புதன், 10 பிப்ரவரி, 2016

தடம் புரளாத தலைமுறை வேண்டும்

بسم الله الرحمن الرحيم
தடம் புரளாத தலைமுறை வேண்டும்

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ [الصافات: 100]
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " خَيْرُ مَا يُخَلِّفُ الرَّجُلُ مِنْ بَعْدِهِ ثَلَاثٌ: وَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ، وَصَدَقَةٌ تَجْرِي يَبْلُغُهُ أَجْرُهَا، وَعِلْمٌ يُعْمَلُ بِهِ مِنْ بَعْدِهِ " سنن ابن ماجه
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மனிதர்களாகிய நமக்கு வாழ்க்கை முறை என்று ஒன்று இருக்கிறது. அதுதான் இஸ்லாம் எனும் தூய மார்க்கம்.  அந்த தூய மார்க்கத்தில் நாமும் நிலைத்து, நம் தலைமுறையையும் நிலைக்கச்செய்ய வேண்டும். வளர்ந்து வரும் நம் தலைமுறைகள் இஸ்லாதிலிருந்தும் இஸ்லாமிய நெறிகளிலிருந்தும் இஸ்லாமிய பண்பாடுகளிலிருந்தும் தடம் புரளாத வகையில் அவர்களின் மீதுள்ள நம் பொறுப்பை நிறைவேற்றி இருக்கிறோமா? என்று நாம் ஒவ்வருவரும் சிந்திக்க வேண்டும்.
நம்முடைய சந்ததிகள்தான் நாம் விட்டுச்செல்லும் நம்முடைய சொத்துகள், நடமாடி கொண்டிருக்கும் நம் இதயங்கள், நம் கண்களின் குளிர்ச்சி, நம் வாழ்வின் தொடர்ச்சி, அவர்களின் ஈடேற்றம் நம்முடைய ஈடேற்றம். அவர்களின் வீழ்ச்சி நம்முடைய வீழ்ச்சி.
عَنْ جَمَيعِ بْنِ عُمَيْرٍ،عَنْ خَالِهِ أَبِي بُرْدَةَ بْنِ نِيَارٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ كَسْبِ الرَّجُلِ وَلَدُهُ وَكُلُّ بَيْعٍ مَبْرُورٍ» المعجم الكبير للطبراني
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " خَيْرُ مَا يُخَلِّفُ الرَّجُلُ مِنْ بَعْدِهِ ثَلَاثٌ: وَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ، وَصَدَقَةٌ تَجْرِي يَبْلُغُهُ أَجْرُهَا، وَعِلْمٌ يُعْمَلُ بِهِ مِنْ بَعْدِهِ " سنن ابن ماجه
தற்கால இளைஞர்கள் இருவிதமான தடம் புரளுதலுக்கு ஆளாகின்றனர்.
1 சத்திய கொள்கையிலிருந்து தடம் புரளுதல்
சத்திய மார்க்கத்திற்கு எதிராக செய்யப்படும் மூளைச் சலவைக்கு இலக்காகி மதம் மாறி விடுதல், பாரம்பரியமிக்க முஸ்லிம் சமூகத்தில் உள்ளிருந்தே பிளவுகளை ஏற்படுத்த நினைக்கும் குழப்பவாதிகளின் கவர்ச்சியான பேச்சுக்கு அடிமையாகி இயக்க பைத்தியமாகி விடுதல், ஈமானுக்கே வேட்டு வைக்கும் மூட பழக்க வழக்கங்களில் சிக்கி தவித்தல் போன்றவை இதில் அடங்கும்.  
عَنْ العِرْبَاضِ بْنِ سَارِيَةَ، قَالَ: وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَعْدَ صَلَاةِ الغَدَاةِ مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا العُيُونُ وَوَجِلَتْ مِنْهَا القُلُوبُ، فَقَالَ رَجُلٌ: إِنَّ هَذِهِ مَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَإِنْ عَبْدٌ حَبَشِيٌّ، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ يَرَى اخْتِلَافًا كَثِيرًا، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ فَإِنَّهَا ضَلَالَةٌ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَعَلَيْهِ بِسُنَّتِي وَسُنَّةِ الخُلَفَاءِ الرَّاشِدِينَ المَهْدِيِّينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ» سنن الترمذي
இர்பாள் பின் சாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உருக்கமான உரையை ஆற்றினார்கள். அதைக் கேட்டால் உள்ளங்கள் நடுங்கும். கண்களில் கண்ணீர் வரும். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே இது பிரியக்கூடியவர் ஆற்றும் உரையைப் போன்று இருக்கின்றதே? எனவே எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டோம். அப்போது அவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சுவதையும் அபிசீனிய அடிமை உங்களுக்கு தலைவரானாலும் நீங்கள் செவியேற்று கட்டுப்படுவதையும் உங்களுக்கு நான் வலிறுத்துகிறேன். உங்களில் (எனக்குப் பின்பு) வாழ்பவர் அதிகமான வேறுபாடுகளை காண்பார். அப்போது நீங்கள் எனது வழியையும் நேர்வழிகாட்டப்பட்டு நேர்வழியில் செல்லும் ஆட்சியாளர்களின் வழியையும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். கடவாய் பற்களால் அதை (வலுவாக) பிடித்துக்கொள்ளுங்கள். புதுமையான விசயங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனென்றால் ஒவ்வொரு புதுமையும் வழிகேடாகும்.   நூல் : திர்மிதி
2 இஸ்லாமிய பண்பாடு மற்றும் கலாச்சாரத்திலிருந்து தடம் புரளுதல்
ஆபசமாக உடை அணிதல், ஆபாச காட்சியை காணுதல், நாணம் இழக்குதல், தவறான தொடர்புகள், வரம்பு மீறிய நட்புகள், (காமத்தின் பினாமி) காதல் எனும் பெயரில் ஆண் பெண் வேறுபாடின்றி பேசுதல், நெருங்கி பழகுதல், ஒரு பெண் அன்னிய ஆனுடன் அல்லது ஒரு ஆண் அன்னிய பெண்ணுடன் ஓடிப்போகுதல், பெற்றோர்களை, பெரியவர்களை மதிக்காத பண்பற்ற குணங்கள் இவையனைத்தும் இதில் அடங்கும்.
ஆனால் இவையனைத்தும் இஸ்லாமிய பண்பாட்டுக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் முற்றிலும் முரணானது என்பதை பின்வரும் ஆயத்துகள் மற்றும் ஹதீஸ்களின் மூலம் அறியலாம்.
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ (30) وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ  النور: 31
عَنْ جَرِيرٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظْرَةِ الْفَجْأَةِ؟ فَقَالَ: «اصْرِفْ بَصَرَكَ» سنن أبي داود
''நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்" என்று ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)
عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «يَا عَلِيُّ لَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ، فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ» سنن أبي داود
"அலியே! எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட்டது) இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)

عَنْ نَبْهَانَ، مَوْلَى أُمِّ سَلَمَةَ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ أُمَّ سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّهَا كَانَتْ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَيْمُونَةَ قَالَتْ: فَبَيْنَا نَحْنُ عِنْدَهُ أَقْبَلَ ابْنُ أُمِّ مَكْتُومٍ فَدَخَلَ عَلَيْهِ وَذَلِكَ بَعْدَ مَا أُمِرْنَا بِالحِجَابِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْتَجِبَا مِنْهُ» ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَلَيْسَ هُوَ أَعْمَى لَا يُبْصِرُنَا وَلَا يَعْرِفُنَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَعَمْيَاوَانِ أَنْتُمَا أَلَسْتُمَا تُبْصِرَانِهِ» سنن الترمذي
"நானும் மைமூனா(ரலி)வும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது இப்னு உம்மி மக்தூம்(ரலி) வந்தார்கள். ஹிஜாப் சம்பந்தமான கட்டளை வந்த பிறகு இது நடந்ததாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''இவரை விட்டும் நீங்கள் இருவரும் மறைந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு நான் "அவர் குருடாயிற்றே! அவர் எங்களைப் பார்க்கவோ அறியவோ முடியாதே?'' என்று கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''நீங்கள் இருவரும் குருடிகளா?; நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்டதாக உம்முஸலாமா(ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

தடம் புரளாத தலைமுறையை உருவாக்க நாம் செய்ய வேண்டியவை
1 இறைவனிடம் நாம் துஆ கேட்]டுக்கொண்டே இருக்[கனும்.
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ آل عمران: 38
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ [الصافات: 100]
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ إبراهيم: 40

عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 " ثَلَاثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لَا شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ الْوَالِدِ لِوَلَدِهِ، وَدَعْوَةُ الْمَظْلُومِ، وَدَعْوَةُ الْمَرْءِ لِأَخِيهِ " الدعاء للطبراني
பட்டதாரியாகி விடுவதில் உலக வாழ்வின் லட்சியம் கிடைப்பதில்லை. பதவி வகிப்பவனாக இருப்பதால் படைப்பின் நோக்கம் நிறைவேறி விடுவதில்லை. செல்வந்தனாகி விடுவதால் மட்டுமே ஜெயம் கிடைத்து விடுவதில்லை. ஆனால் அவர் என்னவாக இருந்தாலும் ஸாலிஹாக இருக்க வேண்டுமென்பதே நம் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பதை நபிமார்களின் துஆவிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
2 மறுமை சார்ந்த உண்மையான வெற்றியின் பால் அக்கறை வேண்டும்۔
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ التحريم: 6
இவ்வுலக ஆதாயம் சார்ந்த விஷங்களில் நாம் அக்கறை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு மறுமை சார்ந்த விஷங்களில் அக்கறை கொள்வதில்லை என்பதே கசப்பான உண்மை.
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَحَبَّ دُنْيَاهُ أَضَرَّ بِآخِرَتِهِ، وَمَنْ أَحَبَّ آخِرَتَهُ أَضَرَّ بِدُنْيَاهُ، فَآثِرُوا مَا يَبْقَى عَلَى مَا يَفْنَى» مسند أحمد
3 அதற்க்கு தேவையான கல்வியறிவை புகட்ட வேண்டும்.
அறியாமைதான் பாவங்களுக்கும் வழி தவறுதலுக்கும் அடிப்படையாக இருக்கிறது.
எனவே அறியாமை நீக்கி அறிவொளி ஏற்ற வேண்டியது நம்முடைய பொறுப்பாகும்.
குர்ஆனை உரிய பருவத்தில் கற்றுக் கொடுத்தோம் என்றால்  குர்ஆனுடைய தாக்கம் உணர்வில் கலந்துவிடும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَهُوَ فَتِيُّ السِّنِّ أَخْلَطَهُ اللهُ بِلَحْمِهِ وَدَمِهِ " شعب الإيمان
எவரொருவர் இளம் வயதிலேயே குர்ஆனை கற்றுக் கொள்வாரோ அவருடைய இரத்தம் மற்றும் சதையுடன் குர்ஆனை அல்லாஹ் கலந்து விடச்செய்கிறான்என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலி நூல்: ஷுஅபுல் ஈமான்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ فِي شَبِيبَتِهِ اخْتَلَطَ الْقُرْآنُ بِلَحْمِهِ وَدَمِهِ، وَمَنْ تَعَلَّمَهُ فِي كِبَرِهِ فَهُوَ يَنْفَلِتُ مِنْهُ وَلَا يَتْرُكُهُ، فَلَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ " شعب الإيمان
எவரொருவர் இளம் வயதிலேயே குர்ஆனை கற்றுக் கொள்வாரோ அவருடைய இரத்தம் மற்றும் சதையுடன் குர்ஆன் கலந்து விடுகிறது. வயோதிகத்தில் குர்ஆனை திக்கியும் தடுமாறியும் விடாமல் ஓதுபவருக்கு இரு மடங்கு கூலி உண்டு. என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலி   
ஏழு வயதில் பிள்ளைகளை பெற்றோர்கள் தொழும்படி ஏவ வேண்டும் என்று ஹதீஸில் வருகிறது அப்படியானால் ஏழு வயதிற்குள்ளே தொழுகை முறையை கற்றுத் தந்து விடவேண்டும் என்றும் தெரிகிறது. ஏனென்றால் தொழுகை முறையை கற்றுக்கொடுக்காமல் தொழும்படி ஏவுதல் பொருத்தமாக இருக்க முடியாது.
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا، وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ» ،سنن أبي داود

4 தொடர்ந்து கண்காணித்தும் வர வேண்டும்.
2554 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ» صحيح البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். 
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.   நூல்: ஸஹீஹுல் புஹாரி  2554. 
5 தேவைப்படும் அறிவுரையும் வழங்கிடல் வேண்டும்
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ (13) وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ (14) وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (15) يَا بُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ (16) يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ (17) وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (18) وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ (19) [لقمان]
عَنْ مُعَاذٍ قَالَ: أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَشْرِ كَلِمَاتٍ قَالَ: «لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُتِلْتَ وَحُرِّقْتَ، وَلَا تَعُقَّنَّ وَالِدَيْكَ، وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ، وَلَا تَتْرُكَنَّ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا؛ فَإِنَّ مَنْ تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ، وَلَا تَشْرَبَنَّ خَمْرًا؛ فَإِنَّهُ رَأْسُ كُلِّ فَاحِشَةٍ، وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ؛ فَإِنَّ بِالْمَعْصِيَةِ حَلَّ سَخَطُ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنَ الزَّحْفِ وَإِنْ هَلَكَ النَّاسُ، وَإِذَا أَصَابَ النَّاسَ مُوتَانٌ وَأَنْتَ فِيهِمْ فَاثْبُتْ، وَأَنْفِقْ عَلَى عِيَالِكَ مِنْ طَوْلِكَ، وَلَا تَرْفَعْ عَنْهُمْ عَصَاكَ أَدَبًا وَأَخِفْهُمْ فِي اللَّهِ»"مسند أحمد
ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள், பத்துக் காரியங்கள் செய்யும்படி எனக்கு உபதேசம் செய்தார்கள். நீர் வெட்டப்பட்டாலும், எரிக்கப்பட்டாலும், அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர். உமது பெற்றோருக்கு மாறு செய்யாதீர், மனைவியை விட்டுவிடவும், செல்வம் முழுவதைச் செலவு செய்துவிடவும் சொன்னாலும் சரியே!. பர்ளான தொழுகையை வேண்டுமென்றே விட்டுவிடாதீர், பர்ளான தொழுகையை மனம் விரும்பி விடுபவர் அல்லாஹ்வின் பொறுப்பிலிருந்து நீங்கிவிடுவார். மது அருந்தாதீர், இது பாவங்கள் அனைத்திற்கும் ஆணிவேராகும், அல்லாஹ்வுக்கு மாறு செய்யாதீர், மாறு செய்வதால் அல்லாஹ்வின் கோபம் இறங்குகிறது, போர் வீரர்கள் அனைவரும் இறந்து விட்டாலும் போர்க்களத்தை விட்டும் ஓடாதீர், மக்களுக்கு மத்தியில் (ப்ளேக், காலரா போன்ற) நோய் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் மரணம் எற்பட்டுக் கொண்டிருக்கும் சமயம் அவர்களோடு வசித்துக் கொண்டிருக்கும் நீர் அங்கிருந்து ஓடிவிடாதீர், தமது தகுதிக்குத் தக்கவாறு தமது குடும்பத்தாருக்குச் செலவு செய்வீராக, (ஒழுக்கங் கற்பிக்க) அவர்களை விட்டும் குச்சியை அகற்றிவிட வேண்டாம், அல்லாஹ்வின் காரியத்தில் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பீராக நூல்: முஸ்னத் அஹ்மத்
عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا نَحَلَ وَالِدٌ وَلَدَهُ نُحْلًا أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ» مسند أحمد
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்லழுக்கத்தை விடச் சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தன் பாட்டனார் வாயிலாகத் தம் தந்தை கூறியதாக ஹஜ்ரத் அய்யூப் (ரஹ்) அறிவிக்கிறார்கள்''.
6 நாமும் தூய இஸ்லாத்தில் பற்றுதலுள்ளவர்களாக வாழ்ந்தும் காட்ட வேண்டும்.
தடம் புரண்ட இஞ்ஞின், பெட்டிகளை மட்டும் தடத்தில் செலுத்துவது சாத்தியமில்லை. 
 
 وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا  [طه: 132]
أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ  البقرة: 44
 பிள்ளைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை கேட்ட வார்த்தைகளை பேசுகின்றன என்று ஒரு அறிஞர் கூறுவார்.
பிள்ளைகளிடம் ஏற்படும் நன்மை தீமைகளுக்கும் பெற்றோர்களின் நடவடிக்கைக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
1385 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ، أَوْ يُنَصِّرَانِهِ، أَوْ يُمَجِّسَانِهِ، كَمَثَلِ البَهِيمَةِ تُنْتَجُ البَهِيمَةَ هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ» صحيح البخاري
          இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (இஸ்லாமிய மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவே ஆக்கிவிடுகின்றனர்.  அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரலி). 
நூல்: ஸஹீஹுல் புஹாரி  1385. 


பெற்றோர்கள் நேரான வழியில் உறுதியாக இருந்து  பிள்ளைகளை வளர்ப்பதில் தங்கள் கடமைகளை பொறுப்புகளை முறையாக நிறைவேற்றினால் அந்தப் பிள்ளைகள் ஒரு போதும் தடம் புரள மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.