بسم الله الرحمن
الرحيم
இலட்சியப் பயணம்.
*************************
பொதுவாக வெற்றியோ தோல்வியோ நீண்ட நேரமாக
நிரந்தரமாக எது இருக்குமோ அதுதான் உண்மையான வெற்றியும் தோல்வியும்.
எனவே குறுகிய கால வெற்றிக்காக இன்பத்திற்காக
எவன் பயணிக்கின்றானோ அவன் அறிவில் குறைந்தவன் அல்லது அறிவற்றவன் என்பதாக நாம்
அறிவோம். எனவே நிரந்தரமான வெற்றியை நோக்கி எவன் பயணிக்கின்றானோ அவன் தான்
எதார்த்தத்தில் அறிவாளி.
1. உண்மையான நிறந்தர வெற்றி ?
كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ وَاِنَّمَا
تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ
وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا
مَتَاعُ الْغُرُوْرِ
ஆக ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க
வேண்டியவனாய் இருக்கின்றான். நீங்கள் அனைவரும் உங்களுடைய கூலியை மறுமைநாளன்றுதான்
முழுமையாகப் பெறுவீர்கள். (அங்கு) எவன் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு, சுவனத்தில் நுழைவிக்கப் படுகின்றானோ அவனே உண்மையில் வெற்றி பெற்றவன் ஆவான்!
இவ்வுலக வாழ்வென்பது ஏமாற்றக்கூடிய அற்ப இன்பமேயன்றி வேறில்லை! (அல்குர்ஆன் : 3:185
6414 حَدَّثَنَا سَهْلُ بْنُ سَعْدٍ
السَّاعِدِيُّ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي
الخَنْدَقِ، وَهُوَ يَحْفِرُ وَنَحْنُ نَنْقُلُ التُّرَابَ، وَيَمُرُّ بِنَا،
فَقَالَ: «اللَّهُمَّ لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَهْ، فَاغْفِرْ
لِلْأَنْصَارِ وَالمُهَاجِرَهْ»
6414. ஸஹ்ல் இப்னு
ஸஅத் அஸ்ஸாயிதீ(ரலி) அறிவித்தார்.
அகழ்ப் போரின்போது நாங்கள் இறைத்தூதர்(ஸல்)
அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண்
சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைப்
பார்த்துவிட்டு, 'இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு
(நிரந்தரமான) வாழ்க்கை இல்லை;
எனவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு
வழங்குவாயாக!' என்று (பாடியபடி) கூறினார்கள்.4
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும்
இதே ஹதீஸ் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்
2 @@@@@@@
நம் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
بِمَنْكِبِي فَقَالَ: ((كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ عَابِرُ
سَبِيلٍ)).
6416. அப்துல்லாஹ்
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்
கொண்டு“உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு“என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. (நெகிழ்வூட்டும் அறவுரைகள்)
4913 عن ابْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا، يُحَدِّثُ أَنَّهُ قَالَ: مَكَثْتُ سَنَةً أُرِيدُ أَنْ أَسْأَلَ
عُمَرَ بْنَ الخَطَّابِ ...... فَأَخَذْتُ ثَوْبِي فَأَخْرُجُ حَتَّى جِئْتُ
فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَشْرُبَةٍ لَهُ
يَرْقَى عَلَيْهَا بِعَجَلَةٍ، وَغُلاَمٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَسْوَدُ عَلَى رَأْسِ الدَّرَجَةِ، فَقُلْتُ لَهُ: قُلْ: هَذَا عُمَرُ
بْنُ الخَطَّابِ فَأَذِنَ لِي، قَالَ عُمَرُ: فَقَصَصْتُ عَلَى رَسُولِ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الحَدِيثَ، فَلَمَّا بَلَغْتُ حَدِيثَ
أُمِّ سَلَمَةَ تَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
وَإِنَّهُ لَعَلَى حَصِيرٍ مَا بَيْنَهُ وَبَيْنَهُ شَيْءٌ، وَتَحْتَ رَأْسِهِ
وِسَادَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، وَإِنَّ عِنْدَ رِجْلَيْهِ قَرَظًا
مَصْبُوبًا، وَعِنْدَ [ص:158] رَأْسِهِ أَهَبٌ مُعَلَّقَةٌ، فَرَأَيْتُ أَثَرَ
الحَصِيرِ فِي جَنْبِهِ فَبَكَيْتُ، فَقَالَ: «مَا يُبْكِيكَ؟» فَقُلْتُ: يَا
رَسُولَ اللَّهِ إِنَّ كِسْرَى وَقَيْصَرَ فِيمَا هُمَا فِيهِ، وَأَنْتَ رَسُولُ
اللَّهِ، فَقَالَ: «أَمَا تَرْضَى أَنْ تَكُونَ لَهُمُ الدُّنْيَا وَلَنَا
الآخِرَةُ»
4913. உமர் ரலி
அவர்கள் சொன்னதை இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்......அங்கே
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில்
இருந்தார். அவரிடம் நான், 'இந்த உமர் இப்னு கத்தாபுக்காக (அல்லாஹ்வின்
தூதரிடம் அனுமதி) கேள்!' என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி
கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்துவிட்டார்கள். (நான் உள்ளே சென்று)
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களின் துணைவியருக்குமிடையே நடைபெற்ற)
இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு ஸலமாவின் பேச்சு வந்தபோது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில்
(அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும்
இருக்கவில்லை. அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை
ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன.
அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது
அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு
அழுதுவிட்டேன்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஏன் அழுகிறீர்கள்?' என்றார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர் அவர்களே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும்
குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர்.
தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!' என்றேன்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு
மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?' என்று
கேட்டார்கள். 5
Book : 65
3. @@@@@@@
நமக்கு தடையாக இருப்பது எது ? குடும்பம்.
யாருக்காக நாம் வாழ்க்கையை துளைக்கிறோமோ அந்த
குடும்பம் நாளை பலன் தராது.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ
اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ وَاِنْ
تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
இறைநம்பிக்கைகொண்டவர்களே! உங்களுடைய
மனைவியரிலும், பிள்ளைகளிலும் சிலர் உங்கள் பகைவர்களாய்
இருக்கின்றனர். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மேலும், நீங்கள் அவர்களுடைய செயல்களைச் சகித்துப் புறக்கணித்து விடுவீர்களானால் மேலும், அவர்களை மன்னிப்பீர்களானால் திண்ணமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 64:14)
ஆம் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும் பிள்ளைகள்
பெற்றோருக்கு எதிராக மாறிடுவாங்க . அது எப்போது என்றால் அல்லாஹ் ரசூல் ஸல்
அவர்களின் கட்டளையை மீறி நடக்கக்கூடிய நேரத்தில் .
உதாரணமாக ஒரு மகன் தாடியை சிரைக்கின்றான் .
கரண்டைக்கு கீழ் உடை அணிகிறான். ஒரு மகள் அல்லது மனைவி கண் புருவ முடியை
எடுக்கிறாள் (இது அல்லாஹ்வின் சாபத்தை தரக்கூடியது) . அதே மாதிரி அவர்கள்
உடுத்தும் உடை மறைக்க வேண்டிய பகுதியை மறைக்காமல் அசிங்கமாக தெரியும் வகையிலோ உடல் பருமனை எடுத்து காட்டும் விதத்தில் இறுக்கமான உடை அணிகிறார்கள்
அதையெல்லாம் பார்த்துக்கொண்டு கண்டித்து திருத்த வில்லையானால் பொறுப்பாளரை
சொர்க்கம் செல்ல முடியாமல் தடுத்து நரகில் தள்ளிவிடுவார்கள் இவர்கள் .
தன் மகளுக்கு அல்லது மனைவிக்கு செல்போன்
அதுவும் ஆண்ட்ராய்டு போனை வாங்கி கொடுத்தான் . அதன் காரணமாக அவர்கள் ஒழுக்கதை
இழந்தார்கள் . அல்லது இன்டர்நெட்டில் இருந்து கொண்டு தொழுகை-வணக்க வழிபாடுகளை
வீணாக்கினார்கள் என்றால் இதற்குரிய பாவம் இந்த கணவருக்கு தான் . அவர்கள் யாவரும்
எதிரியாக மாறிவிட்டார்கள். எனவே இஸ்லாமிய முறையில் வளர்க வேண்டும்.
4. @@@@@@@
மறுமையின் தடுமாறும் நிலை.
يٰۤاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ
وَاخْشَوْا يَوْمًا لَّا يَجْزِىْ وَالِدٌ عَنْ وَّلَدِهٖ وَلَا مَوْلُوْدٌ هُوَ
جَازٍ عَنْ وَّالِدِهٖ شَيْئًا اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا
تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ
الْغَرُوْرُ
மனிதர்களே! உங்கள் அதிபதியின்
கோபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். மேலும், ஒரு நாளைக் குறித்து அஞ்சுங்கள். அன்று எந்தத் தந்தையும் தன் மகனுக்காக எவ்வித
உதவியும் செய்ய முடியாது. மேலும்,
எந்த மகனும் தன்
தந்தைக்காக எவ்வித உதவியும் செய்ய முடியாது. நிச்சயமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே, இவ்வுலக
வாழ்க்கை உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். மேலும், ஏமாற்றுக்காரனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றிவிட
வேண்டாம்.(அல்குர்ஆன் : 31:33)
80:33
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34)
وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ (36) لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ
يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ (37)
அந் )தகியாம) நாளில் மனிதன் விரண்டோடுவான்
தன் சகோதரனை விட்டும் (80:34) தாயையும் தந்தையையும் விட்டும்(80:35) தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் விட்டும். (80:36)அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத் தவிர வேறெவரைப் பற்றியும் கவனம்
செலுத்தமுடியாத நிலை வந்தே தீரும்!(80:37)
5 . @@@@@@@
ஓடாமல் துணையாக பாதுகாப்பு அரணாக நிற்பது
அமல் மட்டுமே.
சாதாரணமாக ஒரு கோர்ட்டுக்கு / போலீஸ்
ஸ்டேஷனுக்கு தனியாக போவதற்கு பயம். துணைக்கு பெரிய தலைவர்களையும் வக்கீலயும்
கூப்பிட்டு போவோம் .ஆனால் நாளைக்கு அல்லாஹ்வுக்கு முன்னால் தன்னந்தனியாக நின்கனும்
. நமக்கு துணையாக யாருமே இருக்க மாட்டாங்க. நம்முடைய நன்மைகள்தான் கூட இருக்கும் .
7512 عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْكُمْ أَحَدٌ
إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ
أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ
أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ
فَلاَ يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ
بِشِقِّ تَمْرَةٍ "، قَالَ الأَعْمَشُ: وَحَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ،
عَنْ خَيْثَمَةَ، مِثْلَهُ، وَزَادَ فِيهِ: «وَلَوْ بِكَلِمَةٍ طَيِّبَةٍ»
7512. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்'
(மறுமையில்)
உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும்
உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். நீங்கள் உங்கள் வலப்
பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே
காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து
அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள்
முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். எனவே, ஒரு பேரீச்சம்
பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில் 'ஒரு நற்சொல்லைக் கொண்டாவது'
என்று
காணப்படுகிறது. 153 Book :97
6 . @@@@@@@
கள்ளக் கணக்கு முடியாது.
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ
مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ
لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا
عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا (49)
18:49. இன்னும்
(பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன
(நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது
இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன்
வைக்கப்படுவதைக் காண்பார்கள்;
ஆனால் உம்முடைய
இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.
وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ
عُنُقِهٖ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا
ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (விரிவான தினசரிக் குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதனை
அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் (அதனை) விரித்துப்
பார்ப்பான்.(அல்குர்ஆன் : 17:13)
اِقْرَاْ كِتٰبَك َ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ
عَلَيْكَ حَسِيْبًا
(அச்சமயம் அவனை
நோக்கி) "இன்றைய தினம் உன்னுடைய கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்" (என்று
கூறுவோம்.)(அல்குர்ஆன் : 17:14)
7. @@@@@
முன்னோர்களின் நிலை .
எதார்த்த வெற்றி அது மறுமை தான். என்று
உணர்ந்ததால் அவர்களுடைய செயல்பாடுகள் எல்லாம் எவ்வாறு அமைந்தது என்று பார்போம்.
உமர் ரலி அவர்கள் ஒரு ஏழை தாயின்
குடும்பத்துக்கு அரசாங்க கருவூலத்திலிருந்து உணவை தன் சொந்த முதுகில்
தானே சுமந்து சென்றார்கள் . நான் உதவுகிறேன் . நான் கொண்டு வருகிறேன் என உதவியாளர்
கேட்ட பொது நாளை மறுமையில் என் சுமையை யார் சுமப்பார் ? என கண்டித்து மறுத்து விட்டு உணவை தன் முதுகில் சுமந்து சென்றார்கள் .
உமர் இப்னு அப்துல் அஜீஸ் கிட்டத்தட்ட
இரண்டரை வருடம் ஆட்சியிலிருந்தார்கள் . அவர்களுக்கு பன்னிரண்டு ஆண் மக்கள் இருந்தார்கள்.
அரசராக இருக்கவே மரணிக்கிறார்கள்.
மரண தருவாயில் பக்கத்தில் உள்ளவர்கள்
கேட்கிறார்கள். இதோ பன்னிரண்டு ஆண்கள் இருக்கிறார்களே ஏதாவது
சொத்து சேர்த்து இருக்கீங்களா என.
இவங்க நல்லவர்களாக இருந்தால் நான் ஒன்றும்
கொடுக்க வேண்டியதில்லை . அல்லாஹ் அவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவான்.
إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ
الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ (196)
7:196. “நிச்சயமாக என்
பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப்
பாதுகாப்பவன் ஆவான்.
இவர்கள் கெட்டவர்களாகயிருந்தால்
இவங்க செய்யக்கூடிய அந்த தீமைகளுக்கு நான் ஏன் கொடுத்து உதவனும். இவ்வாறு அவர்கள்
மறுமை சிந்தனையோடு இருந்தார்கள். குடும்பத்தார்களையும் தீனோடு வளர்தார்கள் .
9. @@@@@@@
இலக்கை அடைய திட்டங்கள். தீர்மானம்.
1.தொழுகையை பேணித்
தொழுவது . 2.ஜமாஅத்தோடு தொழுவது 3.ரமலானுடைய களா இருந்தால் சீக்கிரமாக நிறைவேற்றுவது 4.குடும்ப உறவை சேர்ந்து வாழ்வது .
5.பாவங்களை
விட்டும் விலகி இருத்தல் . 6.இன்டர்நெட் தொலைக் காட்சிகளை விட்டும்
தூரமாகுதல் / குறைத்துக் கொள்ளுதல். 7.புறம் பேசுவதை
விட்டும் விலகிக் கொள்ளுதல் 8.அவனுடைய சாபத்தை தரக்கூடிய கண் புருவ முடிகளை
எடுப்பதை விட்டு விலகி இருத்தல் .9. ஆண்கள்
கரண்டைக்கு கீழே உடை அணியாமல் இருப்பது .10.தாடியை சிறைக்காமல் இருப்பது. 11.நல்லதுக்கு
ரூட்-வழி போட்டு கொடுப்பது. 12.தீமைக்கு ரூட் போடுவதை தவிர்ப்பது.
اِنَّا نَحْنُ نُحْىِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا
قَدَّمُوْا وَاٰثَارَهُمْؔ وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ فِىْۤ اِمَامٍ مُّبِيْنٍ
நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்)
உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல் களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகின்றோம். இவை
ஒவ்வொன்றையும் "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே
வைத்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 36:12)
ஆயத்தின் கருத்து : நாம் செய்த நன்மை தீமை
அது போல் எந்த எந்த கரியத்திற்காக ரூட்(-வழி ) போட்டு கொடுத்தோமோ அதுவும் நம்ம
கணக்கில் வரும்.
தீமைக்கான ரூட்டுகள்.
பீடி சிகரெட் கொடுத்து உதவுவது / லைடர்
-தீப்பெட்டி கொடுத்து உதவுவது மியூசிக்-பாட்டு / சீரியல்
/ வீணான கேம்(விளையாட்டு) இவைகளை நெட் மூலம் ஷேர் செய்தோம். அல்லது லிங்க்
அனுப்பினோம். அல்லது அதை பற்றி பாராட்டி பேசினோம் அதனால் ஒருவர் அதை டவுன்லோடு
செய்து பார்த்தார் .இது போன்ற யாவும் நாம் ரூட் போட்டதில் வரும். எனவே மிகக் கவணம்
தேவை.
மறுமையே இலக்காக கொண்டு வாழ்ந்து இரு
உலகிலும் வெற்றி பெற்ற நல்லோரில் நம்மையும் அல்லாஹ் ஆக்குவானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.