வியாழன், 27 செப்டம்பர், 2018

யுக்தியோடு செயல்படுவோம்


بسم الله الرحمن الرحيم
யுக்தியோடு செயல்படுவோம்
***********************************************
الحمد لله رب العالمين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمداً عبد الله ورسوله. صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين.
أما بعد، قال الله تعالي : يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ (آل عمران : 269(


முன்னுரை: அல்லாஹ் இவ்வுலகில் நமக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கி இருந்தாலும் அவற்றுல் மிக்க மேலான அருட்கொடை இஸ்லாமாகும். ஏனெனில் இஸ்லாம் மட்டும்தான்

·         அல்லாஹ்வால் வழங்கப்பட்ட

·         உலகின் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதல் பின்பற்றப்படுகின்ற

·         நியாயமான மனித அறிவால் அங்கீகரிக்கப்படுகின்ற

·         மறுமையை இலக்காக கொண்ட

·         மனித மனோ இச்சைகளுக்கு எதிராக உள்ள

·         ஒழுக்கத்தையும், நற்குணங்களையும் போதிக்கின்ற மார்க்கமாகும்.

இம்மார்க்கம், மனிதனால் அவனின் மனோ இச்சைகளுக்கேற்ப கட்டமைக்கப்பட்ட மார்க்கத்திற்கு எதிராக இருப்பதால் இம்மார்க்கத்தை அறியாது, இம்மையையே இலக்காக கொண்டு வாழ்வோருக்கு இது மிகப்பெரும் பாரமாக உள்ளது. ஆகவே அவர்கள் இம்மார்க்கத்தையும், அதன் சட்டதிட்டங்களையும் ஒவ்வொரு காலத்திலும் எதிர்த்தும், அதனை பின்பற்றக்கூடிய மக்களை துன்புறுத்தியும் வந்துள்ளனர்.

அதே சமயம் இச்சன்மார்க்கத்தை மக்களுக்கு மத்தியில் எடுத்துறைத்த இறைத்தூதர்களும், அவர்களை ஏற்றோர்களும் ஒவ்வொரு கால கட்டத்திலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள அறிவு, உடல் மற்றும் பொருளால் அசத்தியத்தையும், அசத்தியவாதிகளையும் எதிர்த்து ஹிக்மத் எனும் யுக்தியோடு அறப்போராட்டங்களை நடாத்தி, வெற்றி வாகையும் சூடியுள்ளனர். அந்த வகையில் நாம் வாழுகின்ற இக்காலத்திலும் முஸ்லிம்கள் முற்காலத்திற்கு எவ்விதத்திலும் சலைத்திடாத வகையில் உலக மற்றும் தேசிய அளவில் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
ஏனெனில் இறை நியதியின்படி ஒவ்வொரு காலமும் அதற்கு முந்திய காலத்தை விட மிக மோசமானதாகத்தான் இருக்கும்.

عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، قَالَ: أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ، فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنَ الحَجَّاجِ، فَقَالَ: «اصْبِرُوا، فَإِنَّهُ لاَ يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ» سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ . خ : 7068

ஜூபைர் பின் அதிய்யி (ரஹ்) அவர்கள் அறித்தார்கள். நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம் வந்து ஹஜ்ஜாஜின் மூலம் நாங்கள் சந்தித்து வருபவற்றைப் பற்றி முறையிட்டோம். அதற்கவர்கள் 'நீங்கள் பொறுமையாக இருங்கள். ஏனெனில் நிச்சயமாக நீங்கள் உங்களை இறைவனை சந்திக்கும் வரை உங்களிடம் வரும் எக்காலமும் அதற்கு முந்திய (காலத்)தை விட மோசமாகவே இருக்கும். இதை நான் உங்களின் நபியிடமிருந்து கேட்டேன் என்று கூறினார்கள். (புஹாரி:7068)

இந்திய முஸ்லிம்கள் சந்திந்து வரும் சோதனைகள் :

1.            இஸ்லாத்திற்கு எதிரான தாக்குதல்கள்  உம்: முத்தலாக் சட்டம்

2.            முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உம்: அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம்களை குறிவைத்து எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு

3.            முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து, அவர்கள் பெருவாரியாக வாழக்கூடிய ஊர்களில் கஞ்சா முதலிய போதை பொருட்களை அவர்களின் கைகளில் இலகுவாக கிடைக்க வைத்து, அவர்களை சீரழிப்பது.

4.            முஸ்லிம் இளைஞர்களை விசாரனையின் பெயரில் கைது செய்து வருடக்கணக்கில் சிறையில் அடைப்பது.

5.            கல்வித்துறையில்  காவியை புகுத்துவது

6.            முஸ்லிம் இளம் பெண்களை குறிவைத்து, காவிக்கும்பல்களை அவர்களுடன் காதலின் பெயரால் பழக வைத்து சீரழிப்பது.
இதில் இந்துவாக இருந்த பெண், இஸ்லாத்தை ஏற்ற ஒரு முஸ்லிமை திருமணம் செய்தால் அதற்கு பெயர் லவ் ஜிஹாத் என்றும், (உம்: ஹாதியாவின் விஷயத்தில் காவிகளின் கொந்தளித்து சுப்ரீம் கோர்டு வரை கொண்டு சென்று பிறகு அதில் ஹாதியாவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது) முஸ்லிம் பெண்ணை ஒரு ஹிந்து திருமணம் செய்தால் அதனை முறையான திருமணமாக சித்தரிப்பதும் காவிகளின் வழமையாகி வருகின்றது)

7.            முஸ்லிம்களின் பொருளாதாரங்களை சீர்குலைப்பது.  உதாரணமாக! தோல் வியாபாரம். இதை முஸ்லிம்கள் அதிகம் செய்வதால் இத்தொழிலை நசிந்தொழியச் செய்ய முயற்சித்துள்ளார்கள்.

8.            முஸ்லிம் தலைவர்களின் மீது வழக்கு போடுவது, மேலும் அவர்களை கைது செய்து சமூகத்தை பழவீனப்படுத்த முயற்சிப்பது


@@@@@@@


தீர்வுகள்:

முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான சூழலில் வாழும் போது எவ்விதத்திலும் உணற்சிவயப்படாமல் மதிநுட்பத்துடனும், யுக்தியுடனும் செயல்பட்டு எதிரிகளை வீழ்த்த வேண்டும்.

ஹிக்மத்துடன் செயல்படுவது அல்லாஹ்வின் பண்பாகும்.

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا أَنَّمَا نُمْلِي لَهُمْ خَيْرٌ لِأَنْفُسِهِمْ إِنَّمَا نُمْلِي لَهُمْ لِيَزْدَادُوا إِثْمًا وَلَهُمْ عَذَابٌ مُهِينٌ (آل عمران :178(

அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ  * فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (الأنعام: 44 – 45(

அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.

எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; ''எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.''

(ஒருவன் குற்றவாளியாக இருக்கு அவனுக்கு அல்லாஹ் அள்ளிக் கொடுப்பது அவன் மீதுள்ள பரிவால் அல்ல அவனை தண்டிப்பதற்காகத்தான் )

இப்றாஹீம் (அலை) அவர்கள் கையாண்ட யுக்தி

ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين  (آل عمران 258(

அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்; ''எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)'' என்று. அதற்கவன், ''நானும் உயிர் கொடுக்கிறேன்;, மரணம் அடையும் படியும் செய்கிறேன்'' என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; ''திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்;, நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!'' என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்;. தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.

இப்றாஹீம் (அலை) அவர்கள் தீய மன்னனை தன் அறிவாற்றலால் வாயடைக்க வைத்தார்கள்.

மூஸா (அலை) அவர்களின் யுக்தி

قال فمن ربكما ياموسى * قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى * قال فما بال القرون الأولى * قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى * الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى ( طه : 49 – 53(

(இதற்கு ஃபிர்அவ்ன்) ''மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?'' என்று கேட்டான். ''ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்'' என்று கூறினார். ''அப்படியென்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன?'' என்று கேட்டான்.''இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிபுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை'' என்று (மூஸா பதில்) சொன்னார்.''(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்'' (என்று இறைவன் கூறுகிறான்).

விளக்கம் : அல்லாஹ்வை ஏற்காத தங்களின் முன்னோர்கள் நரகிற்கு செல்வார்கள் என்று மூஸா (அலை) அவர்கள்  பதில் கூறினால் அந்த பதிலைக் கொண்டே இவர் நம்முன்னோர்களை நரகவாசிகள் என்கிறார் என்று கூறி மூஸா அவர்களுக்கு எதிரான மக்களை திசைதிருப்ப ஃபிர்அவ்ன் திட்டமிட்டிருக்க மூஸா (அவர்கள்) யுக்தியோடு மேற்கணட பதிலை கூறி அவனின் சதியை முறியடித்தார்கள்.

ஹிஜ்ரத்தில் நபி (ஸல்) அவர்கள் கையான யுக்திகள்

1.            தன் படுக்கையில் (அலி) அவர்களை படுக்க வைத்தார்கள்.

2.            மதீனாவிற்கு செல்லக்கூடிய வழமையான பாதையை மாற்றினார்கள்.

3. ஹுதைபிய்யா உடன்படிக்கையில் முஹம்மது (ஸல்) அவர்களின் யுக்தி

عَنِ الْبَرَاءِ، قَالَ: لَمَّا أُحْصِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ الْبَيْتِ، صَالَحَهُ أَهْلُ مَكَّةَ عَلَى أَنْ يَدْخُلَهَا فَيُقِيمَ بِهَا ثَلَاثًا، وَلَا يَدْخُلَهَا إِلَّا بِجُلُبَّانِ السِّلَاحِ، السَّيْفِ وَقِرَابِهِ، وَلَا يَخْرُجَ بِأَحَدٍ مَعَهُ مِنْ أَهْلِهَا، وَلَا يَمْنَعَ أَحَدًا يَمْكُثُ بِهَا مِمَّنْ كَانَ مَعَهُ، قَالَ لِعَلِيٍّ: «اكْتُبِ الشَّرْطَ بَيْنَنَا، بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللهِ»، فَقَالَ لَهُ الْمُشْرِكُونَ: لَوْ نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللهِ تَابَعْنَاكَ، وَلَكِنِ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ، فَأَمَرَ عَلِيًّا أَنْ يَمْحَاهَا، فَقَالَ عَلِيٌّ: لَا وَاللهِ، لَا أَمْحَاهَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرِنِي مَكَانَهَا»، فَأَرَاهُ مَكَانَهَا فَمَحَاهَا، وَكَتَبَ ابْنُ عَبْدِ اللهِ، فَأَقَامَ بِهَا ثَلَاثَةَ أَيَّامٍ، فَلَمَّا أَنْ كَانَ يَوْمُ الثَّالِثِ قَالُوا لِعَلِيٍّ: هَذَا آخِرُ يَوْمٍ مِنْ شَرْطِ صَاحِبِكَ، فَأْمُرْهُ فَلْيَخْرُجْ فَأَخْبَرَهُ بِذَلِكَ، فَقَالَ: «نَعَمْ»، فَخَرَجَ، م : 1783

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டபோது 'முஸ்லிம்கள் (அடுத்த ஆண்டு) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் தங்கலாம்; நகருக்குள் உறையிலிட்ட வாளுடன்தான் நுழைய வேண்டும்; மக்காவிலிருந்து திரும்பிச் செல்லும்போது மக்காவாசிகளில் யாரையும் தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. அவர்களுடன் வந்திருப்பவர்களில் மக்காவிலேயே தங்கிக்கொள்ள விரும்பும் யாரையும் தடுக்கக்கூடாது' ஆகிய நிபந்தனைகளின் பேரில் மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர்.நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் 'நமக்கிடையிலான சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின்வருமாறு எழுதுவீராக:'அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் எழுதிக்கொண்ட ஒப்பந்த பத்திரம்...' என்று கூறினார்கள். உடனே இணைவைப்பாளர்கள் 'நீர் அல்லாஹ்வின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருப்போமாயின் நாங்கள் உம்மைப் பின்தொடர்ந்திருப்போமே! மாறாக 'அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மத்' என்று எழுதுங்கள்' என்று கூறினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் அ(ந்த வாசகத்)தை அழித்துவிடுமாறு கூறினார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள் 'இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நான் அழிக்கமாட்டேன்'என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அந்த இடத்தை எனக்குக் காட்டுவீராக!' என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அந்த (வாசகம் இருந்த) இடத்தைக் காட்டினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (தமது கரத்தால்) அழிந்துவிட்டார்கள். மேலும் 'அப்துல்லாஹ்வின் புதல்வர்' என்று எழுதச் செய்தார்கள். (அடுத்த ஆண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். மூன்றாவது நாளானபோது மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் 'உம்முடைய தோழர் நிபந்தனையில் குறிப்பிட்டிருந்த இறுதிநாள் இதுதான். எனவே அவரை இந்நகரைவிட்டு வெளியேறச் சொல்லுங்கள்' என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள் இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது 'ஆம்' என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.



عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: قَامَ سَهْلُ بْنُ حُنَيْفٍ يَوْمَ صِفِّينَ، فَقَالَ: أَيُّهَا النَّاسُ، اتَّهِمُوا أَنْفُسَكُمْ، لَقَدْ كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْحُدَيْبِيَةِ وَلَوْ نَرَى قِتَالًا لَقَاتَلْنَا، وَذَلِكَ فِي الصُّلْحِ الَّذِي كَانَ بَيْنَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الْمُشْرِكِينَ، فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَأَتَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَلَسْنَا عَلَى حَقٍّ وَهُمْ عَلَى بَاطِلٍ؟ قَالَ: «بَلَى»، قَالَ: أَلَيْسَ قَتْلَانَا فِي الْجَنَّةِ وَقَتْلَاهُمْ فِي النَّارِ؟ قَالَ: «بَلَى»، قَالَ: فَفِيمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا، وَنَرْجِعُ، وَلَمَّا يَحْكُمِ اللهُ بَيْنَنَا وَبَيْنَهُمْ، فَقَالَ: «يَا ابْنَ الْخَطَّابِ، إِنِّي رَسُولُ اللهِ وَلَنْ يُضَيِّعَنِي اللهُ أَبَدًا»، قَالَ: فَانْطَلَقَ عُمَرُ فَلَمْ يَصْبِرْ مُتَغَيِّظًا، فَأَتَى أَبَا بَكْرٍ، فَقَالَ: يَا أَبَا بَكْرٍ أَلَسْنَا عَلَى حَقٍّ وَهُمْ عَلَى بَاطِلٍ؟ قَالَ: بَلَى، قَالَ: أَلَيْسَ قَتْلَانَا فِي الْجَنَّةِ وَقَتْلَاهُمْ فِي النَّارِ؟ قَالَ: بَلَى، قَالَ: فَعَلَامَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا، وَنَرْجِعُ وَلَمَّا يَحْكُمِ اللهُ بَيْنَنَا وَبَيْنَهُمْ؟ فَقَالَ: يَا ابْنَ الْخَطَّابِ، إِنَّهُ رَسُولُ اللهِ وَلَنْ يُضَيِّعَهُ اللهُ أَبَدًا، قَالَ: فَنَزَلَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْفَتْحِ، فَأَرْسَلَ إِلَى عُمَرَ، فَأَقْرَأَهُ إِيَّاهُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَوْ فَتْحٌ هُو؟ قَالَ: «نَعَمْ»، فَطَابَتْ نَفْسُهُ وَرَجَعَ . م : 1785

அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

'ஸிஃப்பீன்' போர் நாளில் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் (மக்களிடையே) எழுந்து நின்று பின்வருமாறு கூறினார்கள்:

மக்களே! (இந்தப் போரில் ஈடுபாடு காட்டாததைக் குறித்து யாரையும் நீங்கள் குற்றம் சாட்டாதீர்கள்; மாறாக) உங்களை நீங்களே குற்றம் சாட்டிக்கொள்ளுங்கள். நாங்கள் ஹுதைபியா நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம்.

போர் புரிவது சரியானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். ஆனால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்பாட்டில் முடிந்தது.

(ஹுதைபியாவில் இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களுக்குப் பாதகமான நிபந்தனைகளை விதித்தபோதும் நபியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.) அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் (எதிரிகள்) அசத்தியத்திலும் இல்லையா?' என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கிறோம்; அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள்)' என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் 'போரில் கொல்லப்படும் நம் வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஆம்' என்று விடையளித்தார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் 'அப்படியிருக்க நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்ப வேண்டும்?' என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்' என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கோபத்தை அடக்க முடியாமல் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று 'அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?' என்று கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் 'ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கிறோம். அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள்)' என்று விடையளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் 'போரில் கொல்லப்படும் நம் வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?' என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் 'ஆம்' என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் 'அப்படியிருக்க நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்ப வேண்டும்?' என்று கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் 'கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்' என்று கூறினார்கள்.

அப்போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ('உமக்கு நாம் தெளிவான வெற்றியை அளித்துவிட்டோம்' என்று தொடங்கும்) 'அல்ஃபத்ஹ்' எனும் (48ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். உமர் (ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியா?' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஆம் (வெற்றிதான்)' என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் மனச்சாந்தியடைந்து திரும்பிச் சென்றார்கள்.

நயவஞசகர்களை கையாண்ட விதம்:
****************
நயவஞ்சகர்கள் முஷ்ரிக்குகளை விட கொடியவர்கள். எனினும் முஷ்ரிகுகளை எதிர்த்து போர் தொடுத்த நபி (ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களை எதிர்த்து போர் தொடுக்க வில்லை. ஏனெனில் முஷ்ரிகுகள் நயவஞ்சகர்களை முஸ்லிம்களாகவே  பார்த்தார்கள். ஆதலால் நபியவர்கள் தன்னுடன் இருப்பவர்களை கொலை செய்து விடுகின்றார் என்ற தவறான பார்வை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களை தன்னுடனே வைத்துக் கொண்டே நபியவர்கள் வீழ்த்தினார்கள்.



عن جَابِر بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَكَسَعَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ، رَجُلًا مِنَ الْأَنْصَارِ، فَقَالَ الْأَنْصَارِيُّ: يَا لَلْأَنْصَارِ، وَقَالَ الْمُهَاجِرِيُّ: يَا لَلْمُهَاجِرِينَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ دَعْوَى الْجَاهِلِيَّةِ؟» قَالُوا: يَا رَسُولَ اللهِ كَسَعَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ، رَجُلًا مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: «دَعُوهَا، فَإِنَّهَا مُنْتِنَةٌ» فَسَمِعَهَا عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ فَقَالَ: قَدْ فَعَلُوهَا، وَاللهِ لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ. قَالَ عُمَرُ: دَعْنِي أَضْرِبُ عُنُقَ هَذَا الْمُنَافِقِ، فَقَالَ: «دَعْهُ، لَا يَتَحَدَّثُ النَّاسُ أَنَّ مُحَمَّدًا يَقْتُلُ أَصْحَابَهُ»  م : 2584

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:நாங்கள் ('பனூ முஸ்தலிக்' எனும்) ஓர் அறப்போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரை (விளையாட்டாக)ப் புட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி 'அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)' என்று அழைத்தார். அந்த முஹாஜிர்  'முஹாஜிர்களே! (உதவிக்கு வாருங்கள்)' என்று அழைத்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) 'இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (இனமாச்சரியங்களைத் தூண்டுகின்ற) இக்கூப்பாடுகள் நாற்றம் வீசக்கூடியவை' என்று கூறினார்கள்.

அப்போது (மதீனாவாசியான நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இதைக் கேட்டுவிட்டு 'அப்படியா அவர்கள் (முஹாஜிர்கள்) செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச்சென்றால் (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை நிச்சயமாக அங்கிருந்து வெளியேற்றி விடுவர்' என்று (அன்சாரிகளுக்காகப்) பேசினார்.

(இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் தோழர்களுக்கும் எட்டியபோது) உமர் (ரலி) அவர்கள் எழுந்து 'என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்' என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அவரை விட்டுவிடுங்கள். முஹம்மத் தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது' என்று சொன்னார்கள்.


முஸ்லிம்களுக்கிடையே கிளம்பும் எதிர்ப்புகளை சமாளிக்க உமர் (ரழி) அவர்கள் கைகொண்ட யுக்தி
**************
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ، فَقَالَ بَعْضُهُمْ: لِمَ تُدْخِلُ هَذَا الفَتَى مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ؟ فَقَالَ: «إِنَّهُ مِمَّنْ قَدْ عَلِمْتُمْ» قَالَ: فَدَعَاهُمْ ذَاتَ يَوْمٍ وَدَعَانِي مَعَهُمْ قَالَ: وَمَا رُئِيتُهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلَّا لِيُرِيَهُمْ مِنِّي، فَقَالَ: مَا تَقُولُونَ فِي إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ، وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا حَتَّى خَتَمَ السُّورَةَ، فَقَالَ بَعْضُهُمْ: أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا، وَقَالَ بَعْضُهُمْ: لاَ نَدْرِي، أَوْ لَمْ يَقُلْ بَعْضُهُمْ شَيْئًا، فَقَالَ لِي: يَا ابْنَ عَبَّاسٍ، أَكَذَاكَ تَقُولُ؟ قُلْتُ: لاَ، قَالَ: فَمَا تَقُولُ؟ قُلْتُ: هُوَ أَجَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَهُ اللَّهُ لَهُ: إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ فَتْحُ مَكَّةَ، فَذَاكَ عَلاَمَةُ أَجَلِكَ: فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا. قَالَ عُمَرُ: «مَا أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَعْلَمُ»  خ : 4294


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்த புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே அவர்களில் சிலர் 'எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக அமரச் செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி) 'அவர் நீங்கள் அறிந்து வைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்' என்று பதிலளித்தார்கள். பிறகு ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள்; அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர்(ரலி) 'இதா ஜாஅ நஸ்ருல்லாஹி.. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும்போது உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும் அவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்)' என்னும் (திருக்குர்ஆனின் 110-வது 'அந்நஸ்ர்') அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக்காட்டி 'இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்களில் சிலர் 'நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்' என்று (விளக்கம்) கூறினர். சிலர் 'எங்களுக்குத் தெரியாது' என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர்(ரலி) என்னிடம் 'இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். அவர்கள் 'அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான் 'அது அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவிப்பதாகும். எனவே 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள 'வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான் (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். எனவே நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்' என்று சொன்னேன். உமர்(ரலி) 'நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகிறீர்களோ அதையே நானும் அறிகிறேன்' என்று கூறினார்கள்.


நாம் என்ன செய்ய வேண்டும்?
****************

1.            நாம் எப்போதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழக்கக்கூடாது. அல்லாஹ் கூறுகின்றான்.

وَلا تَهِنُوا وَلا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (آل عمران :139(

3:139. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.


2.            நம்முடைய பொது எதிரியை எதிர்கொள்ள நம்மிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளை கைவிட்டு விட்டு, அரசியல் முதலிய பொது விஷயங்களில் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் திரளவேண்டும். அதன் பலன்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசியல் ரீதியாக பலம் பெற்றால் மட்டுமே நாம் நிம்மதியாக மார்க்கத்தைப் பின்பற்றி வாழமுடியும்.


3.            நம்மிடையேயுள்ள அறிவு ஜீவிகள் சமுதாயத்திற்கு தலைமையேற்று, சமூகத்தை வலுவாக கட்டமைக்க வேண்டும்.


4.            பதவிகளின் மீது வெறி கொள்ளக்கூடாது. தகுதியானவர்கள் பதவிகளை வகிக்க மற்றவர்கள் ஒத்துழைக்க வேண்டும். அன்சாரிகள் தங்கள் பதவிகளை விட்டுக் கொடுத்தது போல்.

5.            முஸ்லிம்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் இஸ்லாமிய மற்றும் உலக அறிவை வழங்க வேண்டும்.

6.            நம்முடைய இளைஞர் மற்றும் இளைஞிகளை
************************
1.       வலுவான இறைநம்பிக்கைக் கொண்டவர்களாக உருவாக்க வேண்டும்.

2.       அவர்களின் உள்ளத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.

3.       யுக்தியோடு செயல்பட கற்றுக் கொடுப்பதோடு, உணற்சிவயப்படாமல் இருக்க பயிற்றுவிக்க வேண்டும்.

4.       இஸ்லாமிய கல்வியை நிறைவாக அவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் மத்ரஸாக்களை நவீனப்படுத்த வேண்டும். முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடங்களில் முழுமையான இஸ்லாமிய கல்வியை வழங்க வேண்டும்.

5.       அவர்களுக்கு தற்காப்பு கலையை அவசியம் கற்றுக் கொடுப்பதோடு, அவர்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

6.       போதை போன்ற பழக்கத்திற்கு அடிமையாகாத வகையில் அவர்களின் பெற்றோர்களும், சமுதாயமும் அவர்களை கண்கானிக்க வேண்டும்.

7.       ஸ்மார்ட் மொபைல் போன்ற நவீனங்களை கொடுக்க கூடாது. கொடுத்தால் முறையாக கையாள கற்றுக் கொடுக்க வேண்டும். கண்டிப்புடன் கண்காணிக்க வேண்டும் .
******************
7.            சமூகத்திற்கென தரமான மீடியாக்களை உருவாக்க வேண்டும்.

கல்வி எப்படி காவிமயமானது?;
*********************************
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது இங்கிருந்த கல்விமுறை மதரஸா கல்வி முறையேயாகும். இதுவே அன்றைய காலத்தில் உச்சநிலையில் இருந்தது. இஸ்லாமியர்களின் ஆட்சி இருந்ததினால் அதனை காலத்திற்கு ஏற்ப அன்றைய இஸ்லாமியர்கள் மாற்ற மறந்துவிட்டனர். இதுவும் முஸ்லிம்களின் பின்னடைவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்று. ஆங்கிலேயர்கள் காலனி ஆதிக்கத்தை வலுவூட்ட வணிகநிறுவனங்களை மேம்படுத்தியது மட்டுமின்றி அவர்களுக்கு சாதகமான கல்வி நிறுவனங்களையும் உருவாக்கினார்கள்.
மேலும்  அந்த பள்ளிக்கூடங்களில் கல்விபயின்றவர்களே ஆங்கிலேயர்களின் ராணுவ தளபதிகளாக பணியாற்றினார்கள். இந்தியர்களை கொண்டே இந்தியநாட்டை கைப்பற்றி அடிமைப்படுத்துவது என்பது கல்வித்துறையால் மட்டுமே சாத்தியம் என்பது ஆங்கிலேயர்கள் கையாண்ட ராஜதந்திரம். இதனாலேயே 257 வருடத்திற்குள்  சரியாக 1857ஆம் ஆண்டு இந்திய துணைக்கண்டமே அவர்களுடைய ஆட்சியின்கீழ் வந்ததன் சூட்சமமாகும்.
இதற்குள் அவர்கள் ஆயிரக்கணக்கில் கல்வி நிறுவனங்களை உருவாக்கியிருந்தார்கள். இதனை கண்ணும் கருத்துமாக கவனித்த இந்து சாமியார்கள் 800 வருடங்கள் இந்தியா இஸ்லாமியர்கள் கைகளில் 257 வருடங்கள் ஆங்கிலேயர்கள் மூலமாக கிருத்துவர்கள் கைகளில். இனி நமது கரங்களில் என சூழுரைத்து கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்கள். 1885-ஆம் ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் தலைமையில் ஆரிய சமாஐம் என்றோர் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. இதில் பயின்றவர்களில் ஒருவரே சுவாமி விவேகானந்தர். இவரை தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவலாக கல்வி நிறுவனங்களை தொடங்கினார்கள். பின்னர் 1925-இல் இந்துமாகாசபா உருவாக்கியதற்கு இதன் வேகம் இன்னும் துரிதப்படுத்தப்பட்டது. இப்போது ஆயிரக்கணக்கில் இவர்களது கல்வி நிறுவனங்கள் செயல்பட்டுவருகிறது அதில் கோடிக்கணக்கில் மாணாக்கர்களுக்கு அவர்களின் இந்துத்துவா முறைப்படி கல்வி வழங்கி வருகிறார்கள்.  தயானந்தா வேதிக் ஆங்கிலப்பள்ளி என்ற பெயரில் இவர்களின் கல்வி நிறுவனம் 75 வருடங்களில் புனிதத்தன்மை கெட்டு காவிமயமாக இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவியுள்ளது. இதனாலேயே இந்தியர்களின் ஆட்சித்துறை / அரசியல்துறை / கொள்கை முடிவெடுக்கும் துறை / நீதித்துறை / இராணுவத்துறை /  காவல்துறை / உளவுத்துறை என அனைத்து துறைகளில் காவித்துறை ஊடுருவிச் சென்றுள்ளது.
இப்போது 65விழுக்காடு கல்வி நிறுவனங்கள் கிருத்துவர்கள் நடத்திவருகிறார்கள் 33 விழுக்காடு கல்வி நிறுவனங்கள் இந்து சாமியார்கள் நடத்தி வருகிறார்கள்.
மீதமுள்ள 3 விழுக்காடு சீக்கியர்களும் ஜைனர்களும் கல்வி நிறுவனர்கள் நடத்தி வருகிறார்கள். இஸ்லாமியர்கள் இப்போது தான் கல்வி நிறுவனங்கள் நடத்துவது பற்றி ஆலோசனை செய்துவருகிறார்கள்.