَّذِي أَصَابَتْهُ الجَنَابَةُ إِنَاءً مِنْ مَاءٍ،
قَالَ: «اذْهَبْ فَأَفْرِغْهُ عَلَيْكَ»، وَهِيَ قَائِمَةٌ تَنْظُرُ إِلَى مَا
يُفْعَلُ بِمَائِهَا، وَايْمُ اللَّهِ لَقَدْ أُقْلِعَ عَنْهَا، وَإِنَّهُ
لَيُخَيَّلُ إِلَيْنَا أَنَّهَا أَشَدُّ مِلْأَةً مِنْهَا حِينَ ابْتَدَأَ فِيهَا،
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْمَعُوا لَهَا»
فَجَمَعُوا لَهَا مِنْ بَيْنِ عَجْوَةٍ وَدَقِيقَةٍ وَسَوِيقَةٍ حَتَّى جَمَعُوا
لَهَا طَعَامًا، فَجَعَلُوهَا فِي ثَوْبٍ وَحَمَلُوهَا عَلَى بَعِيرِهَا
وَوَضَعُوا الثَّوْبَ بَيْنَ يَدَيْهَا، قَالَ لَهَا: «تَعْلَمِينَ، مَا رَزِئْنَا
مِنْ مَائِكِ شَيْئًا، وَلَكِنَّ اللَّهَ هُوَ الَّذِي أَسْقَانَا»، فَأَتَتْ
أَهْلَهَا وَقَدِ احْتَبَسَتْ عَنْهُمْ، قَالُوا: مَا حَبَسَكِ يَا فُلاَنَةُ،
قَالَتْ: العَجَبُ لَقِيَنِي رَجُلاَنِ، فَذَهَبَا بِي إِلَى هَذَا الَّذِي
يُقَالُ لَهُ الصَّابِئُ فَفَعَلَ كَذَا وَكَذَا، فَوَاللَّهِ إِنَّهُ لَأَسْحَرُ
النَّاسِ مِنْ بَيْنِ هَذِهِ وَهَذِهِ، وَقَالَتْ: بِإِصْبَعَيْهَا الوُسْطَى
وَالسَّبَّابَةِ، فَرَفَعَتْهُمَا إِلَى السَّمَاءِ - تَعْنِي السَّمَاءَ
وَالأَرْضَ - أَوْ إِنَّهُ لَرَسُولُ اللَّهِ حَقًّا، فَكَانَ المُسْلِمُونَ
بَعْدَ ذَلِكَ يُغِيرُونَ عَلَى مَنْ حَوْلَهَا مِنَ المُشْرِكِينَ، وَلاَ
يُصِيبُونَ الصِّرْمَ الَّذِي هِيَ مِنْهُ، فَقَالَتْ: يَوْمًا لِقَوْمِهَا مَا
أُرَى أَنَّ هَؤُلاَءِ القَوْمَ يَدْعُونَكُمْ عَمْدًا، فَهَلْ لَكُمْ فِي
الإِسْلاَمِ؟ فَأَطَاعُوهَا، فَدَخَلُوا فِي الإِسْلاَمِ (خ:344)
344. நாங்கள்
நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணம் சென்றோம். இரவின் கடைசி நேரம் வந்தபோது எங்களுக்கு தூக்கம்
மேலிட்டது. பயணிக்கு அதைவிட இன்பமான தூக்கம் எதுவும் இருக்க முடியாது. அந்தத் தூக்கத்திலிருந்து
எங்களை (அதிகாலை) சூரிய வெப்பம்தான் எழுப்பியது. முதல் முதலாகத் தூக்கத்திலிருந்து
எழுந்தவர் இன்னவர் அடுத்த இன்னவர் அவரை அடுத்து இன்னவர் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில்
ஒருவரான அபூ ரஜா எழுந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறினார். அவருக்கு அடுத்த
அறிவிப்பாளரான அவ்ஃப் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டார். நான்காவதாகத் தூக்கத்திலிருந்து
எழுந்தவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) ஆவார்கள்.'
நபி(ஸல்) அவர்கள் தூங்கினால் அவர்கள் தாமாகவே
தூக்கத்திலிருந்து விழிக்கும் வரை வேறு யாராலும் எழுப்பப்பட மாட்டார்கள். காரணம் அவர்களின்
தூக்கத்தில் என்ன செய்தி வருமென்பது எங்களுக்குத் தெரியாது. உமர்(ரலி) தூக்கத்தைவிட்டு
எழுந்து மக்களுக்கு ஏற்பட்ட (ஸுப்ஹ் தொழுகை தவறிப்போன) இந்நிலையைப் பார்த்ததும் அல்லாஹு
அக்பர்!' என்று
சப்தமிட்டார். அவர் திடகாத்திரமான மனிதராக இருந்தார். அவர் சப்தமிட்டுத் தக்பீர் முழங்கிக்
கொண்டே இருந்தார். அவர்களின் சப்தத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்களும் தூக்கத்திலிருந்து
எழுந்தார்கள். உடனே மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள்.
அப்போது 'அதனால்
எந்தப் பாதிப்புமில்லை. நீங்கள் இங்கிருந்து புறப்படுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டும்
புறப்பட்டார்கள். சிறிது தூரம் சென்றதும் அங்கே தங்கி உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு
வரச் செய்து அதில் உளூச் செய்தார்கள். தொழுகைக்காக அழைப்புக் கொடுக்கப்பட்டது. மக்களுக்குத்
தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது
அங்கு ஒருவர் கூட்டத்துடன் தொழாமல் தனியாக இருந்தார். 'ஜமாஅத்துடன் நீர் தொழாமலிருக்கக் காரணமென்ன?' என்று அவரிடம் கேட்டபோது 'எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர்
இல்லை' என்று
அவர் கூறினார். 'மண்ணில்
தயம்மும் செய். அது உனக்குப் போதுமானது' என்று
நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.
அப்போது மக்கள் அவர்களிடம் சென்று 'தாகமாக
இருக்கிறது; தண்ணீர்
இல்லை' என முறையிட்டார்கள்.
உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி ஒரு மனிதரையும் அவர் பெயரை
அபூ ரஜா குறிப்பிட்டார்கள். அவ்ஃப் என்பவர் மறந்துவிட்டார். அலீ(ரலி) அவர்களையும் அழைத்து' நீங்கள் இருவரும் சென்று தண்ணீரைத் தேடுங்கள்' என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் தண்ணீரைத்
தேடிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள். அவள் ஓர் ஒட்டகத்தின்
மீது இரண்டு தோல் பைகளில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதற்கிடையில் அமர்ந்திருந்தாள்.
'தண்ணீர்
எங்கே கிடைக்கிறது?' என்று
அவ்விருவரும் அப்பெண்ணிடம் கேட்டனர். 'தண்ணீர்
ஒரு நாள் பயண தூரத்தில் இருக்கிறது. எங்களுடைய ஆண்கள் தண்ணீருக்காகப் பின்தங்கிவிட்டனர்' என அப்பெண் கூறினாள். 'அப்படியானால் நீ புறப்படு' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கூறினார்கள்.
'எங்கே?' என்று அவள் கேட்டாள். 'அல்லாஹ்வின் தூதரிடம்' என்று கூறினார்கள். 'மதம் மாறியவர் என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?' என்று அப்பெண் கேட்டாள். 'நீ கூறுகிற அவரேதான்' என்று கூறிவிட்டு அவளை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து
வந்து நடந்ததைக் கூறினார்கள்.
'அந்தப்
பெண்ணை அவளுடைய ஒட்டகத்திலிருந்து இறங்கச் சொல்லுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு ஒரு பாத்திரத்தைக்
கொண்டு வரச் சொல்லி அந்த இரண்டு தோல் பைகளிலிருந்த தண்ணீரைப் பாத்திரங்களில் நிரப்பினார்கள்.
பின்னர் அந்த இரண்டு தோல் பைகளின் அடிப்புற வாயைக் கட்டிவிட்டுத் தண்ணீர் செலுத்தும்
மேற்புற வாயைக் கட்டாமல்விட்டுவிட்டார்கள். 'எல்லோரும்
வந்து தண்ணீர் குடியுங்கள். சேகரித்து வையுங்கள்'
என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. விரும்பியவர்கள் குடித்தார்கள்; விரும்பியவர்கள் பாத்திரங்களில் எடுத்து வைத்தார்கள்.
குளிப்புக் கடமையான அவர்தாம் கடைசியாக வந்தவர். அவருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுத்து
'இதைக் கொண்டு போய் உம் மீது
ஊற்றிக் கொள்ளும்' என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் எந்தெந்த வகையிலெல்லாம்
பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்துக் கொண்டே நின்றாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக
அவளுடைய உள்ளத்தில் நபி(ஸல்)அவர்கள் மீது இருந்த வெறுப்பு நீங்கிவிட்டது. அந்த இரண்டு
தோல் பைகளிலிருந்து முதலில் தண்ணீரை எடுக்கும்போது இருந்ததை விட அதிகமான தண்ணீர் பிறகு
அத்தோல் பையில் இருப்பது போன்று எங்களுக்குத் தெரிந்தது. (தண்ணீர் குறையவில்லை.) 'அந்தப் பெண்ணுக்கு ஏதாவது சேகரித்துக் கொடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவளுக்காகப்
பேரீச்சம் பழம் மாவு போன்றவற்றைச் சேகரித்தார்கள். அவளுக்குப் போதுமான உணவு சேர்ந்தது.
அதைத் துணியில் வைத்துக் (கட்டி) அவளை ஒட்டகத்தின் மீது அமரச் செய்து உணவுப் பொட்டலமுள்ள
துணியை அவளுக்கு முன்னால் வைத்தார்கள். பின்னர் அந்தப் பெண்ணிடம் 'உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை; அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான்' என்பதைத் தெரிந்து கொள் என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் குறிப்பிட்ட
நேரத்தை விடத் தாமதமாக வந்தபோது பெண்ணே! நீ பிந்தி வரக்காரணமென்ன?' என்று கேட்டதற்கு 'ஓர் ஆச்சரியமான விஷயம் நிகழ்ந்தது. இரண்டு மனிதர்கள்
என்னைச் சந்தித்து மதம் மாறியவர் என்று கூறப்படக் கூடிய அந்த மனிதரிடம் என்னை அழைத்துச்
சென்றனர். அவர் இப்படியெல்லாம் செய்தார்' (என நடந்த
நிகழ்ச்சிகளைக் கூறினாள்.)
அவள் தன் கையின் நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும்
வானத்தின் பக்கம் உயர்த்தி 'அல்லாஹ்வின்
மீது ஆணையாக இந்த வானத்திற்கும் இந்த பூமிக்கும் இடையிலுள்ள சூனியக்காரர்களில் அவர்
மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் இறைத்தூதராக
இருக்க வேண்டும்' என்று
கூறினாள்.
பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்தவர்களை
எதிர்த்துப் போராடினார்கள். அப்போது அந்தப் பெண் எந்தக் குடும்பத்தைச் சார்ந்துள்ளாளோ
அந்தக் குடும்பத்தை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
ஒரு முறை அந்தப் பெண் தங்களின் கூட்டத்தாரிடம்'இந்த முஸ்லிம்கள் வேண்டுமென்றே (உங்களிடம் போரிடாமல்)
உங்களைவிட்டு விடுகிறார்கள் என்றே கருதுகிறேன். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள
விரும்புகிறீர்களா?' என்று
கேட்டபோது அவர்கள் எல்லோரும் அவளுடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்' என இம்ரான்(ரலி) அறிவித்தார்.
5. தண்ணீரை அல்லாஹ் எப்படி தேக்கி வைத்துள்ளான்?
*****************************
وَاَنْزَلْنَا
مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ وَاِنَّا عَلٰى
ذَهَابٍ بِهٖ لَقٰدِرُوْنَ
மேலும், வானத்திலிருந்து
நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால்
அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக
அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.
(அல்குர்ஆன்
: 23:18)
• பனிப்பாரைகளாக!
• நிலத்தடி நீராக!
• ஆறுகளாக!
• ஊற்றுகளாக ……….
اَلَمْ تَرَ
اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَلَـكَهٗ يَنَابِيْعَ فِى
الْاَرْضِ
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்;
(அல்குர்ஆன்
: 39:21)
قُلْ
اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّاْتِيْكُمْ بِمَآءٍ
مَّعِيْنٍ
(நபியே!)
நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன்
யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).
(அல்குர்ஆன்
: 67:30)
6. மனிதன் தண்ணீரை எப்படி தேக்கி வைத்துள்ளான்?
1. அணைகள்
2. ஏரிகள்
3. கண்மாய்கள்
4. குளங்கள்
5. குட்டைகள்….
لقد كان لسبإ
في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب
غفور (15) فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط
وأثل وشيء من سدر قليل (16) ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور (السبأ:
15-17)
34:15. நிச்சயமாக
ஸபா நாட்டினருக்கு அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்)
வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது
மணமுள்ள) வளமான நகரம்; இன்னும்
(அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று
அவர்களுக்குக் கூறப்பட்டது).
34:16. ஆனால்
அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே
அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம்
இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள
பழங்களுடைய மரங்களும் சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.
குறிப்பு: டி.எஸ் சஞ்சீவி குமார் எழுதிய ஓடும்
நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு என்ற புத்தகத்தை படித்துப் பார்த்தால் நம் முன்னோர்கள்; அணைகள் ஏரிகள் கண்மாய்கள் குளங்கள் குட்டைகளை
எப்படி அமைத்து நீரை தேக்கி வைத்தார்கள் என்பதை அறியலாம்.
7. தண்ணீரை எப்படி நாம் பயன்படுத்த வேண்டும்?
******************************
1. தேவைக்கேற்ப தண்ணீரை உபயோகிக்க வேண்டும். வீண்விரயம்
செய்யக் கூடாது.
قال الله
تعالي : وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ
الْمُسْرِفِينَ}(اعراف 31)
உண்ணுங்கள். பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள்.
நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்க மாட்டான்.
قال الله
تعالي : إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ
الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا} (الإسراء: 27)
நிச்சயமா மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானின் உடன்பிறப்புக்கள். ஷைத்தான்
தன் இறைவனுக்கு மாறு செய்தவனாவான்.
عَنْ أَبِي إِسْحَاقَ،
قَالَ: حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ، أَنَّهُ كَانَ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ
اللَّهِ هُوَ وَأَبُوهُ وَعِنْدَهُ قَوْمٌ فَسَأَلُوهُ عَنِ الغُسْلِ، فَقَالَ:
«يَكْفِيكَ صَاعٌ»، فَقَالَ رَجُلٌ: مَا يَكْفِينِي، فَقَالَ جَابِرٌ: «كَانَ يَكْفِي
مَنْ هُوَ أَوْفَى مِنْكَ شَعَرًا، وَخَيْرٌ مِنْكَ» ثُمَّ أَمَّنَا فِي ثَوْبٍ (
خ : 252)
252. 'ஜாபிர்
இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தபோது
அவர்களிடம் குளிப்பைப் பற்றி நாங்கள் கேட்டதற்கு 'ஒரு
ஸாவு' அளவு தண்ணீர் போதும்' என்று கூறினார். அப்போது ஒருவர் 'அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது' என்றதற்கு'உன்னை
விடச் சிறந்த உன்னை விட அதிகமான முடி வைத்திருந்த நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அளவு தண்ணீர்
போதுமானதாக இருந்தது' என்று
கூறினார். பின்னர் ஒரே ஆடையை அணிந்தவராக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்' என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.
2. எஞ்சிய தண்ணீரை தேவையுடையோருக்கு வழங்க வேண்டும்.
عَنْ أَبِي
هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: «لاَ يُمْنَعُ فَضْلُ المَاءِ لِيُمْنَعَ بِهِ الكَلَأُ» خ :
2353
'(தேவைக்கு
மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால் அதைச் சுற்றியுள்ள)
புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்ததாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒரு
தேசத்தை நிர்வாக வசதிக்காக பல மாநிலங்களாகவும் ஒரு மாநிலத்தை பல நகரங்களாகவும் நாமே
பிரித்து வைத்து விட்டு ஒரு மாநிலத்தில் பிறக்கும் தண்ணீரை அது இயல்பாக வழிந்தோடுகின்ற
பிற மாநிலங்களுக்கு செல்ல விடாமல் அணைகளின் மூலம் தண்ணீரை தடுத்து வைப்பதும் தர மறுப்பதும்
மாபெரும் குற்றம். இக்குற்றத்தை கன்னடன் செய்யாதிருந்தால் பல விவசாயிகள் இறந்திருக்க
மாட்டார்கள்.
3. தண்ணீர் தேவையை போக்க உதவ முன் வரவேண்டும்.
وَقَالَ
عُثْمَانُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَشْتَرِي
بِئْرَ رُومَةَ، فَيَكُونُ دَلْوُهُ فِيهَا كَدِلاَءِ المُسْلِمِينَ»
فَاشْتَرَاهَا عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ (صحيح البخاري
)
உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது: ரூமா கிணற்றை
வாங்குபவர் யார்? அதில்
அ(தை வாங்குப)வருடைய வாளி மற்ற முஸ்லிம்களின் வாளியைப் போல் (சம உரிமை பெற்றதாக) இருக்கும்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் அதை வாங்கி (முஸ்லிம் களின் நலனுக்காக
வக்ஃபு செய்து) விட்டேன்.
عَنْ أَبِي
عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ حُوصِرَ
أَشْرَفَ عَلَيْهِمْ، وَقَالَ: أَنْشُدُكُمُ اللَّهَ، وَلاَ أَنْشُدُ إِلَّا
أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَلَسْتُمْ تَعْلَمُونَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَفَرَ
رُومَةَ فَلَهُ الجَنَّةُ»؟ فَحَفَرْتُهَا، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ قَالَ:
«مَنْ جَهَّزَ جَيْشَ العُسْرَةِ فَلَهُ الجَنَّةُ»؟ فَجَهَّزْتُهُمْ، قَالَ:
فَصَدَّقُوهُ بِمَا قَالَ وَقَالَ عُمَرُ فِي وَقْفِهِ: «لاَ جُنَاحَ عَلَى مَنْ
وَلِيَهُ أَنْ يَأْكُلَ وَقَدْ يَلِيهِ الوَاقِفُ وَغَيْرُهُ فَهُوَ وَاسِعٌ
لِكُلٍّ» خ : 2778
அபூ அப்திர் ரஹ்மான்(ரலி) அறிவித்தார். (கலீஃபா)
உஸ்மான்(ரலி) (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டபோது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக்
கூரை மீதிருந்து) 'அல்லாஹ்வின்
பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன்.
'ரூமா' என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி
(பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் அதை
(விலைக்கு வாங்கித்) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபி(ஸல்) அவர்கள் 'பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான)
படையை (பொருளுதவியால்) தயார்படுத்துகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று கூற நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத்
தெரியாதா?' என்று
கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றனர்.
உமர்(ரலி) வக்ஃபு செய்தபோது 'இதை நிர்வாகம் செய்பவர் இதிலிருந்து (எடுத்து)
உண்பதில் தவறில்லை' என்று
குறிப்பிட்டார்கள். வக்ஃபு செய்தவரே கூட அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு
நிர்வாகியாக இருக்கலாம். ஆக(அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு.
4. தண்ணீரின் தூய்மையை பாதுகாக்க வேண்டும்.
عن معاذ رضي
الله عنه قال سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: اتقوا الملاعن الثلاث:
البراز في الموارد، والظل، وقارعة الطريق" (سنن إبن ماجة : 328).
சாபத்திற்குரிய
மூன்று இடங்களை அஞ்சிக் கொள்ளுங்கள். (அவைகள்) நீர்வழித்தடங்கள். நிழல்.மத்திய பாதைகளாகும்.
(இவைகளில்
அசுத்தம் செய்வதை தடைவிதித்தார்கள்)
5. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
قال الله
تعالي : وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ
كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ (إبراهيم: 7)
14:7. “(இதற்காக
எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால்
நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும்
(நினைவு கூறுங்கள்).
6. எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்?
1. தனி மனிதன் தண்ணீரை வரம்பு மீறி பயன்படுத்துகின்றான்.
2. தண்ணீர் சேகரிப்பதற்காக நம் முன்னோர்களால் அமைக்கப்பட்ட
நதிகள் முதலிய நீராதாரங்களிலுள்ள மணல்களை அள்ளி அவை களை சுடுகாடுகளாக மாற்றி விட்டார்கள்.
3. தண்ணீரை இயற்கையாக சுத்திகரிக்கின்ற மணல்கள் லாரி
லாரியாக அள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
4. உயிர் வாழ்வதற்கு ஜீவதாரமாக உள்ள விவசாயத்தை விட
மனித உயிர்களுக்கு வேட்டு வைக்கின்ற பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு தண்ணீரை அதிகார
வர்க்கத்தினர் தாரை வார்க்கின்றார்கள். பொதுமக்கள் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
5. நிலத்தடி நீரை மிதமிஞ்சிய அளவில் அள்ளி நிலத்தடி
நீரை அழித்துக் கொண்டிருக்கின்றான்.
6. மிதமிஞ்சிய அளவில் ஆலைகளிலிருந்து வெப்பத்தை வெளியேற்றி
பனிப்பாறைகளை உறுகச் செய்து அதில் சேகரிக்கப்பட்டுள்ள சுத்தமான குடி நீரை கடலில் கலக்கும்படி
செய்கின்றான். இதனால் புவி வெப்பமடைவதுடன் குடி நீரும் வீணாய் கடலில் கலக்கின்றது.
பெரு வெள்ளம் (கடந்து ஆண்டு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஏற்பட்டது போல)
அல்லது பெரும் வரட்சி (தற்போது தஞ்சை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நிகழ்ந்தது
போல்) ஏற்படுகின்றன.
8. தண்ணீர் இல்லையென்றால்?
***********************************
தண்ணீர்
இல்லையென்றால் மனிதன் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் வழி இன்றி தவிக்கும் நிலையும்
அதன் பின் மரணத்தை தழுவும் நிலையும்தான் ஏற்படும். எனவேதான் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்
மற்றும் விஞ்ஞானிகள் அடுத்த உலகப் போர் தண்ணீருக்காகவே நிகழும் என்று கூறுகின்றனர்.
இதற்கு முன்னுதாரணமே தமிழக விவசாயிகளில் மரணங்கள்.
மழைத்தொழுகை தொழுவோம்
*************************************
இந்த வறட்சிநிலை மார இறைவனிடம் மழைத் தொழகை தொழுது
துஆச் செய்ய வேண்டும்.
மேலும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாசபையின் செயற்குழு
கூட்டத்திலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் மழைத்தொழுகை நடத்தும்படி தீர்மாணம் நிரைவேற்றப்பட்டுள்ளது.
1013- حَدَّثَنَا
مُحَمَّدٌ قَالَ: أَخْبَرَنَا أَبُو ضَمْرَةَ أَنَسُ بْنُ عِيَاضٍ قَالَ:
حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ أَنَّهُ سَمِعَ أَنَسَ
بْنَ مَالِكٍ يَذْكُرُ أَنَّ رَجُلاً دَخَلَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ باب كَانَ
وُجَاهَ الْمِنْبَرِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي
وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُغِيثُنَا. قَالَ فَرَفَعَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ فَقَالَ: ((اللَّهُمَّ
اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا)). قَالَ أَنَسٌ وَلاَ
وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ وَلاَ قَزَعَةً وَلاَ شَيْئًا،
وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلاَ دَارٍ، قَالَ فَطَلَعَتْ مِنْ
وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ
انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ. قَالَ وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا،
ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ الْمُقْبِلَةِ،
وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ،
فَاسْتَقْبَلَهُ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الأَمْوَالُ
وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا، قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ ثُمَّ قَالَ: ((اللَّهُمَّ
حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ
وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ)). قَالَ فَانْقَطَعَتْ
وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ.
قَالَ شَرِيكٌ
فَسَأَلْتُ أَنَسًا أَهُوَ الرَّجُلُ الأَوَّلُ قَالَ لاَ أَدْرِي.
1013. அனஸ்
இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில்
நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர்த் திசையிலுள்ள
வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி “இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழித்துவிட்டன.
பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம்
பிரார்த்தியுங்கள்“ என்று
கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்ததி, “இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா!
எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!“ என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது
ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரித்து கிடக்கும் மேகங்களையோ (மழைக்குரிய) எந்த
அறிகுறிகளையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) “ஸல்ஃ“ என்னம்
மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியாக இருந்தது) அப்போது
அம்மலைக்குப் பின் புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு
வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள்
பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒருவர்
அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி “இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன.
பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்“ என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி, “இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப்
பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச்
செய்வாயாக!)” என்று
பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம். இரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு
அவர்கள் தெரியாது“ என்றனர்
என ஷரீக் கூறுகிறார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 15. மழை வேண்டுதல
மழைத்தொழுகைகு வெளியேரிச்செல்வதும் சுன்னது.
1005 - ﺣﺪﺛﻨﺎ
ﺃﺑﻮ ﻧﻌﻴﻢ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻋﻦ ﻋﺒﺎﺩ ﺑﻦ ﺗﻤﻴﻢ، ﻋﻦ ﻋﻤﻪ، ﻗﺎﻝ:
«ﺧﺮﺝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ §ﻳﺴﺘﺴﻘﻲ ﻭﺣﻮﻝ ﺭﺩاءﻩ» __________ W960
(1/341) -[ ﺷ ﺃﺧﺮﺟﻪ ﻣﺴﻠﻢ ﻓﻲ ﺃﻭﻝ ﻛﺘﺎﺏ ﺻﻼﺓ اﻻﺳﺘﺴﻘﺎء ﺭﻗﻢ
894 (ﺧﺮﺝ) ﺇﻟﻰ اﻟﻤﺼﻠﻰ. (ﻳﺴﺘﺴﻘﻲ) ﻳﻄﻠﺐ اﻟﺴﻘﻴﺎ. (ﺣﻮﻝ ﺭﺩاءﻩ) ﺟﻌﻞ ﻳﻤﻴﻨﻪ ﻳﺴﺎﺭﻩ ﺃﻭ ﺃﻋﻼﻩ
ﺃﺳﻔﻠﻪ] [965، 966، 977 - 982، 5983]
9. முடிவுரை:
தண்ணீரின் மான்பினை அறிந்து அது தொடர்ச்சியாக
தங்கு தடையின்றி நமக்கு கிடைத்திட நம் முன்னோர்கள் அமைத்த நீராதங்களை பேணிப் பாதுகாத்து
விவசாயத்தை செழிப்படையச் செய்து நம் ஜீவாதாரத்தைப் பாதுகாப்போம். நம் சந்ததிகளும் வாழ
தகுதியான நிலையில் தேசத்தை விட்டு வைப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.