بسم الله الرحمن الرحيم
ரமலான் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.
قال الله تعالي : لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ
مِنْ أَلْفِ شَهْرٍ (3)
قال النبي صلي الله عليه وسلم : وَيُنَادِي
مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ
நம்முடைய பிரதான இலட்சியமான சுவனபதியை சென்று
அடைவதற்காக சக்திவாய்ந்த பிரமாண்டமான வாகனம் தேவை . அதுவே ரமலான் மாதமாகும் . அதை
அடைவதற்கான நல்ல பாக்கியத்தை தருவானாக.
ஒரு வெளிநாடு . அது குளுமையான பசுமையான
உல்லாசமான வாழ்க்கைக்கு பொருத்தமான ஒரு நாடு. அங்கு உல்லாசப் பயணம் மேற்கொள்வதற்கு
நாம் திட்டமிட்டுள்ளோம் என்றால் அதற்காக வேண்டி முன் தயாரிப்பான விசா / டிக்கெட் /
உடை / உணவுகள் / அத்தியாவசிய உபயோக பொருட்கள் என தேவையான எல்லா தயாரிப்பும் பல
நாட்களுக்கு முன்பே செய்து விடுவோம் . அங்கு செல்வதற்கான நிச்சயிக்கப்பட்ட நாள் வருவதை
ஆசையோடு காத்திருப்போம் .
அந்த நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக
ஏர்போட்டிற்கு சென்று அடைந்திட வேண்டும். பிளைட்டில் ஏறிய பின்பு வெளியே
அனுமதிக்கப்பட்ட பல காரியங்களும் கூடாது என்பதாக தடை விதிக்கப்படும். வெளியில்
செய்யாத சில காரியங்கள் செய்யும்படி கட்டளையாக இடப்படும் .
இந்த மாதிரி விதிகளை பேணினால் திட்டமிட்ட
அந்த நாட்டை சென்றடைந்து உல்லசிக்க முடியும் .
வெளிநாடு செல்ல (ஆசைப்பட்டு) முன்னேற்பாடுகள்
எதுவும் செய்யாவிட்டால் அல்லது அந்த பயண(வாகன)த்திற்காண விதிமுறைகளை மீறி நடந்தால்
உல்லசிக்க முடியாமல் தடைபட்டு விடுவோம்.
சொர்க்கம் என்ற இந்த உல்லாசமான உலகிற்கு
செல்ல ரமலான் என்ற ஒரு வாகனம்-பிளைட் நமக்குத் தேவை .
இதற்காக வேண்டிய முன்னேற்பாடுகள் முழுமையாக செய்து தீர்க்க வேண்டும் . இந்த
பயணத்தில் பேண வேண்டிய பல சட்ட திட்டங்களை பேணியாக வேண்டும் .
1 . @@@@@@@
பயணத்திற்கான ஏற்பாடுகளை விரைவாக
செய்திடுவோம்.
وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ
رَّبِّكُمْ وَجَنَّةٍ
உங்கள் இறைவனின் மன்னிப்பை பெறுவதற்க்கும் சுவர்க்கத்துக்கும் (உரிய அமல் செய்ய) விரைந்து செல்லுங்கள். (அல்குர்ஆன் : 3:133)
وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ
أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ
நன்மையை விரும்பக்கூடியவனே நன்மையை
செய்ததற்காக முன்னேறிச் செல் . தீமை செய்யக்கூடிய
வனே தீமையை நிறுத்திக் கொள் என (ரமளானில்) ஒரு மலக்கு இவ்வாறு அழைத்துக் கொண்டு
இருப்பார் . என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனபதை அபூ ஹுரைரா ரலி
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் திர்மிதி 682 ல் பதிவாகியுள்ளது
وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا
سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤٮِٕكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا
எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும்
முயற்சியையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அத்தகையவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக)
அங்கீகரிக்கப்படும். (அல்குர்ஆன் : 17:19)
பயணிப்பதற்கான வாய்ப்பு வசதிகள்
தாராளமயமாக்கப்பட்டு எளிமையாக அமைக்கப்பட்டுள்ளன .
أن أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ،
يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَخَلَ
شَهْرُ رَمَضَانَ فُتِّحَتْ أَبْوَابُ السَّمَاءِ، وَغُلِّقَتْ أَبْوَابُ
جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ»
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
'ரமலான் மாதம்
வந்துவிட்டால் வானத்தின் (-சொர்க்கத்தின்) வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின்
வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1899. அத்தியாயம் : 30. நோன்பு
2 . @@@@@@@
அமோகமான அதிரடியான ஆஃபர்கள்
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
(3)
கண்ணியமிக்க (அந்த ஒரு) இரவு ஆயிரம் மாதங்களை
விட மிக்க மேலானதாகும்.(அல்குர்ஆன் : 97:3)
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத்
திரும்பியபோது உம்முஸினான் அல் அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், 'நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?'
என்று
கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி,
'என் கணவரே
காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு
ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1863.
அத்தியாயம் : 28. (இஹ்ராம் அணிந்த
நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்
படிப்பினை : கணவன் அனுமதி மறுக்கிறார்.
சொல்லை மதித்து ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் செல்லாமல் நின்று கொண்டார்கள் இந்த
சஹாபியப் பெண்மணி . இதன் காரணமாக முழு உலகிற்கும் (உம்ரா செய்தாலே ஹஜ்) மிகப்
பெரிய பரிசு கிடைத்தது .
கணவருடைய சொல்லை மறுத்து / எதிராக
செயல்பட்டால் என்ன கிடைக்க வேண்டும் ?
இன்று நம்முடைய சில பெண்கள் அவல நிலை.
தன்னுடைய தாய் வீடு போவது / குழந்தைக்கு
பெயர் வைப்பது / பொண்ணு மாப்பிள்ளை முடிவு செய்வது. இதுபோன்ற பல விஷயங்களிலும்
கணவனுடைய சொல்லுக்கு எதிராக செயல்படும் ஒரு அவல நிலை .
3 . @@@@@@@
ஆஃபர்களை-ரஹ்மத்தை அள்ளிக் கொண்டனர் அன்று . உதறித் தள்ளுகின்னர் இன்று.
عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ:
أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى
قُرَى الأَنْصَارِ: «مَنْ أَصْبَحَ مُفْطِرًا، فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ
وَمَنْ أَصْبَحَ صَائِمًا، فَليَصُمْ»، قَالَتْ: فَكُنَّا نَصُومُهُ بَعْدُ،
وَنُصَوِّمُ صِبْيَانَنَا، وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ العِهْنِ، فَإِذَا
بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ
الإِفْطَارِ
ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி)
அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில்
அன்ஸாரிகளின் கிராமங்களுக்க ஆளனுப்பி, 'யார் நோன்பு
நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய
நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை
அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!' என்று
அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப்
பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள்
(பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள்
பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
ஸஹீஹ் புகாரி : 1960. அத்தியாயம் : 30.
படிப்பினை : கருணையும் ரஹ்மத்தையும் பெற்றுக்
கொள்வதற்காக வேண்டி நோன்பு / நபிலான தொழுகை / தான தர்மம் போன்றதில்
சின்னஞ்சிறார்களை கூட பயிற்றுவித்தார்கள் அதுவும் நபிலான
சுன்னத்தான (ஆஷூரா) நாட்களில் . ஆனால் இன்றோ சிலர்கள் தன்னுடைய பிள்ளைகளை அது
சின்னபுள்ள தான் இப்ப வேண்டாம் என்று தடுக்கும் ஒரு மோசமான சூழ்நிலை .
ஏன் சில பெரியவர்களும் கூட இந்த பாக்கியங்களை
பெற்றுக் கொள்ளாமல் உதாசீனப் படுத்துகின்றனர் செய்கின்றார்கள் . அதுவும் கட்டாய
கடமையான நாட்களில்.
4 . @@@@@@@
துர்ப்பாக்கியவாதிகள்
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ
عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ
رَمَضَانُ فَانْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ
أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ "
قَالَ رِبْعِيٌّ: وَلَا أَعْلَمُهُ إِلَّا قَدْ قَالَ: " أَوْ أَحَدُهُمَا "
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேர்கள் கேவலதிற்கும் தோல்விக்கு
உள்ளாகி விடுவார்கள் . அவர்கள் நரகம் போவார்கள் என்று சொன்னார்கள் .
ஒருவர் அவனிடத்தில் என்னுடைய பெயர்
கூறப்பட்டு என்மீது ஸலவாத் சொல்லாதவன் . இரண்டாவது நபர் ரமலான் மாதம் வந்தும் கூட
பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய அளவுக்கு தன்னுடைய அமலை சீர்படுத்திக் கொள்ளாதவன் .
மூன்றாம் நபர் தன்னுடைய பெற்றோர்கள் வயோதிக-கிளட்டு பருவ நிலயை அடைந்தும்
அவர்களுக்கு உபகாரம் (-துணை/உதவி) செய்யாமல் இருந்தவன் .
ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் 7451 & திர்மிதி. அறிவிப்பாளர் ஆபூ ஹுரைரா ரலி.
இந்த “ஹதீஸ்”க்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு .
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ صَعِدَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِينَ آمِينَ آمِينَ» قِيلَ: يَا
رَسُولَ اللَّهِ، إِنَّكَ حِينَ صَعِدْتَ الْمِنْبَرَ قُلْتَ: آمِينَ آمِينَ
آمِينَ، قَالَ: «إِنَّ جِبْرِيلَ أَتَانِي، فَقَالَ: مَنْ أَدْرَكَ شَهْرَ
رَمَضَانَ......
__________
(1) قال الألباني في صحيحه : هذا حديثٌ
صحيحٌ. وهذا سندٌ حسنٌ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை மிம்பர்
படியில் ஏறும் நேரத்தில் ஆமீன் என மூன்று முறை சொன்னார்கள் காரணம் கேட்டபோது மேலே
சொன்ன மூவரும் நரகம் போகட்டும் என ஜிப்ரீல் அலை துஆ செய்தார்கள் அதற்கு நான் ஆமீன் சொன்னேன் என்பதாக விபரம் தந்தார்கள் .
நூல் இப்னு ஹிப்பான் 907. அறிவிப்பாளர் ஆபூ ஹுரைரா ரலி. ஹதீஸ் ஸஹீஹ் என்ற தரம் என இமாம் அல்பானியும்
கூறியுள்ளார்கள்.
படிப்பினை:
சிலர் நோன்பு வைக்கிறார்கள் .
ஆனால் பர்லான தொழுகையில் கவனம் இல்லை.
நபிலான-சுன்னத்தான தராவீஹ் தொழுகைக்கு ரொம்ப
முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பர்லான பல தொழுகைகளை முற்றிலும் தவற விடுறாங்க .
அல்லது களா ஆக்கி விடுறாங்க .
இவர்களும் இந்த ஹதீஸின் கண்டனத்துக்குள்
வருவாங்க.
சிலர் கல்யாணம் ஆகிவிட்டால் பொண்டாட்டி பின்னாடி போய்டுறாங்க . பெற்றெடுத்த தாயையும் தந்தையும் அனாதைகளாக
விட்டுட்டு போய்டுறாங்க . சிலர் செலவுக்காக சில நயாபைசா தூக்கி எறிந்து
விடுகின்றனர் . வேறு சிலர் பெற்றோருடன் குடியிருந்தாலும் செலவுக்காக பணம்
பொண்டாட்டி(-மருமகள்) இடம் போய் கைநீட்டி வாங்க வேண்டிய அளவுக்கு பெற்றெடுத்த
தாயும் தந்தையும் ஆக்கிடுறாங்க.
5 . @@@@@@@
அமல் / துஆ கபூல் ஆக நிபந்தனை.
சம்பாத்தியம் ஹலாலாக இருந்தால் மட்டும்
போதாது அதை உபயோகிக்கக் கூடிய முறையும் ஹலாலாக இருத்தல்
நிர்பந்தம்.
எனவே ஆண் கரண்டைக்குக் கீழே உடை உடுத்திய
நிலையில் தாடியை சிறைத்த நிலையில் . அது போல பெண் புருவமுடியை எடுத்த நிலையில்
அல்லது ஆடை இருக்கமாகவோ / மெல்லியதாகவோ உள்ள நிலையில் அமல் / துஆ கபூல் ஆகாது.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ
طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ
بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ
الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} وَقَالَ:
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ})).
ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ
إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ
وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ.
1844. அபூஹுரைரா (ரலி)
அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய
தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே!
தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). ”நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து
உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172). பிறகு ஒரு
மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். ”அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த
நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி ”என் இறைவா, என் இறைவா” என்று
பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக
இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக
இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக
இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர்
உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 12. ஜகாத் .
நம் அனைவருக்கும் நல்ல அமல் செய்ய தவ்ஃபீக்
செய்து காபூல் ஆக்குவானாக .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.