புதன், 3 ஆகஸ்ட், 2016

ஹஜ்ஜின் சிறப்புகளும் அதன் சில சட்டங்களும்

ஹஜ்ஜின் சிறப்புகளும் அதன் சில சட்டங்களும்

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ (96) فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ (973:)

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ 2:196

 الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ (1972:)
.@@@@@@@@@
1 . ஹஜ்ஜின் பிரதி பலன்கள் :                      A. பாவம் நீங்கி பரிசுத்தம்.  B. வறுமை ஒழியும்
صحيح البخاري 1773 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الجَنَّةُ»
 ஸஹீஹ் புகாரி 1773. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குசொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.”        என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
صحيح البخاري  1820 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَجَّ هَذَا البَيْتَ، فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ»
 ஸஹீஹ் புகாரி 1820.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல்பாவமான பேச்சு செயல் எதுவும் செய்யாமல் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
# குறிப்பு : பாவமான பேச்சு செயல் எதுவும் செய்யாமல் இது மிகப் பயங்கரமான நிபந்த்தனை . பெரும்பாலும் ஹாஜிகள் தோற்று போகும் இடம் இதுவே இது மட்டுமே. எனவே தங்கும் இடம் / வாகன வசதி பயண காலம் / நேரம் உணவு நேரம் எல்லாத்திலும் கண்டிப்பாக் பிரச்சினை வரும்.. ஏனெனில் கிட்டும் பரிசு சுவர்க்கம் அல்லவா. அதை நோகாமல் பெற முடியுமா . குறை கூறி திட்டுவதருக்கு / பேசுவதற்கு நியாயமான பல காரணங்கள் உண்டு என்றாலும் பொறுமையோடு மௌனம்காக்க வேண்டும்  . நம்மை மீறி பொறுமை இழந்தால் “A.சுவர்க்கம் ., B.அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்  என்ற பரிசும் இழக்க நேரிடும்.
وفي سنن الترمذي 738عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ"تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الْجَنَّةُ " (*1)   وفي المعجم الكبير للطبراني  11265 عَنِ ابْنِ عَبَّاسٍ بالإختصار
ஹஜ் & உம்ரா தொடர்ந்து செய்யுங்கள் . இரும்பின் துருவை ,  தங்கத்தின் அழுக்கை,வெள்ளியின் அழுக்கை நெருப்பு நீக்குவது போல் இவ்விரண்டும்(-ஹஜ்&உம்ரா) வறுமையை நீக்கும்.பாவத்தை விட்டும் பரிசுத்தப் படுத்தும்..                       நூல் : திர்மிதி738 ,தப்ரானி11265 .
# புடம்போட்ட சுத்தமான தங்கமாக மாறுவது எப்போது ? அது பொறுமையோடு சுட்டெறிக்கும் நெருப்புக்குள்ளே சகித்து இருந்தால் தானே . அது போல் தங்குமிடம்/உணவு/வாகனம் / பயணம்/ கால தாமதம் எந்தப் பிரச்சினை வந்தாலும் நான் நெருப்பில் ரோஜாவாக இருக்கிறேன். என்பதை உணர்ந்து பொறுத்து கொள்ள வேண்டும்.
.@@@@@@@@@
2 . ஹஜ்ஜை தாமதமின்றி விரைவாக செய்திட வேண்டும்
السنن الكبرى للنسائي 11832 عَنْ عَمْرو بْنٍِ مَيْمُونٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: " اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتِكَ قَبْلَ مَوْتِكَ "  ورواه الحاكم7957 عن ابن عباس
ஐந்துக்கு முன் ஐந்தை அரிதாய்க் கருது.     1. நீ முதுமையாகும் முன் உன் இளமையையும் .2. உனக்கு நோய் வரும் முன் உன் நலத்தையும்  3. உனக்கு வறுமை வரும் முன் உன் செல்வத்தையும்  4. நீ வேலையில் ஈடுபடும் முன் உன் ஓய்வையும்    5.  உனக்கு மரணம் வரும் முன் உன் வாழ்வையும் அரிதாகக் கருதி(பயன்படுத்தி)க் கொள் என நபி(ஸல்) அவர்கள் ஒருவருக்கு உபதேசித்தார்கள் .  நூல்:ஹாகிம்.hadees 7957,அறிவிப்பாளர் : இப்னுஅப்பாஸ்(ரலி)
 .@@@@@@@@@
 3 . ஹஜ்ஜின் நசீபை இழந்தால் அதன் விளைவு .
سنن الترمذي  740 -  عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا }(*2)
உடலாலும் பொருளாலும் ஹஜ் செல்ல வசதி பெற்று ஹஜ் செய்யாத இவன் யூதனாக / கிறிஸ்தவாக செத்தாலும் பரவாயில்லை . ஏனெனில் வசதியுடையோர் ஹஜ் செலவது கடமை என்று அல்லாஹ் சொல்றானே 2: 97 .
.@@@@@@@@@
4 . வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே கடமை
  صحيح مسلم 412 - (1337) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللهُ عَلَيْكُمُ الْحَجَّ، فَحُجُّوا»، فَقَالَ رَجُلٌ: أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللهِ؟ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلَاثًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَوْ قُلْتُ: نَعَمْ لَوَجَبَتْ، وَلَمَا اسْتَطَعْتُمْ "، ثُمَّ قَالَ: «ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ، وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَدَعُوهُ»
ஸஹீஹ் முஸ்லிம் 2599. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, ”மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே,ஹஜ் செய்யுங்கள்” என்றார்கள். அப்போது ஒரு மனிதர், ”ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்) ,  அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நான் ” ஆம்என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்” என்று கூறிவிட்டு, ”நான் எதை (செய்யுங்கள் என்றோசெய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம்அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால்அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள்!” என்றார்கள்.
.@@@@@@@@@
5 . எந்த அமலும் நபி ஸல் அவர்களின் காண்பித்த முறையில் இருக்க வேண்டும்  
َصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي   நான் கற்று தந்த பிரகாரம் தொழுகுங்கள் . புகாரி 6008 .
 صحيح مسلم - 310 - (1297) عن جَابِر يَقُولُ: " رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمِي عَلَى رَاحِلَتِهِ يَوْمَ النَّحْرِ، وَيَقُولُ: «لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ، فَإِنِّي لَا أَدْرِي لَعَلِّي لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ» (*3)
 ஸஹீஹ் முஸ்லிம் 2497. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவதுநபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாவது நாளில் தமது வாகன(ஒட்டக)த்தில் அமர்ந்தவாறு (ஜம்ரத்துல் அகபாவின் மீது) கல் எறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், ”நீங்கள் உங்களது  ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான்,எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா,) செய்யமாட்டேனா என்பதை அறியமாட்டேன்” என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
தீன் என்பது நம்ம அறிவு ஆராய்ச்சி அல்ல .
سنن النسائي - 3057 وَإِيَّاكُمْ وَالْغُلُوَّ فِي الدِّينِ، فَإِنَّمَا أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمُ الْغُلُوُّ فِي الدِّينِ»   தீனில் வரம்பு மீறாதீர்கள்.நூல்:நஸஈ .ஹதீஸ்3057 .
இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களின் பட்டிமன்றம் :  رئيس المفسرين
 مسند أحمد ط الرسالة - 1877 -  عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ طَافَ مَعَ مُعَاوِيَةَ بِالْبَيْتِ، فَجَعَلَ مُعَاوِيَةُ يَسْتَلِمُ الْأَرْكَانَ كُلَّهَا، فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ: " لِمَ تَسْتَلِمُ هَذَيْنِ الرُّكْنَيْنِ؟ وَلَمْ يَكُنْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُهُمَا "، فَقَالَ مُعَاوِيَةُ: لَيْسَ شَيْءٌ مِنَ الْبَيْتِ مَهْجُورًا،
فَقَالَ ابْنُ عَبَّاسٍ: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ33:21} ، فَقَالَ مُعَاوِيَةُ: صَدَقْتَ (*4)
ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுவதும் (வணக்கம் என்ற விதத்தில்) ருக்ன யமானியை வலது கையால் தொடுவதும்   ஸுன்னத் . காபாவின் மிச்சம் உள்ள இரண்டு மூலை பகுதியை (வணக்கம் என்ற விதத்தில்)  தொடுவது கூடாது. அது இபாதத் இல்லை.என்று இருக்க
முஆவியா  (ரலி)அவர்கள் காபாவின் மிச்சம் உள்ள இரண்டு மூலை பகுதியை தொடுகிறார்கள் .அப்போது  
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் :  முஆவியா(ரலி) அவர்களை  கண்டித்தார்கள்- இவ்விரண்டையும் நபி (ஸல்) அவர்கள் தொடவில்லையே என்பதாக.
முஆவியா  (ரலி)அவர்கள் : காபாவின் எந்த பகுதியுமே சும்மா விட முடியாதே .
இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் :  رئيس المفسرين
{لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ33:21}  நபி (ஸல்) அவர்களின் வாழ்வு மட்டுமே பின் பற்ற அழகிய முன்மாத்ரியாக அமையும் (தவிர  நம் மூலை ஆராய்ச்சிக்கு அல்ல).என்பதாக அல்லாஹ் சொல்கிறானே என விளக்கம் வழங்கினார்கள். அப்போது ஆம். صَدَقْتَ  நீ சொல்வதே சரியானது என முஆவியா  (ரலி)அவர்கள் தன்னை திருத்திக் கொண்டார்கள். (நூல் அஹ்மத்.ஹதீஸ் 1877)
மூன்றாம் கலீபா உமர் ரலி அவர்களின் அறைகூவல் .
 مسند أحمد ط الرسالة - 253 -  عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ: طُفْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَلَمَّا كُنْتُ عِنْدَ الرُّكْنِ الَّذِي يَلِي الْبَابَ مِمَّا يَلِي الْحَجَرَ، أَخَذْتُ بِيَدِهِ لِيَسْتَلِمَ، فَقَالَ: أَمَا طُفْتَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْتُ: بَلَى، قَالَ: فَهَلْ رَأَيْتَهُ يَسْتَلِمُهُ؟ قُلْتُ: لَا، قَالَ: فَانْفُذْ عَنْكَ  فَإِنَّ لَكَ فِي رَسُولِ اللهِ أُسْوَةً حَسَنَةً  .
எஹ்லா ரலி என்ற சஹாபி அவர்கள் சொல்றாங்க .ஹஜ்ருல் அஸ்வதை தொடர்ந்து வரும் மூலையை தொடுவதற்காக நான் உமர் ரலி அவர்களின் கையை பிடித்(து இழுத்)தேன் .அப்போது அவர்கள் வினவினார்கள் நீ நபி ஸல் அவர்களுடன் தவாப் செய்திருக்கிறாய் அல்லவா.ஆம் நபி ஸல் இதை தொட்டார்களா . இல்லை . அப்படியானால் இதை விட்டு தள்ளு. நபி வாழ்வில் முன்மாதிரி உண்டு. அது போல் தான் நாம் செய்யனும். (அதிக பிரசங்கித்தனம் செய்ய கூடாது) என்பதாகக் கடிந்து கொண்டார்கள்.
 [قال الألباني]صحيح : سنن النسائي - 3057 عن الْفَضْلُ ابْن عَبَّاسٍ (إسمه فضل): قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ الْعَقَبَةِ وَهُوَ عَلَى رَاحِلَتِهِ: «هَاتِ، الْقُطْ لِي» فَلَقَطْتُ لَهُ حَصَيَاتٍ هُنَّ حَصَى الْخَذْفِ، فَلَمَّا وَضَعْتُهُنَّ فِي يَدِهِ، قَالَ: «بِأَمْثَالِ هَؤُلَاءِ، وَإِيَّاكُمْ وَالْغُلُوَّ فِي الدِّينِ، فَإِنَّمَا أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمُ الْغُلُوُّ فِي الدِّينِ»
அப்பாஸ்(ரலி)அவர்களின் மகன் பல்லு (ரலி) சொல்றாங்க .துல் ஹஜ் பிறை பத்தாம் நாள் காலை நேரத்தில் அவர்களோ வாகனத்தின் மேல் அமர்ந்த நிலையில் என்னிடம் «هَاتِ، الْقُطْ لِي» சிறு கற்களை எனக்கு எடுத்து தா. என கட்டளை இட்டார்கள்.எடுத்து கொடுத்த் போது அதை உள்ளங்கையில் வைத்த் வண்ணம் (மக்களே) இது போன்ற அளவில் உள்ள சிறு கற்களையே எறிய வேண்டும்.தீனில் வரம்பை மீறுவது கூடாது.ஏனெனில் உங்களக்கு முன் சென்றோர் அழிந்தது வரம்பை மீறியதால் தான்.
.@@@@@@@@@
6 . A . புனித ஹஜ் என்றாலும் கூட மஹ்ரமின்றி பயணம் கூடாது .

 صحيح البخاري  3006 عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ: سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ، وَلاَ تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ»، فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَّةً، قَالَ: «اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ»
ஸஹீஹ் புகாரி 3006 & ஸஹீஹ் முஸ்லிம் 2611.இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ”ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ”இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், ”நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்என்று கூறினார்கள்.
 لا يجوز خروج المرأة بدون رضا الزوج ولو للحج / فلها اجر عظيم اذا صبرت على رضاه
B . தன் தந்தையுடன் அதுவும் ஹஜ் என்றாலும் கணவனின் அனுமதி இன்றி கூடாது . அவ்வாறு ஒரு ஸஹாபி பெண்மணி கணவனின் சொல்லை மனதார ஏற்றதின் பலன் முழு உம்மத்துக்கு கிட்டியுள்ளது
 صحيح البخاري 1782  عن ابْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِامْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، - سَمَّاهَا ابْنُ عَبَّاسٍ فَنَسِيتُ اسْمَهَا -: «مَا مَنَعَكِ أَنْ تَحُجِّينَ مَعَنَا؟»، قَالَتْ: كَانَ لَنَا نَاضِحٌ، فَرَكِبَهُ أَبُو فُلاَنٍ وَابْنُهُ، لِزَوْجِهَا وَابْنِهَا، وَتَرَكَ نَاضِحًا نَنْضَحُ عَلَيْهِ، قَالَ: «فَإِذَا كَانَ رَمَضَانُ اعْتَمِرِي فِيهِ، فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ» أَوْ نَحْوًا مِمَّا قَالَ
 ஸஹீஹ் புகாரி 1782. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்நபி(ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம்... இப்னு அப்பாஸ்(ரலி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நான் அதை மறந்துவிட்டேன்!” என அவரிடமிருந்து அறிவிக்கும் அதா(ரஹ்) கூறினார்.. நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?”எனக் கேட்டார்கள். அதற்கவர், ”எங்களிடம் இருந்ததண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் மகனும் (என்னுடைய கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்இன்னொரு ஒட்டகத்தைவிட்டுச் சென்றுள்ளனர்;அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்!” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில்ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்!” எனக் கூறினார்கள்அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள். 
.@@@@@@@@@
هل يجوز الاحرام اذا كانت حائضة وكيف اذا طرأ الحيض
7 . மாதவிடாய் நிலையிலும் இஹ்ராம் செய்யலாம் .
عن جابر قال ......فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَخَرَجْنَا مَعَهُ حَتَّى أَتَيْنَا ذَا الْحُلَيْفَةِ فَوَلَدَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ أَصْنَعُ فَقَالَ اغْتَسِلِي وَاسْتَذْفِرِي بِثَوْبٍ وَأَحْرِمِي رواه ابوداود 1628
அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் முஹம்மது என்று மகனை பிரசவித்து இருந்தார்கள். இவர்களுக்கு நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் நீ குளித்து விட்டு இஹ்ராம் நிய்யத் செய் என்று சொன்னார்கள். நூல் அபூ தாவூத் ஹதீஸ் 1628
இஹ்ராமுக்கு  பின்பு மாத விடாய் வந்தாலும் இஹ்ராமில் தொடரலாம். ஆனால் தவாப் ஸஹ்யி மட்டும்  கூடாது. இவ்விரண்டையும் சுத்தமமான பின்பு செய்யனும் 
 صحيح البخاري  1785عن  جَابِر بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهَلَّ وَأَصْحَابُهُ بِالحَجِّ، وَلَيْسَ مَعَ أَحَدٍ مِنْهُمْ هَدْيٌ غَيْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَطَلْحَةَ، وَكَانَ عَلِيٌّ قَدِمَ مِنَ اليَمَنِ وَمَعَهُ الهَدْيُ، فَقَالَ: أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لِأَصْحَابِهِ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً، يَطُوفُوا بِالْبَيْتِ، ثُمَّ يُقَصِّرُوا وَيَحِلُّوا إِلَّا مَنْ مَعَهُ الهَدْيُ، فَقَالُوا: نَنْطَلِقُ إِلَى مِنًى وَذَكَرُ أَحَدِنَا يَقْطُرُ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَوْ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ مَعِي الهَدْيَ لَأَحْلَلْتُ»، وَأَنَّ عَائِشَةَ حَاضَتْ، فَنَسَكَتْ المَنَاسِكَ كُلَّهَا غَيْرَ أَنَّهَا لَمْ تَطُفْ بِالْبَيْتِ، قَالَ: فَلَمَّا طَهُرَتْ وَطَافَتْ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَتَنْطَلِقُونَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ وَأَنْطَلِقُ بِالحَجِّ؟ فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ أَنْ يَخْرُجَ مَعَهَا إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرَتْ بَعْدَ الحَجِّ فِي ذِي الحَجَّةِ. وَأَنَّ سُرَاقَةَ بْنَ مَالِكِ بْنِ جُعْشُمٍ لَقِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِالعَقَبَةِ، وَهُوَ يَرْمِيهَا، فَقَالَ: أَلَكُمْ هَذِهِ خَاصَّةً يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لاَ، بَلْ لِلْأَبَدِ»

ஸஹீஹ் புகாரி 1785. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) மற்றும் தல்ஹா(ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானிப் பிராணி இல்லை. யமனிலிருந்து அலீ(ரலி) குர்பானிப் பிராணியுடன் வந்தார்கள். ”நபி(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் அணிந்தேன்!என அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணி கொண்டு வராதவர்களிடம்இதை (ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறும் வலம்வந்துதலைமுடியைக் குறைத்துஇஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். (மக்கள் சிலர்) ”நம் இன உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் (மனைவியுடன் கூடிய பின் உடனடியாக) நாம் மினாவுக்குச் செல்வதா?” என்று பேசிய செய்தி,நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியதும் அவர்கள் ”(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்ய அனுமதியுண்டு என) நான் இப்போது அறிந்ததை முன் கூட்டியே அறிந்திருந்தால் நான் குர்பானிப் பிராணி கொண்டு வந்திருக்க மாட்டேன்நான் குர்பானிப் பிராணி மட்டும் கொண்டு வந்திருக்கவில்லையாயின் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்!” என கூறினார்கள். மேலும்ஆயிஷா(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் வந்திருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை வலம்வருவதைத் தவிர,ஹஜ்ஜின் மற்றெல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை வலம்வந்தார்கள். மேலும் ஆயிஷா(ரலி) ”இறைத்தூதர் அவர்களே! நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்ல. நீங்கள் (எல்லோரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்களா?” என (ஏக்கத்துடன்) கூறியதும்நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரைஆயிஷா(ரலி) அவர்களுடன் (உம்ரா செய்திட இஹ்ராம் அணிவதற்காக) தன்யீம் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். ஆயிஷா(ரலி) ஹஜ் செய்த பின்துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்த சுராக்கா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷும்(ரலி) ”இறைத்தூதர் அவர்களே! இது (ஹஜ் மாதத்தில் உம்ரா செய்வது) உங்களுக்கு மட்டுமுள்ள தனிச் சட்டமா?” எனக் கேட்டதற்குவர்கள், ”இல்லை! இது எப்போதைக்கும் உரியதே!” என்று பதிலளித்தார்கள்.  
صحيح البخاري -1786 عن عَائِشَة رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوَافِينَ لِهِلاَلِ ذِي الحَجَّةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ، وَمَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِحَجَّةٍ فَلْيُهِلَّ، وَلَوْلاَ أَنِّي أَهْدَيْتُ لَأَهْلَلْتُ بِعُمْرَةٍ»، فَمِنْهُمْ مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنْهُمْ مَنْ أَهَلَّ -[5]- بِحَجَّةٍ، وَكُنْتُ مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ، فَحِضْتُ قَبْلَ أَنْ أَدْخُلَ مَكَّةَ، فَأَدْرَكَنِي يَوْمُ عَرَفَةَ وَأَنَا حَائِضٌ، فَشَكَوْتُ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «دَعِي عُمْرَتَكِ، وَانْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَهِلِّي بِالحَجِّ»، فَفَعَلْتُ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ الحَصْبَةِ، أَرْسَلَ مَعِي عَبْدَ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ. فَأَرْدَفَهَا، فَأَهَلَّتْ بِعُمْرَةٍ مَكَانَ عُمْرَتِهَا، فَقَضَى اللَّهُ حَجَّهَا وَعُمْرَتَهَا، وَلَمْ يَكُنْ فِي شَيْءٍ مِنْ ذَلِكَ هَدْيٌ، وَلاَ صَدَقَةٌ، وَلاَ صَوْمٌ  (*5)
 1786. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ”(துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ் பிறையை எதிர் நோக்கியவர்களாகநாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் ”உம்ராவுக்கு (மட்டும்) இஹ்ராம் அணிய விரும்புகிறவர் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணியட்டும்;ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியட்டும்! நான் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திராவிட்டால் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணிந்திருப்பேன்!என்றார்கள். சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தனர்மற்றும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்களுள் ஒருத்தியாக இருந்தேன். மக்காவில் நுழைவதற்கு முன் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாயுள்ள நிலையிலேயே அரஃபா நாளையும் அடைந்தேன். நபி(ஸல்) அவர்களிடம் (இதுபற்றி) நான் முறையிட்டபோது, ”உன்னுடைய உம்ராவைவிட்டுவிட்டுதலையை அவிழ்த்து வாரிக் கொள்! மேலும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்!” என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். முஹஸ்ஸபில் தங்கும் இரவு வந்தபோதுஎன்னுடன் அப்துர் ரஹ்மானை தன்யீம்வரை நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்துர்ரஹ்மான் தம் ஒட்டகத்தின் பின்னால் என்னை ஏற்றினார். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக நான் இஹ்ராம் அணிந்தேன்.
அல்லாஹ் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான்என்று அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இதற்காகஆயிஷா(ரலி) குர்பானியோதர்மமோ,நோன்போ பரிகாரமாகச் செய்யவில்லை!” என்று மற்றோர் அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 26. உம்ரா
 .@@@@@@@@@
8 . நன்மை தீமை அல்லாஹ்வால் மட்டுமே முடியும்
صحيح البخاري 1597 - عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ جَاءَ إِلَى الحَجَرِ الأَسْوَدِ فَقَبَّلَهُ، فَقَالَ: «إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ، لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ، وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ»
ஸஹீஹ் புகாரி 1597. ஆபிஸ் இப்னு ரபீஆ அறிவித்தார்உமர்(ரலி) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ”நீ தீங்கோ,நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்றார்.
.@@@@@@@@@
9 அரபியில் கூடுதல் சில தகவல் தேவை உள்ளோர் பார்க்கலாம் .
النهاية في غريب الحديث والاثر : { هلل } ( ه ) قد تكرر في أحاديث الحج ذِكْرُ [ الإهْلال ] وهو رَفْع الصَّوْت بالتّلْبِيَة .
قال النووي في المجموع : قد ذكرنا أن مذهبنا المشهور أن الاحرام ينعقد بالنية دون التلبية ولا ينعقد بالتلبية بلا نية وقال أبو حنيفة لا ينعقد الاحرام الا بالنية مع التلبية أو مع سوق الهدى إنتهى
- يَنْقَسِمُ الإِْحْرَامُ الى ثلاثة اذا كان فِي أَشْهُرِ الْحَجِّ فِي سَنَةٍ وَاحِدَةٍ  : الافراد والقران والتمتع
(*1) وفي  ذخيرة العقبى في شرح سنن النسائي - (خَبَثَ الْحَدِيدِ) بفتحتين، ويُروى بضمّ، فسكون: هو الوسخ، والرديء الخبيث. وفي حديث ابن مسعود الآتي بعد هذا: "كما ينفي الكير خبث الحديد والذهب والفضّة".
شبّه متابعة الحجّ والعمرة في إزالة الذنوب بإزالة النار خبث الحديد؛ لأن الإنسان مركوز في جِبلّته القوّة الشهويّة، والغضبيّة، محتاج لرياضةٍ تزيلها، والحجُّ جامع لأنواع الرياضات، مَن إنفاق المال، وجهد النفس بالجوع، والظمأ، والسهر، واقتحام المهالك، ومفارقة الوطن، ومهاجرة الإخوان، والخلاّن، وغير ذلك.
(*2) مرعاة المفاتيح شرح المشكاة للمباركفوري - (8 / 801)
قوله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا 
( فلا عليه ) أي : فلا بأس ولا مبالاة ولا تفاوت عليه ( أن يموت ) أي : في أن يموت أو بين أن يموت ( يهوديًا أو نصرانيًا ) في الكفر إن اعتقد عدم الوجوب ، وفي العصيان إن اعتقد الوجوب ، وقيل : هذا من باب التغليظ الشديد والمبالغة في الوعيد لمن اعتقد وجوبه وتساهل في الأداء وهو قادر عليه ، والأظهر أن وجه تخصيص الطائفتين بالذكر كونهما من أهل الكتاب غير عاملين به فشبه بهما من ترك الحج حيث لم يعمل بكتاب الله تعالى ونبذه وراء ظهره قاله القاري . وقال الطيبي : قوله : (( فلا عليه )) إلخ . أي : لا يتفاوت عليه أن يموت يهوديًا أو نصرانيًا ، والمعنى أن وفاته في هذه الحالة ووفاته على اليهودية والنصرانية سواء فيما فعله من كفران نعمة الله تعالى وترك ما أمر به والانهماك في معصيته وهو من باب المبالغة والتشديد والإيذان لعظمة شأن الحج ، ونظيره قوله تعالى : " وَمَن كَفَرَ فَإِنَّ الله غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ " (3 : 97) فإنه وضع فيه (( ومن كفر )) موضع (( ومن لم يحج )) تعظيمًا للحج وتغليظًا على تاركه - انتهى .
 وفي تذكرة الموضوعات للصديقي : قال الترمذي فيه هلال مجهول قلت قال الذهبي قد جاء بإسناد أصلح منه ، وقال القاضي لا التفات إلى حكم ابن الجوزي بالوضع كيف وقد أخرجه الترمذي في جامعه وقد قال أن كل حديث في كتابه معمول به إلا حديثين وليس هذا أحدهما والحديث مؤول ، وقال الزركشي قد أخطأ ابن الجوزي إذ لا يلزم من جهل الراوي وضع الحديث مع أن له طرقا.
(*3) شرح النووي على مسلم : وَأَمَّا قَوْله صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : ( لِتَأْخُذُوا مَنَاسِككُمْ ) فَهَذِهِ اللَّام لَام الْأَمْر ، وَمَعْنَاهُ : خُذُوا مَنَاسِككُمْ


(*4) مسند أحمد ط الرسالة : حسن لغيره، خصيف متابع، وباقي رجاله ثقات.
(*5) [تعليق مصطفى البغا على البخاري] : (ولم يكن في شيء من ذلك) أي في تركها العمرة التي أحرمت بها أولا وإدراجها لها في الحج ولا في عمرتها التي اعتمرتها بدلها بعد الحج. (هدي ولا صدقة ولا صوم) أي لم يأمرها صلى الله عليه وسلم بفعل شيء من ذلك]

وفي شرح النووي على مسلم : قَوْله صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : ( وَأَمْسِكِي عَنْ الْعُمْرَة ) فِيهِ دَلَالَة ظَاهِرَة عَلَى أَنَّهَا لَمْ تَخْرُج مِنْهَا ، وَإِنَّمَا أَمْسَكَتْ عَنْ أَعْمَالهَا وَأَحْرَمَتْ بِالْحَجِّ ، فَأَدْرَجَتْ أَعْمَالهَا بِالْحَجِّ ، كَمَا سَبَقَ بَيَانه ، وَهُوَ مُؤَيِّد لِلتَّأْوِيلِ الَّذِي قَدَّمْنَاهُ فِي قَوْله صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : ( اُرْفُضِي عُمْرَتك وَدَعِي عُمْرَتك ) أَنَّ الْمُرَاد رَفْض إِتْمَام أَعْمَالهَا ، لَا إِبْطَال أَصْل الْعُمْرَة .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.