வஃபாத் அறிவிப்பு
எங்களுடைய உஸ்தாதும் ஈரோடு, தாவூதிய்யா அரபிக்
கல்லூரியின் பேராசிரியருமான மௌலானா, அல்-ஹாஜ், P.M ஜியாவுத்தீன் தாவூதி, ஃபாஜில் பாகவி, ஹழ்ரத் அவர்கள் நேற்று மதியம் வஃபாத்தாகி
விட்டார்கள். “இன்னா லில்லாஹி வ
இன்னா இலைஹி ராஜிவூன்” ஹழ்ரத் அவர்களின் ஜனாஸா தொழுகை இன்று காலை 10:00 மணிக்கு ஈரோடு, பெரிய அக்ரஹாரம், தாவூதிய்யா அரபிக்
கல்லூரியில் [இன்ஷா அல்லாஹ்…] நடைபெறும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களுக்கு
மங்ஃபிரத் செய்து மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் சிறப்பாக்கி "ஜன்னத்துல்
பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக!
அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஸப்ரன் ஜமீலா" எனும்
அழகிய பொறுமையை தந்தருள்வானாக...!!, ஆமீன்.
சுகமாக ஓய்வெடுங்கள்!
]இடிந்து போன இதயத்தின் இரங்கல் கவிதை[
ஈரோட்டு தங்கம்...
சித்தரேவு சிங்கம்...
தாவூதியாவின் அங்கம்
ஷைஹு தப்ஸீர்...
பணிவின் பாசரை...
நயமிகு நாவலர்...
சன்மார்க்க காவலர்....
எங்கள் ஏற்றமிகு ஆசிரியர் அல்லாமா...
ஜியாவுதீன் ஹள்ரத் கிப்ளா அவர்களின் மறைவு...
தாவூதியாவின் அங்கம்
ஷைஹு தப்ஸீர்...
பணிவின் பாசரை...
நயமிகு நாவலர்...
சன்மார்க்க காவலர்....
எங்கள் ஏற்றமிகு ஆசிரியர் அல்லாமா...
ஜியாவுதீன் ஹள்ரத் கிப்ளா அவர்களின் மறைவு...
கல்வி துறைக்கு ஏற்பட்ட பேரிடி!
தாவூதியாவை தாங்கி நின்ற இரும்பு தூண்கள்
இன்று ஒன்றன் பின்
ஒன்றாக சரிய தொடங்க...
வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல
நொந்து ரணமான இதயங்கள் ஆறுவதற்குள்....
ஆறா ரணமாய்...
எங்களை விட்டு விடைபெற்றுள்ள ஆசானின் அஸ்தமம்...
சப்த நாடிகளையும்
நிசப்த்தமாக்கி நிற்கதியற்று நிலை குலைய செய்ததே!
இன்று ஒன்றன் பின்
ஒன்றாக சரிய தொடங்க...
வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல
நொந்து ரணமான இதயங்கள் ஆறுவதற்குள்....
ஆறா ரணமாய்...
எங்களை விட்டு விடைபெற்றுள்ள ஆசானின் அஸ்தமம்...
சப்த நாடிகளையும்
நிசப்த்தமாக்கி நிற்கதியற்று நிலை குலைய செய்ததே!
தன் மாணவர்கள் யாவரையும்...
அத்தா என்று அன்பொழுக அழைத்து அழகு பார்த்த எங்கள் அத்தா
அவர்களே...
இனி யார் எங்களை அத்தா என அழைப்பாரோ...?
திருமறை யின் தீட்சன்யம்...
கல்வி துறையில் பாண்டித்தியம்....
பாடம் போதிப்பதில்...
கைங்கர்யம்...
நிர்வாக திறனில் சாமர்த்தியம்....
தங்களுக்கே உரிய தனிச்சிறப்பு!
கல்வி துறையில் பாண்டித்தியம்....
பாடம் போதிப்பதில்...
கைங்கர்யம்...
நிர்வாக திறனில் சாமர்த்தியம்....
தங்களுக்கே உரிய தனிச்சிறப்பு!
அழுது வடித்த கண்ணீரின் ஈரம் காயும் முன்...
மீண்டும் ஒரு
மீளாத் துயரின் கண்ணீர் படலம்
கல்பு கசிந்துருசி
கண்களின் வழியே பயணிக்கிறதே!
மீளாத் துயரின் கண்ணீர் படலம்
கல்பு கசிந்துருசி
கண்களின் வழியே பயணிக்கிறதே!
தாவூதிகளின் உள்ளங்கள் மட்டுமின்றி...
மட்டில்லா அறிஞர்கள் பட்டாளங்களையும்...
சஞ்சலத்தில் சங்கமிக்க செய்திருக்கிறதே!
சஞ்சலத்தில் சங்கமிக்க செய்திருக்கிறதே!
உங்கள் கல்வி எங்களுடன்...!
எங்களின் நல்லமல்களின் நன்மைகள் சதக்கதுல் ஜாரியாவாக
உங்களுடன்!
தங்களின் மண்ணறை
மணவறையாய்
மணங் கமழ...
சுவன சோலையாய்
சுகமாய் திகழ...
வானவர்களின்
சோபன வாழ்த்து தங்களை அடைய...
புன்னகை தவழ
பூமான் நபியவர்களை
கண்டு மகிழ்ந்திட...
இறையருள் நிறையருளாய் நிலவ
இரு கரமேந்தி கருணையாளன் இறைவனை பிரார்த்திக்கிறேன்!
மணவறையாய்
மணங் கமழ...
சுவன சோலையாய்
சுகமாய் திகழ...
வானவர்களின்
சோபன வாழ்த்து தங்களை அடைய...
புன்னகை தவழ
பூமான் நபியவர்களை
கண்டு மகிழ்ந்திட...
இறையருள் நிறையருளாய் நிலவ
இரு கரமேந்தி கருணையாளன் இறைவனை பிரார்த்திக்கிறேன்!
கனத்த இதயமும்
கண்ணீர் துளிகளும்
என் எழுத்தை மறைத்தாலும்....
கண்ணீர் துளிகளும்
என் எழுத்தை மறைத்தாலும்....
எழுத்தை அறிவித்த ஆசானே...
உங்கள் ஒளி மிக்க
திரு முகம்
என் இதயத்தை விட்டும் மறையாது!
தங்களை சுவனம் அழைக்கிறது!
சுகமாக ஓய்வெடுங்கள்!
உங்கள் ஒளி மிக்க
திரு முகம்
என் இதயத்தை விட்டும் மறையாது!
தங்களை சுவனம் அழைக்கிறது!
சுகமாக ஓய்வெடுங்கள்!
-மௌலவி...
S. S. ஷேக் ஆதம் தாவூதி
S. S. ஷேக் ஆதம் தாவூதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.