புதன், 17 பிப்ரவரி, 2016

வள்ளல் நபியின் வைத்திய முறை


بسم الله الرحمن الرحيم            

 வள்ளல் நபியின் வைத்திய முறை

وَنُنَزِّلُ مِنَ الْـقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ‌ۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا‏  ( القران 17:82)
5692-  عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((عَلَيْكُمْ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ، فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ. يُسْتَعَطُ بِهِ مِنَ الْعُذْرَةِ، وَيُلَدُّ بِهِ مِنْ ذَاتِ الْجَنْبِ)).
رواه البخاري

மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் என்பது அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளில் மிகப்பெரிய அருட்கொடை அதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் ஆரோக்கியமான நிலைகளில் நல் அமல்களை அதிகமாக செய்து கொள்ள வேண்டும்

6412- صحيح البخاري عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ، الصِّحَّةُ وَالْفَرَاغُ)).

6412.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு  என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்ததார்கள்
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்
نص الحديث من وصايا الرسول صلي الله عليه وسلم يا ابا ذر اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ, وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ, وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شُغُلُكَ, وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ))
.

செல்வத்தை விட ஆரோக்கியமே மேலானது

5290 -[7] (ﺻﺤﻴﺢ) ﻋﻦ ﺭﺟﻞ ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: ﻛﻨﺎ ﻓﻲ ﻣﺠﻠﺲ ﻓﻄﻠﻊ ﻋﻠﻴﻨﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻋﻠﻰ ﺭﺃﺳﻪ ﺃﺛﺮ ﻣﺎء ﻓﻘﻠﻨﺎ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﻧﺮاﻙ ﻃﻴﺐ اﻟﻨﻔﺲ. ﻗﺎﻝ: ﺃﺟﻞ. ﻗﺎﻝ: ﺛﻢ ﺧﺎﺽ اﻟﻘﻮﻡ ﻓﻲ ﺫﻛﺮ اﻟﻐﻨﻰ ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺑﺄﺱ ﺑﺎﻟﻐﻨﻰ ﻟﻤﻦ اﺗﻘﻰ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﻭاﻟﺼﺤﺔ ﻟﻤﻦ اﺗﻘﻰ ﺧﻴﺮ ﻣﻦ اﻟﻐﻨﻰ ﻭﻃﻴﺐ اﻟﻨﻔﺲ ﻣﻦ اﻟﻨﻌﻴﻢ» ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ
ஒவ்வொரு நாளும் ஆரோக்கியத்திற்காக துஆ செய்து கொண்டே இருக்க வேண்டும்

2500 -[19] (ﻟﻢ ﺗﺘﻢ ﺩﺭاﺳﺘﻪ) ﻭﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﻤﺮﻭ ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «اﻟﻠﻬﻢ ﺇﻧﻲ ﺃﺳﺄﻟﻚ اﻟﺼﺤﺔ ﻭاﻟﻌﻔﺔ ﻭاﻷﻣﺎﻧﺔ ﻭﺣﺴﻦ اﻟﺨﻠﻖ ﻭاﻟﺮﺿﻰ ﺑﺎﻟﻘﺪﺭ»(مشكات المصابيح)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، أَنَّ مُعَاذَ بْنَ رِفَاعَةَ، أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، قَالَ: قَامَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ، عَلَى المِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الأَوَّلِ عَلَى المِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ: «اسْأَلُوا اللَّهَ العَفْوَ وَالعَافِيَةَ، فَإِنَّ أَحَدًا لَمْ يُعْطَ بَعْدَ اليَقِينِ خَيْرًا مِنَ العَافِيَةِ»سنن الترمذي
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ رَجُلًا قَدْ جُهِدَ حَتَّى صَارَ مِثْلَ الفَرْخِ فَقَالَ لَهُ: «أَمَا كُنْتَ تَدْعُو؟ أَمَا كُنْتَ تَسْأَلُ رَبَّكَ العَافِيَةَ» ؟ قَالَ: كُنْتُ أَقُولُ: اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " سُبْحَانَ اللَّهِ، إِنَّكَ لَا تُطِيقُهُ أَوْ لَا تَسْتَطِيعُهُ، أَفَلَا كُنْتَ تَقُولُ: اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ "

நபி(ஸல்)அவர்கள் ஒரு மனிதரை நோய் விசாரிக்கச் சென்றார்கள். அவர் குருவியைப் போல மெலிந்து போயிருந்தார். அவரிடம் நீ ஏதாவது துஆ செய்தீரா? ஆரோக்கியத்தை இறைவனிடம் கேட்டீரா? என்றார்கள்.அதற்கு அவர் நான் இவ்வாறு துஆ செய்தேன் யா அல்லாஹ் மறுமையில் ஏதாவது என்னை தண்டிக்க நாடினால் அதை உலகிலேயே கொடுத்துவிடு என்று துஆ செய்தேன் என்றார்.சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தண்டிக்க நாடினால் உண்ணால் தாங்க முடியாது. ربنا اتنا الخ யா அல்லாஹ் ஈருலகிலும் நலவை(ஆரோக்கியத்தை) தந்து விடு என்று துஆ செய்திருக்க வேண்டாமா? என்
றார்கள்
ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு இரு வழிமுறைகள் இருக்கின்றது. 1.  நோய் உண்டாகாமல் பாதுகாத்துக் கொள்வது. 2 .வந்த வியாதிக்கு சிகிச்சை செய்து சரி செய்து கொள்வது
வருமுன் காப்போம் 
**********************
( நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் .இதுவும் சிகிச்சை முறைகளில் ஒன்றுதான்)
A.மல ஜலத்தை அடக்கி வைக்க கூடாது
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ "
B.தேவையின்றி இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க கூடாது.

568  عَنْ أَبِي بَرْزَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ العِشَاءِ وَالحَدِيثَ بَعْدَهَا» صحيح البخاري

இரத்தக் கொதிப்பு/ சக்கரை வியாதி/ அல்சர். போன்ற நோய்கள் வருவதற்கு இது காரணமாகலாம்.
C.மது அருந்துதல். புகைப் பிடித்தல் கூடாது

عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ ذَكَرَ طَارِقُ بْنُ سُوَيْدٍ أَوْ سُوَيْدُ بْنُ طَارِقٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَمْرِ، فَنَهَاهُ، ثُمَّ سَأَلَهُ فَنَهَاهُ، فَقَالَ لَهُ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّهَا دَوَاءٌ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا، وَلَكِنَّهَا دَاءٌ» سنن أبي داود
D.வயிறு நிரம்ப சாப்பிடுதல்/ பசி ஏற்படாமல் சாப்பிடுதல் கூடாது

عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ. بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ» سنن الترمذي
வயிற்றை மூன்று பாகமாக பிரி்த்து ஒரு பகுதி உணவு.ஒரு பகுதி தண்ணீர்.ஒரு பகுதி மூச்சுவிடுவதற்காக. 

பசித்து சாப்பிட வேண்டும் வயிறுமுட்ட சாப்பிடகூடாது
பசி வராமல் சாப்பிட்டால் ஜீரணக்கோலாறு ஏற்பட்டு அல்சர்.புற்று நோய் வருவதற்கு வாய்ப்புண்டு
****************
2)
வந்த வியாதிக்கு சிகிச்சை செய்து சரி செய்து கொள்வது.
நோயை படைத்தவனும் அவனே. அதற்குறிய மருந்தையும் அவனே படைத்துள்ளான்
5678- ٍ صحيح البخاري عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلاَّ أَنْزَلَ لَهُ شِفَاءً)). 
[تحفة 14197].
5871 صحيح مسلم عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ((لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ)).

அல்லாஹ் அனைத்து நோய்களுக்கும் மருந்தையும் படைத்துள்ளான். மனிதன் வேண்டுமானால் சில நோய்களுக்கு இன்னும் மருந்தை கன்டு பிடிக்காமல் இருக்கலாம். அந்த மருந்தும் அல்லாஹ்வின் உத்தரவின் படியே அது குனப்படுத்துகிறது.

1)
தேன் மூலம் மருத்துவம்
*****************************

وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِىْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ‏
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),
(
அல்குர்ஆன் : 16:68)

ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا‌ ؕ يَخْرُجُ مِنْۢ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ  

பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
(
அல்குர்ஆன் : 16:69)
 عن عبد الله - هو ابن مسعود - قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " عليكم بالشفاءين : العسل والقرآن " . سنن ابن ماجة
 ، عن أبي هريرة قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " من لعق العسل ثلاث غدوات في كل شهر لم يصبه عظيم من البلاء (المعجم الاوسط سنن ابن ماجة") .
5682- صحيح البخاريِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ الْحَلْوَاءُ وَالْعَسَلُ
. 

நிவாரனத்தை உண்டாக்கக்கூடிய இரண்டு பொருட்களை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் அவை தேனும் . குர்ஆனுமாகும் என்றார்கள்.
தேன் அதிகமாக சாப்பிட்டு வருபவரை மிகப்பெரிய நோய்கள் தீண்டாது.
நபி(ஸல்) அவர்கள் தேனையும் ஹல்வாவையும் விரும்பி சாப்பிடுவார்கள்
5683- صحيح البخاريِ عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنْ كَانَ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ- أَوْ يَكُونُ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ- خَيْرٌ فَفِي شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ شَرْبَةِ عَسَلٍ، أَوْ لَذْعَةٍ بِنَارٍ تُوَافِقُ الدَّاءَ، وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ)).

5683. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் இருப்பதாயிருந்தால்அல்லது இருக்கிறதென்றால்நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில் தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை.  என ஜாபிர்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
.
5684- صحيح البخاريِ عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَخِي يَشْتَكِي بَطْنَهُ. فَقَالَ: ((اسْقِهِ عَسَلاً)). ثُمَّ أَتَى الثَّانِيَةَ فَقَالَ: ((اسْقِهِ عَسَلاً)). ثُمَّ أَتَاهُ فَقَالَ فَعَلْتُ. فَقَالَ: ((صَدَقَ اللَّهُ، وَكَذَبَ بَطْنُ أَخِيكَ، اسْقِهِ عَسَلاً)). فَسَقَاهُ فَبَرَأَ. 


584. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்  ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், “அவருக்குத் தேன் ஊட்டுங்கள்என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டதுஎன்று கூறி)டவே, மீண்டும் நபி(ஸல்) அவர்கள், “அவருக்குத் தேன் ஊட்டுங்கள்என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி(ஸல்) அவர்கள் அப்போதும், “அவருக்குத் தேன் ஊட்டுங்கள்என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), “(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை)என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
 
செரிமானம் ஏற்பட . தேவையற்ற கொழுப்பைக் குறைக்க தேனை பயன் படுத்தும் முறை.
1.    இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் குறைக்கும்.


2)கருஞ்சீரகத்தின் மூலம் மருத்துவம்
*******************************************
கருஞ்சீரகத்தின் மிகப் பிரதான அம்சமே அதிலுல்ல மருத்துவக் குணம்தான். இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய பிரபலமான ஹதீஸை பார்ப்போம்

5688-صحيح البخاري حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ السَّامَ)). قَالَ ابْنُ شِهَابٍ وَالسَّامُ الْمَوْتُ، وَالْحَبَّةُ السَّوْدَاءُ الشُّونِيزُ.


5688. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கருஞ்சீரக விதையில் சாமைத்தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளதுஎன்று கூறினார்கள்.  இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:  “சாம்என்றால் மரணம்என்று பொருள். அல்ஹப்பத்துஸ் ஸவ்தாஎன்றால், (பாரசீகத்தில்) ஷூனீஸ்“ (கருஞ்சீரகம்) என்று பொருள். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு .உதாரணமாக.சளியுடன் சம்மந்தப்பட்ட சகல விதமான நோய்களுக்கும் கருஞ்சீரகம் அருமருந்தாக கானப்படுகிறது. உதாரணமாக. தும்மல்.மூக்கில் இருந்து நீர் வடிதல் தலைவலி முன்னெற்றி பாரம் போன்ற நோய்களுக்கு கருஞ்சீரக எண்ணையில் 3 அல்லது 5 துளி ஒரு மூக்கு துவாரத்தினூடாக காலையில் எழுந்தவுடனும் இரவு படுக்கைக்கு செல்லும்போதும் இட்டு வருவதுடன் நெற்றிப்பகுதியிலும் உச்சந்தலையிலும் கருஞ்சீரக எண்ணெயினைத் தொடர்ந்து இட்டு அல்லது தேய்த்து வந்தால் அல்லாஹ்வின் நாட்டத்துடன் 2.3.நாளில் சளியுடன் தொடர்பான சகல நோய்களும் குணமடய வாய்ப்புண்டு.இதற்கு சான்றாக பின் வரும் சம்பவம்

5687-
 صحيح البخاري ٍ عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ قَالَ خَرَجْنَا وَمَعَنَا غَالِبُ بْنُ أَبْجَرَ فَمَرِضَ فِي الطَّرِيقِ، فَقَدِمْنَا الْمَدِينَةَ وَهْوَ مَرِيضٌ، فَعَادَهُ ابْنُ أَبِي عَتِيقٍ فَقَالَ لَنَا عَلَيْكُمْ بِهَذِهِ الْحُبَيْبَةِ السَّوْدَاءِ، فَخُذُوا مِنْهَا خَمْسًا أَوْ سَبْعًا فَاسْحَقُوهَا، ثُمَّ اقْطُرُوهَا فِي أَنْفِهِ بِقَطَرَاتِ زَيْتٍ فِي هَذَا الْجَانِبِ وَفِي هَذَا الْجَانِبِ، فَإِنَّ عَائِشَةَ حَدَّثَتْنِي أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنَّ هَذِهِ الْحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ مِنَ السَّامِ)). قُلْتُ وَمَا السَّامُ قَالَ الْمَوْتُ.
5687.
காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்  எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.  அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், “நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; “சாமைத் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்எனத் தெரிவித்தார்கள். நான், “சாம் என்றால் என்ன?“ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் மரணம்என்று பதிலளித்தார்கள். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
3)
கோஷ்டம் ( சிறு குறிஞ்சான் ) மூலம் மருத்துவம்


5692-  صحيح البخاري حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((عَلَيْكُمْ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ، فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ. يُسْتَعَطُ بِهِ مِنَ الْعُذْرَةِ، وَيُلَدُّ بِهِ مِنْ ذَاتِ الْجَنْبِ)).

5692.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்.  என உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.
தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்
 
தமிழ் பெயர் -: கோஷ்டம் (Kostam)
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லி
மருத்துவப் பயன்கள் -: 
**********************

சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்தவேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்துசாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்துவிலங்கிலிருந்தும்சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின்மருந்து மாத்திரை வடிவிலோதிரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில்குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.
*******************
4)சமயல் காளான் மூலம் மருத்துவம்
    صحيح البخاري عَنْ عَبْدِ الْمَلِكِ سَمِعْتُ عَمْرَو بْنَ حُرَيْثٍ قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ زَيْدٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((الْكَمْأَةُ مِنَ الْمَنِّ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ))
5708. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
சமையல் காளான் 'மன்னு' வகையைச் சேர்ந்தது ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்

5) ஜுரத்திற்கான மருத்துவம்

صحيح البخاري  عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَطْفِئُوهَا بِالْمَاءِ)).
5723.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.  அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) கூறினார்கள்.  இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) “(இறைவா!) எங்களைவிட்டு நரகத்தின் வேதனையை நீக்குவாயாகஎன்று பிரார்த்தித்துவந்தார்கள்.53 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
அதிக ஜுரம் ஏற்படும் போது குளிர்ந்த நீரில் நனைத்த துணியைக் கொண்டு உடல் முழுவதும் துடைத்து விடுவது ஜுரத்தை குறைக்குமென்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றார்கள்.
***************
6)குர்ஆன் வசனங்களின் மூலம் மருத்துவம்

وَنُنَزِّلُ مِنَ الْـقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ‌ۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا‏ 

இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
(
அல்குர்ஆன்17:82)
 
عن عبد الله - هو ابن مسعود - قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " عليكم بالشفاءين : العسل والقرآن " . سنن ابن ماجة
 ،  .
5735- صحيح البخريَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْفُثُ عَلَى نَفْسِهِ فِي الْمَرَضِ الَّذِي مَاتَ فِيهِ بِالْمُعَوِّذَاتِ، فَلَمَّا ثَقُلَ كُنْتُ أَنْفِثُ عَلَيْهِ بِهِنَّ، وَأَمْسَحُ بِيَدِ نَفْسِهِ لِبَرَكَتِهَا. فَسَأَلْتُ الزُّهْرِيَّ كَيْفَ يَنْفِثُ قَالَ: كَانَ يَنْفِثُ عَلَى يَدَيْهِ، ثُمَّ يَمْسَحُ بِهِمَا وَجْهَهُ

5735. ஆயிஷா(ரலி) கூறினார்  நபி(ஸல்) அவர்கள், தாம் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (குர்ஆனில் உள்ள) பாதுகாப்புக் கோரும் (இறுதி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீதே ஊதிக்கொள்வார்கள். அவர்களுக்கு நோய் கடுமையானபோது நானே அவற்றை ஓதி அவர்களின் மீது ஊதிக்கொண்டும் அவர்களின் கையாலேயே (அவர்களின் மீது) தடவியபடியும் இருந்தேன். அவர்களின் சுரத்தின் சுபிட்சம் (பரக்கத்) கருதி இவ்வாறு செய்தேன்.  (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) மஅமர் இப்னு ராஷித்(ரஹ்) கூறினார்:  நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், “நபி(ஸல்) அவர்கள் எப்படி (ஓதி) ஊதுவார்கள்?“ என்று கேட்டேன். அவர்கள், “நபி(ஸல்) அவர்கள் தம் இருகரங்களின் மீதும் ஊதிப் பிறகு அவற்றால் தம் ம ுகத்தில் தடவிவந்தார்கள்என்று பதிலளித்தார்கள்.66 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
பாம்பு தேள் கடிக்கு மருத்துவம்
5741- حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ عَنْ أَبِيهِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الرُّقْيَةِ مِنَ الْحُمَةِ فَقَالَتْ رَخَّصَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرُّقْيَةَ مِنْ كُلِّ ذِي حُمَةٍ.   رواه البخاري

5741.
அஸ்வத் இப்னு யஸீத் அந்நகஈ(ரஹ்) கூறினார்  ஆயிஷா(ரலி) அவர்களிடம், விஷக் கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், “நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்என்று கூறினார்கள். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
5736 صحيح البخاري.عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَوْا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَلَمْ يَقْرُوهُمْ، فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ لُدِغَ سَيِّدُ أُولَئِكَ فَقَالُوا هَلْ مَعَكُمْ مِنْ دَوَاءٍ أَوْ رَاقٍ فَقَالُوا إِنَّكُمْ لَمْ تَقْرُونَا، وَلاَ نَفْعَلُ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلاً. فَجَعَلُوا لَهُمْ قَطِيعًا مِنَ الشَّاءِ، فَجَعَلَ يَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ، وَيَجْمَعُ بُزَاقَهُ، وَيَتْفِلُ، فَبَرَأَ، فَأَتَوْا بِالشَّاءِ، فَقَالُوا لاَ نَأْخُذُهُ حَتَّى نَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلُوهُ فَضَحِكَ وَقَالَ: ((وَمَا أَدْرَاكَ أَنَّهَا رُقْيَةٌ، خُذُوهَا، وَاضْرِبُوا لِي بِسَهْمٍ)).

5736. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்  நபி(ஸல்) அவர்களின் தேழர்களில் சிலர் (ஒரு பயணத்தின் போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது. அப்போது அக்குலத்தார் (நபித் தோழர்களிடம் வந்து) உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா? அல்லது ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா?“ என்று கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள், “நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன் வரவில்லை. எனவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்கமாட்டோம்என்று கூறினர்.  உடனே, நபித்தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித்தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) குர்ஆனின் அன்னைஎனப்படும் அல்ஃபாத்திஹாஅத்தியாயத்தை ஓதித் தம் எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டுவந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், “நபி(ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்காதவரை இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாதுஎன்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு அல்ஃபாத்திஹா“   ஓதிப்பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்என்று கூறினார்கள். 68 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
கண்திருஷ்டிக்கு மருத்துவம்
5740- صحيح البخاريٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((الْعَيْنُ حَقٌّ)). وَنَهَى عَنِ الْوَشْمِ.

5740.
அபூ ஹுரைரா(ரலி) கூறினார்  நபி(ஸல்) அவர்கள், “கண்ணேறு (ஏற்படுவது) உண்மையேஎன்று கூறினார்கள். மேலும், பச்சைகுத்துவதைத் தடை செய்தார்கள்.71 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
5738- صحيح البخاريٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ أَمَرَ أَنْ يُسْتَرْقَى مِنَ الْعَيْنِ.
5739- صحيح البخاري عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي بَيْتِهَا جَارِيَةً فِي وَجْهِهَا سَفْعَةٌ فَقَالَ: ((اسْتَرْقُوا لَهَا، فَإِنَّ بِهَا النَّظْرَةَ)).
. உம்மு ஸலமா(ரலி) கூறினார்  நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், “இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறுபட்டிருக்கிறதுஎன்று கூறினார்கள்.  இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸுபைதி(ரஹ்) அவர்களிடமிருந்தும் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 
5739
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்

கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க நபி(ஸல்)அவர்கள் ஓதிய துஆ

3371
- صحيح البخاريٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ وَيَقُولُ: ((إِنَّ أَبَاكُمَا كَانَ يُعَوِّذُ بِهَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ، أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ)

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்  நபி(ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் - என்று கூறுவார்கள். 

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள3371

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.