بسم الله الرحمن الرحيم
நன்றி மறவேல்.
********************
قال الله تعالي : يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ
بِکُمُ الْعُسْرَ .
قال النبي صلي الله عليه وسلم : أَفَلَا أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا
شَكُورًا.
அல்லாஹ் பலருக்கும் கொடுக்காத பலநல்ல பாக்கியங்களை நமக்கு அருளினான்.
எத்தனையோ பேர் ரமலான் அடையாமல் அதற்கு முன்பே இறந்து விட்டார்கள் . அல்லது
நல்அமல் செய்யும் பாக்கியம் இழந்தார்கள்.
ஆனால் நமக்கு அல்லாஹ் ரமலான் வரை உயிர் வாழக் கூடிய பாக்கியத்தையும் அதில்
நல்அமல் செய்யக்கூடிய பாக்கியத்தையும் தந்தான்.
இதற்காக வேண்டி நாம் நன்றி செலுத்த வேண்டும் . நன்றி செய்தால் மேலும் பன்னூறு
பாக்கியங்களையும் பல ரமலானையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்து இரண்டு உலகிலும்
மகிழ்ச்சியான வாழ்வை தருவான்.
1 . @@@@@@@
وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ
وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِىْ لَشَدِيْدٌ
நீங்கள் நன்றி செலுத்தினால் (என் அருளை/வளத்தை மேலும்) உங்களுக்கு அதிகமாக
தருவேன். நீங்கள் (நன்றி கெட்டு) மாறுசெய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக்
கொடியதாக இருக்கும் என்று உங்கள் இறைவன அறிக்கையிட்டதையும் (நபியே!) நீங்கள்
(அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள் (அல்குர்ஆன் : 14:7)
நன்றி செய்வது என்றால் ரமலானில் செய்ததைப் போல அதை விடவும் சிறந்த முறையில்
தொழுகை / நோன்பு / தர்மம் போன்ற வணக்கத்தை தொடர்ந்து செய்யனும்.
அது போல் தொழுகையை தவற விடுவது / பேணி தொழுகாமலிருப்பது பொய் கோள்சொல்வது /
அந்நிய ஆண்/பெண் தவறான தொடர்பு (அது நேரடியாக நெட் மூலமாக) போன்ற பாவத்திலிருந்து
விலகி இருக்க வேண்டும்.
2 . @@@@@@@
يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ .
அல்லாஹ் உங்களுக்கு இலேசானதையே நாடுகிறான்; மேலும், அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை.
(அல்குர்ஆன் : 2:185)
வருஷம் 12மாதமும் நோன்பு வேண்டாம். ஒரே ஒரு மாசம் மட்டும்
போதும். கூடுதலாக மாதத்தில் 3நோன்பு & ஷவ்வால் ஆறு நோன்பு பிடிக்கலாம்.
தராவீஹ் & இரவுத் தொழுகை என பலமணி நேரம் கால் கடுக்க
தொழுதீர்கள் ரமலானில்.
இப்போது முன் பின் சுன்னத் தொழுகை. தஹஜ்ஜுத்.லுஹா 2/4 ரகஅத் தொழுகலாம்.
ரமலான் பகலில் ஹலாலானதையும் சாப்பிடாமல் குடிக்காமல் இருந்தோம்.
இப்போதும் ஹராமை மட்டும் தவிர்க்க வேண்டும்.
புறம்/கோள்மூட்டுவது/அந்நிய ஆண்/பெண்களுடன் நெட் மூலமாக / நேரடியாவோ தொடர்பு
இது போன்தை தவிர்க்க வேண்டும்.
3 . @@@@@@@
நன்றிக்காக அதிகம் இபாதத் செய்வார்கள்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ نَبِيَّ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى
تَتَفَطَّرَ قَدَمَاهُ ، فَقَالَتْ عَائِشَةُ : لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ
اللَّهِ ، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا
تَأَخَّرَ ، قَالَ : أَفَلَا أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا
، فَلَمَّا كَثُرَ لَحْمُهُ صَلَّى جَالِسًا ، فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ
قَامَ فَقَرَأَ ، ثُمَّ رَكَعَ .
وفي رواية مسلم ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ، ﻗﺎﻟﺖ: «ﻟﻤﺎ ﺑﺪﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ، ﻭﺛﻘﻞ، ﻛﺎﻥ ﺃﻛﺜﺮ ﺻﻼﺗﻪ ﺟﺎﻟﺴﺎ
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று
வணங்குவார்கள். எனவே நான், 'ஏன் இப்படிச் செய்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே! தங்களின் முந்தைய பிந்தைய
தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?' என்று கேட்டேன். அவர்கள், 'நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா?' என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக்
காலத்தில்) நபி(ஸல்) அவர்களின் உடல் சதை போட்ட போது (அதாவது முதுமை அடைந்த போது)
அமர்ந்து தொழுதார்கள். 'ருகூஉ' செய்ய நினைக்கும்போது, எழுந்து (சிறிதுநேரம்) ஓதுவார்கள். பிறகு, 'ருகூஉ' செய்வார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4837.
அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை.
ஸஹாபாக்களும் அதிகம் இபாதத் செய்வார்கள்.
عَنْ أَبِي عُثْمَانَ ، قَالَ : تَضَيَّفْتُ أَبَا هُرَيْرَةَ سَبْعًا
فَكَانَ هُوَ وَامْرَأَتُهُ وَخَادِمُهُ يَعْتَقِبُونَ اللَّيْلَ أَثْلَاثًا ،
يُصَلِّي هَذَا ثُمَّ يُوقِظُ هَذَا ،
அபூ உஸ்மான்(ரலி) கூறினார்
நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் ஏழு இரவுகள் விருந்தாளியாகத்
தங்கியிருந்தேன். அவர்களும் அவர்களின் துணைவியாரும் அவர்களின் பணியாளும் இரவை
மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொண்டு முறைவைத்து எழுந்து தொழுது வந்தார்கள்.
முதலில் ஒருவர் தொழுவார்; பிறகு அவர் மற்றொருவரை எழுப்பிவிடுவார். (அவர்
தொழுது முடித்தவுடன் இன்னொரு வரை தொழுகைக்கு எழுப்புவார்.
ஸஹீஹ் புகாரி : 5441.
அத்தியாயம் : 70. உணவு வகைகள்
4 . @@@@@@@
ஜகாத்/சதகா-தர்மம் ரொம்ப அதிகமா கொடுத்தோம்.
இப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கலாம் அது கொஞ்மாக இருந்தாலும்.
இதோ சஹாபாக்கள் ரமலான் விடைபெற்ற பின்பும் கூட எந்த அளவுக்கு அதிகமாக சதகா
செய்துள்ளார்கள்.
5883 - ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ، ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ
«ﺻﻠﻰ ﻳﻮﻡ اﻟﻌﻴﺪ ﺭﻛﻌﺘﻴﻦ، ﻟﻢ ﻳﺼﻞ ﻗﺒﻠﻬﺎ ﻭﻻ ﺑﻌﺪﻫﺎ، ﺛﻢ ﺃﺗﻰ اﻟﻨﺴﺎء ﻭﻣﻌﻪ ﺑﻼﻝ، ﻓﺄﻣﺮﻫﻦ
ﺑﺎﻟﺼﺪﻗﺔ، ﻓﺠﻌﻠﺖ اﻟﻤﺮﺃﺓ ﺗﻠﻘﻲ ﻗﺮﻃﻬﺎ .
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(நோன்புப்) பெருநாளில் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள்.
அதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி அவர்கள் (கூடுதலாக) எதையும் தொழவில்லை.
பிறகு பிலால்(ரலி) அவர்களுடன் பெண்களிடம் (மகளிர் பகுதிக்கு) வந்து தர்மம்
செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே, ஒரு பெண் தன்னுடைய கம்மலை(க் கழற்றி)ப் போடலானார்.
ஸஹீஹ் புகாரி : 5883.
அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்
நாம் சதகா கொடுக்காவிட்டாலும் கொடுப்பவர் கொடுக்கும் போது கொடுக்காதீங்க /
இவ்வளவு வேண்டாம் என தடுக்கிறோமே.
5 . @@@@@@@
சீசனில் மட்டும் என்பது கூடாது .
6464 - ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺃﻥ ﺃﺣﺐ اﻷﻋﻤﺎﻝ
ﺇﻟﻰ اﻟﻠﻪ ﺃﺩﻭﻣﻬﺎ ﻭﺇﻥ ﻗﻞ .
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும்
குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே
ஆகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6464.
அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்
சீசனில் மட்டுமே காணப்படும் மழை / மாம்பழம்/குற்றாலம் அருவி போல் நாம் கூடாது.
ரம்லானுக்கு பின்பும் ஐந்து நேர தொழுகை & நபில் & தர்மம் யாவையும் தொடர்ந்து செய்யனும்.
6 . @@@@@@@
ரமலானுக்கு பின்பும் நோன்பு உண்டு.
ரமலானைத் தொடர்ந்து அதில் களாவான நோன்பு / ஷவ்வால் ஆறு நோன்பு வைக்கனும் .
ஆறு நோன்பையும் தொடர்பாடியாக வைப்பது கட்டாயமல்ல. வாரத்தில் ஒன்று இரண்டு
வீதம் வைக்கலாம்.
من رياض الصالحين 1254.
ﻋﻦ ﺃﺑﻲ ﺃﻳﻮﺏ اﻷﻧﺼﺎﺭﻱ ﺃﻧﻪ ﺣﺪﺛﻪ ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ:
«ﻣﻦ ﺻﺎﻡ ﺭﻣﻀﺎﻥ ﺛﻢ ﺃﺗﺒﻌﻪ ﺳﺘﺎ ﻣﻦ ﺷﻮاﻝ ﻛﺎﻥ ﻛﺼﻴﺎﻡ اﻟﺪﻫﺮ» . ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு
நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2159.
அத்தியாயம் : 13. நோன்பு .
7 . @@@@@@@
அமல் கபூல் ஆகுவதற்காக துஆ செய்யனும்.
ﺇﻧﻤﺎ ﻳﺘﻘﺒﻞ اﻟﻠﻪ ﻣﻦ اﻟﻤﺘﻘﻴﻦ
அல்லாஹ் யார் அவனை பயந்து நடக்கிறார்களோ அந்த நல்லவர்களுடைய அமல்களை மட்டுமே
ஏற்றுக் கொள்கிறான் .
எனவே தான் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் காபாவை புதுப்பித்து கட்டுமான பணியை
முடித்த பின்னர் அல்லாஹ்வே கபூல்-செய்வயாக என துஆ செய்து வந்தார்கள்.
وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ
وَاِسْمٰعِيْلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ
الْعَلِيْمُ
இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை
உயர்த்தியபொழுது "எங்களுடைய இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை)
எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்களுடைய இந்த
பிரார்த்தனையைச்) செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய்.
(அல்குர்ஆ 2:127)
பல நல்லடியாகள் ஆறு மாதத்திற்கு முன்பே துஆ செய்ய தொடங்கிவிடுவார்கள் அல்லாஹ்வே நாங்கள் ரமலானை
அடைய வேண்டும் அதில் நல்அமல் செய்ய வேண்டும்.
அடுத்து வரக்கூடிய ஆறு மாதங்களில் அல்லாஹ்வே நாங்கள் ரமளானில் செய்த அமல்கள்
ஏற்றுக் கொள்வாயாக என்பதாக துவா செய்து கொண்டே இருப்பார்கள்.
ரமலானை சரியாக பயன்படுத்தி அமல் செய்துவிட்டோம் என்று மன திருப்தி அடைவது
நல்லது அல்ல . மாறாக அதில் குற்றம் குறைகள் இருந்தாலும் அதை மன்னித்து கபூலாக்கு
என துஆ செய்து கொண்டே இருக்க வேண்டும்.
8 . @@@@@@@
நல்அமல் செய்வதை விட அது அழிந்து விடாமல் பாதுகாப்பது முக்கியம்.
وَقَدِمْنَاۤ اِلٰى مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً
مَّنْثُوْرًا
(இம்மையில்) அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நாம் நோக்கினால் (அதில்
யாதொரு நன்மையும் இல்லாததனால்) பறக்கும் தூசிகளைப் போல் அவைகளை நாம்
ஆக்கிவிடுவோம்.
(அல்குர்ஆன் : 25:23).
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗﺎﻝ: «ﺃﺗﺪﺭﻭﻥ ﻣﺎ
اﻟﻤﻔﻠﺲ؟» ﻗﺎﻟﻮا: اﻟﻤﻔﻠﺲ ﻓﻴﻨﺎ ﻣﻦ ﻻ ﺩﺭﻫﻢ ﻟﻪ ﻭﻻ ﻣﺘﺎﻉ، ﻓﻘﺎﻝ: «ﺇﻥ اﻟﻤﻔﻠﺲ ﻣﻦ ﺃﻣﺘﻲ ﻳﺄﺗﻲ
ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﺑﺼﻼﺓ، ﻭﺻﻴﺎﻡ، ﻭﺯﻛﺎﺓ، ﻭﻳﺄﺗﻲ ﻗﺪ ﺷﺘﻢ ﻫﺬا، ﻭﻗﺬﻑ ﻫﺬا، ﻭﺃﻛﻞ ﻣﺎﻝ ﻫﺬا، ﻭﺳﻔﻚ
ﺩﻡ ﻫﺬا، ﻭﺿﺮﺏ ﻫﺬا، ﻓﻴﻌﻄﻰ ﻫﺬا ﻣﻦ ﺣﺴﻨﺎﺗﻪ، ﻭﻫﺬا ﻣﻦ ﺣﺴﻨﺎﺗﻪ، ﻓﺈﻥ ﻓﻨﻴﺖ ﺣﺴﻨﺎﺗﻪ ﻗﺒﻞ ﺃﻥ
ﻳﻘﻀﻰ ﻣﺎ ﻋﻠﻴﻪ ﺃﺧﺬ ﻣﻦ ﺧﻄﺎﻳﺎﻫﻢ ﻓﻄﺮﺣﺖ ﻋﻠﻴﻪ، ﺛﻢ ﻃﺮﺡ ﻓﻲ اﻟﻨﺎﺭ»
5037. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம் "المفلس முfப்லிஸ்-) திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ
இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார்.
ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்)
புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார்.
ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக்
கொடுக்கப்படும்;இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய
நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின்
பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே
திவாலாகிப்போனவர்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் .
படிப்பினை : நல்அமல் செய்ததை விட அதை அழிந்திடாமல் பாதுகாப்பது கட்டாயம்.
,
எதைச் செய்தாலும் அல்லாஹ்வுடைய திருப்திக்காக மட்டும் செய்ய வேண்டும் வேறு
எந்த உள்நோக்கத்திற்காக / பாராட்டு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வது கூடாது .
அது மட்டுமில்லாமல் படைப்பினங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் சரியாக செய்தால்
மட்டுமே அமல்கள் பாதுகாக்கப்படும் . கைகொடுக்கும். இல்லை என்றால் நாம் செய்தும்
அது பலனற்றதாக ஆகிவிடும் . எனவே நாம் எவருடைய உரிமையை பறித்து இருந்தால் .தக்க
காரணமின்றி தண்டித்து இருந்தால் . கடன் வாங்கிக் கொடுக்காமலிருந்தால் . மனவருத்தத்தை நாம் வாங்கி இருந்தால் இதுவெல்லாம்
நாம் செய்த அமல் பலன் தராமல் போவதற்கு காரணமாக ஆகிவிடும்.
எனவே நன்றி செய்யும் பொருட்டு தொடர்ந்து நல்அமல் செய்யக் கூடியவர்களாகவும்
பாவமான காரியத்தில் முற்றிலும் தவிர்ந்து நடக்க கூடியவர்களாகவும். பிறருடைய உரிமைகளை சரியான முறையில் நிறைவேற்ற
கூடியவர்களாக நம்மை ஆக்கி வைப்பானாக . நம்மையும் நம்முடைய நல்அமல்களையும் கபூலாக்குானாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.