வெள்ளி, 31 ஜனவரி, 2020

உரிமைக்குரல்

உரிமைக்குரல்.


உலக வாழ்க்கை என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக அமைந்திருக்கின்றன . இரவு பகல் வானம் பூமியை போன்றே இன்பம் துன்பம் இரண்டு கலந்தே இருக்கின்றது . முழுக்க இன்பம் என்றோ முழுக்க துன்பம் என்றோ இவ்வுலகம் அமையாது. 
இந்தியா போன்ற சில நாடுகளில் பல இன்னல்களும் தொல்லைகளும் தலை விரித்து தாண்டவம் ஆடுகின்றன . அவைகளுக்கு வெகுவிரைவில் சாவு மணி அடிக்கப்பட்டு சமாதி கட்டப்பட்டு உரிமைகள் மீட்கப்படும் இன்ஷாஅல்லாஹ்.

ஐந்து ஆண்டு காலங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இந்தியாவின் புனிதமான ஆட்சியை இந்த RSS-BJB கும்பல் அலங்கோலப் படுத்தியதைத் தொடர்ந்து  மீண்டும் 2019 ஆம் ஆண்டிலும் அந்த பதவியை கக்கி வைத்துக் கொண்டது.

எனவே குரங்கு கையில் பூமாலை / அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்ற பழமொழிகளுக்கொப்ப இந்தியாவின் நிலைமை தாழ்ந்து கொண்டிருக்கின்றன.

மனித உரிமைகள் மீறப்படுகின்றன .  சிறு தொழிலாளிகள் தலையில் துண்டை போட்டு நடுரோட்டுக்கு வந்துவிட்டார்கள் . விவசாயிகள் அம்மணமாக வீதியில் கிடந்தார்கள் . பிஞ்சு குழந்தைகள் புனிதத்தலமான கோயில் கருவறையில் வைத்து கற்பழிப்பு . சமுதாயத்திற்காக பாடுபடக்கூடியவர்களை / பத்திரிக்கை தொலைதொடர்பு நிருபர்களை கைது செய்வது கொலை செய்வது . பொதுப் பரீட்சை என்பதாக பிஞ்சு குழந்தைகளை மனநோயாளியாக மாற்றுவது இது போன்று எண்ணற்ற ஏராளமான குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிறது இந்த ஆட்சி.

இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம்முடைய இஸ்லாமிய மார்க்கமும் உலக வரலாறுகளும் பாடம் ஓதிக் காண்பிக்கின்றன . அதே வழிமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

1 . @@@@@@@
போர்க்கொடி உயர்த்த வேண்டும்.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا» [ص:129]، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، هَذَا نَنْصُرُهُ مَظْلُومًا، فَكَيْفَ نَنْصُرُهُ ظَالِمًا؟ قَالَ: «تَأْخُذُ فَوْقَ يَدَيْهِ» »
அனஸ்(ரலி) அறிவித்தார். 
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)' என்று கூறினார்கள். 
ஸஹீஹ் புகாரி : 2444. 
அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்

عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பயணம் புறப்படுகிறார்கள் அந்த நேரத்தில் ஒரு மனிதர் கேள்வி கேட்டார் போராட்டங்களில் மிகச்சிறந்த போராட்டம் எது என்பதாக அதற்கு நபியவர்கள் சொன்னார்கள் அநியாயக்கார தலைவனிடம் சத்தியத்தை எடுத்துரைப்பது என்பதாக சொன்னார்கள் . நூல் நஸாயீ4204 அறிவிப்பாளர் தாரிக் (ரலி) அவர்கள் .
2 .@@@@@@@

போராட்டகளத்தில் வீழ்ந்தால் நீ ஒரு ஷஹீத்.
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார். 
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 2480. 
அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَ: «فَلَا تُعْطِهِ مَالَكَ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي؟ قَالَ: «قَاتِلْهُ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي؟ قَالَ: «فَأَنْتَ شَهِيدٌ»، قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ؟ قَالَ: «هُوَ فِي النَّارِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை" என்று கூறினார்கள். அந்த மனிதர், "அவன் என்னுடன் சண்டையிட்டால்...?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!" என்று கூறினார்கள். "(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்...?" என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், "அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்" என்றார்கள். "நான் அவனைக் கொன்றுவிட்டால்...?" என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் நரகத்திற்குச் செல்வான்" என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 225. 
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

சில குறிப்புகள்
உரிமைகள் பறிக்கப்பட்ட / ஒடுக்கப்பட நேரத்தில் உரிமைக்காக குரல் உயர்த்திய வீரர்களில் சிலர்.
1 .நபி (ஸல்) அவர்கள் நபியாகும் முன்பே இந்த புனிதமான செயலில் பங்கெடுத்துக் கொண்டார்கள் ஹில்ஃபுல் ஃபுலூல் என்ற மனித உரிமை இயக்கத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு போராடினார்கள் .
2 . ஹுஸைன் ரலி அவர்கள் கர்பலாவில் போராடினார்கள்
3 . அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள்
4 . இப்னு தைமியா (ரஹ்) அவர்கள்.
5 . இந்தியா சுதந்திரத்திற்காக வேண்டி போராடிய பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள்.
6. ஜாதி ஒழிப்பு போராட்டக்காரர்களான  டாக்டர் அம்பேத்கார் / தந்தை பெரியார் .
இவர்களெல்லாம் தாம் ஒடுக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்ட நேரத்தில் கிளர்ந்தெழுந்து போராடியதற்காக கைது செய்யப்பட்டாலும் கொலை செய்யப்பட்டாலும் தொடர்ந்து போராடியதால் வெற்றி கண்டார்கள் நாமும் அதே வழியை கையாண்டு விரைவில் வெற்றிபெறுவோம் 

3 .@@@@@@@

கோமாளியாக இருப்பது கூடாது / ஆவணங்களைத் சீர் செய்.

عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، قَالَ: جَاءَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ وَرَجُلٌ مِنْ كِنْدَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ الْحَضْرَمِيُّ: يَا رَسُولَ اللهِ، إِنَّ هَذَا قَدْ غَلَبَنِي عَلَى أَرْضٍ لِي كَانَتْ لِأَبِي، فَقَالَ الْكِنْدِيُّ: هِيَ أَرْضِي فِي يَدِي أَزْرَعُهَا لَيْسَ لَهُ فِيهَا حَقٌّ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْحَضْرَمِيِّ: «أَلَكَ بَيِّنَةٌ؟» قَالَ: لَا، قَالَ: «فَلَكَ يَمِينُهُ»، قَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ الرَّجُلَ فَاجِرٌ لَا يُبَالِي عَلَى مَا حَلَفَ عَلَيْهِ، وَلَيْسَ يَتَوَرَّعُ مِنْ شَيْءٍ، فَقَالَ: «لَيْسَ لَكَ مِنْهُ إِلَّا ذَلِكَ»، فَانْطَلَقَ لِيَحْلِفَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَدْبَرَ: «أَمَا لَئِنْ حَلَفَ عَلَى مَالِهِ لِيَأْكُلَهُ ظُلْمًا، لَيَلْقَيَنَّ اللهَ وَهُوَ عَنْهُ مُعْرِضٌ»
வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (யமன் நாட்டிலுள்ள) "ஹள்ர மவ்த்" எனும் இடத்தைச் சேர்ந்த மனிதர் ஒருவரும் "கிந்தா" எனும் குலத்தைச் சேர்ந்த இன்னொரு மனிதரும் வந்தனர். அப்போது ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்குச் சொந்தமான நிலத்தை இவர் ஆக்கிரமித்துவிட்டார்" என்று கூறினார். அதற்கு கிந்தா குலத்தைத் சேர்ந்த அந்த மனிதர், "அது என் கைவசமுள்ள என்னுடைய நிலம்; அதில் நான் விவசாயம் செய்துவருகிறேன்; அதில் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதரிடம், "(உமது வாதத்தை நிரூபிப்பதற்கு) உம்மிடம் ஆதாரம் ஏதும் உண்டா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் இவர் சத்தியம் செய்வதுதான் உமக்கு (வழி)" என்று கூறினார்கள். உடனே ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர் "அவர் (துணிந்து பொய் சொல்லும்) பொல்லாத மனிதர். தாம் எதற்குச் சத்தியம் செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் கவலைப்படமாட்டார். எந்த விவகாரத்திலும் அவர் நேர்மையைப் பற்றி யோசிப்பவரில்லை" என்று சொன்னார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதைத் தவிர உமக்கு வேறு வழி கிடையாது" என்று கூறினார்கள். உடனே (பிரதிவாதியான) அந்த (கந்தா குலத்து) மனிதர் சத்தியம் செய்வதற்காக (குறிப்பிட்ட இடத்திற்கு)ச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவருடைய செல்வத்தை உண்பதற்காக அநியாயமாக அவர் பொய்ச் சத்தியம் செய்தால், அல்லாஹ் அவரைப் புறக்கணிக்கும் நிலையிலேயே (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 223. 
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

عن عوف بن مالك، أنه حدَّثهم: أن النبيّ -صلَّى الله عليه وسلم- قضى بين رجلين، فقال المَقضيُّ عليه لما أدْبرَ: حَسْبيَ الله ونعْمَ الوكيل، فقال النبيَّ -صلَّى الله عليه وسلم-: "إن الله عزّ وجلّ يلومُ على العَجْزِ ولكنْ عَليكَ بالكَيسِ، فإذا غَلَبَكَ أمرٌ فقل: حَسْبِيَ الله ونِعْمَ الوكيل" (3).
__________
 (3) إسناده ضعيف بقية بن الوليد على ضعفه مدلس وقد عنعن، 
 
இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு வழக்கு . இவரால் ஆதாரங்கள் கொடுக்க முடியாததால் எதிரி (பொய்) சத்தியம் செய்து ஜெயித்துவிட்டார் அந்த நேரத்தில் இவர் சொன்னார் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகின்றேன் அவன் பார்த்துக் கொள்வான் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய நேரத்தில் நபி அவர்கள் (கண்டித்தார்கள்) ஏமாளித் தனமாக இருப்பதை அல்லாஹ் வெறுக்கின்றான். 
திறமையாக-சரியாக இருக்க வேண்டும் பின்பு தோற்றுவிட்டால் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று சொல் என்பதாக கூறினார்கள்.

இந்த ஹதீஸ் பலவீனமானது. இதற்கு வலுசேர்ப்பதற்காக பின் வரக்கூடிய ஹதீஸ் துணையாக நிற்கின்றது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ الْقَوِيُّ، خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆரோக்கியம்/அறிவாற்றல் நிறைந்த) பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உண்டு ..... 
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 5178. 
அத்தியாயம் : 46. (தலை)விதி

எனவே நம்முடைய எதிர்கால நலனுக்காக எல்லா ஆவணங்களையும் மிகச்சரியாக சீரமைத்து அதனை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வது நம் மீது கடமை என்பதை மேற்சொன்ன ஹதீஸ்கள் உணர்த்துகின்றன

4 .@@@@@@@

முற்றிலும் கைவிட வேண்டியவைகள்.
1.பாவங்களிலிருந்து விடுபட்டு அதிகமாக இஸ்திஃபார் செய்யவேண்டும்.
2.பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறார்கள் இந்நேரத்தில் தவ்ஹீத்/ தேவ்பந்தி / பரேலவி / தப்லீக்  என பரஸ்பரம் முட்டி மோதிக் கொள்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
3.ஆடம்பர வாழ்க்கையும் தவிர்க்க வேண்டும்.
4.என்னிடம் எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கின்றன என தப்புக்கணக்கு போட்டு உரிமைக்கான போராட்டத்தை விட்டும் ஒதுங்கி நிற்பது முற்றிலும் தவறானது.
ஒரு ஜெர்மனிய பழமொழி சொல்வதுபோல இனம்/  ஜாதி / கொள்கை காரணம் காட்டி கண் முன்னால் சிலரை அடித்தார்கள் நான் கண்டிக்கவில்லை கண்டுகொள்ளவில்லை . காரணம் நான் அந்த இனம் / ஜாதி / கொள்கை அல்ல என்பதால் .
இறுதியாக என்னை அடித்தார்கள் எனக்காக குறல் கொடுக்க யாருமில்லை . எனவே உரிமை மீட்பு போராட்டத்தில் நாமும் கண்டிப்பாக கலந்து கொண்டாக வேண்டும். 

5 .@@@@@@@
வேண்டாம் விரக்தி.
وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
(விசுவாசங்கொண்டோரே!) நீங்கள் தைரியத்தை இழந்துவிட வேண்டாம்,  கவலையும் பட வேண்டாம், (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் தாம் மிக்க மேலானவர்கள்.
(அல்குர்ஆன் : 3:139)

وَالضُّحٰىۙ‏ وَالَّيْلِ اِذَا سَجٰىۙ‏  مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰى‏  وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰى‏ وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى‏
ஒளிமிக்க பகலின் மீது சத்தியமாக!
மேலும், இரவின் மீதும் சத்தியமாக, அது அமைதியாக வந்தடையும் போது!
(நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை.
மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தைவிட உமக்கு மிகவும் சிறந்ததாக அமையும்.
இன்னும், உமதிரட்சகன் அடுத்து(ப்பல உயர்பதவிகளை) உமக்கு அளிப்பான், அப்போது நீர் திருப்தியடைவீர். (அல்குர்ஆன் : 93:1 to 5)

தக்வாவும் துஆவும் கை கொள்வோம்.
اللَّهُمَّ أَنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ،
அல்லாஹ்வே சிறுபான்மையினரான நம்பிக்கையாளர்களை பாதுகாப்பாயாக காப்பாற்றுவாயாக . புகாரி ஹதீஸ் 3386.

وَلَمَّا بَرَزُوْا لِجَـالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا 
رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَ‏
மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர். (அல்குர்ஆன் : 2:250)

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِىْۤ اَمْرِنَا وَ ثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏
“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக! எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக! மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக!” (அல்குர்ஆன் : 3:147). 

நாம் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காக பத்ர் / உஹத் தில்  அவர்கள் தன் உதிரத்தை ஊற்றி உயிரையே துறந்தார்கள் . நாம் ஒரு சில மணி நேரம் / சில வேர்வைத் துளி சிந்தாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பது நியாயமா. எனவே உரிமைக்காக குரல் கொடுத்து தொடர்ந்து போராடுவோம் . வெற்றி அல்லது ஷஹீத் என்ற இலக்கோடு பயணித்து இரு உலகிலும்` வெற்றியடைந்தவர்களாக ஆக்குவானாக ஆமீன்

வெள்ளி, 24 ஜனவரி, 2020

குணத்தால் வெல்வோம்


بسم الله الرحمن الرحيم
குணத்தால் வெல்வோம்
******************************************
قال الله تعالي:

مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا ۚ وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُم بَعْدَ ذَٰلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُون

قال رسول الله صلي الله عليه وسلم:
6/626- وعن أَبي الدَّرداءِ : أَن النبيَّ ﷺ قالَ: مَا مِنْ شَيءٍ أَثْقَلُ في ميزَانِ المُؤمِنِ يَومَ القِيامة مِنْ حُسْنِ الخُلُقِ، وإِنَّ اللَّه يُبْغِضُ الفَاحِشَ البَذِيَّ رواه الترمذي

உலகிலுள்ள உயிரினங்களனைத்தும் இறைவனின் குடும்பமாகும். அவ்வுயிர்களுக்கு யாதோர் தீங்கும் இழைக்காது நன்மை புரிந்து வாழ்பவர்கள் இறைவனுக்கு மிக உவப்பானவர்களாவர். மாந்தர்கள் ஒவ்வொருவரும் தன்னல்லாதவர்கள் மீது கருணை காட்டுவதும், அன்பு செலுத்துவதும், உதவி உபகாரங்கள் புரிவதும் படைத்த இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத்தரும் காரியங்களாகும்.
உலகில் தோன்றிய மதங்களனைத்தும் போதிப்பது இதைத்தான்

وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ

மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாக) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிபோக்கருக்கும், யாசிப்பவருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும். மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயலாகும்.                    - அல்குர்ஆன் 2:177


நபிபெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
حديث (ارحموا من في الأرض يرحمكم من في السماء)

பூமியிலுள்ளவர்களின் மீது நீங்கள் கருணை காட்டுங்கள் வானிலுள்ள இறைவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.
-       அறிவிப்பாளர் : அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி)  நூல் : திர்மிதி.

மற்றவர்களுக்கு கருணை காட்டுபவர்கள் ஆஷிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கருணை காட்டப்படும்.                  - நூல்: பைபிள் (மத்தேயு 5).

நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்தினால் இறைவன் உங்கள் மீது அன்பு செலுத்துவான். நூல் :திருமந்திரம்

வெறுப்பை அன்பினால் வெல்க; தீமையை நன்மையால் வெல்க; கருமித்தனத்தை தானத்தால் வெல்க.        -புத்தரின்போதனை

பிற மதங்கள் அன்பையும், கருணையையும், உதவி புரிதலையும் வலியுறுத்துவதை விட இஸ்லாம் மிகஅதிகமாக வலிறுத்தியிருப்பதைக் காணலாம்.

والمُؤمِنُ مَن أمِنَه الناسُ على أمْوالِهِم وأنْفُسِهم،

எவரை மக்கள் தம்முடைய உயிர், உடைமை ஆகியவற்றின் பாதுகாவலராக நினைக்கின்றார்களோ, மக்கள் எவரிடமிருந்து தமக்கு எந்த விதத்திலும் ஆபத்து வராது என்று முழுமன நிறைவு கொள்கிறார்களோ அவர் தான் முஃமின் (உண்மையான இறை நம்பிக்கையாளர்) ஆவார்.
- அறிவிப்பாளர் : ஃபளாலா (ரலி)
நூல் : திர்மிதி


இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள்படும். தனது பெயரிலேயே அமைதியைக் கொண்டுள்ள மார்க்கம் உலகில் மனித சமூகம் அமைதியாக வாழ்வதற்கு ஊறுவிளைவிக்கும் அனைத்துச் செயல்களையும் கடுமையாகத் தடுத்துள்ளது.

அநியாயமாக ஒரேயொரு மனிதனைக் கொலை செய்தாலும் அவன் முழு மனித சமுதாயத்தையே கொன்றவனைப் போல  பெரும் குற்றவாளி என்று திருக்குர்ஆன்  கூறுகிறது.

مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا ۚ وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُم بَعْدَ ذَٰلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ

இதன் காரணமாகவே, “ஓர் ஆத்மாவுக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்பட்ட குழப்பத்தி(னைத் தடுப்பத)ற்காகவோ அல்லாமல் நிச்சயமாக எவரொருவர் மற்றோர் ஆத்மாவைக் கொலை செய்கிறாரோ அப்பொழுது மனிதர்கள் அனைவரையும் அவர் கொலை செய்தவர் போன்றாகிவிடுவார்”.
எவரொருவர் அதனை (ஓர் ஆத்மாவை) வாழவைக்கிறாரோ மனிதர்கள் அனைவரையும் அவர் வாழவைத்தவர் போன்றாகிவிடுவார். என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம் . அல்குர் ஆன் 5:32

மனித வாழ்வின் கட்டமைப்புகளை சீர்குலைப்பது, மக்களை அநியாயமாகக் கொலை செய்வது, அவர்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் சேதாரம் விளைவிப்பது. அவர்களின் பொருளாதாரத்தை நசுக்குவது, இருப்பிடங்களை அழிப்பது, உறவுகளுக்கிடையே பிளவை உண்டாக்குவது இச்செயல்கள் யாவும் தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகும் .
நாளுக்கு நாள் பரவிக் கொண்டே வரும் இந்த தீவிரவாதச் செயல்கள் மக்களின் அமைதிக்கு மாபெரும் அச்சுறுத்தலாகியிருப்பதைப் பார்க்கிறோம்.

தனிமனிதர்கள் மட்டுமின்றி, சில விஷமக் கும்பல் கூட இந்த மாபாதகச் செயல்களில் ஈடுபடுகின்றன. தீவிரவாதச் செயல்களில் நாட்டம் கொண்ட மனிதர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர். ஆனால் அவர்களின் செயல்பாடுகளை அவர்கள் சார்ந்த மதத்தோடு இணைத்துப் பார்ப்பது முட்டாள்தனமானது. ஏனெனில், மதங்களனைத்தும் இவற்றை கண்டிக்கின்றனவே தவிர எந்த மதமும் இதனை ஊக்குவிப்பதில்லை.

சட்டப்படியான வழிமுறைகளைப் பின்பற்றாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்வது தீவிரவாதமாகும். (EXTREMISM)
அரசியல் நோக்கத்திற்காக மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் வன்முறையில் ஈடுபடுவது பயங்கரவாதமாகும் (TERRORISM). தீவிரவாதம், பயங்கரவாதம் இரண்டுக்கும் அகராதியில் கூறப்பட்டுள்ள மேற்கண்ட விளக்கத்தை கவனித்துப்பாருங்கள். இதிலே மதம் எங்கே வருகிறது?

ஆனால், இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இந்த வார்த்தைகளோடு இணைத்து இஸ்லாமியத் தீவிரவாதம் என்றும், முஸ்லிம் தீவிரவாதி என்றும் திரும்பத் திரும்பக் கூறி உலகில் தீவிரவாத, பயங்கரவாதச் செயல்கள் எங்கு நடந்தாலும் அதனை முஸ்லிம்தான் செய்திருப்பான். அவன் சார்ந்த மதம் தான் அக்காரியங்களில் ஈடுபட அவனைத் தூண்டிவிடுகிறது என்ற முழுப்பொய்யை சாமான்ய மக்கள் நம்புமாறு கூறுவதில் உலக மீடியாக்கள் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன.
இதன் பின்னணி முஸ்லிம் விரோத ஆட்சியாளர்களின் முழு ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாசிச சக்திகளின் சதிகளில் சிலதை உங்கள் கவனத்துக்குத் தருகின்றேன்.
1921-ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் அடக்கு முறைகளை எதிர்த்து கேரளாவில் நடைபெற்ற மாப்ளா முஸ்லிம்களின் போராட்டங்களையும், அவர்களின் தியாகங்களையும் கொச்சைப்படுத்தி இது சுதந்திரப் போராட்டம் அல்ல. மலபார் முஸ்லிம்கள் நடத்திய இனக்கலவரம். இதில் இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டது. இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் என்று இளங்கலை வரலாறு படிக்கும் மாணவர்களுக்கான பாடநூலில் பதிவுசெய்துள்ளனர்.
நூல் : History Of Freedom Struggle In Inida 251-253
அதேபோல் இந்தியாவிலுள்ள பல்வேறு கோவில்களுக்கு நிலமும், மானியமும் வழங்கி தம் ஆட்சியின் கீழுள்ள இந்து மக்களை நியாயமாக நடத்திய அவ்ரங்கஜேப் போன்ற முகலாய மன்னர்களை, கோவில்களை இடித்தார்கள். ராஜவம்சப் பெண்களை கற்பழித்தார்கள். முஸ்லிம் அல்லாத மக்களை கொடுமைப்படுத்தினார்கள் என்றெல்லாம் அவதூறுகளை பரப்பியுள்ளனர்.
பாடநூல்களை திருத்தினர். வரலாறுகளை திரித்தனர். தேசத்துக்காக பாடுபட்டவர்கள் தேசதுரோகிகளாகவும், ஆங்கிலேயரின் அடிவருடிகளாக இருந்த துரோகிகளை தியாகிகளாகவும் உருவகப்படுத்தினர்.
இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் வன்முறைச் சம்பவங்களில் வேண்டுமென்றே முஸ்லிம்களின் மீது பழி போட்டு அதனை தலைப்புச்செய்தியாக்கி மாற்று மதத்தார்களிடம் முஸ்லிம்களின் மீது அவப்பெயரை உண்டாக்க முயற்சித்தனர்.
பிறகு விசாரணை முடிந்து அச்சம்பங்களில் முஸ்லிம்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்ற உண்மை வெளியே வந்தபோது அதனை பத்திரிக்கைகளில் ஓர் ஓரத்தில் பெட்டிச்செய்தியாக வெளியிடுவர், அல்லது முழுமையாக இருட்டடிப்பு செய்து விடுவர்.

வளர்த்த கடா மார்பில் பாய்கிறது எனும்‘ தலைப்பில் R.S.S.இயக்கத்தை சேர்ந்த S.குருமூர்த்தி என்பவர் 17/10/2000 அன்று வெளிவந்த தினமணி நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் தூவியுள்ள விஷக்கருத்தைப் பாருங்கள்.
இஸ்லாமியத்தீவிரவாதத்தால் இந்தியா பல நூற்றாண்டுகளாக இன்னல்களை அனுபவித்து வருகிறது. கஜினி முதல் கோரி வரை பலர் வெறியாட்டம் ஆடினர். அவர்களை எதிர்த்து இந்தியர்கள் கடுமையாகப் போராடினர். இந்தியாவின் இஸ்லாமிய வரலாறு இரத்தக்கறை படிந்தது. இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எங்கு முடிவு ஏற்படும் என்றே தெரியவில்லை.

பாசிச சக்திகளும், மதவாதிகளும் முஸ்லிம்களின் மீது எந்த அவதூறைச் சொன்னாலும் அதனை உலகம் முழுவதும் பரப்ப மீடியாக்கள் தயாராகவே இருக்கின்றன. சமீபகாலங்களில் இஸ்லாத்துக்கு எதிரான மீடியாக்களின் பரப்புரைகள் அதிகரித்து வருவதைக் காணமுடியும்.
டெல்லியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட தீவிரவாதிகள் கைது. தமிழகத்தில் தாக்குதல் நடத்தத் திட்டம். பண்டிகை காலங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்த சதி செய்த பயங்கரவாதிகள் கைது. IS இயக்க ஆதரவாளர்கள் கைது என்றெல்லாம் அடிக்கடி செய்தி வெளியிட்டு அதில் முஸ்லிம் இளைஞர்கள் பெயர்களையும், புகைப்படங்களையும் பிரசுரித்து சமுதாயத்தில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
அவர்களின் அவதூறுகளையும், பொய்ப்பிரச்சாரங்களையும் முறியடிக்க நம்மிடத்தில் வலிமையான ஊடகங்களோ, ஆட்சி அதிகாரங்களோ, பெரும்பான்மை பலமோ கிடையாது. நீதிமன்றத்தில் முறையிட்டாலும் முறையான நீதி கிடைப்பதில்லை. சட்டப்படியாக போராட்டத்தில் ஈடுபட்டாலும், பெரும்பாலும் அதற்கு காவல்துறை அனுமதிப்பதில்லை. போராட்டம் செய்வோரை தேசதுரோகம் செய்ததாக கைது செய்கிறது.
இந்நிலையில், நமது தேசப்பற்றை நிரூபிக்கவும், இறையாண்மையை ஊர்ஜிதப்படுத்தவும், பிற மதத்தார் அனைவரும் நமது சகோதரர்களே. அவர்களுக்கு நாம் எந்த தீங்கும் இழைப்பவரல்ல என்பதை புரிய வைப்பதற்கும் நம்மீது சுமத்தப்பட்டு வரும் களங்கத்தைத் துடைத்தெறிவதற்கும் நமக்குள்ள ஒரே வழி இஸ்லாம் நமக்கு வலியுறுத்தியுள்ள நற்குணங்களைக் கொண்டு நம்மை அலங்கரித்துக் கொள்வதே.

«إنما بعثت لأتمم مكارم الأخلاق
நற்குணங்களை முழுமைப்படுத்தவே நான் நபியாக வந்துள்ளேன் என்று நபி பெருமான்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.       அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: அஹ்மது

6/626- وعن أَبي الدَّرداءِ : أَن النبيَّ ﷺ قالَ: مَا مِنْ شَيءٍ أَثْقَلُ في ميزَانِ المُؤمِنِ يَومَ القِيامة مِنْ حُسْنِ الخُلُقِ، وإِنَّ اللَّه يُبْغِضُ الفَاحِشَ البَذِيَّ رواه الترمذي وقال: حديثٌ حسنٌ صحيحٌ.
மறுமைநாளில் ஒரு முஃமினுடைய தராசில் நற்குணத்தை விட கனமான எந்த அமலும் இருக்காது.                         அறிவிப்பாளர்: அபுத்தர்தா (ரலி)
நூல்: திர்மிதி

7/627- وعن أبي هُريرة  قَالَ: سُئِلَ رسولُ اللَّه ﷺ عَنْ أَكثرِ مَا يُدْخِلُ النَّاسَ الجَنَّةَ، قَالَ: تَقْوى اللَّهِ، وَحُسْنُ الخُلُق، وَسُئِلَ عَنْ أَكثرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ، فَقَالَ: الفَمُ وَالفَرْجُ رواه الترمذي وقال: حديثٌ حسنٌ صحيحٌ.
மனிதர்கள் அதிகமாக சொர்க்கம் செல்வதற்கு எது காரணமாக இருக்கிறது என்று பெருமானாரிடம் கேட்கப்பட்ட போது இறையச்சமும், நற்குணமும் என்று கூறினார்கள்.                                 அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: திர்மிதி

நற்குணமுள்ளவர் எல்லா நலன்களும் வழங்கப்பட்டவராவார். நற்குணங்களால் சமூகத்தில் கண்ணியமும், மதிப்பும் ஏற்படுகிறது. அல்லாஹ்வின் பிரியமும், நெருக்கமும் உண்டாகிறது. மாற்றார்களின் உள்ளங்களிலும் நம்மைப் பற்றி நல்ல அபிப்ராயம் உண்டாகிறது. அவர்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு அதுவே காரணமாக இருக்கிறது.
நபிபெருமானார் (ஸல்) அவர்களின் காலம் முதல் நமது காலகட்டம் வரை இனிய இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாய் ஏற்றுக்கொண்ட அநேகம் பேர்கள் அதற்குக் காரணமாய் கூறுவது இஸ்லாம் போதிக்கும் நற்குணங்களையும் அவற்றை செயல்படுத்தி வாழ்ந்த முஸ்லிம்களின் வழிமுறைகளையும் கண்டுதான் என்பது நிதர்சனமான உண்மை.
இதற்கு ஆதாரமாக எத்தனையோ சான்றுகளைக் கூறலாம்.

* عن عبد الله بن سلام : أن الله لما أراد هدى زيد بن سعنة قال زيد : لم يبق شيء من علامات النبوة إلا وقد عرفتها في وجه محمد صلى الله عليه وسلم  حين نظرت إليه إلا اثنتين لم أخبر هما منه : يسبق حلمه جهلة ، ولا تزيده شدة الجهل عليه إلا حلما .

قال:فكنت أتلطف له لأن أخالطه فأعرف حلمه وجهله، فذكر قصة إسلافه للنبي صلى الله عليه وسلم  مالا في ثمرة. قال : فلما حل الأجل أتيته فأخذت بمجامع قميصه وردائه وهو في جنازة مع أصحابه ، ونظرت إليه بوجه غليظ ، وقلت : يا محمد ألا تقضيني حقي ؟ فو الله ما علمتكم بني عبد المطلب لمطل.

قال فنظر إلا عمر وعيناه تدوران في وجهه كالفلك المستدير، قم قال: يا عدو الله أتقول لرسول الله صلى الله عليه وسلم  ما أسمع، وتفعل ما أرى ؟ فوالذي بعثه بالحق لو ما أحاذر لومه لضربت بسيفي رأسك.

ورسول الله صلى الله عليه وسلم  ينظر إلى عمر في سكون وتؤدة وتبسم، ثم قال: " أنا وهو كنا أحوج إلى غير هذا منك يا عمر، أن تأمرني بحسن الأداء، وتأمره بحسن التباعة، أذهب به يا عمر فاقبضه حقه، وزد عشرين صاعاً من تمر ".

فأسلم زيد بن سعية رضي الله عنه، وشهد بقية المشاهد مع رسول الله.



ஜைத் பின் ஸஃனா என்ற யூதர் நபி(ஸல்) அவர்களுக்கு பேரித்தம்பழங்களை கடன் கொடுத்துவிட்டு தவணை முடிய இரண்டு நாள் இருக்கும் போதே நபியவர்களிடம் சென்று அன்னாரின் சட்டையைப் பிடித்து, நபிகளாரையும் அவர்களின் குடும்பத்தாரையும், மரியாதைக் குறைவாகப் பேசிய போது அங்கிருந்த உமர்(ரலி) அவரை எச்சரித்தார்கள். ஆனால், நபியவர்களோ சற்றும் கோபம் கொள்ளாமல் அமைதியாக இருந்தார்கள். யூதரை எச்சரித்த உமர்(ரலி) அவர்களை பெருமானார் கண்டித்ததோடு தாம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்குமாறும் அந்த யூதரை எச்சரித்ததற்காக 20 மரக்கால் பேரித்தம்பழங்களை (சுமார் 64கிலோ) அதிகமாக கொடுக்குமாறும் உத்தரவிட, பெருமானாரின் நற்குணத்தை பார்த்த யூதர் உடனே முஸ்லிமாகி தன் திரண்ட செல்வத்தை இஸ்லாத்துக்காக அர்ப்பணித்தார் தபூக் யுத்தத்தில் ஷஹீதாகி தனது உயிரையும் தியாகம் செய்தார்.                     நூல் :ஹயாத்துஸ்ஸஹாபா

قصة تقاضي علي بن أبي طالب رضي الله عنه مع الرجل النصراني أمام شريح القاضي يرويها الإمام البيهقي رحمه الله في " السنن الكبرى " (10/136)، في باب "باب إنصاف الخصمين في المدخل عليه والاستماع منهما والإنصات لكل واحد منهما حتى تنفد حجته، وحسن الإقبال عليهما"، ورواية القصة عن الإمام الشعبي حيث يقول:
خرج علي بن أبي طالب إلى السوق، فإذا هو بنصراني يبيع درعا، قال: فعرف علي الدرع فقال: هذه درعي، بيني وبينك قاضي المسلمين. قال: وكان قاضي المسلمين شريح، كان علي استقضاه. قال: فلما رأى شريح أمير المؤمنين قام من مجلس القضاء، وأجلس عليا في مجلسه، وجلس شريح قدامه إلى جنب النصراني، فقال له علي: أما يا شريح لو كان خصمي مسلما لقعدت معه مجلس الخصم، ولكني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: (لا تصافحوهم، ولا تبدءوهم بالسلام، ولا تعودوا مرضاهم، ولا تصلوا عليهم، وألجئوهم إلى مضايق الطرق، وصغروهم كما صغرهم الله)
اقض بيني وبينه يا شريح. فقال شريح: ما تقول يا أمير المؤمنين؟ قال: فقال علي: هذه درعي ذهبت مني منذ زمان. قال فقال شريح: ما تقول يا نصراني؟ قال: فقال النصراني: ما أكذب أمير المؤمنين، الدرع هي درعي. قال فقال شريح: ما أرى أن تخرج من يده، فهل من بينة؟ فقال علي رضي الله عنه: صدق شريح. قال فقال النصراني: أما أنا أشهد أن هذه أحكام الأنبياء، أمير المؤمنين يجيء إلى قاضيه، وقاضيه يقضي عليه، هي والله يا أمير المؤمنين درعك، اتبعتك من الجيش وقد زالت عن جملك الأورق، فأخذتها، فإني أشهد أن لا إله إلا الله، وأن محمدا رسول الله. قال: فقال علي رضي الله عنه: أما إذا أسلمت فهي لك. وحمله على فرس عتيق،
ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் தனது கவச உடையை யூதரொருவர் திருடி கடை வீதியில் விற்பதைக் கண்டு நீதிபதி காஜி ஷூரைஹ்(ரஹ்) அவர்களிடம்  முறையிடுகிறார்கள். ஷூரைஹ் அவர்கள் அதற்கு சாட்சி கேட்க, தனது மகன் ஹஸனையும் தனது அடிமையையும் அழைத்து வருகிறார்கள். மகனின் சாட்சியை ஏற்க முடியாது என்று கூறி யூதருக்கு சாதகமாக நீதிபதி தீர்ப்புச் செய்ததைக்கண்ட அந்த யூதர் இஸ்லாம் போதிக்கும் நீதம், நியாயம் ஆகியவற்றைக் கண்டு வியந்து உண்மையைக் கூறி முஸ்லிமாகி விடுகிறார்.
நூல் : ஹயாத்துஸ்ஸஹாபா

சில வருடங்களுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த ஆதில் முஹம்மது என்பவர் பெங்களூரிலிருந்து தனது ஊருக்குச் செல்லும் போது அவர் பேருந்தில் பயணித்த மாற்று மத சகோதரர் டிக்கெட் வாங்கும் போது 500ரூபாய் நோட்டைக் கொடுக்கிறார். அது சற்று கிழிந்திருந்ததால் நடத்துநர் வாங்க மறுக்கிறார். அதைக் தவிர வேறு பணம் அவரிடமில்லை. எனவே, நடத்துநர் அவரையும், அவர் மனைவி, குழந்தையை இரவு நேரம் என்பதைக் கூட பாராமல் கீழே இறங்கச் சொன்ன போது, ஆதில் முஹம்மது தன்னிடமுள்ள 500ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு கிழிந்த நோட்டை வாங்கிக் கொள்கிறார். அந்த மாற்றுமத தம்பதி இதைக்கண்டு நெகிழ்ந்து போய் அவரின் காலில் விழுந்து நன்றியைத் தெரிவித்ததோடு அவரின் செல் நம்பரையும் வாங்கிக் கொள்கிறார்கள்.

சில தினங்களுக்குப்பின் அவருக்கு போன் செய்து நான், எனது மனைவி, குழந்தை, என் பெற்றோர் ஆகிய ஐந்து பேரும் இஸ்லாத்தை ஏற்கத் தயாராக இருக்கிறோம். எங்களை முஸ்லிமாக்கி விடுங்கள் என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
கடந்த 2015 நவம்பர் மற்றும் டிசம்பரில் சென்னையில் பெய்த அடைமழையால் கிட்டத்தட்ட சென்னையே மூழ்கும் நிலை ஏற்பட்டு மாநகர மக்கள் கடும் அவதிக்குள்ளான போது முஸ்லிம் சகோதர்கள் ஆற்றிய தொண்டுகள் மறக்க முடியாதவை. சாதி, மதம், இனம் பாராமல் அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு பொருட்களை விநியோகம் செய்தது. வெள்ளத்தில் தத்தளித்தவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றியது வீடிழந்த மக்களை பள்ளிவாசல்களில்  தங்கவைத்தது. கோயில்களில் நுழைந்த சகதிகளை அப்புறப்படுத்தி தூய்மையாக்கித் தந்தது என அவர்கள் செய்த அளப்பரிய பணியை பாராட்டி “தி இந்து” தமிழ் நாளிதழில் பத்திரிகையாளர் சமஸ் இப்படி எழுதினார்.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இந்நாள் வரை பொதுச் சமூகம் யாரை அதிகம் வெறுப்புணர்வோடும், கசப்புணர்வோடும் பார்த்துக் கடந்ததோ, வீட்டை வாடகைக்கு விட யோசித்ததோ அந்த இஸ்லாமிய மக்கள் தாம் ஓடி ஓடி உதவுவதில் முன்னிலையில் நிற்கிறார்கள்.         - இனிய திசைகள் டிசம்பர் 2015



அதற்குப்பின் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பின் போதும் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்படுவதற்கு முன் நமது சமுதாய சகோதரர்கள் செய்த பணிகளை மறந்து விட முடியாது. இத்தகைய நற்பண்புகளைப் பார்த்துத்தான் இன்று நாம் நடத்தும் போராட்டங்களில் நமது மாற்றுமத சகோதரர்களும் பெருமளவில் பங்கெடுத்து வருகிறார்கள்.
இஸ்லாம் கூறும் நற்பண்புகளை நாம் பின்பற்றி நடந்தால் நமது ஒவ்வொரு செயலும் மாற்றார்களுக்கு இஸ்லாமிய அழைப்பாகவும் ஹிதாயத்திற்கு காரணமாகவும் ஆகிவிடும்.
எனவே, நமது வியாபாரம், கொடுக்கல் – வாங்கலில் நேர்மையைக் கடைபிடிப்போம்.
நமது தான தர்மங்களையும், உதவி உபகாரங்களையும் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் தாராளமாக வழங்கி வாழ்வோம்.
பிறர் நமக்குச் செய்த தீமைகளை மறப்போம், மன்னிப்போம்.
நம்மால் பிறருக்கு எந்த தீங்கும் இன்னலும் நேராத விதத்தில் நடந்து கொள்வோம்.
பெற்றோர், குடும்பத்தார், உறவினர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் என ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை குறைவின்றி நிறைவேற்றுவோம்.
கோபம், பொறாமை, பெருமை, விரோதம், பகைமை, கருமித்தனம் போன்ற தீய குணங்களை புறந்தள்ளி நற்குணங்களின் வாசல்களைத் திறந்துவிடுவோம்.
இந்த உலகம் முழுவதையும் தன் வசம் ஈர்க்கும் ஆற்றல் இஸ்லாத்துக்கு உண்டு. அதற்கு நமது செயல்பாடுகள் தடையாகி விடக்கூடாது.».