வெள்ளி, 30 செப்டம்பர், 2016

ஹிஜ்ரி புத்தாண்டும் ஹிஜ்ரத் தரும் படிப்பினைகளும்

بسم الله الرحمن الرحيم
ஹிஜ்ரி புத்தாண்டும் ஹிஜ்ரத் தரும் படிப்பினைகளும்
**************************************************
وَالَّذِيْنَ هَاجَرُوْا فِى اللّٰهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا لَـنُبَوِّئَنَّهُمْ فِى الدُّنْيَا حَسَنَةً‌   وَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُ‌ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَۙ‏  (16:41
(ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ اﻟﻌﺎﺹ ﻗﺎﻝ قال رسول الله صلي الله عليه وسلم ﺃﻥ اﻟﻬﺠﺮﺓ ﺗﻬﺪﻡ ﻣﺎ ﻛﺎﻥ ﻗﺒﻠﻬﺎ 
*********************************************************
முஹர்ரம் மாதத்தின் சிறப்பு
**********************************
 
வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வால் கண்ணியாமாக்கப்பட்ட  நான்கு மாதங்களில் முஹரம் மாதமும் ஒன்றாகும் மேலும் இது ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகவும் அமைந்துள்ளது.
إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين (التوبة :36)
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல;குர;ஆன; 9 : 36 )
عن أبي بكرة رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: ” الزمان قد استدار كهيئته يوم خلق الله السموات والأرض، السنة اثنا عشر شهرا، منها أربعة حرم، ثلاثة متواليات: ذو القعدة وذو الحجة والمحرم، ورجب مضر، الذي بين جمادى وشعبان ” (صحيح البخاري : 3197 )
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.     (புஹாரி : 3197)
ஹிஜ்ரி காலண்டரின்வரலாறு 
***********************************
மனித குலத்திற்கு காலண்டர் மிகமிக முக்கியமாகும் அதன் மூலம் பல பலன்கள்  உள்ளன.
1. 
நாட்களை தீர்மானிக்க முடியும்
2. 
கடந்த கால வரலாறுகளை பதிவு செய்ய முடியும்
3. 
வரும் காலங்களில் ஆற்ற வேண்டிய பணிகளை குறித்து முறையாக திட்டமிட முடியும் இன்னும் இது போன்ற பல நன்மைகள் உள்ளன. காலண்டர் இல்லையென்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் விளங்கும்.
      
இப்படிப்பட்ட  காலண்டரை ஒவ்வொரு சமுதாயத்தவர்களும் தங்களின் கொள்கைகளை பறைசாட்டும்  விதமாக தங்களின் காலண்டரை அமைத்துள்ளார்கள் இதன் படி யூதர்கள் மூஸா (அலை) அவர்ளின்  பிறப்பை அடிப்படையாக கொண்டும் கிருஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களின் பிறப்பை அடிப்படையாகக்  கொண்டும் காலண்டரை அமைத்துள்ளார்கள்முஸ்லிம் சமுதாயத்திற்கும் காலண்டரை உருவாக்க வேண்டிய கட்டாய சூழல்ஏற்பட்டது.
பதினேழாம் வயதில் பிரந்த ஹிஜ்ரி புத்தாண்டு
***************************************
وإنما أرخ عمر بعد سبع عشرة من مهاجرة رسول الله صَلَّى الله عليه وآله وَسَلَّمَ، وذلك أن أبا موسى الأشعري كتب إِلى عمر: إنه يأتينا منك كتب ليس لها تاريخ. قال: فجمع عمر الناس للمشورة، فقال بعضهم: أرخ لمبعث رسول الله صَلى اللهُ عَلَيه وآله وَسَلَّمَ، وقال بعضهم: أرخ لمهاجرة رسول الله صَلَّى الله عليه وآله وَسَلَّمَ، فقال عمر: لا بل نؤرخ لمهاجر رسول الله صَلى اللهُ عَلَيه وآله وَسَلَّمَ، فإن مهاجره فرق بين الحق والباطل. المنتظم في تاريخ الملوك والأمم
[ذِكْرُ الْوَقْتِ الَّذِي ابْتُدِئَ فِيهِ بِعَمَلِ التَّارِيخِ فِي الْإِسْلَامِ]
وَالصَّحِيحُ الْمَشْهُورُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَمَرَ بِوَضْعِ التَّارِيخِ.
وَسَبَبُ ذَلِكَ أَنَّ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ كَتَبَ إِلَى عُمَرَ: إِنَّهُ يَأْتِينَا مِنْكَ كُتُبٌ لَيْسَ لَهَا تَارِيخٌ. فَجَمَعَ النَّاسَ لِلْمَشُورَةِ، فَقَالَ بَعْضُهُمْ: أَرِّخْ لِمَبْعَثِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -. وَقَالَ بَعْضُهُمْ: أَرِّخْ لِمُهَاجَرَةِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ عُمَرُ: بَلْ نُؤَرِّخُ لِمُهَاجَرَةِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَإِنَّ مُهَاجَرَتَهُ فَرْقٌ بَيْنَ الْحَقِّ وَالْبَاطِلِ، قَالَهُ الشَّعْبِيُّ.
الكامل في التاريخ
உமர் (ரழி) அவர்களின்ஆட்சியின் போது அபூமூஸா அல்அஷ்அரிய்யி (ரழி) அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ஷஃபான் என்று மட்டும்  குறிக்கப்பட்டிருந்தது பின்னர் அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள் அதில் எங்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் ஷஃபான்  என்று குறிப்பிடப்பட்டிருந்ததது. அது கடந்த  ஷஃபானா? அல்லது  எதிர்வரும் ஷஃபானா என்று தெரிய வில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். இக்கடிதத்தைக் கண்டதும் உமர் (ரழி) அவர்கள் ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டினார்கள் அதில்  பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் இறுதியில் ஹஜ்ரியை மையமாக வைத்து இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர்  உருவாக்கப்பட்டது. அப்போது ஹிஜ்ரத் நடந்து பதினேழு வருங்கள் ஆகியிருந்தன.
இந்த காலணடர் சந்திரனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும் சந்திர காலண்டரில் மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்கள் மட்டுமே இடம் பெறும் 28 நாட்களோ அல்லது 31 நாட்களோ வராது.
அல்லாஹ் கூறுகின்றான்.
هُوَ الَّذِىْ جَعَلَ الشَّمْسَ ضِيَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَ‌ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَـقِّ‌ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏  
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
(
அல்குர்ஆன் : 10:5)
وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ‏ 
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
(
அல்குர்ஆன் : 36:39)
இது இஸ்லாமிய வரலாற்றில் செய்யப்பட்ட மிக முக்கியமான  ஒரு காரியமாகும் ஆனால் முஸ்லிம் சமுதாயம் இக்காலண்டரை பெயரளவில் வைத்துக் கொண்டு கிருஸ்தவ காலண்டரைத்தான் செயல்படுத்துகின்றனர் இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்றால்  மாதச்சம்பளம் வழங்கல் போன்ற  நமது அலுவல்களை சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் அமைக்க வேண்டும்.
உமர்(ரலி) அவர்கள் ஹிஜ்ரத்தை ஏன் தேர்வு செய்தார்கள்.
******************************************
மற்ற விசயங்களும் கூட உலக வரலாற்றிலும் முஸ்லிம் சமூகத்திலும் முக்கியமானவை தான் என்றாலும் அவை அனைத்தையும் விட ஹிஜ்ரத் மிக முக்கியமானது .என்பதே உமர் (ரலி) அவர்களின் முடிவுக்கு காரணம். ஏனெனில்
Ø ஹிஜ்ரத் இஸ்லாமிய சமுதாயத்தின் மாபெரும் திருப்புமுனை.
Ø
இஸ்லாம் ஒரு தனி நபரால் அல்லது ஒரு சிறிய குழுவினரால் கடைபிடிக்கப்படும் மார்க்கம் என்றில்லாமல் சமூக வடிவம் பெற காரணமாக இருந்தது ஹிஜ்ரத்
Ø
இஸ்லாம் ஆட்சி வடிவம் பெற காரணமாக இருந்தது ஹிஜ்ரத்.
Ø
இஸ்லாம் ஒரு சர்வதேச வடிவம் பெற காரணமாக இருந்தது ஹிஜ்ரத்.
ஹிஜ்ரத் செய்தவர்களின் சிறப்பு
**********************
وَالَّذِيْنَ هَاجَرُوْا فِى اللّٰهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا لَـنُبَوِّئَنَّهُمْ فِى الدُّنْيَا حَسَنَةً‌   وَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُ‌ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَۙ‏  
கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது;
(
அல்குர்ஆன் : 16:41)
28 -[27] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ اﻟﻌﺎﺹ ﻗﺎﻝ قال رسول الله صلي الله عليه وسلم ﺃﻥ اﻟﻬﺠﺮﺓ ﺗﻬﺪﻡ ﻣﺎ ﻛﺎﻥ ﻗﺒﻠﻬﺎ
ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள் அதற்கு பின்புதான் ஹிஜ்ரத் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
3852- حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا بَيَانٌ وَإِسْمَاعِيلُ قَالاَ سَمِعْنَا قَيْسًا يَقُولُ: سَمِعْتُ خَبَّابًا يَقُولُ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهْوَ مُتَوَسِّدٌ بُرْدَةً، وَهْوَ فِي ظِلِّ الْكَعْبَةِ، وَقَدْ لَقِينَا مِنَ الْمُشْرِكِينَ شِدَّةً فَقُلْتُ أَلاَ تَدْعُو اللَّهَ فَقَعَدَ وَهْوَ مُحْمَرٌّ وَجْهُهُ فَقَالَ: ((لَقَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ لَيُمْشَطُ بِمِشَاطِ الْحَدِيدِ مَا دُونَ عِظَامِهِ مِنْ لَحْمٍ أَوْ عَصَبٍ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَيُوضَعُ الْمِنْشَارُ عَلَى مَفْرِقِ رَأْسِهِ، فَيُشَقُّ بِاثْنَيْنِ، مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَلَيُتِمَّنَّ اللَّهُ هَذَا الأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ مَا يَخَافُ إِلاَّ اللَّهَ)). زَادَ بَيَانٌ وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ.
3852.
கப்பாப் (இப்னுல் அரத் (ரலி) அவர்கள் அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் ஒரு சால்வையைத் தலையணையாக வைத்து சாய்ந்து கொண்டிருக்க, நான் அவர்களிடம் சென்றேன். அப்போது நாங்கள் இணைவைப்பவர்களால் கடும் துன்பங்களைச் சந்தித்திருந்தோம். எனவே, நான் இறைத்தூதர் அவர்களே! எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க மாட்டீர்களா?“ என்று கேட்டேன். உடனே அவர்கள் முகம் சிவந்து போய், (எழுந்து) உட்கார்ந்து கொண்டு கூறினார்கள்: உங்களுக்கு முன் (இந்த ஏகத்துவ மார்க்கத்தைத் தழுவி) இருந்தவர் (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் கோதப்பட்டு (கொடுமைப்படுத்தப்பட்டு) வந்தார். அது அவரின் எலும்புகளையும் கடந்து சென்று அதன் கீழுள்ள இறைச்சியையும் நரம்பையும் அடைந்து விடும். (ஆனால்,) அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து (திசை) திருப்பி விட வில்லை. மேலும், அவரின் தலையின் நடுவில் ரம்பம் வைக்கப்பட்டு இரண்டு கூறுகளாக அவர் பிளக்கப்படுவார். ஆனால், அதுவும் அவரை அவரின் மார்க்கத்திலிருந்து திருப்பி விடவில்லை. நிச்சயம் அல்லாஹ் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தியே தீருவான். எந்த அளவிற்கென்றால், (தன் வாகனத்தில்) சவாரி செய்து வரும் ஒருவன், (யமன் நாட்டிலுள்ள) ஸன்ஆவிலிருந்து ஹளரமவ்த்வரை பயணம் செய்து செல்வான். (வழியில்) அவனுக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைப் தவிர வேறெந்த அச்சமும் இருக்காது. 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 63. அன்சாரிகளின் சிறப்புகள்
ஹிஜ்ரத் திட்டமிடப்பட்ட ஒரு பயணம்
***********************************
ஹிஜ்ரத்துக்காக நபியவர்கள் மேற்கொண்ட முன்னேற்பாடுகளும் அவற்றின் படிப்பினைகளும் ஏராளம் உள்ளன.
1. நபியவர்கள் ஹிஜ்ரத் மேற்கொள்ளத் தயாரானபோது மதீனாவுக்கு புலம்பெயரவிருப்பதை இரகசியமாகவே வைத்திருந்தார்கள். இந்த இரகசியம் அபூ பக்ர், அலி (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவருக்கு மாத்திரமே தெரிந்திருந்தது. ஏனெனில், குறைஷிக் காபிர்கள் நபியவர்களின் ஒவ்வொரு அசைவையும் மிகக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தார்கள். இப்பயணத்தை மேற்கொள்வதற்காக ஒரு ஒட்டகத்தையும் இரகசியமாகவே ஏற்பாடு செய்கிறார்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு தோழரையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
2. பயணத்தின்போது மக்காவிலிருந்து மதீனா நோக்கிச் செல்லும் வழமையான பாதையை விடுத்து வேறொரு பாதையை தேர்ந்தெடுக்கின்றார்கள். அப்பாதைக்கு வழிகாட்டியாக அப்துல்லாஹ் இப்னு உரைகத் எனும் முஸ்லிமல்லாத ஒருவரை நியமித்தார்கள். முஸ்லிம்கள் பயனளிக்கக்கூடிய தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக முஸ்லிமல்லாதவரின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்ற படிப்பினை இங்கு கிடைக்கிறது.
3. அவர்கள் இருவருக்கும் உணவு கொண்டுவந்து கொடுக்கும் பொறுப்பை அஸ்மா பின்த் அபீ பக்ர் ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு வழங்குகின்றார்கள்.
4. தனது படுக்கையில் தனக்குப் பதிலாக அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் வழித்தோழராக அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் தெரிவு செய்தமை எவ்வளவு பொருத்தமானது என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
5. உணவு கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்டவர்கள் வருகின்றபோது அவர்களின் கால் அடையாளங்கள் மணலில் பதியும். அவற்றை வைத்து குறைஷிக் காபிர்கள் அவர்களை வந்தடைந்துவிடக் கூடும் என்று அஞ்சிய தூதர், ஆமிர் இப்னு ஸுஹைரா என்பவரை அடையாளங்களை அழிப்பதற்கு நியமித்தார்கள். அவர் ஆட்டு மந்தையோடு அப்பகுதிக்கு வருவதன் மூலம் அந்த காலடித் தடங்கள் அழிக்கப்பட்டுவிடும். ஆட்டு மந்தையி லிருந்து பால் கறந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடும் அத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட பயணமாகவே ஹிஜ்ரத் அமைந்தது.
உண்மையில் திட்டமிடல் என்பது இஸ்லாமிய நோக்கில் ஈமானுக்கோ, தவக்குலுக்கோ முரணானது அல்ல என்பதை நபியவர்கள் ஹிஜ்ரத்தின்போது எடுத்துக் காண்பித்தார்கள். அல்லாஹ் நாடியிருந்தால் அல்லது நபியவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்திருந்தால் இந்த ஹிஜ்ரத் வெறும் அற்புதமாக நிகழ்ந்திருக்க முடியும். எனினும், தான் முழு மனித சமூகத்துக்கும் முன்மாதிரியாக இருப்பவர் என்ற வகையில் சகலரும் பௌதிகக் காரணிகளைக் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என்ற செய்தியை இங்கு சொல்லியிருக்கின்றார்கள்.
மதீனாவாசிகளுடன் உடன்படிக்கை
**********************************
நபியவர்கள் மதீனா பூமியைத் தெரிவு செய்தபோது மதீனத்து சமூகம் பொருத்தமா என்பது பற்றி மிக ஆழமாக சிந்தித்தார்கள். அதனை உறுதி செய்து கொள்வதற்காக இரண்டு உடன்படிக்கைகளை (முதலாம், இரண்டாம் அகபா உடன்படிக்கைகள்) செய்தார்கள். மதீனாவின் முக்கியமான இரு கோத்திரங்களான அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்களுடன் இவ்வுடன்படிக்கையைச் செய்தார்கள். அவ்வுடன்படிக்கையில் இவ்வாறு சொன்னார்கள்.
நான் மதீனாவுக்கு வந்தால் எனக்கு நீங்கள் அபயமளிக்க வேண்டும் எனக்கு முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும் அதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
எனவே, இஸ்லாம் சொல்கின்ற தவக்குல் ஈமான்-யகீன்-திட்டமிடல் ஆகியவற்றுக்கிடையில் எத்தகைய முரண்பாடும் இல்லை என்பதை மிக அழகாக, தெளிவாகச் சொல்கின்ற ஒரு நிகழ்வாக ஹிஜ்ரத்தை குறிப்பிட முடியும். இன்றைய முஸ்லிம் உம்மத்தின் அவல நிலைக்கான காரணங்களுள் மிக முக்கியமானது முஸ்லிம் சமூகத்தில் தனி மனித, குடும்ப, சமூக வாழ்க்கையில் திட்டமிடல் இல்லாமையே.
ஹிஜ்ரத்தின் போது ஏற்பட்ட அற்புதங்கள்
************************************************
இந்த பயணத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
A.நபியவர்கள் தம்மைச் சூழ்ந்திருந்த எதிரிகளின் கண்களில் படாமல் வெளியேறுவதற்கு அல்லாஹ் எதிரிகளின் பார் வையை மறைத்து உதவி புரிந்தான். நபியவர்கள் பின்வரும்
குர்ஆன் வசனத்தை ஓதியவர்களாக வீட்டிலிருந்து வெளியேறினார்கள். எதிரிகள் எவரும் நபியைக் காணவில்லை.
وَجَعَلْنَا مِنْ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ‏  
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
(
அல்குர்ஆன் : 36:9)
B.எதிரிகள் மிக அருகில் இருந்தாலும் அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் என்ற நம்பிக்கையால் அல்லாஹ்வின் உதவி கி்டைத்தது.
தௌர் குகையின் வாயிலை அடைக்கும் வண்ணம் சிலந்தி பூச்சியைக் கொண்டு வலை ஒன்று பின்னி முடிக்குமாறு செய்தான் இறைவன்.
اِلَّا تَـنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِىَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا‌  فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلَيْهِ وَاَ يَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰى‌  وَكَلِمَةُ اللّٰهِ هِىَ الْعُلْيَا  وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏ 
(
நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
(
அல்குர்ஆன் : 9:40)
C.சுராகா என்பவர் நபியவர்களைக் கொலை செய்யும் நோக்கில் குதிரையிலே துரத்தி வந்தார். சுராகா நபியவர்களை நெருங்கும்போதெல்லாம் அவருடைய குதிரை பூமியில் புதைந்து கீழே விழுந்தது. நபியவர்கள் சுராகாவைக் கண்டார்கள். அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அஞ்சியபோதும், நபியவர்கள் அஞ்சவில்லை. முன்னாயத்தங்களைச் செய்தபோதிலும் அல்லாஹ் தனக்கு நிச்சயம் உதவி செய்வான் என்று உறுதியாக நம்பி தவக்குல் வைத்தார்கள். அல்லாஹ் உதவி செய்தான். சுராகாவின் குதிரை பல தட வைகள் மண்ணில் புதையுண்டு விழுகிறது. இதனைக் கண்ட சுராகா நுபுவ்வத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தைத் தழுவுகிறார்.
ஹிஜ்ரத்தின் விளைவுகள்
*******************************
ஹிஜ்ரத்தின் பின் நபியவர்கள் அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும் சகோதரக் கட்டுக்கோப்பில் பிணைத்தார்கள். அந்த சகோதரக் கட்டுக்கோப்பில் மதீனா சமூகம் உருவாகியது. மக்காவிலே தனிமனிதர்களாக சிதறி வாழ்ந்தவர்கள் மதீனாவில் ஒரு சமூகமாக கட்டுக்கோப்பாக இணைகின்றார்கள்.
மஸ்ஜித் நிர்மாணம்
************************
அடுத்ததாக, நபி (ஸல்){ அலை'வஸல்லம் அவர்கள் மேற் கொண்ட பணி மதீனாவில் ஒரு மஸ்ஜிதைக் கட்டி எழுப்பியமை. அந்த சமூகத்தின் மத்திய நிலையமாக, அனைத்து விவகாரங்களுக்குமான கேந்திர நிலையமாக மஸ்ஜிதுந் நபவி அமைந்தது. எனவே, முஸ்லிம் உம்மத் என்பது மஸ்ஜிதை மையமாகக் கொண்டு சுற்றிச் சுழலுகின்ற ஒரு உம்மத் என்பதையும் அந்த மஸ்ஜிதின் நிழலிலேதான் முஸ்லிம் சமூகக் கட்டுக்கோப்பு உறுதியும் ஸ்திரமும் அடைய முடியும் என்பதையும் 'ஹிஜ்ரத்தின் பின்னால் தோன்றிய மதீனாவின் இஸ்லாமிய சமூக அமைப்பிலே காண முடிகிறது.
நாமும் ஹிஜ்ரத் செய்வோம்
********************************
2346 -[24] (ﻟﻢ ﺗﺘﻢ ﺩﺭاﺳﺘﻪ) ﻭﻋﻦ ﻣﻌﺎﻭﻳﺔ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﻨﻘﻄﻊ اﻟﻬﺠﺮﺓ ﺣﺘﻰ ﻳﻨﻘﻄﻊ اﻟﺘﻮﺑﺔ ﻭﻻ ﺗﻨﻘﻄﻊ اﻟﺘﻮﺑﺔ ﺣﺘﻰ ﺗﻄﻠﻊ اﻟﺸﻤﺲ ﻣﻦ ﻣﻐﺮﺑﻬﺎ» . ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ ﻭﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﻟﺪاﺭﻣﻲ
ஹிஜ்ரத்தின் அசல் அர்த்தமே வெறுப்பதும் விலகுவதுமாகும் அந்த வகையி்ல் நாம் செய்ய வேண்டிய ஹிஜ்ரத்தையும் நினைவில் கொல்வோம்.
பாவங்களை விட்டும் விலகுவதும் ஹிஜ்ரத்தாகும்
6 -[5] (ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ) ﻭﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﻤﺮﻭ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ «اﻟﻤﺴﻠﻢ ﻣﻦ ﺳﻠﻢ اﻟﻤﺴﻠﻤﻮﻥ ﻣﻦ ﻟﺴﺎﻧﻪ ﻭﻳﺪﻩ ﻭاﻟﻤﻬﺎﺟﺮ ﻣﻦ ﻫﺠﺮ ﻣﺎ ﻧﻬﻰ اﻟﻠﻪ ﻋﻨﻪ» ﻫﺬا ﻟﻔﻆ اﻟﺒﺨﺎﺭﻱ ﻭﻟﻤﺴﻠﻢ ﻗﺎﻝ: " ﺇﻥ ﺭﺟﻼ ﺳﺄﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﺃﻱ اﻟﻤﺴﻠﻤﻴﻦ ﺧﻴﺮ؟ ﻗﺎﻝ: ﻣﻦ ﺳﻠﻢ اﻟﻤﺴﻠﻤﻮﻥ ﻣﻦ ﻟﺴﺎﻧﻪ ﻭﻳﺪﻩ "
3833 -[46] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺣﺒﺸﻲ: ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ  ﻗﻴﻞ: ﻓﺄﻱ اﻟﻬﺠﺮﺓ ﺃﻓﻀﻞ؟ ﻗﺎﻝ: «ﻣﻦ ﻫﺠﺮ ﻣﺎ ﺣﺮﻡ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ» 
சுயபரிசோதனை
********************
ஒவ்வொரு ஆண்டின்முடிவிலும் துவக்கத்திலும் கடந்த ஆண்டில் நாம் என்ன பணியாற்றியுள்ளோம்  இனி வரும் ஆண்டில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் என்னென்ன? என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு சுய பரிசோதனையையும்  திட்டமிடலையும் மேற்கொள்ள வேண்டும்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ‌  وَاتَّقُوا اللّٰهَ‌ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏  
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
(
அல்குர்ஆன் : 59:18)
وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ نَسُوا اللّٰهَ فَاَنْسٰٮهُمْ اَنْفُسَهُمْ‌ اُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏  
அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.
(
அல்குர்ஆன் : 59:19)
وقال عمر بن الخطاب رضي الله عنه: ( حاسبوا أنفسكم قبل أن تحاسبوا، وزنوها قبل أن توزنوا، فإن أهون عليكم في الحساب غداً أن تحاسبوا أنفسكم اليوم، وتزينوا للعرض الأكبر، يومئذ تعرضون لا تخفى منكم خافية