வியாழன், 27 ஏப்ரல், 2017

ஓய்வை உரமாக்குவோம்

بسم الله الرحمن الرحيم
ஓய்வை உரமாக்குவோம்
******************************
நேரத்தின் முக்கியத்துவமும், மனிதனின் நிலையும்:

والعصر (1) إن الإنسان لفي خسر (2) إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر (العصر : 1 - 3)
காலத்தின் மீது சத்தியமாக.நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை(.

இலக்கை அடைய  விரைந்து செல்!

وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين (آل عمران :  133 )
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أين ما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير ( البقرة : 148 )

ஓவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.

ஓய்வு என்றால் என்ன?
வேலையின் இன்றி இருப்பதே ஓய்வு நேரமாகும்.

உழைப்போர் பாஷையில் ஓய்வு என்பது ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறுவதேயாகும்.




ஓய்வின் முக்கியத்துவம்:

عن ابن عباس رضي الله عنهما، قال: قال النبي صلى الله عليه وسلم: " نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ " خ : 6412

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு   என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஓய்வை உரமாக்குவோம்.

عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: " اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هِرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاءَكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ «هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخَرِّجَاهُ»   المستدرك : 7846

நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு உபதேசிக்கையில் ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்திக் கொள். உன் வயோதிகத்திற்கு முன் உன் வாலிபத்தை, உனக்கு நோய் வருவதற்கு முன் உன் ஆரோக்கியத்தை, உனக்கு வருமை வருவதற்கு முன் உன் செல்வத்தை, உனக்கு வேலை வருவதற்கு முன் உன் ஓய்வை, உன் மரணத்திற்கு முன் உன் வாழ்வை என்று கூறினார்கள். (ஹாகிம்:7846)

عن جابر، قال: خرجنا مع رسول الله صلى الله عليه وسلم - يعني في غزوة ذات الرقاع - فأصاب رجل امرأة رجل من المشركين، فحلف أن لا أنتهي حتى أهريق دما في أصحاب محمد، فخرج يتبع أثر النبي صلى الله عليه وسلم، فنزل النبي صلى الله عليه وسلم منزلا، فقال: من رجل يكلؤنا؟ فانتدب رجل من المهاجرين ورجل من الأنصار، فقال: «كونا بفم الشعب»، قال: فلما خرج الرجلان إلى فم الشعب اضطجع المهاجري، وقام الأنصاري يصل، وأتى الرجل فلما رأى شخصه عرف أنه ربيئة للقوم، فرماه بسهم فوضعه فيه فنزعه، حتى رماه بثلاثة أسهم، ثم ركع وسجد، ثم انتبه صاحبه، فلما عرف أنهم قد نذروا به هرب، ولما رأى المهاجري ما بالأنصاري من الدم، قال: سبحان الله ألا أنبهتني أول ما رمى، قال: كنت في سورة أقرؤها فلم أحب أن أقطعها. د : 198

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள். தாதுர் ரிகாஉ போருக்காக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கிளம்பினோம். (எங்களில்) ஒருவர் இணைவைப்போரில் ஒருவரின் மனைவியை கொலை செய்து விட்டார். அப்பொழுது அவர் (கொல்லப்பட்டவளின் கணவர்) முஹம்மதின் தோழர்களில் இரத்தத்தை ஓட்டும் வரை நான் ஒதுங்க மாட்டேன் என்று சத்தியம் செய்து, நபியின் அடிச்சுவட்டை பின்தொடர்ந்து வந்தார். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் ஒரு இடத்தில் தங்கினார்கள். அப்பொழுது அவர்கள் (இன்று இரவு எதிகளிடமிருந்து) நம்மைப் காவல் காப்பவர் யார்? என்று கேட்டாரகள்;. அப்போது அன்சாரிகளில் ஒருவரும், முஹாஜிர்களில் ஒருவரும் தயாரானார்கள். அவர்களிடம் நபியவர்கள் நீங்கள் அக்கனவாயில் இருங்கள் என்றார்கள். அவ்விருவரும் அக்கனவாயை நோக்கிச் சென்றதும் முஹாஜிர் தூங்கி விட்டடார். அன்சாரி தொழ ஆரம்பித்துவிட்டார். அச்சமயம்  அம்மனிதர் (கொல்லப்பட்டவளின் கணவர்) வந்தார். அவர் ஒரு மனிதரின் கருப்பு உருவத்தை கண்டதும் இவர் கூட்டத்தைப் பாதுகாப்பவர் என்பதை அறிந்து கொண்டு, அம்பை எரிந்து, அன்சாரியின் (உடலில்) பதித்தார்.பின்னர் அன்சாரி அதனை பிடுங்கினார். எனினினும் அவர் மூன்று முறை அம்பை எறிந்தார். பின்னர் அன்சாரி ருகூஃ, ஸுஜூத் செய்து விட்டு, தன் தோழரை உசார்படுத்தினார். அப்பொழுது அம்முஷ்ரிக் (நபித் தோழர்களாகிய) அவர்கள் தம்மை அறிந்து கொண்டார்கள் என்று அறிந்ததும் ஓடிவிட்டார். பின்னர் முஹாஜிர் அன்சாரியின் (உடலிலுள்ள) இரத்தத்தை பார்த்ததும் ஸுப்ஹானல்லாஹ்! அவன் முதலில் அம்பை எய்ததும் என்னை உசுப்பி இருக்கக்கூடாதா? எனக் கேட்டார். அதற்கு அன்சாரி நான் ஒரு சூராவை ஓதிக் கொண்டிருந்தேன். அதனை முறிக்க நான் விரும்ப வில்லை என்று பதில் கூறினார். (அபூ தாவூத் : 198)

وقال معاذ بن جبل: «اجلس بنا نؤمن ساعة» صحيح البخاري
முஆத் (ரழி) அவர்கள் (தன் தோழர்களிடம்) நம்முடன் அமருங்கள். சிறிது நேரம்  ஈமான் கொள்வோம் (அல்லாஹ்வை நினைவு கூறுவோம்) என்று கூறுவார்கள்.

1.  குழந்தைகள்: குழந்தைப் பருவமே ஓய்வான பரும்தான். அந்த பருவத்தில்தான் அவர்களுக்கு

(1)  கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் கல்வி என்பது அவர்களின் பார்வைப் புலனாலேயே அமைகின்றது. ஆதலால் அவர்களின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் அவர்களுக்கு முன் நற்செயல்களையே செய்ய வேண்டும்.  இல்லையேல் தவறான கல்வியை அவர்களாகவே கற்றுக் கொண்டு விடுவார்கள்.

(2)  ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் தவறான கல்வியை அவர்களாகவே கற்றுக் கொண்டு விடுவார்கள்.

2.  இளைஞர்கள், இளைஞிகள்:
•  வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.

ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا (سورة الإسراء : 79)
இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன் மகாமம் மஹ்முதாஎன்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.

يا أيها المزمل (1) قم الليل إلا قليلا (2) نصفه أو انقص منه قليلا  (المزمل : 1 – 3)
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;
அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!

•  உடலை வலுப்படுத்துதல்.
•  உடலுக்கு ஓய்வளிக்க வேண்டும்.

عن أنس بن مالك قال قال رسول الله : قيلوا فإن الشيطان لا يقيل ز المعجم الأوسط للطبراني : 28  حسنه الشيخ الألباني رحمه الله تعالي

முற்பகலில் (சிறு தூக்கம்) தூங்குங்கள். ஏனெனில் ஷைத்தான் சிறு தூக்கம் தூங்குவதில்லை.

عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما، قال لي رسول الله صلى الله عليه وسلم: «يا عبد الله، ألم أخبر أنك تصوم النهار، وتقوم الليل؟»، فقلت: بلى يا رسول الله قال: «فلا تفعل صم وأفطر، وقم ونم، فإن لجسدك عليك حقا، وإن لعينك عليك حقا، وإن لزوجك عليك حقا، وإن لزورك عليك حقا، وإن بحسبك أن تصوم كل شهر ثلاثة أيام، فإن لك بكل حسنة عشر أمثالها، فإن ذلك صيام الدهر كله»، فشددت، فشدد علي قلت: يا رسول الله إني أجد قوة قال: «فصم صيام نبي الله داود عليه السلام  ولا تزد عليه»، قلت: وما كان صيام نبي الله داود عليه السلام؟ قال: «نصف الدهر»، فكان عبد الله يقول بعد ما كبر: يا ليتني قبلت رخصة النبي صلى الله عليه وسلم  خ : 1975

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் 'அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!' என்று கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்)விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில் உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய் வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில்இ (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!' என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால்இ என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! 'இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தாவூத் நபி(அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!' என்றார்கள். தாவூத் நபி(அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். 'வருடத்தில் பாதி நாள்கள்!' என்றார்கள்.  'அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) வயோதிகம் அடைந்த பின் 'நபி(ஸல்) அவர்களின் சலுகைகளை நான் ஏற்காமல் போய் விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறுவார்!' என அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.



•  கல்வியைக் கற்றுக் கொடுத்தல்.
•  சுற்றுலா அல்லாஹ்வின் படைப்புகளைக் கண்டு படிப்பினை பெறுவது.
قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين (الأنعام:11)
பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்என்று (நபியே!) நீர் கூறுவீராக.

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ثُمَّ اللَّهُ يُنشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ) العنكبوت20 .
பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்என்று (நபியே!) நீர் கூறுவீராக.

குறிப்பு : உயிரியல் ஆய்வு செய்யும் படி கட்டளையிடுகின்றான். இதைத்தான் சார்லஸ் டார்வின் செய்தார். எனினும் முறையான வழிகாட்டுதல் இல்லாததால் மனிதன் குரங்கிலிருந்து படைக்கப்பட்டான் எனும் தவறான கருத்தை பரப்பி விட்டார். அதற்கு மாற்றமான கருத்தினை அறிவியில் பூர்வமாக நிரூபித்திட முஸ்லிம்கள் ஆய்வு செய்திருக்க வேண்டும்.

•  நன்பர்களுடன் உரையாடுதல்.

عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ: قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ: أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ كَثِيرًا، «كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ، أَوِ الْغَدَاةَ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ، وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ، فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ» م : 670

சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம் "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம் அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.

•  குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது.

676 - حدثنا آدم، قال: حدثنا شعبة، قال: حدثنا الحكم، عن إبراهيم، عن الأسود، قال: سألت عائشة ما كان النبي صلى الله عليه وسلم يصنع في بيته؟ قالت: «كان يكون في مهنة أهله - تعني خدمة أهله - فإذا حضرت الصلاة خرج إلى الصلاة»  خ : 676
அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார் . நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) 'நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.

وكان من أخلاقه صلى الله عليه وسلم أنه جميل العشرة دائم البشر، يداعب أهله، ويتلطف بهم ويوسعهم نفقته، ويضاحك نساءه حتى إنه كان يسابق عائشة أم المؤمنين رضي الله عنها، يتودد إليها بذلك، قالت: سابقني رسول الله صلى الله عليه وسلم فسبقته، وذلك قبل أن أحمل اللحم، ثم سابقته بعد ما حملت اللحم فسبقني، فقال «هذه بتلك» ويجتمع نساؤه كل ليلة في بيت التي يبيت عندها رسول الله صلى الله عليه وسلم فيأكل معهن العشاء في بعض الأحيان، ثم تنصرف كل واحدة إلى منزلها، وكان ينام مع المرأة من نسائه في شعار واحد، يضع عن كتفيه الرداء وينام بالإزار، وكان إذا صلى العشاء يدخل منزله يسمر مع أهله قليلا قبل أن ينام، يؤانسهم بذلك صلى الله عليه وسلم.  (تفسير إبن كثير )

நபி (ஸல்) அவர்கள் அழகிய முறையில் குடும்ப வாழ்க்கையை நடத்துவார்கள். தன் மனைவியர்களுடன் விளையாடுவார்கள். அவர்களிடம் அன்பு செலுத்துவார்கள். அவர்களுக்காக விசாலமாக செலவு செய்வார்கள். தன் மனைவியருடன் சிரித்து மகிழ்வார்கள். எந்தளவிற்கெனில் ஆயிஷா (ரழி) அவர்களிடம் அன்பு காட்டுவதற்காக அவர்களுடன் ஓட்டப் பந்தையம் நடத்தியுள்ளார்கள்………ஒவ்வொரு இரவிலும் தன் மனைவயர்களை அவர்கள் தங்கும் வீட்டில் ஒன்று திரட்டி, சில நேரம் அவர்களுடன் இரவு உணவை உண்ணுவார்கள். பின்பு ஒவ்வொருவரும் அவர்களின் வீட்டிற்குச் சென்று விடுவார்கள்.

•  சுயதேவைகளை நிறைவேற்றுவது:

حدثني معاوية بن صالح، عن يحيى بن سعيد، عن عمرة عن عائشة، أنها سئلت: ما كان عمل رسول الله صلى الله عليه وسلم في بيته؟ قالت: «ما كان إلا بشرا من البشر، كان يفلي ثوبه، ويحلب شاته، ويخدم نفسه» صحيح إبن حبان : 5675

நபி (ஸல்) அவர்கள்; வீட்டில் இருக்கையில் என்ன செய்வார்கள்? என்று ஆயிஷா (ரழி) அவர்களிடத்தில் கேட்டேன். அதற்கவர்கள் நபி (ஸல்) அவர்கள் ஏனெய மனிதர்களைப் போலவே இருப்பார்கள். தன் ஆடையை துவைப்பார்கள். தன் ஆட்டில் பால் கரப்பார்கள். தன் பனியை செய்வார்கள். (இப்னு ஹிப்பான் : 5675(

•  மக்கள் பணியாற்றுவது:

عن  عبد الله بن أبي أوفى يقول : كان رسول الله صلى الله عليه وسلم يكثر الذكر ويقل اللغو ويطيل الصلاة ويقصر الخطبة ولا يأنف أن يمشي مع الأرملة والمسكين فيقضي له الحاجة. سنن النسائي : 1414  قال الشيخ الألباني : صحيح
நபி (ஸல்) அவர்கள் அதிகம் திக்ர் செய்வார்கள். பயனற்றதை குறைத்துக் கொள்வார்கள். தொழுகையை நீட்டுவார்கள். உரையை சுருக்குவார்கள். விதவைகள், ஏழைகளுடன் சென்று அவர்களின் தேவையை நிறைவேற்ற கர்வம் கொள்ள மாட்டார்கள். (நஸாயி : 1414)


3.  முதுமைப் பருவம்:

முதுமையில் நாம் பெற்ற அனுபவங்களை மற்ற மக்களுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் ஓய்வை பயன்படுத்தலாம்.

4.  மரணத்திற்குப் பின்பே வேலையற்ற ஓய்வு:

عن أبي قتادة بن ربعي الأنصاري، أنه كان يحدث: أن رسول الله صلى الله عليه وسلم مر عليه بجنازة، فقال: «مستريح ومستراح منه» قالوا: يا رسول الله، ما المستريح والمستراح منه؟ قال: «العبد المؤمن يستريح من نصب الدنيا وأذاها إلى رحمة الله، والعبد الفاجر يستريح منه العباد والبلاد، والشجر والدواب» خ : 6512

அபூ கத்தாதா இப்னு ரிப்ஈ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் '(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்' என்றார்கள். மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள்(நாடு) நகரங்கள் மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன' என்றார்கள்.

முடிவுரை: ஓய்வை சினிமா, நாடகம், இன்பச் சுற்றுலா என்று வீணானவற்றில் விரயம் செய்யாமல் பயனுள்ளவற்றில் முதலீடு செய்து, இம்மையிலும் மறுமையிலும் அறுவடை செய்வோம்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، أَنَّ أَعْرَابِيًّا قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ خَيْرُ النَّاسِ؟ قَالَ: «مَنْ طَالَ عُمُرُهُ، وَحَسُنَ عَمَلُهُ . ت : 2329
ஒரு கிராமத்தார் நபி (ஸல்) அவர்களிடம் மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீண்ட ஆயுள் கிடைக்கப் பெற்று, நல்லறங்கள் செய்தவரே என்று பதிலளித்தார்கள்.