بسم الله الرحمن الرحيم
தேர்தல் களமும் நம் பொறுப்பும்
முன்னுரை: உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும்
உரிமையாளன் இருப்பது போல் இவ்வுலகிற்கும் ஒரு உரிமையாளன் இருக்கின்றான். அந்த
உரிமையாளன் யார் என்பது குறித்து மனிதர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள்
இருந்தாலும் இஸ்லாத்தின் பார்வையில் அந்த உரிமையாளன் அல்லாஹ்வேயாகும். அவனைத் தவிர
வேறு யாருமில்லை. இருக்கவும் முடியாது.
அல்லாஹ் கூறுகின்றான்
لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل
شيء قدير (المائدة : 120)
வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும்
அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன்
ஆவான்.
அல்லாஹ்வுக்கே இவ்வுலகின் அதிகாரம் உரியது
எனும் போது அவன்தான் இப்பூமியை யார் ஆளவேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.
அதன்படி அல்லாஹ் கூறுகின்றான்.
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي
الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ
تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ
قَدِيرٌ (آل عمران : 26)
(நபியே!) நீர்
கூறுவீராக: ''அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ
யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;. இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்;. நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;. நீ நாடியவரை
இழிவு படுத்தவும் செய்கிறாய்;.
நன்மைகள் யாவும்
உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக
இருக்கின்றாய்.''
@@@@@@@
அல்லாஹ்வால் ஆட்சி, அதிகாரம் வழங்கப்படுபவர் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஃபிர்அவ்ன், நம்ரூத் மற்றும் நவீன மோடிகள் இதற்கு
உதாரணங்கள்.
أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ
فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ
الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ
فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ
الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ
الظَّالِمِينَ (البقرة : 258)
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக
(ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித்
தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம்
கூறினார்; ''எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய
ரப்பு(இறைவன்)'' என்று. அதற்கவன், ''நானும் உயிர் கொடுக்கிறேன்;,
மரணம் அடையும்
படியும் செய்கிறேன்'' என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; ''திட்டமாக
அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்;, நீ அதை மேற்குத்
திசையில் உதிக்கும்படிச் செய்!''
என்று.
(அல்லாஹ்வை) நிராகரித்த அவன்,
திகைத்து
வாயடைப்பட்டுப் போனான்;. தவிர, அல்லாஹ்
அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
@@@@@@@
இந்தியா:
இந்தியா என்பது மதச்சாற்பற்ற, ஜனநாயக நாடாகும். இந்நாட்டை முஸ்லிம்கள் 900 ஆண்டுகள்
ஆண்டிருக்கின்றார்கள். மேலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திய போது அதன்
விடுதலைக்காக போராடியவர்களில் முஸ்லிம்கள் மிக முக்கியமானவர்களாவார்கள். இங்கு
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எவரும் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம். ஆட்சிக்கு
வருபவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி செய்ய வேண்டும்.
இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை :
சுதந்திர இந்தியாவில் தற்போதுள்ள சூழலில்
முஸ்லிம்கள் 30 கோடிக்கும் மேல் வாழ்ந்தாலும் மன்மோகன்சிங்
ஆட்சியில் முஸ்லிம்களின் நிலையை அறிந்திடும் வகையில் நீதிரசர் ரஜிந்தர் சச்சார்
அவர்களின் தலைமையில் அமைக்கபட்ட கமிட்டியின் அறிக்கையின்படி இந்திய முஸ்லிம்கள்
கல்வி, பொருளதாரம் மற்றும் சுகாதாரத்தில் மிகவும்
பின்தங்கிய நிலையிலையிலேயே இருக்கின்றனர். அதாவது மற்றவர்கள் நம்மைப் பார்த்து
பரிதாபப்படுகின்ற சூழலில்தான் முஸ்லிம்களின் வாழ்வு அமைந்துள்ளது. இந்நிலையில்
கடந்த ஐந்தாண்டுகளில் முஸ்லிம்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
1. முஸ்லிம்களின்
உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உம். அக்லாக் படுகொலை முதலிய படுகொலைகள்.
2. முஸ்லிம்கள்
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக வடநாடுகளில்
அச்சுறுத்தப்படுகின்றார்கள். உம். அசாம் வாழ் முஸ்லிம்களுக்கான குடியுரிமை ரத்து
செய்வதற்கான சட்டம்.
3. கஷமீரில் வாழும்
முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் பல கொடுமைகள்.
4. முஸ்லிம்களின்
பொருளதாரம் திட்டமிட்டே நசுக்கப்படுகின்றது. உம். மாட்டிறைச்சிக்குத் தடை, தோல் தொழிலை நசுக்கியதை குறிப்பிடலாம்.
5. முஸ்லிம்களின்
வழிபாட்டுத்தளங்கள் திட்டமிட்டே தாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது. பின்னர்
கட்டுக்கதைகளை ஆதாரமாக கொண்டு அவைகள் இந்து கோவில்களாக மாற்றப்படுதல். உம். ராமர்
கோவில்.
6. முஸ்லிம்கள்
தங்களின் உயிரைவிடவும் மேலாக மதிக்கின்ற இஸ்லாமிய சட்டங்கள் விமர்சிக்கப்பட்டு, அதற்கு தடைகள் போடுவது. உம். முத்தலாக் தடைச் சட்டம்.
7. முஸ்லிம்கள்
குறித்த தவறான கருத்துக்கள் பள்ளிப்பாட புத்தகங்களில் சித்தரிப்பது. இப்படியாக
முஸ்லிம்களுக்கு எதிரான காரியங்களை அரசே முன்னின்று செயல்படுத்துகின்றது.
இந்நிலையில்தான் நாம் நாடாலுமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கின்றோம்.
@@@@@@@
முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் ?
முஸ்லிம்கள் இந்தியாவில் உரிமைகளைப் பெற்று
வாழவேண்டுமானால் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
1. அதிகாரங்களை
கைப்பற்ற வேண்டும்.
2. அரசியல்
அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும்.
அதிகாரங்களை கைப்பற்றுதல் என்பதன் பொருள்
இந்தியாவிலுள்ள அதிகாரமிக்க மிக முக்கிய பதவிகளான.
I.A.S.I.P.S.I.F.S
போன்ற பதவிகளையும், இதர கீழ் நிலை பதவிகளையும் கைப்பற்ற வேண்டும்.
இந்த இலக்கை அடைய முஸ்லிம்கள் செய்ய
வேண்டியவை:
1. நமது குழந்தைகளை
ஆரம்ப நிலை வகுப்புக்களிலிருந்து கல்லூரி படிப்பு வரை தரமான பள்ளிக்கூடங்களில்
படிக்க வைக்க வேண்டும்.
2. கல்லூரி
படிப்பைத் தொடர்ந்து ஆராய்ச்சி படிப்பில் சேர்த்து, அதில் பட்டம்
பெறச் செய்ய வேண்டும்.
3. இஸ்லாமிய
கல்வியை முழுமையாக வழங்க வேண்டும்.
4. இதற்கு தேவையான
பொருளாரத்தை பைத்துல்மால் உருவாக்கி அதன் மூலம் தேவையான நிதியை பெற
முயற்சிக்கலாம். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நம் சமூகத்தின் நிலையை
மேன்மைப்படுத்த முடியும். நம்மில் பாதிக்கப்பட்டு, சிறைபட்டோருக்கும்
உதவ முடியும். (பல சமயங்களில் முஸ்லிம் அப்பாவி சிறைவாசிகளை விடுவிக்க
முயற்சிக்கும் போது அதிகாரிகள் தடையாக இருந்தார்கள் என்றொரு செய்தி
கேள்விபட்டதுண்டு) அதிகாரங்களை கைப்பற்றினால்தான் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய
நியாயமான உரிமைகளை கிடைக்கச் செய்ய முடியும். முஸ்லிம் அதிகாரிகள் இல்லாததால் முஸ்லிம்களுக்கு
ஒதுக்கப்படும் நிதி முதலிய உரிமைகள் கிடைக்கப்பெறாமல் அதிகாரிகளால் எத்துனை முறை
திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
@@@@@@@
அரசியல் அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும்.
அரசியல் அதிகாரங்கள் என்று வருகின்ற போது
அதனை இரு வகையாக பார்க்க வேண்டும்.
1. நீண்ட கால
திட்டம்:
இத்திட்டத்தின்படி முதலாவது, நாமும், நமது சந்ததிகளும் நிம்மதியாக வாழ விகிதாச்சார
பிரதிநித்துவத்தை வற்புறுத்த வேண்டும். (இதைத்தான் காயிதே மில்லத், அறிஞர் அண்ணா ஆகியோர் வலியுறுத்தினார்கள்)
விகிதாச்சார பிரதிநித்துவம் என்றால் ஒரு
கட்சி பெறும் வாக்குகளின் அடிப்படையில் அதற்கான
M.L.A. M.P
வழங்கப்படுவார்கள். இந்த முறையில் எந்த ஒரு
வாக்கும் வீணாகாது. உம். முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ
மற்றும் ம.ம.க ஆகிய கட்சிகள் போட்டியிட்டு ஆறு இலட்சம் ஓட்டுக்களை வாங்குகிறார்கள்
என்றால் ஒரு வேட்பாளருக்கு இரண்டு இலட்சம் வீதம் ஓட்டுக்கள் என்ற
அடிப்படையில் மூன்று கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ கிடைப்பார்கள். மேலும்
இம்முறையின்படி கட்சிகளுக்கிடையில் கூட்டணியும் அமைத்துக் கொள்ளலாம். உம். ஒரு
கட்சிக்கு ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரம் ஓட்டுக்களும், மற்றுமொறு கட்சிக்கு
இரண்டரை இலட்சம் ஓட்டுக்கள் கிடைக்கின்ற போது இருவரும் கூட்டணி அமைத்து இரண்டு
எம்.எல்.ஏ க்களை பெறமுடியும். இந்த முறைதான் அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ளன. இம்முறையின் மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும், அவர்களின் தேவைகளை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும்
சொல்லும் பிரதிநிதிகள் கிடைப்பார்கள்.
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ
وَعَمِلُوا الصَّالِحاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ
الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضى لَهُمْ
وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْناً، يَعْبُدُونَنِي لَا
يُشْرِكُونَ بِي شَيْئاً
ஜالنور: 55ஸ
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) -
நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு
முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக
நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக்
கொண்டு மாற்றி விடுவதாகவும்,
அல்லாஹ்
வாக்களித்திருக்கிறான்; ''அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;'' இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள்
பாவிகள்தாம்.
இரண்டாவது: அரசியலில் முஸ்லிம்கள் காங்கிரஸ், தி.மு.க என்று காலம் காலமாக மற்றவர்களை சார்ந்திருப்பதை விட நமக்கென பலமிக்க
கட்சியை உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின்படி முஸ்லிம்களுக்கான கட்சியாக சில
கட்சிகள் இருந்தாலும் அது கேரளா மற்றும் தமிழகத்தைத் தவிர வேரெங்கும் காணப்படவில்லை.
ஆனாலும் சிலகட்சி அது சமீபத்தில்
ஆரம்பிக்கப்பட்ட கட்சியாக இருந்தாலும் இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில்
கால் பதித்து அசுர வளர்ச்சி பெற்று செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவர்களின் செயல்பாடுகளும் (சில விஷயங்களில் மாறுபட்ட கருத்து இருந்தாலும்)
சிறப்பாகவே செயல்படுகின்றார்கள். இதற்கு ஹாதியாவின் சம்பவம் ஒரு சான்று.
இவர்களையும் நாம் ஊக்குவிக்கலாம். இதர முஸ்லிம் கட்சிகளில் அவர்கள் சில சீட்டுகளை
பெற்றிருப்பினும் அவர்களிடம் வலிமையான தொண்டர்களும், தூரநோக்கு
திட்டங்களும் இருப்பதாக தெரியவில்லை.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا
عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا
بِمَا جَاءَكُمْ مِنَ الْحَقِّ يُخْرِجُونَ الرَّسُولَ وَإِيَّاكُمْ أَنْ
تُؤْمِنُوا بِاللَّهِ رَبِّكُمْ إِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِي سَبِيلِي
وَابْتِغَاءَ مَرْضَاتِي تُسِرُّونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَأَنَا أَعْلَمُ
بِمَا أَخْفَيْتُمْ وَمَا أَعْلَنْتُمْ وَمَنْ يَفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ
سَوَاءَ السَّبِيلِ (الْمُمْتَحَنَةِ : 1)
ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச்
செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள், நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள், என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை
நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள், அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி
விடுகிறீர்கள், ஆனால், நீங்கள்
மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு
அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர்
நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.
عن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
«بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشَرَةَ رَهْطٍ
سَرِيَّةً عَيْنًا، وَأَمَّرَ عَلَيْهِمْ عَاصِمَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ
جَدَّ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الخَطَّابِ»، فَانْطَلَقُوا حَتَّى إِذَا كَانُوا
بِالهَدَأَةِ، وَهُوَ بَيْنَ عُسْفَانَ وَمَكَّةَ، ذُكِرُوا لِحَيٍّ مِنْ
هُذَيْلٍ، يُقَالُ لَهُمْ بَنُو لَحْيَانَ، فَنَفَرُوا لَهُمْ قَرِيبًا مِنْ
مِائَتَيْ رَجُلٍ كُلُّهُمْ رَامٍ، فَاقْتَصُّوا آثَارَهُمْ حَتَّى وَجَدُوا
مَأْكَلَهُمْ تَمْرًا تَزَوَّدُوهُ مِنَ المَدِينَةِ، فَقَالُوا: هَذَا تَمْرُ
يَثْرِبَ فَاقْتَصُّوا آثَارَهُمْ، فَلَمَّا رَآهُمْ عَاصِمٌ وَأَصْحَابُهُ
لَجَئُوا إِلَى فَدْفَدٍ وَأَحَاطَ بِهِمُ القَوْمُ، فَقَالُوا لَهُمْ: انْزِلُوا
وَأَعْطُونَا بِأَيْدِيكُمْ ، وَلَكُمُ العَهْدُ وَالمِيثَاقُ، وَلاَ نَقْتُلُ
مِنْكُمْ أَحَدًا، قَالَ عَاصِمُ بْنُ ثَابِتٍ أَمِيرُ السَّرِيَّةِ: أَمَّا أَنَا
فَوَاللَّهِ لاَ أَنْزِلُ اليَوْمَ فِي ذِمَّةِ كَافِرٍ، اللَّهُمَّ أَخْبِرْ
عَنَّا نَبِيَّكَ، فَرَمَوْهُمْ بِالنَّبْلِ فَقَتَلُوا عَاصِمًا فِي سَبْعَةٍ،
فَنَزَلَ إِلَيْهِمْ ثَلاَثَةُ رَهْطٍ بِالعَهْدِ وَالمِيثَاقِ، مِنْهُمْ خُبَيْبٌ
الأَنْصَارِيُّ، وَابْنُ دَثِنَةَ، وَرَجُلٌ آخَرُ، فَلَمَّا اسْتَمْكَنُوا
مِنْهُمْ أَطْلَقُوا أَوْتَارَ قِسِيِّهِمْ فَأَوْثَقُوهُمْ، فَقَالَ الرَّجُلُ
الثَّالِثُ: هَذَا أَوَّلُ الغَدْرِ، وَاللَّهِ لاَ أَصْحَبُكُمْ إِنَّ لِي فِي
هَؤُلاَءِ لَأُسْوَةً يُرِيدُ القَتْلَى، فَجَرَّرُوهُ وَعَالَجُوهُ عَلَى أَنْ
يَصْحَبَهُمْ فَأَبَى فَقَتَلُوهُ، فَانْطَلَقُوا بِخُبَيْبٍ، وَابْنِ دَثِنَةَ
حَتَّى بَاعُوهُمَا بِمَكَّةَ بَعْدَ وَقْعَةِ بَدْرٍ، فَابْتَاعَ خُبَيْبًا بَنُو
الحَارِثِ بْنِ عَامِرِ بْنِ نَوْفَلِ بْنِ عَبْدِ مَنَافٍ، وَكَانَ خُبَيْبٌ هُوَ
قَتَلَ الحَارِثَ بْنَ عَامِرٍ يَوْمَ بَدْرٍ، فَلَبِثَ خُبَيْبٌ عِنْدَهُمْ
أَسِيرًا، فَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عِيَاضٍ، أَنَّ بِنْتَ الحَارِثِ
أَخْبَرَتْهُ: أَنَّهُمْ حِينَ اجْتَمَعُوا اسْتَعَارَ مِنْهَا مُوسَى يَسْتَحِدُّ
بِهَا، فَأَعَارَتْهُ، فَأَخَذَ ابْنًا لِي وَأَنَا غَافِلَةٌ حِينَ أَتَاهُ
قَالَتْ: فَوَجَدْتُهُ مُجْلِسَهُ عَلَى فَخِذِهِ وَالمُوسَى بِيَدِهِ، فَفَزِعْتُ
فَزْعَةً عَرَفَهَا خُبَيْبٌ فِي وَجْهِي، فَقَالَ: تَخْشَيْنَ أَنْ أَقْتُلَهُ؟
مَا كُنْتُ لِأَفْعَلَ ذَلِكَ، وَاللَّهِ مَا رَأَيْتُ أَسِيرًا قَطُّ خَيْرًا
مِنْ خُبَيْبٍ، وَاللَّهِ لَقَدْ وَجَدْتُهُ يَوْمًا يَأْكُلُ مِنْ قِطْفِ عِنَبٍ
فِي يَدِهِ، وَإِنَّهُ لَمُوثَقٌ فِي الحَدِيدِ، وَمَا بِمَكَّةَ مِنْ ثَمَرٍ،
وَكَانَتْ تَقُولُ: إِنَّهُ لَرِزْقٌ مِنَ اللَّهِ رَزَقَهُ خُبَيْبًا، فَلَمَّا
خَرَجُوا مِنَ الحَرَمِ لِيَقْتُلُوهُ فِي الحِلِّ، قَالَ لَهُمْ خُبَيْبٌ:
ذَرُونِي أَرْكَعْ رَكْعَتَيْنِ، فَتَرَكُوهُ، فَرَكَعَ رَكْعَتَيْنِ، ثُمَّ
قَالَ: لَوْلاَ أَنْ تَظُنُّوا أَنَّ مَا بِي جَزَعٌ لَطَوَّلْتُهَا، اللَّهُمَّ
أَحْصِهِمْ عَدَدًا،
مَا أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا ...
عَلَى أَيِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي
وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ ...
يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ
فَقَتَلَهُ ابْنُ الحَارِثِ فَكَانَ خُبَيْبٌ
هُوَ سَنَّ الرَّكْعَتَيْنِ لِكُلِّ امْرِئٍ مُسْلِمٍ قُتِلَ صَبْرًا،
فَاسْتَجَابَ اللَّهُ لِعَاصِمِ بْنِ ثَابِتٍ يَوْمَ أُصِيبَ، «فَأَخْبَرَ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابَهُ خَبَرَهُمْ، وَمَا
أُصِيبُوا، وَبَعَثَ نَاسٌ مِنْ كُفَّارِ قُرَيْشٍ إِلَى عَاصِمٍ حِينَ حُدِّثُوا
أَنَّهُ قُتِلَ، لِيُؤْتَوْا بِشَيْءٍ مِنْهُ يُعْرَفُ، وَكَانَ قَدْ قَتَلَ
رَجُلًا مِنْ عُظَمَائِهِمْ يَوْمَ بَدْرٍ، فَبُعِثَ عَلَى عَاصِمٍ مِثْلُ الظُّلَّةِ
مِنَ الدَّبْرِ، فَحَمَتْهُ مِنْ رَسُولِهِمْ، فَلَمْ يَقْدِرُوا عَلَى أَنْ
يَقْطَعَ مِنْ لَحْمِهِ شَيْئًا» خ :3045
3045. அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப் பேர்கள்
கொண்ட ஒரு குழுவினரை உளவுப்படையாக அனுப்பி வைத்தார்கள். உமர் இப்னு கத்தாபுடைய
மகன் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரியை உளவுப்
படைக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் புறப்பட்டு
உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள 'ஹத்ஆ' என்னுமிடத்திற்கு வந்தபோது ஹுதைல் குலத்தைச்
சேர்ந்த பனூலிஹ்யான் என்றழைக்கப்படும் ஒரு கிளையினருக்கு இந்த உளவுப் படையினர்
வரும் விவரம் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளையினர் (அவர்களைப் பிடிப்பதற்காக)
அம்பெய்வதில் தேர்ச்சி பெற்ற கிட்டத் தட்ட இருநூறு வீரர்களை தங்களுக்காகத்
திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் சுவடுகளைப் பின்பற்றி (அவர்களைத்
தேடியபடி) சென்றனர். (வழியில்) உளவுப்படையினர் மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு
வந்திருந்த பேரீச்சம் பழங்களைத் தின்று (அவற்றின் கொட்டைகளைப் போட்டு)விட்டுச்
சென்ற இடத்தைக் கண்டனர். உடனே 'இது யத்ரிபுடைய (மதீனாவுடைய) பேரீச்சம் பழம்' என்று கூறினர். எனவே அவர்களின் கால் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றனர். அவர்களை
ஆஸிம்(ரலி) அவர்களும் அவர்களின் சகாக்களும் கண்டபோது உயரமான (குன்று போன்ற)
ஓரிடத்தில் (புகலிடம் தேடி) ஒதுங்கி நின்றனர். அவர்களை பனூ லிஹ்யான் குலத்தினர்
சூழ்ந்தனர். அவர்கள் அந்த உளவுப் படையினரிடம் 'நீங்கள் இறங்கி
வந்து எங்களிடம் சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதிமொழியும் வாக்கும்
அளிக்கிறோம். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம்' என்று கூறினார்கள். உளவுப் படையின் தலைவரான ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி) 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் ஒரு நிராகரிப்பாளனின் பொறுப்பில் (என்னை
ஒப்படைத்தவனாக இந்தக் குன்றிலிருந்து) கீழே இறைவா! எங்கள் நிலை குறித்து உன்
தூதருக்குத் தெரிவித்து விடு'
என்று
பிரார்த்தித்தார்கள். எதிரிகள் அவர்களின் மீது அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக்
கொன்றனர். உளவுப் படையினரில் (எஞ்சியிருந்த) மூன்று பேர் எதிரிகளிடம்
உறுதிமொழியும் வாக்கும் பெற்று இறங்கினார்கள். அவர்கள் அன்சாரித் தோழர் குபைப்
அவர்களும் இப்னு தசினா அவர்களும் மற்றுமொருவரும் ஆவர். இவர்கள் தங்கள் கையில்
கிடைத்தவுடன் நிராகரிப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர்களைக் கட்டினார்கள்.
(உளவுப் படையில் எஞ்சிய மூவரில்) மூன்றாவது மனிதர் 'இது முதலாவது
நம்பிக்கை துரோகம் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வர மாட்டேன்.
(கொல்லப்பட்ட) இவர்கள் எனக்கு ஒரு (நல்ல பாடமாக அமைந்துள்ளனர்' என்று கூறினார். உடனே அவர்கள் அவரை இழுத்துச் சென்று தம்மோடு வரும்படி
நிர்பந்தித்தார்கள். அதற்கு அவர் மறுத்து விடவே அவரைக் கொலை செய்துவிட்டார்கள்.
பிறகு குபைப் அவர்களையும் இப்னு தசினா அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில்
விற்றுவிட்டனர். இது பத்ருப் போருக்குப் பிறகு நடந்த சம்பவமாகும். குபைப் அவர்களை
பனூ ஹாரிஸ் என்னும் குலத்தார் வாங்கினர். அந்தக் குலத்தின் தலைவர் ஹாரிஸ் இப்னு
ஆமிர் என்பவரை குபைப் அவர்கள் பத்ருப் போரில் கொன்று விட்டிருந்தார்கள். எனவே
(அதற்குப் பழிவாங்குவதற்காக குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது
செய்து வைத்திருந்தனர்.) அவர்களிடம் குபைப் அவர்கள் கைதியாக இருந்தார்கள்.
உபைதுல்லாஹ் இப்னு இயாள்(ரஹ்) கூறினார்கள் என
அறிவிப்பாளர் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.
ஹாரிஸின் மகள் என்னிடம் கூறினார்:
குபைப் அவர்களைக் கொல்வதற்காக (எங்கள்
குடும்பத்தார்) ஒன்று கூடியபோது குபைப் தேவையற்ற முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக்
கத்தியை என்னிடமிருந்து இரவல் வாங்கினார். அப்போது என்னுடைய குழந்தை ஒருவனை அவர்
கையிலிலெடுத்தார். அவன் அவரிடம் சென்றபோது நான் (பார்க்காமல்) கவனக் குறைவாக
இருந்து விட்டேன். அவர் கையில் சவரக் கத்தி இருக்க தம் மடியின் மீது அவனை உட்கார
வைத்திருப்பதை கண்டேன். அதைக் கண்டு நான் கடும் பீதியடைந்தேன். என் முகத்தில்
தெரிந்த பீதியை குபைப் புரிந்து கொண்டார். உடனே 'நான் இவனைக்
கொன்று விடுவேன் என்று நீ பயப்படுகிறாயா? நான் அப்படிச்
செய்யமாட்டேன்' என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக!
குபைப் அவர்களை விடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு நாள் தம் கையிலிருந்த திராட்சைக் குலை
ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டு கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவரின் கை
இரும்புக் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. மேலும் அப்போது மக்கா நகரில் பழம்
(விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை. ...மேலும் ஹாரிஸின் மகள் 'அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த இரணமாகும். அல்லாஹ் அதை குபைப் அவர்களுக்கு
அளித்திருந்தான்' என்று கூறி வந்தார். (என அறிவிப்பாளர்
இடையில் கூறுகிறார்.)
(தொடர்ந்து
அறிவிப்பாளர் கூறுகிறார்:)
அவர்கள் குபைப் அவர்களைக் கொல்வதற்காக ஹரம்
(எனும் இரத்தம் சிந்துவது அனுமதிக்கப்படாத புனிதப்) பகுதியிலிருந்து 'ஹில்' (எனும் புனித எல்லைக்கு வெளியே இருக்கும்
பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றபோது அவர்களிடம் குபைப் அவர்கள்'என்னை இரண்டு ரக்அத்துகள் தொழ விடுங்கள்' என்று
கூறினார்கள். (தொழுது முடித்து) பிறகு 'நான் மரணத்தைக்
கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல்
இருந்திருந்தால் நான் நீண்ட நேரம் தொழுதிருப்பேன்' என்று
கூறிவிட்டு 'இறைவா! இவர்களை எண்ணி வைத்துக் கொண்டு
(ஒருவர் விடாமல்) பழி வாங்குவாயாக!' என்று
பிரார்த்தித்தார்கள். மேலும் 'நான் முஸ்லிமாகக் கொல்லப்படுவதால் நான் எதைப்
பற்றியும் பொருட்படுத்தப் போவதில்லை. எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான்
இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது
அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும்போது அவன் நாடினால் என்னுடைய
துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது கூட (தன்) அருள் வளத்தைப்
பொழிவான்' என்று கவி பாடினார்கள். பின்னர் குபைப்
அவர்களை ஹாரிஸின் மகன் (உக்பா) கொன்றுவிட்டார். அன்றிலிருந்து அடைத்து வைத்து
அல்லது கட்டி வைத்துக் கொல்லப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கொல்லப்படுவதற்கு முன்
இரண்டு ரக்அத்துகள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று.
ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள் கொல்லப்பட்டபோது அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ்
ஏற்றுக் கொண்டு (அவர்களின் நிலைகுறித்து தன் தூதருக்குத் தெரிவித்து)விட்டான்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும்
அவர்களுக்கு குறைஷிக்குல நிராகரிப்பாளர்களில் சிலருக்கு ஆஸிம் அவர்கள்
கொல்லப்பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் (கொல்லப்பட்டது அவர்தான் என்று)
அவரை அடையாளம் தெரிந்து கொள்ள அவரின் அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும்
படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள். ஏனெனில் ஆஸிம் அவர்கள் பத்ருப் போரின்போது
குறைஷிகளின் தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார்கள். அப்போது ஆஸிம் அவர்களுக்காக
(அவர்களின் உடலுக்குப் பாதுகாப்பாக) ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும்
மேகத்தைப் போன்று (அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும் படி)
அனுப்பப்பட்டது. அது அவர்களை குறைஷிகளின் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது. எனவே
அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல
முடியவில்லை.
@@@@@@@
அரசியல் அதிகாரங்கள் என்று வருகின்ற போது
அதனை இரு வகையாக பார்க்க வேண்டும்.
இரண்டாவது : குறுகிய கால திட்டமாகும்.
இத்திட்டத்தின் படி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் மத்திய சென்னையைத்
தவிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 தொகுதிகளிலும்
தி.மு.க கூட்டணியை ஆதரிக்க வேண்டும். தி.மு.க கூட்டணிக்கான ஆதரவு என்பது அவர்கள்
முஸ்லிம்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதை விட முஸ்லிம்களின் மிகப் பெரும்
எதிரிகள் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான். இவர்கள் நமக்காக
நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் குரல் கொடுக்கப் போவதில்லை. மத்திய சென்னையைப்
பொறுத்த வரை அங்கு முஸ்லிம்களில் ஒருவரும், உலமாக்களில்
ஒருவருமான மவ்லவி தெஹ்லான் பாகவி அவர்கள் போட்டியிடுவதால் அவர்களுக்கே வாக்களிக்க
வேண்டும். இதன் மூலம் மார்க்கச் சட்டம் அறிந்த, மார்க்க உணர்வுள்ள ஒருவரால் நாடாளுமன்றத்தில் நமக்கான குரலை ஒலிக்கச் செய்ய
முடியும். மேலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் முஸ்லிம்களை கூட்டணிக்குள் கொண்டு
வர வேண்டும் என்ற கட்டாய நிலை திராவிட கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும்.
மேலும் மற்றவர்கள் முஸ்லிம்களுக்காக சிறிய
அளவில் குரல் கொடுத்தாலும் அது பெயரளவில்தான் இருக்குமே
தவிர அது உணர்வுப்பூர்வமாக இருக்காது. அவர்களுக்கு பெட்டி கொடுத்தால்
பொட்டிப்பாம்பாய் அடங்கி விடுவார்கள். ஆதலால் மவ்லவியை ஆதரிக்கலாம்.
2. முஸ்லிம்
தலைவர்கள், அறிஞர்கள் ஒன்றுபட வேண்டும்.
عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الأَئِمَّةَ
المُضِلِّينَ»، ت : 2229
ஸவ்பான் (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். என் சமூகத்திற்கு எதிராக வழிகெடுக்கக்கூடிய தலைவர்களை
நான் பயப்படுகின்றேன். (திர்மிதி:2229)
3. முஸ்லிம்கள்
ஒன்றுபட வேண்டும்.
இந்தியாவில் முப்பது கோடிக்கும் மேற்பட்ட
முஸ்லிம்கள் இருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுபட மாட்டோம் என்பதை நம்மை விட எதிரிகள்
நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதனால்தான் முஸ்லிம்களின் ஓட்டு எங்களுக்குத் தேவை
இல்லை எனும் இருமாப்பின் பி.ஜே.பி தங்களின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களை
நேரடியாக பாதிக்கச் செய்கின்ற ராமர் கோவில் கட்டுதல், முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்றுதல், பொது சிவில் சட்டம்
கொண்டு வருதல், கஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல்
போன்றவைகளை தங்களின் தேர்தல் அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு சரியான
பாடம் புகட்டும் வகையில் நம்முடைய ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் பி.ஜே.பிக்கு
எதிராக வாக்களிக்க வேண்டும். இவ்விஷயத்தில் நமக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளை
களைந்து,ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.
4. துஆச் செய்ய
வேண்டும்.
عن ابْن عُمَرَ، قَالَ: قَلَّمَا كَانَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ
بِهَؤُلَاءِ الدَّعَوَاتِ لِأَصْحَابِهِ: «اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ
خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا
تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ اليَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا
مُصِيبَاتِ الدُّنْيَا، وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا
مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ
ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي
دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا،
وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا» ت : 3502
முடிவுரை: அல்லாஹ் முஸ்லிம்களின் சிந்தனைகளை
ஒன்றுபடுத்தி, அவர்களுக்கு சாதகமான ஆட்சியாளர்களை
ஏற்படுத்தித்தருவானாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.