புதன், 30 நவம்பர், 2016

அனைத்திற்கும் அழகிய முன்மாதிரி அண்ணலார்

بسم الله الرحمن الرحيم
அனைத்திற்கும்  அழகிய முன்மாதிரி அண்ணலார்
***************************
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
***********************************************************
ரபீஉல் அவ்வல் முதல் ஜும்ஆ, ரபீஉல் அவ்வல் மாத பிறை பார்த்து விட்டால் பெருமானாரின் பிறப்பு நமக்கு ஞாபகம் வரும். பிறப்பு மட்டும் அல்ல பெருமானாரின் வாழ்வு முழுவதும் நினைவுக்கு வர வேண்டும்.

நபி ஸல் )அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் பேசிய சொல்  நடைமுறை குணங்கள் பழக்க வழக்கங்கள்  அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது  என்றால் நபிஸல் அவர்களைப் போன்று வேறு எந்த தலைவரும் இந்த சிறப்பை அடைய முடியாது. அவர்களின் பண்புகளைக் பின்பற்றினால் நாமும் நல்லொழுக்கமுள்ள நல்ல மனிதராக ஆகுவோம் என்பதில் சந்தேகமில்லை.

புன்னகை முகம் :-
*********************
நபி(ஸல் )அவர்களை சந்திக்க வருபவர்களை புன்முறுவலுடன் வரவேற்பார்கள்

  4191ٍ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ مَا حَجَبَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلاَ رَآنِي إِلاَّ ضَحِكَ. قَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ترمدي
ஜரீர் ரலி கூறுகையில்.  நான் இஸ்லாத்தை  ஏற்றதிலிருந்து எப்பொழுதும் நபி(ஸல்) அவர்கள் என்னை  புன்னகையுடனேயே பார்க்க கூடியவர்களாக இருந்தார்கள் திர்மிதி

பேச்சில் நளினம்:-
**********************
«4000» حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ الأَسْوَدِ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْرُدُ سَرْدَكُمْ هَذَا وَلَكِنَّهُ كَانَ يَتَكَلَّمُ بِكَلاَمٍ بَيْنَهُ فَصْلٌ يَحْفَظُهُ مَنْ جَلَسَ إِلَيْهِ.
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الزُّهْرِيِّ وَقَدْ رَوَاهُ يُونُسُ بْنُ يَزِيدَ عَنِ الزُّهْرِيِّ.
   
ஆயிஷா ரலி  அவர்கள் கூறினார்கள் நபி( ஸல் ) அவர்கள்  உங்களை போன்று விரைவாக பேசக்கூடியவராக  இருந்ததில்லை அவர்களிடம் அமர்ந்து இருப்பவர் மனனம் செய்யும் வண்ணம் இடைவெளி விட்டு தெளிவாக அவர்களின் பேச்சு இருக்கும்

உயர்ந்தவன் ,தாழ்ந்தவன் ,பெரியவன், சிறியவன் என எந்த பேதமும் இன்றி அனைவரிடமும் அன்புடன் பேசுவார்கள்

என் மீது தான் நபி(ஸல்)அவர்கள் அதிகம் பிரியம் வைத்துள்ளார்கள் என்று நினைக்கும் அளவுக்கு வெறுப்பின்றி பேசுவார்கள் .

பயணத்தில்  அருள் முகம்:-
*****************************
ஒரு மனிதன் பயணத்தில் இருக்கும் போது தான் உண்மையான குணம் தெரியும்
உமர் ரலி அவர்கள்  ஆட்சி காலத்தில் ஒருவரின் நன்னடத்தை பற்றி சாட்சி கூறிவந்தால் நீ அவருடன் பயணம் செய்து இருக்கிறாயா என்று கேட்டு விட்டு விசாரணையை  துவங்குவார்கள் அப்போது தான் அவர்களின் இயற்கை குணத்தை அரிய முடியும் என்பார்கள்.

அண்ணலாரின் பல பயணங்களில் உடன் இருந்தவர்கள் கூறுகிறார்கள்
கூட்டமாக செல்லும் போது நபி ஸல் அவர்கள் பின் தங்கி  வருவார்கள்  நடக்க முடியாதவர்களை ஊக்கப்படுத்துவார்கள் தான் ஒட்டகத்தில் பயணித்தால் கடைசியில் வருபவர்களை தன் பின்னால் ஏற்றிக் கொள்வார்கள்

நபி( ஸல் )அவர்கள் கம்பீரமான நடை உள்ளவர்கள்  அவர்களுக்கு சமமாக யாரும் நடக்க முடியாது இருந்தாளும் அவர்கள் கூட்டத்தில் கடையாக வருவார்கள் தாமதமாக வருபவர்கள் மனதில் சோர்வு ஏற்படக்கூடாது என்பதற்காக.

இல்லறத்தில் முன்மாதிரி
*************************
3252 -[15] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻨﻬﺎ ﻗﺎﻟﺖ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺧﻴﺮﻛﻢ ﺧﻴﺮﻛﻢ ﻷﻫﻠﻪ ﻭﺃﻧﺎ ﺧﻴﺮﻛﻢ ﻷﻫﻠﻲ ﻭﺇﺫا ﻣﺎﺕ ﺻﺎﺣﺒﻜﻢ ﻓﺪﻋﻮﻩ» . ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ. ﻭاﻟﺪاﺭﻣﻲ
   உங்களில் சிறந்தவன் தனது மனைவியிடம் சிறந்தவன்தான்  நான் எனது மனைவியிடம் சிறந்தவன்
பிற மனிதனிடம் சிறந்தவன்  என்ற பெயரை இலகுவான முறையில் பெறலாம். ஆனால் மனைவியிடம் அந்த பெயரை எடுப்பது சிரமம் ஏனென்றால் அவர்களுக்கு தன் கணவரின் எல்லா செயலும் தெரியும்
ஒரு மனைவியுடன் சேர்ந்து வாழ இந்நிலை என்றால் பல மனைவியுடன் வாழ்ந்த நபியை கருணை உள்ளம் கொண்டவர்களாக அவர்களின் துனைவியார்கள் பார்த்தார்கள்

        3240 -[3] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻨﻪ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﻳﻔﺮﻙ ﻣﺆﻣﻦ ﻣﺆﻣﻨﺔ ﺇﻥ ﻛﺮﻩ ﻣﻨﻬﺎ ﺧﻠﻘﺎ ﺭﺿﻲ ﻣﻨﻬﺎ ﺁﺧﺮ» . ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ
ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவை அளிக்கக் கூடும். ( முஸ்லிம்)


குழந்தைகளின் மீது பாசம்:-
***************************
       மதீனாவின் சிறுமியகள் பெருமானாரின் கரத்தை பற்றிக் கொண்டு தாங்கள் விரும்பும் இடத்திற்கு  அழைத்துச் செல்வார்கள்  (புகாரி)

6197-  عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الأُولَى ثُمَّ خَرَجَ إِلَى أَهْلِهِ وَخَرَجْتُ مَعَهُ فَاسْتَقْبَلَهُ وِلْدَانٌ فَجَعَلَ يَمْسَحُ خَدَّيْ أَحَدِهِمْ وَاحِدًا وَاحِدًا- قَالَ- وَأَمَّا أَنَا فَمَسَحَ خَدِّي- قَالَ- فَوَجَدْتُ لِيَدِهِ بَرْدًا أَوْ رِيحًا كَأَنَّمَا أَخْرَجَهَا مِنْ جُؤْنَةِ عَطَّارٍ.

4652. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்  முதல்தொழுகை (லுஹ்ர்) தொழுதேன். பிறகு அவர்கள் தம் வீட்டாரிடம் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது அவர்களுக்கு எதிரே சிறுவர்கள் சிலர் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவர்களின் கன்னங்களை ஒவ்வொருவராகத் தடவினார்கள். என் கன்னங்களிலும் தடவினார்கள். அவர்களது கரத்திலிருந்து குளிர்ச்சியைஅல்லது நறுமணத்தைநான் உணர்ந்தேன். அவர்கள் தமது கையை நறுமணப் பையிலிருந்து அப்போதுதான் எடுத்ததைப் போன்றிருந்தது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 43. நபிமார்களின் சிறப்புகள்

வேலைக்காரர்கள் மீது அன்பு
*********************************
அடிமைகளிடம் பேசுவதையே  கண்ணியக்குறைவாக நினைத்து வந்த காலத்தில் நபி ஸல் அவர்கள் அவர்களுடன் வீதியானாலும் நின்று பேசி அவர்களின்  இதயத்தை நெகிழ வைப்பார்கள்.

«6038» حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ سَمِعَ سَلاَّمَ بْنَ مِسْكِينٍ قَالَ: سَمِعْتُ ثَابِتًا يَقُولُ: حَدَّثَنَا أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَدَمْتُ النَّبيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ، فَمَا قَالَ لِي أُفٍّ. وَلاَ لِمَ صَنَعْتَ وَلاَ أَلاَّ صَنَعْتَ.

6038. அனஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ச்சீஎன்றோ “(இதை) ஏன் செய்தாய்என்றோ நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?“ எனறோ கூறியதில்லை.( புகாரி)

٦٣- عَنْ عَبْدِاللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: جَاءَ رَجُلٌ اِلَي النَّبِيِّ فَقَالَ: يَارَسُوْلَ اللهِ كَمْ اَعْفُوْ عَنِ الْخَادِمِ؟ فَصَمَتَ عَنْهُ النَّبِيُّ ثُمَّ قَالَ: يَارَسُوْلَ اللهَ كَمْ اَعْفُوَ عَنِ الْخَادِمِ؟ قَالَ: كُلَّ يَوْمٍ سَبْعِيْنَ مَرَّةً.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في العفو عن الخادم رقم:١٩٤٩

63.ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, யாரஸூலல்லாஹ், நான் (என்னுடைய) பணியாளரின் தவறை எத்தனை தடவை மன்னிப்பது?'' என வினவினார், நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். அவர் மீண்டும் அவ்வாறே, யாரஸூலல்லாஹ், நான் (எனது) பணியாளரின் தவறை எத்தனை முறை மன்னிப்பது?'' எனக் கேட்க, தினமும் எழுபது முறை'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மதீ)

2987 -[7] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺃﻋﻄﻮا اﻷﺟﻴﺮ ﺃﺟﺮﻩ ﻗﺒﻞ ﺃﻥ ﻳﺠﻒ ﻋﺮﻗﻪ» . ﺭﻭاﻩ اﺑﻦ ﻣﺎﺟﻪ
கூலியாளின் வியர்வை உலருவதற்குமுன் அவருடைய கூலியைக் கொடுத்து விடுங்கள் என ரசூல் ( ஸல்) கூறினார்கள்.

முதலாலி தொழிலாலியின் சம்பலத்தை வேலை முடிந்தவுடன் கொடுத்து விடவேண்டும். தினக்கூலி/ வாரச்சம்பலம்/ மாதச்சம்பலம் ஆக எதுவானாலும் சரி.
மேலும் தொழிலாலியும் உண்மையாக நேர்மையாக உழைக்க வேண்டும்.
சக்திக்கு மிஞ்சிய வேலையை கொடுக்கக் கூடாது
அவ்வாறு தேவைப்பட்டால் ஆட்களை அதிகப்படுத்த வேண்டும் தேவைப்பட்டால் முதலாலியும் ஒத்துழைக்க வேண்டும்.

ஏன் மற்ற உயிரினங்கள் மீதுகூட கருணை
«5068» حدثني زهير بن حرب حدثنا جرير عن سهيل عن أبيه عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إذا سافرتم في الخصب فأعطوا الإبل حظها من الأرض وإذا سافرتم في السنة فأسرعوا عليها السير وإذا عرستم بالليل فاجتنبوا الطريق فإنها مأوى الهوام بالليل)).
3891. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால் (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்துவிடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் செய்தால் ஒட்டகங்களைத் துரிதமாகச் செலுத்துங்கள். நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால் (போக்குவரத்துச்) சாலையைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் அது இரவில் விஷஜந்துகள் உலவும் இடமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அழகிய முன்மாதிரி :சிறந்த வியாபாரி
************************************
கலப்படம் / மோசடி/ ஏமாற்று  செய்யாதே .
صحيح مسلم  147عن أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي
َ
ஸஹிஹ் முஸ்லிம் 102:
நபி(ஸல்)அவர்கள் உணவு தானியம் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை கடந்து சென்றார்கள். தங்களின் கரத்தை தானியக்குவியலுக்குல் நுலைத்தார்கள் உள்ளே ஈரப்பதம் தென்பட்டது .இது என்ன ஈரம் எனக்கேட்டபொழுது. யாரசூலல்லாஹ் மழை பொழிந்து நனைந்து விட்டது என்றார். அதை மக்கள் பார்த்து வாங்குவதற்காக மேலே வைக்க வேண்டாமாஎவர் மோசடி செய்கிறாரோ அவர்நம்மைச் சார்ந்தவரல்ல என்றார்கள்

٦٤- عَنْ حُذَيْفَةَ ؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ يَقُوْلُ: اِنَّ رَجُلاً كَانَ فِيْمَنْ كَانَ قَبْلَكُمْ اَتَاهُ الْمَلَكُ لِيَقْبِضَ رُوْحَهُ فَقِيْلَ لَهُ: هَلْ عَمِلْتَ مِنْ خَيْرٍ؟ قَالَ: مَااَعْلَمُ، قِيْلَ لَهُ: اُنْظُرْ، قَالَ: مَااَعْلَمُ شَيْئًا غَيْرَ اَنِّيْ كُنْتُ اُبَايِعُ النَّاسَ فِي الدُّنْيَا وَاُجَازِيْهِمْ فَاُنْظِرُ الْمُوْسِرَ وَاَتَجَاوَزُ عَنِ الْمُعْسِرِ،فَاَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ.

رواه البخاري باب ماذكر عن بني اسرائيل رقم:٣٤٥١

64.உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவருடைய உயிரைக் கைப்பற்ற (மலக்கு) வானவர் வந்தார். அப்பொழுது அவரிடம், நீர் உலகில் ஏதேனும் நற்செயல் செய்தீரா?'' எனக் கேட்கப் பட்டது, எனக்குத் தெரிந்த வரை (அப்படி) எந்தச் செயலும் இல்லை'' என்றார். உன் வாழ்நாளைப் பற்றிச் சிந்தித்துப்பார்'', என்று அவரிடம் சொல்லப்பட்டது, அவர் மீண்டும் எனக்குத் தெரிந்தவரை (அப்படி) எந்த அமலும் இல்லை, ஆயினும் ஓர் அமல் உண்டு. நான் உலகில் மக்களுடன் கொடுக்கல், வாங்கல் வியாபாரம் செய்யும் பொழுது, அதில் செல்வந்தர்களுக்கு அவகாசம் தருவேன், ஏழை எளியோரை மன்னித்து விடுவேன்'' என்றார். அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவரைச் சொர்க்கத்தில் நுழைய வைத்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.( புகாரி)

அழகிய முன்மாதிரி :சிறந்த அரசியல் தலைவர்
*****************************************
டிராபிக் தடை / அணி வகுப்பு /  ஓரம் போ ஓரம் போ கோசம் / சொகுசு வாகனம்  எதுவும் இல்லை
سنن النسائي - 3011 -  عَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمِي جَمْرَةَ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ عَلَى نَاقَةٍ لَهُ صَهْبَاءَ لَا ضَرْبَ وَلَا طَرْدَ وَلَا إِلَيْكَ إِلَيْك
நபி(ஸல்)அவர்கள் துல்ஹஜ் பிறை பத்தாம் நாளன்று தங்களின் ஒட்டகத்தின் மீது அமர்ந்த நிலையில் பெரிய ஜம்ராவுக்கு கல்எறிந்தார்கள் . (மக்களோடு மக்களாக சென்றார்களே தவிர)எந்தவித தள்ளு முள்ளோ ஒதிக்கிவிடுதலோ கிடையாது .

அழகிய முன்மாதிரி : எளிமையையும் தூய்மையையும் விரும்பிய தலைவர்
****************************

عن عائشة رضي الله عنها قالت كان فراش رسول الله صلي الله عليه وسلم من ادم وحشوه من ليف
6456. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்

أبو داود 3630 عن أبي أُمامةَ بنِ ثعلبةَ الأنصاريِّ قال: ذَكَرَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلّى الله عليه وسلّم يَوْمًا عِنْدَهُ الدُّنْيَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلّم: أَلَا تَسْمَعُونَ ؟ أَلَا تَسْمَعُونَ ؟إِنَّ الْبَذَاذَةَ مِنْ الْإِيمَانِ، إِنَّ الْبَذَاذَةَ مِنْ الْإِيمَانِ
(ஆடம்பரமின்றி) எளிய நிலையில் வாழ்வது இறை நம்பிக்கையாளனுக்குரிய தன்மைகளுள் ஒன்று.
ஓர் முஸ்லிமுக்கு மறுமை வாழ்வை நன்றாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் சிந்தனையே மேலோங்கி இருக்கவேண்டும்.உலக வாழ்வின் ஆடம்பரங்கள் இருக்கக்கூடாது
அதற்காக அழுக்காகவும் தலைவிரி கோலமாகவும் இருக்கும்படி கூறவில்லை

مسند أحمد 14321 - عَنْ جَابِرٍ قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرًا فِي مَنْزِلِنَا فَرَأَى رَجُلًا شَعِثًا فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ رَأْسَهُ وَرَأَى رَجُلًا عَلَيْهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يَغْسِلُ بِهِ ثِيَابَهُ
தலைவிரி கோலமாகவும் அழுக்கான ஆடை அணிந்தவராகவும் ஒரு சஹாபியை கண்டு இவரிடம் தலைவாரிக்கொள்வதற்கு சீப்பும் ஆடைகளை சுத்தம் செய்ய சோப்பும் இல்லையா? என கடிந்து கொண்டார்கள்

அழகிய முன்மாதிரி : மக்கள் சொத்தை பினாமியாக குவிக்கும் தலைவர்களை நாம் அறிவோம். இதோ தன் சொந்த சொத்தையும் மக்களுக்காக கொடுக்கும் வள்ளல் நபி( ஸல்)  அவர்களை பாருங்க .
***********************
صحيح البخاري  3730 -  عَنْ عَائِشَةَ أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلَام وَالْعَبَّاسَ أَتَيَا أَبَا بَكْرٍ يَلْتَمِسَانِ مِيرَاثَهُمَا أَرْضَهُ مِنْ فَدَكٍ وَسَهْمَهُ مِنْ خَيْبَرَ فَقَالَ أَبُو بَكْرٍ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ فِي هَذَا الْمَالِ وَاللَّهِ لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ إِلَيَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي
புகாரி 4035 :அப்பாஸ்(ரலி) பாத்திமா(ரலி) இருவரும் அபூபக்கர்(ரலி)இடம் வந்து நபி(ஸல்)அவர்களின் சொத்துக்களில் தங்களின் பாகத்தைக் கேட்டபொழுது அபூபக்கர் (ரலி) அவர்கள் இவ்வாரு பதில் கூறினார்கள் என்னுடைய சொந்தங்களை விடவும் நான் நபிகளாரின் சொந்தங்களையும் அவர்களின் குடும்பங்களையும் அதிகம் நேசிக்கிறேன்.
“” ஆனால் அதே நேரத்தில் நபியவர்கள் என்னுடைய சொத்துக்களுக்கு யாரும் வாரிசாக முடியாது . (பொதுமக்களுக்கு)அது தானா-தர்மம் ஆகும் “” என்று நபி (ஸல்)அவர்கள் கூறியதையும் கேட்டுள்ளேன் (எனவே பங்கு தரமுடியாது) என மறுத்து விட்டாகள் அபூ பக்கர் சித்தீக் (ரலி)அவர்கள்
அண்ணலாரை முன்மாதிரியாக வைத்து அவர்களின் மீது பிரியம் கொண்டு அவர்களின் வழிமுறையை பின்பற்றி நடப்பவர்கள் நாளை மறுமையில் அவர்களோடு இருக்கும் பாக்கியம் கிடைக்கும்.
من تفسير ابن كثير : عن عائشة، قالت: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم، فقال: يا رسول الله إنك لأحبُّ إليَّ من نفسي وأهلي وولدي، وإني لأكون في البيت فأذكرك فما أصبر حتى آتيك فأنظر إليك، وإذا ذكرتُ موتي وموتك عرفت أنك إذا دخلتَ الجنة رُفِعتَ مع النبيين، وأني إذا دخلت الجنة خشيت أن لا أراك. فلم يرد رسول الله صلى الله عليه وسلم شيئاً، حتى نزل جبريل عليه السلام بهذه الآية: .
وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا(النساء69) تفسير ابن كثير
ஸஹாபி யொருவர் ரஸூலுல்லாஹி(ஸல்)அவர்களின் சமூகத்தில் வந்து யா ரஸூலல்லாஹ்! என் உயிர்/என் மனைவிய / என் பிள்ளைகள் எல்லோரையும் விட அதிகமாக தங்களை நேசிக்கிறேன்
எனது வீட்டில் இருக்கும் பொழுது தங்களின் ஞாபகம் வந்தால் தங்களிடம் வந்து தங்களைக் காணாதவரை எனக்குப் பொறுமை இருப்பதில்லை.
ஆனால் இவ்வுலகை விட்டுத் தாங்களும் பிரிந்து விடுவீர்கள்.நானும் பிரிந்து விடுவேன். அதன்பின் தாங்களோ நபிமார்களுக்குரிய பதவியில் சென்று விடுவீர்கள்.((நான் சுவனம் செல்வேனா? செல்லமாட்டேனா?என்பதே எனக்குத் தெரியாது) நான் சொர்க்கத்தில் நுழைந்து விட்டாலும்( எனது இருப்பிடம் தங்களின் இருப்பிடத்தைக் காட்டிலும் மிகவும் தாழ்ந்திருக்கும் ஆகவே) தங்களைஅங்குத் தரிசிக்க முடியாமல் போய் விடுமோ என்று அஞ்சுகிறேன் .அந்நேரம் நான் எப்படி பொறுமை கொள்வேன்? என்பதாக கூறினார்.அவரது பேச்சைக் கேட்ட நபி(ஸல்)அவர்கள்அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. சிறிது நேரத்திற்குள் கீழ்கானும் இறைவசனம் இறங்கியது
وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.

(அல்குர்ஆன் : 4:69

புதன், 23 நவம்பர், 2016

மக்கள் நலன் காக்கும் நல்லாட்சி எது?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
மக்கள் நலன் காக்கும் நல்லாட்சி எது?
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ -   النساء: 58
عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَبَّ النَّاسِ إِلَى اللَّهِ يَوْمَ القِيَامَةِ وَأَدْنَاهُمْ مِنْهُ مَجْلِسًا إِمَامٌ عَادِلٌ، وَأَبْغَضَ النَّاسِ إِلَى اللَّهِ وَأَبْعَدَهُمْ مِنْهُ مَجْلِسًا إِمَامٌ جَائِرٌ»- سنن الترمذي
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்பதால் வீட்டுப்பொறுப்பாளர்களான குடும்பத்தலைவர்கள் முதல் நாட்டுப்பொறுப்பாளர்களான அரசுத்தலைவர்கள் வரை அனைவருக்குமான வழிகாட்டல் இஸ்லாத்தில் உண்டு.
அந்த வழி காட்டலின் படி நடப்பவர் யாராக இருந்தாலும் மக்கள் நலன் காக்கும் ஆட்சியாளராக திகழ்வர்;  தவறும்போது மக்கள் விரோத ஆட்சியாளராகி விடுவர்.
1-    பொறுப்பு என்பது ஒரு அமானிதம் என்பதை அடிப்படையில் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَلَا تَسْتَعْمِلُنِي؟ قَالَ: فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي، ثُمَّ قَالَ: «يَا أَبَا ذَرٍّ، إِنَّكَ ضَعِيفٌ، وَإِنَّهَا أَمَانَةُ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلَّا مَنْ أَخَذَهَا بِحَقِّهَا، وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا»-صحيح مسلم
3729. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, "அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் பொருளாகும்.[அமானிதம்] அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்" என்று கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம்.
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ -   النساء: 58

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்- குர்ஆன் 4:58. 
2-    நம்முடைய பொறுப்பு பற்றியும் விசாரணை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلَا فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ» ،صحيح مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 3733. 
3-    ஆட்சி பொறுப்பிலிருப்பவர்களுக்கு நபிகளாரின் எச்சரிக்கை
عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَبَّ النَّاسِ إِلَى اللَّهِ يَوْمَ القِيَامَةِ وَأَدْنَاهُمْ مِنْهُ مَجْلِسًا إِمَامٌ عَادِلٌ، وَأَبْغَضَ النَّاسِ إِلَى اللَّهِ وَأَبْعَدَهُمْ مِنْهُ مَجْلِسًا إِمَامٌ جَائِرٌ»- سنن الترمذي
மறுமை நாளன்று மக்களில் அல்லாஹ்விடம் அதிக பிரியத்திற்கும் நெருக்கத்திற்கும் உரியவர் நேர்மையான தலைவராவார். மறுமை நாளன்று மக்களில் அல்லாஹ்விடம் அதிக கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவர் அநியாயக்கார தலைவராவார்.என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஸயீத் [ரலி]

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَفْضَلُ عِبَادِ اللَّهِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ إِمَامٌ عَادِلٌ رَفِيقٌ، وَإِنَّ شَرَّ عِبَادِ اللَّهِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ إِمَامٌ جَائِرٌ خَرِقٌ»-معجم ابن الأعرابي
அல்லாஹ்விடம் அவனுடைய அடியார்களில் மறுமையில் சிறந்தவர், மென்மை சுபாவமுள்ள, நேர்மையான தலைவராவார். அல்லாஹ்விடம்  அவனுடைய அடியார்களில் மறுமையில் மோசமானவர், கடின சுபாவமுள்ள, அநியாயக்கார தலைவர். என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உமர்  [ரலி]

7150 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنِ الحَسَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ، عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلَّا لَمْ يَجِدْ رَائِحَةَ الجَنَّةِ»-صحيح البخاري 4
7150. ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(
நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்' எனக் கூறினார்கள்.

4-    மக்கள் நலனுக்காக ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டாலும் மக்களை அது சிரமப்படுத்தாமலும் வெறுப்படையச் செய்யாமலும் இருக்கவேண்டும்
3038 - حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعَثَ مُعَاذًا وَأَبَا مُوسَى إِلَى اليَمَنِ قَالَ: «يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا وَلاَ تَخْتَلِفَا» - صحيح البخاري
3038. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள், முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், 'நீங்கள் இலேசானதையே மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்: வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபட்டு) பிணங்காதீர்கள்' என்று (அறிவுரை) கூறினார்கள். ஸஹீஹுல் புஹாரி
5- ஆட்சி பொறுப்பிலிருப்பவர் மென்மை சுபாவமும் இரக்க குணமும் உள்ளவாராக இருக்க வேண்டும்.
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ، قَالَ: أَتَيْتُ عَائِشَةَ أَسْأَلُهَا عَنْ شَيْءٍ، فَقَالَتْ: مِمَّنْ أَنْتَ؟ فَقُلْتُ: رَجُلٌ مِنْ أَهْلِ مِصْرَ، فَقَالَتْ: كَيْفَ كَانَ صَاحِبُكُمْ لَكُمْ فِي غَزَاتِكُمْ هَذِهِ؟ فَقَالَ: مَا نَقَمْنَا مِنْهُ شَيْئًا، إِنْ كَانَ لَيَمُوتُ لِلرَّجُلِ مِنَّا الْبَعِيرُ فَيُعْطِيهِ الْبَعِيرَ، وَالْعَبْدُ فَيُعْطِيهِ الْعَبْدَ، وَيَحْتَاجُ إِلَى النَّفَقَةِ، فَيُعْطِيهِ النَّفَقَةَ، فَقَالَتْ: أَمَا إِنَّهُ لَا يَمْنَعُنِي الَّذِي فَعَلَ فِي مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ أَخِي أَنْ أُخْبِرَكَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ فِي بَيْتِي هَذَا: «اللهُمَّ، مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ، فَاشْقُقْ عَلَيْهِ، وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَرَفَقَ بِهِمْ، فَارْفُقْ بِهِ» ،صحيح مسلم

3732. அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சில விஷயங்களைப் பற்றிக் கேட்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்று கேட்டார்கள். நான், "எகிப்தியரில் ஒருவன்" என்று பதிலளித்தேன். அவர்கள், "உங்கள் ஆட்சியாளர் இந்தப் போரில் உங்களிடம் எப்படி நடந்துகொண்டார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு நான், "வெறுக்கத்தக்க அம்சங்கள் எதையும் நாங்கள் அவரிடம் காணவில்லை. எங்களில் ஒருவரது ஒட்டகம் செத்துவிட்டால், அவருக்கு அவர் ஒட்டகம் வழங்கினார். அடிமை இறந்துவிட்டால், அவருக்கு அடிமை தந்தார். செலவுக்குப் பணம் தேவைப்பட்டால் பணம் தந்தார்" என்று விடையளித்தேன்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் என் சகோதரர் முஹம்மத் பின் அபீபக்ர் விஷயத்தில் நடந்துகொண்ட விதம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியைக் கூறவிடாமல் என்னைத் தடுக்காது" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, "இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். ஸஹீஹ் முஸ்லிம்
5-    துவேஷப்பேச்சை தடுக்கும் பொறுப்பு ஆட்சியாளருக்கு உண்டு
2957 - وَبِهَذَا الإِسْنَادِ: «مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ، وَمَنْ يُطِعِ الأَمِيرَ فَقَدْ أَطَاعَنِي، وَمَنْ يَعْصِ الأَمِيرَ فَقَدْ عَصَانِي، وَإِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ، فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللَّهِ وَعَدَلَ، فَإِنَّ لَهُ بِذَلِكَ أَجْرًا وَإِنْ قَالَ بِغَيْرِهِ فَإِنَّ عَلَيْهِ مِنْهُ» - صحيح البخاري

2957. 'எனக்குக் கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராவார். எனக்கு மாறு செய்கிறவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். தலைவருக்குக் கட்டுப்பட்டவர் எனக்குக் கட்டுப்பட்டவராவார். தலைவருக்கு மாறு செய்கிறவர் எனக்கு மாறு செய்தவராவார். தலைவர் ஒரு கேடயம். அவருக்குக் கீழிருந்து போரிடப்படும்; அவர் மூலம் பாதுகாப்பு பெறப்படும். அவர் (தன் தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறை(யச்ச) உணர்வைக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்தால் அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதுவல்லாத(தீய)வற்றை அவர் கட்டளையிட்டால், அதனால் ஏற்படும் பாவம் அவரின் மீது(ம்) சாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'  ஸஹீஹுல் புஹாரி

6-    புதிய சட்டம் கொண்டு வருவதில் உள்ள பாதகங்கள், தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் உடனே அதை ஒப்புக்கொண்டு திருத்தும் பக்குவம் இருக்க வேண்டும்.
திருமணத்தின்போது பெண்ணுக்கு கொடுக்கப்படும் மஹர் தொகையில் உச்ச வரம்பு விதித்து சட்டம் இயற்றிய உமர் [ரலி] அவர்கள்,  ஒரு பெண்ணின் சுட்டிக்காட்டலுக்கு இசைந்து தன் அறிவிப்பை திரும்பப்பெற்ற வரலாறு....
رَوَى أَبُو يَعْلَى فِي مُسْنَدِهِ الْكَبِيِرِ أَنَّهُ لَمَّا نَهَى عَنْ إِكْثَارِ الْمَهْرِ بِالْوَجْهِ الْمَذْكُورِ اعْتَرَضَتْهُ امْرَأَةٌ مِنْ قُرَيْشٍ فَقَالَتْ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ نَهَيْتَ النَّاسَ أَنْ يَزِيدُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ عَلَى أَرْبَعِمِائَةِ دِرْهَمٍ قَالَ نَعَمْ فَقَالَتْ أَمَا سَمِعْتَ مَا أَنْزَلَ اللَّهُ فِي الْقُرْآنِ قَالَ وَأَيُّ ذَلِكَ فَقَالَتْ أَمَا سَمِعْتَ اللَّهَ يَقُولُ {وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا} [النساء: 20] قَالَ فَقَالَ اللَّهُمَّ غَفْرًا كُلُّ النَّاسِ أَفْقَهُ مِنْ عُمَرَ ثُمَّ رَجَعَ فَرَكِبَ الْمِنْبَرَ فَقَالَ إِنِّي نَهَيْتُ أَنْ تَزِيدُوا فِي الْمَهْرِ عَلَى أَرْبَعِمِائَةِ دِرْهَمٍ فَمَنْ شَاءَ أَنْ يُعْطِيَ مِنْ مَالِهِ مَا أَحَبَّ أَوْ فَمَنْ طَابَتْ نَفْسُهُ فَلْيَفْعَلْ وَسَنَدُهُ جَيِّدٌ - حاشية السندي على سنن ابن ماجه

     உமர் [ரலி] அவர்கள், 400 திர்ஹங்களைவிட மஹ்ரை அதிகம் தரக்கூடாது என்று மஹருக்கு உச்ச வரம்பு ஒன்றை விதித்தார்கள். அப்போது குறைஷி குலத்துப்பெண் ஒருவர், அமீருல் முஃமினீன் அவர்களே! 400 திர்ஹங்களைவிட மஹ்ரை அதிகம் தரக்கூடாது என்று மக்களைத் தடுத்துள்ளீர்களா?” என்று ஆட்சேபித்தார்கள். அதற்கு உமர் [ரலி] அவர்கள் ஆம் என்றார்கள். அப்போது அந்தப்பெண், குர்ஆனில் அல்லாஹ் இறக்கியதை செவியுறவில்லையா?” என்றார்கள். அதற்கு உமர் [ரலி] அவர்கள் அது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், ஒரு பொருட்குவியலையே [மஹராக] கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா? (அல்குர்ஆன் 4:20) என்று அல்லாஹ் கூற கேட்டதில்லையா?” என்றார்கள். உடனே உமர் [ரலி] அவர்கள் இறைவா! என்னை மன்னித்திடு!! உமரை விட அனைவரும் விளக்கமுள்ளவர்களாகத்தான் இருக்கிறாரகள் என்று கூறியவர்களாக திரும்பிச்சென்று மிம்பரில் ஏறி 400 திர்ஹங்களைவிட மஹ்ரை அதிகம் தரக்கூடாது என்று நான் உங்களைத் தடுத்தேன்; யார் எவ்வளவு விரும்புகிறாரோ அவ்வளவையும் மஹராக கொடுக்கலாம். [தவறில்லை. தடையில்லை] என்று மறு அறிவிப்புச் செய்தார்கள்.

7-    நிலம் கையகப்படுத்துவதிலும் பக்குவமான அணுகுமுறை வேண்டும்
ஹிஜ்ரி 17 –ஆம் ஆண்டு, உமர் (ரலி)ஆட்சிப்பொறுப்பிற்கு வந்து நான்காண்டுகள் உருண்டோடி விட்டது.
மெல்ல, மெல்ல இஸ்லாம் அருகே இருக்கும் நாடுகளுக்குபரவிக்கொண்டிருந்த இனிமையான தருணம் அது. மஸ்ஜிதுன் நபவீ உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்களின் கூட்ட நெரிசலால்சிக்கித் தவித்துக்கொண்டிருப்பதைஉணர்ந்த உமர் (ரலி) அவர்கள் பள்ளியை விஸ்தரிக்க நாடி அதற்காக, பள்ளியைச் சுற்றி இருக்கிறநபித்தோழர்களின் வீட்டை இடித்து, அந்த இடத்தையும்சேர்த்து கட்டினால் தான் பள்ளியை விரிவாக்கம்செய்ய முடியும் என்ற நிலையையும்உணர்ந்தார்கள்.பள்ளியைச் சுற்றிலும் உஸாமா (ரலி),
ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அப்துல்லாஹ்இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி),அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஸஅத் இப்னுஅபீ வக்காஸ் (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னுஅவ்ஃப் (ரலி), மற்றும் அப்துல்லாஹ் இப்னுஅப்பாஸ் (ரலி), அப்துர்ர்ஹ்மான் இப்னு அபூபக்ர்(ரலி), முஹம்மத் இப்னு அபூபக்ர் (ரலி),முஃமின்களின் அன்னையர் நபி {ஸல்} அவர்களின் தூயமனைவியர் ஆகியோரின் வீடுகள் இருந்தன.
உமர் (ரலி) அவர்கள், முஃமின்களின்அன்னையர் வீட்டை மட்டும் விட்டு விட்டு மற்றெல்வரின் வீடுகளையும், இடங்களையும்வாங்கிட முடிவெடுத்தார்கள்.வீட்டின் உரிமையாளர்கள் அனைவரையும்
அழைத்து நீங்கள் உங்கள் வீட்டை விலைக்கு கொடுத்தீர்கள் என்றால் அதற்குப்பகரமாக மதீனாவின் இன்னொரு இடத்தில் ஒரு வீட்டையோ, அல்லது அதற்கான கிரயத்தையோ முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம்.அல்லது நீங்கள் விரும்பினால் அரசுக்கு அன்பளிப்பாக தரலாம். அரசும் உங்களை நன்றியுணர்வுடன் நடத்தாட்டும். அல்லது நீங்கள் விரும்பினால் அல்லாஹ்விற்காக தருமமாகத் தந்திடுங்கள். கூலி வழங்குவதற்கு அல்லாஹ்போதுமானவனாக இருக்கின்றான்என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்களும், அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் இரு மகன்களும் தங்களின் வீடுகளையும், நிலங்களையும் அல்லாஹ்விற்காக தர்மம் செய்துவிட்டார்கள்.
மற்ற நபித்தோழர்களில் சிலர் கிரயத்தையும், இன்னும் சிலர் மதீனாவின் பிற பகுதியில் நிலத்தையும் பெற்றுக் கொண்டுஅவர்கள் வசித்த வீட்டையும், நிலத்தையும் அரசிடம்ஒப்படைத்தனர். இந்த நிகழ்வு நடைபெறுகிற போது, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்ஊரில் இல்லை. ஊரில் இருந்து வந்த உடன் உமர் (ரலி)அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து மற்ற வீட்டின் உரிமையாளர்களிடம் பேசியது போன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் பேசினார்கள்.ஆனால், இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களோ மறுத்து விட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் நீர் இடம் தரவில்லையானால் அரசுஉம்முடைய நிலத்தை தம் அதிகாரத்தைக்
கொண்டு கைப்பற்றிக் கொள்ளும்! என்று கூறினார்கள். இருவருக்கும் பேச்சு முற்றவே, வழக்காக நீதிமன்றத்தில் தொடுத்தார்கள் இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் நீதிபதி உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் இருவரின் வாதப் பிரதிவாதங்களையும் கேட்டு விட்டு...உமர் (ரலி) அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்களே!  நபி [ஸல்] அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்....அல்லாஹ் நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் பைத்துல் முகத்தஸ்ஸை கட்ட ஆணை பிறப்பித்தான். முதற்கட்டமாக அதற்கான இடத்தைதெரிவு செய்யும் பணியை மேற்கொண்டவர்கள் தாவூத் ( அலை)அவர்கள் தான் அங்கே இஸ்ரவேலர்களில் ஒருவருக்குச் சொந்தமான ஓர் இடம் இருப்பதைக் கண்டு அதை இறையில்லம் கட்டஇடம் தேவைப்படுவதால் தம்மிடம் விலைக்கு தந்து விடுமாறு விலைபேசினார்கள்.ஆனால், அவரோ தரமுடியாது என்றுமறுத்து விட்டார். அதற்கு தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்... “மனதிற்குள் இப்படிசசொல்லிக்கொண்டார்களாம் நீ தராவிட்டால் என்ன? நான் எடுத்துக்கொள்கிறேன்என்று.உடனடியாக, அல்லாஹ் தாவூத்(அலை) அவர்களிடம் வஹீ மூலம் என்னை வணங்குவதற்காகக் கட்டப்படுகிற ஆலயம் என்பது ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, மோசடி ஆகிய குற்றங்களிலிருந்து நீங்கி பரிசுத்த பூமியாய் இருக்கவேண்டும்என்று அறிவித்தான்.பின்னர், அதற்கான இழப்பீடைக் கொடுத்து அந்த இடத்தை வாங்கி பைத்துல்முகத்தஸின் கட்டுமானப்பணியை துவக்கினார்கள் தாவூத் (அலை) அவர்கள்ஆகவே, உமர் அவர்களே! சற்று நிதானித்து முடிவெடுங்கள்என்றார்கள். இதைக் கேட்டதும், உமர் (ரலி) அவர்கள்இப்னு அப்பாஸ் அவர்களே! உம்முடைய வீடும் வேண்டாம், உம்முடைய நிலமும் வேண்டாம். இரண்டையும் அதிகாரத்தைக் கொண்டுநான் ஒரு போதும் அபகரிக்க மாட்டேன்என்றார்கள். அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்உமர் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) அவர்களே! ஒரு
மனிதனுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கிற உரிமையை அவர் எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் நான் இவ்வாறு செய்தேன். மேலும், உங்களை விட மஸ்ஜிதுன்நபவீயின் விரிவாக்கத்தில் அதிக நாட்டமுடையவன் நான். எனவே, எந்தப் பிரதி பலனையும் நாடாமல் இதோ என் வீட்டையும், நிலத்தையும் உங்களிடம்தருகின்றேன்என்றார்கள்.(நூல் : வஃபாவுல் வஃபா)

நல்லாட்சியின் இலக்கணமாக அமைந்த உமர் [ரலி] அவர்களின் ஆட்சி
عن أسلم أن عمر رضي الله عنه طاف ليلة فإذا هو بامرأة في جوف دار لها وحولها صبيان يبكون وإذا قدر على النار قد ملأتها ماء فدنا عمر من الباب فقال: يا أمة الله! ما بكاء هؤلاء الصبيان؟ قالت: بكاؤهم من الجوع، قال: فما هذه القِدر التي على النار؟ قالت: قد جعلت فيها ماء هو ذا أعللهم به حتى يناموا وأوهمهم أن فيها شيئا دقيقا فبكى عمر ثم جاء إلى دار الصدقة وأخذ غرارة وجعل فيها شيئا من دقيق وشحم وسمن وتمر وثياب ودراهم حتى ملأ الغرارة ثم قال: يا أسلم! اِحْمِل علي، فقلتُ: يا أمير المؤمنين! أنا أحمله عنك؟ فقال لي: لا أم لك يا أسلم! أنا أحمله لأني أنا المسؤول عنهم في الآخرة، فحمله حتى أتى به منزل المرأة، فأخذ القدر فجعل فيها دقيقا وشيئا من شحم وتمر وجعل يحركه بيده وينفخ تحت القدر، فرأيت الدخان يخرج من خلل لحيته حتى طبخ لهم، ثم جعل يغرف بيده ويطعمهم حتى شبعوا! ثم خرج وربض بحذائهم حتى كأنه سبع، وخفت أن أكلمه، فلم يزل كذلك حتى لعب الصبيان وضحكوا، ثم قام فقال: يا أسلم! تدري لم ربضت بحذائهم؟ قلت لا، قال: رأيتهم يبكون فكرهت أن أذهب وأدعهم حتى أراهم يضحكون، فلما ضحكوا طابت نفسي 
(كنز العمال)
         உமர் ரலி அவர்களின் பணியாளர் அஸ்லம் ரஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்....ஒரு நாள் உமர் ரலி அவர்கள் இரவில் மக்களின் நிலையை அறிய ரோந்து வந்தார்கள் அப்போது ஒரு வீட்டு வளாகத்தில் ஒரு பெண் அவளைச் சுற்றி குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணுக்கு முன்னால் தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் இருந்தது கீழே நெருப்பு  மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது.அதைப் பார்த்த உமர் ரலி அவர்கள் விசாரித்த போது அந்த பெண்மணி குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருக்கின்றன அந்தப் பிள்ளைகளுக்கு கொடுக்க உணவு இல்லாததால் நெருப்பை மூட்டி தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தை வைத்திருக்கிறேன் இதைப் பார்த்து நமக்கு ஏதோ  உணவு தயாரிக்கப்படுகிறது என்று எண்ணி குழந்தைகள் தூங்கி விடுவார்கள்....என்று கூறினாள்.இதைக் கேட்ட உமர் ரலி அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. உடனே தனது பணியாளரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து பைத்துல் மாலிலிருந்து கொஞ்சம் மாவு, கொழுப்பு, பேரீத்தம்பழங்கள், நெய், ஆடைகள், சில திர்ஹங்களை ஒரு பையில் போட்டு அதை தன் முதுகில் தூக்கி வைக்கும் படி தனது பணியாளரிடம் கூறினார்கள். அதற்கவர் நானே சுமந்து வருகிறேன் என்றார். ஆனால் உமர் ரலி அவர்கள் என் ஆட்சியில் நடந்த காரியங்களுக்கு நான் தான் மறுமையில் கேள்வி கேட்கப்படுவேன் என்று தானே சுமந்து வந்தார்கள்.பின்பு அந்தப் பாத்திரத்தில் சிறிது மாவு, கொழுப்பு, பேரீத்தம்பழங்களை போட்டு கொதிக்க வைத்து தன் கரத்தாலே சமைத்தார்கள், அடுப்பூதினார்கள் புகை அவர்களின் அடர்ந்த தாடியினூடே வருவதை நான் பார்த்தேன். சிறிது நேரத்தில் பாயாசம் போன்ற ஒரு உணவு தயாரானது அதை தன் கரத்தாலே அந்தப் பெண்மணிக்கும் குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள் அவர்கள் வயிறு நிறைந்த பிறகு அந்த பிள்ளைகளோடு விளையாடினார்கள். அந்தப் பிள்ளைகள் சிரிப்பதை பார்த்து விட்டு வந்து நான் ஏன் அந்த பிள்ளைகளோடு விளையாடினேன் தெறியுமா? அந்தப் பிள்ளைகள் அழுவதை பார்த்த நான் சிரிப்பதையும் பார்த்து என் உள்ளம் சாந்தியடைய ஆசைப்பட்டேன் என்றார்கள்.
இறைவனை விசுவாசங்கொண்டு அவனை அஞ்சி வாழும் ஒருவருடைய ஆட்சியோ அல்லது அத்தகையோரின் ஆட்சி முறையை முன்மாதிரியாக கொண்டவரின் ஆட்சியோ நடக்காவிட்டால் மக்கள் நலன் பேணும் நல்லாட்சியாக அது இருக்க வாய்ப்பில்லை.