வியாழன், 2 ஜனவரி, 2020

கொடுங்கோலர்களின் சூழ்ச்சியும் ஈமானிய எழுச்சியும்"


"கொடுங்கோலர்களின் சூழ்ச்சியும் ஈமானிய எழுச்சியும்"
*************

قول الله عز وجل:
******
ولا تهنوا ولا تحزنوا وانتم الأعلون ان كنتم مؤمنين ⭕

قوله عليه الصلاة والسلام:
*******
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ ، وَأَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالُوا : حَدَّثَنَا حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَبِي أَسْمَاءَ ، عَنْ ثَوْبَانَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ ، وَلَيْسَ فِي حَدِيثِ قُتَيْبَةَ : وَهُمْ كَذَلِكَ  (رواه مسلم)

புகழனைத்தும் வல்லமை பொருந்திய படைப்பாளன் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டுமாக. அவனது சாந்தியும் சமாதானமும் இறை வழிகாட்டல்களை சிந்தாமல் சிதறாமல் சமூகத்திற்கு எடுத்து வைத்து மிகச்சிறந்த சமூகத்தை கட்டமைத்து வழிகாட்டிச் சென்ற இறுதித் தூதர் முஹம்மத் நபி ஸல் அவர்கள் மீதும் அவர்களின் பரிசுத்த குடும்பத்தினர் மற்றும் சத்திய வழிகளை உலகெங்கிலும் பரப்பிச் சென்ற ஸஹாபாக்கள் மேலும் அவர்கள் காட்டித் தந்த வழிநடந்த எல்லா நல்லடியார்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்.

இன்றைய உலகம் முஸ்லிம் சமூகத்திற்கு மிகுந்த சோதனையாக இறுதி நாளின் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது குறிப்பாக இந்திய முஸ்லிம்களுக்கு ஆளும் அநியாயக்கார ஆட்சியாளர்களால் அவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் மிகுந்த அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து வாழும் நம்மை இவர்கள் ஒன்றும் செய்து விட முடியாது என்றாலும் அவர்கள் இப்போது  கையில் எடுத்துள்ள அஸ்திரம்
NRC (NATIONAL RIGISTER OF CITIZENS) தேசிய குடிமக்கள் பதிவேடு  -
NPR  ( NATIONAL POPULATION REGISTER) தேசிய  மக்கள் தொகை கணக்கெடுப்பு  -
CAA ( CITIZENSHIP AMENDMENT ACT) குடியுரிமை சட்ட திருத்தம் ஆகியவைகளை பார்லிமெண்டில் 09-12-2019 அன்று சட்டமாக அறிவித்துவிட்டார்கள்
இவை முஸ்லிம்களை அகதிகளாக்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கி அவர்கள் பிறந்து வாழையடி வாழையாக வாழ்ந்து வரும்  இந்நாட்டில் தொடர்ந்து வாழ முடியாத நிலைக்கு தள்ளி விடும் என்பதால் நாடு முழுவதும் இதற்கெதிரான போராட்டங்கள் வீரியமாக நடைபெற்று வருகிறது . ஆனாலும் தங்களது திட்டத்தில் ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இச்சூழலில் இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து முஸ்லிம்களும் ஜனநாயகப் போராளிகளும் சிந்தித்து வருகின்றனர்.
இறைவனின் உதவியை நாம் எதிர்பார்த்திருந்தாலும் நம்மாலான முயற்சிகளை நாம் செய்தாக வேண்டியுள்ளது இதை அல்லாஹ் வெற்றியாக்கித் தருவானாக ஆமீன்.

NRC - NPR - CAA ஆகிய இந்த மூன்று சட்டங்களும் நமக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்? நாட்டின் பிரதம மந்திரியும் , உள்துறை அமைச்சரும் இச்சட்டத்தால் இந்திய குடிமக்களுக்கு பாதிப்பில்லை பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்களை தான் திருப்பி அனுப்பப் போகிறோம் என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் திட்டம் இப்போதில்லை மாறாக அஸ்ஸாமில் மட்டுமே இப்போது நடைமுறைப் படுத்தப் போகிறோம் .
எனவே இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக உள்ள முஸ்லிம்கள் பயப்படத் தேவையில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்களே? மேலும் எதிர்க் கட்சிகள் ஓட்டு அரசியலுக்காக உங்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் விளக்கம் தருகிறார்களே! என்றால் நாம் யோசிக்கிறோம்...

நம்மை அப்புறப்படுத்தி சிறுமைப்படுத்தி இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவோம் என்று நீண்ட காலமாக சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் என்ற மதவாத அமைப்பின் கூடாரத்தில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் தான் நமது பிரதமரும் உள்துறை அமைச்சரும் இவர்கள் பயப்பட வேண்டாம் உங்களுக்கு ஒன்றும் ஆகாது என்று சொல்வது தான் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் ஸ்பெயின் நாட்டில் 780 வருடங்கள் ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகள் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்துள்ளார்கள் . அங்கே இருந்த கிருஸ்தவ மிஷினரிகள் இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்திய பிறகு அங்குள்ள முஸ்லிம்களை அப்புறப்படுத்த அவர்கள் கையாண்ட யுக்திகளைத் தான் இவர்களும் கையாள்கிறார்கள்.
ஸ்பெயினில் மூன்று வகையான முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள் ஒரு பிரிவினர்  : அரபு நாடுகளிலிருந்து வந்து அங்கு வாழ்பவர்கள், இரண்டாவது பிரிவினர்  : அரபு நாடுகளிலிருந்து வந்து அங்கேயே திருமணம் முடித்து குழந்தை பெற்றெடுத்து குடும்பத்தோடு வாழ்பவர்கள், மூன்றாவது பிரிவினர் :  ஸ்பெயினிலேயே பிறந்து இஸ்லாத்தை ஏற்று வாழ்பவர்கள்.
அந்த காலத்தில் ஸ்பெயினை ஆட்சி செய்து வந்த இரண்டாம் அரிஹாண்ட் (-2nd arahan) என்ற கிறிஸ்தவ ஆட்சியாளன் இப்படிப்பட்ட ஒரு குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்து முதல் பிரிவு முஸ்லிம்களான அரபு நாட்டிலிருந்து வந்த வந்தேறிகளை மட்டும் தான் வெளியேற்றப் போகிறோம் என்று கூறிக் கொண்டே இருந்தார் அதை நம்பி மற்ற இரு பிரிவினர்களும் அமைதியாக இருந்து விடவே! கொஞ்ச காலத்திற்குப் பிறகு இரண்டாவது பிரிவினரை களையெடுக்க வேறொரு வழிமுறையை கையாண்டனர் அரபு நாடுகளிலிருந்து வந்து இங்கே திருமணம் முடித்தவர்களின் திருமணம் செல்லாது என்று அறிவித்து அவர்களுக்கு பிறந்த குழந்தைகளை முறை தவறிப் பிறந்தவர்களாக்கி தாயின் சொத்திலும் தகப்பன் சொத்திலும் பங்கில்லை என்று கூறி அவர்களை நிர்மூலமாக்கி வெளியாக்கினார்கள் இவ்வாறே சிறிது காலத்திற்கு பிறகு ஸ்பெயினின் பூர்வீகக் குடிகளாக உள்ள முஸ்லிம்களுக்கு வேறொரு திட்டத்தின் மூலம் வெளியாக்கி திட்டமிட்டபடி ஸ்பெயினில் எந்த முஸ்லிமும் இல்லாமல் துடைத்தெறிந்தார்கள். இந்த வழிமுறைகளை ஒருங்கிணைத்து சுமார் நூறாண்டுத் திட்டமாக சுதந்திரத்திற்கு முன்பே 1924 - ம் வருடம் சாவார்க்கர் என்ற இந்து மத வெறியரால் துவங்கப்பட்ட ஆர்.எஸ் எஸ் என்ற அமைப்பு மிக நிதானமாக செயல்பட்டு வருகிறது அந்த அடிப்படையில் தான் 2024 - ம் வருடத்தை இலக்காக கொண்டு இந்து ராஷ்டிரத்தை இந்திய மண்ணில் கட்டமைக்க இந்திய மண்ணிலிருந்து பூர்வீகக் குடிகளான நம்மை அப்புறப்படுத்துவதின் துவக்கமாக அஸ்ஸாமில் நடைமுறைப்படுத்தப்பட்ட NRC யை CAA வின் வழியாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த ஆர்.எஸ் எஸ் அமைப்பின் வழிகாட்டுதலோடு மத்திய அரசு துவங்கியுள்ளது . எதிர்ப்புகளை சமாளிக்க இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப் படாது என்று சொல்லிக் கொண்டே தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  இதன் பின்னணியில் முதற்கட்டமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நிறைவு செய்த பின்னால் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தி அவர்கள் கேட்கும் ஆவணங்களை நம்மால் கொடுக்க முடியாமல் போகிற போது இந்த CAA என்ற முஸ்லிம்களை அகதிகளாக்கும் சட்டம் நடைமுறைபடுத்தப் பட்டு நம்மையெல்லாம் பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று அறிவித்து ஒன்று நாடுகடத்த அல்லது மதம் மாற்ற அல்லது இந்த நாட்டில் நமது உடைமைகளை இழந்து கையேந்தி பிழைக்கும் நிலைமைக்கு தள்ள பார்க்கிறார்கள்.

இந்த சட்டங்களால் நமக்கு எவ்வாறெல்லாம் ஆபத்து ஏற்படும்?
**************

NRC  நாடு முழுதும் செயல்படுத்தும் திட்டம் இப்போது இல்லை-
வரும் ஏப்ரலில் NPR  கணக்கெடுப்பு நாடுமுழுவதும் நடைபெறும் என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார்.

NPR 2010 ல் காங்ரஸ் ஆட்சியில் எடுக்கப் பட்டது தான். தமிழ்நாட்டில் ஏப்ரலில் துவக்கம் என்று தமிழக முதல்வர் கூறுகிறார்.

காங்கிரஸின் NPR  திட்டம் வேறு
பி.ஜே.பி.யின்  NPR திட்டம் வேறு என்று முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூறுகின்றனர்.

NPR ஆல் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசின் கைக்கூலி ஊழியர்கள் அறிக்கை விடுகிறார்கள்.

என்ன நடக்கிறது நாட்டில் ? ஏன் இதை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட ஆபத்து என அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கை முதல் உள்ளூர் எதிர்கட்சி தலைவர்கள் வரை விமர்சனம் செய்கின்றனர் ?

ஆர்.எஸ்.எஸ். அமைத்த அரசின் NRC  பற்றி நாம் அறிவோம்.

இந்து கிறிஸ்தவ பொளத்த சீக்கியர் NRC  கேம்பில் தங்கள் பெற்றோர் குறித்த எந்த ஆவணத்தையும் சமர்பிக்க தேவையில்லை. 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த சான்று மட்டும் போதும்.
முஸ்லிம்கள் தங்கள் பெற்றோரின் பிறப்பு சான்றிதழ் சொத்து ஆவணங்கள் அவர்கள் வாழ்ந்த விலாசத்திற்கான ஆவணம் என ஆறுவகையான கிடைக்கபெறாத ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
இதில் ஆவணம் சமர்பிக்க தேவையில்லாத இந்து கிறிஸ்தவ பொளத்த சீக்கியர்களுக்கு பிரச்சனை இல்லை. முஸ்லிம்கள் மட்டும் பெற்றோர் பிறந்த சான்றிதழை காட்ட வேண்டுமாம்.
உதாரணமாக 1978 ல் பிறந்த  எனக்கே பிறப்பு சான்றிதழ் கிடையாது.எனது பெற்றோருக்கு எங்கே இருக்கும் ?

எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால் எனது பிள்ளைகள் தங்கள் பிறப்பு சான்றிதழை சமர்பித்தாலும் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது..

(1980 க்கு முன் பிறந்த எவருக்கும் பிறப்பு சான்றிதழ் என்ற திட்டமே இந்தியாவில் கிடையாது )
இதனடிப்படையில் அஸ்ஸாமில் 40 லட்சம் பேர்  குடியுரிமை இழந்து நிற்கும் அவலத்தை அறிவோம்.

நாடுமுழுவதும் ஏற்பட்ட பிரளயத்தால் இப்போது NRC கிடையாது . வெறும் NPR  மட்டும் தான் என்று கூவாத குறையாக சொல்கிறார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப் படும் குடிமக்கள் பதிவேடு NPR எனப்படும்.
காங்கிரஸ் காலத்திய NPR என்பது என்ன ?
நாட்டில் உள்ள மக்கள் தொகையில் இந்தியர்கள்  மற்றும் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் எவ்வளவு பேர் என்பதற்கான கணக்கீடாகும்.
மாநில அரசின் அதிகாரிகள் வீடு வீடாக சென்று  எடுக்கும் கணக்கில் கீழ்கண்டவைகள் கோரப்படும்.

1.நபரின் பெயர்
2.வீட்டுத் தலைவருடனான உறவு
3.தந்தையின் பெயர்
4.அம்மாவின் பெயர்
5.துணையின் பெயர் (திருமணமானால்)
6.பாலினம்
6.பிறந்த தேதி
7.திருமண நிலை
8.பிறந்த இடம்
9.வழக்கமான வசிப்பிடத்தின் முகவரி
10.தற்போதைய முகவரி
11.தற்போதைய முகவரியில் தங்கியிருக்கும் காலம்
12.நிரந்தர குடியிருப்பு முகவரி
13.தொழில் / செயல்பாடு
14.கல்வி தகுதி
15.தேசியம் (அறிவிக்கப்பட்டபடி)

இதை தான் நாம் முன்பு சமர்ப்பித்தோம். இது கடந்த காலங்களில் தொழில் நுட்ப வசதி இல்லாததால் பத்து ஆணடுகளுக்கு ஒரு முறை கோரப் பட்டது. 2010 -ல் எடுக்கப் பட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப் பட்டு விட்டது. இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் கணக்கு பதிவேடுகளும் உள்ளதால்  கணக்கீடு அவசியமே இல்லை. எனினும் கணக்கீடு செய்வதாக வைத்து கொண்டாலும்  வீடு தேடி வருபவர்களிடம் மேற்கூறிய விபரங்களை சமர்ப்பித்தால் போதும் அது தான் NPR இதில் எந்த பாதிப்பும் இல்லை..

ஆனால் NPR  மட்டும் தான் என்று  கொல்லைப்புறமாக NRC யை இறக்கிவிடுகிறது பாசிச அரசு.
15 விபரங்கள் கோரப்பட்ட NPR ல் கூடுதலாக 6 NRC கோரிக்கையும் இணைக்கப் பட்டுள்ளதாக  காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

சுருங்கக் கூறினால் மாநில அரசு அதிகாரிகள் உங்கள் வீடு தேடி வந்து NPR  கணக்கை எடுத்து கூடுதலாக 6 NRC விபரங்களையும் கேட்பார்கள்.
உங்கள்  தந்தை தாய் பிறந்த தேதிகள்
பிறந்த இடத்திற்கான ஆவணங்கள்
வாழ்ந்த முகவரிக்கான ஆவணங்கள் என இடம் பெரும் கட்டங்களில் #NO
(-கிடையாது)  என்று நிரப்பி விட்டு சென்று விடுவார்கள் .

அதை மத்திய அரசிடம் சமர்ப்பித்த பின் தான் NRC  தொடங்கும். மாவட்ட வாரியாக தனி NRC கேம்ப் போடப்படும் .
#NO என்று நிரப்பப் பட்ட  படிவங்கள் அனைத்தும் தனியாக பிரிக்கப் பட்டு  #சந்தேகக்குடிகள் பட்டியல் தயாராகும். உங்களுக்கு ஆவணங்களை சமர்பிக்குமாறு  அறிவிப்பு வரும்.

இதில் இந்து கிறிஸ்தவ பொளத்த சீக்கிய மக்களுக்கு பெற்றோர் பற்றிய ஆவணங்கள் தேவையில்லை. குடிமக்களாக சேர்க்கப்படுவர். (இலங்கை அகதிகள் தவிர்த்து ) மீதமுள்ள முஸ்லிம்கள் இந்திய நாட்டின் குடிமக்களாக அங்கீகாரம் பெற வேண்டுமெனில் பெற்றோர் பிறப்பு ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் குடியுரிமை ரத்தாகி சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டு முகாம்களில் முடங்க வேண்டும்.
எனவே NPR  ஆல் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்பவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்.

இதை ஏப்ரலுக்கு தள்ளி போட்டு விட்டதால் போராட்ட சூடு ஆறி விடும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

மேலும் இந்திய அரசியல் சாசனத்தின் 14வது விதி, சமத்துவத்துக்கான உரிமையை அளிக்கின்றது. இந்தச் சட்டத்தின்படி அனைவருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமை உண்டு என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் இது பொருந்தும்.
அதேபோன்று, அரசியல் சாசனத்தின் 15 -வது விதியும் சாதி, மதம், இனம், பாலினம், பிறப்பு இவற்றின் அடிப்படையில் யாருக்குமிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகின்றது. இதையெல்லாம் மீறி அரசியல் சாசனத்தை மதிக்காமல் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 - வது பிரிவு நீக்கம் என்று நமது உரிமைகளை தொடர்ந்து இவர்கள் பறித்து வருவதால்...

நம்மை நமது உரிமைகளை நமது மனைவி மக்களை வருங்கால சந்ததியினரை பாதுகாக்க நாம் தயாராக வேண்டும்.

இன்னும் நாம் விழித்துக் கொள்ளவில்லையெனில் ஸ்பெயின் முஸ்லிம்களின் நிலைமை தான் நமக்கும் ஏற்படும். இவ்வளவு நடந்த பிறகும் நம்மில் சிலர் கட்சி அரசியலில் ஈடுபட்டு இதை நியாயப்படுத்துவதும், மேலும் அவர்களின் கூற்றுக்களை நம்பிக் கொண்டு அமைதி காப்பதும் நம் நிலைமையை மென்மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம் சமுதாயம் வெகுண்டெழுந்து இந்த சட்டம் திரும்பப் பெறப்படாத வரை நாங்கள் ஓயப்போவதில்லை என்று போராட்டங்களை தீவிரப்படுத்தி நமது உரிமைகளைக்காக்க வேண்டும்.

இன்று நமக்கு ஆதரவாக எந்த நோக்கத்துடனாவது எதிர்க் கட்சிகள் போராடிக் கொண்டிருக்கும் போது அதை நாம் சாதகப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. எதிர்க் கட்சிகள் ஓய்ந்து போன பிறகு நாம் போராடத் துவங்கினால் நம்மை கட்டுப்படுத்துவது மத்திய அரசுக்கு இலகுவாகி விடும் என்பதை நாம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

மார்க்கத்தில் இவ்வாறான போராட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதா? என்றால்...
****************
١- [عن أبي هريرة:] جاءَ رَجُلٌ إلى رَسولِ اللهِ ﷺ، فقالَ: يا رَسولَ اللهِ، أرَأَيْتَ إنْ جاءَ رَجُلٌ يُرِيدُ أخْذَ مالِي؟ قالَ: فلا تُعْطِهِ مالَكَ قالَ: أرَأَيْتَ إنْ قاتَلَنِي؟ قالَ: قاتِلْهُ قالَ: أرَأَيْتَ إنْ قَتَلَنِي؟ قالَ: فأنْتَ شَهِيدٌ، قالَ: أرَأَيْتَ إنْقَتَلْتُهُ؟ قالَ: هو في النّارِ.

مسلم (٢٦١ هـ)، صحيح مسلم ١٤٠ • [صحيح] • شرح الحديث.
நபிகள் நாயகம் ஸல் அவர்களிடத்தில் ஒரு ஸஹாபி வந்து அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் என் பொருளை அபகரித்துக் கொள்ள வருகிறார் நான் என்ன செய்வது என்று வினவ நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். அவருக்கு உனது பொருளை கொடுக்க வேண்டாம் என்று.  அதற்கவர் கூறினார் அவர் என்னோடு சண்டையிட்டால்? நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் நீயும் அவரோடு சண்டையிடு அதற்கவர் அவர் அச்சண்டையில் என்னை கொலை செய்து விட்டால்? (என் நிலை என்ன) என்றார்.
அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நீ ஷஹீதாக கணிக்கப்படுவாய் என்க அதற்கவர் நான் அவரை கொலை செய்து விட்டால் என்னவாகும்? என்றார் அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவன் நரகிலிருப்பான் என்று கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம்)

நமது பொருளை பறிக்க வருபவனோடு போராடி சண்டையிட்டு பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்லித் தந்திருக்க நம் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிடும் இந்த சட்டங்களை எதிர்த்து நாம் எவ்வளவு வீரியமாக களமாடிட வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

2480 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»
யார் தன் பொருளை பாதுகாக்க போராடி கொலை செய்யப்பட்டாரோ அவர் ஷஹீதாவார்,
நூல் புகாரி 2480 . அறிவிப்பாளர் அப்துல்லா இப்னு அம்ர் ரலீ அவர்கள் .

٥- [عن سعيد بن زيد:] من قُتِلَ دونَ مالِهِ فهو شهيدٌ ومن قتلَ دون أهلِهِ فهو شهيدٌ ومن قتلَ دون دينِهِ فهو شهيدٌ ومن قتلَ دونَ دمِهِ فهو شهيدٌ
ابن حزم (٤٥٦ هـ)، المحلى ١١/١٠٨ • احتج به ، وقال في المقدمة: (لم نحتج إلا بخبر صحيح من رواية الثقات مسند) • شرح رواية أخرى

சயீத் இப்னு ஜைத் ரலீ அவர்கள் அறிவித்தார்கள் " யார் தன் பொருளை பாதுகாக்க போராடி கொலை செய்யப்பட்டாரோ அவர் ஷஹீதாவார், யார்  தனது குடும்பத்தை பாதுகாக்க போராடி கொலை செய்யப்பட்டாரோ அவரும் ஷஹீதாவார், யார் தன் மார்க்கத்தை பாதுகாக்க போராடி கொலை செய்யப்பட்டாரோ அவரும் ஷஹீதாவார், யார் தனது உயிரை பாதுகாக்க போராடி கொலை செய்யப்பட்டாரோ அவரும் ஷஹீதாவார்" (நூல்: இப்னு ஹஜ்ம்)

முஃமின்களான நமக்கு இறப்பு என்பது இழப்பல்ல! மாறாக அல்லாஹ்விடம் உள்ள நற்கூலிகளை அடைந்து கொள்வதற்கான பாலமாக உள்ளது. அதிலும் அவனது பாதையில் போராடி உயிர் நீப்பது பெரும்பாக்கியமாகவும், மறுமையில் பெரும் இலாபத்தை ஈட்டித் தரும் வியாபாரமாகவும் உள்ளது இதைத் தான் இறைவன் திருமறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்...

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰ تِجَٰرَةٖ تُنجِيكُم مِّنۡ عَذَابٍ أَلِيمٖ⭕
ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ⭕

(அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களா இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
(அல்குர்ஆன் 61:10,11)

இனி நாம் செய்ய வேண்டிய காரியங்கள்.
****************
நம்மை மார்க்க விஷயங்களில் எதிர்க்காத நம்மோடு இணக்கமாக உள்ள எல்லா தரப்பினரையும் ஒன்றிணைப்பதோடு நமக்குள் இருந்து வருகிற கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட வேண்டும் மேலும் நம் வாழ்வுரிமைக்கான இப்போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து நம் தாய்த் திருநாட்டை பாசிச சக்திகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கான இன்னொரு சுதந்திர போராட்டமாக இதை கட்டமைப்போம் நமது முன்னோர்கள் வாங்கித் தந்த சுதந்திரத்தை மாசில்லாமல் நமது அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பாக விட்டுச் செல்வோம்...

நமது மார்க்கத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நாம் இம்மண்ணில் நம்மோடு தோள் கொடுக்கத் தயாராக உள்ள சகோதர மதத்தவர்களையும் இணைத்துச் செயல்படுவோம்.

لَّا يَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ لَمۡ يُقَٰتِلُوكُمۡ فِي ٱلدِّينِ وَلَمۡ يُخۡرِجُوكُم مِّن دِيَٰرِكُمۡ أَن تَبَرُّوهُمۡ وَتُقۡسِطُوٓاْ إِلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ⭕
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
(அல்குர்ஆன் 60: 8)

நம்மை வெளியேற்ற வேண்டும் என்று நினைக்காத நம்மோடு சுமூகமாக வாழ்ந்து வரும் சகோதர மதத்தவர்களோடு நட்பு பாராட்ட நமக்கு எந்த தடையுமில்லை என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

நமது போராட்டம் நியாயமாக இருப்பதால் நமக்கு எந்த கவலையுமில்லை இறைவன் நமக்கு உதவி செய்வதாக வாக்களித்துள்ளான்.

وَلَا تَهِنُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ⭕

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
(அல்குர்ஆன் 3:139)

மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் " என் சமூகத்தில் இறுதிநாள் வரையிலும் உண்மையின் மீது நிலைத்திருக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருப்பார்கள் அவர்களின் எதிர்ப்பாளர்கள் அவர்களை ஒன்றும் செய்திட முடியாது" (நூல்: முஸ்லிம்)

அல்லாஹ் அத்தகைய கூட்டத்தில் நம்மையும் சேர்த்தருள்வானாக மேலும் நமது முயற்சிகளை வெற்றியாக்கித் தருவானாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.