அறிவுப்
பூர்வமான மார்க்கம் இஸ்லாம்.
**************************************
قول الله عز وجل : ان الدين
عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب
الا من بعد ما جاءهم العلم بغيا بينهم.
قول النبي صلى الله عليه
وسلم : كل مولود يولد علي الفطرة فابواه يهودانه
اوينصرانه او يمجسانه (متفق عليه
இறைவனால் பொருந்திக் கொள்ளப் பட்ட மார்க்கமாகவும், அறிவுப்
பூர்வமான மார்க்கமாகவும் இஸ்லாம் திகழ்கிறது.
இங்கு மனித
இனத்திற்கு நன்மை பயக்கும் அனைத்தும் வரவேற்கப் படுகிறது. மனித குலத்திற்கு தீங்கு
விளைவிக்கும் அனைத்தும் தடை செய்யப் பட்டுள்ளது.
மனித குலத்திற்கு
நன்மை பயக்கும் காரியங்களில் தனி மனிதனின் உடல் மற்றும் ஆன்மாவிற்கு நன்மை பயக்கும்
தொழுகை' நோன்பு
போன்ற வணக்கங்கள். பொது
சமூகத்திற்கு
நன்மை பயக்கும் காரியங்களில் ஜகாத் போன்றவைகள் இஸ்லாத்தில் கடமை என்று வலியுறுத்தி
கூறப்பட்டுள்ளது.
இவையல்லாமல்
தான தர்மங்கள்,
உறவைப்
பேணுவது, சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது,அனாதைகளை
அரவணைப்பது,
நோயாளிகளுக்கு
சிகிச்சை செய்வது, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இன்னும் பல
விஷயங்கள் கடமைக்கு நெருக்கமான அந்தஸ்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல தனி
மனித ஒழுக்கத்தை கெடுக்கும் பாவங்களில் தொடங்கி சமூகத்தை சீரழிக்கும் காரியங்கள் வரை
அனைத்தையும் பெரும் பாவங்கள் என இஸ்லாம் எச்சரிக்கிறது.
٣٨ - عن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله
عليه وسلم - قال: ((اجتنبوا السبع الموبقات))، قالوا: يا رسول الله، وما هن؟ قال:
((الشرك بالله، والسحر، وقتل النفس التي حرم الله إلا بالحق، وأكل الربا، وأكل مال
اليتيم، والتولي يوم الزحف، وقذف المحصنات المؤمنات الغافلات))؛ متفق عليه.
145. அபூஹுரைரா
(ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் ”பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங் களைத்
தவிர்த்திடுவீர்!” என்று கூறினார்கள். அப்போது ”அல்லாஹ்வின்
தூதரே! அவை எவை?”
என்று
கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”அல்லாஹ்வுக்கு
இணை கற்பிப்பது,
சூனியம்
செய்வது, (சட்டபூர்வமான)
உரிமையின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ள உயிரைக் கொல்வது, அநாதைகளின்
செல்வத்தை உண்பது, வட்டியை உண்பது, போரின்போது
புறமுதுகிட்டு ஓடுவது, அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்கள்மீது
அவதூறு கூறுவது ஆகியவைதாம் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று
பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் : 1.
இறைநம்பிக்கை.
மதுவை
சுமார் 1400 ஆண்டுகளுக்கு
முன்பே அதன் தீமையை உணர்த்தி இஸ்லாம் தடை செய்தது.
*************************
நபிகள் நாயகம்
ஸல் அவர்கள் கூறினார்கள்.
- وعن حذيفة - رضي الله عنه
- قال : سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول في خطبته " الخمر جماع الإثم
والنساء حبائل الشيطان ، وحب الدنيا رأس كل خطيئة "
மது அருந்துவது
பாவங்களின் (ஒட்டு மொத்த காரணி) சாரம்சமாகும், பெண்கள் ஷைத்தானின் தந்திரக் கயிறுகளாகும், உலக
ஆசை அனைத்து பாவகாரியங்களுக்கும் தலையாயதாகும். (நூல்: ரஜீன்)
இஸ்லாம் அறிவுப்
பூர்வமான மார்க்கம் என்பதால் தான் அறிவைக் கெடுக்கும் மதுவை தடை செய்தது.
அதே போல அறியாமையால்
நடக்கும் தீமைகளையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
அறிவில்லாதவர்களும், நேர்வழி பெறாதவர்களும் பின்பற்ற தகுதியில்லாதவர்கள்
என இறைமறை கூறுகிறது.
أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ
لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ
மேலும், "அல்லாஹ்
இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள்
"அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த
வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன!
அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும்
இருந்தால் கூடவா? (அல்குர்ஆன் : 2:170)
அப்படியானால்
விளக்கம் இல்லாமல் அறியாமையில் செய்யப் படும் காரியங்கள் பின்பற்றத் தகுந்ததல்ல என
இஸ்லாம் மூட நம்பிக்கைகளுக்கும், ஆதாரமில்லாத கற்பனைகளுக்கும், முற்றுப்புள்ளி
வைக்கிறது.
மனிதனின் குறுமதியால்
இயற்றப் படும் சட்டங்கள் காலத்திற்கேற்ப மாற்றம் செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் உலகைப்
படைத்து இரட்சித்து வரும் "ரப்புல் ஆலமீன்" இயற்றிய சட்டங்கள் எல்லா காலத்திற்கும்
பொருத்தமானது,
மாற்றத்
தேவையில்லாதது மட்டுமல்ல அறிவுப் பூர்வமானது.
இஸ்லாத்தில் ஆணுக்கு பெண் சமத்துவம் அறிவுப் பூர்வமாக கடைபிடிக்கப்படுகிறது
சமத்துவம் என்ற பெயரில் ஆபாசங்களோ அசிங்கங்களோ இங்கே அனுமதிக்கப் படுவதில்லை...
எனவே பிற சமூகத்தை போல இங்கே பெண்கள் அவமதிப்புக்கும், அடக்குமுறைக்கும்
ஆளாவதில்லை...
மனிதன் தன்
அறிவால் ஆய்ந்து எவ்வளவு முயன்றாலும் அதில் குறை ஏற்படும் இறுதியில் இறைவனின் சட்டம்
தான் தீர்வாக அமையும் இதை பல சூழ்நிலையில் நாம் பார்த்திருக்கிறோம்.
டெல்லியில்
ஒரு பெண் மானபங்கப் படுத்தப் பட்டு கொலையான போது அதிகார வர்க்கத்தினரில் தொடங்கி சாமான்யன் வரை இஸ்லாமிய சட்டத்தை தான் தீர்வாக முன்
மொழிந்தான்.
ஏன் நாம் இப்போது
எதிர் கொண்டிருக்கும் "முத்தலாக்" பிரச்னைக்கு முன்பாக ஓர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இஸ்லாம் ஆகுமாக்கிய தலாக்கை தீர்வாகக் கூறியிருத்தது.
"சாயிரா பானு"
என்ற பெண் வழக்கு தொடுப்பதற்கு முன்பாக ஒரு வழக்கில் 'மனைவி
கணவனை தன் பெற்றோர்களை கவனிக்க விடாமல் தடுத்தால் கணவன் அந்த மனைவியை விவாகரத்து செய்யலாம்' ஏனென்றால்
இந்து சமய சட்டப்படி மகன் பெற்றோரை கவனித்துக் கொள்வது அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த
"சாயிரா பானு" வின் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த அவளுடைய கணவர் முத்தலாக்
வழங்கியதற்கு காரணமாக என் மனைவி என் பெற்றோரை கவனிக்க தடையாக உள்ளார் எனவே அவரை நான்
விவாகரத்து செய்தேன் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இஸ்லாமிய
சட்டம் என்பதால் இங்கே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.
எப்படியாவது
இறைவனின் சட்டத்தை நாடித் தான் வந்தாக வேண்டும். ஏனென்றால் இது அறிவுப் பூர்வமானது,
இஸ்லாத்திற்கு
எதிராக பரப்பப்படும் அவதூறுகள், விமர்சனத்திற்கு முன்னால் இஸ்லாமிய வளர்ச்சி பிரமாண்டமாக
இருக்கிறது என்பதே அது ஆதாரப் பூர்வமான அறிவுப் பூர்வமான மார்க்கம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
இஸ்லாமே
நிலையான மார்க்கமாகும்.
**************************
قال تعالى : ( فأقم وجهك
للدين حنيفا فطرت الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن
أكثر الناس لا يعلمون )
ஆகவே, நீர்
உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக!
எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை
மார்க்கமாகும்;
அல்லாஹ்வின்
படைத்தலில் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர்
(இதை) அறியமாட்டார்கள்.
. وعن أبي هريرة رضي الله عنه
، أن رسول الله صلى الله عليه وسلم قال : " كل مولود يولد على الفطرة فأبواه يهودانه
أو ينصّرانه أو يمجّسانه " متفق عليه .
"இஸ்லாம் என்ற
இயற்கையான மார்க்கத்தை ஏற்கும் இயல்பில் தான் அனைத்து பிள்ளைகளும் பிறக்கிறது அந்தப்
பிள்ளைகளின் பெற்றோர்கள் தான் அவர்களை யூதர்களாக
கிறிஸ்தவர்களாக நெருப்பு வணங்கிகளாக மாற்றுகிறார்கள்" என்று நபிகள் நாயகம் ஸல்
அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி முஸ்லிம் )
இந்த மார்க்கத்தில்
கற்பனைகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் இடமில்லை
மார்க்கத்தில்
பீடை என்று எதிலும் இல்லை அனைத்தும் இறைவனின் படைப்புகள். இங்கு வாஸ்துக்களுக்கு வேலை
இல்லை
இறை நம்பிக்கை
ஒன்றே அனைத்திற்கும் மூலதனம். அவன் நாட்டமின்றி எதுவும் நடப்பதில்லை என்பதில் உறுதியாக
இருப்பவனே நல்ல முஸ்லிமாவான்.
662 - كما قد حدثنا أبو أمية ،
حدثنا محمد بن سابق ، حدثنا إبراهيم بن طهمان ، عن أبي الزبير ، عن جابر قال : قال
رسول الله صلى الله عليه وسلم : « لا غول (1) ولا طيرة (2) ولا شؤم »
அறியாமைக் காலத்தின்
தவறான நம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை
( வெட்ட வெளியில் உள்ள ஷைத்தான்கள் வேதம் ஓதி மக்களை வழிகெடுப்பதாக ), இன்னும்
பறவைகளைக் கொண்டு ஜோசியம் பார்ப்பதும், துற்சகுனம் பார்ப்பதும் இல்லை என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
இந்தக் கருத்தியலைத்
தான் பின்வரும் ஹதீஸூம் விவரிக்கிறது.
في الصحيحين عن عبد الله
بن عمر ـ رضي الله عنهما ـ قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الشؤم
في ثلاثة: في الفرس، والمرأة، والدار.
وقال النووي ـ رحمه الله
تعالى ـ في بيان معناه: اختلف العلماء في معنى هذا الحديث، فقال مالك وطائفة: هو على
ظاهره، وأن الدار قد يجعل الله تعالى سكناها سبباً للضرر، أو الهلاك، وكذا اتخاذ المرأة
المعينة.
وقال الخطابي وكثيرون: هو
بمعنى الاستثناء من الطيرة أي الطيرة منهي عنها إلا أن يكون له دار يكره سكناها، أو
امرأة يكره صحبتها فليفارق الجميع بالبيع ونحوه وطلاق المرأة.
وقال آخرون: شؤم الدار ضيقها
وسوء جيرانها، وشؤم المرأة عدم ولادتها وسلاطة لسانها وتعرضها للريب. اهـ.
وقال الإمام ابن حجر العسقلاني
في فتح الباري: قال عبد الرزاق في مصنفه عن معمر: سمعت من يفسر هذا الحديث يقول: شؤم
المرأة إذا كانت غير ولود، وشؤم الفرس إذا لم يغز عليه، وشؤم الدار جار السوء.
وروى أبو داود في الطب عن
ابن قاسم عن مالك أنه سئل عنه فقال: كم من دار سكنها ناس فهلكوا ـ قال ابن العربي:
لم يرد مالك إضافة الشؤم إلى الدار، وإنما هو عبارة عن جري العادة فيها، فأشار إلى
أنه ينبغي للمرء الخروج عنها صيانة لاعتقاده عن التعلق بالباطل ـ قلت ـ والقائل هو
ابن حجر ـ وما أشار إليه ابن العربي في تأويل كلام مالك أولى وهو نظير الأمر بالفرار
من المجذوم مع صحة نفي العدوى، والمراد بذلك حسم المادة وسد الذريعة، لئلا يوافق شيء
من ذلك القدر، فيعتقد من وقع له أن ذلك من العدوى، أو من الطيرة فيقع في اعتقاد ما
نهي عن اعتقاده فأشير إلى اجتناب مثل ذلك، والطريق فيمن وقع له ذلك في الدار مثلا أن
يبادر إلى التحول منها، لأنه متى استمر فيها ربما حمله ذلك على اعتقاد صحة الطيرة والتشاؤم.
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
"பீடை என்பது
குதிரை (வாகனம் ),மனைவி,வீடு
இந்த மூன்று வஸ்துக்களைத் தவிர வேறு எவற்றிலும் இல்லை என நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
கூற நான் கேட்டுள்ளேன். (நூல் : புகாரி,முஸ்லிம் )
இமாம் நவாவி
ரஹ் கூறுவார்கள் ஹதீஸின் கருத்துப்படி இந்த மூன்றிலும் சில வேளைகளில் அல்லாஹ்வின் நாட்டப்படி
இடையூறு ஏற்படுகிறது.
இமாம் خطابي போன்றவர்கள்
தடை செய்யப்பட்ட சகுனம் என்பது இந்த
மூன்றிலும் இல்லை ( இது அந்த சட்டத்தில் இருந்து நீங்கியது ) என்கிறார்கள்.
இன்னும் சிலர்கள்
வீட்டில் பீடை என்பது குணம் கெட்ட அண்டை வீட்டார் இருப்பது, எனவே வீட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
மனைவியில் பீடை
என்பது குழந்தை பெறும் தகுதியிழப்பு, அதிகம் வாய் பேசுவது, அவளை தலாக் விட்டு விட வேண்டும் என்கிறார்கள்.
வாகனம் பிரயாணிக்கத் தகுதியில்லாமல் இருந்தால் அதை விற்று விட வேண்டும்.
இமாம் இப்னுல்
ஹஜர் அஸ்கலானீ ரஹ் அவர்களும் இந்தக் கருத்தை கொண்டுள்ளார்கள்.
இமாம் மாலிக்
ரஹ் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
كم من دار سكنها ناس فهلكوا ....
"எத்தனையோ வீடுகள்
அதில் வசித்த மனிதர்கள் அழிந்து போயிருக்கிறார்கள்"
இமாம் இப்னுல்
அரபீ (ரஹ்) இதற்கு விளக்கம் கூறுகையில் இமாம் மாலிக் ரஹ் கூறியது இவற்றில் பீடை இருப்பதாக மக்கள் தவறாக கருதுகிறார்கள்.
( எனவே எண்ணம் அவர்களை அழித்து விட்டது ) எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும்
சிலர் இதை இப்னுல் ஹஜர் அஸ்கலானீ ரஹ் அவர்களின் கருத்தாக குறிப்பிடுகிறார்கள்.
ஆனாலும் இது
"سد الذرايع" (தவறான எண்ணம் ஏற்படுவதற்கான வழிகளை அடைப்பது
) என்ற அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த மூன்றிலும் பீடை இருப்பதாக தோன்றினால்
மாற்றிக் கொள்ளுங்கள் என்று அர்த்தமே தவிர. பீடை இந்த மூன்றிலும் இருக்கிறது என்று
சொல்வது நோக்கமல்ல...
மாற்றிக் கொள்ளாமல்
தொடருகிற போது சகுனமும் தொடர்ந்து விடும்.
665 - فما حدثنا علي بن معبد بن
نوح البغدادي ، حدثنا يزيد بن هارون ، حدثنا همام بن يحيى ، عن قتادة ، عن أبي حسان
قال : دخل رجلان من بني عامر على عائشة فأخبراها أن أبا هريرة يحدث عن النبي عليه السلام
أنه قال : « إن الطيرة (1) في المرأة ، والدار ، والفرس » ، فغضبت ، وطارت شقة (2)
منها في السماء وشقة في الأرض فقالت : والذي نزل القرآن على محمد صلى الله عليه وسلم
ما قالها رسول الله صلى الله عليه وسلم قط ، إنما قال : « إن أهل الجاهلية كانوا يتطيرون
من ذلك » والله أعلم
ஹஜ்ரத் அபூஹுரைரா
ரலி அவர்கள் மூன்று காரியங்களில் பீடை இருக்கிறது என்ற ஹதீஸை அறிவித்த போது ஹஜ்ரத்
ஆயிஷா ரலி அவர்கள் கடும் சினம் கொண்டு நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மீது குர்ஆனை இறக்கிய
ரப்பின் மீது ஆணையாக நபி ஸல் அவர்கள் இவ்வாறு சொல்லவில்லை மாறாக இவ்வாறு அறியாமைக்
காலத்தில் மக்கள் தவறாக நம்பி வந்தார்கள் என்று கூறினார்கள்.
நற்சகுனம் பார்ப்பது கூடும்.
****************************
8393 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ
بِشْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، قَالَ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ
الْفَأْلَ الْحَسَنَ، وَيَكْرَهُ الطِّيَرَةَ "
முஸ்னத் அஹ்மத்
என்ற கிதாபில் ஒரு ஹதீஸ் வருகிறது " நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நற்சகுனத்தை விரும்பக்
கூடியவர்களாகவும், இன்னும்
துற்சகுனம் பார்ப்பதை வெறுப்பவர்களாகவும் இருந்தார்கள்.
ஹூதைபிய்யா
உடன் படுக்கையின் போது சுஹைல் இப்னு அம்ர் ரலி அவர்கள் உடன்படிக்கை குறித்து பேச வந்த
போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சுஹைல் ( இலகுவானது
) வந்து விட்டார் உங்கள் காரியம் உங்களுக்கு இலகுவாகி விட்டது என்று நல்ல அர்த்தமுள்ள
பெயரை ஒரு நற்காரியத்தின் துவக்கத்தில் நற்சகுனமாக கருதினார்கள்.
2731قَالَ مَعْمَرٌ: فَأَخْبَرَنِي
أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ أَنَّهُ لَمَّا جَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو، قَالَ النَّبِيُّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ سَهُلَ لَكُمْ مِنْ أَمْرِكُمْ» قَالَ مَعْمَرٌ:
قَالَ الزُّهْرِيُّ فِي حَدِيثِهِ: فَجَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو فَقَالَ: هَاتِ اكْتُبْ
بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابًا فَدَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
الكَاتِبَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ
الرَّحِيمِ»، قَالَ سُهَيْلٌ: أَمَّا الرَّحْمَنُ، فَوَاللَّهِ مَا أَدْرِي مَا هُوَ
وَلَكِنِ اكْتُبْ بِاسْمِكَ اللَّهُمَّ كَمَا كُنْتَ تَكْتُبُ، فَقَالَ المُسْلِمُونَ:
وَاللَّهِ لاَ نَكْتُبُهَا إِلَّا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَقَالَ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اكْتُبْ بِاسْمِكَ اللَّهُمَّ» ثُمَّ
قَالَ: «هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ»، فَقَالَ سُهَيْلٌ:
وَاللَّهِ لَوْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ مَا صَدَدْنَاكَ عَنِ البَيْتِ،
وَلاَ قَاتَلْنَاكَ، وَلَكِنِ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، فَقَالَ النَّبِيُّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ إِنِّي لَرَسُولُ اللَّهِ، وَإِنْ كَذَّبْتُمُونِي،
اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ» -
(صحيح البخاري)
சுஹைல் இப்னு
அம்ர் என்பவர் குறைஷிகளின் தரப்பிலிருந்து வந்தார் அறிவிப்பாளர் இக்ரிமா(ரஹ்) கூறினார்:
சுஹைல் இப்னு அம்ர் வந்தபோது நபி(ஸல்) அவர்கள் “உங்கள் விவகாரம்
சுலபமாகி விட்டது“ என்று (“ஸஹ்ல்--சுலபம்“ என்னும்
பொருள் கொண்ட பெயருடைய ஒருவர் வந்ததை நற்குறியாகக் கருதும் வகையில்) கூறினார்கள். சுஹைல்
மின் அம்ர் வந்து “(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான
(சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்“ என்று
கூறினார். நபி(ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர் “பேரருளாளனும்
கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரல்...“ என்று (சமாதான
ஒப்பந்தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள். சுஹைல் “ரஹ்மான்
- கருணையன்புடையோன்“ என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும்
“இறைவா!
என் திருப்பெயரால்..“ என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப்
போல் தான் நான் எழுதுவேன்“ என்றார். முஸ்லிம்கள் “அல்லாஹ்வின்
மீதாணையாக! “பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம் - அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்“ என்றே
இதை எழுதுவோம்“
என்று
கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் “பிஸ்மிக்க
அல்லாஹும்ம - இறைவா! உன் திருப்பெயரால்“ என்றே எழுதுங்கள்“ என்றார்கள்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் “இது இறைத்தூதர் முஹம்மது அவர்கள் செய்த சமாதான
ஒப்பந்தம்“
என்று
(எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல் “இறைத்தூதர்
தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும்
மாட்டோம்; உங்களுடன்
போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக “முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் - அப்துல்லாஹ்வின்
மகன் முஹம்மது“
என்று
எழுதுங்கள்“
என்று
கூறினார்.
அதற்கு நபி(ஸல்)
அவர்கள் “அல்லாஹ்வின்
மீதாணையாக! நீங்கள் நான் பொய் சொல்வதாகக் கருதினாலும் நிச்சயம் நான் இறைத்தூதர் தான்.
(இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் - அப்துல்லாஹ்வின் மகன்
முஹம்மது என்றே எழுதுங்கள்“ என்று கூறினார்கள்.
( நூல்: புகாரி )
'ஹதீஸ் குதுஸியில்' வருகிறது
"لا تسب الدهر وانا الدهر"
قد أخرجه الإمام مسلم في
صحيحه عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال: لا تسبوا الدهر فإن الله هو الدهر.
ورواه البخاري بلفظ: يسب
بنو آدم الدهر وأنا الدهر بيدي الليل والنهار.
"காலத்தை திட்டாதீர்கள்
அல்லாஹ் தான் காலம்" (காலங்களை படைத்தவன்
) புகாரியின் அறிவிப்பில் "ஆதமுடைய மக்கள்
காலத்தை ஏசுகிறார்கள் நான் தான் காலத்தை படைத்தேன். இரவு பகல் மாறி வருவதை நானே நிர்ணயம்
செய்தேன்" என்று வந்துள்ளது.
இன்றைய
இஸ்லாமியர்களின் நிலை.
****************************
மாதங்களில்
சிலவற்றை பீடை என்று கூறும் சிலர், இயற்கையை நேசித்து படைத்த இறைவனை
மறந்தவர் பலர்.
وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ
فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ
அன்றியும் தீங்கு
வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை
அவன் மன்னித்தருள்கின்றான். ( அல்குர்ஆன் - 42:30)
தன் செயலால்
தான் தனக்கு தீங்கு ஏற்படுகிறது என்பதை உணராமலே பலர் கால நேரத்தை குறை கூறித் திரிகின்றனர்.
பைஹகீ கிரந்தத்தில்
ஒரு ஹதீஸ் வந்துள்ளது. (இயற்கையினால்) நட்சத்திரத்தைக்
கொண்டு மழை பொழியப் பட்டோம் என்று நம்புவதால் ஒரு கூட்டம் காஃபிராகி விடுகிறார்கள்.
எனவே இறைவனால்
தான் அனைத்தும் ஏற்படுகிறது என்று உறுதியாக நம்புவது
ஈமானில் பிரதான
பகுதியாகும்.
இஸ்லாத்தில்
சில கால நேரங்களை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது ஆனால் எந்த நாளையோ, நேரங்களையோ, பழித்துக்
கூறப்படவில்லை அது இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுகளுக்கு எதிரானது. ஆனால் இன்று முஸ்லிம்களிலேயே
சிலர் ஸஃபர் மாதம் குறித்தும் அதன் கடைசி புதன்கிழமை குறித்தும் ஆதாரமில்லாத பல கற்பனைகளை
சடங்குகளாக கடைப்பிடித்து வருவது வேதனைக்குரியது.
சிலர் ஸஃபர்
மாதத்தின் கடைசி புதன்கிழமையை நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு அன்று தான் நோய் குணமானது
என்று கூறி பூங்காக்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பதும். பச்சை புற்களை மிதிப்பது
நல்லது என்றும் சில காரியங்களை செய்து வருகின்றனர்.
ஆனால் நபிகள்
நாயகம் ஸல் அவர்களுக்கு புதன்கிழமை நோய் குணமானது என்று வரலாற்று நூல்களில் எந்த ஆதாரங்களும்
இல்லை.
இன்னும் சொல்லப்
போனால் புதன்கிழமை தான் நபி ஸல் அவர்களுக்கு காய்ச்சல் தலைவலிஆரம்பமானது. என்கினும்
அதற்காக நாம் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியதில்லை.
ஒரு முஃமினுக்கு
ஏற்படும் எல்லா நன்மை தீமையும் இறைவனின் நாட்டப்படியே நடக்கிறது அதில் அவனுக்கு பல
நன்மைகளும் இருக்கிறது.
நபிகள் நாயகம்
ஸல் அவர்கள் நமக்கு இவ்வாறு தான் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
(قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا
مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ)
[Surat At-Tawbah 51]
"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத்
தவிர (வேறு ஒன்றும்)
எங்களை அணுகாது. அவன்
தான் எங்களுடைய பாதுகாவலன்"
என்று (நபியே!) நீர் கூறும்.
முஃமின்கள் அல்லாஹ்வின்
மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன்
9:51)
«6619» حدثني إسحاق بن إبراهيم الحنظلي
أخبرنا النضر حدثنا داود بن أبي الفرات عن عبد الله بن بريدة عن يحيى بن يعمر أن عائشة
رضي الله عنها أخبرته أنها سألت رسول الله صلى الله عليه وسلم عن الطاعون فقال: ((كان
عذابا يبعثه الله على من يشاء، فجعله الله رحمة للمؤمنين، ما من عبد يكون في بلد يكون
فيه، ويمكث فيه، لا يخرج من البلد، صابرا محتسبا، يعلم أنه لا يصيبه إلا ما كتب الله
له، إلا كان له مثل أجر شهيد)).
[طرفاه 3474، 5734، تحفة
17685].
நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் உயிர் கொல்லிநோய்
பற்றி கேட்டேன். அதற்கவர்கள், அது
அல்லாஹ், தான் நாடுவோர்
மீது இறக்கி வைக்கும் வேதனையாகும்.
(எனினும்) மூஃமின்களுக்கு
அதனை அல்லாஹ் ரஹ்மத்தாக ஆக்கிவிட்டான் யார்
பிளேக் (طاعون ) ஏற்பட்ட ஊரில் அல்லாஹ் (விதியில்)எழுதியிருந்தாலே
தவிர, அது தம்மைத்
தொடாது என்று உறுதி பூண்டு நற்கூலியை ஆதரவு வைத்தவராக பொறுமை கொண்டுஇருப்பாரோ அவருக்கு
"ஷஹீது"என்னும் புனித தியாகியின் நற்கூலி கிடைக்கும் என கூறினார்கள்.(ஆதாரம்:புகாரி, அறிவிப்பவர்:
ஆயிஷா ரலி)
«5648» حدثنا عبدان عن أبي حمزة
عن الأعمش عن إبراهيم التيمي عن الحارث بن سويد عن عبد الله قال دخلت على رسول الله
صلى الله عليه وسلم وهو يوعك فقلت يا رسول الله إنك توعك وعكا شديدا. قال: ((أجل إني
أوعك كما يوعك رجلان منكم)). قلت ذلك أن لك أجرين قال: ((أجل ذلك كذلك، ما من مسلم
يصيبه أذى شوكة فما فوقها، إلا كفر الله بها سيئاته، كما تحط الشجرة ورقها)).
நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் சென்றேன். அப்பொழுது
அவர்கள் காய்ச்சலாக
இருந்தார்கள். நான், "அல்லாஹ்வின்
தூதரே! தாங்களுமா காய்ச்சலால்தாக்கப்படுகிறீர்கள்?" என்று வினவினேன்.
அதற்கவர்கள்,
"ஆம் உங்களில் இருவர் காய்ச்சலால் பீடிக்கப்படுமளவு
நான்காய்ச்சலால் பீடிக்கப்படுகிறேனே"என்று கூறினார்கள். அதற்கு நான்,அப்பொழுது
தங்களுக்கு இரு நற்கூலிகள் உள்ளன எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள், "ஆம் அது போன்றே நோவினை வந்தடையும்
ஒவ்வொரு முஸ்லிமுக்கும்
- அது முள் குத்துவதாலோ அல்லது
அதற்கு மேலுள்ள
பொருள்களினாலோ (இருப்பினும்
சரியே) அல்லாஹ் அவை
கொண்டு அவர் தீமைகளை அழித்தே
தவிர வேறில்லை. மரத்திலிருந்து
இலைகள் உதிர்வது போல் அவர் பாவங்கள்அவரை விட்டு
நீக்கப்படும் என்றுகூறினார்கள். (ஆதாரம்: புகாரி,முஸ்லிம்
) அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் மஸ்வூது)
ஒரு புறம் அந்த
ஒடுக்கத்து புதனை நபி ஸல் அவர்களுக்கு நோய் ஏற்பட்ட சந்தோஷத்தில் யூதர்கள் கொண்டாடுவதைப்
போல சிலர்கள் விபரம் தெரியாமல் கொண்டாடுகிறார்கள். வேறு சிலர்கள் நபியவர்களுக்கு நோய்
வந்த நாள்,
ஆது
சமுகத்தினர் அழிக்கப்பட்ட நாள் என்று துற்சகுனமாக அனுஷ்டிக்கிறார்கள்.
எந்த சகுனமும்
அது வேதனை இறக்கப்பட்ட சமூகத்தை தாண்டி யாரையும்பாதிக்காது. அப்படி "ஆது"
சமூகத்திற்கு வேதனை இறங்கிய நாள் என்று பார்த்தால் குர்ஆனில் அவர்களுக்கு ஏழு இரவு
எட்டு பகல் வேதனை இறங்கியதாக வருகிறது அப்போது வாரத்தில் எந்த நாட்களும் துற்சகுனத்திலிருந்து
தப்ப முடியாது.
ஏதாவது ஒரு
நாளில் யாருக்காவது சிரமங்கள் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கும் அதனால் எல்லா காலங்களையும்
நாம் ஒதுக்கி விட முடியாது. எனவே பாவங்களின்
காரணத்தால் அவர்களுக்கு தண்டனை இறங்கியது என்றால் அந்த பாவகாரியத்தை துற்குறியாக கருத
வேண்டுமே தவிர கால நேரத்தை அல்ல அதை இஸ்லாம் ஏற்கவும் இல்லை அது அறிவுடைமையும் ஆகாது.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ
دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا :
இன்றைய தினம்
உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும்
நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும்
உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;. (அல்குர்ஆன் : 5:3)
எனவே பரிபூரணமான
மார்க்கத்தின் பெயரில் எந்த புகுத்தல்களுக்கும் இங்கே அனுமதி இல்லை .
عن أم المؤمنين أم عبدالله
عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ((من أحدث في أمرنا هذا
ما ليس منه، فهو ردٌّ))؛ رواه البخاري ومسلمٌ،
யார் இந்த மார்க்கத்தில்
இல்லாத ஒன்றை (புதிதாக) புகுத்துவாரோ அது மறுக்கப்
படும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஹஜ்ரத் ஆயிஷா ரலி
அவர்கள்)
அல்லாஹ் மார்க்கத்தை
அதன் தூய வடிவில் பின்பற்றி நடப்பதற்கும், அறிவுப் பூர்வமான அதன் அத்தாட்சிகளை
எடுத்துரைத்து மக்களை நேர்வழியின் பக்கம் அழைப்பதற்கும் நல்லுதவி புரிவானாக ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.