வியாழன், 25 ஆகஸ்ட், 2016

சோதனையில் சாதனை படைத்தவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

சோதனையில் சாதனை படைத்தவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.)
قوله تعالى: واذ ابتلي إبراهيم ربه بكلمات فاتمهن قال اني جاعلك للناس اماما قال ومن ذريتي.....
قوله عليه الصلوة والسلام: ولقد اوذيت في الله وما يؤذي  احد .....(رواه الترمذي)
A. ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள்
செய்த தியாகங்களை, இறைவனின் சோதனைகளை அவர்கள் சாதனையாக்கிய வரலாற்று உண்மைகளை நாம் நம் வார்த்தைகளால் சொல்வதை விட இறைவனின் வார்த்தைகளால் அதை உள் வாங்குகிற போது அந்த வரலாற்றின் வீரியமும், தாக்கமும் நமக்கு விளங்கும்.
ரப்பு " ஜல்ல ஜலாலுஹூ" திருமறை குர்ஆனில் "இப்ராஹீம் நபியை அவருடைய இறைவன் பல காரியங்களைக் கொண்டு சோதித்தான்
அவர் அவைகளை பரிபூரணப் படுத்தினார்.(வெற்றி கண்டார்) 2:124.
என்று கூறுகிறான்.
எனவே தான் இறைவன் அவர்களை وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً உற்ற தோழமைக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
அல்லாஹ்வின் நண்பர் எனும் அந்தஸ்தை பெற எத்தனை சோதனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும் !
நபி இப்ராஹீம் அலை அவர்கள் தங்களின் வாழ்வில் சந்தித்த மூன்றுகட்ட சோதனைகள்   
1.தன்னை சோதனைக்கு கொடுத்தார்கள்.
பகுத்தறிவின் தந்தை என்று போற்றப்படும் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் தன்னுடைய இளம் வயதில் அல்லாஹ்வை தேட முற்படுகிறார்கள்.
நட்சத்திரம்,சந்திரன்,சூரியன் போன்ற படைப்புக்களை சிந்தித்து இறுதியில் மறையும் தன்மைகொண்டது இறைவனாக முடியாது, இவைகளை படைத்தவன் ஒருவன் உண்டு என்ற முடிவுக்கு வந்து,ஏகத்துவத்தை இந்த பூமியில் நிலை நிறுத்தினார்கள்.
இனி அடுத்தகட்டமாக தான் அறிந்துகொண்ட ரப்பின்பக்கம் தன் தந்தைக்கு அழைப்பு கொடுத்தார்கள்.அப்போதும் அவர்கள இளம் வயது தான் .
இனி மூன்றாம் கட்டமாக தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கு அழைப்பு கொடுக்கிறார்கள். இப்போதும் அவர்கள இளம் வயது வாலிபர் தான் .
இறுதியில் இப்ராஹீம் என்ற இளம் வயது வாலிபரின் வீரியமான தஃவாவின் தாக்கம் நம்ரூத் எனும் அந்நாட்டு மன்னன் வரை அடைந்த போது அவ்வரசன் கொதித்தெழுந்து,பிரமாண்டமான நெருப்புக் குண்டத்தை உருவாக்கி அதில் இப்ராஹீம் அலை அவர்களை தூக்கி எறிய உத்தரவிட்டான் .இப்போதும் அவர்கள இளம் வயது வாலிபர் தான் .
قصص الانبياء لابن كثير : وذلك أنهم شرعوا يجمعون حطباً من جميع ما يمكنهم من الأماكن، فمكثوا مدة يجمعون له، حتى أن المرأة منهم كانت إذا مرضت تنذر لئن عوفيت لتحملن حطباً لحريق إبراهيم. ثم عمدوا إلى جوبة عظيمة، فوضعوا فيها ذلك الحطب وأطلقوا فيه النار فاضطربت وتأججت، والتهبت وعلا لها شررٌ لم ير مثله قط
ثم وضعوا إبراهيم عليه السلام في كفة منجنيق صنعه لهم رجل من الأكراد يقال له "هزن
فلما وضع الخليل عليه السلام في كفة المنجنيق مقيداً مكتوفاً، ثم ألقوه منه إلى النار، قال: حسبنا الله ونعم الوكيل. كما روى البُخَاريّ عن ابن عبَّاس أنه قال: حسبنا الله ونعم الوكيل، قالها إبراهيم حين ألقي في النار، وقالها محمد حين قيل له: {إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَاناً وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِنْ اللَّهِ وَفَضْلٍ لَمْ يَمْسَسْهُمْ سُوءٌ} الآية.
، عن أبي صالح، عن أبي هريرة قال قال: صلى الله عليه وسلم "لما ألقي إبراهيم في النار قال: اللهم إنك في السماء واحد وأنا في الأرض واحد أعبدك".
وذكر بعض السلف أن جبريل عرض له في الهواء فقال: يا إبراهيم ألك حاجة؟ فقال أمّا إليك فلا
அந்த நெருப்பை மூட்ட பல நாட்கள் விறகு சேமிக்கப்பட்டது. அந்தகாலத்தில் ஒரு பெண் நோய்வாய்பட்டால் நான் குணமானால் இப்ராஹீமை எறிக்க விறகை சுமப்பேன் என்று நேர்ச்சை செய்வாளாம்.
இறுதியில் நெறுப்பு கொழுந்துவிட்டெறிய ஆரம்பித்ததும் மின்ஜனீக்" எனும் கருவிமூலம் இப்ராஹீம் அலை அவர்களை தூக்கி வீசினார்கள்
நெருப்பில் தூக்கி எறியப்பட்ட இப்ரஹீம் அலை அவர்களிடம் எந்த சலனமுமில்லை,கவலையுமில்லை,பயமுமில்லை.
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் என்று அல்லாஹ்விடம் பொருப்பு ஒப்படைத்துவிட்டு அமைதியானார்கள்.
நெருப்பில் வீசப்பட்டபோது யா அல்லாஹ்!வானத்தில் வணங்கப்படுபவன் நீ ஒருவன் தான்.பூமியில் உன்னை வணங்கும் ஜீவன் நான் ஒருவன் தான் இருக்கிறேன்.என்று துஆச்செய்தார்கள் என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
ஜிப்ரயீல் அலை அவர்கள் காற்றில் தோன்றி இப்ராஹீமே!உனக்கு ஏதேனும் தேவை உண்டா?நான் நிறைவேற்றுகிறேன் என்றபோது உம்மிடம் எனக்கு எந்த தேவையும் இல்லை,படைத்தவனிடம் தான் என்று பதில் கூறியதாக நல்லோர்களில் சிலர் கூறுகின்றனர்.
இறுதியில்,அந்த நெருப்பை சுகம் தரும் பூஞ்சோலையாக அல்லாஹ் மாற்றினான் என்பது நாமறிந்த செய்தி.
இந்த வரலாற்றின் மூலம் ஒரு செய்தி அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது,அது யாதெனில் அல்லாஹ்வுக்காக நாம் எந்த தியாகத்தை செய்தாலும் அதற்கு மிகச்சிறந்த பகரத்தை அல்லாஹ் தருவான்.
ஆடையின்றி நெருப்பில் வீசப்பட்ட இப்ராஹீம் அலை அவர்களுக்கு தான் நாளை மறுமையில் முதலாவதாக ஆடை அணிவிக்கப்படும் என பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள்.மேலும் இப்ராஹீம் அலை அவர்கள் நெருப்பில் போடப்பட்டபோது
روى البخاري  عن أم شريك رضي الله عنها، أن رسول الله صلى الله عليه وسلم أمر بقتل الوزغ، وقال "كان ينفخ على إبراهيم عليه السلام
பல்லி அதை ஊதி அதிகப்படுத்தியது ஆகவே பல்லியை கொல்லுங்கள் என நபி ஸல் அவர்கள் உத்தரவிட்டார்கள்.(புகாரி)
2.தன் பொருளில் சோதிக்கப்பட்டார்கள்:
அல்லாஹ்வுக்காக உடல் வணக்கம் செய்யும் பலர் பொருள் என்று வரும்போது பின்வாங்கிவிடுவர்,இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அவர்கள் வாழ்கை அமைந்தது.
3.தன் குடும்பத்தை சோதனைக்கு கொடுத்தார்கள்:
صحيح مسلم -58 - (2860)  عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا بِمَوْعِظَةٍ، فَقَالَ: " يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تُحْشَرُونَ إِلَى اللهِ حُفَاةً عُرَاةً غُرْلًا، {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} [الأنبياء: 104] أَلَا وَإِنَّ أَوَّلَ الْخَلَائِقِ يُكْسَى، يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَامُ، ………
5493. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(
ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (எங்களுக்கு) அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்:
மக்களே! (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாகநிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்விடம் ஒன்றுதிரட்டிக்கொண்டு வரப்படுவீர்கள். அல்லாஹ் கூறுகின்றான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை நாம் மீண்டும் படைப்போம். இது நம்மீது (பொறுப்பாகிவிட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயமாகச் செய்வோம் (21:104).
கவனத்தில் வையுங்கள்! மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள்.................

தவமிருந்து பெற்ற தன் மகனையும், அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற தனது துணைவியையும், இறைவனின் கட்டளையை ஏற்று மனித சஞ்சாரமற்ற அன்றைய மக்கா பாலைவனத்தில் விட்டு திரும்பினார்கள்.
அங்கே அவர்கள் பட்ட சிரமத்தை பொருந்திக் கொண்ட இறைவன் இந்த சமூகத்திற்கு கிடைக்கப் பெறாத" ஜம் ஜம்" நீரூற்றை வழங்கியதோடு இறைவனுக்காக  அவர்கள் ஏற்றுக் கொண்ட சிரமங்களை, ஏன்? அவர்களின் அசைவுகளைக் கூட ஹஜ்ஜூடைய கிரியைகளாக்கி கியாமத் வரை வரும் மக்களை பின்பற்றச் செய்து சோதனைகளை பெரும் சாதனையாக மாற்றினான்.
அதற்குப் பிறகும் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள் பருவ வயதை அடைவதற்கு முன்னால் இறைவன் தந்தையையும், மகனையும் சோதித்தான்......

قال الله تعالي: قال يبني اني اري في المنام اني اذبحك فانظر ماذا تري قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين...37:102
இப்ராஹீம் அலை அவர்கள் கூறினார்கள்: அருமை மகனே நான் உன்னை கனவில் அறுக்கக்கண்டேன்.உன் அபிப்பிராயம் என்ன?
(
இந்த கேள்வி தன் மகனின் கட்டுப்படும் தன்மையை சோதிக்க)
இஸ்மாயீல் அலை அவர்கள் கூறினார்கள் : தந்தையே தங்களுக்கு ஏவப்பட்டதை செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் பொருமையுள்ளவனாக என்னைக் காண்பீர்.
தவமிருந்து பெற்ற ஆண் மகவை இறைக் கட்டளைக்கு இசைந்து அறுக்கத் துணிந்தார்கள். இப்ராஹீம் அலை அவர்களின் வழிப்படும் தன்மையை பொருந்திக் கொண்ட இறைவன்.


" و ناديناه ان يا ابراهيم قد صدقت الرؤيا انا كذالك نجزي المحسنين".37:104
" நாம் அழைத்தோம் இப்ராஹீமே! நீங்கள் கணவை மெய்ப் படுத்தி விட்டீர்கள்இவ்வாறு தான் நல்லடியார்களுக்கு நாம் கூலி தருவோம்."
என்று கூறி அதற்குப் பகரமாக சுவனுத்து ஆட்டை அறுக்கச் செய்து இறைவன் ஒரு பெரிய தியாகச் செயலை நினைவு கூறும் வகையில் நமக்கு குர்பானியை கடமையாக்கினான்.
இவ்வாறாக தான் எதிர் கொண்ட எல்லா சோதனைகளையும் சாதனையாக மாற்றியதால் இறை நெருக்கத்தை பெற்று எல்லோருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்தார்கள்.
கோடான கோடி முஸ்லீம்களின் உள்ளத்திலும் உணர்விலும் கலந்தார்கள்.அவர்களின் வாழ்க்கையிலும், வணக்கத்திலும் இணைந்தார்கள்.
ما كان إبراهيم يهودياً ولا نصرانياً ولكن كان حنيفاً مسلماً وما كان من المشركين
 இப்ராஹீம், யூதராகவோ,கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை.(அல்குர்ஆன் 3:67)
துல்ஹஜ் மாதத்தில் உலகில் வாழும் முஸ்லீம்கள் ஆற்றும் விசேஷமான அமல்களுக்கு சொந்தக்காரர் அவர்.
திருக்குர்ஆனின் பார்வையில் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள்:
குர்ஆனில் 69 இடத்தில் இப்ராஹீம் என்ற பெயர் வருகிறது.இப்ராஹீம் என்ற பெயரில் தனி சூராவும் உண்டு.
25 சூராக்களில் அவரின் வரலாறு கூறப்படுகிறது.63 வசனங்கள் அவரைப்பற்றி பேசுகிறது.
சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு இறை தூதரின் தியாகவாழ்க்கையை கியாமத்நாள்வரை வரும் மக்களுக்கு பாடமாகவும்,படிப்பினையாகவும் அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான்.
"إن إبراهيم كان امةநிச்சயமாக இப்ராஹீம் அலை அவர்கள் ஒரு சமுதாயமாக இருந்தார்"
ஒரு சமுதாயம் சேர்ந்து செய்யும் தியாகத்தை தனிமனிதராக அவர் செய்தார்.ஒரு சமுதாயம் சேர்ந்து செய்யும் வணக்கத்தை அவர் தனிஒருவர் செய்தார்.ஒரு சமுதாயத்தின் கட்டுப்பாடு அவரிடம் இருந்தது.(அல்குர்ஆன் 16:120

"قانتا لله"ه
தூய்மையான நிரந்தர வணக்கசாலிهஇன்பம் துன்பம்,வெற்றி தோல்வி,சுகம் சந்தோஷம்,போன்ற வாழ்வின் எல்லா தருணங்களிலும்  அல்லாஹ்வின் நினைவைவிட்டும் நீங்காதவர். .(அல்குர்ஆன் 16:121)   
شاكرا لانعمه....ه
அவனது  அருட்கொடைக்கு நன்றி   செலுத்துபவர் ( அல் குர்ஆன்-16: 161
நபி ஸல் அவர்களின் பார்வையில் நபி இப்ராஹீம் அலை  அவர்கள்:
அல்லாஹுத்தஆலா தன் ஹபீபான முஹம்மத் ஸல் அவர்களை இப்ராஹீம் அலை அவர்களின் மார்க்கத்தை தவிர வேறு எந்த மார்க்கத்தையும் பின்பற்ற சொல்லவில்லை.
ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفاً '(
முஹம்மதே!) உண்மை வழி யில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!'என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். .(அல்குர்ஆன் 16:123)
عَنْ أَنَسٍ , قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " وُلِدَ لِي اللَّيْلَةَ غُلامٌ فَسَمَّيْتُهُ بِاسْمِ أَبِي إِبْرَاهِيمَ (رواه مسلم)
எனக்கு நேற்றிரவு ஒரு ஆண் குழந்தை பிறந்தது,அந்தகுழந்தைக்கு என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் பெயர்சூட்டியுள்ளேன் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
இதன்மூலம் நபி ஸல் அவர்களுக்கு நபி இப்ராஹீம் அலை அவர்களின் மீது எந்தளவு மரியாதையும் அன்பும் உண்டு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
                                                                                             قال صلى الله عليه وسلم : ( أما إبراهيم فانظروا إلى صاحبكم ) رواه البخاري
நபி ஸல் அவர்கள் மிஃராஜில் நபிமார்களை சந்தித்தநிகழ்வுகளை குறித்து தம் தோழர்களுக்கு எடுத்துச்சொல்லும்போது,நான் நபி இப்ராஹீம் அலை அவர்களை சந்தித்தேன்.அவர்கள் தோற்றத்தில் என்னைப்போலவே இருந்தார்கள்.என கூறினார்கள்.
أنا دعوة أبي إبراهيم (رواه أحمد (5/262))
நான் என் தந்தை இப்ராஹீம் அலை அவர்களின் துஆவால் இங்கு நபியாக அனுப்பப்பட்டேன் என நன்றியுடன் நாயகம் கூறிய வார்த்தைகளை இங்கு நினைவு கூறுவது பொருத்தம்.
அவர் வாழும்போது இந்த உம்மத்தை சீர்திருத்தம் செய்ய ஒரு நபி வேண்டும் என்று துஆச்செய்தவர்
.رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ و َيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர்உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும்ஞானத்தையும்  கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப் படுத்துவார். நீயே யாவற்றையும் மிகைத்தவன் ஞானம் படைத்தவன் என்றனர். 2:129.
இறுதி உம்மத்தான ஹழ்ரத் முஹம்மத் ஸல் அவர்களின் சமுதாயம் இப்ராஹீம் அலை அவர்களுக்கு மிக அதிகமாகவே நன்றிகடன் பட்டிருக்கிறது,ஏனென்றால் தவ்ஹீதை ஏற்றுக்கொண்ட இந்தகூட்டத்திற்கு முஸ்லீம்கள் என்று பெயர் வைத்தவர் அவரே என குர்ஆன் கூறுகிறது.
مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمينَ مِنْ قَبْلُ ( 22:78)

தியாகத்திற்கு கிடைத்த வாரிசு "ابن الذبيحين" நபிகள் நாயகம் ஸல் அவர்கள். இப்ராஹீம் அலை அவர்களின் துஆவின் பலனாக நாம் நபிகளுள் மாணிக்கம் இறைத் தூதர்களைக்கெல்லாம் தலைவரான இறதித் தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்களை நபியாகப் பெறும் பாக்கியம்  பெற்றோம்.
صحيح البخاري - (3 / 80)
2217 -  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " هَاجَرَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ بِسَارَةَ، فَدَخَلَ بِهَا قَرْيَةً فِيهَا مَلِكٌ مِنَ المُلُوكِ -[81]-، أَوْ جَبَّارٌ مِنَ الجَبَابِرَةِ، فَقِيلَ: دَخَلَ إِبْرَاهِيمُ بِامْرَأَةٍ هِيَ مِنْ أَحْسَنِ النِّسَاءِ، فَأَرْسَلَ إِلَيْهِ: أَنْ يَا إِبْرَاهِيمُ مَنْ هَذِهِ الَّتِي مَعَكَ؟ قَالَ: أُخْتِي، ثُمَّ رَجَعَ إِلَيْهَا فَقَالَ: لاَ تُكَذِّبِي حَدِيثِي، فَإِنِّي أَخْبَرْتُهُمْ أَنَّكِ أُخْتِي، وَاللَّهِ إِنْ عَلَى الأَرْضِ مُؤْمِنٌ غَيْرِي وَغَيْرُكِ، فَأَرْسَلَ بِهَا إِلَيْهِ فَقَامَ إِلَيْهَا، فَقَامَتْ تَوَضَّأُ وَتُصَلِّي، فَقَالَتْ: اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ، وَأَحْصَنْتُ فَرْجِي، إِلَّا عَلَى زَوْجِي فَلاَ تُسَلِّطْ عَلَيَّ الكَافِرَ، فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ "…….." فَقَالَتْ: اللَّهُمَّ إِنْ يَمُتْ فَيُقَالُ هِيَ قَتَلَتْهُ، فَأُرْسِلَ فِي الثَّانِيَةِ، أَوْ فِي الثَّالِثَةِ، فَقَالَ: وَاللَّهِ مَا أَرْسَلْتُمْ إِلَيَّ إِلَّا شَيْطَانًا، ارْجِعُوهَا إِلَى إِبْرَاهِيمَ، وَأَعْطُوهَا آجَرَ فَرَجَعَتْ إِلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ، فَقَالَتْ: أَشَعَرْتَ أَنَّ اللَّهَ كَبَتَ الكَافِرَ وَأَخْدَمَ وَلِيدَةً "
__________ 
[تعليق مصطفى البغا]
(فغط) ضاق نفسه وكاد يختنق حتى سمع له غطيط وهو تردد النفس صاعدا إلى الحلق حتى يسمعه من حوله. (ركض برجله) حركها وضربها على الأرض. (شيطانا) متمردا من الجن. (آجر) هي هاجر أم إسماعيل عليه السلام. (كبت الكافر) أذله وأخزاه ورده خاسئا. (أخدم وليدة) أعطى أمة للخدمة والوليدة الجارية للخدمة كبيرة كانت أم صغيرة]
[2492، 3179، 4796، 6550]
@@@@@@@@@
ஹஜ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக என்னென்ன துன்பங்களை எல்லாம் அடைந்தார்களோ அதில் சிறிதளவும்  குறைவில்லாமல் நமது நபிகள் நாயகம் ஸல் அவர்களும் இறைப் பாதையில் துன்புறுத்தப் பட்டார்கள்.
2472 عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لقد أخفت في الله وما يخاف أحد ولقد أوذيت في الله وما يؤذى أحد ولقد أتت علي ثلاثون من بين يوم وليلة وما لي ولبلال طعام يأكله ذو كبد إلا شيء يواريه إبط بلال قال أبو عيسى هذا حديث حسن صحيح (رواه الترمذي)
இறைப் பாதையில் நான் பயமுறுத்தப் பட்டேன், துன்புறுத்தப் பட்டேன். வேறு யாரும் இந்த அளவுக்கு துன்புறுத்தப் படவில்லைஎனக்கும், பிலால் ரலி அவர்களுக்கும் ஈரக் குலையை நனைக்கும் அளவுக்கு கூட உணவு இல்லாமல் முப்பது நாட்கள் கழிந்துள்ளது. என்று நபிகள் நாயகம் ஸல் அவர்களே கூறினார்கள். (நூல் திர்மிதீ)
என்றால் அவர்கள் எவ்வித சோதனைகளுக்கு ஆழ்த்தப் பட்டிருப்பார்கள்.
எந்த ஒரு மனிதனும் தான் கொண்ட கொள்கையில் தன் குடும்பமும், தன்னைச் சூழ்ந்துள்ள சமூகமும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் தான் கொண்ட கொள்கையில் வெற்றி கண்டதாக சரித்திரமில்லை...!
ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முதன் முதலாக தனது ஏகத்துவ போதனையை எடுத்துரைத்த போது முதல் எதிர்ப்பே தனது பெரிய தந்தை அபூலஹப் மூலம் தான் வந்தது.
தனக்கு உதவியாக அரணாக இருந்து வந்த தனது பெரிய தந்தை அபூதாலிப் கூட மக்கா குரைஷி வமிஷத் தலைவர்களின் நிர்பந்தம் மேலிடவே இந்த கொள்கையை விட்டு விடக் கூடாதா? என்று வினவினார். ஆனால் நபிகள் கோமான் ஸல் அவர்கள் என் வலது கையில் சூரியனையும்' இடது கையில் சந்திரனையும், கொடுத்தாலும் நான் ஒரு போதும் விட்டு விட மாட்டேன் என்று கூறினார்கள்  .
சோதனையான கால கட்டங்களை தன் மன உறுதியால் சாதனையாக மாற்றிக் காட்டினார்கள். கவலைக்குரிய வருடம்.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்த எல்லா வரலாற்றாசிரியர்களும் நீக்க மற குறிப்பிட்ட நிகழ்வு நபிகள் ஸல் அவர்களுக்கு மக்கா கா:.பிர்களால் துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம் ஆறுதலாக இருந்த அவர்களின் அருமை மனைவி கதீஜா ரலி அவர்களும், அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களும் மரணித்த வருடம், மேலும் தாயி:.ப் நகர மக்களின் புறக்கணிப்பும், நோவினையும், சேர்ந்து கொண்ட அந்த ஆண்டை" عام الحزن" (கவலைகள் நிறைந்த வருடம்) என்று தான் எல்லா வரலாறுகளும் பதிவு செய்கிறது. அத்தனையிலும் பொறுமை காத்து இறைவனிடம்  " நபியே! நீங்கள் மகத்தான நற்குணம் கொடுக்கப் பட்டுள்ளீர்கள்" என்ற நற்சான்றிதழையும், மி:.ராஜ் என்ற விண்ணுலப் பயணத்தையும், பரிசாகப் பெற்றார்கள்.
ஷூ:.பயே அபூதாலிப்" என்ற இடத்தில் ஊரை விட்டும் ஒதுக்கி வைத்த போது இலை தளைகளை சாப்பிட்டு வாழ்ந்தும் கொள்கையை விட்டுத் தராமல் சாதனை மேல் சாதனை படைத்தார்கள்.
மக்காவிலிருந்து தன் சொந்தங்களால் துரத்தப்பட்ட போதும் தான் ஹிஜ்ரத் செய்த மதீனா மாநகரில் ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி, எதிரிகளின் எதிர்ப்புகளை வென்றெடுத்து மக்காவையும் வெற்றி கண்டார்கள்.
மக்காவிலிருந்து தன் சொந்தங்களால் துரத்தப்பட்ட போதும் எதிர்ப்புகள் பலவற்றை போரின் வாயிலாக எதிர் கொண்டார்கள். பத்ருப் போரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அடைந்த பொழுதிலும், சில போர்களில் தோல்வியும் ஏற்பட்டது.  குறிப்பாக உஹது யுத்தத்தில் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் உத்தரவை ஸஹாபாக்களில் சிலர் மீறிய போது பெரும் சோதனையை எதிர் கொண்டார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு, தலையில் காயம் ஏற்பட்டது. எழுபதுக்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் ஷஹீதாக்கப் பட்டார்கள்.இருப்பினும் அத்தனை சோதனைகளையும் தாண்டி அடுத்து வந்த யுத்தங்களில் படை பலம்' பணபலத்தை விட ஈமானிய பலம் பெரியது என்பதை ஸஹாபாக்களுக்கு உணர்த்தி போர்களில் வெற்றி கண்டார்கள்.
தான் நபித்துவப் பதவியேற்ற போது தன்னைத் தவிர யாரும் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் வெறும் 23 ஆண்டு காலத்தில் அரபு தீபகற்பத்தில் இறைமறுப்பாளனும் இல்லாத அளவுக்கு இறைவனின் பேரருளால் மாபெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள்.
1400 வருடங்கள் கடந்த பின்னரும் அவர்கள் கொண்டு வந்த கொள்கையை பின்பற்றும் பெரும் சமுதாயம் இருக்கும் அளவுக்கு தியாகத்தை செய்துள்ளார்கள்.
முடிவுரை:
தியாகங்களினால் தான் இவை சாத்தியமானது. இந்த இரு பெரும் நபிமார்களின் வாரிசுகளான இந்த சமூகம் இந்த தியாக வரலாற்றை படிப்பதினால் மட்டும் இந்த உலகில் நிலைபெற முடியாது.  மாறாக அந்த தியாகத்தை நடைமுறைப் படுத்தி அவர்களின் சுன்னத்துகளை சிரமேற்று நாம் கடைபிடித்தால் எந்த சூழ்ச்சிகளிலும் நாம் வெற்றி பெறலாம்.
வல்ல ரப்புல் ஆலமீன் ஹஜ், குர்பானி உள்ளிட்ட கடமைகளை முறையாக நிறைவேற்றி அவர்களின் அடிச்சுவற்றை பின்பற்றி வாழ்வதற்கு நமக்கு நல்லுதவி புரிவானாக ஆமீன்.



வியாழன், 18 ஆகஸ்ட், 2016

அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள்

بسم الله الرحمن الرحيم
       அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள்
******************************************************
உலகெங்கிலும் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கின்றார்கள் பொதுவாக ஒரு இடத்தின் சிறப்பு விளங்கினால்தான் அங்கு செல்ல வேண்டும் அமல்ச் செய்ய வேண்டும் என்கின்ற ஆசையும் ஆர்வமும் உண்டாகும்.  எனவே அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களான அங்குள்ள சிறப்பான இடங்களின் மகிமையையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம் அந்த வகையில் சிலவற்றை இந்த வாரத்தில் கான்போம்
ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ  
இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.
(
அல்குர்ஆன் : 22:32)
மக்காவின் சிறப்பு
**********************

இறைத்தூதர் இப்ராஹீம் ( அலை) அவர்கள் தம் அடிமைப் பெண் ஹாஜரையும் புதல்வர் இஸ்மாயீல் ( அலை) அவர்களையும் மனித சஞ்சாரமற்ற மக்கா பாலைவனத்தில் குடியமர்த்திவிட்டு அல்லாஹ்விடம் செய்த பிரார்த்தனை
رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ  
எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!
(
அல்குர்ஆன் : 14:37)
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِيْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰى عَذَابِ النَّارِ‌ وَبِئْسَ الْمَصِيْرُ‏‏  
(
இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாகஎன்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.
(
அல்குர்ஆன் : 2:126)
2153 - "إن إبراهيم حرم بيت الله وأمنه وإني حرمت المدينة ما بين لابتيها: لا يقلع عضاهها ولا يصاد صيدها". (م) عن جابر (صح).
2645. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன். அதன் முள்மரங்கள் வெட்டப்படக் கூடாது; அதன் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படக் கூடாது. இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 15. ஹஜ்
1834- صحيح البخاريٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ افْتَتَحَ مَكَّةَ: ((لاَ هِجْرَةَ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا، فَإِنَّ هَذَا بَلَدٌ حَرَّمَ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، وَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَإِنَّهُ لَمْ يَحِلَّ الْقِتَالُ فِيهِ لأَحَدٍ قَبْلِي، وَلَمْ يَحِلَّ لِي إِلاَّ سَاعَةً مِنْ نَهَارٍ، فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، لاَ يُعْضَدُ شَوْكُهُ، وَلاَ يُنَفَّرُ صَيْدُهُ، وَلاَ يَلْتَقِطُ لُقَطَتَهُ إِلاَّ مَنْ عَرَّفَهَا، وَلاَ يُخْتَلَى خَلاَهَا)). قَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ. إِلاَّ الإِذْخِرَ، فَإِنَّهُ لِقَيْنِهِمْ وَلِبُيُوتِهِمْ. قَالَ قَالَ: ((إِلاَّ الإِذْخِرَ)).
1834. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  ”இனி (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்தல் கிடையாது என்றாலும் அறப்போரிடுதல் அதற்காக (வும் மற்ற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் இருக்கிறது! நீங்கள் போருக்காக அழைக்கப்பட்டால் புறப்படுங்கள்! வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ் இந்த ஊரைப் புனிதப்படுத்தியிருக்கிறான்; அவன் புனிதப்படுத்திய காரணத்தால் மறுமை நாள் வரை இவ்வூர் புனிமானதாகும்! எனக்கு முன்னர் எவருக்கும் இவ்வூரில் போரிட அனுமதிக்கப்படவில்லை; எனக்குக் கூட பகலில் சிறிது நேரம் (மட்டுமே) அனுமதிக்கப்பட்டது. அல்லாஹ் புனிதப்படுத்தியிருப்பதால், மறுமை நாள் வரை இவ்வூர் புனிதமானதாகும்! இங்குள்ள முட்களை வெட்டக் கூடாது; வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது; பிறர் தவறவிட்ட பொருட்களை அதை அறிவிப்பவர் தவிர மற்றவர் எடுக்கக் கூடாது; இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது!என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, “இறைத்தூதர் அவர்களே! இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது வீடுகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறது!என்று அப்பாஸ்(ரலி) கேட்க, நபி(ஸல்) அவர்கள், “இத்கிரைத் தவிர!என்று பதிலளித்தார்கள். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 28. (இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்
பாதுகாப்பு மையம்
***********************

قوله تعالي: ومن دخله كان امنا(3:97)
اَوَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ‌  اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَةِ اللّٰهِ يَكْفُرُوْنَ‏  
அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?
(
அல்குர்ஆன் : 29:67)
وارزق اهله من الثمرات 2:126  
இப்ராஹீம் ( அலை) கேட்ட இந்த துஆவையும் அல்லாஹ் கபூல்ச் செய்தான் இன்றைக்கு உலகெங்கிலும் விளையும் கனிவர்கங்கள் எந்த பற்றாக்குறையுமில்லாமல் ஹாஜிகளுக்கு கிடைக்கின்றது எல்லா நாடுகளில் தயாராகும் பொருட்களும் கிடைக்கின்றது.
இந்த வசனத்திற்கு (2:126)விளக்கமாக தப்ஸீர் ஜலாலைனில் ஒரு நிகழ்வு காணக்கிடைக்கின்றது.
இப்ராஹீம் நபியின் துஆவை ஏற்றுக் கொண்ட இறைவன் வானவர் ஜிப்ரயீல் ( அலை) அவர்களுக்கு கட்டளையிட்டான் பலஸ்தீனி்ல் உள்ள நல்ல கனிவர்கங்கள் விழையக்கூடிய குழுமையான ஓர் ஊரை அடியோடு பேர்த்து வந்து மக்காவிற்கு அருகில் வைக்கும்படி உத்திரவிட்டான் அவ்வாரே ஜிப்ரயீல் ( அலை) அந்த ஊரை எடுத்துவந்து கஃபாவை ஏழுமுறை தவாப் செய்து மக்காவிற்கு சில கிலோ மீட்டர் தூரத்தில் வைத்து விட்டார்கள். அந்த ஊரை வைத்துக்கொண்டே தவாப் செய்ததால் அந்த ஊருக்கு தாயிப் என்பதாக பெயர் இன்றும் அவ்வூர் அழகிய குழுமையான ஊராக காட்சியளிக்கின்றது இது இப்ராஹீம் நபியின் துஆவின் பரக்கத்தினாலாகும்
கஃபாவின் சிறப்புக்கள்
******************************

முதல் இறையில்லம்
اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌‏  
(
இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
(
அல்குர்ஆன் : 3:96)
عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلي الله عليه وسلم ان الله تعالي ينزل علي اهل هذا المسجد مسجد مكة في كلي يوم وليلة مأة وعشرين رحمة ستين للطائفين واربعين للمصلين وعشرين للناظرين - رواه البيهقي باسناد حسن
عن ابن عباس رضي الله عنهما ان النبي صلي الله عليه وسلم قال الطواف حول البيت مثل الصلاة الا انكم تتكلمون فيه فمن تكلم فيه فلا يتكلمن الا بخير - رواه الترمذي
அல்லாஹ்தஆலா கஃபாவின் மீது ஒவ்வொரு நாளும் நூற்றி இருபது ரஹ்மத்தை இரக்குகின்றான் அதில் தவாப் செய்பவர்களுக்கு அறுபது ரஹ்மத்தும் தொழுபவர்களுக்கு நாற்பதும் கஃபாவை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இருபது ரஹ்மத்தும் வழங்குகின்றான்.
நன்மை அதிகம்
*******************

1190صحيح البخاريِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ)). 
[تحفة 13464].
1190. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்“.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 20. மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு
15071 - ٍ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم « صَلاَةٌ فِى مَسْجِدِى هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ وَصَلاَةٌ فِى الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفِ صَلاَةٍ » . قَالَ حُسَيْنٌ « فِيمَا سِوَاهُ » . تحفة 2432 معتلى 1619
ஐம்பது தவாப் செய்வதின் சிறப்பு

876- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَنْ طَافَ بِالْبَيْتِ خَمْسِينَ مَرَّةً خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ))رواه الترمذي
தவாபிற்குத்தான் அதிக நன்மை. கஃபாவில்  மட்டுமே அனுமதிக்கப்பட்ட இபாதத் தவாப்.
ருக்னுல் யமானிக்கும் ஹஜ்ருல் அஸ்வதுக்கும் இடையில் கீழ் வரும் துஆவை ஓதினால் எழுபது வாணவர்கள் அதற்கு ஆமீன் கூறுகின்றார்கள்
2581 -[21] (
ﻟﻢ ﺗﺘﻢ ﺩﺭاﺳﺘﻪ) ﻭﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻟﺴﺎﺋﺐ ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ ﻣﺎ ﺑﻴﻦ اﻟﺮﻛﻨﻴﻦ: (ﺭﺑﻨﺎ ﺁﺗﻨﺎ ﻓﻲ اﻟﺪﻧﻴﺎ ﺣﺴﻨﺔ ﻭﻓﻲ اﻵﺧﺮﺓ ﺣﺴﻨﺔ ﻭﻗﻨﺎ ﻋﺬاﺏ اﻟﻨﺎﺭ) ﺭﻭاﻩ ﺃﺑﻮ ﺩاﻭﺩ
2590 -[30] (ﺿﻌﻴﻒ) ﻭﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﻭﻛﻞ ﺑﻪ ﺳﺒﻌﻮﻥ ﻣﻠﻜﺎ» ﻳﻌﻨﻲ اﻟﺮﻛﻦ اﻟﻴﻤﺎﻧﻲ " ﻓﻤﻦ ﻗﺎﻝ: اﻟﻠﻬﻢ ﺇﻧﻲ ﺃﺳﺄﻟﻚ اﻟﻌﻔﻮ ﻭاﻟﻌﺎﻓﻴﺔ ﻓﻲ اﻟﺪﻧﻴﺎ ﻭاﻵﺧﺮﺓ ﺭﺑﻨﺎ ﺁﺗﻨﺎ ﻓﻲ اﻟﺪﻧﻴﺎ ﺣﺴﻨﺔ ﻭﻓﻲ اﻵﺧﺮﺓ ﺣﺴﻨﺔ ﻭﻗﻨﺎ ﻋﺬاﺏ اﻟﻨﺎﺭ ﻗﺎﻟﻮا: ﺁﻣﻴﻦ ". ﺭﻭاﻩ اﺑﻦ ﻣﺎﺟﻪ
ஜம் ஜம் நீரின் சிறப்பு
**************************
அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் அடையாளச் சின்னங்களில் ஒன்று ஜம் ஜம் தண்ணீர் ஆகும் .ஒருவர் இஸ்லாத்தைப் பற்றி விளங்க இதனை சிந்தித்தால் போதும்.
عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم ماء زمزم لما شرب له ان شربته تشتشفي به شفاك الله وان شربته لشبعك اشبعك الله به وان شربته لقطع ظمئك قطعه وهي هزمه جبرئيل وسقيا الله اسماعيل- ( دار قطني والحاكم)
ஜம் ஜம் நீர் எந்த நோக்த்திற்காக அருந்தப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறும் நோய் குணமடைய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் அருந்தப்பட்டால் நோய் குணமாகும் பசி தீர வேண்டுமென அருந்தினால் பசி தீர்ந்து விடும் ( நூல் ஹாகிம் தார குத்னி)
قال ابو عبد الله محمد بن علي الترمذي وحدثني ابي رحمه الله دخلت الطواف في ليلة ظلماء فاخذني من البول ماشغلني فجعلت اعتصر حتي اذاني وخفت ان خرجت من المسجد ان اطأ بعض تلك الاقدام وذلك ايام الحج فذكرت هذا الحديث فدخلت زمزم فتضلعت منه فذهب عني الي الصباح( تفسير قرطبي)
இமாம் திர்மிதி ( ரஹ்) அவர்கள் தமது தந்தையின் மூலம் அறிவிக்கிறார்கள் ஒரு நாள் இருளான இரவில் தவாப் செய்ய ஹரம் ஷரீபுக்கு சென்றேன் அந்த சமயத்தில் எனக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்பட்டது நான் சிறுநீர் கழிக்காமல் அதை அடக்கிக் கொண்டிருந்தேன் வெளியில் சென்றால் மக்களின் பாதங்களை மிதித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் அது ஹஜ்ஜூடைய காலம் என்பதாலும் அவ்வாறு செய்தேன் அப்போது இந்த ஹதீஸ் எனக்கு நினைவிற்கு வந்தது உடனே ஜம் ஜம் கிணற்றுக்குச் சென்று அதன் நீரை வயிறு நிரம்ப குடித்தேன் அதன் பரக்கத்தால் அடுத்தநாள் காலை வரை எனக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்படவில்லை என்றார்கள். (நூல் தப்ஸீர் குர்துபி பாகம் 9)
ஒருவர் நாற்பது தினங்கள் வரை ஜம் ஜம் நீரை குடித்துக்கொண்டே நோன்பு நோட்பவராகவும் தவாஃபு செய்பவராகவும். நல்ல திடகாத்திரமாகவும் இருந்திருக்கிறார் என இப்னுல் கய்யூம்( ரஹ்) அவர்கள் தங்களுடைய ஜாதுல் மஆது நூலில் எழுதியுள்ளார்கள்.
وروي عن عبد الله بن عمرو رضي:  ان في زمزم عينا في الجنة من قبل الركن
அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி) அவர்களின் மூலம் அறிவிக்கப்படுகிறது ஜம் ஜம் கிணற்றிலிருந்து ருக்னுல் யமானியின் திசையின் வழியாக சுவர்க்கத்தின் பக்கம் ஒரு ஊற்று இருக்கின்றது
(
நூல் தப்ஸீர் குர்துபி பாகம் 9)
ஜம் ஜம் நீரில் கலந்துள்ள நோய் நிவாரண மூலப் பொருட்கள்
*****************************

*
மக்னீசியம் சல்பேட் : இவை உடல் உஷ்ணத்தை வெளியேற்றுகிறது தலைசுற்றல் மயக்கம் ஆகியவைகளை தடுக்கின்றது வீன் கொழுப்புச்சத்தை குறைக்கின்றது.
* சோடியம் சல்பேட்  - இவை மலச்சிக்கல் முழங்கால்வலி. சர்க்கரைநோய். நாவறட்சி ஆகியவை நீக்கப்படுகின்றன மேலும் இது இரத்த சுத்திகரிக்கும் மருந்தாகும்.
* சோடியம் குளோரைடு - இதனால் இரத்த விருத்தி ஏற்பட்டு உடல் நலம் பெறுகிறது வயிற்றுப்போக்கு நிறுத்தப்படுகிறது. உடல் உறுப்புக்களுக்கு வலு ஏற்படுகிறது.
* கால்சியம் கார்போஹைட்ரேட் - இதனால் உணவு செரிக்கிறது மூட்டுவலி நீங்குகிறது.
* பொட்டாசியம் நைட்ரேட்-:  இதனால் சிறுநீரும் வியர்வையும் உடலிலிருந்து வெளியேருகிறது.
* ஹைட்ரஜன் சல்பேட் : இதனால் தோல் வியாதி ஜலதோஷம் ஆகியவை நீக்கப்படுகின்றன.நினைவாற்றல் அதிகமாகும்.
1971 ம் ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்துக்கு  ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார்.கஃபத்துல்லாஹ் தாழ்வு பகுதியான மக்காவின் நடு மையத்தில் உள்ளதால் மக்காவின் கழிவு நீர் ஒன்று சேர்ந்து கிணற்றில் விழுவதாக அவரது யூகம் இருந்தது மன்னர் பைசல் அந்த எகிப்திய டாக்டரின் கூற்றை பொய் என நிரூபிக்க முடிவெடு்த்தார் ஜம்ஜம் நீரை ஐரோப்பிய சோதனைச் சாலைக்கு அனுப்பி இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததா என்பதை ஆராயச் சொன்னார் அப்படி ஆராய்ந்த பிரகு ஐரோப்பிய சோதனைச் சாலைகள் இந்த நீர் குடிப்பதற்கு மிக உகந்தது அதில் மற்ற நீரை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்று சான்று அளித்தது.எனவே அந்த எகிப்து மருத்துவர் குறிப்பிட்டது பொய் என்று நிரூபிக்கப்பட்டது.
ஜம் ஜம் நீரை குடிக்கும் முறை
**********************************

ஜம் ஜம் நீரை பிஸ்மில்லாஹ் சொல்லி குடிக்க வேண்டும். கிப்லாவை முன்னோக்கி நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் குடிப்பது முஸ்தப்பாகும். நின்று கொண்டுதான் குடிக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் ஏதுமில்லை.
குடிக்கும் போது பின் வரும் துஆவை ஓதுவது சிறப்பு
اللهم اني اسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء
யா அல்லாஹ். நிச்சயமாக நான் பலன் தரும் கல்வியையும் விசாலமான உணவையும் எல்லா நோய்களிலிருந்து சுகத்தையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன்.
ஹஜருல் அஸ்வத் கல்லின் சிறப்பு
***************************************

அல்லாஹ்வின் அடையாளச்சின்னங்களில் இதுவும் ஒன்று இது சுவனத்துக் கல்லாகும்
2578 -[18] (
ﺻﺤﻴﺢ) ﻭﻋﻨﻪ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ اﻟﺤﺠﺮ: «ﻭاﻟﻠﻪ ﻟﻴﺒﻌﺜﻨﻪ اﻟﻠﻪ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﻟﻪ ﻋﻴﻨﺎﻥ ﻳﺒﺼﺮ ﺑﻬﻤﺎ ﻭﻟﺴﺎﻥ ﻳﻨﻄﻖ ﺑﻪ ﻳﺸﻬﺪ ﻋﻠﻰ ﻣﻦ اﺳﺘﻠﻤﻪ ﺑﺤﻖ» . ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ ﻭاﺑﻦ ﻣﺎﺟﻪ ﻭاﻟﺪاﺭﻣﻲ
அல்லாஹ்வின்மீது ஆனையாக இந்த கல் நாளை மறுமையில் கொண்டுவரப்படும் இதற்கு இரு கண்கள் உண்டு நாவுமுண்டு தன்னை முத்தமிட்டவர்களுக்காக மறுமையில் சாட்சி கூறும்
2579 -[19] (ﻟﻢ ﺗﺘﻢ ﺩﺭاﺳﺘﻪ) ﻭﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﺇﻥ اﻟﺮﻛﻦ ﻭاﻟﻤﻘﺎﻡ ﻳﺎﻗﻮﺗﺘﺎﻥ ﻣﻦ ﻳﺎﻗﻮﺕ اﻟﺠﻨﺔ ﻃﻤﺲ اﻟﻠﻪ ﻧﻮﺭﻫﻤﺎ ﻭﻟﻮ ﻟﻢ ﻳﻄﻤﺲ ﻧﻮﺭﻫﻤﺎ ﻷﺿﺎءا ﻣﺎ ﺑﻴﻦ اﻟﻤﺸﺮﻕ ﻭاﻟﻤﻐﺮﺏ» . ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ
ஹஜருல் அஸ்வதும் மகாமே இப்ராஹீம் என்ற கல்லும் சுவனத்தின் மாணிக்க கற்கலாகும் அதன் ஒலியை அல்லாஹ் போக்கி வைத்திகுக்கின்றான் அவ்வாறு போக்காமல் இருந்திருந்தால் உலகம் முழுவதும் பிரஹாசமாகவே இருந்திருக்கும்
ஸஃபா மர்வாவின் சிறப்பு
*******************************

اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَاوَمَنْ تَطَوَّعَ خَيْرًاۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ‏  

நிச்சயமாக ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
(
அல்குர்ஆன் : 2:158)
அரஃபா நாளின் சிறப்பு
***************************
قال رسول الله صلي الله عليه وسلم الحج عرفة رواه ابوداود
ஹஜ்ஜின் பர்ளுகள் மூன்று
1)
இஹ்ராம் அணிந்து நிய்யத் வைத்தல்
2)
அரஃபாவில் தங்குவது
3)
தவாஃப் ஜியாரத் செய்தல்
இம்மூன்றில் ஏதாவது ஒன்று விடுபட்டாலும் ஹஜ்ஜூ நிறைவேறாது.
துல்ஹஜ் ஒன்பதாம் நாள் சூரியன் உச்சிசாய்ந்ததிலிருந்து சூரியன் மறையும்வரை தங்க வேண்டும் அதற்கு முடியாதவர்கள் பத்தாம் நாள் சுப்ஹூஸாதிக் வரையுள்ள நேரத்தில் ஒரு நிமிட நேரம் தங்கினாலும் ஹஜ் நிறைவேறிவிடும்
எனவேதான் மருத்துவனையில் சிகிச்சைபெறும் ஹாஜிகளைக்கூட ஆம்புலன்ஸ் அல்லது ஹெலிக்காப்டர் மூலம் அரஃபா மைதானத்தை கடக்கச்செய்கிரார்கள்.
2594 -[3] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ: ﺇﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " ﻣﺎ ﻣﻦ ﻳﻮﻡ ﺃﻛﺜﺮ ﻣﻦ ﺃﻥ ﻳﻌﺘﻖ اﻟﻠﻪ ﻓﻴﻪ ﻋﺒﺪا ﻣﻦ اﻟﻨﺎﺭ ﻣﻦ ﻳﻮﻡ ﻋﺮﻓﺔ ﻭﺇﻧﻪ ﻟﻴﺪﻧﻮ ﺛﻢ ﻳﺒﺎﻫﻲ ﺑﻬﻢ اﻟﻤﻼﺋﻜﺔ ﻓﻴﻘﻮﻝ: ﻣﺎ ﺃﺭاﺩ ﻫﺆﻻء ". ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ
2623. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில்  வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 15. ஹஜ்
2601 -[10] (ﻟﻢ ﺗﺘﻢ ﺩﺭاﺳﺘﻪ) ﻭﻋﻦ ﺟﺎﺑﺮ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﺇﺫا ﻛﺎﻥ ﻳﻮﻡ ﻋﺮﻓﺔ ﺇﻥ اﻟﻠﻪ ﻳﻨﺰﻝ ﺇﻟﻰ اﻟﺴﻤﺎء اﻟﺪﻧﻴﺎ ﻓﻴﺒﺎﻫﻲ ﺑﻬﻢ اﻟﻤﻼﺋﻜﺔ ﻓﻴﻘﻮﻝ: اﻧﻈﺮﻭا ﺇﻟﻰ ﻋﺒﺎﺩﻱ ﺃﺗﻮﻧﻲ ﺷﻌﺜﺎ ﻏﺒﺮا ﺿﺎﺟﻴﻦ ﻣﻦ ﻛﻞ ﻓﺞ ﻋﻤﻴﻖ ﺃﺷﻬﺪﻛﻢ ﺃﻧﻲ ﻗﺪ ﻏﻔﺮﺕ ﻟﻬﻢ ﻓﻴﻘﻮﻝ اﻟﻤﻼﺋﻜﺔ: ﻳﺎ ﺭﺏ ﻓﻼﻥ ﻛﺎﻥ ﻳﺮﻫﻖ ﻭﻓﻼﻥ ﻭﻓﻼﻧﺔ ﻗﺎﻝ: ﻳﻘﻮﻝ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ: ﻗﺪ ﻏﻔﺮﺕ ﻟﻬﻢ ". ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻓﻤﺎ ﻣﻦ ﻳﻮﻡ ﺃﻛﺜﺮ ﻋﺘﻴﻘﺎ ﻣﻦ اﻟﻨﺎﺭ ﻣﻦ ﻳﻮﻡ ﻋﺮﻓﺔ» . ﺭﻭاﻩ ﻓﻲ ﺷﺮﺡ اﻟﺴﻨﺔ
புனித ஹஜ் பயணம் சென்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தல்ல ஹாஜிகள் அல்லாத மற்றவர்களுக்கு அந்நாளில் நோன்பு நோற்பது சுன்னதாகும்.
2692- صحيح مسلم- عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ إِنَّ النَّاسَ شَكُّوا فِي صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ فَأَرْسَلَتْ إِلَيْهِ مَيْمُونَةُ بِحِلاَبِ اللَّبَنِ وَهُوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ فَشَرِبَ مِنْهُ وَالنَّاسُ يَنْظُرُونَ إِلَيْهِ.
2067. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அரஃபா நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அரஃபாவில் தங்கியிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து அருந்தினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு
அரஃபாவில் மரணித்தவருக்கு அண்ணல் நபியின் சுபச்செய்தி
2949- صحيح مسلم  عَنِ ابْنِ عَبَّاسٍ- رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ- قَالَ أَيُّوبُ فَأَوْقَصَتْهُ أَوْ قَالَ- فَأَقْعَصَتْهُ وَقَالَ عَمْرٌو فَوَقَصَتْهُ- فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ((اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ وَلاَ تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ- قَالَ أَيُّوبُ فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا وَقَالَ عَمْرٌو- فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ يُلَبِّي)
2281. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அரஃபாபெருவெளியில் தங்கியிருந்த ஒருவர், தமது வாகனத்திலிருந்து விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்துவிட்டது. இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டபோது, ”அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டுங்கள். இரு ஆடைகளில் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், ”தல்பியாசொல்லிக்கொண்டிருப்பவராக மறுமை நாளில் அவரை அல்லாஹ் எழுப்புவான்என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 15. ஹஜ
அரஃபாவில் கேட்கும் துஆ
*******************************

2598 -[7] (
ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﺷﻌﻴﺐ ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻋﻦ ﺟﺪﻩ ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " ﺧﻴﺮ اﻟﺪﻋﺎء ﺩﻋﺎء ﻳﻮﻡ ﻋﺮﻓﺔ ﻭﺧﻴﺮ ﻣﺎ ﻗﻠﺖ ﺃﻧﺎ ﻭاﻟﻨﺒﻴﻮﻥ ﻣﻦ ﻗﺒﻠﻲ: ﻻ ﺇﻟﻪ ﺇﻻ اﻟﻠﻪ ﻭﺣﺪﻩ ﻻ ﺷﺮﻳﻚ ﻟﻪ ﻟﻪ اﻟﻤﻠﻚ ﻭﻟﻪ اﻟﺤﻤﺪ ﻭﻫﻮ ﻋﻠﻰ ﻛﻞ ﺷﻲء ﻗﺪﻳﺮ ". ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ
அரஃபா முழுவதுமே தங்குமிடம்தான் ஜபலுர் ரஹ்மத் மலைக்கு அருகில் நபி ( ஸல்) தங்கினார்கள் என்ற காரணத்தால் அந்த இடத்தில் தங்குவதற்காக பெரும் சிரமத்தை மேற்கொள்கிறார்கள்
3011- صحيح مسلم عَنْ جَابِرٍ فِي حَدِيثِهِ ذَلِكَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قال ((نَحَرْتُ هَاهُنَا وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ فَانْحَرُوا فِي رِحَالِكُمْ وَوَقَفْتُ هَاهُنَا وَعَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ وَوَقَفْتُ هَاهُنَا وَجَمْعٌ كُلُّهَا مَوْقِفٌ)).
2336. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (மினாவில் மஸ்ஜிதுல் கைஃப் அருகிலுள்ள) இவ்விடத்தில் அறுத்துப் பலியிட்டேன். ஆனால், மினா முழுவதும் பலியிடும் இடமாகும். எனவே, (மினாவில்) நீங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே பலியிட்டுக்கொள்ளுங்கள். நான் (அரஃபா நடுவிலுள்ள ஜபலுர் ரஹ்மத்மலைக்குக் கீழே) தங்கினேன். ஆனால், அரஃபா முழுவதும் தங்குமிடமாகும்.  நான் (முஸ்தலிஃபாவில் மஷ்அருல் ஹராம்குன்றின் அருகில்) தங்கினேன். ஆனால், முஸ்தலிஃபா முழுவதும் தங்குமிடமாகும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 15. ஹஜ்
எந்த உம்மத்திற்கும் வழங்கப்படாத சிறப்பு வசனம் இரங்கிய அரஃபா தினம்
45- صحيح البخاري عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَجُلاً مِنَ الْيَهُودِ قَالَ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لاَتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا. قَالَ أَيُّ آيَةٍ قَالَ: {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا}. قَالَ عُمَرُ قَدْ عَرَفْنَا ذَلِكَ الْيَوْمَ وَالْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَة.
45. யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்என்றார். அதற்கு உமர்(ரலி) அது எந்த வசனம்?“ எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்.  ”இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள் கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்” (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர்(ரலி) அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்என தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
முடிவுரை
************

இவ்வளவு நன்மைகளும் சிறப்புக்களும் உள்ள அவ்விடங்களில் பாவங்கள் செய்தால் மற்ற இடங்களை விட  தண்டனைகளும் அதிகம் என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும்
وَمَنْ يُّرِدْ فِيْهِ بِاِلْحَـادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَ لِيْمٍ  
மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.
(
அல்குர்ஆன் : 22:25)
ஹாஜிகள் பர்ளான தொழுகைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் வீனான தர்க்கம் சண்டை 
சச்ரவுகள் தவிற்கப்பட வேண்டும்.
அண்ணியப் பெண்களின்மீது பார்வை படாமல் பேணுதல் வேண்டும் மற்றும் இறையச்சத்தோடு ஒவ்வொரு அமலையும் நிறைவேற்ற வேண்டும்