வியாழன், 25 பிப்ரவரி, 2016

வள்ளல் நபியின் வைத்திய முறை -பாகம்-2

வள்ளல் நபியின் வைத்திய முறை -பாகம்-2
  قال الله تعالى حكاية عن قول ابراهيم عليه السلام:واذا مرضت فهو يشفين.(26:80
 قال نبي الله عليه الصلوة والسلام:فعليه بالصوم فانه له وجاء......(متفق عليه ) 
 
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்  தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மீது என்றென்றும் உண்டாவதாக ஆமீன்.                                    
நோயைப் படைத்த இறைவன் நிவாரணியையும்  படைத்துள்ளான். நோய் வந்த பின்னர் மருத்துவம் செய்யும் வழிமுறைகளையும் நாம் நபிமருத்துவத்தில் பார்க்கிறோம்.நோய் வருவதற்கு முன்பே தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளயும் நபி ஸல் அவர்கள் நமக்குகற்றுத் தந்துள்ளார்கள்.   
நோய் வருவதற்கு முன்பே நாம் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது. 
அதில் முதன்மையானது   நோன்பு. இது இறைவனை நெருங்கும் அமல் மட்டுமல்ல மனிதனை உடல் ரீதியிலும் ஆரோக்கியத்துடன் வாழவைக்கும் உய ர்ந்த மருத்துவம்.எனவே தான் நபி ஸல் அவர்கள் ந:.பிலான நோன்புகளை மிக அதிகமாக நோற்பவர்களாக  இருந்திருக்கிறார்கள்.                 நோன்பு மிகப் பெரும் நோயான மனோ இச்சைக்கும் மருந்தாக கட்டுப்பாட்டு கருவியாக இருக்கிறது.ஆனால் நமது சமூகம் இந்த நபி வழக்கை பின்பற்றத் தவறியதால் நிறைய சொல்ல முடியாத நோய்களில் சிக்கித் தவிக்கிறது.      புகாரி ஷரீ:.பில் ஹஜ்ரத் அபூதர்தா ரலி அவர்களின் ரிவாயத் வருகிறது  அவர்கள் அதிகாலைப் பொழுதில் தொழுகையை முடித்து விட்டு வீட்டுக்கு வருவார்கள் வீட்டில் உண்ண உணவேதும் உள்ளதா என விசாரிப்பார்கள் ஒன்றும் இல்லை என்று சொல்லப்பட்டால் நான் நோன்பு வைத்துக் கொள்கிறேன் என்று சொல்வார்கள்...  இது போன்று அபூ ஹுரைரா ரலி, அபூதல்ஹா ரலிஇப்னு அப்பாஸ் ரலி. போன்ற ஸஹாபாக்களும் செய்வார்கள். இது நபி ஸல் அவர்களிடமிருந்து இவ ர்கள் கற்ற மருத்துவம்....இன்னும் நபி ஸல் அவர்கள் ஷ:.பான் மாதத்தில் பெரும்பகுதி நோன்பு நோற்பார்கள்..மேலும் ஹதீஸ் ஷரீ:.பில் வருகிறது "யார் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ஒரு ந:.பிலான நோன்பு நோற்பாரோ அவருக்கும் நரகத்திற்கும் மத்தியில் முட்டையிலிருந்து வெளியான பறவைக் குஞ்சு அப்போதிருந்து மரணமாகும் வரை பறந்தால் எவ்வளவு தூரம் பறக்குமோ அவ்வளவு இடைவெளியை அல்லாஹ்      ஏற்படுத்துகிறான்.     (நூல் அஹ்மத்)  
 
 
நோன்பின் மூலம் நாம் ஆன்மீக ...பலத்தையும் பெருகிறோம்..........    .....
அடுத்து தற்காப்பு வைத்திய முறையில் உணவுக் கட்டுப்பாடு இன்றியமையாதது.     நோய் வந்த பின் மருத்துவம் செய்வதில் . நம் உணவுப் பழக்கங்கள் கவனிக்கத்தக்கது.
1) பேரீத்தம் பழத்தின் மூலம் மருத்துவம்
*********************************************
பேரீத்தம்பழம் மிகச் சிறந்த உணவு-நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. மேலும் கர்ப்பிணிகள் பிள்ளை பெற்ற பிறகு ஏற்படும் இரத்தப்போக்கின் போது சிறந்த ஊட்டச்சத்தாக இருக்கிறது.
எனவே தான் இறைவன் ஹஜ்ரத் மர்யம் அலைஹிவஸல்லம் அவர்கள் ஈஸா நபியை பெற்றெடுத்த தருணத்தில்  وهزي اليك بجذع النخلة என்று பேரீத்தங்கனியை மற்ற பழங்களைக் காட்டிலும் சிறப்பு படுத்தி கூறியுள்ளான்.
உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரீத்தம்பழம் அருமருந்தாக இருக்கிறது. மனித உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான பொட்டாசியம் என்ற புரதச் சத்து 200 கிராம் பேரீத்தங்கனியில் இருக்கிறது.

ஹதீஸ் ஷரீ:.பில் வருகிறது யார் அதிகாலையில் ஏழு அஜ்வா வகை பேரீத்தங்கனியை சாப்பிடுவாரோ அவருக்கு சூனியம் , நஞ்சு ஆகியவை அன்றைய தினத்தில் எந்த இடையூறும் செய்யாது.(நூல் புகாரி முஸ்லிம்)
2)மாட்டுப் பாலின் மூலம் மருத்துவம்
*************************************
 
பாலைப் பற்றிஅல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகிறான்.

و ان لكم في الانعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين.(14:66)

எளிதில் செரிக்கும்  அருமையான பானத்தை கால்நடைகளின் வயிற்றிலிருந்து சாணத்திற்கும் இரத்தத்திற்கும் மத்தியிலிருந்து  உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்.என்பதாக......              பாலை மட்டும் தான் நபி ஸல் அவர்கள் "யா அல்லாஹ் இதில் பரகத் செய்து இதிலிருந்து எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக" என்று துஆ செய்துள்ளார்கள் வேற எந்த பானத்தின் விஷயத்திலும் இவ்வாறு சொன்னதில்லை...      மற்ற பானங்கள் உணவுகளின் விஷயத்தில் "யா அல்லாஹ் இதில் பரகத் செய்து இதை விட சிறந்த உணவை எங்களுக்கு தருவாயாக "என கேட்க சொன்னார்கள் நபியவர்கள். எனவே கலப்படமற்ற நாட்டு பசும்பால் உடலுக்கு மிகச்சிறந்த உணவும் ,மருந்துமாகும். 

عن ابن مسعود رَضِيَ اللَّهُ عَنْهُ ان النبي الله صلي الله عليه وسلم قال; عليكم بالبان البقر فانها ترم من كل الشجر وهو شفاء من كل داء[اخرجه الحاكم]

நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பசும்பாலைப் பற்றிப் பிடியுங்கள் ஏனெனில் அது எல்லா மரம் செடிகளிளெல்லாம் மேய்கிறது. அது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.....[நூல் ;ஹாகிம்
3) ஜம்ஜம் நீரின் மூலம் மருத்துவம்
***************************************

  قال النبي صلي الله عليه وسلم:ماء زمزم لما شرب له

ஜம்ஜம் நீர் எந்த எண்ணத்தில் குடிக்கப் படுமோ அவ்வாறே ஆகும்" என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.    
உலகில் இருக்கும் தண்ணீரில் மிகச் சுத்தமான 0% மாசுள்ள தண்ணீர் அது பானமாக மட்டுமல்ல ,உணவாகவும், மருந்தாகவும் உள்ளது.  அக புற இரு நோய்களுக்கும். நிவாரணியாக உள்ளது.               
  4, )தேன்
;قال تعالي:"يخرج من بطونها شراب مختلف فيه شفاء للناس.....
தேனீயின் வயிற்றிலிருந்து பலதரப்பட்ட பானங்கள் வெளியேறுகிறது அதில் மனிதர்களுக்கு நிவாரணம் இருக்கிறது. 
5) பால் பாயாசத்தின் மூலம் மருத்துவம்
*******************************************
பால் பாயசம்இது நோயாளிகளின் இருதயத்தை பலப்படுத்தும் என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்

.5689- 
صحيح البخاريٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينِ لِلْمَرِيضِ وَلِلْمَحْزُونِ عَلَى الْهَالِكِ، وَكَانَتْ تَقُولُ إِنِّي سَمِعْتُرَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنَّ التَّلْبِينَةَ تُجِمُّ فُؤَادَ الْمَرِيضِ، وَتَذْهَبُ  بِبَعْضِ الْحُزْنِ)).
5689.
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்  (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) நோயாளிக்கும், இறந்தவரை எண்ணி வருந்துபவருக்கும் தல்பீனா“ (பால் பாயசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். மேலும், “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , “தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலைகளில் சிலவற்றைப் போக்கும்என்று கூறக் கேட்டுள்ளேன்என்பார்கள்.11
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம் 
இதைத் தான் இன்றைய மருத்துவர்கள் கஞ்சி சாப்பிடும் படி நோயாளிகளுக்கு ஆலோசனை யாக கூறுகிறார்கள்.    
6) இரத்தம் உறுஞ்சுவதின் மூலம் மரு்துவம்
**************************************
 
அடுத்து வைத்திய முறைகளில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நமக்கு வலியுறுத்தியது இரத்தம் உறிஞ்சுவது ;  " மனித உடலில் ஏற்படும் வியாதிகளுக்கும், வலிகளைக்கும் அடிப்படை கெட்ட இரத்தங்கள் தான் அதை உறிஞ்சி எடுத்து விட்டால் அந்த வியாதி குணமாகும். மருந்துகள் மூலம் மருத்துவம் செய்யும் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும். ஆனால் மீண்டும் வருவதை தடுக்க முடியாது.
 ​​  عن ابن عباس رضي  ان رسول الله صلي الله عليه وسلم قال ما مررت ليلة اسري بي بملئ من الملائكة الا كلهم يقول لي عليك يا محمد يالحجامة [رواه البخاري    

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்  இறைத்தூதர்(ஸல்) அவர்கள்  கூறினார்கள்.நான் மிஃராஜ் பயணம் சென்றிருந்த போது என்னை சந்தித்த எல்லா மலக்குமார்களும் நீங்கள் இரத்தம் உறிஞ்சும் மருத்துவ முறையை பற்றிப்பிடியுங்கள் என வலியுறுத்தினார்கள்.......
  ;[عن ابن عباس رَضِيَ اللَّهُ عَنْهُمَا عن النبي الله صلي الله عليه وسلم قال; الشفاء في ثلثة في شرطة  محجم او شربة عسل او كية بنار و انا انهي امتي عن الكي [رواه اليخاري
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 3 ல்-நோய்க்கு] நிவாரணம் உண்டு.இரத்தம் வெளியேற்றும் கருவியால்[ உடலில்] கீறிக்கொள்வது ,தேன் அருந்துவது,நெருப்பில் சூடிட்டுக்கொள்வது,இருப்பினும் நான் என் சமுதாயத்தினரை நெருப்பில் சூடிட்டுக்கொள்ள வேண்டாமென தடை விதிக்கிறேன்... என இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்...

 7)ஆறுதலான வார்த்தைகளின் மூலம் மருத்துவம்;
******************************************
நோயாலியை சந்திக்க செல்லும் போது அவரின் வியாதியை கேட்டவுடன் இவ்வளவு பெரிய வியாதியா இதற்கு மருந்தே இல்லையே இவ்வாரெல்லாம் கூறக்கூடாது அவருக்கு ஆருதல் தரும்படியான வார்த்தைகளை கூறுவதே அவரின் நோயை குணமாக்கும் தைரியத்தையும் அவருக்கு கொடுக்கும்

5661- صحيح البخاريٍ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ فَمَسِسْتُهُ وَهْوَ يُوعَكُ وَعْكًا شَدِيدًا فَقُلْتُ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا، وَذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ. قَالَ: ((أَجَلْ، وَمَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى إِلاَّ حَاتَّتْ عَنْهُ خَطَايَاهُ كَمَا تَحَاتُّ وَرَقُ الشَّجَرِ
)).

5661. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்  நபி(ஸல்) அவர்களுக்கு நோய் கண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், “தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! (இந்தத் துன்பத்தின் காரணமாக) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நன்மைகள் உண்டுதானே!எனக் கேட்டேன்.  நபி(ஸல்) அவர்கள், “ஆம். ஒரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் (அதற்கு ஈடாக), மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் தவறுகள் அவரைவிட்டு உதிராமல் இருப்பதில்லைஎன்று கூறினார்கள்.20 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 75. நோயாளிகள்

5662- صحيح البخاري عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى رَجُلٍ يَعُودُهُ فَقَالَ: ((لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ)). فَقَالَ كَلاَّ بَلْ حُمَّى تَفُورُ عَلَى شَيْخٍ كَبِيرٍ كَيْمَا تُزِيرَهُ الْقُبُورَ. قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((فَنَعَمْ إِذًا)).

5662. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த கிராமவாசி) ஒருவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்என்று கூறினார்கள்.
8) துஆவின் மூலம் மருத்துவம்
********************************

எத்தனை மருத்துவம் செய்தாலும் இறைவனின் நாட்டமின்றி எந்த மருந்தும் பயனளிக்காது.எனவே மருந்தின் மீதில்லாமல் மருந்திற்கு அந்த வலிமையை வழங்கிய வல்ல நாயனின் மீதே நம்பிக்கை இருக்க வேண்டும்  நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நமக்கு நோவின்றி வாழ்வதற்கும்,சோதனைகளிலிருந்து விடுபடுவதற்கும் இறைவனின் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைப்பதையும், இடாவிடாது அவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருப்பதையுமே வலியுறுத்தினார்கள்.
ஒவ்வொரு ஃபர்லான தொழுகைக்குப் பின்னாலும் இவ்வாறு துஆ செய்தும் வந்தார்கள்....

اللهم اني اسئلك العافية في الدنيا والاخرة....اللهم اني اسئلك الصحة والعفة.....


இது போன்ற துஆக்கள் நமக்கு கற்றுக்கொடுக்கவும் தான், வல்ல ரப்புல்
 ஆலமீன் நோயற்ற நல் வாழ்வை நமக்கு வழங்கிடுவானாக ஆமீன்......