புதன், 15 ஜனவரி, 2020

ஜமாஅத்தார்களின் கனிவான கவனத்திற்கு...


بسم الله الرحمن الرحيم
ஜமாஅத்தார்களின் கனிவான கவனத்திற்கு...
**************************************
கண்ணியமிக்க ஜமாஅத்தார்களே!
நம் நாட்டின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதை நாம் நன்கறிவோம் இதற்காக எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் ஒரு அங்குலம் கூட நாங்கள் பின் வாங்க மாட்டோம் என்று கூறி மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆட்சியாளர்களின் பிடியில் நாம் சிக்கித் தவிக்கின்றோம். இந்நேரத்தில் போராட்டங்களோடு நாம் நிறுத்திக் கொள்ளாமல் மேலும் சில நடவடிக்கைகளையும் கட்டுக்கோப்புகளையும் பாதுகாப்பு அரண்களையும் ஒவ்வொரு மஹல்லாவிலும் செயல்படுத்த வேண்டும்.

ஜமாஅத்தார்களாகிய நாம் செயல்படுத்த வேண்டிய காரியங்களாவன...

1) இஸ்லாத்திற்கு துணை நிற்கும் இளைஞர்களை உருவாக்க வேண்டும்.
******************************************
ஒரு சமூகத்தின் ஜீவ நாடியாகவும், மகத்தான வளமாகவும் அதன் உயிரோட்டமுள்ள ஓர் ஆக்க சக்தியாகவும் இருக்க வேண்டியவர்கள் இளைஞர்கள். ஏனெனில், இளைஞர்கள் சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பி அதன் தலைமைத்துவத்தை சுமக்கப் போகின்றவர்களாக இருக்கின்றார்கள்.
ஆனால் இன்றைய சமூக சூழலில் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்கும் பெரிதாக  பயன்படுவதில்லை என்பதையும் தாண்டி இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது தான் வேதனையிலும் வேதனை.

இத்தகைய காலச்சூழலில் வாழும் நம் இளைஞர்களை இஸ்லாமிய இலட்சிய வாதிகளாக உருவாக்குவதும் அவர்களால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் உயர்வு ஏற்படும் விதம் வழிநடத்துவதும் காலத்தின் அவசரத் தேவை.

மேலும் அவர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களை ஜமாஅத்தோடு அரவணைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வாலிபம் என்பது இறைவனின் தனிப்பெரும் அருட்கொடை.

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: " اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ , شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شُغُلُكَ , وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ " (شعب الإيمان)

'உனக்கு, ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்’ என நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு உபதேசமாக கூறினார்கள்.  அவை:
1. முதுமை வரும் முன் இளமைப் பருவத்தையும்.
2. நோய் வரும் முன் உடலாரோக்கியத்தையும்.
3. வறுமை வரும் முன் செல்வ நிலையையும்'
4. அதிக வேலை பளுக்கள் வரும் முன் ஓய்வு நேரத்தையும்.
5. மரணம் வரும் முன் வாழ்க்கையையும்.

( அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்  : ஷுஅபுல் ஈமான்.)

வாலிபம் தனிப்பெரும் அருட்கொடை என்பதால்தான் இறைவனின் அருட்கொடைகள் பற்றிய விசாரணையில் பொதுவாக வயது பற்றி ஒரு விசாரணை இருந்தும்[ வாலிபம் குறித்தும் தனியொரு விசாரணை  நடைபெறும் என வருகிறது.

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا تَزُولُ قَدِمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعِ خِصَالٍ: عَنْ عُمُرُهِ فِيمَا أَفْنَاهُ؟ وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلَاهُ؟ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا أَنْفَقَهُ؟ وَعَنْ عَلِمهِ مَاذَا عَمِلَ فِيهِ؟ " المعجم الكبير للطبراني

'மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது’. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவை:
1. தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?
2. தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினான்?
3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்? அதை எவ்வாறு செலவழித்தான்?
4. பெற்ற கல்வியின் அறிவின் மூலம் என்ன செய்தான்?

(அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் (ரலி)
நூல்  : தபரானி. )

இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் முஸ்லிம்களின் உயர்விலும் முற்கால இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்திருக்கிறது.

இஸ்லாத்தை ஏற்று தானும் பின்பற்றி மற்றவர்களையும் பின்பற்ற வைத்த நபித்தோழர்களில் அதிகமானோர் இளைஞர்களே!
நபி (ஸல்) அவர்களால் மதீனாவுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்காக அனுப்பப்பட்ட ஸஹாபி முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள்  ஒரு இளைஞர். யமனுக்கு நீதிபதியாகவும், விரிவுரையாளராகவும் அனுப்பபட்ட முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள்  ஒரு இளைஞர். என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.


2)பொருளாதார வளர்ச்சியில் நம் சமுதாய மக்களை முன்னேற்றுவதற்குரிய வழிகளைச் செய்ய வேண்டும்.
**************************************
பொருளாதாரம் என்பது ஒவ்வொருவரின் தனி மனித வாழ்விலும்;, குடும்ப வாழ்விலும் மற்றும் சமூக வாழ்விலும் தவிர்க்க முடியாதது. பொருளாதாரம் இல்லையெனில் ஒரு மனிதன் சுயமரியாதையோடு வாழவோ, தன் குடும்பத்தை வாழ வைக்கவோ தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு நன்மைகள் செய்யவோ முடியாது. இதன்படி ஒரு சமூகம் மேம்பட வேண்டுமானால் அச்சமூக மேம்பாட்டிற்கு வேண்டிய காரியங்களை செய்வதற்கு பொருளாதாரம் மிகமிக அவசியமாகும்.

ஜகாத்துக்களை முறையாக வசூல் செய்ய வேண்டும்.
******************************************
خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ‌ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ‌ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 9:103)

وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ‏

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதி ருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (அல்குர்ஆன் : 9:34)

يَّومَ يُحْمٰى عَلَيْهَا فِىْ نَارِ جَهَـنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ‌ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ‏
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).
(அல்குர்ஆன் : 9:35)

எனவே ஒவ்வொரு மஹல்லாவிலும் பைத்துல்மால் ஏற்பாடு செய்து செல்வந்தர்களிடம் ஜகாத்துக்களை முறையாக கணக்கெடுத்து வசூல் செய்து அதை அந்த ஊரில் உள்ள  தகுதியான ஏழைகளுக்கு கணிசமாக கொடுத்து அவர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கு வழி வகை செய்ய வேண்டும்.

மேலும் செல்வந்தர்களிடம் வட்டியில்லா கடன் பெற்று அதை சிறு தொழில் செய்யக்கூடிய வியாபாரிகளுக்கு கொடுத்து தவணை முறையில் வட்டி இல்லாமல் அசலை மட்டும் திருப்பிச் செலுத்த ஜமாஅத்தார்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

٦٥- عَنْ اَبِيْ قَتَادَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ سَرَّهُ اَنْ يُنْجِيَهُ اللهُ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ فَلْيُنَفِّسْ عَنْ مُعْسِرٍ اَوْ يَضَعْ عَنْهُ.(رواه مسلم )

65.கியாமத் நாளின் சிரமங்களிலிருந்து அல்லாஹுதஆலா தன்னைக் காக்க வேண்டுமென எவர் விரும்புகிறாரோ, அவர், வறுமையில் வாடுபவர்களுக்கு (கடன் பட்டவருக்கு)த் தவணை கொடுக்கவும், அல்லது (தனக்குச் சேர வேண்டியவை அனைத்தையும் அல்லது ஒரு பகுதியை மன்னித்து விடவும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)


3) மாணவ மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டல் செய்ய வேண்டும்.
***************************************
இஸ்லாமிய மாணவர்கள் கல்வியுடைய விஷயத்தில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றனர் அரசு அதிகாரிகளாக முஸ்லிம்கள் மிக மிக குறைவு தற்கால சூழ்நிலையில் IAS  IPS. BABL போன்ற படிப்புகளை படிக்க வைக்க வேண்டும் சமுதாயத்தை பாதுகாக்க ஒவ்வொரு மஹல்லாவிலும் குறைந்தது இரண்டு மூன்று நபர்கள் சட்ட கல்வி படித்தவர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அதன் முயற்சியில் மஹல்லா நிர்வாகம் ஈடுபடவேண்டும் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை நபர்கள் உள்ளார்கள் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் எத்தனை நபர் என்ன படிக்கின்றார்கள் என்பதை கணக்கிட்டு அவர்களுக்கு கல்வி வழிகாட்டல் செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அவர்களின் படிப்பு தடைபட்டு விடாமல் இருக்க  பொருளாதார ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

மேலும் பெண்கள் கல்வி காலசூழ்நிலை கருதி 10.12 வகுப்புகள் படிக்க வைப்பதே போதுமானதாகும். மேலும் படிக்க ஆர்வமுள்ள பெண்களுக்கு பாதுகாப்பான கல்விக்கூடம். பாதுகாப்பான போக்குவரத்துக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் அதற்குண்டான ஆலோசனைகளை மஹல்லா ஜமாஅத் வழங்க வேண்டும்.

மேலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்காக வாரத்தில் ஒருமுறை அல்லது மாதத்தில் இருமுறையாவது அவர்களுக்கு இறையச்சத்தை அதிகப்படுத்தும் வண்ணம் நல்லுபதேசம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மஹல்லாவிலும் நிஸ்வான் மதரஸாக்கள் நடத்தலாம் வாரத்தில் ஒருநாள் கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தலாம்.


4)திருமணத்திற்கு முன் கவுன்சிலிங் கூட்டம் நடத்துவது.
****************************************
இன்று எத்தனையோ இளைஞர்களும் இளைஞிகளும் திருமண வாழ்க்கை சம்பந்தமான போதிய விளக்கங்கள் தெரியாமல் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் விவாகரத்து வரை சென்று விடக்கூடியவர்களும் உண்டு எனவே ஒவ்வொரு மஹல்லாவிலுமோ அல்லது ஒரு வட்டாரத்தில் ஓர் இடத்திலோ மாதம் ஒரு முறை அந்த மாதத்தில் திருமணம் நடக்கவிருக்கும் மணமக்களுக்கு ஆண்கள் பெண்கள் தனித்தனியாக ஒவ்வொரு நாளில் கவுன்சிலிங் கூட்டம் உலமாக்களைக் கொண்டும் ஆலிமாக்களைக் கொண்டும் நடத்த வேண்டும்.

மேலும் திருமணமானவர்களுக்கு சமரச மையம் உருவாக்க வேண்டும். நம் சமுதாய பிரச்சினைகளை நீதிமன்றங்களுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சமரசம் செய்தும் சேர்த்து வைக்க முடியாத நிர்பந்த சூழ்நிலையில் விவாகரத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒரு தலாக்கை கொண்டே போதுமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் A. இவர்கள் இத்தா முடிவதற்குள் சேர்ந்து வாழ விரும்பினால் அப்படியே சேர்ந்து வாழ்ந்து கொள்ளலாம் .
B. இத்தா முடிந்து விட்டால் வேற கணவனை மணந்து கொள்ளலாம் .
C. அல்லது அதே கணவருடன் சேர்ந்து வாழ விரும்பினால் இருவருக்கும் புதிதாக திருமணம் செய்து வைத்துவிடலாம்.

இப்படி இலகுவான வழிகள் உண்டு.
ஆனால் முத்தலாக் விட்டால் அப்பெண் இன்னொரு கணவனை மணமுடித்து அவர் விவாகரத்து செய்த பின்பே முதல் கணவனை மணமுடிக்க முடியும். மேலும் அரசாங்கத்தின் பல பிரச்சினைகளுக்கும் ஆளாக நேரிடும்.


5)CAA. NRC. NPR. இவைகளை அரசு வாபஸ் பெருவதற்குண்டான முயற்சிகளை செய்வது.
***********************************************
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 10 ம் தேதி நல்லிரவு முதல் அமலுக்கு வந்து விட்டது என மத்திய உள்துரை அமைச்சகம் அறிவித்துள்ளது.

NRC யின் முதல் படியான NPR ரை ஜனவரி முதலே சில மாநிலங்கள் ஆரம்பித்துவிட்டது. தமிழ் நாட்டில் ஏப்ரல் 1 முதல் கணக்கெடுப்பு ஆரம்பமாகும் என்று கூறியிருந்தாலும் மறைமுகமாக இப்பொழுதே சில கிராமங்களில் நடந்து கொண்டிருக்கின்றது.

அதில் தேவையற்ற 31 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

1. உள்ளாட்சி நிர்வாகம் ஒதுக்கிய வீட்டின் எண்,
2. கணகெடுப்புக்கான வீட்டின் எண்,
3. வீட்டின் கட்டுமானம்,
4. வீட்டின் நிலை,
5. வீட்டில் தங்கியுள்ளவர்கள் விபரம்,
6. குடும்பத் தலைவரின் பெயர்,
7. குடும்பத் தலைவரின் பாலினம்,
8. குடும்பத் தலைவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவரா?,
9. வீட்டின் உரிமையாளர் நிலை,
10. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை,
11.  வீட்டில் உள்ள திருமணமானவர்களின் எண்ணிக்கை,
12. முக்கிய குடிநீர் ஆதாரம்,
13. குடிநீர் இணைப்பு வழிகள்,
14.  மின் இணைப்பு விபரம்,
15. கழிவறை வசதி,
16. கழிவறையின் வகை,
17. கழிவு நீர் வடிகால்,
18. குளியலறை,
19. சமையலறை வசதி
20. எல்.பி.ஜி இணைப்பு,
21. சமையலுக்கான எரிபொருள்,
22. ரேடியோ வசதி,
23. டிவி வசதி,
24. இணைய வசதி,
25. லேப்டாப்/கம்ப்யூட்டர்,
26. தொலைபேசி / செல்பேசி / ஸ்மார்ட்போன்,
27. சைக்கிள் / ஸ்கூட்டர் / பைக் / மொபெட்,
28. கார் / ஜீப் / வேன்,
29. செல்போன் எண்.

இத்தோடு திட்டமிட்டு நம்மை வெளியேற்றுவதற்காக முந்தைய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படாத NRC யில் கேட்கப்படும் சில கேள்விகள் (உ.மா) நம் தாய் தந்தை அல்லது தாத்தா பாட்டி எங்கே பிறந்தார்கள் என்பன உள்ளிட்ட விபரங்கள்.

ஆகிய தகவல்கள் பெறப்படுகிறது.

இந்த NPR தான் NRCயின் முதல் படியாக இருப்பதால் ஜமாஅத்தார்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்.

* நம் மஹல்லா மக்களை நம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

*அந்தந்த மஹல்லா மக்களின் முழு விபரமும் அந்த நிர்வாகத்திடம் இருக்க வேண்டும்.

*கணக்கெடுப்பு என்ற பெயரில் அரசியல் வாதிகளோ அரசு அதிகாரிகளோ யார் வந்தாலும் எந்த ஆவணத்தையும் கொடுக்க வேண்டாம் என அறிவிப்புச் செய்ய வேண்டும்.

* அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள நிர்வாகத்தின் நம்பர்களும். சமூக சேவையில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்களின் போன் நம்பர்களும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும்.

*இதற்காக சட்ட கல்வி படித்த வக்கீல்களுடன் கூடிய ஒரு குழுவை ஒவ்வொரு மஹல்லாவிலும் ஏற்படுத்தலாம்.


*நம் எதிர்ப்பை போராட்டங்களோடு நிறுத்திக் கொள்ளாமல் வேறு விதத்திலும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

ஒரு பொது நிதியுதவியைக் கொண்ட ஜனநாயகத்தில் தனது மக்களை சிறையில் அடைக்க விரும்பும்போதுஆட்சியை பலவீனமானதாக மாற்றுவது ஒவ்வொரு ஜனநாயக குடிமகனின் கடமையாகும்.

பெரும் அழுத்தம் இல்லாவிட்டால் அரசாங்கம் நம் கோரிக்கைகளை ஏற்காது.

*வங்கியிலிருந்து பணத்தைத் திரும்பப்பெறுதல் இயக்கத்துடன் பேரணி, உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தையும் செய்யலாம்

*26 கோடி முஸ்லிம் மக்களில், 20 கோடி முஸ்லிம் மக்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளனர்

*அனைத்து முஸ்லிம்களும் ஒவ்வொரு நாளும் தங்கள் கணக்கிலிருந்து 1000 ரூபாயை திரும்பப் பெற்றால், ஒரே நாளில் வங்கிகளிடமிருந்து ரூ 20,000 கோடியை திரும்பப் பெற்று நிதி பற்றாக்குறையை உருவாக்க முடியும்.

*இதனால் அரசாங்கம் அழுத்தத்திற்கு உட்பட்டு நம் கோரிக்கைகளை ஏற்க முன்வரும்.

*அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகும் வரை அனைத்து முஸ்லிம் மக்களும் வங்கிகளிலிருந்து பணத்தை திரும்பப் பெற வேண்டும்.

*அசையா(வீடு/கடை/மனை) சொத்துக்கள் ரிஜிஸ்டர் செய்வதை பிற்படுத்த வேண்டும்.
கார் , பைக்குகள் வாங்காமல் பழையதை ரிப்பேர் செய்து பயன்படுத்துதல் , 5 வருட கார் காப்பீடு, அதிக பயணங்களை தவிர்ப்பது, போன்ற இவைகள் அனைத்தும் இந்திய பொருளாதாரத்தின் திவால் நிலையை அடைய செய்வதற்கான முயற்சி .

ஏனெனில் நாம் வாங்கக்கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி கொடுக்கின்றோம் அது மிகப் பெரிய வருமானம் அரசாங்கத்திற்கு எனவே மேலே குறிப்பிட்ட அந்த சில கொடுக்கல் வாங்கல் பண பரிவர்த்தனைகளை சில நாட்கள் சில மாதங்கள் நிறுத்திக் கொண்டால் மிகப்பெரிய நஷ்டத்தை நம்மால் ஏற்படுத்திவிட முடியும் .


*ஓடிப்போன தொழிலதிபர்களுக்கு 300 மில்லியன் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ததால் வங்கி ஏற்கனவே பெரும் பாதாளத்தில் உள்ளது.

*அனைத்து முஸ்லிம்களும் தங்கள் முழு பண வங்கி (6 மில்லியன் கோடி), பங்குச் சந்தை + காப்பீடு + பிஎஃப், தங்கம்                   ( 300 மில்லியன் ) ஆகியவற்றை நீக்கிவிட்டால், பொருளாதாரத்தில் மொத்தம் 10 மில்லியன் கோடி பற்றாக்குறை அழுத்தம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஆண்டு தோறும் வரும்.

*நிரந்தர டெபாசிட் தொகை வைப்பு இருக்கும் அதிகமான நண்பர்களே தினமும் குறைந்தபட்சம் ரூ .1500 என, ஜனவரி  31 தேதிக்குள் நம் வங்கிக் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் திரும்பப் பெற வேண்டும்

*மேலும் நம் பணத்தின் வட்டியை வங்கிகளிலிருந்து நாம் கைப்பற்ற வேண்டும் அவர்களிடம் விட்டு வைப்பது கூடாது. அந்த வட்டிப் பணத்தை நன்மையை நாடாமல் ஏழைகளுக்கு கொடுத்து விடவேண்டும்.

*இதைவிட சிறந்த வழி எதுவுமில்லை. இது மிகவும் திறமையான மற்றும் வேகமான முறையாகும்.

6) எல்லாவற்றிற்கும் மேலாக மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் வழிகாட்டலின்படி தஹஜ்ஜத் தொழுது நோன்பு நோற்று  துஆச் செய்வது இறைவனின் உதவி கிடைக்க காரணமாகும்.

எதிர்வரும் 17/01/2020 ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஜமாஅத்தார்கள் அனைவரும் கீழ் வரும் திக்ருகளைச் செய்து துஆச் செய்யலாம்.

لا اله الا انت سبحانك اني كنت من الظالمين
33 தடவையும்

استغفرالله العلي العظيم واتوب اليه
33தடவையும்

حسبنا الله نعم
الوكيل ونعم المولي ونعم النصير
33 தடவையும்

لا حول ولا قوة الا
بالله العلي العظيم
33 தடவையும்

اللهم انا نجعلك في نحورهم ونعوذبك من شرورهم
33 தடவையும்

மேலும் நபி (ஸல்) அவர்களின் மீது 11 தடவை ஸலவாத் ஓதி துஆச் செய்யவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.