வெள்ளி, 31 ஜனவரி, 2020

உரிமைக்குரல்

உரிமைக்குரல்.


உலக வாழ்க்கை என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக அமைந்திருக்கின்றன . இரவு பகல் வானம் பூமியை போன்றே இன்பம் துன்பம் இரண்டு கலந்தே இருக்கின்றது . முழுக்க இன்பம் என்றோ முழுக்க துன்பம் என்றோ இவ்வுலகம் அமையாது. 
இந்தியா போன்ற சில நாடுகளில் பல இன்னல்களும் தொல்லைகளும் தலை விரித்து தாண்டவம் ஆடுகின்றன . அவைகளுக்கு வெகுவிரைவில் சாவு மணி அடிக்கப்பட்டு சமாதி கட்டப்பட்டு உரிமைகள் மீட்கப்படும் இன்ஷாஅல்லாஹ்.

ஐந்து ஆண்டு காலங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இந்தியாவின் புனிதமான ஆட்சியை இந்த RSS-BJB கும்பல் அலங்கோலப் படுத்தியதைத் தொடர்ந்து  மீண்டும் 2019 ஆம் ஆண்டிலும் அந்த பதவியை கக்கி வைத்துக் கொண்டது.

எனவே குரங்கு கையில் பூமாலை / அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்ற பழமொழிகளுக்கொப்ப இந்தியாவின் நிலைமை தாழ்ந்து கொண்டிருக்கின்றன.

மனித உரிமைகள் மீறப்படுகின்றன .  சிறு தொழிலாளிகள் தலையில் துண்டை போட்டு நடுரோட்டுக்கு வந்துவிட்டார்கள் . விவசாயிகள் அம்மணமாக வீதியில் கிடந்தார்கள் . பிஞ்சு குழந்தைகள் புனிதத்தலமான கோயில் கருவறையில் வைத்து கற்பழிப்பு . சமுதாயத்திற்காக பாடுபடக்கூடியவர்களை / பத்திரிக்கை தொலைதொடர்பு நிருபர்களை கைது செய்வது கொலை செய்வது . பொதுப் பரீட்சை என்பதாக பிஞ்சு குழந்தைகளை மனநோயாளியாக மாற்றுவது இது போன்று எண்ணற்ற ஏராளமான குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிறது இந்த ஆட்சி.

இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம்முடைய இஸ்லாமிய மார்க்கமும் உலக வரலாறுகளும் பாடம் ஓதிக் காண்பிக்கின்றன . அதே வழிமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

1 . @@@@@@@
போர்க்கொடி உயர்த்த வேண்டும்.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا» [ص:129]، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، هَذَا نَنْصُرُهُ مَظْلُومًا، فَكَيْفَ نَنْصُرُهُ ظَالِمًا؟ قَالَ: «تَأْخُذُ فَوْقَ يَدَيْهِ» »
அனஸ்(ரலி) அறிவித்தார். 
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)' என்று கூறினார்கள். 
ஸஹீஹ் புகாரி : 2444. 
அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்

عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பயணம் புறப்படுகிறார்கள் அந்த நேரத்தில் ஒரு மனிதர் கேள்வி கேட்டார் போராட்டங்களில் மிகச்சிறந்த போராட்டம் எது என்பதாக அதற்கு நபியவர்கள் சொன்னார்கள் அநியாயக்கார தலைவனிடம் சத்தியத்தை எடுத்துரைப்பது என்பதாக சொன்னார்கள் . நூல் நஸாயீ4204 அறிவிப்பாளர் தாரிக் (ரலி) அவர்கள் .
2 .@@@@@@@

போராட்டகளத்தில் வீழ்ந்தால் நீ ஒரு ஷஹீத்.
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார். 
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 2480. 
அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَ: «فَلَا تُعْطِهِ مَالَكَ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي؟ قَالَ: «قَاتِلْهُ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي؟ قَالَ: «فَأَنْتَ شَهِيدٌ»، قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ؟ قَالَ: «هُوَ فِي النَّارِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை" என்று கூறினார்கள். அந்த மனிதர், "அவன் என்னுடன் சண்டையிட்டால்...?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!" என்று கூறினார்கள். "(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்...?" என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், "அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்" என்றார்கள். "நான் அவனைக் கொன்றுவிட்டால்...?" என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் நரகத்திற்குச் செல்வான்" என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 225. 
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

சில குறிப்புகள்
உரிமைகள் பறிக்கப்பட்ட / ஒடுக்கப்பட நேரத்தில் உரிமைக்காக குரல் உயர்த்திய வீரர்களில் சிலர்.
1 .நபி (ஸல்) அவர்கள் நபியாகும் முன்பே இந்த புனிதமான செயலில் பங்கெடுத்துக் கொண்டார்கள் ஹில்ஃபுல் ஃபுலூல் என்ற மனித உரிமை இயக்கத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு போராடினார்கள் .
2 . ஹுஸைன் ரலி அவர்கள் கர்பலாவில் போராடினார்கள்
3 . அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள்
4 . இப்னு தைமியா (ரஹ்) அவர்கள்.
5 . இந்தியா சுதந்திரத்திற்காக வேண்டி போராடிய பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள்.
6. ஜாதி ஒழிப்பு போராட்டக்காரர்களான  டாக்டர் அம்பேத்கார் / தந்தை பெரியார் .
இவர்களெல்லாம் தாம் ஒடுக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்ட நேரத்தில் கிளர்ந்தெழுந்து போராடியதற்காக கைது செய்யப்பட்டாலும் கொலை செய்யப்பட்டாலும் தொடர்ந்து போராடியதால் வெற்றி கண்டார்கள் நாமும் அதே வழியை கையாண்டு விரைவில் வெற்றிபெறுவோம் 

3 .@@@@@@@

கோமாளியாக இருப்பது கூடாது / ஆவணங்களைத் சீர் செய்.

عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، قَالَ: جَاءَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ وَرَجُلٌ مِنْ كِنْدَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ الْحَضْرَمِيُّ: يَا رَسُولَ اللهِ، إِنَّ هَذَا قَدْ غَلَبَنِي عَلَى أَرْضٍ لِي كَانَتْ لِأَبِي، فَقَالَ الْكِنْدِيُّ: هِيَ أَرْضِي فِي يَدِي أَزْرَعُهَا لَيْسَ لَهُ فِيهَا حَقٌّ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْحَضْرَمِيِّ: «أَلَكَ بَيِّنَةٌ؟» قَالَ: لَا، قَالَ: «فَلَكَ يَمِينُهُ»، قَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ الرَّجُلَ فَاجِرٌ لَا يُبَالِي عَلَى مَا حَلَفَ عَلَيْهِ، وَلَيْسَ يَتَوَرَّعُ مِنْ شَيْءٍ، فَقَالَ: «لَيْسَ لَكَ مِنْهُ إِلَّا ذَلِكَ»، فَانْطَلَقَ لِيَحْلِفَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَدْبَرَ: «أَمَا لَئِنْ حَلَفَ عَلَى مَالِهِ لِيَأْكُلَهُ ظُلْمًا، لَيَلْقَيَنَّ اللهَ وَهُوَ عَنْهُ مُعْرِضٌ»
வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (யமன் நாட்டிலுள்ள) "ஹள்ர மவ்த்" எனும் இடத்தைச் சேர்ந்த மனிதர் ஒருவரும் "கிந்தா" எனும் குலத்தைச் சேர்ந்த இன்னொரு மனிதரும் வந்தனர். அப்போது ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்குச் சொந்தமான நிலத்தை இவர் ஆக்கிரமித்துவிட்டார்" என்று கூறினார். அதற்கு கிந்தா குலத்தைத் சேர்ந்த அந்த மனிதர், "அது என் கைவசமுள்ள என்னுடைய நிலம்; அதில் நான் விவசாயம் செய்துவருகிறேன்; அதில் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதரிடம், "(உமது வாதத்தை நிரூபிப்பதற்கு) உம்மிடம் ஆதாரம் ஏதும் உண்டா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் இவர் சத்தியம் செய்வதுதான் உமக்கு (வழி)" என்று கூறினார்கள். உடனே ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர் "அவர் (துணிந்து பொய் சொல்லும்) பொல்லாத மனிதர். தாம் எதற்குச் சத்தியம் செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் கவலைப்படமாட்டார். எந்த விவகாரத்திலும் அவர் நேர்மையைப் பற்றி யோசிப்பவரில்லை" என்று சொன்னார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதைத் தவிர உமக்கு வேறு வழி கிடையாது" என்று கூறினார்கள். உடனே (பிரதிவாதியான) அந்த (கந்தா குலத்து) மனிதர் சத்தியம் செய்வதற்காக (குறிப்பிட்ட இடத்திற்கு)ச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவருடைய செல்வத்தை உண்பதற்காக அநியாயமாக அவர் பொய்ச் சத்தியம் செய்தால், அல்லாஹ் அவரைப் புறக்கணிக்கும் நிலையிலேயே (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 223. 
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

عن عوف بن مالك، أنه حدَّثهم: أن النبيّ -صلَّى الله عليه وسلم- قضى بين رجلين، فقال المَقضيُّ عليه لما أدْبرَ: حَسْبيَ الله ونعْمَ الوكيل، فقال النبيَّ -صلَّى الله عليه وسلم-: "إن الله عزّ وجلّ يلومُ على العَجْزِ ولكنْ عَليكَ بالكَيسِ، فإذا غَلَبَكَ أمرٌ فقل: حَسْبِيَ الله ونِعْمَ الوكيل" (3).
__________
 (3) إسناده ضعيف بقية بن الوليد على ضعفه مدلس وقد عنعن، 
 
இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு வழக்கு . இவரால் ஆதாரங்கள் கொடுக்க முடியாததால் எதிரி (பொய்) சத்தியம் செய்து ஜெயித்துவிட்டார் அந்த நேரத்தில் இவர் சொன்னார் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகின்றேன் அவன் பார்த்துக் கொள்வான் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய நேரத்தில் நபி அவர்கள் (கண்டித்தார்கள்) ஏமாளித் தனமாக இருப்பதை அல்லாஹ் வெறுக்கின்றான். 
திறமையாக-சரியாக இருக்க வேண்டும் பின்பு தோற்றுவிட்டால் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று சொல் என்பதாக கூறினார்கள்.

இந்த ஹதீஸ் பலவீனமானது. இதற்கு வலுசேர்ப்பதற்காக பின் வரக்கூடிய ஹதீஸ் துணையாக நிற்கின்றது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ الْقَوِيُّ، خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆரோக்கியம்/அறிவாற்றல் நிறைந்த) பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உண்டு ..... 
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 5178. 
அத்தியாயம் : 46. (தலை)விதி

எனவே நம்முடைய எதிர்கால நலனுக்காக எல்லா ஆவணங்களையும் மிகச்சரியாக சீரமைத்து அதனை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வது நம் மீது கடமை என்பதை மேற்சொன்ன ஹதீஸ்கள் உணர்த்துகின்றன

4 .@@@@@@@

முற்றிலும் கைவிட வேண்டியவைகள்.
1.பாவங்களிலிருந்து விடுபட்டு அதிகமாக இஸ்திஃபார் செய்யவேண்டும்.
2.பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறார்கள் இந்நேரத்தில் தவ்ஹீத்/ தேவ்பந்தி / பரேலவி / தப்லீக்  என பரஸ்பரம் முட்டி மோதிக் கொள்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
3.ஆடம்பர வாழ்க்கையும் தவிர்க்க வேண்டும்.
4.என்னிடம் எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கின்றன என தப்புக்கணக்கு போட்டு உரிமைக்கான போராட்டத்தை விட்டும் ஒதுங்கி நிற்பது முற்றிலும் தவறானது.
ஒரு ஜெர்மனிய பழமொழி சொல்வதுபோல இனம்/  ஜாதி / கொள்கை காரணம் காட்டி கண் முன்னால் சிலரை அடித்தார்கள் நான் கண்டிக்கவில்லை கண்டுகொள்ளவில்லை . காரணம் நான் அந்த இனம் / ஜாதி / கொள்கை அல்ல என்பதால் .
இறுதியாக என்னை அடித்தார்கள் எனக்காக குறல் கொடுக்க யாருமில்லை . எனவே உரிமை மீட்பு போராட்டத்தில் நாமும் கண்டிப்பாக கலந்து கொண்டாக வேண்டும். 

5 .@@@@@@@
வேண்டாம் விரக்தி.
وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
(விசுவாசங்கொண்டோரே!) நீங்கள் தைரியத்தை இழந்துவிட வேண்டாம்,  கவலையும் பட வேண்டாம், (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் தாம் மிக்க மேலானவர்கள்.
(அல்குர்ஆன் : 3:139)

وَالضُّحٰىۙ‏ وَالَّيْلِ اِذَا سَجٰىۙ‏  مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰى‏  وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰى‏ وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى‏
ஒளிமிக்க பகலின் மீது சத்தியமாக!
மேலும், இரவின் மீதும் சத்தியமாக, அது அமைதியாக வந்தடையும் போது!
(நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை.
மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தைவிட உமக்கு மிகவும் சிறந்ததாக அமையும்.
இன்னும், உமதிரட்சகன் அடுத்து(ப்பல உயர்பதவிகளை) உமக்கு அளிப்பான், அப்போது நீர் திருப்தியடைவீர். (அல்குர்ஆன் : 93:1 to 5)

தக்வாவும் துஆவும் கை கொள்வோம்.
اللَّهُمَّ أَنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ،
அல்லாஹ்வே சிறுபான்மையினரான நம்பிக்கையாளர்களை பாதுகாப்பாயாக காப்பாற்றுவாயாக . புகாரி ஹதீஸ் 3386.

وَلَمَّا بَرَزُوْا لِجَـالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا 
رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَ‏
மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர். (அல்குர்ஆன் : 2:250)

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِىْۤ اَمْرِنَا وَ ثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏
“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக! எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக! மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக!” (அல்குர்ஆன் : 3:147). 

நாம் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காக பத்ர் / உஹத் தில்  அவர்கள் தன் உதிரத்தை ஊற்றி உயிரையே துறந்தார்கள் . நாம் ஒரு சில மணி நேரம் / சில வேர்வைத் துளி சிந்தாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பது நியாயமா. எனவே உரிமைக்காக குரல் கொடுத்து தொடர்ந்து போராடுவோம் . வெற்றி அல்லது ஷஹீத் என்ற இலக்கோடு பயணித்து இரு உலகிலும்` வெற்றியடைந்தவர்களாக ஆக்குவானாக ஆமீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.