بسم الله الرحمن الرحيم
கர்பலா ஓர் கண்ணோட்டம்
*************************************
இஸ்லாமிய வருடத்தில் ஆரம்ப மாதமும் இறுதி
மாதமும் ஒரு தியாக நிகழ்ச்சியை கொண்டது.
இஸ்லாத்தில் ஆரம்ப மாதமான முஹர்ரம் 10 ல் சோக சரித்திரத்தையும் இறுதி மாதமான துல்ஹஜ் 10 ல் தன் மகனையே
அறுத்து பழியிட துணியும் தியாக சம்பவமும் நடைபெற்று ஒவ்வொரு முஸ்லிமும்
தியாகத்தோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
நபியவர்கள் ஸஹாபாக்களை அதிகம்
நேசித்துள்ளார்கள் ஸஹாபாக்களும் நபியவர்களை அதிகம் நேசித்துள்ளார்கள் இதனால்தான்
நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்
2652- عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ
اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
((خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ
يَلُونَهُمْ، ( صحيح البخاري)
எனவே நபியவர்களின் கூற்றுப்படி காலத்தில்
சிறந்தவர்கள் முதலில் சஹாபாக்கள் அடுத்து தாபிஈன்கள் அடுத்து تبع تابعين கள் அடுத்து இமாம்கள் இவ்வாறாக
வந்து கொண்டிருக்கிறது.
இந்த அடிப்படையில் حسن رضي حسين رضي மீதும் நபியவர்கள் நேசமும் பாசமும் வற்றா பிரியமும் கொண்டிருந்தார்கள்
இவர்களும் தங்களின் பாட்டனார் மீது மிகுந்த அன்பு செலுத்தினார்கள்.
*கர்பலாவின் முன்
அறிவிப்பு*
**************************************
ஒரு நாள் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள்
தங்களின் இரு பேரன்களையும் முத்தமிட்டார்கள் அதில் வேற்றுமையை கண்ட فاطمة رضي அவர்கள் என் அருமை தந்தை அவர்களே! தாங்கள் இரு குழந்தைகளுக்கும் முத்தம்
கொடுக்கும்போது வேற்றுமையை கண்டேன் அதன் காரணமென்னவோ எனக் கேட்டார்கள் அதற்கு
நபியவர்கள் ஒருவர் விஷம் கொடுத்தும் மற்றொருவர் கொலை
செய்யப்பட்டும் மரணமடைவார் எனவே حسن
ஐ நெற்றியிலும் حسين
ஐ கழுத்திலும் முத்தமிட்டேன் என தன் வேற்றுமையின் விளக்கத்தை கூறி அன்றே கர்பலாவை
முன் அறிவிப்பு செய்து விட்டனர்.
அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் அவர்களின்
மனைவியும் கதீஜா ரலி அவர்களுக்குப்பின் இஸ்லாத்தை தழுவியவர்களில் முதல் பெண்ணுமான ام
المؤمنين ميمونة رضي
அவர்களின் சகோதரியுமான லுபாபா என்ற பெயரை கொண்ட ام الفضل بنت الحارث رضيஅவர்கள் அறிவித்ததாக رواية செய்யப்பட்டுள்ள ஒரு சம்பவம்...
عن ام الفضل بنت الحارث انها دخلت علي رسول الله
صلي الله عليه وسلم فقالت يا رسول الله اني رأيت حلما منكرا الليلة قال وما هو
قالت انه شديد قال وما هو قالت رأيت كان قطعة من جسدك قطعت ووضعت في حجري الخ
உம்முல் பழ்ல் பின்துல் ஹாரிஸ் ( ரலி) அவர்கள்
ஒரு நாள் நபியவர்களிடம் வந்து யா ரசூலல்லாஹ் இன்று இரவு நான் ஒரு கனவு கண்டேன் என கூறினார் உடன் நபியவர்கள் அது என்ன கனவு என்றார்கள் அது மிக பயங்கரமான கனவு
என்று அந்த அம்மையார் கூற மீண்டும் நபியவர்கள் அது என்ன கனவு என்று கேட்டவுடன்
அந்த அம்மையார் அதை கூறலானார்கள் உங்களின் பொண்ணான மேனியிலிருந்து ஒரு சதை துண்டு
துண்டிக்கப்பட்டு எனது மடியிலே வைக்கப்படுகிறது என்றார். இதைக்கேட்ட நபியவர்கள்
நல்லதையே நீர் கண்டுள்ளீர் இன்ஷா அல்லாஹ் எனது அருமை மகள் ஃபாத்திமா ஒரு மகனை பெற்றெடுப்பாள் அவன் உனது மடியிலேயே வளர்ந்து வருவார் என்று
நபியவர்கள் கூறினார்கள்.
நபியவர்கள் கூறியது போல ஃபாத்திமா ( ரலி)
அக்குழந்தையை பெற்றெடுத்தார் அது எனது மடியிலேயே வளர்ந்து வந்தது.
ஒரு நாள் ரஸூல் ( ஸல்) அவர்களிடத்தில் நான்
நுழைந்து அவர்களின் மடியில் பச்சிளம் குழந்தையை வைத்தேன் பின்பு நான் திரும்பும்
போது இத்தனை நாள் எனது மடியில் தவழ்ந்த இந்த
பச்சிளம் குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்த்த குழந்தையை விட்டு பிரிய மனமில்லாமல்
என்னிடமிருந்து ஒரு திரும்புதல் ஏற்பட்டது. பின்பு இதை நபியிடம் விட்டுவிட்டு
போவதா அல்லது நாம் மீண்டும் எடுத்துச் செல்வதா என்ற இரண்டு நிலைகளில் திகைத்து
நின்றேன் என்றாலும் நபியிடமே விட்டு விட்டு செல்லலாம் என முடிவெடுத்து விட்டேன்.
فاذا عينا رسول الله صلي الله عليه وسلم تهرقان
الدموع
ஆனால் நபியவர்களை திரும்பி பார்த்த அந்த
சமயத்தில் அருமை நபி ( ஸல்) அவர்களின் இரு கண்களும் கண்ணீரை தாரை தாரையாக
வடித்துக் கொண்டிருந்தது.
உம்முல் ஃபழ்ல் ரலி கூறுகின்றார்கள் அப்போது
நபியிடத்தில் நான் கேட்டேன் அல்லாஹ்வின் திரு நபியே காதமுன் நபியே! முத்திரை
நபியே! முஹம்மது நபியே! உங்களுக்கு என்ன நேர்ந்தது ஏன் இவ்வாறு அழுகின்றீர்
என்றேன். உடனே நபியவர்கள் ஜிப்ரயீல் அலை அவர்கள் தற்பொழுது என்னிடத்தில் வந்து
இந்த எனது பேரக்குழந்தையை எனது உம்மத்தினரே கொலை செய்வார்கள் எனக்கூறிச் சென்றார்
என்றார்கள்.
அப்போது நான் ஒன்றும் அறியாத அழகுக்குச்
சொந்தமான நட்சத்திரத்தைப் போன்று மின்னக்கூடிய இந்த பச்சிளம் குழந்தையையா கொலை
செய்வார்கள்? என்று சந்தேகத்தில் கேட்டேன். உடனே
நபியவர்கள் ஆம் இந்த குழந்தையைத் தான் இந்த பச்சிளம் குழந்தையைத்தான் கொலை
செய்வார்கள் இக்குழந்தை கொலை செய்யப்படக்கூடிய சிவப்பு
மண்ணிலிருந்து ஒரு பிடி மண்ணை என்னிடத்தில் ஜிப்ரயீல் அலை அவர்கள் கொடுத்தனர் எனவே
அடையாளம் காட்டப்பட்ட இந்த இடத்தில் எனது பேரன் கொலை செய்யப்படுவான் என
கூறினார்கள் இது கர்பலாவின் முன் அறிவிப்பு ( كتاب معرفة الصحابة)
ஹுசைன் ரலி அவர்கள் நபிகளாரின் மடியில்
தவழ்ந்து பாசம் நேசம் அன்பு அரவணைப்போடு வளர்ந்து வருகின்றனர் பின்பு ஹுசைன்
ரலிக்கு 7 லிருந்து 8 வயதுக்குள்
இருக்கும் நபி ( ஸல்) அவர்கள் மரணமடைந்து விடுகின்றனர்.
நபியவர்களின் பேரன் என்பதால் ஹுசைன் ரலி
அவர்களுக்கு அபூபக்கர் ரலி உமர் ரலி அவர்களின் கிலாபத்தில் மிகுந்த மரியாதை
அளிக்கப்பட்டு வந்தது.
ஒரு நாள் உமர் ரலி அவர்கள் மின்பர் படியில் குத்பா ஓதிக் கொண்டிருக்கும் போது நபியின் பேரன் ஹுசைன் ரலி வருவதைக் கண்டு இறங்கிக் கொண்டார் நபியின் பேரன்
என்பதால் ஹுசைன் ரலி அவர்களுக்கு அபூபக்கர் ரலி
அவர்கள் காலத்தில் கொடுக்கப்பட்டு வந்த சிறு தொகையை உமர் ரலி அவர்கள் காலத்தில் 500 திர்ஹமாக ஆக்கப்பட்டது.
ஒருநாள் اسامة بن زيد رضي حسين رضي இருவரையும் தங்கள் மடியில்
அரவணைத்து கட்டித்தழுவி கொண்டு ஹுசைனை நான் நேசிக்கின்றேன் யார் ஹுசைனை
நேசிக்கின்றார்களோ அவர்களை நீ நேசி ஏனெனில் நான் ஹுசைனை நேசிக்கிறேன் என்று நபி (
ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்போது ஹுசைன் ரலி அவர்கள் மதீனாவில் தங்கி
இருக்கின்றார்கள்.
*கர்பலா
நிகழ்ச்சி ஆரம்பம்*
***********************************
ஹிஜ்ரி 55 ல் கூஃபாவை
முஆவியா ரலி அவர்கள் ஆட்சி செய்து வந்தார்கள் இந்த சமயத்தில் முஆவியா ரலி அவர்கள்
தனக்கு பின்பு கிலாஃபத் பதவியை தனது மகனிடத்தில் ஒப்படைக்கப்படும் என கூறினார்
இம்மாதிரியாக மக்களால் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்காமல் சர்வாதிகார ஆட்சி வருவதை
மக்கள் விரும்பவில்லை மேலும் முஆவியா ரலி அவர்களின் மகன் யஜீது மிகவும்
அநியாயக்காரராகவும் இருந்தார் எனவே இவர் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை.
மக்களின் சொல்லுக்கு முஆவியா ரலியின் மகன்
யஜீது மதிப்பளிப்பதாக தெரியவில்லை எனவே மக்களனைவரும் ஒன்று இதை எதிர்க்கக்கூடிய கம்பீரமிக்க ஒரு ஆள் நமது நபியின் பேரன் இமாம்
ஹுசைன் ரலி அவர்களாகத் தான் இருக்க வேண்டும் என தீர்மானித்து இங்குள்ள
இந்நிகழ்ச்சியை குறிப்பிட்டு உடனே கடிதம் எழுதுகின்றனர். தபாலை கண்டு
கொதித்தெழுந்த இமாம் ஹுசைன் ரலி அவர்கள் உடனே கூஃபாவிற்கு புறப்பட தயாரானார்கள்.
*கூஃபாவாசிகள்
பற்றி முன் எச்சரிக்கை*
*********************************************
அப்போது வீர திலகம் அலி ரலிக்கு فاطمة அல்லாத வேற மனைவியின் மூலம்
பிறந்த محمد ரலி அவர்கள் வயதால் ஹுசைன் ரலி
அவர்களைவிட சிறியவராக இருந்தாலும் அறிவிலும் ஆற்றலிலும் மிகத் தேர்ச்சி பெற்று
இருந்தனர் இவர்கள் ஹுசைன் ரலி புறப்பட தயாராகி விட்ட செய்தியை கேட்டு ஹுசைன்
ரலியிடம் சென்று யா ஹுசைன் தாங்கள் கூஃபாவிற்கு புறப்பட தயாராகி விட்ட செய்தியை
கேள்விப்பட்டேன் உண்மையில் நீங்கள் அங்கு செல்லக்கூடாது அது எப்படிப்பட்ட கொடூரமான
ஊர் எப்படிப்பட்ட கொடூரமான மக்கள் என்றால் அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும்
பேரு போனவர்கள் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் ஈவு இரக்கமற்றவர்கள் அரக்கர்கள்
பாவிகள் எனவே உங்களையும் கொலை செய்து விடுவார்கள் எனவே நீங்கள் செல்லவே வேண்டாம்
அப்படி செல்வதாக இருப்பின் நீங்கள் மட்டும் செல்லாதீர்கள் என செல்லவிடாமல்
அடம்பிடித்து மீண்டும் கூறினார் . يا حسين அவ்வூரார் எப்படி கொடூரமானவர்கள் என்பதை நீங்கள் விளங்கவில்லை
ஆனால் உனது அன்பு சகோதரர் அக்கொடூர கும்பலால்தான் விஷம் கொடுத்து கொலை
செய்யப்பட்டார் எனவே நீங்கள் அங்கு செல்ல வேண்டாம் இங்கேயே இருந்து கொண்டு
மக்காவிற்கு சென்று புனித கஃபாவை மனமாற வலம் வந்து அங்கு வரும் மக்களுக்கு தப்லீக்
செய்து கொண்டு நேர்வழியையும் சன் மார்க்கத்தின் சத்திய போதனைகளையும்
எடுத்துரைத்துக் கொண்டே இருங்கள் என கூறினார் எனவே இமாம் ஹுசைன் ரலி அவர்கள் மதீனாவிலேயே
தங்கிவிட்டார்கள்.
*கூஃபாவிற்கு
தூதுவரை அனுப்புதல்*
*********************************************
மீண்டும் மீண்டும் தபால் வரவே இமாம் ஹுசைன்
ரலி அவர்கள் அங்குள்ள நிலவரங்களை அறிந்துவர مسلم بن عقيل رضي அவர்களை அனுப்பி வைத்தார்கள்
பின்பு مسلم
بن عقيل
அவர்கள் தங்களுடன் இருவர்களை அழைத்துக் கொண்டு கூஃபாவிற்கு புறப்பட்டுச்
சென்றார்கள்
*தூதுவர் مسلم بن عقيل رضي கொலை செய்யப்படுதல்*
******************************************************
இதற்கு முன்பு ஹுசைன் ரலி யார் என்று அறியாத
அவரின் அழகு முகத்தை காணாத அந்த கூஃபா வாழ் மக்கள் வரும் மனிதர்களை எல்லாம் புன்
முகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் அந்த
அடிப்படையில் مسلم بن عقيل رضي
யையும் வரவேற்று மகிழ்ந்தனர் பின்பு தன்னை ஹுசைன் ரலி அவர்கள்தான் அனுப்பி
வைத்தனர் என கூறினார் இதனால் தான் அன்போடும் ஆதரவோடும் அரவணைத்து உபசரித்தனர். இதற்கிடையில் يزيد
தால் ابن زياد என்பவன் கவர்னராக நியமிக்கப்
படுகின்றான் இவன் مسلم بن عقيل رضي
இங்கு வந்து தங்கி இருப்பதை கண்டு வீடுகள் அனைத்தையும் சோதனையிட்டான் மேலும் அவன்
நான் நல்லவனுக்கு நல்லவன் விரோதிக்கு விரோதி எனவே எவன் என்னிடத்தில் நல்லவனாக
நடந்து கொள்கிறானோ அவனிடத்தில் நான் நல்லவனாக நடந்து கொள்வேன் எவன் என்னிடம்
நன்றாக நடந்து கொள்ளவில்லையோ அவனுக்கு நானும் நல்லவனாக இருக்க மாட்டேன் எனக்கூறி
அனைத்து வீடுகளிலும் சோதனை போட உத்தரவிட்டான்.
இந்த சந்தர்ப்பத்தில் مسلم بن عقيل رضي அவர்கள் ஒரு வீட்டில்
ஒழிந்திருந்தார்கள் இதனால் அவ்வீட்டுக்காரர் கொடூரமான முறையில் கொலை
செய்யப்பட்டார். அடுத்து ஒரு வீட்டில் தங்கினார்கள் தனது மகனாலேயே அடையாளம்
காட்டப்பட்டு அவ்வீட்டுக்காரப் பெண் கொலை செய்யப்பட்டால் இறுதியில் ஓர் சந்தில்
அட்டைபோல் ஒட்டி கூனி குறுகிப்போய் உட்கார்ந்திருந்தனர் இதற்கிடையில் ابن زياد கூட்டத்தை கூட்டி யார் مسلم بن عقيل லின் தலையை கொண்டு வருகிறாரோ
அவருக்கு கவர்னர் பதவி கொடுக்கப்படும் என அறிவிப்புச் செய்தான் இறுதியில் مسلم بن عقيل இருக்குமிடத்தை கண்டு பிடித்து
அவர்களை இழுத்து வந்து கூட்டத்திற்கு முன் நிப்பாட்டினான் ابن زياد அவர்களை அரை நிர்வாணமாக்கி
அடித்து சித்ரவதைகள் செய்தான் தனக்கு இழைக்கப்படும் கொடூரமான சித்ரவதைகளை தாங்க
முடியாது مسلم
بن عقيل
அவர்கள் ابن
زيادதை பார்த்து அடி
சித்ரவதை செய் அநீதம் ظلم
க்கு தகுதியானவன் நீதான் அக்கிரமம் செய்பவனே! அநீதக்காரனே!
கொடுங்கோலனே! அரக்கனே! வம்பனே! இந்தா அடி எனக் கூறி கூக்குரலிட்டு ஆவேசத்துடன்
சப்தமிட்டு பொங்கி அழுதார்கள்.
இறுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது
அது சமயம் உன் இறுதி ஆசை என்னவென்று கேட்கப்பட்டது அதற்கு مسلم بن عقيلஅவர்கள் இந்த கூஃபா வாழ் மக்கள் மிக
நல்லவர்கள் மனிதத்தன்மை உடையவர்கள் என கற்பனை செய்து வைத்துள்ளார்கள் ஹுசைன் ரலி
அவர்கள். எனவே அவர்களிடம் இந்த அரக்கர்கள்
அக்கிரமக்காரர்கள் அநியாயக்காரர்கள் நிறைந்த கூஃபாவிற்கு வரவேண்டாம் என கூற
வேண்டும் இது தான் எனது இறுதி ஆசை எனக்கூறினார்கள் ஆனால் அந்த
இறுதி ஆசை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு தூக்கில் ஏற்றப்பட்டு கொலை
செய்யப்பட்டார்கள்.
*ஹுசைன் ரலி
கூஃபாவுக்கு புறப்படுதல்*
*********************************************
இதற்கிடையில் தான் அனுப்பிய தூதுவரை
காணவில்லையே ஏதும் தகவல் வரவில்லையே என்ன ஆனதோ ஏதும் ஏற்பட்டு விட்டதோ அந்த
அனாச்சார கும்பல் கொலை செய்து விட்டனரோ என்று பயந்து போய் திகைத்தவர்களாக
வீரத்தோடு மதீனாவை விட்டு عراق
கிற்கு புறப்பட்டார்கள் அப்போது மக்காவிற்கு வந்து கஃபாவை பார்த்து கண்ணீர் விட்டு
கதறி அழுது கஃபாவே இத்தனை நாட்களாக உன்னை வலம் வந்து கொண்டிருந்தேன் நபிமார்கள்
அனைவர்களாலும் வலம் வரப்படும் கஃபாவே துன்யாவில் இறைவனின் முதல்வீடாக
அமைந்திருக்கும் கஃபாவே ! ஒன்றுக்கு ஒரு லட்சம் நன்மை தரும் கஃபாவே! எனது
பாட்டனாரை பெற்றெடுத்து வளர்த்து அதன் மூலம் மகிமையை கண்ட கஃபாவே! உலகத்தினர்
அனைவர்களாலும் ஆசிக்கப்படுகின்ற கஃபாவே! எனது மேனியில் உன் இல்லம் படாத இடமில்லை
உன்னை முன்னோக்கி வணங்காத நாளில்லை உன்னை பார்க்காத நாளில்லை உன்னை வலம் வராத
நாளில்லை இத்தனையும் இன்று துறந்து உன்னை விட்டு பிரியப்போகிறேன் இனி எனது கண்கள்
எப்போதுதான் உன்னை காணுமோ ? தெரியவில்லை ஆனால் அதுவரை உன் நினைவால் இந்த
கண்கள் உன்னை பார்க்க துடித்துக் கொண்டே இருக்கும் எங்கு சென்றாலும் கால்கள் உன்னை
மீண்டும் வந்து சந்திக்க சதா முயற்சித்துக் கொண்டே இருக்கும் என் உள்ளம் சதாவும்
உன்னை நினைத்துக் கொண்டே இருக்கும் எனக்கூறி கதறி அழுது கண்ணீரல்ல செந்நீரையே தாரை
தாரையாக வடித்து விட்டு புறப்பட்டனர்.
அச்சமயத்தில் عبد الله بن عباس رضي அவர்கள் அந்த கூஃபா ஒரு நஜிஸ் எனவே நஜிஸான ஒரு இடத்திற்கு செல்ல
வேண்டாம் எனக் கூறி தடுத்தனர்
அடுத்து عمرو بن عبد الله رضي அவர்கள் எத்தனையோ பயணங்கள் உண்டு
ஆனால் இப்பயணத்தை விட
மாபெரும் கொடிய தொரு பயணத்தை நான் கண்டதே
இல்லை எனவே நீங்கள் இப்பயணத்தை தொடங்காதீர் அவ்வாறு செல்வதாக இருந்தால் என்
சடலத்தின் மேல்தான் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனக்கூறி தடுத்தனர்.
நமது كتاب
களில் شعرஉடைய வரிசைகளில் வரும் فرزدق என்ற شاعرஅவர்கள் ஹுசைன் ரலி அவர்களின் ஒட்டகத்திற்கு முன் நின்று கொண்டு மனிதர்கள்
எல்லோருக்கும் எப்படியெல்லாம் மரணம் வருகிறது ஆனால் عراق
கிற்கு சென்று மரணமடைவதை விட மிகக் கொடியதொரு மரணம் வேற எதுவுமில்லை எனக் கூறினார்.
அப்போது ஹுசைன் ரலி அவர்கள் இஸ்லாத்தில்
கூடாத முடியாட்சியை என்ன விலை கொடுத்தாவது என் உயிரை கொடுத்தாவது தடுப்பேன்
எனக்கூறி கூஃபா நோக்கி புறப்பட்டார்கள்.
இடையில் مقام مطواق இது போன்ற இடங்களில்
பாலைவனங்களில் தங்கியிருந்து சென்றார்கள் مقام المشارق என்ற இடம் வந்தபோது ஹுசைன் ரலி அவர்கள் மக்களுக்கு உபதேசம்
செய்தார்கள் இப்போது நாம் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து போரிடப் போகின்றோம்
யாராவது தங்களின் உயிர்மேல் ஆசை கொண்டு இப்பூலகில் வாழ வேண்டும் மனைவி
குழந்தைகளோடு இன்பமாக வாழ வேண்டும் உலகத்தின் வஸ்த்துக்கள் அனைத்தையும் அனுபவித்து
மகிழ வேண்டும் என்ற ஆசை இருந்தால் சென்று விடுங்கள் என கூறினார் இதைக் கேட்டதும்
உலகின் மேல் ஆசைப்பட்டு மிகப்பெரிய கூட்டம் எழுந்து சென்று விட்டது.
*கர்பலா
போர்க்களம்*
*****************************
பின்பு ஹிஜ்ரி 61 முஹர்ரம் பிறை 8 அன்று அருகில் உள்ள புராத் என்ற நதியில்
தண்ணீர் எடுக்க ஹுசைன் ரலி அவர்களின் சிறு பட்டாளம் சென்றது ஆனால் அந்த அரக்கர்கள்
தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தனர் இதனால் சிறு சிறு சண்டைகள் நடந்தன.
ஹிஜ்ரி 9 ல் ஹுசைன் ரலி
அவர்களுடன் 72 நபர்கள் மட்டுமே இருந்தனர் இப்போது ஹுசைன்
ரலி அவர்கள் மீண்டும் உபதேசம் செய்தார்கள் அந்த உபதேசத்தைக் கேட்ட மக்கள்
எல்லோரும் உங்களுடன் கடைசிவரை இருந்து போராடுவோம் எனக்கூறினார்கள் 10 ம் நாள் காலையில் போர் ஆரம்பமானது அப்போது இருதரப்பினர்களும் முஸ்லீம்கள்தான்
ஹுசைன் ரலி உடைய சிறிய படையிலிருந்து...
مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ
وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ
نَّبْـرَاَهَا اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ
பூமியிலோ, அல்லது உங்களிலோ
சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல்
மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை;
நிச்சயமாக அது
அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
(அல்குர்ஆன் : 57:22)
இது போன்ற வசனங்களையெல்லாம்
ஓதிக்காட்டினார்கள் மேலும் எதிர்பட்டாளங்களே! சென்று விடுங்கள் நமக்குள் சண்டை
வேண்டாம் எனக்கூறினர் ஆனால் அரச பட்டாளங்கள் செல்லவில்லை போர் ஆரம்பமானது.
போர் இரு தரப்பிலிருந்தும்
ஒவ்வொருவர்களாகத்தான் அக்கால நடைமுறைப்படி ஆரம்பமானது இடையில் சலசலப்பு ஏற்பட்டு
எல்லோரும் மோத ஆரம்பித்து விட்டனர். ஹுசைன் ரலியின் மகன் ஒன்பது வயது சிறு பாலகன்
அலி என்பவர் கலத்தில் குதித்தார்
انا علي بن حسين بن علي نحن ورب البيت اولي
بالنبي تاالله لايحكم فينا ابن الدار
தந்தை பெயர் தெரியாதவன் எங்களை கட்டுப்படுத்த
முடியாது எனக்கூறிக் கொண்டே கலத்தில் இறங்கினார்கள் அந்த பச்சிலம் குழந்தையை
துடிதுடிக்க சாகடித்தனர் எதிரிப்படை சண்டால பாவிகள் உடனே ஹுசைன் ரலியின் சகோதரி
ஜைனப் ரலி அவர்கள் ஓடிவந்து மரணித்துவிட்ட பிஞ்சு குழந்தையின்மேல் படுத்துக்
கொண்டு சண்டாளர்களே! அறக்கர்களே! ஈவு இரக்கமற்ற பாவிகளே! அருமை குழந்தை 9 வயது சிறுவனை கொன்று குவித்து விட்டீர்களே! எனக்கூறி கதறி அழுதனர்.
இறுதியில் 72 பேர்களும்
மரணித்துவிட்டனர் ஹிஜ்ரி 61 முஹர்ரம் பிறை 10 அஸர் நேரம் வந்து விட்டது அந்நேரம் யஜீதின் மகன் கீழ் வரும் வசனத்தை ஓதினான்
وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا
كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍ
அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
(அல்குர்ஆன் : 42:30)
*ஹுசைன் ரலி
ஷஹீதாக்கப்படுதல்*
************************************************
பின்பு ஹுசைன் ரலி அவர்களுக்கு கடுமையான
தாகம் ஏற்படுகிறது தண்ணீர் தேவை எனக் கேட்கின்றார்கள் ஆனால் தாகத்திற்குகூட
தண்ணீர் தர மறுக்கப்படுகிறது என்ன கொடுமை? இறுதி நபியின்
பேரர் சுவர்க்கத்தின் பூஞ்சிட்டு அவருக்கா இந்த நிலமை நினைக்கவே உள்ளம்
நடுங்குகிறது பின் அருகிலுள்ள ஆற்றுக்கு தானே சென்று தண்ணீர் குடிக்க முயற்சி
செய்கின்றனர் குடிக்க முடியாது தடுக்கப்படுகின்றனர் பின்பு அஸர் தொழுகையை
தொழுகின்றார்கள் ஸஜ்தா வந்தவுடன்
சரணடைவதற்காகத்
தான் நீண்ட நேரம் ஸஜ்தா செய்கின்றார் என்று நினைத்து விடக்கூடாது என நினைத்து
சீக்கிரமே தொழுகையை முடித்து விட்டு மீண்டும் அருகிலுள்ள புராத் நதியில் தண்ணீர்
குடிப்பதற்காக சென்று தண்ணீரை அள்ளி வாயிற்கு
அருகில் கொண்டு செல்கின்றனர் அந்தோ பரிதாபம் தாகத்தை தீர்ப்பதற்கு முன்பே ஒரு
அம்பு வந்து அவர்களின் தொண்டையில் பாய்ந்து விடுகிறது என்ன கொடுமை அரக்கர்கள்
தாகத்திற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் அம்பால் எய்து விட்டனர் அம்பின் வலி தாங்க
முடியாமல் துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் வேலையில் ஹுசைன் ரலியின் அருமை
தங்கை ஓடிவந்து யா ஹுசைன் உமக்கு ஆண் சிங்கம் ஒன்று பிறந்துள்ளது என்பதாக சுபச்
செய்தி கூறி அக்குழந்தையை அண்ணார் கையில் கொடுத்தார்கள் தன் குழந்தையை வாங்கி
முத்தம் கொடுத்து இரு காதிலும் பாங்கும் இகாமத்தும் சொல்லி முடித்தார்கள் அந்தோ
பாவம் சும்மூர் என்பவனால் எறியப்பட்ட ஒரு அம்பு அக்குழந்தைமேல் பட்டு குழந்தை
மரணித்து விடுகின்றது அப்போது ஹுசைன் ரலி அவர்கள் யுத்தம் என்றால் என்னவென்றே
தெரியாத உன்னை பால்குடி மறக்காத உன்னை உலகமென்றால் என்னவென்றே அறியாத உன்னை
பச்சிளம் குழந்தையான உன்னை கதற கதற துடிக்க துடிக்க அம்பால் ஷஹீதாக்கி விட்டார்களே
எனவே நீயும் ஷஹீதாஹி உள்ள அனைவர்களிலும் ஒருவன் يا طفل கிட்ட தட்ட صالح عليه அவர்களின் ஒட்டகத்தைப் போல எனக் கூறினார்கள்
இதைக் கண்ட ஜைனப் ரலியும் கதறி அழுகின்றார்கள். பின்பு ஹுசைன் ரலி அவர்களும்
மரணமாகி விடுகின்றார்கள் .
انا لله وانا اليه راجعون
பின்பு அரக்கன் இப்னுஜியாத் حسبن رضي அவர்களை கொலை செய்தது
மட்டுமல்லாமல் அவர்களின் தலையை துண்டிக்க உத்தரவிட்டான் ஆனால் அவன் பட்டாளங்கள்
அனைவர்களும் ابن
زياد
தே இதுவரை உனது சொல்லுக்கு அடிமைபட்டு போர் செய்தோம் இப்போது நபியின் பேரனை கொலை
செய்தது மிகப்பெரிய பாவம் ஆனால் நீ தலையையே துண்டிக்க சொல்கிறாயே இது முடியவே
முடியாது கொடுமைகள் இனியும் தொடருமானால் நாங்கள் உனக்கே விரோதியாக மாறிவிடுவோம்
எனக்கூறுகின்றனர் ஆனால் எதையும் தாங்கும் சக்திகொண்ட அரக்கன் ابن زياد ஒருவனை கூப்பிட்டு தலையை துண்டிடா
என அகம்பாவத்தோடு கட்டளை இட்டான் அவன் பயந்து போய் தலையை துண்டித்துவிட்டான் தலையை துண்டித்த இவன் பைத்தியக்காரனாக ஆகி இரண்டு வருடங்களாக நான் ஒருவரை கொலை செய்து விட்டேன் என சொல்லிக் கொண்டே திரிந்தான் என
கூறப்படுகிறது.
தலை தன் சமூகத்திற்கு வந்தவுடன் தடியால்
ஹுசைன் ரலி அவர்களின் உதட்டை அடிக்கச் சென்றான் அதுவரை மௌனமாக இருந்த زيد بن ارقم رضي அவர்கள் ( இவர்கள் யார் என்றால்
உஹது யுத்தத்திற்கு ஆள் எடுக்கும்போது 7 வயது சிறுவனாக
இருந்தவர் மஸ்ஜித் நபவியின் ஓரத்தில் வந்து நின்று கொண்டு நானும் யுத்தத்திற்கு
வருகின்றேன் என்று கூறி போரில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என ஆர்வத்தை
வெளிப்படுத்தியவர் அவர்கள் இந்த சமயத்தில் கூறுகின்றார்கள்) நபியின் புனித கைகள்
பட்ட உதடு நபியின் புனித உதடுகள் ஒன்றோடொன்று இணைந்து உதடு நபி முத்தமிட்ட புனித
உதடு எனவே இதை அடிக்க எனது கண்கள் பார்த்து கொண்டிருக்காது இவ்வுதடுகளை அடிக்காதே
என கூறினார்கள் ஆனால் ابن زياد
என்பவன் ஓ கிழடே எனக்கு விசிரி வீசி பணிவிடை செய்யும் வேலைக்காரனே உனக்கு இது
தேவையா? நீ ஓரம் கட்டு என கூறி ஓரத்தில்
ஒதுக்கிவிட்டான்.
*யஜீது மன்னிப்பு
கேட்குதல்*
*************************************
இதுவரை என்ன நடந்தது என்று ஒன்றும் அறியாத يزيد இந்த படுகொலை செய்தியை கேட்டவுடன்
திடுக்கிட்டு அட ابن زياد
தே உன்னை கவர்னராகத் தானே அனுப்பினேன் ஹுசைன் ரலியை பிடித்து வரும்படிதானே
கூறினேன் ஆனால் கொலை செய்துவிட்டு வந்து நிற்கிறாயே உனக்கே இது நியாயமா ? எனக்கூறி திட்டிவிட்டு ஹுசைன் ரலி அவர்களுடன் வந்து கூடாரத்தில் தங்கி
இருக்கும் பெண்களிடம் சென்று நபியின் பேரனை பிடித்துக் கொண்டுதான் வரச் சொன்னேன்
ஆனால் கொன்றுவிட்டு வந்துவிட்டான் நான் அங்கு வந்திருந்தால் உண்மையில் நிச்சயமாக
இக்கொலை நடைபெற்று இருக்காது இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் கவலை அடைகிறேன்
எனவே இந்த எனது மாளிகையில் நீங்கள் தங்குங்கள் நீங்கள் இருப்பதை கண்டாவது ஹுசைன்
ரலி இருப்பதைப்போல நினைத்து மகிழ்ச்சி அடைந்து கொள்கிறேன் என்னை மன்னித்து
விடுங்கள் எனக்கூறி மன்னிப்பு கேட்டார் யஜீது.
*முடிவுரை*
**************
கர்பலாவின் படுகொலை முஸ்லிம்களுக்கு
அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்க்கும் விஷயத்தில் உறுதியாக கடைபிடிக்கும்
முக்கியத்துவத்தை அழுத்தமாக கூறுகிறது. இன்றைய முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்கள்
முஸ்லிம்களின் மனவிருப்பப்படி நியமிக்கப்பட்டவர்கள் அல்லர்; மாறாக மேற்கத்திய காலனித்துவ வாதிகளால் உம்மத்தின் மீது சுமத்தப்பட்டவர்களாக
இருக்கின்றனர். அவர்கள் அநியாயக்காரர்களாகவும் உம்மத்திடமிருந்து அதிகாரத்தை
அபகரித்தவர்களாகவும் உள்ளனர். உம்மத்தின் முழு ஆற்றலை விளங்கிட செய்யவும் இஸ்லாம் தந்திருக்கும் மதிப்பை மீட்டெடுக்கவும் இந்த போலி யஸீத்களை நீதமான
கிலாஃபத்தை கொண்டு மாற்றியமைத்திட வேண்டும்.
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ
وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ
الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى
لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا
يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ
الْفَاسِقُونَ
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு
முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக
நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக்
கொண்டு மாற்றி விடுவதாகவும்,
அல்லாஹ்
வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள்
பாவிகள்தாம். (அந்நூர்:55)
*ஆஷூரா நாளில்
விரும்பத்தகாத நிகழ்வுகள்.*
***********************************************************
ஷீயாக்கள் இந்த ஆஷூரா தினத்தை குறுகிய
கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள். ஹிஜ்ரீ 61-ம் வருடம்
ஹூசைன் ரலி அவர்களும், அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த 16 நபர்களும், அநீதமாக கர்பலா களத்தில் கொலை செய்யப்பட்ட
தாங்க முடியாத வடுவை ஏற்படுத்தி விட்ட அந்த கோர நிகழ்வும் அல்லாஹ்வின் நாட்டப்படி
இதே நாளில் நிகழ்ந்து விட்டமையால் இந்த நாளை துக்க நாளாக அனுசரித்து, தேவையற்ற சடங்குகளை கடைபிடிக்கிறார்கள். இதற்கும்
இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
அதற்கு முன்பு ஹிஜ்ரீ 40-ம் வருடம்
ஹூசைன் ரலி அவர்களின் தந்தை ஹஜ்ரத் அலீ ரலி
அவர்கள் ஷஹீதாக்கப் பட்ட நிகழ்வையே நாம் துக்க நாளாக அனுசரிப்பதில்லை. அப்படி நாம்
செய்ய துவங்கினால் அது அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக் கொள்ளாமல் முறையீடு
செய்வதாகி விடும். அல்லாஹ் அந்த நிலையிலிருந்து நம்மை பாதுகாப்பானாக ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.