புதன், 19 ஏப்ரல், 2017

ரஜபில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் அதன் படிப்பினைகளும்

بسم الله الرحمن الرحيم


ரஜபில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் அதன் படிப்பினைகளும்

****************************************

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌  ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ‏ 

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் -

(அல்குர்ஆன் : 9:36)


3197- عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ)).

3197. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.  என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்


ரஜப் மாதம் வரலாற்றில் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்த மாதமாகும். ஒரு சூழலை வேறொரு சூழல் மூலம் மாற்றி அமைக்க முடியும் என்று அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ள விதி பலமுறை அரங்கேறிய மாதமாகும்.அப்படி நிகழ்ந்த பல தலைகீழ் மாற்றங்களில் மூன்று மாற்றங்கள் அறிவுடையோர் பாடமும் படிப்பினையும் பெற்றுக் கொள்ள வேண்டிய அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொண்ட மாற்றங்களாகும்.


1)பைத்துல் முகத்தஸ் மீட்பு 2) கிலாபத் முடிவடைந்தது .3) மிஃராஜ். இந்த மூன்று நிகழ்வுகளும் ரஜபு மாதத்தில்தான் நடந்தது.


முதலாவதாக பைத்துல் முகத்தஸைப் பற்றி விரிவாக பார்போம். ஏனென்றால் கஃபாவின் வரலாற்றை மட்டுமே அதிகம் தெரிந்து வைத்திருக்கக்கூடியநாம் முஸ்லிம்களுக்கே சொந்தமான பைத்துல் முகத்தஸின் வரலாற்றையும் அதன் சிறப்புக்களையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.


முஸ்லிம்களின் உள்ளத்தில் பைத்துல் முகத்தஸிற்கு தனி மரியாதை உண்டு. காரணம் அது அதிகமான நபிமார்கள் வாழ்ந்த பூமி. நபி ( ஸல்) அவர்கள் மிஃராஜூக்கு அங்கிருந்தே சென்றார்கள்.மேலும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகவும் உள்ளது.


லூத் ( அலை) அவர்களை இந்த புனித பூமியிலே அல்லாஹ் குடியமர்த்தினான்

وَنَجَّيْنٰهُ وَلُوْطًا اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا لِلْعٰلَمِيْنَ‏ 

இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.

(அல்குர்ஆன் : 21:71)



சுலைமான் நபியை அந்த பூமிக்கு அழைத்துச் சென்றது பற்றி அல் குர்ஆன்


وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِىْ بِاَمْرِهٖۤ اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عٰلِمِيْنَ‏ 


இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.

(அல்குர்ஆன் : 21:81)


மூஸா ( அலை) தங்களின் கூட்டத்தார்களை  பைத்துல் முகத்தஸில் நுழையும்படி கூறிய நிகழ்வு.


يٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِىْ كَتَبَ اللّٰهُ لَـكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِكُمْ فَتَـنْقَلِبُوْا خٰسِرِيْنَ‏ 

(தவிர, அவர்) என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்என்றும் கூறினார்.

(அல்குர்ஆன் : 5:21)


மூஸா ( அலை) அவர்களும் பைத்துல் முகத்தஸிற்கு அருகில் அடக்கமாகுவதை விரும்பினார்கள்.


1339- حَدَّثَنَا مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: ((أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى- عَلَيْهِمَا السَّلاَمُ- فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ الْمَوْتَ. فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ، فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ. قَالَ أَيْ رَبِّ، ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ. قَالَ فَالآنَ. فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنَ الأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ)). قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((فَلَوْ كُنْتُ ثَمَّ لأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الأَحْمَرِ)).


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா(ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா(அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்துவிட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், “இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்என்றார். பிறகு அல்லாஹ் அவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, “நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி, அவரின் கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும்என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கூறியபோது,) மூஸா(அலை) இறைவா! அதற்குப் பிறகு?“ எனக் கேட்டதும் அல்லாஹ், “பிறகு மரணம் தான்என்றான். உடனே மூஸா(அலை) அவர்கள் அப்படியானால் இப்பொழுதே (தயார்)எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) பூனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டினார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறும்போது, “நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா(அலை) அவர்களின் கப்ரைக் காட்டியிருப்பேன்எனக் குறிப்பிட்டார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்


மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபின் சுமார் 17 மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுதார்கள்


وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِىْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِ ‌ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُوَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ‌اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏ 


யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.

(அல்குர்ஆன் : 2:143)


7252- ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻳَﺤْﻴَﻰ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻭَﻛِﻴﻊٌ ﻋَﻦْ ﺇِﺳْﺮَاﺋِﻴﻞَ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺇِﺳْﺤَﺎﻕَ ﻋَﻦِ اﻟْﺒَﺮَاءِ ﻗَﺎﻝَ ﻟَﻤَّﺎ ﻗَﺪِﻡَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ اﻟْﻤَﺪِﻳﻨَﺔَ ﺻَﻠَّﻰ ﻧَﺤْﻮَ ﺑَﻴْﺖِ اﻟْﻤَﻘْﺪِﺱِ ﺳِﺘَّﺔَ ﻋَﺸَﺮَ، ﺃَﻭْ ﺳَﺒْﻌَﺔَ ﻋَﺸَﺮَ ﺷَﻬْﺮًا، ﻭَﻛَﺎﻥَ ﻳُﺤِﺐُّ ﺃَﻥْ ﻳُﻮَﺟَّﻪَ ﺇِﻟَﻰ اﻟْﻜَﻌْﺒَﺔِ ﻓَﺄَﻧْﺰَﻝَ اﻟﻠَّﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ: {ﻗَﺪْ ﻧَﺮَﻯ ﺗَﻘَﻠُّﺐَ ﻭَﺟْﻬِﻚَ ﻓِﻲ اﻟﺴَّﻤَﺎءِ ﻓَﻠَﻨُﻮَﻟِّﻴَﻨَّﻚَ ﻗِﺒْﻠَﺔً ﺗَﺮْﺿَﺎﻫَﺎ} ﻓَﻮُﺟِّﻪَ ﻧَﺤْﻮَ اﻟْﻜَﻌْﺒَﺔِ، ﻭَﺻَﻠَّﻰ ﻣَﻌَﻪُ ﺭَﺟُﻞٌ اﻟْﻌَﺼْﺮَ، ﺛُﻢَّ ﺧَﺮَﺝَ ﻓَﻤَﺮَّ ﻋَﻠَﻰ ﻗَﻮْﻡٍ ﻣِﻦَ اﻷَﻧْﺼَﺎﺭِ ﻓَﻘَﺎﻝَ ﻫُﻮَ ﻳَﺸْﻬَﺪُ ﺃَﻧَّﻪُ ﺻَﻠَّﻰ ﻣَﻊَ اﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻭَﺃَﻧَّﻪُ ﻗَﺪْ ﻭُﺟِّﻪَ ﺇِﻟَﻰ اﻟْﻜَﻌْﺒَﺔِ. ﻓَﺎﻧْﺤَﺮَﻓُﻮا ﻭَﻫُﻢْ ﺭُﻛُﻮﻉٌ ﻓِﻲ ﺻَﻼَﺓِ اﻟْﻌَﺼْﺮِ.


7252. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது பைத்துல் மக்தீஸ் (நகரிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இறையில்லத்தை) நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (தொழுகையில்) கஅபாவை நோக்கி முகம் திருப்புவதையே அவர்கள் ிரும்பிவந்தார்கள். எனவே, அல்லாஹ் “(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் (இதோ) உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்எனும் (திருக்குர்ஆன் 02:144 வது) வசனத்தை அருளினான். இவ்விதம் (தொழுகையிலிருந்தபோதே) கஅபாவை நோக்கி முகம் திருப்பப்பட்டார்கள். அந்த அஸ்ர்தொழுகையில் நபி(ஸல்) அவர்களுடன் ஒருவர் தொழுதார். அவர் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறி அன்சாரிகளில் ஒரு குலத்தாரைக் கடந்து சென்றபோது, “நபி(ஸல்) அவர்களுடன் தாம் தொழுததாகவும், (தொழுகையிலேயே) அவர்கள் முகம் கஅபாவை நோக்கித் திருப்பப்பட்டதாகவும் தாம் சாட்சியம் அளிப்பதாகச் சொன்னார். உடனே அம்மக்கள் அஸ்ர் தொழுகையில் ருகூஉ செய்து கொண்டிருந்த நிலையில் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.10

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 95. தனிநபர் தரும் தகவல்கள்



மறுமை நாளில் படைப்பினங்கள் அனைவர்களையும் ஒன்று சேர்ப்பதற்காக ஒரு வாணவர் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் உள்ள ஒரு பாறையின்மீது நின்றே அழைப்பார். மேலும் இந்த இடம்தான் பூமியின் நடுப்பகுதியாகவும். பூமியிலேயே உயரமான இடமாகவும் வானத்திற்கு சமீபமான இடமாகவும் உள்ளது.இது பற்றியே கீழ் வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான் என முஃபஸ்ஸிரீன்கள் கூறுகின்றார்கள்


وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِيْبٍۙ‏ 


மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.

(அல்குர்ஆன் : 50:41)



பூமியில் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசல்

3366- حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الأَعْمَشُ حَدَّثَنَا إِبْرَاهِيمُ التَّيْمِيُّ عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ أَبَا ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ قَالَ: ((الْمَسْجِدُ الْحَرَامُ)). قَالَ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ: ((الْمَسْجِدُ الأَقْصَى)). قُلْتُ كَمْ كَانَ بَيْنَهُمَا قَالَ: ((أَرْبَعُونَ سَنَةً، ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ بَعْدُ فَصَلِّهْ، فَإِنَّ الْفَضْلَ فِيهِ)).


3366. அபூ தர்(ரலி) அறிவித்தார்  நான் (நபி(ஸல்) அவர்களிடம்),“இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?“ என்று கேட்டேன். அவர்கள்,“அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்என்று பதிலளித்தார்கள். நான்,“பிறகு எது?“ என்று கேட்டேன். அவர்கள்,“ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸாஎன்று பதிலளித்தார்கள். நான்,“அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்ததுஎன்று கேட்டேன். அவர்கள்,“நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,“நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளதுஎன்று கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்



நன்மை அதிகம்

********************

) وعن أبي الدرداء وجابر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «فضل الصلاة في المسجد الحرام على غيره مائة ألف صلاة، وفي مسجدي هذا ألف صلاة وفي مسجد بيت المقدس خمسمائة صلاة» أخرجه البيهقي في السنن الصغرى رقم (1821) وصححه الألباني في صحيح الجامع (4211).


மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதற்கு ஒரு லட்சம் நன்மைகளும் .மஸ்ஜிது நபவியில் தொழுவதற்கு ஆயிரம் மடங்கு நன்மைகளும். பைத்துல் முகத்தஸில் தொழுவதற்கு 500 மடங்கு நன்மைகளும் கிடைக்கும் என்று நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.



தஜ்ஜால் நுழைய மாட்டான்

****-****************************

عن جنادة بن أبي أمية الأزدي قال: "ذهبت أنا ورجل من الأنصار إلى رجل من أصحاب النبي صلى الله عليه وسلم فقلنا حدثنا ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يذكر في الدجال، فذكر الحديث وفيه "علامته يمكث في الأرض أربعين صباحا، يبلغ سلطانه كل منهل، لا يأتي أربعة مساجد: الكعبة ومسجد الرسول، والمسجد الأقصى والطور" رواه أحمد .கியாமத்நாள் சமீபமாக தஜ்ஜால் வருவான் பூமியில் நாற்பதுநாள் தங்குவான் அனைத்து இடங்களுக்கும் செல்வான் ஆனால் நான்கு இடங்களுக்கு அவன் வரமாட்டான்.1 கஃபா. 2மஸ்ஜிதுன் நபவி 3 மஸ்ஜிதுல் அக்ஸா 4 தூர்சினா மலை என்று நபி ( ஸல்) கூறினார்கள். நூல் அஹ்மத்



ஃபலஸ்தீன முஸ்லிம்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு

***************************************

* طائفة من أهلها على الحق ظاهرين إلى قيام الساعة

لما روى أبو أمامة الباهلي, قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لا تزال طائفة من أمتي على الدين ظاهرين لعدوهم قاهرين، لا يضرهم من خالفهم.. قالوا: فأين هم؟ قال: ببيت المقدس وأكناف بيت المقدس" (رواه أحمد ).இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னுடைய உம்மத்தில் ஒரு குழுவினர் சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டே இருப்பார்கள், இன்னும் (இறுதி) நேரம் வரும் நேரத்தில் அவர்கள் தங்களது எதிரிகளை வென்றெடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.அப்பொழுது ஒருவர் கேட்டார் : இறைத்தூதர் (ஸல்) அவர்களே.., அவர்களை நாங்கள் எங்கே காண்பது? அதற்கு, ”அவர்கள் பைத்துல் முத்திஸிலும், அதனைச் சுற்றிலும் (வாழ்ந்து கொண்டு) இருப்பார்கள்என்றார்கள். (அஹ்மத்)


* حرص الأنبياء والصالحين على زيارة المسجد الأقصى

والصلاة فيه والسكن في بيت المقدس ومجاورة الأقصى, فقد زار بيت المقدس عمر بن الخطاب وأبو عبيدة وسعيد بن زيد وأم المؤمنين صفية وأبو الدرداء وسلمان الفارسي وعمرو بن العاص رضي الله عن الجميع


நபிமார்கள் நல்லடியார்கலெல்லாம் மஸ்ஜிதுல் அக்ஸாவை ஜியாரத் செய்ய வேண்டும் அதில் தொழ வேண்டும் அங்கு தங்க வேண்டும் என்றே விரும்பினார்கள்.


உமர் ( ரலி) அபூ உபைதா ( ரலி) சயீத் இப்னு ஜைத் ரலி ஸஃபிய்யா ரலி அபூதர்தாஉ ரலி சல்மான் பாரிஸ் ரலி அம்ருப்னுல் ஆஸ் ரலி ஆகிய சகாபாக்கல்அதை ஜியாரத் செய்துள்ளார்கள்.



எனவே வாழ்க்கையில் ஒருமுறையேனும் நாமும் இப்பள்ளிக்கு சென்று வருவோம்


عن أبي سعيد الخدري -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام، ومسجدي هذا، والمسجد الأقصى متفق عليه1189. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:  மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 20.



வரலாற்றுச் சிறு குறிப்பு

*******************************

ஜெருஸலம் நகரானது கி.பி.637 ஹிஜ்ரி16 ல் உமர் ( ரலி அவர்களின் ஆட்சியில் முஸ்லீம்களால் மீட்டிக் கொண்டு வரப்பட்டது.  இது வரை இருந்து வந்த அடக்குமுறை ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கு முன் அந்தப் பகுதியை எகிப்தியர்களும், கிரேக்கர்களும், பெர்ஸியர்களும் பின்பு ரோமர்க ளாலும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தார்கள். ரோமர்களை எர்முக் என்ற இடத்தில் வைத்து போர் செய்து முஸ்லிம்கள் வெற்றி பெற்றவுடன், இந்த அடக்குமுறைகள் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. ரோமர்களின் கவர்னராக இருந்து ஆட்சி செய்து வந்தவர், புனித நகரை விட்டு ஓடிச் சென்று, முஸ்லிம்களிடம் சரணடைந்து, அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இது போலவே இன்னும் ஏனைய நகரங்களும் முஸ்லிம்களுடன் அமைதி ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. ஆனால் மற்ற நகரங்களின் மக்கள் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்கும், ஜெருஸலம் நகர மக்கள் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. அதாவது, முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாக மதினா நகரில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் உமர் (ரலி) அவர்கள் நேரடியாக வந்து இந்த நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே, அந்த மக்களின் வேண்டுகோளாக இருந்தது.



மேலும் பைத்துல் முகத்தஸ் உடைய சாவியை முஸ்லிம்களின் படைத்தளபதி அபூ உபைதா( ரலி) அவர்களிடம் ஒப்படைக்க அனைத்து பாதிரிகளும் ஒப்புக் கொண்ட போதிலும் அவர்களில் வயது முதிர்ந்த ஒரு பாதிரி மருத்துவிட்டார். காரணம் இந்த சாவியை வாங்குவதற்கு தகுதி உடையவர் உமர் ( ரலி) அவர்கள்தான் எனவே அவரிடம்தான் ஒப்படைப்பேன் என்றார். அவ்வாறு அந்த பாதிரி கூறியதற்கும் ஒரு காரணம் உண்டு. உமர் ( ரலி) அவர்களுக்கு 25 வயது இருக்கும் சமயத்தில் நபி( ஸல்) அவர்களுக்கு நபி பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பு உமர் ( ரலி)  அவர்கள் வியாபார நிமித்தம் ஷாம் தேசம் சென்றிருந்தார்கள் அங்கு அவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒருவன் வேண்டுமென்றே தகராறு செய்தான்.அவனை உமர் ரலி ஓங்கி அடிக்க அவன் இரந்து விடுகிறான்.மக்கள் உமர் ரலி அவர்களை அடிக்க துரத்தி வருகின்றார்கள் உமர் ரலி பைத்துல் முகத்தஸில் நுழைந்து விடுகிறார்கள் அங்கே ஒரு பாதிரி இருக்கிறார் அவரிடம் நடந்த விபரத்தை கூறுகின்றார்கள்.இதைக்கேட்ட பாதிரி இவ்வாறு கூறினாராம் ஒரு காலம் வரும் அன்று இந்த நகரத்தையும் இந்த பைத்துல் முகத்தஸையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள்  அன்றைய நாளிள் என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று இப்பொழுதே எனக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்றார். உமர் ரலி அவர்களுக்கு அவர் சொன்னது புதிராக இருந்தது நான் இந்த நகரத்தை வெற்றி கொள்வேனா? என்று வியந்தார்கள். மீண்டும் மீண்டும் பாதிரி வற்புருத்தவே வேறு வழியின்றி கையெழுத்திட்டார்கள்.எனவேதான் அந்த பாதிரி உமர் வரவேண்டும் அவரிடம்தான் சாவியை ஒப்படைப்பேன் என்றார்.



இதனையறிந்த உமர் (ரலி) அவர்கள், அலி (ரலி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, ஜெருஸலம் நகர் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றாார்கள். பைத்துல் முகத்தஸ் சாவியை அந்த பாதிரி ஒப்படைக்கும் பொழுது உமர் ரலி எழுதிக் கொடுத்த சீட்டையும் கான்பித்தார் அப்பொழுதுதான் தம்முடைய 25 ஆம் வயதில் நடந்த அந்த நிகழ்வு அவர்களுக்கு ஞாபகம் வந்ததாம். இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் எல்லாம், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அந்த மக்களை அடக்குமுறையின் கீழ் வைத்திருந்ததற்கு மாறாக, உமர் (ரலி) ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அன்றே அந்த மக்கள், இஸ்லாத்தின் உன்னதத்தைக் கண்டு கொண்டார்கள்.



தொழுகைக்கான நேரம் வந்த சமயத்தில், உமர் (ரலி) அவர்களை கிறிஸ்த்தவர்களின் கோயிலில் தொழுது கொள்ளும்படி அந்த மக்கள் வேண்டிக் கொண்ட பின்பும், அதில் தொழ மறுத்துவிட்டதுடன், பின்பு வரக் கூடிய என்னுடைய சமூகம் இது எங்கள் உமர் நின்று தொழுத இடம் என்று வாதிடாமல் இருக்கத் தான் நான் தொழ மறுக்கின்றேன் என்று கூறி அன்றே அந்த மக்களின் மத, மற்றும் சகோதர நல்லிணக்கத்திற்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார்கள். மேலும், அங்கு வாழக்கூடிய மக்களின் மத வணக்க வழிபாடுகள், அவர்களின் சின்னங்கள், வணக்கத் தளங்கள் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் , ஆக்கிரமிக்கவோ, அகற்றவோ கூடாது என உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டார்கள்.



மேற்கண்ட இந்த உத்தரவு அங்கு வாழ்ந்த கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமல்ல, யூதர்கள் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். இந்தப் புண்ணிய பூமியில் வாழ்ந்த இவர்கள், நிம்மதியாக யார் காலத்தில் வாழ்ந்தார்கள் என்றால், அது கிறிஸ்த்தவர்களான ரோமானியர்களின் ஆட்சிக் காலத்தில் அல்ல. மாறாக அது முஸ்லிம்களின் ஆட்சிக்காலத்தில் தான் என்பது உண்மையான வரலாறாகும். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற அந்தக் காலத்தில் யூதர்களும், கிறிஸ்த்தவர்களும் தங்களுக்குள் கடுமையான பகைமையைக் கொண்டிருந்தார்கள். காரணம், கிறிஸ்த்தவர்களான ரோமர்கள் யூதர்களைப் படுகொலை செய்ததது மட்டுமல்லாது, கி.பி. 325 ல் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்து கொண்டிருந்த ரோமப் பேரரசர் காண்ஸ்டான்டின் என்பவர், யூதர்களை ஜெருஸலம் உட்பட்ட பகுதிகளுக்குள் வரவே கூடாது என்ற ஒரு உத்தரவையும் பிறப்பித்தார்.


முஸ்லிம்கள் ஜெருஸலம் நகரைக் கைப்பற்றிய பின்னர் தான், அவர்கள் இந்தப் புனித பூமிக்குள்ளேயே நுழைய முடிந்தது. ஆக, இந்த யூதர்கள் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார்கள். ஆனால், முஸ்லிம்களின் ஆட்சியில் தான் இவர்கள் நிம்மதியைப் பெற்றார்கள்.



1) ரஜப் பைத்துல் முகத்தஸ் மீட்கப்பட்ட புரட்சி மாதம்

**********************************************

11.12 . 13. ஆகிய நூற்றாண்டுகளில் நடைபெற்ற சிலுவைப் போர்களின் காலத்தில் அந்தப் புனித மிக்கப் பள்ளியும் புனிதமிக்கப் பகுதியும் நிராகரிப்பாளர்களின்  அதிகாரத்தின் கீழ் சென்றது.தனால் உலக முஸ்லிம்கள் அனைவரும் மிகுந்த துக்கமும் கவலையும் மனவேதனையும் அடைந்தார்கள்.அதை மீட்கும் நாள் இனி வராதா என்று ஏங்கினார்கள்.


அன்றைய இஸ்லாமிய பேரரசுக்குள் நிகழ்ந்த உள்ளார்ந்த குழப்பங்களும் சுமார் 200 ஆண்டுகாலம் நடைபெற்ற சிலுவைப் போர்கள் தோற்றுவித்திருந்த உயிர் மற்றும் பொருளாதார இழப்பும் இஸ்லாமியப் பேரரசை மிகவும் பலவீனப் படுத்தி இருந்தது இதனால் குதுஸூம் பைத்துல் முகத்தஸூம் நிராகரிப்பாளர்களிடமிருந்து மீட்கப்படும் வாய்ப்பே இனி இல்லை என்றும் ஒரு வேளை அவை மீட்கப்பட்டு விட்டால் அது உலக வரலாற்றில் ஒரு தலைகீழ் புரட்சியாகத்தான் இருக்க முடியும் என்றும் கணிசமானோர் கருதினார்கள்.


அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் இஸ்லாமிய கிலாஃபா பேரரசின் தளபதியும் ஆட்சியாளருமான சுல்தான் சலாஹூத்தீன் அய்யூபி( ரஹ்) அவர்கள் மூலம் பைத்துல் முகத்தஸையும் அதைச் சுற்றியுள்ள குதுஸ் பகுதியையும் நிராகரிப்பாளர்களின் கரங்களிலிகுந்து இதே ரஜப் மாதத்தில் மீட்டெடுத்து மீண்டும் இஸ்லாமிய பேரரசின் மடியில் தவழச் செய்தான்.அதனால் உலக முஸ்லிம்களின் துக்கமும் கவலையும் வேதனையும் மறைந்து மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது.


மேலும் பைத்துல் முகத்தஸ் மற்றும் குதுஸ் ஆகியவற்றின் மீட்பு ரஜப் மாதத்தில் நடந்தது.அதைத் தொடர்ந்து இரண்டே மாதங்களில் சிரியா உள்ளிட்ட இஸ்லாத்தின் நிலப்பரப்புகள் சிலுவைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டது.


வியக்கத்தகு சம்பவம் ஒன்று

**********************************

மன்னர் சுல்தான் சலாஹூத்தீன் நல்ல முறையில் எகிப்து நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கும் தருணத்தில் மீண்டும் ஜெருசலத்தை பிடிப்பதற்காக ஐரோப்பிய கிருஸ்தவர்கள் பெரும் படை ஒன்றை திரட்டி வந்தார்கள். இப்படைக்கு தளபதியாக இங்கிலாந்தைச் சார்ந்த முதலாம் ரிச்சார்டு என்ற மன்னர் தலைமை தாங்கினார். இப்போர் பாலைவனத்தில் பல நாட்கள் நடந்தது. அவ்வேளையில் ரிச்சார்டுக்கு விஷக்காய்ச்சல் ஏற்பட்டு உயிர் போகும் நிலையில் இருக்கிறார். அவர்களின் ஆங்கில மருந்து எந்த பலனையும் தரவில்லை.ஒரு நாள் ஒரு வைத்தியர் ரிச்சார்டின் கூடாரத்திற்கு முன்பு வந்து நின்று என்னை வைத்தியம் செய்வதற்காக சலாஹூத்தீன் என்ற அரசர் அனுப்பி வைத்தார் எனக்கூற  அங்கிருந்தவர்கள் அவரை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். இதையறிந்த வைத்தியர் உங்கள் தளபதிக்கு மருந்து கொடுக்குமுன் அதை நான் சாப்பிட்ட பிறகே கொடுக்கிறேன் எனக் கூறினார்.அவர்களும் அனுமதித்தார்கள். மருத்துவம் செய்தார் வைத்தியர். நோயும் குணமடைந்தது. மன்னர் ரிச்சார்டு மனம் திருந்தி சமாதான உடன்படிக்கையை சமர்ப்பித்தார். சுல்த்தான் சலாஹூத்தீன் அவர்களின் அரசவைக்கு மன்னர் ரிச்சார்டு நேரில் சென்றார். சுல்தான் சலாஹூத்தீன் ரிச்சார்டுவை அன்புடன் வரவேற்றார். என்ன ஆச்சர்யம்! மன்னர் ரிச்சார்டுவின் கண்கள் படபடத்தன. என் நோயினை போக்க வைத்தியராக வந்தவர் சுல்தான் சலாஹூத்தீன் அவர்களா? இத்தகு வீரரை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக் கூறி கரம்பற்றி அழுகிறார். இதுவல்லவா மனித நேயம் ஆம் இஸ்லாம் இதைத்தான் போதிக்கிறது.



2) கிலாஃபத் ஆட்சி முடிவடைந்தது ரஜபில்தான்

**********************************************

அண்ணல் நபி( ஸல்) அவர்களால் நிலைநாட்டப்பட்ட நபித்துவ அரசு.அவர்களின் மறைவிற்குப் பிறகு கிலாஃபா பேரரசாக விரிவடைந்தது 1924 ஆம் ஆண்டுவரை கம்பீரமாக உலகை மேலாண்மை செலுத்தியது. அந்த பேரரசின் கீழ் ஒரே கொடியின் கீழ் ஒரே கலீஃபாவின் கீழ் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயமாகப் பின்னிப் பிணைந்து பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். ஆனால் அதைச் சகித்துக் கொள்ள விரும்பாத நிராகரிப்புச் சர்வாதிகாரிகள் சதிகள். பேரங்கள். தந்திரங்கள். கூலிப்படைகள். கைக்கூலிகள் முதலான ஆள்.அம்பு. சேனை என்று அனைத்தையும் களத்தில் இறக்கிவிட்டு.நீண்ட கால முயற்சிக்குப் பின்னர் அந்தப் பேரரசை - உலக முஸ்லிம்களுக்கு எந்தப் பேரரசு பாதுகாப்புக் கேடயமாக விளங்கியதோ அந்தப் பேரரசை - ஹிஜ்ரி 1342 ஆம் ஆண்டு ரஜப் மாதம் 28 ஆம் நாள் அன்று( 03/03/1924) துண்டு துண்டாக உடைத்தெறிந்தார்கள்.


وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌‏ 

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 8:46)


3) மிஃராஜ் பயணம் நடந்ததும் ரஜபு பிரை 27 ல் தான்.  எனவே அது சம்மந்தமான குறிப்புகளை கீழ் உள்ள நமது தளத்தின் லிங்கில் சென்று பார்க்கவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.