புதன், 12 ஜூன், 2019

இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள்...


இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள்...
*************

قول الله عز وجل:
*****
ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين

قول النبي صلى الله عليه وسلم:
*********
3656 حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ ، وَأَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالُوا : حَدَّثَنَا حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَبِي أَسْمَاءَ ، عَنْ ثَوْبَانَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ ، وَلَيْسَ فِي حَدِيثِ قُتَيْبَةَ : وَهُمْ كَذَلِكَ  - رواه مسلم

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதராம் நமது நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மீதும் அவர்களின் பரிசுத்த குடும்பத்தினர்கள் நேரிய தோழர்கள் அவர்களின் தூயவழிகளை பின்பற்றி ஒழுகிய எல்லோர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்.

2019 மே மாதம் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நமக்கு நிறைய படிப்பினைகளை தந்திருக்கிறது. எதிர் காலத்தில் இந்திய முஸ்லிம்கள் எதிர் கொண்டிருக்கும் சவால்கள் குறித்தும் அதற்கான காரணிகளையும் யோசித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்கள் உயிரை விட பெரிதாகக் கருதும் ஷரீஅத் சட்டத்திற்கும் எதிரானவர்கள் என்கினும் அவர்களால் முஸ்லிம்களை பயமுறுத்தி துன்புறுத்திடலாமே தவிர அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் விழுமியங்களை ஒன்றும் செய்திட முடியாது.

يُرِيدُونَ لِيُطۡفِـُٔواْ نُورَ ٱللَّهِ بِأَفۡوَٰهِهِمۡ وَٱللَّهُ مُتِمُّ نُورِهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் இணைவைப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
(அல்குர்ஆன் - 61: 8)

தொழுது / சதகா செய்து / நோன்பு நோற்று நாம் செய்த துஆக்கள் எதுவும் வீணாகி விட்டதாக நாம் கருதக் கூடாது . அதற்கான நேரத்தில் அது கிடைக்கும் இருப்பினும் சோதனைகள் வரும் போது நாம் கடந்தகால பாவங்கள்-தவறுகளை நினைத்து வருந்தி நாம் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு உருகிட வேண்டும் இதுவே சோதனைகளை எதிர்கொள்வதற்கான வழிமுறையே தவிர நாம் புலம்பித் தவிப்பதால் ஒன்றுமாகிடப்  போவதில்லை...
நம்மில் சிலரின் பாவங்களால் தான் இவ்விதமான சோதனைகளை நாம் எதிர் கொண்டிருக்கிறோம் என்பதையே அறியாமல் தமது கடந்த கால பாவங்களை திருத்திக் கொள்ளாமல் தொடருவது வேதனைக்குரியது.

وَمَآ أَصَٰبَكُم مِّن مُّصِيبَةٖ فَبِمَا كَسَبَتۡ أَيۡدِيكُمۡ وَيَعۡفُواْ عَن كَثِيرٖ

அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
(அல்குர்ஆன் - 42: 30)

நாம் கடந்த காலங்களில் ஷரீஅத் சட்டங்களை எவ்வளவு மதித்து நடந்தோம் மார்க்கக் கல்விக்கு எந்தளவு முக்கியத்துவம் வழங்கினோம் அல்லாஹ் ரஸூல் காட்டித் தந்த வழிகளில் எந்தளவு எடுத்து நடந்தோம் எவ்வளவு புறக்கணித்தோம் சோதனைகளை எதிர்கொள்ளும் போது எவ்வளவு இறைவனிடம் கையேந்துகிறோம் கடந்த காலங்களில் மகிழ்ச்சியான தருணங்களில் எந்தளவு  இறைவனிடம்
கையேந்தினோம் என்றெல்லாம் யோசிக்க கடமைப்பட்டுள்ளோம்...

ஷரீஅத் சட்டங்களை மதிக்காமல் கடந்த காலங்களில் இஸ்லாமிய சமூகம் தலாகின் விஷயத்தில் வறம்பு மீறி நடந்து கொண்டதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள் உலமாக்கள் நிர்வாகிகள் சமூகப் பெரியவர்கள் என யாரையும் மதிக்காமல் எடுத்ததற்கெல்லாம் மூன்று தலாக் .
முடிவில் முத்தலாக் தடை சட்டம் என்ற பெயரில் இஸ்லாமியக் குடும்பங்களை சீரழிக்க எதிரிகள் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளார்கள். நீங்கள் ஷரீஅத்தை மதிக்கவில்லையா விளைவுகளை எதிர்கொள்ளுங்கள்...

وقد روى الدارقطني عن ابن عمر قلت: يا رسول الله أرأيت لو طلقتها ثلاثًا؟ قال: إذًا قد عصيت ربك وبانت منك امرأتك.
والنسائي برجال ثقات عن محمود بن لبيد قال: أخبر صلى الله عليه وسلم عن رجل طلق امرأته ثلاث تطليقات جميعًا فقام مغضبًا فقال: أيلعب بكتاب الله وأنا بين أظهركم.
மூன்று தலாக் விட்டதை கேள்விப்பட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நான் உங்களிடையே இருக்க அவர் என்ன அல்லாஹ்வுடைய வேதத்தில் விளையாடுகிறாரா? என்று கோபத்தை வெளிப்படுத்தினார்கள்... (நூல் : நஸயீ)

( مالك أنه بلغه) مما رواه عبد الرزاق وأبو بكر بن أبي شيبة عن سعيد بن جبير وغيره ( أن رجلاً قال لعبد الله بن عباس إني طلقت امرأتي مائة تطليقة) في مرة ( فماذا ترى علي؟ فقال له ابن عباس طلقت منك بثلاث) من المائة ( وسبع وتسعون اتخذت بها آيات الله هزوًا) مهزوءًا بها بمخالفتها لأن الله إنما جعل الطلاق ثلاثًا.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடம் ஒருவர் வந்து நான் எனது மனைவியை நூறு தலாக் விட்டு விட்டதாக கூறினார் அதற்கவர்கள் மூன்று தலாகின் மூலமே உங்கள் இருவருக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டு விட்டது மீதமுள்ள 97 தலாகைக் கொண்டு நீ அல்லாஹ்வின் வேதத்தை கேலிக்குரியதாக்கியுள்ளாய் என்று எச்சரித்தார்கள்.  (நூல்: முஅத்தா)

ஷரீஅத் சட்டங்களை நாம் பின்பற்றி நடந்தாலே அவை பாதுகாக்கப்படும் அதை நாம் புறக்கணிப்பதாலே நாம் சோதனைகளை எதிர் கொள்ள நேரிடுகிறது.  எனவே தலாக் விஷயத்திளும் மார்க்க விழுமியங்களை பேணி நடப்பது நமது காலத்தின் கட்டாயம்.

மார்க்கத்தை பேணி நடக்க மார்க்க அறிவு மிக அவசியமாகும் கடந்த காலங்களில் ஏன் தற்போதும் கூட உலகியல் பொருளாதாரம் சார்ந்த குறுமதியை நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதில் நாம் காட்டிய & காட்டிக் கொண்டிருக்கும் அக்கறையில் கால் பங்கு கூட இறைவனின் வஹீயுடைய கல்வியில் நாம் காட்டவில்லை என்பது எதார்த்தம் . இவ்வாறிருக்க முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட ஷரீஅத்திற்கு எதிரான சட்டங்கள் நடைமுறைக்கு வருவதின் ஆபத்துகளை உணர்ந்து எவ்வாறு நம் வருங்கால வாரிசுகள் களமாடுவார்கள்? எனவே உலகக் கல்வி ஒருபுறமிருக்க மார்க்கக் கல்வியை அதிலும் குறைந்தபட்சம் மக்தப் மதரஸா கல்வியையாவது நமது பிள்ளைகளுக்கு கட்டாயம் நாம் போதிக்க வேண்டும்.

கட்டாயமில்லாத ஜிஹாதை விட மார்க்கக் கல்வி கற்பது அவசியமென அல்லாஹ் திருமறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

۞وَمَا كَانَ ٱلۡمُؤۡمِنُونَ لِيَنفِرُواْ كَآفَّةٗۚ فَلَوۡلَا نَفَرَ مِن كُلِّ فِرۡقَةٖ مِّنۡهُمۡ طَآئِفَةٞ لِّيَتَفَقَّهُواْ فِي ٱلدِّينِ وَلِيُنذِرُواْ قَوۡمَهُمۡ إِذَا رَجَعُوٓاْ إِلَيۡهِمۡ لَعَلَّهُمۡ يَحۡذَرُونَ

முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் 9:122)

மேலும் அல்லாஹ்விடம் நம் தேவைகளை கேட்பதில் சீரற்ற நடைமுறை நம்மில் தொடர்கிறது துன்பங்கள் வரும் போது கையேந்திடும் நாம் மகிழ்ச்சியான தருணங்களில் இறைவனிடம் கேட்பதில்லை அவனை மறந்து வாழ்கிறோம் . அல்லாஹ் திருமறை குர்ஆனில் குறிப்பிடுவது போல .

وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ٱلضُّرُّ دَعَانَا لِجَنۢبِهِۦٓ أَوۡ قَاعِدًا أَوۡ قَآئِمٗا فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُ ضُرَّهُۥ مَرَّ كَأَن لَّمۡ يَدۡعُنَآ إِلَىٰ ضُرّٖ مَّسَّهُۥۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلۡمُسۡرِفِينَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.
(அல்குர்ஆன் 10:12)

எனவே எல்லா காலங்களிலும் ஒரே போல அல்லாஹ்வை வணங்குவதும், துஆ செய்வதும் நம்முடைய துஆக்கள் அங்கீகரிக்கப்பட அவசியமாகும்...

٢- [عن عبدالله بن عباس:] كنتُ رِدْفًا لرسولِ اللهِ صلّى اللهُ عليه وسلَّم إذْ نادانِي: يا غلامُ، قلتُ: لبيكَ وسعديكَ يا رسولَ اللهِ فقالَ: احفظِ اللهَ يحفظْكَ احفظِ الله تجدْه أمامَك واذكرْه في الرخاءِ يذكرْكَ في الشدةِ واعلمْ أنَّ القلمَ جرى بما هو كائنٌ إلى يومِ القيامةِ فلو أنَّ العبادَ اجتمعُوا على أن يُعطوكَ شيئًا لم يُرِدِ اللهُ أن يعطيَكَ ما قَدِرُوا ولو اجتمعوا على أن يمنعوكَ شيئًا قد قَضى اللهُ لكَ ما قَدِرُوا، فإذا سألتَ فاسألِ اللهَ وإذا استعنتَ فاستعِنْ باللهِ، واعلم أن النصرَ مع الصبرِ والفرجَ مع الكربِ وأنَّ معَ العسرِ يسرًا وأنَّ مع العسرِ يسرًا
ابن القيسراني (٥٠٨ هـ)، ذخيرة الحفاظ ٤/١٩٠٩  •  [فيه] نوفل بن سليمان يحدث بأحاديث غير محفوظة ويشبه أن يكون ضعيفا قاله ابن عدي

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்களை அழைத்து நபியவர்கள் "சிறுவனே அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளை நீ பேணிக் கொள் அல்லாஹ் உன்னை பாதுகாப்பான்...
அல்லாஹ்வை விசாலமான -
(மகிழ்ச்சியான) நிலையில் நீ நினைவு கூர்ந்தால் சிரமமான சூழலில் அவன் உன்னை நினைவு கூர்ந்து கவனிப்பான் என்று உபதேசித்தார்கள் .

அதே போல கடந்த காலங்களில் உலகாதாயங்களுக்காக பல கட்சிகளில் பல அமைப்புகளில் நாம் சிதறிக் கிடந்தோம் நம்முடைய எதிரிகள் இனவாதம் பேசி பெரும்பான்மை சமூகத்தின் ஓட்டுக்களை அறுவடை செய்ததாக (பாசாங்கு) காட்டி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து நம்மை பல வகையிலும் நசுக்குவதற்கு வழிகளை ஆராய்ந்து செயல்படுகிறார்கள்...
நம்முடைய தவறை உணர்ந்து பகை மறந்து நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் இல்லையேல் இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் .

அல்லாஹ் திருமறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்

وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَٰزَعُواْ فَتَفۡشَلُواْ وَتَذۡهَبَ رِيحُكُمۡۖ وَٱصۡبِرُوٓاْۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8: 46)

அதேபோல் கடந்த காலங்களில் நம்முடைய  மார்க்க விழுமியங்களை அழிக்க முற்படும் எதிரிகளை எதிர் கொள்ள எந்த வித தயாரிப்புமில்லாததால் நாம் நிறைய இழந்து விட்டோம் நம் சமூகத்தையும் நம் ஷரீஅத் சட்டங்களையும் பாதுகாக்க நாம் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிக மிக அவசியமாகும்.

இவ்விஷயத்தில் அல்லாஹ்வின் உபதேசத்தை எண்ணிப் பாருங்கள்...

وَأَعِدُّواْ لَهُم مَّا ٱسۡتَطَعۡتُم مِّن قُوَّةٖ وَمِن رِّبَاطِ ٱلۡخَيۡلِ تُرۡهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمۡ وَءَاخَرِينَ مِن دُونِهِمۡ لَا تَعۡلَمُونَهُمُ ٱللَّهُ يَعۡلَمُهُمۡۚ وَمَا تُنفِقُواْ مِن شَيۡءٖ فِي سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
(அல்குர்ஆன் 8:60)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இந்த மார்க்கத்தை நம்மிடம் சேர்ப்பிக்க எத்தனையோ போர்க்களங்களில் களமாடியுள்ளார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இந்த சுன்னத் மறைக்கப் படுவதும்மறுக்கப் படுவதும் நம் எதிர் கால சமூகத்தை கோளைகளாக்கி சீரழித்து விடும்.

ஹதீஸ் ஷரீஃபில் வருகிறது

[عن أبي هريرة:] الجهادُ ماضٍ مع البرِّ والفاجرِ
الشوكاني (١٢٥٥ هـ)، نيل الأوطار ٨/٣١  •  لا بأس بإسناده إلا أنه من رواية مكحول عن أبي هريرة ولم يسمع منه  •  أخرجه أبو داود (٢٥٣٣ )
"அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக  நல்லவரோடும் தீயவரோடும் போராடுவது கட்டாயமாகும்" (நூல்: அபூதாவூத்)
அனஸ் ரலி அவர்களின் வேறு அறிவிப்பில் மார்க்கத்திற்காக போராடுவது கியாமத் நாள் வரை கட்டாயமாக இருக்கிறது" என்றும் வந்துள்ளது.

தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்துக் கொள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டமே நமக்கு வழங்கியுள்ளது. ஜிஹாது கடமையாக்கப்பட்டது மார்க்கத்தை பாதுகாப்பதற்குத் தான் அது நமக்கு மிகவும் அவசியம்.

எனவே வருங்காலத்தில் நம்முடைய நடைமுறைகளை சீர்திருத்திக் கொள்ளாமல் கடந்த கால நிகழ்வுகளிலிருந்து படிப்பினை பெறாமல் நமது எதிர்காலம் சிறக்காது.

எந்த சமூகம் தமது முன்னோர்களின் வரலாறுகளை அறிந்திருக்கவில்லையோ அவர்களை அழிப்பது இலகுவானது. நம் முன்னோர்களான ஸஹாபாக்களின்  வரலாறுகளை நாமும் படித்து நமது வருங்கால சமுதாயத்திற்கும் போதித்து அவர்களை வார்த்தெடுப்பதின் மூலம் நாம் வெற்றி பெறுவோம்...

وَلَا تَهِنُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
(அல்குர்ஆன் 3: 139)

உஹது போரில் தோல்வியடைந்த சஹாபாக்களுக்கு இறைவனின் ஆறுதல்...

எனவே முஃமின்களுக்கு சோதனைகள் தற்காலிகமானது தான் நாம் தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறிச் செல்வோம்.

வெற்றி நமதே...
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்...


3656 حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ ، وَأَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالُوا : حَدَّثَنَا حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَبِي أَسْمَاءَ ، عَنْ ثَوْبَانَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ ، وَلَيْسَ فِي حَدِيثِ قُتَيْبَةَ : وَهُمْ كَذَلِكَ

என் சமூகத்தில் ஒரு கூட்டம் உண்மையின் மீது நிலைத்திருப்பார்கள் கியாம நாள் வரையில்  அவர்களின் எதிர்ப்பாளர்கள் அவர்களை ஒன்றும் செய்திட முடியாது...
(நூல்: முஸ்லிம்)

அல்லாஹ் அவனது அளவற்ற கருணையால் முஸ்லிம்களை ஈருலகிலும் பாதுகாப்பானாக ஆமீன்.
و آخر دعوانا ان الحمد لله رب العالمين.


வெள்ளி, 7 ஜூன், 2019

நன்றி மறவேல்.


بسم الله الرحمن الرحيم

நன்றி மறவேல்.
********************
قال الله تعالي : يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ .
قال النبي صلي الله عليه وسلم : أَفَلَا أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا.

அல்லாஹ் பலருக்கும் கொடுக்காத பலநல்ல பாக்கியங்களை நமக்கு அருளினான்.
எத்தனையோ பேர் ரமலான் அடையாமல் அதற்கு முன்பே இறந்து விட்டார்கள் . அல்லது நல்அமல் செய்யும் பாக்கியம் இழந்தார்கள்.


ஆனால் நமக்கு அல்லாஹ் ரமலான் வரை உயிர் வாழக் கூடிய பாக்கியத்தையும் அதில் நல்அமல் செய்யக்கூடிய பாக்கியத்தையும் தந்தான்.

இதற்காக வேண்டி நாம் நன்றி செலுத்த வேண்டும் . நன்றி செய்தால் மேலும் பன்னூறு பாக்கியங்களையும் பல ரமலானையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்து இரண்டு உலகிலும் மகிழ்ச்சியான வாழ்வை தருவான்.


1 . @@@@@@@


وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ‌ وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِىْ لَشَدِيْدٌ‏

நீங்கள் நன்றி செலுத்தினால் (என் அருளை/வளத்தை மேலும்) உங்களுக்கு அதிகமாக தருவேன். நீங்கள் (நன்றி கெட்டு) மாறுசெய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று உங்கள் இறைவன அறிக்கையிட்டதையும் (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள் (அல்குர்ஆன் : 14:7)

நன்றி செய்வது என்றால் ரமலானில் செய்ததைப் போல அதை விடவும் சிறந்த முறையில் தொழுகை / நோன்பு / தர்மம் போன்ற வணக்கத்தை தொடர்ந்து செய்யனும்.
அது போல் தொழுகையை தவற விடுவது / பேணி தொழுகாமலிருப்பது பொய் கோள்சொல்வது / அந்நிய ஆண்/பெண் தவறான தொடர்பு (அது நேரடியாக நெட் மூலமாக) போன்ற பாவத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.


2 . @@@@@@@


يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ .

அல்லாஹ் உங்களுக்கு இலேசானதையே நாடுகிறான்மேலும், அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை.
(அல்குர்ஆன் : 2:185)

வருஷம் 12மாதமும் நோன்பு வேண்டாம். ஒரே ஒரு மாசம் மட்டும் போதும். கூடுதலாக மாதத்தில் 3நோன்பு & ஷவ்வால் ஆறு நோன்பு பிடிக்கலாம்.

தராவீஹ் & இரவுத் தொழுகை என பலமணி நேரம் கால் கடுக்க தொழுதீர்கள் ரமலானில்.

இப்போது முன் பின் சுன்னத் தொழுகை. தஹஜ்ஜுத்.லுஹா 2/4 ரகஅத் தொழுகலாம்.

ரமலான் பகலில் ஹலாலானதையும் சாப்பிடாமல் குடிக்காமல் இருந்தோம்.

இப்போதும் ஹராமை மட்டும் தவிர்க்க வேண்டும்.
புறம்/கோள்மூட்டுவது/அந்நிய ஆண்/பெண்களுடன் நெட் மூலமாக / நேரடியாவோ தொடர்பு இது போன்தை தவிர்க்க வேண்டும்.


3 . @@@@@@@


நன்றிக்காக அதிகம் இபாதத் செய்வார்கள்.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ ، فَقَالَتْ عَائِشَةُ : لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ ، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ، قَالَ : أَفَلَا أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا    ، فَلَمَّا كَثُرَ لَحْمُهُ صَلَّى جَالِسًا ، فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَقَرَأَ ، ثُمَّ رَكَعَ .
وفي رواية مسلم ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ، ﻗﺎﻟﺖ: «ﻟﻤﺎ ﺑﺪﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﺛﻘﻞ، ﻛﺎﻥ ﺃﻛﺜﺮ ﺻﻼﺗﻪ ﺟﺎﻟﺴﺎ

ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். எனவே நான், 'ஏன் இப்படிச் செய்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?' என்று கேட்டேன். அவர்கள், 'நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா?' என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி(ஸல்) அவர்களின் உடல் சதை போட்ட போது (அதாவது முதுமை அடைந்த போது) அமர்ந்து தொழுதார்கள். 'ருகூஉ' செய்ய நினைக்கும்போது, எழுந்து (சிறிதுநேரம்) ஓதுவார்கள். பிறகு, 'ருகூஉ' செய்வார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4837.
அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை.


ஸஹாபாக்களும் அதிகம் இபாதத் செய்வார்கள்.

عَنْ أَبِي عُثْمَانَ ، قَالَ : تَضَيَّفْتُ أَبَا هُرَيْرَةَ سَبْعًا فَكَانَ هُوَ وَامْرَأَتُهُ وَخَادِمُهُ يَعْتَقِبُونَ اللَّيْلَ أَثْلَاثًا ، يُصَلِّي هَذَا ثُمَّ يُوقِظُ هَذَا ،

அபூ உஸ்மான்(ரலி) கூறினார்
நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் ஏழு இரவுகள் விருந்தாளியாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர்களின் துணைவியாரும் அவர்களின் பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொண்டு முறைவைத்து எழுந்து தொழுது வந்தார்கள். முதலில் ஒருவர் தொழுவார்; பிறகு அவர் மற்றொருவரை எழுப்பிவிடுவார். (அவர் தொழுது முடித்தவுடன் இன்னொரு வரை தொழுகைக்கு எழுப்புவார்.
ஸஹீஹ் புகாரி : 5441.
அத்தியாயம் : 70. உணவு வகைகள்


4 . @@@@@@@


ஜகாத்/சதகா-தர்மம் ரொம்ப அதிகமா கொடுத்தோம்.
இப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கலாம் அது கொஞ்மாக இருந்தாலும்.

இதோ சஹாபாக்கள் ரமலான் விடைபெற்ற பின்பும் கூட எந்த அளவுக்கு அதிகமாக சதகா செய்துள்ளார்கள்.


5883 - ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ، ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ «ﺻﻠﻰ ﻳﻮﻡ اﻟﻌﻴﺪ ﺭﻛﻌﺘﻴﻦ، ﻟﻢ ﻳﺼﻞ ﻗﺒﻠﻬﺎ ﻭﻻ ﺑﻌﺪﻫﺎ، ﺛﻢ ﺃﺗﻰ اﻟﻨﺴﺎء ﻭﻣﻌﻪ ﺑﻼﻝ، ﻓﺄﻣﺮﻫﻦ ﺑﺎﻟﺼﺪﻗﺔ، ﻓﺠﻌﻠﺖ اﻟﻤﺮﺃﺓ ﺗﻠﻘﻲ ﻗﺮﻃﻬﺎ .

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(நோன்புப்) பெருநாளில் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி அவர்கள் (கூடுதலாக) எதையும் தொழவில்லை. பிறகு பிலால்(ரலி) அவர்களுடன் பெண்களிடம் (மகளிர் பகுதிக்கு) வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே, ஒரு பெண் தன்னுடைய கம்மலை(க் கழற்றி)ப் போடலானார்.
ஸஹீஹ் புகாரி : 5883.
அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்

நாம் சதகா கொடுக்காவிட்டாலும் கொடுப்பவர் கொடுக்கும் போது கொடுக்காதீங்க / இவ்வளவு வேண்டாம் என தடுக்கிறோமே.


5 . @@@@@@@


சீசனில் மட்டும் என்பது கூடாது .

6464 - ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺃﻥ ﺃﺣﺐ اﻷﻋﻤﺎﻝ ﺇﻟﻰ اﻟﻠﻪ ﺃﺩﻭﻣﻬﺎ ﻭﺇﻥ ﻗﻞ .

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6464.
அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்

சீசனில் மட்டுமே காணப்படும் மழை / மாம்பழம்/குற்றாலம் அருவி போல் நாம் கூடாது.

ரம்லானுக்கு பின்பும் ஐந்து நேர தொழுகைநபில் & தர்மம் யாவையும் தொடர்ந்து செய்யனும்.


6 . @@@@@@@


ரமலானுக்கு பின்பும் நோன்பு உண்டு.


ரமலானைத் தொடர்ந்து அதில்  களாவான  நோன்பு / ஷவ்வால் ஆறு நோன்பு வைக்கனும் .
ஆறு நோன்பையும் தொடர்பாடியாக வைப்பது கட்டாயமல்ல. வாரத்தில் ஒன்று இரண்டு வீதம் வைக்கலாம்.

من رياض الصالحين  1254.
ﻋﻦ ﺃﺑﻲ ﺃﻳﻮﺏ اﻷﻧﺼﺎﺭﻱ ﺃﻧﻪ ﺣﺪﺛﻪ ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﻣﻦ ﺻﺎﻡ ﺭﻣﻀﺎﻥ ﺛﻢ ﺃﺗﺒﻌﻪ ﺳﺘﺎ ﻣﻦ ﺷﻮاﻝ ﻛﺎﻥ ﻛﺼﻴﺎﻡ اﻟﺪﻫﺮ» . ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2159.
அத்தியாயம் : 13. நோன்பு .


7 . @@@@@@@


அமல் கபூல் ஆகுவதற்காக துஆ செய்யனும்.

ﺇﻧﻤﺎ ﻳﺘﻘﺒﻞ اﻟﻠﻪ ﻣﻦ اﻟﻤﺘﻘﻴﻦ
அல்லாஹ் யார் அவனை பயந்து நடக்கிறார்களோ அந்த நல்லவர்களுடைய அமல்களை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான் .


எனவே தான் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் காபாவை புதுப்பித்து கட்டுமான பணியை முடித்த பின்னர் அல்லாஹ்வே கபூல்-செய்வயாக என துஆ செய்து வந்தார்கள்.

وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது "எங்களுடைய இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்களுடைய இந்த பிரார்த்தனையைச்) செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய்.
(அல்குர்ஆ  2:127)


பல நல்லடியாகள் ஆறு மாதத்திற்கு முன்பே துஆ செய்ய  தொடங்கிவிடுவார்கள் அல்லாஹ்வே நாங்கள் ரமலானை அடைய வேண்டும் அதில் நல்அமல் செய்ய வேண்டும்.
அடுத்து வரக்கூடிய ஆறு மாதங்களில் அல்லாஹ்வே நாங்கள் ரமளானில் செய்த அமல்கள் ஏற்றுக் கொள்வாயாக என்பதாக துவா செய்து கொண்டே இருப்பார்கள்.


ரமலானை சரியாக பயன்படுத்தி அமல் செய்துவிட்டோம் என்று மன திருப்தி அடைவது நல்லது அல்ல . மாறாக அதில் குற்றம் குறைகள் இருந்தாலும் அதை மன்னித்து கபூலாக்கு என துஆ செய்து கொண்டே இருக்க வேண்டும்.


8 . @@@@@@@


நல்அமல் செய்வதை விட அது அழிந்து விடாமல் பாதுகாப்பது முக்கியம்.

وَقَدِمْنَاۤ اِلٰى مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا‏
(இம்மையில்) அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நாம் நோக்கினால் (அதில் யாதொரு நன்மையும் இல்லாததனால்) பறக்கும் தூசிகளைப் போல் அவைகளை நாம் ஆக்கிவிடுவோம்.
(அல்குர்ஆன் : 25:23).


ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗﺎﻝ: «ﺃﺗﺪﺭﻭﻥ ﻣﺎ اﻟﻤﻔﻠﺲ؟» ﻗﺎﻟﻮا: اﻟﻤﻔﻠﺲ ﻓﻴﻨﺎ ﻣﻦ ﻻ ﺩﺭﻫﻢ ﻟﻪ ﻭﻻ ﻣﺘﺎﻉ، ﻓﻘﺎﻝ: «ﺇﻥ اﻟﻤﻔﻠﺲ ﻣﻦ ﺃﻣﺘﻲ ﻳﺄﺗﻲ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﺑﺼﻼﺓ، ﻭﺻﻴﺎﻡ، ﻭﺯﻛﺎﺓ، ﻭﻳﺄﺗﻲ ﻗﺪ ﺷﺘﻢ ﻫﺬا، ﻭﻗﺬﻑ ﻫﺬا، ﻭﺃﻛﻞ ﻣﺎﻝ ﻫﺬا، ﻭﺳﻔﻚ ﺩﻡ ﻫﺬا، ﻭﺿﺮﺏ ﻫﺬا، ﻓﻴﻌﻄﻰ ﻫﺬا ﻣﻦ ﺣﺴﻨﺎﺗﻪ، ﻭﻫﺬا ﻣﻦ ﺣﺴﻨﺎﺗﻪ، ﻓﺈﻥ ﻓﻨﻴﺖ ﺣﺴﻨﺎﺗﻪ ﻗﺒﻞ ﺃﻥ ﻳﻘﻀﻰ ﻣﺎ ﻋﻠﻴﻪ ﺃﺧﺬ ﻣﻦ ﺧﻄﺎﻳﺎﻫﻢ ﻓﻄﺮﺣﺖ ﻋﻠﻴﻪ، ﺛﻢ ﻃﺮﺡ ﻓﻲ اﻟﻨﺎﺭ»

5037. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம் "المفلس முfப்லிஸ்-) திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்;இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் .


படிப்பினை : நல்அமல் செய்ததை விட அதை அழிந்திடாமல் பாதுகாப்பது கட்டாயம்.
,
எதைச் செய்தாலும் அல்லாஹ்வுடைய திருப்திக்காக மட்டும் செய்ய வேண்டும் வேறு எந்த உள்நோக்கத்திற்காக / பாராட்டு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வது கூடாது . அது மட்டுமில்லாமல் படைப்பினங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் சரியாக செய்தால் மட்டுமே அமல்கள் பாதுகாக்கப்படும் . கைகொடுக்கும். இல்லை என்றால் நாம் செய்தும் அது பலனற்றதாக ஆகிவிடும் . எனவே நாம் எவருடைய உரிமையை பறித்து இருந்தால் .தக்க காரணமின்றி தண்டித்து இருந்தால் . கடன் வாங்கிக் கொடுக்காமலிருந்தால் .  மனவருத்தத்தை நாம் வாங்கி இருந்தால் இதுவெல்லாம் நாம் செய்த அமல் பலன் தராமல் போவதற்கு காரணமாக ஆகிவிடும்.


எனவே நன்றி செய்யும் பொருட்டு தொடர்ந்து நல்அமல் செய்யக் கூடியவர்களாகவும் பாவமான காரியத்தில் முற்றிலும் தவிர்ந்து நடக்க கூடியவர்களாகவும்.  பிறருடைய உரிமைகளை சரியான முறையில் நிறைவேற்ற கூடியவர்களாக நம்மை ஆக்கி வைப்பானாக . நம்மையும் நம்முடைய நல்அமல்களையும் கபூலாக்குானாக