بسم الله الرحمن الرحيم
நன்றும்
இன்றே செய்வோம்!
***************************************
اَلَمْ يَاْنِ لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ
تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَـقِّۙ وَلَا
يَكُوْنُوْا كَالَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ
الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ
)57:16
قال النبي صلي الله عليه وسلم بادروا با الاعمال
فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا او يمسي مؤمنا ويصبح كافرا
يبيع دينه بعرض من الدنيا. (صحيح المسلم)
முன்னுரை:
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள மிகப் பெரும்
அருட் கொடை வாழ்க்கையாகும். வாழ்க்கை என்று ஒன்று இருந்தால்தான் நல்லறங்கள் செய்ய
முடியும். அது இல்லையேல் எதுவும் செய்ய இயலாது. எனினும் இப்பேற்பட்ட வாழ்க்கையைப்
பெற்ற மனிதர்களில் பலர் அதனை வீணடிப்பது ஈடு செய்ய முடியாத மிகப் பெரும்
பிழையாகும்…….
والعصر (1) إن الإنسان لفي خسر (2) إلا الذين
آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر (3)
காலத்தின் மீது சத்தியமாக.நிச்சயமாக மனிதன்
நஷ்டத்தில் இருக்கின்றான்.
ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல)
அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும்
பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள்
நஷ்டத்திலில்லை). خسر
எனும் சொல் ஒரு வியாபாரி தன் வியாபாரத்திலுள்ள
முதலை நஷ்டப்படுத்துவதற்கு சொல்லப்படும். இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் வழங்கியுள்ள மூலதனம் ஆயுளாகும். அம்மூலதனத்தை வீணடித்தவன் வியாபாரத்தில் திவாலானவனைப் போலாவான் என்ற பொருள்பட அல்லாஹ் இங்கே இவ்வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.
வாழ்வை வளமாக்கிட விரைந்து செயல்பட வேண்டும்.
***************************
قال الله تعالي : فاستبقوا الخيرات أين ما
تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير (02 : 148 )
நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக்
கொள்ளுங்கள்;
நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள்
யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும்
பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.
قال الله تعالي : وسارعوا إلى مغفرة من ربكم
وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين (03 : 133)
நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப்
பெறுவதற்கும் சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள் பூமியைப் போலுள்ளது; அது பய பக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
عن ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ
يَعِظُهُ: " اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هِرَمِكَ،
وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاءَكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ
شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ «هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ
الشَّيْخَيْنِ وَلَمْ يُخَرِّجَاهُ» حاكم : 7846
நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு உபதேசிக்கையில்
கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்திக் கொள்.உன் வயோதிகத்திற்கு முன்
உன் இளமையை, நோயிக்கு முன் ஆரோக்கியத்தை,
வறுமைக்கு முன் உனது செல்வத்தை, உன் அலுவலுக்கு முன் உன் ஓய்வை,உன் மரணத்திற்கு
முன் உன் வாழ்வை (பயன்படுத்திக் கொள்வாயாக!)
எப்படியெல்லாம் கால மாற்றம் ஏற்படும்?
*****************************
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم
قال: «بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم، يصبح الرجل مؤمنا ويمسي كافرا، أو
يمسي مؤمنا ويصبح كافرا، يبيع دينه بعرض من الدنيا» صحيح المسلم: 118
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு
முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது)
காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக
மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில்
இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே
அவன் விற்றுவிடுவான்.
நன்றும் இன்றே செய்வோம்
************************
اَلَمْ يَاْنِ لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ
تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَـقِّۙ وَلَا
يَكُوْنُوْا كَالَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ
الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள
உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும்
நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் -
முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி
விட்டன; அன்றியும், அவர்களில்
பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.
(அல்குர்ஆன் : 57:16)
தொழுகையை கடைபிடிக்காதவர்களுக்கு இன்றே
தொழுகத் துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. செல்வத்தை தேடுவதில் ஏற்படாத
போதுமென்ற மனம் இதில் மட்டும் ஏற்பட்டு விடுகிறது.
தர்மம் கொடுப்பதாக இருந்தால் ரமளானில்
பார்த்துக் கொள்ளலாம் என்று தாமதப்படுத்துகிறார்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும்
ஹஜ்ஜுக்கடமையை குடு குடு கிழவனாகிய பிறகு செய்து கொள்ளலாமென்று
தள்ளிப்போடுகிறார்கள். உலக சுகங்களைத் தேடுவதில் மக்களிடத்தில் காணப்பட்ட அவசரம்
இறையருளைத் தேடுவதில் ஏனில்லை என்பதுதான் மேற்கானும் திருவசனத்தின் ஆதங்கமாக
விளங்குகிறது.
عن عقبة، قال: صليت وراء النبي صلى الله عليه
وسلم بالمدينة العصر، فسلم، ثم قام مسرعا، فتخطى رقاب الناس إلى بعض حجر نسائه،
ففزع الناس من سرعته، فخرج عليهم، فرأى أنهم عجبوا من سرعته، فقال: «ذكرت شيئا من
تبر عندنا، فكرهت أن يحبسني، فأمرت بقسمته. صحيح البخاري : 851
851. உக்பா(ரலி)
அறிவித்தார். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் திரும்ப வந்து தாம் விரைவாகச் சென்றது
பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். 'என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது
என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு
கூறிவிட்டு வந்தேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இமாம் அபூஹனீபா( ரஹ்) அவர்களிடம் ஒரு சிலர்
பள்ளிவாசல் கட்ட நிதிகேட்டு வந்தார்கள். உடனே தனது இடது கையால் சிறிது தொகையை
அன்பளிப்புச் செய்தார்கள். இமாம் அவர்களின் இச்செயலால் வந்தவர்கள் மனவருத்தம்
அடைந்தார்கள். அவர்கள் வருந்துவதை கண்ணுற்ற இமாம் அவர்கள் தாங்கள் என்னிடம் நிதி
வேண்டிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தர முடிவு செய்தேன். அப்போது பணம் எனது
இடது கைக்கு சமீபத்தில் இருந்தது. அதனால் வலது கையால் எடுக்க முயலுவதற்குள் எனது
முடிவில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துவிடக்கூடாதே என்றுதான் இடது கையால் அளித்தேன்
என்று விளக்கம் தந்தார்கள்.
நபித் தோழர் பயன்படுத்திய விதம்....
********************
عن عمران بن حصين، رضي الله عنهما قال: لا رقية
إلا من عين أو حمة، فذكرته لسعيد بن جبير، فقال: حدثنا ابن عباس: قال رسول الله
صلى الله عليه وسلم: " عرضت علي الأمم، فجعل النبي والنبيان يمرون معهم
الرهط، والنبي ليس معه أحد، حتى رفع لي سواد عظيم، قلت: ما هذا؟ أمتي هذه؟ قيل: بل
هذا موسى وقومه، قيل: انظر إلى الأفق، فإذا سواد يملأ الأفق، ثم قيل لي: انظر ها
هنا وها هنا في آفاق السماء، فإذا سواد قد ملأ الأفق، قيل: هذه أمتك، ويدخل الجنة
من هؤلاء سبعون ألفا بغير حساب " ثم دخل ولم يبين لهم، فأفاض القوم، وقالوا:
نحن الذين آمنا بالله واتبعنا رسوله، فنحن هم، أو أولادنا الذين ولدوا في الإسلام،
فإنا ولدنا في الجاهلية، فبلغ النبي صلى الله عليه وسلم فخرج، فقال: «هم الذين لا
يسترقون، ولا يتطيرون، ولا يكتوون، وعلى ربهم يتوكلون» فقال عكاشة بن محصن: أمنهم
أنا يا رسول الله؟ قال: «نعم» فقام آخر فقال: أمنهم أنا؟ قال: «سبقك بها عكاشة»
صحيح البخاري : 5705
. இப்னு
அப்பாஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது)
பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு
மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும்,இரண்டு
மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும்,(பத்துப்
பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும்,தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர். அடிவானத்தை
அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை கண்டேன். அது என் சமுதாயமாக இருக்கும் என எதிர்
பார்த்தேன். அப்போது'இது (இறைத்தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்' என்று எனக்குச் சொல்லப்பட்டது. பிறகு என்னிடம், 'பாருங்கள்'என்று சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தை அடைத்திருந்த (ஒரு பெரும்) மக்கள்
திரளை பார்த்தேன். மீண்டும் என்னிடம், 'இங்கும் அங்கும்
பாருங்கள்' என்று சொல்லப்பட்டது. அப்போது நான்
அடிவானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். அப்போது 'இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும்
இவர்களில் அடங்குவர்' என்று சொல்லப்பட்டது.
(விசாரணையின்றி
சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) நபி(ஸல்) அவர்கள்
விளக்கிக் கூறாத நிலையிலேயே மக்கள் கலைந்து சென்றுவிட்டனர். பின்னர் நபித்தோழர்கள்
(சிலர் மட்டும் இது தொடர்பாகத்) தமக்கிடையே விவாதித்துக் கொண்டார்கள். சிலர் 'நாமோ இறைவனுக்கு இணை கற்பிக்கும் கொள்கையில் (நம் குடும்பங்கள்) இருந்த
நிலையில் பிறந்தோம். ஆயினம் பின்னர் நாம் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும்
நம்பிக்கை கொண்டோம். எனவே (இஸ்லாத்தில் பிறந்த) நம் பிள்ளைகளே அந்த எழுபதாயிரம்
பேர் ஆவர்' என்று கூறினார்கள். இச்செய்தி
நபி(ஸல்)அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள்'(விசாரணையின்றி
சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில் அவர்கள் பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ள மாட்டார்கள்;(ஷிர்க்கான
வார்த்தைகளைக் கொண்டு) மந்திரித்துப்பார்க்கமாட்டார்கள். தம் இறைவனையே
சார்ந்திருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு
மிஹ்ஸன்(ரலி) எழுந்து'அவர்களில் நானும் ஒருவனா? இறைத் தூதர் அவர்களே!'என்று கேட்க, நபி(ஸல்)
அவர்கள், 'ஆம்' என்று
பதிலளித்தார்கள். வேறொருவர் எழுந்து நின்று,'அவர்களில்
நானும் ஒருவனா?'என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இவ்விஷயத்தில் உக்காஷா உங்களை முந்திக்
கொண்டுவிட்டார்'
என்று கூறினார்கள்.
நன்மையான காரியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட
நபித் தோழியர்கள்.
*****;*****************
عن أنس بن مالك رضي الله عنه، أنه سمعه يقول:
كان رسول الله صلى الله عليه وسلم يدخل على أم حرام بنت ملحان فتطعمه - وكانت أم
حرام تحت عبادة بن الصامت - فدخل عليها رسول الله صلى الله عليه وسلم، فأطعمته
وجعلت تفلي رأسه، فنام رسول الله صلى الله عليه وسلم، ثم استيقظ وهو يضحك، قالت:
فقلت: وما يضحكك يا رسول الله؟ قال: " ناس من أمتي عرضوا علي غزاة في سبيل
الله، يركبون ثبج هذا البحر ملوكا على الأسرة، أو: مثل الملوك على الأسرة "،
شك إسحاق، قالت: فقلت: يا رسول الله، ادع الله أن يجعلني منهم، فدعا لها رسول
الله صلى الله عليه وسلم، ثم وضع رأسه، ثم استيقظ وهو يضحك، فقلت: وما يضحكك
يا رسول الله؟ قال: «ناس من أمتي عرضوا علي غزاة في سبيل الله» - كما قال في الأول
- قالت: فقلت: يا رسول الله ادع الله أن يجعلني منهم، قال: «أنت من الأولين»،
فركبت البحر في زمان معاوية بن أبي سفيان، فصرعت عن دابتها حين خرجت من البحر،
فهلكت صحيح البخاري : 2788
6283. அனஸ் இப்னு
மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள)'குபா' எனுமிடத்திற்குச் சென்றால் (தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த்
மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். (அவ்வாறு செல்லும்போது)
உம்மு ஹராம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு உணவளிப்பார்கள். உம்மு ஹராம்(ரலி)
அவர்கள் உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒரு நாள்
நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களுக்கு உம்மு ஹராம்
உணவளித்தார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) உறங்கினார்கள். பிறகு
எழுந்து சிரித்தார்கள். உடனே உம்மு ஹராம்(ரலி) அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று
கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'என்
சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் இந்தக் கடல் மீது பயணம் செய்யும் புனிதப்
போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும்
மன்னர்களாக 'அல்லது'மன்னர்களைப்
போன்று'இருந்தார்கள். என்று கூறினார்கள். உடனே 'என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'
என்று உம்மு ஹராம்(ரலி) கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் தலையை வைத்து உறங்கினார்கள். பின்னர் விழித்துச் சிரித்தார்கள். அப்போதும் 'இறைத்தூதர்
அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?'என உம்மு ஹராம் கேட்க முன்பு போன்றே நபி(ஸல்)
அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது என்னையும் அவர்களில் ஒருவராக ஆக்கும்படி
அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என உம்மு ஹராம் கேட்டுக் கொண்டார்கள். அப்போது நபி(ஸல்)
அவர்கள் 'நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு)
முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக விளங்குவீர்கள்' என்றார்கள்.
இறைவன்
அவ்வாறே உம்மு ஹராம்(ரலி) அவர்கள்
முஆவியா(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (அறப்போருக்காக) கடல் பயணம்
மேற்கொண்டார்கள். கடலிலிருந்து அவர்கள் புறப்பட்டபோது தம் வாகனப் பிராணியிலிருந்து
விழுந்து இறந்துவிட்டார்கள்.
நன்மையான காரியங்களை தள்ளிப்போடுவதின்
விளைவுகள்
********************
1.நரகத்திற்கு
இட்டுச் செல்லும்
قال الله تعالي : وليست التوبة للذين يعملون
السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار
أولئك أعتدنا لهم عذابا أليما (النساء:18) .
4:18. இன்னும் எவர்கள்
தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய
போது “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக
வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்”என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும் எவர்
காஃபிர்களாகவே மரணிக்கின்றார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை இத்தகையோருக்குத்
துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
ஃபிர்அவ்னின் வரலாறு...
************************
قال الله تعالي : وجاوزنا ببني إسرائيل البحر
فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا
الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين * آلآن وقد عصيت قبل وكنت من المفسدين
* فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون
(يونس : 90 - 92)
10:90. மேலும்
இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்;
அப்போது ஃபிர்அவ்னும் அவனுடைய படைகளும் (அளவு கடந்து) கொடுமையும் பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்:
இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ அவனைத் தவிர வேறு
இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்;இன்னும் நான்
அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
عن أبي هريرة رضي الله عنه، قال: جاء رجل إلى
النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، أي الصدقة أعظم أجرا؟ قال: «أن تصدق
وأنت صحيح شحيح تخشى الفقر، وتأمل الغنى، ولا تمهل حتى إذا بلغت الحلقوم، قلت
لفلان كذا، ولفلان كذا وقد كان لفلان» صحيح البخاري : 1419
1419. அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இறைத் தூதர் அவர்களே! நன்மையுள்ள தர்மம் எது?'எனக் கேட்டார். 'நீர் ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வறுமையைப்
பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே
அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும்
வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது
உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2.நன்மையை
குறைத்து விடும்.... ***********************
لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر
والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم
على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا
عظيما * درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما (النساء : 95 -96)
4:95. ஈமான்
கொண்டவர்களில் (நோய் பலஹீனம் முதுமை பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி
(வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும் தங்களுடைய சொத்துகளையும் தங்களுடைய
உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக
மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும் தங்களுடைய
உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை உட்கார்ந்திருப்பவர்களைவிட
அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்;
எனினும் ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்;ஆனால் அறப்போர் செய்வோருக்கோ (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட
அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث
السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من
الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير ( الحديد
: 10)
57:10. அன்றியும்
அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள் பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு
முன்னர் செலவு செய்து போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக
மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும்
அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
3.சந்தர்ப்பத்தை
தட்டிப் பறித்து விடும்.
وأنفقوا من ما رزقناكم من قبل أن يأتي أحدكم
الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين (10) ولن يؤخر
الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون (المنافقون : 10 - 11)
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே நாம்
உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என்
தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா?அப்படியாயின்
நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே”
என்று கூறுவான். ஆனால் அல்லாஹ் எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.
عن حارثة بن وهب، قال: سمعت النبي صلى الله عليه
وسلم يقول: " تصدقوا، فإنه يأتي عليكم زمان يمشي الرجل بصدقته، فلا يجد من
يقبلها، يقول الرجل: لو جئت بها بالأمس لقبلتها، فأما اليوم، فلا حاجة لي بها
" صحيح البخاري: 1411
1411. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்: தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும்.
அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன் நேற்றே இதை நீ
கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது
எனக்குத் தேவையில்லையே! என்றும் கூறுவான்.'
ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார்.
ஓய்வை உரமாக்கிவிடு
************************
عن عائشة رضي الله عنها، قالت: لما رجع النبي
صلى الله عليه وسلم من الخندق، ووضع السلاح واغتسل، أتاه جبريل عليه السلام، فقال:
" قد وضعت السلاح؟ والله ما وضعناه، فاخرج إليهم قال: فإلى أين؟ قال: ها هنا،
وأشار إلى بني قريظة، فخرج النبي صلى الله عليه وسلم إليهم "صحيح البخاري :
4117
4117. ஆயிஷா(ரலி)
அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் அகழ்ப்போரிலிருந்து திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே
வைத்துவிட்டுக் குளித்தார்கள். (அப்போது வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து
விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (வானவர்களாகிய) நாங்கள் அதைக் கீழே
வைக்கவில்லை. எனவே அவர்களை நோக்கிப் புறப்படுங்கள்' என்று
கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'எங்கே (போவது)?' என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் 'இதோ இங்கே!'என்று 'பனூ குறைழா' (என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்குமிடம்) நோக்கி சைகை காட்டினார்கள்.
எனவே நபி(ஸல்) அவர்களும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.
உண்மையில் ஓய்வு கொள்ளும் நேரம்
***********;;*****
عن أبي قتادة بن ربعي الأنصاري، أنه كان يحدث:
أن رسول الله صلى الله عليه وسلم مر عليه بجنازة، فقال: «مستريح ومستراح منه»
قالوا: يا رسول الله، ما المستريح والمستراح منه؟ قال: «العبد المؤمن يستريح من
نصب الدنيا وأذاها إلى رحمة الله، والعبد الفاجر يستريح منه العباد والبلاد،
والشجر والدواب» صحيح البخاري : 6516
6512. அபூ கத்தாதா
இப்னு ரிப்ஈ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் '(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்'என்றார்கள்.
மக்கள்'இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?' என்று
கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது)
இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை
நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து
மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள் மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன' என்றார்கள்.
முஸ்லிம்கள் விரைந்து செய்ய வேண்டிய பணிகள்
1. கல்வி
2. சமுதாய ஒற்றுமை
3. அரசியல் வலிமை
3. எதிரிகளைப்
பற்றிய சரியான புரிதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.