வியாழன், 18 ஏப்ரல், 2019

புதுக்கணக்கு


بسم الله الرحمن الرحيم

புதுக்கணக்கு
****************
قال الله تعالى :﴿حم (١) وَالْكِتَابِ الْمُبِينِ (٢) إِنَّا أَنزلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (٣) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ (٤) أَمْرًا مِنْ عِنْدِنَا إِنَّا كُنَّا مُرْسِلِينَ (٥) رَحْمَةً مِنْ رَبِّكَ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (٦)
عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال، قال رسول الله صلى الله عليه وسلم: «إذا كانت لَيْلَةُُ النِّصْفِ من شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فإن اللَّهَ يَنْزِلُ فيها لِغُرُوبِ الشَّمْسِ إلى سَمَاءِ الدُّنْيَا فيقول: ألا من مُسْتَغْفِرٍ لي فَأَغْفِرَ له، ألا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، ألا مبتلى فَأُعَافِيَهُ، ألا كَذَا ألا كذآ حتى يطلع الفجر (رواه ابن ماجة)


ஒவ்வொரு வருடமும் மார்ச் மாத இறுதியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில்  புதுக்கணக்கு போடும் நடைமுறை இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
அகில உலகையும் படைத்து இயக்கி வரும் அல்லாஹுத்தஆலா அவன் படைப்பினங்களுக்கு புதுக்கணக்கு போடும் தினம்தான் ஷஃபான் மாதம் 15 -ஆம் நாளான பராஅத் இரவாகும்.
இன்ஷா அல்லாஹ் வரும் சனிக்கிழமை பராஅத் இரவாக இருப்பதால் அவ்விரவைப்பற்றிய சில குறிப்புகளை இங்கே காண்போம்.

இவ்விரவின் சிறப்பு பற்றி பத்து ஸஹாபாக்கள் அறிவித்துள்ளார்கள். எனவே இது சிறப்பான இரவென்பதில்சந்தேகமில்லை. இவ்விரவில் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலாவது பராஅத் இரவின் சிறப்பு, இரண்டாவது பராஅத் இரவின் அமல்கள்

சிறப்புகள்
+++++++++
இவ்விரவின் சிறப்பு பற்றி நேரடியாக திருக்குர்ஆன் ஆயத்துகள் எதுவுமில்லை. எனினும் சூரா துகானிலுள்ள 3,4,5 ஆயத்துகளை இவ்விரவுடன் சம்பந்தப்படுத்தி திருக்குர்ஆன் விரிவுரையாளர்களுள் சிலர்ஹழ்ரத் இக்ரிமா  (ரலி) மற்றும் சிலர் வாயிலாக அறிவித்துள்ளனர். அதன்படி فيها يفرق كل أمر حكيم என்பதும் இவ்விரவில் நடப்பதாகக்கூறப்பட்டுள்ளது.
தப்ஸீர் ரூஹூல் மஆனியில் ஸனது இல்லாமல் ஹழ்ரத் இப்னு அப்பாஸ்  (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஹதீஸில் ரிஜ்க், ஹயாத்,மவ்த் போன்ற விஷயங்கள் இவ்விரவில் எழுதப்பட்டு (لوح المحفوظ லிலிருந்து பிரித்தெழுதப்பட்டு )லைலத்துல் கத்ர் இரவில் அவற்றை மலக்குகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.இந்தக்கூற்று சரியாக இருந்தால் அப்போது  إنا أنزلناه في ليلة القدر என்ற ஆயத்துக்கும்  إنا أنزلناه في ليلة مباركة என்ற ஆயத்துக்கும் மத்தியில் மேற்கண்டவாறு تطبيق செய்ய முடியும்.  (மஆரிஃபுல் குர்ஆன் 7/756-758)

ஆயத்தின் பொருள்
++++++++++++++++
قال الله تعالى :﴿حم (١) وَالْكِتَابِ الْمُبِينِ (٢) إِنَّا أَنزلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (٣) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ (٤) أَمْرًا مِنْ عِنْدِنَا إِنَّا كُنَّا مُرْسِلِينَ (٥) رَحْمَةً مِنْ رَبِّكَ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (٦)

ஹாமீம். தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் இவ்வேதத்தை பாக்கியமிக்க ஓர் இரவில் இறக்கிவைத்தோம்.நிச்சயமாக நாம் எச்சரிக்கை செய்பவர்களாகவே இருந்து வருகிறோம்.உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் அவ்விரவில்  (மலக்குகளிடம் )பிரித்து ஒப்படைக்கப்படுகிறது.
(அல்குர்ஆன் 44:1-4 )

இவ்விரவின் சிறப்புகளைப் பற்றி வந்துள்ள ஹதீஸ்கள்...
++++++++++++++++++++++++++++++++++
عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال، قال رسول الله صلى الله عليه وسلم: «إذا كانت لَيْلَةُُ النِّصْفِ من شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فإن اللَّهَ يَنْزِلُ فيها لِغُرُوبِ الشَّمْسِ إلى سَمَاءِ الدُّنْيَا فيقول: ألا من مُسْتَغْفِرٍ لي فَأَغْفِرَ له، ألا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، ألا مبتلى فَأُعَافِيَهُ، ألا كَذَا ألا كذآ حتى يطلع الفجر

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கிறேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன்என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள்.                   (நூல் : இப்னுமாஜா)

عَنْ عَائِشَةَ قَالَتْ: " فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ ، فَخَرَجْتُ ، فَإِذَا هُوَ بِالْبَقِيعِ رَافِعٌ رَأْسَهُ إِلَى السَّمَاءِ ، فَقَالَ لِي : ( أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ ؟ ) ، قَالَتْ : قُلْتُ : ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ ، فَقَالَ: ( إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعَرِ غَنَمِ كَلْبٍ)

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் அல்லாஹு தஆலா கடைசி வானத்திற்கு இறங்கி வந்து  (அரபு தேசத்தில் உள்ள)கல்ப் கூட்டத்தாரின் ஆட்டு மந்தையிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவர்களின் பாவங்களை மன்னிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா  (ரலி )அவர்கள் அறிவித்துள்ளார்கள்.       நூல்  (திர்மிதி )
قال رسول الله صلي الله عليه وسلم:
"ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الاعمال الي رب العالمين فأحب أن يرفع عملي وانا صائم" (رواه أبو داود )

மக்கள் பொடுபோக்காக இருக்கும் ரஜபுக்கும் ரமளானுக்கும் மத்தியில் உள்ள மாதம் அது (ஷஃபான்) மக்களின் நல்லமல்கள் இம்மாதத்தில் அகிலங்களின்
இரட்சகனின் பக்கம் உயர்த்தப்படுகிறது எனவே என் நல்லமலும் நான் நோன்பு வைத்த நிலையில் உயர்த்தப்படுவதை விரும்புகிறேன் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல் : அபூதாவூத்)

ஷஃபான் மாதத்தில் நோன்பு தோற்பது ரமலானுக்கு அடுத்து நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு மிகவும் விருப்பமாக இருந்துள்ளது...

அமல்கள்...
++++++++
இவ்விரவில் தொழும்படியான விஷேசமான எந்தத் தொழுகையையும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத்தரவில்லை. எனவே,.    (1) தஸ்பீஹ் நஃபில், தஹஜ்ஜுத் மற்றும் இதர நஃபில் தொழுகைகளை தொழலாம். (2) கழா தொழுகைகள் இருப்பின் அவற்றை நிறைவேற்றலாம்.
(3) துஆ ஏற்கப்படும் இரவாக இருப்பதால் தமக்கும் பிறருக்கும் மரணித்தோருக்கும் துஆ செய்வதும் பாவமன்னிப்பு கேட்பதும் முக்கியம். (4) இவ்விரவில் உறவை முறித்தவர், பெற்றோரை துன்புறுத்துபவர், மதுஅருந்துபவர், விபச்சாரம் செய்பவர் ஆகியோருக்கு மன்னிப்பில்லை என்று ஹதீஸில் வந்துள்ளதால் அப்படிப்பட்டவர்கள் இவ்விரவில் அக்குற்றங்களை விட்டும் தவ்பா செய்துகொள்வது அவசியமாகும். (5) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்விரவில் கப்ரஸ்தான் சென்று துஆச் செய்துள்ளனர் என்று ஹதீஸில் வந்துள்ளதால் முடிந்தால் நாமும் அவ்வாறு செய்யலாம்.ஆனால் அதை கட்டாயமாக கருதக்கூடாது. (6) அடுத்த நாள் பகலில்  ஒரு நோன்பு வைப்பது முஸ்தஹப் ஆகும்.

இந்த இரவிலும் பாவங்கள் மன்னிக்கப் படாதவர்கள்...
********************************************

عن أبي ثعلبة الخشني " اذا كان ليلة النصف من شعبان اطلع الله الي خلقه فيغفر للمؤمنين ويملي للكافرين ويدع أهل الحقد بحقدهم حتي يدعوه (كنز العمال)

அபீ ஸஃலபா ஹூஷனீ அறிவித்தார்கள் " ஷஃபானுடைய பதினைந்தாவது இரவு வந்து விட்டால் அல்லாஹ் தன் படைப்பினங்களுக்கு முன் வந்து முஃமின்களுடைய பாவங்களை மன்னிக்கிறான் நிராகரிப்பாளர்களுக்கு (திருந்த) அவகாசமளிக்கிறான் பொறாமைக் காரர்களை அவர்கள் அதை விடும் வரை (பாவங்களை மன்னிக்காது) விட்டு விடுகிறான்"
(நூல்: கன்ஜூல் உம்மால்)


عن أبي مُوسَى الْأَشْعَرِيِّ عن رسول الله -صلى الله عليه وسلم- قال: «إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ في لَيْلَةِ النِّصْفِ من شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خلقة إلا لِمُشْرِكٍ أو مُشَاحِنٍ»  (رواه أحمد وابن ماجه )

ஹழ்ரத் அபூமூஸா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் அல்லாஹுத்தஆலா தனது அடியார்களில் இணைவைத்தவர்கள் ,பகைமைகொண்டவர்கள் தவிர அனைவரின் பாவங்களையும் மன்னிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.                                                                           (நூல் : அஹ்மத் இப்னுமாஜா)

عن عثمان بن ابي العاص رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم : " اذا كان ليلة النصف من شعبان نادي مناد هل من مستغفر فاغفر له هل من سائل فاعطيه فلا يسئل  احد شيئا إلا أعطي الا زانية بفرجها أو مشرك
(رواه البيهقي في فضائل الاوقات)

உஸ்மான் இப்னு அபில் ஆஸ் ரலி அவர்கள் அறிவித்தார்கள் " ஷஃபானுடைய பதினைந்தாவது இரவு வந்து விட்டால் ஒரு அழைப்பாளர் அழைப்பார் உங்களில் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா அவர்களின் பாவங்களை நான் மன்னிக்கிறேன் உங்களில் (தேவையை) கேட்பவர் உண்டா அவர்களுக்கு நான் வழங்குகிறேன் யாரும்  ஏதும் கேட்பதில்லை (அவைகள்) கொடுக்கப்பட்டே தவிர...
விபச்சாரி தன் தொழிலுக்காக இன்னும்  இணை வைப்பாளன் கேட்பதைத் தவிர...

(நூல் : பைஹகீ)

இவ்விரவின் அமல்கள் பற்றி முந்தைய உலமாக்களின் இருவேறு கருத்துக்கள்

واختلف علماء أهل الشام في صفة إحيائها على قولين:
أحدهما: أنه يستحب إحياؤها جماعة في المساجد كان خالد بن معدان ولقمان بن عامر وغيرهما يلبسون فيها أحسن ثيابهم ويتبخرون ويكتحلون ويقومون في المسجد ليلتهم تلك ووافقهم إسحاق بن راهوية على ذلك وقال في قيامها في المساجد جماعة: ليس ببدعة نقله عنه حرب الكرماني في مسائله.
والثاني: أنه يكره الإجتماع فيها في المساجد للصلاة والقصص والدعاء ولا يكره أن يصلي الرجل فيها لخاصة نفسه وهذا قول الأوزاعي إمام أهل الشام وفقيههم وعالمهم وهذا هو الأقرب إن شاء الله تعالى.
وقد روي عن عمر بن عبد العزيز أنه كتب إلى عامله إلى البصرة عليك بأربع ليال من السنة فإن الله يفرغ فيهن الرحمة إفراغا أول ليلة من رجب وليلة النصف من شعبان وليلة الفطر وليلة الأضحى وفي صحته عنه نظر.
وقال الشافعي رضي الله عنه: بلغنا أن الدعاء يستجاب في خمس ليال: ليلة الجمعة والعيدين وأول رجب ونصف شعبان قال: وأستحب كل ما حكيت في هذه الليالي ولا يعرف للإمام أحمد كلام في ليلة نصف شعبان ويتخرج في استحباب.

ஷாம் தேசத்து உலமாக்களில் சிலர்கள் இந்த இரவில் பள்ளியில் கூடி அமல் செய்வதை மக்ரூஹ் என்றும் வேறு சில உலமாக்கள் முஸ்தஹப் என்றும் சொல்கிறார்கள்.  என்கினும் தனித்து அமல் செய்வதில் உலமாக்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமைகள் ஏதுமில்லை.  எனவே அமல்கள் குறைந்து போன இக்காலத்தில் மக்களுக்கு இவ்விரவின் சிறப்புகளை எடுத்துக் கூறி ஆர்வப் படுத்துவது அவசியமாகும்.

ஹதீஸ் ஷரீஃபில் வருகிறது...

عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم:
"فيها ان يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم...

இந்த இரவில்தான் உலக நடைமுறைகள் அனைத்தும் முடிவு செய்யப்படுகின்றன. இவ்வாண்டு ஆதமுடைய மக்களில்  பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தையின் பெயரும் பதியப்படுகிறது. மரணிக்கப்போகும் ஒவ்வொருவரின் பெயரும் எழுதப்படுகிறது. அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகிறது இன்னும்  அவர்களின் ரிஜ்கு இறக்கி வைக்கப் ப(ட்டு  பிரிக்கப்ப)டுகிறது. (பைஹகீ )

மேலும் இவ்விரவில் நீண்ட ஆயுளுக்காகவும் துஆ கேட்கவேண்டும்
********************************
சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல் ஆயுள் இருந்தால் எந்த நல்லதையும் செய்ய முடியும்.

உலகில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது மனிதர்களின் இயல்பான ஆசை. எந்தக் கிழவரிடம் அந்த ஆசை மட்டும் நரைப்பதில்லை.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَهْرَمُ ابْنُ آدَمَ وَيَشِبُّ مِنْهُ اثْنَتَانِ الْحِرْصُ عَلَى الْعُمُرِ وَالْحِرْصُ عَلَى الْمَالِ – ترمذي2261
நபிமார்களுக்கும் அந்த ஆசை உண்டு,
عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَسْمَعُ أَنَّهُ لَا يَمُوتُ نَبِيٌّ حَتَّى يُخَيَّرَ بَيْنَ الدُّنْيَا وَالْآخِرَةِ فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ وَأَخَذَتْهُ بُحَّةٌ يَقُولُ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ الْآيَةَ فَظَنَنْتُ أَنَّهُ خُيِّرَ  - بخاري 4435

ஆதம் (அலை) பற்றிய ஒரு நிகழ்வு
·        عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ مَسَحَ ظَهْرَهُ فَسَقَطَ مِنْ ظَهْرِهِ كُلُّ نَسَمَةٍ هُوَ خَالِقُهَا مِنْ ذُرِّيَّتِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَجَعَلَ بَيْنَ عَيْنَيْ كُلِّ إِنْسَانٍ مِنْهُمْ وَبِيصًا مِنْ نُورٍ ثُمَّ عَرَضَهُمْ عَلَى آدَمَ فَقَالَ أَيْ رَبِّ مَنْ هَؤُلَاءِ قَالَ هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَرَأَى رَجُلًا مِنْهُمْ فَأَعْجَبَهُ وَبِيصُ مَا بَيْنَ عَيْنَيْهِ فَقَالَ أَيْ رَبِّ مَنْ هَذَا فَقَالَ هَذَا رَجُلٌ مِنْ آخِرِ الْأُمَمِ مِنْ ذُرِّيَّتِكَ يُقَالُ لَهُ دَاوُدُ فَقَالَ رَبِّ كَمْ جَعَلْتَ عُمْرَهُ قَالَ سِتِّينَ سَنَةً قَالَ أَيْ رَبِّ زِدْهُ مِنْ عُمْرِي أَرْبَعِينَ سَنَةً فَلَمَّا قُضِيَ عُمْرُ آدَمَ جَاءَهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ أَوَلَمْ يَبْقَ مِنْ عُمْرِي أَرْبَعُونَ سَنَةً قَالَ أَوَلَمْ تُعْطِهَا ابْنَكَ دَاوُدَ – ترمذي 3002
மூஸா (அலை)பற்றி ஒரு நிகழ்வு
·        عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَفَقَأَ عَيْنَهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ إِلَيْهِ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَهْ قَالَ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الْأَحْمَرِ -  النسائي 2063

நீண்ட நாள் வாழ்வு என்பது இஸ்லாத்தின் பார்வையில் விரும்பத்தக்கது,
·        عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ أَنَّ أَعْرَابِيًّا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ خَيْرُ النَّاسِ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ ترمذي 2251


சீக்கிரம் மரணத்திற்கு ஆசைப் படக் கூடாது

أَبُو هُرَيْرَةَ - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَمَنَّى أَحَدُكُمْ الْمَوْتَ وَلَا يَدْعُ بِهِ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُ إِنَّهُ إِذَا مَاتَ أَحَدُكُمْ انْقَطَعَ عَمَلُهُ وَإِنَّهُ لَا يَزِيدُ الْمُؤْمِنَ عُمْرُهُ إِلَّا خَيْرًا.

·         عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ خَيْرٌ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ قَالَ فَأَيُّ النَّاسِ شَرٌّ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ - ترمذي2252
நான் அதிகமாக நல்லதை செய்ய அதிக நாள் வாழ வேண்டும்  என்ற எண்ணம் நமது மனதில் பதியவேண்டும். ஏதோ வாழவேண்டும். எப்படியாவது வாழ வேண்டும் என்று நினைக்க கூடாது. அந்த ஆயுளில் பயனில்லை. அது நமக்கு பாதகமானதாக ஆக்க் கூடும்.

நாமது வாழ்நாள் முழுவதும் இந்த நபி மொழியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
عَنْ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ- ترمذي 2340


எனவே விழித்து வணங்க வேண்டிய இரவுகளில் முக்கிய இரவாக இருப்பதால் இவ்விரவில் நம்மால் முடிந்த அளவுக்கு அமல்கள் செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் நிறைவாகப் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!ஆமீன்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.