புதன், 19 செப்டம்பர், 2018

சீரழியும் கலாச்சாரம்.


சீரழியும் கலாச்சாரம்.
"قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي.... قول الله عز و جل
ما تركت شيأ يقربكم الي الله إلا وقد أمرتكم به ... قوله عليه الصلاة والسلام
(رواه الدارمي)
கலாச்சாரம் என்றால் என்ன?
-----------------------------------------------
பொதுவாக மக்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்வியல் நடைமுறைகளே கலாச்சாரமாகும். இது நிறம் ஊர் மொழியை பொருத்து மாறுபடும். ஆனால் இஸ்லாத்திலும், முஸ்லிம்களிடத்திலும் கலாச்சாரம் என்பது சுன்னத்தான நடைமுறையைத் தவிர வேறேதுமில்லை சகோதர சமயத்தாரைப் போல் ஊர் நிறம் மொழிகளைப் பொருத்து மாறுபடுவதில்லை ஏனெனில் முஸ்லிம்களின் வாழ்வியல் கலை என்பது நபியவர்களின் வழிகாட்டல்களைத் தவிர வேறில்லை. எனவே ஊர் நாட்டு பழக்கவழக்கங்கள் அந்நபிவழிக்கு முரண்படாமல் இருப்பின் அதை ஏற்று எடுத்துக் கொள்வோம் முஸ்லிம்களாகிய நாம் பழக்கவழக்கத்திற்கு அடிமைகள் அல்ல மாநபியின் வழிமுறைகளாகிய சுன்னத்திற்கே அடிமைகளாகும்.

عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( لا يُؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به ) حديث صحيح رُويناه في كتاب الحجّة بإسناد صحيح .(رواه البيهقي )

ஒருவரின் மனவிருப்பம் நான் கொண்டு வந்துள்ள மார்க்கத்திற்கு ஒத்ததாக ஆகும் வரை  அவர் உண்மை முஃமினாகி விட முடியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

சுன்னத் என்பது சாதாரண பழக்கவழக்கங்களை வணக்க வழிபாடாக மாற்றி விடும். இஸ்லாம் என்றாலே கட்டுப் படுவதாகும் எனவே நமது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் சுன்னத்திற்கு முரணான பழக்கவழக்கங்களை கைவிட்டு சுன்னத் எனும் சீரிய கலாச்சாரத்தை பின்பற்றுவதின் மூலமாகவே நாம் உண்மை முஃமின்கள் என்பதும் இஸ்லாமிய கலாச்சாரம் உயர்ந்தது என்பதும் வெளிப்படும்.
இஸ்லாமிய கலாச்சாரமும்,முஸ்லிம்களும்.
-------------------------------------------------------------------
இஸ்லாமிய கலாச்சாரம் என்பது மதம் சார்ந்ததல்ல அதையும் தாண்டி விரிவான பொருள் கொண்டது மனித உணர்வுகளோடு ஒன்றியது இறுக்கமானதல்ல கட்டுப்பாடற்றதல்ல மாறாக வரையறுக்கப்பட்ட மனிதாபிமானம் கொண்ட விசாலமான மனிதப் பண்புடன் கூடிய கட்டுப்பாட்டு வாழ்வை கற்றுத் தருவதே இஸ்லாமிய கலாச்சாரமாகும். ஏனெனில் இஸ்லாம் என்பது சர்வதேச வாழ்வியல் கலைக்கூடமே தவிர சந்தர்ப்பங்களில் மட்டுமோ அல்லது வணக்கங்களில் மட்டுமோ முற்றுப் பெற்றதல்ல மனிதன் எதிர் கொள்ளும் அரசியல்,  பொருளியல், சமூகவியல், கல்வி, வெளியுறவு ஆகிய அனைத்தையும் மேன்மைப்படுத்த தேவையான செயலாக்க அமைப்புகளே சுன்னத் என்னும் இஸ்லாமிய கலாச்சாரமாகும். முஸ்லிம்களே இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு தூக்குக் கயிறுகளாக இருப்பது நாமே எதிரிகளிடம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கைவிலங்கிட்டு ஒப்படைப்பதாகும்.
رواه مسلم في صحيحه، جاء عن أبي هريرة  عن النبي أنه قال: بدأ الإسلام غريباً وسيعود غريباً كما بدأ فطوبى للغرباء"
" இஸ்லாம் அந்நிய நிலையில் தோன்றியது  பிற்காலத்தில் அது மீண்டும் அந்நியமாகவே திரும்பி விடும் அந்நிலையில் அதைப் பின்பற்றியவர்களுக்கு சுபசோபனம் உண்டாகட்டும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் )

இஸ்லாம் அனுமதித்த முத்தலாக் ஹராமாக்கிய இசை, வட்டி போன்றவற்றை  எதிர்த்து இஸ்லாமிய நாவுகளே பேசுகின்றன இஸ்லாத்தை பிறர் புரிந்த அளவு கூட முஸ்லிம்கள் புரியவில்லை என்பதை இது உணர்த்துகிறது இஸ்லாமிய கலாச்சாரம் மங்கி அழிவதற்கு சில அடிப்படை காரணங்கள் உள்ளன.
கலாச்சார சீரழிவின் காரணங்கள்.
************************************
1. ارتداد فكري :
அதாவது முஸ்லிமாக பிறந்த உள்ளங்கள் குஃப்ர் ஷிர்கின் சகவாசத்தால் காஃபிரான சிந்தனையை உட்கொண்டுள்ளது முஸ்லிமாக வாழ்கிறார் ஆனாலும்  மன விருப்பின்றி (வாழ்கிறார்). தொழுகிறார் ஆனாலும் ஆசையின்றி (தொழுகிறார்)
"ردة لا ابابكر لها"
என்ற நூலில் இது குறித்து
ابو الحسن علي الندوي رحمة الله
அவர்கள் விரிவாக கூறியுள்ளார்கள்.
2 . சிலர் இஸ்லாமிய கலாச்சாரம் காலாவதியாகி விட்டது என்று கூறுகிறார்கள். இந்த நவீன யுகத்திற்கு இது ஒத்துவராது என்று குறுக்கீடு செய்கிறார்கள். அப்படியானால் இஸ்லாமும் காலாவதியாகி விட்டது என்று கூற வேண்டும். உண்மையில் அப்படியல்ல... இஸ்லாத்தையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு மங்கி விட்டது இது கண்களை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று கூறுவதைப் போன்றதாகும்.
3 . மேற்கத்திய கலாச்சாரத்தின் படையெடுப்பும் ஒரு பெரும் காரணமாகும். இதன் மூலம் நமது சமூகம் மானத்தையும், வெட்கத்தையும் இழந்ததே தவிர வேறு எதையும் யாரும் சாதிக்கவில்லை பெண்கள் கேவலமாக நடத்தப் படுவதும், காமத்தீ மூட்டப்படுவதும், உறவுகள் உடைந்து போவதும், அர்த்தமற்ற செயல்களை செய்வதுமே மேற்கத்திய கலாச்சாரத்தின் படைப்புகளாகும்.

4 . இஸ்லாத்தை பற்றிய போதிய அறிவின்மை, 70 வயதானவருக்கும் சுன்னத்தான முறையில் உளூ செய்யத் தெரியாத அவலம், 60 வயதான முதியவரும் தனது இஸ்லாமிய உணர்வை இழந்து தாடியை மழிக்கும் நிலை, சுன்னத்துகளை விட ஃபர்ளையே அறியாத சமுகம்,  எதையும் விவாதப் பொருளாகவே பார்த்தல் இதுவே இஸ்லாமிய கலாச்சாரம் முஸ்லிம்களிடம் அழிவதற்கு காரணியாகும்.
5 . பிற மத கலாச்சாரங்களை பின்பற்றல், நம்மைப் பார்த்து பிறர் பரிதாபப் படுமளவு நாம் நமது சுன்னத்துகளை தீக்கிரையாக்கி இஸ்லாமிய கலாச்சாரத்தை அழித்துக் கொண்டிருப்பது நம் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(( لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا شِبْرًا وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ فَمَنْ )) [ متفق عليه ]

"நிச்சயமாக நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை அணு அணுவாகப் பின்பற்றுவீர்கள் எந்த அளவுக்கெனில் அவர்கள் (மிகக் குறுகிய) உடும்பு வளைக்குள் நுழைந்திருந்தால் நீங்களும் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறிய போது 'அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யூதர்களும் கிறிஸ்தவர்களுமா? என்று நாங்கள் கேட்டோம்' அதற்கு நபியவர்கள் (அவர்களன்றி) வேறு யார் என்று கேட்டார்கள்.
======================
கையில் அமிர்தமிருக்க பட்டினியால் இறந்தவனை என்னவென்று கூறுவது.

இஸ்லாம் வகுத்தளித்த கலாச்சாரத்தையும் நாம் நடைமுறையில் கொண்டுள்ள கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு பார்த்தால், இஸ்லாமிய கலாச்சாரம் வாழ்வியல் சித்தாந்தம் என்பதையும், நம்மை விட மார்க்கம் நம் மீது கொண்டுள்ள பாசத்தையும், அக்கரையையும் புரிய முடியும்.
1 . கல்வி :-
பெண்களை வீட்டுப் பொறுப்பாளிகளாகவும், ஆண்களை சம்பாதிக்கும் பொறுப்பாளிகளாகவும் மார்க்கம் கூறியுள்ளது. ஆனால் நாம் இதை உடைத்து கோ- எஜுகேஷன் கல்வி முறையை கையாண்டதின் விளைவு பாட அறையில் கற்பிழந்து கர்ப்பமாக நின்றால் 8, 10 - ம் வகுப்பு மாணவி ஆசிரியனே குழந்தைக்கு அப்பனாகிப் போனான்.
___________(((((((())))))))))))__________--------
حديث رواه أبو داود (5272) عن أبي أسيد الأنصاري رضي الله عنه أنه سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ خَارِجٌ مِنْ الْمَسْجِدِ فَاخْتَلَطَ الرِّجَالُ مَعَ النِّسَاءِ فِي الطَّرِيقِ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنِّسَاءِ : (اسْتَأْخِرْنَ ، فَإِنَّهُ لَيْسَ لَكُنَّ أَنْ تَحْقُقْنَ الطَّرِيقَ ، عَلَيْكُنَّ بِحَافَّاتِ الطَّرِيقِ) فَكَانَتْ الْمَرْأَةُ تَلْتَصِقُ بِالْجِدَارِ ، حَتَّى إِنَّ ثَوْبَهَا لَيَتَعَلَّقُ بِالْجِدَارِ مِنْ لُصُوقِهَا بِهِ . وحسّنه الألباني .

ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﺃﻧﻪ: ﺳﻤﻊ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻳﻘﻮﻝ: «ﻻ ﻳﺨﻠﻮﻥ ﺭﺟﻞ ﺑﺎﻣﺮﺃﺓ، ﻭﻻ ﺗﺴﺎﻓﺮﻥ اﻣﺮﺃﺓ ﺇﻻ ﻭﻣﻌﻬﺎ ﻣﺤﺮﻡ»، ﻓﻘﺎﻡ ﺭﺟﻞ ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، اﻛﺘﺘﺒﺖ ﻓﻲ ﻏﺰﻭﺓ ﻛﺬا ﻭﻛﺬا، ﻭﺧﺮﺟﺖ اﻣﺮﺃﺗﻲ ﺣﺎﺟﺔ، ﻗﺎﻝ: «اﺫﻫﺐ ﻓﺤﺞ ﻣﻊ اﻣﺮﺃﺗﻚ
3006. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்.

2 . ஆடை :-
ஆடையில் இஸ்லாமிய கலாச்சாரத்தை இழந்தவள் காமுகர்களுக்கு இரையாகி, யாருக்கோ மனைவியாகி, யாரோ ஒருவரது குழந்தையை தன் இஸ்லாமிய இரத்தத்துடன் சுமக்கிறாள். சமீபத்திய நிகழ்வுகள் இதற்கு சான்றாக உள்ளது.
மெல்லிய ஆடையை அணியாதீர் :-
***********************************
عن النبي صلى الله عليه وسلم أنه قال : " صنفان من أهل النار لم أرهما بعد : رجال معهم سياط كأذناب البقر يضربون بها الناس ، ونساء كاسيات عاريات مائلات مميلات على رؤوسهن كأسنمة البخت المائلة ، لا يدخلن الجنة ولا يجد ريحها ، وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا " رواه أحمد ومسلم
4316. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.
(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.
அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்.

وعن أم علقمة بن أبي علقمة قالت :  ( رأيت حفصة بنت عبد الرحمن بن أبي بكر دخلت على عائشة وعليها خمار رقيق يشف عن جبينها فشقته عائشة عليها وقالت : أما تعلمين ما أنزل الله في سورة النور ؟ ثم دعت بخمار فكستها ) (رواه ابن سعد)

" உம்மு அல்கமா அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் அபூபக்கர் ரலி அவர்களின் பேத்தி ஹஃப்ஸாவை ஆயிஷா ரலி அவர்களிடம் நுழைய பார்த்தேன் அவர் மீது நெற்றி தெரியும் படியான மெல்லிய முக்காட்டுத் துணி இருந்தது அதை ஆயிஷா ரலி அவர்கள் கிழித்து விட்டு  அல்லாஹ் "சூரா நூரில்" எதை இறக்கி வைத்துள்ளான் என்று  உங்களுக்கு தெரியாதா? என கூறியவாறு வேறு ஒரு முக்காட்டுத் துணியை கொண்டு வரச் சொல்லி அதை அவருக்கு  அணிவித்தார்கள்.

சிறார்களுக்கு பர்தாவுடைய ஆடையை அணிவிப்போம்...
*****************************************
حديث مرفوع) حَدَّثَنِي أَبُو عَبْدِ اللَّهِ بْنُ أَبِي ذُهْلٍ ثناأَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَاسِينَ ، ثنا مُحَمَّدُ بْنُ حَبِيبٍ السَّمَّاكُ ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ زِيَادٍ الثَّوْبَانِيُّ مِنْ وَلَدِ ثَوْبَانَ ، عَنِ ابْنِ لَهِيعَةَ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ لَيْثٍ مَوْلَى مُحَمَّدِ بْنِ عِيَاضٍ الزُّهْرِيِّ ، عَنْ مُحَمَّدِ بْنِ عِيَاضٍ ، قَالَ : رُفِعْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ فِي صِغَرِي وَعَلَيَّ خِرْقَةٌ وَقَدْ كُشِفَتْ عَوْرَتِي ، فَقَالَ : " غَطُّوا حُرْمَةَ عَوْرَتِهِ ، فَإِنَّ حُرْمَةَ عَوْرَةِ الصَّغِيرِ كَحُرْمَةِ عَوْرَةِ الْكَبِيرِ ، وَلا يَنْظُرُ اللَّهُ إِلَى كَاشِفِ عَوْرَةٍ " .
" முஹம்மத் இப்னு இயாழ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் சிறுபிராயத்தில் நான் தூக்கிச் செல்லப் பட்டேன் என் மீதிருந்த சிறிய துணி விலகி என் மறைவிடம் திறந்திருந்தது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் அச்சிறுவனின் மறைவிடத்தை மறையுங்கள் நிச்சயமாக
உங்களில் சிறார்களின் வெட்கஸ்தலங்களின் கண்ணியம் பெரியவர்களின் வெட்கஸ்தலங்களை மறைப்பதின் அவசியத்தை போன்றதாகும் அல்லாஹ் வெட்கஸ்தலங்கள் திறந்திருப்பவனை பார்ப்பதில்லை"
3 . தொடர்புகள் :-
பழக்க வழக்க தொடர்புகளில் இஸ்லாமிய கலாச்சாரத்தை கைவிட்டவள் அந்நிய அரக்கர்களது தோழியாகி, கணவனுக்கு துரோகியாகி , தான் பெற்ற குழந்தைகளின் எமனாகி மொத்த மனித குல எதிரியாக சாபக் கேட்டிற்கு ஆளாகிறாள்.

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ ۚ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا🔴

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.
 (அல்குர்ஆன் : 33 - 32, 33)
"المرأة عورة فأذا خرجت أستشرفها الشيطان"
(رواه الترمذي) عن عبدالله بن مسعود رضي.

" பெண் என்பவள் மறைக்கப் பட வேண்டியவள் அவள் (மார்க்க வரம்பை மீறி) வீட்டை விட்டு வெளியேறினால் ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகிறான்.
4 . தொழில் :-
இஸ்லாம் அனுமதிக்காத தொழிலிற்காக வாதாடி மார்க்க உணர்வை இழந்து தவறான முறையில் பணம் சேர்ப்பவன் வட்டியில் மூழ்கி பலரை ஏமாற்றி இறுதியில் வாழ்வில் முடமாகிறான்.
"لا يدخل الجنة جسد غذي بالحرام " رواه البيهقي عن أبي بكر الصديق رضي الله عنه

"ஹராமான உணவைக் கொண்டு வளர்ந்த உடல் சுவனத்தில் நுழையாது"

"ما أكل أحد طعاما قط خير من أن يأكل من عمل يده"
(رواه البخاري - عن المقدام بن معدي كرب رضي)

" தனது கையால் உழைத்து உண்பதை விட சிறந்த உணவை யாரும் உண்ண முடியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
5 . பர்தா :-
பர்தாவில் இஸ்லாமிய கலாச்சாரத்தை கைவிட்டவள் அந்த பர்தாவின் மூலமே பாதாளத்தை அடைகிறாள் நாகரீக மோகத்தில் பர்தாவை இழிவுபடுத்தி புறக்கணிப்பவர்கள் தனது அறியாமையினால் எதை இழக்கிறோம் என்பதை உணராமல் இழந்து கொண்டிருக்கிறார்கள். பர்தா என்பது அடிமைத்தனத்தின் அடையாளமல்ல மாறாக சுதந்திரம் உரிமை பாதுகாப்பின் குறியீடு என்பதை உணர வேண்டும்.
எத்தனை இஸ்லாமிய கலாச்சார சீரழிவுகளைத் தான் சொல்லி அழுவது .

நமது கடமை :-
*************
எனவே உண்மையில் தனது இஸ்லாமிய வைராக்கியத்தோடு சுன்னத்தையும், இஸ்லாமிய கலாச்சாரத்தையும் உயிர்ப்பிப்பதற்காக தனது மனோ இச்சையையும் அவற்றின் தூண்டுதல்களையும் தியாகம் செய்திடும் 'உணர்வு தியாகம்' வேண்டும். அதன் மூலமே நமது முன்னேற்றமும் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பும் வளர்ச்சியும் உண்டாக முடியும்.
இன்று இஸ்லாமிய கலாச்சாரத்தை பரப்புவதை விட பாதுகாப்பதே பெரும் வேலையாகி விட்டது இக்கலாச்சாரத்தை நம் வாழ்வில் கொண்டு வருவதன் மூலம் அது நம்மில் நிலைப்பதோடு பிறரிலும் விருட்சமாக வளரத் தொடங்கும்.
கவிஞர் அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் கூறுவது போல
இஸ்லாமிய கலாச்சாரம் என்பது வருங்காலத்திற்கு தோதுவாக நடந்து கொள்வதல்ல மாறாக  நபியவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் கடந்த கால வாழ்வியல் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதாகும். இஸ்லாத்தையும் அதன் கலாச்சாரத்தையும் விமர்ச்சனப் பொருளாக பார்க்காமல் அவற்றை சிந்தித்து  உணர்வது காலத்தின் அவசியமாகும்.
பண்டைய கால அரேபிய கொடிய காட்டு மிராண்டி கலாச்சாரத்தில் மூழ்கிய மக்களை வானில் மின்னும் விண்மீன்களாக மாற்றிய 'இஸ்லாமிய சுன்னத்' என்னும் கலாச்சாரம் நம்மை சிறக்க வைக்காதா?
"ما تركت شيأ يقربكم الي الله إلا وقد أمرتكم به وما تركت شيأ يبعدكم عن الله إلا وقد نهيتكم عنه"
(رواه الدارمي)
" அல்லாஹ்வின் பக்கம் உங்களை நெருக்கமாக்கி வைக்கும் எந்த விஷயத்தையும் நான் உங்களுக்கு கூறாமல் விட்டதில்லை. அல்லாஹ்வின் விட்டும் உங்களை தூரமாக்கும் எந்த விஷயத்தையும் நான் உங்களுக்கு தடுக்காமல் விட்டதில்லை " என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனும் மார்க்கமும் நம்மை எப்படி பார்க்கிறது என்ற உண்மையை உணர்ந்து இஸ்லாத்தை நமது இதயத்தின் நெருக்கமான மார்க்கமாக உணர்ந்து வாழ்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.