புதன், 9 நவம்பர், 2016

குர்ஆனும் குழந்தை வளர்ப்பும்

بسم الله الرحمن الرحيم

குர்ஆனும் குழந்தை வளர்ப்பும்
நம் குழந்தைகள் அல்லாஹ்வின் பெரும் பாக்கியம்.அமானத். உங்களின் சக்தி வாய்ந்த ஊன்று கோல் . பெரும் மரத்திற்காண வித்து . அது பலன் அளிக்கலாம் . பலனை அழிக்கலாம் . பெயர் சொல்லும் பிள்ளை . பெயர் செல்லும் (-கெடும்)பிள்ளை . இவை யாவும் நம் கையில் தான் உள்ளது . எனவே சிலாதை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும்.சிலதை கண்டிப்பாக் கைவிட வேண்டும்.

1 .@@@@@@@@

அன்பை வெளிப் படுத்த வேண்டும் .

குழந்தைகளை அன்போடு அள்ளி அரவனைத்து (தோளில்) தூக்கி நாம் சுமக்கனும் . அதை தவிர்த்து டிராலி(-வண்டி)யில் / வேலைக் காரியிடம் ஒப்படைக்கும் போக்கு நிறத்தப் படவேண்டும் . அது போல் இணைய தளம் /டிவியில் நாம் தொலைந்து விடக்கூடாது . குழந்தைகளை மியூசிக் / கார்டூன் பொய்யான கனவு வாழ்க்கையில் தொலைத்து விடக்கூடாது


«خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأُمَامَةُ بِنْتُ أَبِي العَاصِ عَلَى عَاتِقِهِ، فَصَلَّى، فَإِذَا رَكَعَ وَضَعَ، وَإِذَا رَفَعَ رَفَعَهَا»

5996. அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோளின் மீது (சிறுமி) உமாமா பின்த் அபில் ஆஸை அமர்த்திய வண்ணம் எங்களிடையே வந்து அப்படியே (எங்களுக்க இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். அவர்கள் ருகூஉ செய்யும்போது உமாமாவைக் கீழிறக்கிவிட்டார்கள். (சஜ்தாலிருந்து நிலைக்கு) உயரும்போது அவரை மீண்டும் (தோளில்) ஏற்றினார்கள்.24
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

5997 -  أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَبَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا، فَقَالَ الأَقْرَعُ: إِنَّ لِي عَشَرَةً مِنَ الوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ»
5997. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ(ரலி)இ எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லைஎன்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

2 .@@@@@@@@

நூலைப் போல் சேலை . பெற்றோரே முதல் பள்ளிக் கூடம் .

يَا بُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ (16)
 (லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன். (அல்குர்ஆன் : 31:16)

படிப்பினை : தனிமையில் தவறு செய்தாலும் அல்லாஹ் அறிவான்  என்ற குர் ஆனின் குரலை உணர்வாக ஊட்டி வளர்ககப்பட்டால் வாழையடி வாழையாக வரலாறு பெயர் சொல்லும்.

உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் பாட்டி(-நன்னிமா) அர்வா (ரஹ்) அவர்களை பார்க்கிறோம் .

வரலாற்றில் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஐந்தாம் கலீபா என போற்றப்படுகிறார்களே காரணம் பெற்றோர் பாட்டி(-நன்னிமா) இறை அச்ச வாழ்கையே .
இவர்கள் இரண்டாம் கலீபா உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களின் பேத்தி உம்மு ஆஸிம் என்ற அர்வா (ரஹ்) அவர்களின் மகனாவார் .

இரண்டாம் கலீபா உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவில் கண்காணிப்புக்காக நகர் வளம் வந்த போது பால் வியாபாரியான தாய் தன் மகளிடம் பாலில் தண்ணீரை கலப்படம் செய்ய சொன்ன போது . அவ்வாறு செய்ய கூடாது என  அரசர் உமர்(ரலி) அவர்கள் தடை விதித்துள்ளார்கள் . அவருக்கு தெரியாவிட்டாலும் அவரின் இறைவன் அறிவான் எனவே அவ்வாறு கலப்படம் செய்யவே கூடாது என எடுத்து உரைத்தார்.

தக்வா நிறைந்த பெண் என்பதால் இப்பெண்ணை தன் மகன் ஆஸிம்க்கு திருமணம் முடித்து வைத்தார்கள் . இத்தம்பதி களின் மகள் தான் உம்மு ஆஸிம் என்ற அர்வா ஆவார்கள்.

அர்வா (ரஹ்) அவர்களின் கணவர் அப்துல் அஜீஸ் (ரஹ்). இத்தம்பதிகளின் மகன் தான் உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் ஆவார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ أَنَّهُ قَالَ دَعَتْنِي أُمِّي يَوْمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي بَيْتِنَا فَقَالَتْ هَا تَعَالَ أُعْطِيكَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ قَالَتْ أُعْطِيهِ تَمْرًا فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ
இங்கே வா உனக்கு (ஒன்னு) தருகிறேன் என என்னை என தாய் ஒரு நாள் அழைத்தார்கள் . எதுவும் கொடுக்காமல் விட்டு விட்டால் இதையும் ஒரு பொய்யாக் கணக்கு எழுதபட்டு விடும் என நபி (ஸல்) சொன்னார்கள் எனபதாக அப்துல்லா இப்னு ஆமிர் (ரலி) சொன்னார்கள் . ஹதீஸ் 1339 அபூ தாவூது.

படிப்பினை : தமாஷ் / விளையாட்டுக் கூட பொய்  பேசக் கூடாது . ஆனால் நாம் எவ்வாறு திணிக்கிறோம். ஸ்கூலில்  உடல் நலம் சரியில்லை என்று சொல்லு. என்றும்  அதற்கு பொய்யாக மெடிகல் சான்றும் கொடுத்து அனுப்பு கிறோமே .

3 .@@@@@@@@

அன்பை காட்டும் அதே சமயம் ஒழுக்கம் கற்பிக்க மறந்து விடக்கூடாது . ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
ان أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَخَذَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ فَجَعَلَهَا فِي فِيهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كِخْ كِخْ لِيَطْرَحَهَا ثُمَّ قَالَ أَمَا شَعَرْتَ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ

1396. அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?“ என்றனர். நபி(ஸல்) அவர்கள் இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)!“ (என்று கூறிவிட்டு அவரிடம்.) நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும்: அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது: தொழுகையை நிலை நாட்ட வேண்டும்: ஸகாத் வழங்க வேண்டும்: உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள்


يَقُولُ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ
5376. (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம்இ சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள்

படிப்பினை : மிட்டாய் / பிஸ்கட்/  விளையாட்டு பொருள் / பென்சில் பேனா / போன்றதனாலும் அடுத்தவனின் சொத்துக்கு ஆசை படாதே . நல்லதுக்கு இடது கை கூடாது என கற்பிக்க வேண்டும் . குழந்தை தானே என அலட்சியம் செய்தால் கண்ரோல் இல்லாமல் தான் தோன்றிகளாக ஆகிடலாம்.

4.@@@@@@@@


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي لَأَدْخُلُ فِي الصَّلاَةِ وَأَنَا أُرِيدُ إِطَالَتَهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ»
ஸஹீஹ் புகாரி 709. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்“. என அனஸ்(ரலி) அறிவித்தார்

عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الأَنْصَارِ: «مَنْ أَصْبَحَ مُفْطِرًا، فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ وَمَنْ أَصْبَحَ صَائِمًا، فَليَصُمْ»، قَالَتْ: فَكُنَّا نَصُومُهُ بَعْدُ، وَنُصَوِّمُ صِبْيَانَنَا، وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ العِهْنِ، فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ الإِفْطَارِ
ஸஹீஹ் புகாரி 1960. ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்க ஆளனுப்பிஇ யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

படிப்பினை :  குழந்தைகளை மஸ்ஜித்துக்கு அழைத்து வந்தார்கள் .நோன்புக்கு பழக்கினார்கள் .
ஆனால் நாம் ஜிம்-உடற் பயிற்சி /நீச்சல்/ கம்ப்யூடர் கிளாஸ்/உலக கல்விக்கு ஸ்கூல் / டியூஷன் / வாகன பீFஸ் -கட்டணம் & நேரம் செலவு செய்கிறோம் .(அது தேவை தான் . அவ்வாறு கட்டாயம் செய்ய வேண்டும் ஆனால் அதில்)  பத்து சதவீதம்  ஆவது பணமும் நேரமும் தீனை படிக்க கொடுக்கிறோமா .

4.@@@@@@@@

திட்டுவது /தீய வார்த்தை உபயோகிப்பது கூடாது.

ஸஹீஹ் முஸ்லிம் 5736. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜுஹைனாகுலத்தாரை நோக்கி) பத்னு புவாத்போருக்குச் சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இ மஜ்தீ பின் அம்ர் அல்ஜுஹனீ என்பவரைத் தேடினார்கள். அப்(பயணத்தின்)போது ஓர் ஒட்டகத்தில் ஐந்து அல்லது ஆறு அல்லது ஏழு பேர் என முறைவைத்துஇ ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தோம். (அந்த அளவுக்கு வாகனப் பற்றாக்குறை இருந்தது.)
இந்த நிலையில் அன்சாரிகளில் ஒருவருடைய முறை வந்தபோது அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதில் ஏறினார். பிறகு அதைக் கிளப்பினார். ஆனால் அது சிறிது (சண்டித்தனம் செய்து) நின்றுவிட்டது. அப்போது அவர் ஷஃஎன அதை விரட்டிவிட்டு உனக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!என்று சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைச் சபித்த இந்த மனிதர் யார்?” என்று கேட்டார்கள். நான்தான் அல்லாஹ்வின் தூதரே!என்று அந்த அன்சாரி பதிலளித்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து இறங்கிவிடு! சபிக்கப்பட்ட ஒரு பொருளோடு எங்களுடன் நீர் வரவேண்டாம்.

" لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ وَلَا تَدْعُوا عَلَى أَوْلَادِكُمْ وَلَا تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ لَا تُوَافِقُوا مِنْ اللَّهِ سَاعَةً يُسْأَلُ فِيهَا عَطَاءٌ فَيَسْتَجِيبُ لَكُمْ "
நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக் கெதிராகவோ உங்கள் செல்வங்களுக் கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள்.
( பொதுவாக ஒரு நேரத்தை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான் அதில் எதையும் சும்மா சொன்னாலும் கூட  அது அவ்வாறே நடந்து விடும் எனவே) அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால் உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

படிப்பினை : எனவே கண்ணு குருடா ?. கிறுக்கன் . மூலை கெட்டவனே .மாடு மேய்க்க தான் லாயிக் .வாந்.....போயிடுவே . கோபத்தில் இது போன்ற தகாத வார்தைகளை உபயோகிக்க கூடாது.
பெற்றோரின் சொல்-துஆ கண்டிப்பாக் அங்கீ கரிக்கப்படும். .
சிறுவயதில் ஒரு கஷ்டத்தில் நோயில் சிக்கியதுக்கு . பெரிய வயதில் போதிய வருமானம் உழைப்பு இல்லாமல் போனதுக்கு உங்களின் சொல்லே காரணமாக் அமைந்து இருக்கும்

5 . முடிவுரை.

எனவே நம் குழந்தைகளை சீராக ஒழுக்கமாக வளர்த்தால் சொர்கத்திலும் நம்முடன் இணைந்து வாழ்வார்கள் .

وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ (21)
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 52:21)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.