வியாழன், 26 அக்டோபர், 2017

அற்புதமான ஐந்து உபதேசங்கள்

بسم الله الرحمن الرحيم
அற்புதமான ஐந்து உபதேசங்கள்
******************************************
قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ‌ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَيْـٴًـــــا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ... (القران 6:152)
قال رسول الله صلي الله عليه وسلم (اتّق المحارم تكُن أعبدَ النّاس، وارضَ بما قسَم الله لك تكُن أغنى النّاس، وأَحسن إلى جارك تكُن مؤمنًا، وأحِبّ للنّاس ما تحبّ لنفسك تكن مُسلمًا، ولا تُكثر الضّحك فإنّ كثرةَ الضّحك تُمِيتُ القلب) رواه أحمد، والتّرمذي

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபி( ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களுக்கு பல்வேறு கட்டங்களில் பல வசிய்யத்துக்களை செய்திருக்கின்றார்கள்.
ஹஜ்ரத் முஆத் ரலி அவர்களை எமன் தேசத்திற்கு அனுப்பும்போது பத்து உபதேசங்கள் செய்தார்கள் இதையெல்லாம் நீங்கள் கடைபிடியுங்கள் என்றார்கள். இப்படி ஒவ்வொரு தோழர்களுக்கும் அந்தந்த சந்தர்பத்திற்கு தோதுவாக பல அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

ஒரு முறை நபி( ஸல்) அவர்கள் செய்த அறிவுரை
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهنّ أو يعلمهنّ من يعمل بهنّ؟)، قال أبو هريرة: فقلت أنا يا رسول الله، فأخذ بيدي فعدّ خمسًا، قال: (اتّق المحارم تكُن أعبدَ النّاس، وارضَ بما قسَم الله لك تكُن أغنى النّاس، وأَحسن إلى جارك تكُن مؤمنًا، وأحِبّ للنّاس ما تحبّ لنفسك تكن مُسلمًا، ولا تُكثر الضّحك فإنّ كثرةَ الضّحك تُمِيتُ القلب) رواه أحمد، والتّرمذي، وحسّنه الألباني.

ஒரு முறை நபி( ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களை நோக்கி இவ்வாறு கூறினார்கள். தோழர்களே! நான் இங்கு சில அறிவுரைகளை சொல்ல விரும்புகிறேன் என்னிடமிருந்து அதை பெற்றுக்கொண்டு செயல்படுத்துவது யார் என்று கேட்டார்கள். ஹதீஸ்கலைகளிலே அதிகமான ஆர்வமுடையவர்கள் ஹஜ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள். உடனே அவர்கள் எழுந்து யா ரசூலல்லாஹ் அதை நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார்கள். இதைக்கேட்ட நபியவர்கள் உமக்கு நான் ஐந்து விஷயங்களை உபதேசம் செய்கின்றேன் அவைகளை வாழ்க்கையில் கடைபிடியுங்கள் என்றார்கள்.

( இந்த ஐந்து விஷயங்கள் அவர்களுக்கு மட்டும் செய்த உபதேசமல்ல உலகில் உள்ள முஃமின்கள் அனைவர்களும் எடுத்து நடக்கவேண்டிய அற்புதமான ஐந்து உபதேசங்களாகும்)

முதலாவது உபதேசம்
*************************
اتق المحارم تكن اعبد الناس
அல்லாஹ் எதை ஹராமாக ஆக்கியிருக்கின்றானோ அவற்றைச் செய்யாமல் தவிழ்ந்திருங்கள் மக்களிலே மிகப்பெரும் வணக்கசாலியாகிவிடுவீர்.

வணக்க வழிபாடுகள் மட்டும் ஒரு மனிதனை நரகத்தை விட்டும் பாதுகாக்க போதுமானதல்ல மாறாக ஹராமான( தடுக்கப்பட்ட )காரியங்களை விட்டும் தவிழ்ந்து வாழ்ந்தால்தான் வெற்றியடைய முடியும்.  எனவே முதலில் ஹராமான காரியங்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ‌ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَيْـٴًـــــا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌  وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ‌ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِيَّاهُمْ‌  وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ‌  وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ‌  ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏ 
வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 6:151)

وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ‌  وَاَوْفُوْا الْكَيْلَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِ‌  لَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا‌  وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰى‌‌  وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْا‌  ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۙ‏ 
அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.
(அல்குர்ஆன் : 6:152)

2766- صحيح البخاري عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ)). قَالُوا يَا رَسُولَ اللَّهِ، وَمَا هُنَّ قَالَ: ((الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ))

.2766. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “இறைத்தூதர் அவர்களே! அவை எவை?“ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)என்று (பதில்) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 55. மரண சாசனங்கள்

2654- حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا الْجُرَيْرِيُّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ)). ثَلاَثًا. قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ: ((الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ)). وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا فَقَالَ: ((أَلاَ وَقَوْلُ الزُّورِ)). قَالَ فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ.
2654. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.  (ஒரு முறை) பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?“ என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், “ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்என்று கூறினார்கள். நிறுத்திக் கொள்ளக் கூடாதாஎன்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 52. சாட்சியங்கள்

6925- صحيح مسلمِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:َ الْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ وَالأُذُنَانِ زِنَاهُمَا الاِسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُ الْكَلاَمُ وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ)).
5164. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (மனிதனின் கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண்ணின் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவின் விபச்சாரம் (ஆபாசமான) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸை விடச் சிறு பாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 46. (தலை)விதி

ஹராமான விஷயங்களைச் செய்வதால் ஏற்படும் விளைவுகள்
*******************************************
நாளை மறுமையில் சிலருடைய நன்மைகள் பெரும் பெரும் மலைகளைப்போன்று இருக்கும் ஆனாலும் அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்களாம்
.இவர்கள் ஏன் நரகிற்கு அனுப்பப்படுகிறார்கள் என்று ஆச்சர்யமாக கேட்கப்படும் இவ்வளவு தொழுதிருக்கிறார்கள் இவ்வளவு நோன்பு மற்றும் நல்லரங்கள் செய்திருக்கிறார்கள் இவர்களுக்கு ஏன் நரகம் என்று கேட்கப்படும். அப்பொழுது அல்லாஹ் கூறுவான் இவர்கள் எல்லா நல்லரங்களையும் செய்தார்கள் ஆனால் எதை நான் தடுத்தேனோ அவர்கள் அதைப்பேணவில்லை அண்ணிய பெண்களை பார்க்கக்கூடாது எனத் தடுத்திருந்தேன் ஆனால் இவர்கள் ஆசை வருகிற பொழுதெல்லாம் அண்ணிய பெண்களைப் பார்த்தார்கள். நான் ஹராமான முறையில் பொருள் சம்பாதிக்கக் கூடாது என்று சொன்னேன் ஆனால் இவர்கள் அதைப் பேணவில்லை ஹராமான வழியில் சம்பாத்தியம் செய்தார்கள். நான் நாவை பேணவேண்டும் புறம்பேசக் கூடாது என்று சொல்லியிருந்தேன் இவர்கள் நாவை பேணவில்லை புறம் பேசினார்கள். மொத்தத்தில் எதையெல்லாம் நான் ஹராமாக ஆக்கியிருந்தேனோ அத்துணையும் செய்தவர்கள் இன்றைக்கு நரகத்திற்கு செல்கிறார்கள் என்பான்.

சந்தேகத்திற்குரியவை
********************************
அது ஹராமா? ஹலாலா? என்று  சந்தேகத்திற்கிடமானவற்றையும் தவிழ்ந்திருத்தல்
அவசியாகும்.
4178-ِّ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَأَهْوَى النُّعْمَانُ بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ: ((إِنَّ الْحَلاَلَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يَرْتَعَ فِيهِ أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلاَ وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلاَ وَهِيَ الْقَلْبُ)).

3259. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானது; தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கிடமானவையும் (முஷ்தபிஹாத்) இருக்கின்றன. மக்களில் பெரும்பாலோர் அவற்றை அறியமாட்டார்கள். எனவே, யார் சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் தமது மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர் அனுமதிக்கபடாதவற்றில் தலையிடுகிறார். வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர், வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். அறிக! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை உண்டு. அல்லாஹ்வின் எல்லை அவனால் தடை விதிக்கப்பெற்றவையே. அறிக! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீரடைந்துவிட்டால் உடல் முழுவதும் சீரடைந்துவிடும். அது சீரழிந்துவிட்டால் முழு உடலும் சீரழிந்துவிடும். அறிக! அதுவே இதயம். இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதை அவர்கள் அறிவிக்கும்போது தம்மிரு காதுகளை நோக்கி இரு விரல்களால் சைகை செய்து (இந்தக் காதுகளால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேற்கண்டவாறு) கூறியதைக் கேட்டேன் என்றார்கள்.

قال النبي صلي الله عليه وسلم دع ما يريبك الي مالا يريبك > رواه الترمذي

மேலும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்
تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا
இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;
(அல்குர்ஆன் : 2:187)

இரண்டாவது உபதேசம்
*******************************
وارض بما قسم الله لك تكن اغني الناس
அல்லாஹ் உமக்கு எதை முடிவுசெய்து தந்தானோ அதை பொருந்திக்கொள் நீதான் பெரும் செல்வந்தன்

அல்லாஹ் மனிதனை படைப்பதற்கு முன்பே அவன் ரிஜ்கை படைத்துவிட்டான் யார் யாருக்கு எவ்வளவு என்பதையும் முடிவு செய்துவிட்டான். அவன் முடிவை பொருந்திக் கொள்பவனே மிகப்பெரும் செல்வந்தனாவான்.

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏ 
இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 11:6)

318- حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((إِنَّ اللَّهَ- عَزَّ وَجَلَّ- وَكَّلَ بِالرَّحِمِ مَلَكًا يَقُولُ: يَا رَبِّ نُطْفَةٌ، يَا رَبِّ عَلَقَةٌ، يَا رَبِّ مُضْغَةٌ. فَإِذَا أَرَادَ أَنْ يَقْضِيَ خَلْقَهُ قَالَ أَذَكَرٌ أَمْ أُنْثَى شَقِيٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ وَالأَجَلُ فَيُكْتَبُ فِي بَطْنِ أُمِّهِ)).
318. “அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், “யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது அலக்“ (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறதுஎன்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றனஎன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்

இப்ராஹீம் (அலை) அவர்களிடம் .  அல்லாஹ் எதன் காரணமாக தங்களை  خليل லாஹ தேர்ந்தெடுத்தான் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மூன்று காரணத்தால் என்று பதில் கூறினார்கள்
الاول: ماخيرت بين امرين الا اخترت الذي لله علي غيره
الثاني: ما اهتممت بشيئ ضمنه الله لي في امر رزقي
الثالث: ما تغديت ولاتعشيت الا مع الضيف

1. இரண்டு காரியங்களில் ஒன்றை தேர்வு செய்யும் நிலை வரும்போது எது அல்லாஹ்விற்கு பிடித்தமானதாக இருக்குமோ அதையே நான் தேர்வு செய்வேன்.

2. என்னுடைய ரிஜ்கிற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டதால் அதுபற்றி நான் கவலைப்படுவதேயில்லை.

3. காலை மாலை உணவு அருந்தும்போது யாராவது ஒரு விருந்தினரை அழைத்து உணவு கொடுத்துத்தான் நானும் உண்பேன் என்றார்கள்.
( நூல் வஸாயர் ரசூல்)

இப்ராஹீம் பின் அத்ஹம் ( ரஹ்) அவர்கள் கவலையால் பீடிக்கப்பட்ட ஒரு மனிதனைக் கண்டார்கள். ஓ மனிதா! உண்ணிடம் மூன்று கேள்விகள் கேட்பேன் அதற்கு நீ பதில் சொல்கின்றாயா ? என்றார்கள். அதற்கு அம்மனிதன் சரி என்றான்.

முதல் கேள்வி:  அல்லாஹ் நாடாத ஏதாவது ஒரு காரியம் உலகில் நடந்ததுண்டா ? என்றார்கள்.
அதற்கு அவன் இல்லை என்றான்

இரண்டாம் கேள்வி: அல்லாஹ் உணக்கு என்று எந்த ரிஜ்கை முடிவு செய்துள்ளானோ அதில் ஏதாவது குறையமுடியுமா ? என்றார்கள்.
அதற்கும் அவன் இல்லை என்றான்.

மூன்றாவது கேட்டார்கள் இந்த உலகில் நீ எத்தனை ஆண்டுகள் வாழ்வீர் என்று இறைவன் முடிவு செய்ததில் ஏதாவது குறைவு ஏற்படுமா? என்றார்கள் அதற்கும் அவன் இல்லை என்றான்.
பிறகு ஏன் நீ கவலை கொள்ள வேண்டும் ? அல்லாஹ் முடிவு செய்ததுதானே நடக்கும் என்றார்கள்.

*அதற்காக நாம் பொருளாதாரத்தை தேடும் விஷயத்தில் பொடுபோக்காகவும் இருக்கக்கூடாது.*
فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
(அல்குர்ஆன் : 62:10)

எல்லா நபிமார்களும் ஏதாவது ஒரு தொழிலைச் செய்துள்ளார்கள்.
ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ( ரலி) அவர்களிடம் ஒவ்வொரு நபியும் என்ன தொழில் செய்தார்கள் என்று கேட்கப்பட்டபோது இவ்வாறு கூறினார்கள்
ஹஜ்ரத் ஆதம் ( அலை) அவர்கள் விவசாயம் செய்தார்கள். இத்ரீஸ் ( அலை) அவர்கள் தையல் வேலை செய்தார்கள் இவர்கள்தான் முதன் முதலில் உலகில் ஆடையைத் தைத்தார்கள் அதற்கு முன்பு மிருகங்களின் தோல்களை மக்கள் ஆடைகளாக அணிந்து கொள்வார்களாம். ஹஜ்ரத் நூஹ் நபி அவர்கள் பலகை செய்யும் ஆசாரியாக இருந்தார்கள் முதன் முதலில் உலகில் கப்பல் கட்டியவர்கள் இவர்கள்தான். நபி ஹூத் அலை மற்றும் ஸாலிஹ் அலை பெரும் வியாபாரியாக இருந்தார்கள். இப்ராஹீம்  நபி அவர்கள் விவசாயியாக இருந்தார்கள். நபி இஸ்மாயீல் அலை அவர்கள் வேட்டையாடுபவராக இருந்தார்கள். இஸ்ஹாக் அலை இடையராக இருந்தார்கள். இவ்வாறே யஃகூப் அலை ஷுஹைப் அலை மூஸா அலை இடையர்களாக இருந்தார்கள். யூசுப் அலை கடிகாரம் செய்தார்கள்( இது சிறையில் இருந்த சமயம் இந்த வேலை செய்தார்கள்) ஹாரூன் அலை وزير ராக இருந்தார்கள். இல்யாஸ் அலை துனி நெய்பராகவும் தாவூத் அலை உருக்குச்சட்டை செய்பராகவும். ஈஸா அலை அவர்கள் سياحا ஒவ்வொரு ஊராகச்செல்பர் ( அவர்களுக்கு சொந்த ஊர் என்பதே கிடையாது. ) நபி( ஸல்) அவர்கள் வியாபாரியகவும் முஜாஹிதாகவும் இருந்தார்கள். வியாபாரிகள் பஜ்ரு தொழுகை முடித்துவிட்டு அதிகாலை நேரத்தில் வியாபாரத்திற்குச் செல்வது நல்லது அதில் பரக்கத் இருக்கின்றது. நபி ( ஸல்) அவர்கள் اللهم بارك لامتي في بكورها என்று துஆவும் செய்துள்ளார்கள்.
(நூல்: வஸாயர் ரசூல்)

2072-  عَنِ الْمِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ- عَلَيْهِ السَّلاَمُ- كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ)).
2072.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.”  என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 34. வியாபாரம்

ஒருமுறை உமர் ரலி அவர்கள் யமன் நாட்டிலிருந்து வந்த சிலமனிதர்களை சந்தித்தார்கள். அவர்கள் எந்த சம்பாத்தியமும் செய்யாமல் பள்ளியிலேயே அமர்ந்திருந்தார்கள் அவர்களிடம் நீங்கள் யார் ( என்ன வேலை தொழில் செய்கிறீர்கள்)  என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் நாங்கள் متوكلون அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் என்றார்கள் இதைக் கேட்ட உமர் ரலி அவர்கள் நீங்கள் பொய்கூறுகின்றீர்கள் ما انتم متوكلون انما المتوكلون الذي القي حبة في الارضي وتوكل علي اللهநீங்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல இறை நம்பிக்கையாளன் யாரென்றால் அவன் பூமியில் விதையை விதைத்து விட்டு பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பான் என்றார்கள். நூல்:  ஹாகிம்

*அல்லாஹ் கொடுத்த ரிஜ்கை பொருந்திக் கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தும் மணப்பான்மை வரவேண்டும். இதற்கு அண்ணல் நபி வாழ்விலிருந்து சில உதாரணங்கள்* .
5416- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ قَدِمَ الْمَدِينَةَ مِنْ طَعَامِ الْبُرِّ ثَلاَثَ لَيَالٍ تِبَاعًا، حَتَّى قُبِضَ.
صحيح البخاري
5416. ஆயிஷா(ரலி) கூறினார்  முஹம்மத்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள்

5413- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَعْقُوبُ عَنْ أَبِي حَازِمٍ قَالَ سَأَلْتُ سَهْلَ بْنَ سَعْدٍ فَقُلْتُ هَلْ أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ فَقَالَ سَهْلٌ مَا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ مِنْ حِينَ ابْتَعَثَهُ اللَّهُ حَتَّى قَبَضَهُ اللَّهُ. قَالَ فَقُلْتُ هَلْ كَانَتْ لَكُمْ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنَاخِلُ قَالَ مَا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْخُلاً مِنْ حِينَ ابْتَعَثَهُ اللَّهُ حَتَّى قَبَضَهُ. قَالَ قُلْتُ كَيْفَ كُنْتُمْ تَأْكُلُونَ الشَّعِيرَ غَيْرَ مَنْخُولٍ قَالَ كُنَّا نَطْحَنُهُ وَنَنْفُخُهُ، فَيَطِيرُ مَا طَارَ وَمَا بَقِيَ ثَرَّيْنَاهُ فَأَكَلْنَاه
ُ5413. அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார்  நான் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம், “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நன்கு சலித்து சுத்தம் செய்யப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட) வெள்ளை ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?“ என்று கேட்டேன். அதற்கு ஸஹ்ல்(ரலி), “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து தமக்கு அவன் இறப்பை அளிக்கும் வரை (சலித்து சுத்தமாக்கப்பட்ட மாவினாலான) வெள்ளை ரொட்டியைப் பார்த்ததேயில்லைஎன்று பதிலளித்தார்கள். நான், “இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்ததுண்டா?“ என்று கேட்டேன். அவர்கள், “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து தம்மை அவன் இறக்கச் செய்யும் வரை சல்லடையைக் கண்டதேயில்லைஎன்றார்கள். நான், “கோதுமையை நீங்கள் எப்படிச் சாப்பிட்டுவந்தீர்கள்? சலிக்காமலேயா?“ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் கோதுமையை அரைத்து, (உமியை நீக்க) அதில் (வாயால்) ஊதுவோம். அதிலிருந்து (தவிடு, உமி போன்ற) பறப்பன பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீர் கலந்து (ரொட்டி தயாரித்து) உண்போம்என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள்

عَنْ ثَوْبَانَ ، قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ،  مَا  يَكْفِينِي مِنَ الدُّنْيَا ؟ قَالَ : " مَا سَدَّ جَوْعَتَكَ ، وَوَارَى عَوْرَتَكَ ، فَإِنْ كَانَ لَكَ بَيْتٌ يُظِلُّكَ ، وَإِنْ كَانَتْ لَكَ دَابَّةٌ فَبَخْ "
.ஃதவ்பான் ரலி அவர்கள் யா ரசூலல்லாஹ் உலகத்தில் வாழ எனக்கு எவ்வளவு பொருளாதாரம் போதுமாகும் எனக்கேட்டபோது நபி ( ஸல்) அவர்கள் உன் பசியை போக்கும் அளவு உணவும் உன் மாணத்தை மறைக்க இருப்பிடமும். உமக்கு ஒரு வாகணம் இருந்தால் அது மிகவும் மகிழ்ச்சி என்றார்கள். நூல் தப்ரானி

عن ابي عبد الرحمن الحبلي يقول سمعت  عبد الله بن عمرو بن العاص وسأله رجل فقال ألسنا من فقراء المهاجرين فقال له عبد الله ألك امرأة تأوي إليها قال نعم قال ألك مسكن تسكنه قال نعم قال فأنت من الأغنياء قال فإن لي خادما قال فأنت من الملوك ( رواه مسلم)
5699. அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ”நாம் ஏழை முஹாஜிர்கள் இல்லையா?”என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், ”நீர் அமைதி காண உமக்கு மனைவி இல்லையா?”என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், ”ஆம் (இருக்கிறாள்)என்றார். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், ”வசிப்பதற்கு உமக்கு வீடு இல்லையா?” என்று கேட்டார்கள். அந்த மனிதர் ஆம் (இருக்கிறது)என்றார். அவ்வாறாயின், நீர் செல்வர்களில் ஒருவராவீர்என்று கூறினார்கள். அந்த மனிதர் இத்துடன் என்னிடம் பணியாளர் ஒரு வரும் இருக்கிறார்என்றார். அவ்வாறாயின், நீர் மன்னர்களில் ஒருவர் ஆவீர்என்றார்கள். -

قال النبي صلي الله عليه وسلم طوبي لمن هدي للاسلام وكان عيشه كفافا وقنع ( رواه الترمذي)
قد افلح من اسلم ورزق كفافا وقنعه الله بما اتاه ( رواه مسلم)
عن ابي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلي الله عليه وسلم يقول :  اللهم اجعل رزق ال محمد قوتا ( رواه البخاري)

மூன்றாவது உபதேசம்
****************************
واحسن الي جارك تكن مؤمنا
உன் அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள் அப்பொழுதுதான் நீ உண்மையான முஃமினாக ஆகுவாய்.

நான்காவது உபதேசம்
***************************
واحب للناس ما تحب لنفسك تكن مسلما
உமக்கு எதை விரும்புகிறாயோ அதையே மற்ற மக்களுக்கும் நீ விரும்பு அவ்வாறு செய்தால் நீ உண்மையான முஸ்லிமாக ஆகிவிடுவாய் என்றார்கள்.

ஐந்தாம் உபதேசம்
*************************
ولا تكثر الضحك فان كثرة الضحك تميت القلب
அதிகம் சிரிக்காதீர் அதிகம் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும் என்று இந்த அற்புதமான ஐந்து உபதேசங்களையும் அண்ணல் நபி ( ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அபூஹுரைரா ரலி அவர்களுக்குச் செய்தார்கள்.

இந்த உபதேசங்களை நாமும் நம் வாழ்க்கையில் எடுத்து நடப்போமாக! ஆமீன்.
இந்த கடைசி மூன்று உபதேசங்களின் விரிவுரை இன்ஷா அல்லாஹ் வரும் வாரம் தொடரும்....