புதன், 30 மார்ச், 2016

காயமே! இது பொய்யடா!

بسم الله الرحمن الرحيم

காயமே! இது பொய்யடா!

 يَا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ، فَلاَ تَغُرَّنَّكُمُ الحَيَاةُ الدُّنْيَا، وَلاَ يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الغَرُورُ،  [فاطر: 6] "
صحيح البخاري 6421  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ: حُبُّ المَالِ، وَطُولُ العُمُر





 ஏப்ரல் 1 ஐ முட்டாள் தினமாகவும் ஏமாற்று தினமாகவும்   அனுசரிக்கப்படுகிறது.இது உருவானதற்கான காரணம் கூறுகையில்
ஜனவரி 1 ஐ புத்தாண்டாக 1562ஆம் ஆண்டுமுதல் கொண்டாடினர். ஆனால் இதை அறியாத ஜெர்மனி மற்றும் சில நாடுகள் ஏப்ரல் 1 ஐ பழைய முறைப்படி புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். ஏப்ரல் 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கருதுபவர்களை ஏப்ரல் பூல் எனக் கேலியும், கிண்டலும் செய்தனர். ஆகவே இத்தினத்தில் உண்மையில்லாத வதந்திகளையும்  ஏமாற்றுதலையும் உலகம் முழுவதும் பரப்பி வந்தனர் இதுவே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வதந்திகளைபரப்புவது. ஏமாற்றுவது. ஏமாறுவது இவையனைத்தும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டஒன்று 


பொய் ஏமாற்று மோசடி இவைகள் முனாபிக்கின் தன்மைகள் .
எனவே தான் مَنْ غَشَّ فَلَيْسَ مِنَّا எவன் ஏமாற்றுகிறானோ (மோசடி செய்கிறானோ) அவன் நம்மை (-இஸ்லாத்தை )சார்ந்தவன் அல்ல (திர்மிதி 1236).
ஏமாற்றும் நோக்கம் இன்றி சும்மா /தமாஷ் என்ற நோக்கில் கூட அது கூடாது
صحيح البخاري 6478  عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ
6478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்
இந்த தருணத்தில் மனித சமுதாயம் உலக ஆசைகளில் மூழ்கி அது மறுமைச் சிந்தனையை விட்டும் நம்மை ஏமாற்றி விடுவதையும் நாம் ஏமாந்து போவதையும் நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
உலக மோகம் மனிதர்களை ஏமாற்றி விடாமல் எச்சரிக்கையாக இருக்க தூண்டும் இறை வசனங்கள்
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {يَا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ، فَلاَ تَغُرَّنَّكُمُ الحَيَاةُ الدُّنْيَا، وَلاَ يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الغَرُورُ، إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا، إِنَّمَا يَدْعُو حِزْبَهُ لِيَكُونُوا مِنْ أَصْحَابِ السَّعِيرِ} [فاطر: 6] "
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ، وَأُدْخِلَ الجَنَّةَ فَقَدْ فَازَ، وَمَا الحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الغُرُورِ} [آل عمران: 185] وَقَوْلِهِ: {ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا، وَيُلْهِهِمُ الأَمَلُ فَسَوْفَ يَعْلَمُونَ} [الحجر: 3
]

உவமை கூறுவதில் உவமையற்று விளங்கும் திருக்குர் ஆன் உலக வாழ்க்கைக்கு ஓர் அழகிய உதாரணம் கூறுகின்றது

إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ مِمَّا يَأْكُلُ النَّاسُ وَالْأَنْعَامُ حَتَّى إِذَا أَخَذَتِ الْأَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَا أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا أَتَاهَا أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا حَصِيدًا كَأَنْ لَمْ تَغْنَ بِالْأَمْسِ كَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (24)

ஆசைப்பட்டதை அடைவதற்காக அல்லும் பகலும் உழைத்த மனிதன் அந்த ஆசை கை கூடிவரும் போது அதை அனுபவிக்க முடியாது அவனுடைய வாழ்க்கை முடிந்துவிடுவதை இந்த உதாரணம் சித்தரிக்கிறது.மழை பொழிந்து வளம் கொழிக்கும் தருணத்தில் அனைத்தும் பதராக மாறிவிடுவதைப் போன்று. அற்ப ஆயுளில் மனித வாழ்வு முடிந்து விடுகிறது.
உலக வாழ்க்கைக்கும் அதன் இன்பங்களுக்கும் இ்மாம் கஸ்ஸாலி( ரஹ்) கூறக்கூடிய  ஓர் உதாரணம்
**************************************

ஒரு மனிதன் கிணற்றுச் சுவரின் ஒரத்தில் இருக்கும் மரக்கிளையை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறான். கீழே கிணற்றுக்குள் பார்கின்றான் ஒரு முதலை அவன் விழுந்தவுடன் அவனை விழுங்க தயாராக வாயை பிளந்து கொண்டிருக்கிறது.மேலே பார்கிறான் ஒரு சிங்கம் இவனை தாக்க தயார் நிலையில் நிற்கிறது.இதற்கிடையில் இவன் தொங்க கூடிய கிளையை கருப்பு எலியும் வெள்ளை எலியும் கொரித்துக் கொண்டு இருக்கிறது. இவன் கை வலி தாங்காமல் அங்கும் இங்கும் அசைகின்றான் அப்போது இவன் தொங்கும் கிளை ஒரு தேன் கூட்டின் மீதுபட்டு அதிலிருந்து சில தேன் துளிகள் இவன் நாவில் விழுகிறது. மேலே சிங்கம் என்பதுஇஸ்ராயீலைப் போல இவன் ஆயுள் முடிந்தவுடன் உயிரை கைப்பற்ற தயாராக உள்ளார். கீழேஉள்ள முதலை இவனுடைய கப்ரைப் போல இவனுக்காக காத்திருக்கிறது. வெள்ளை எலி கருப்பு எலி இரவு பகல். அது இவன் ஆயுலை குறைத்து வருகிறது. இந்த நிலையில் அவன் சாப்பிடும் தேன் இதுதான் உலக இன்பம் என்றார்கள்.
உலக மோகத்தில் மூழ்கி விடாமல் இருக்க அண்ணலார் கூறிய அறிவுரைகள்
صحيح البخاري 6416 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ» وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ»
ஒருசம்பவம்
***************
நபி ஈஸா (அலை) அவர்களுக்கு சொந்த வீடு சொந்த ஊர் கிடையாது அனைத்து ஊர்களுக்கும் சென்று ஏகத்துவத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களிடம் இருந்த பொருள் இரண்டு 1 படுத்து உரங்க ஒரு தலையனை. தண்ணீர் அருந்த ஒரு பாத்திரம். இவைகள்தான் அவர்களிடம் இருந்தது. ஒரு நாள் ஓர் வழியாக போய்க் கொண்டு இருக்கும் பொழுது ஒரு மனிதர் கையில் தலைவைத்து உரங்குவதை கண்டார்கள். ஒரு மனிதன் தலையனை இல்லாமலே உரங்கமுடியுமென்றால் இந்த தலையனை எதற்கு என்று அதையும் தர்மம் செய்து விட்டார்கள். மற்றொரு நாள் ஒரு ஆற்றின் வழியாகச் சென்றார்கள் அங்கே ஒருவன் தன் இரு கரத்தினால் தண்ணீர் அல்லி பருகிக் கொண்டிருந்தான். இதைக் கண்ட  அவர்கள் ஒருவன் பாத்திரம் இல்லாமலே தண்ணீர் பருக முடியுமென்றால் இந்த பாத்திரம் எதற்கு என்று அதனையும் தர்மம் செய்து விட்டார்கள்.
وَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: «ارْتَحَلَتِ الدُّنْيَا مُدْبِرَةً، وَارْتَحَلَتِ الآخِرَةُ مُقْبِلَةً، وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا بَنُونَ، فَكُونُوا مِنْ أَبْنَاءِ الآخِرَةِ، وَلاَ تَكُونُوا مِنْ أَبْنَاءِ الدُّنْيَا، فَإِنَّ اليَوْمَ عَمَلٌ وَلاَ حِسَابَ، وَغَدًا حِسَابٌ وَلاَ عَمَلٌ
صحيح البخاري 6421  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ: حُبُّ المَالِ، وَطُولُ العُمُرِ " رَوَاهُ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ
புகாரி 6421. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:  1. பொருளாசை.  2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.  என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பேராசை  பெறும்நஷ்டம்
*****************************
பொருளை தேட வேண்டாமென்று மார்கம் கூறவில்லை. மாறாக உலகச்செல்வங்களை தேடுவதிலேயே மூழ்கி மறுமையை மறந்து விடக்கூடாது என்று அறிவுரை கூறுகின்றது.

صحيح البخاري  6425 -  حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ المِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَهُ: أَنَّ عَمْرَو بْنَ عَوْفٍ، وَهُوَ حَلِيفٌ لِبَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ، كَانَ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ إِلَى البَحْرَيْنِ يَأْتِي بِجِزْيَتِهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ صَالَحَ أَهْلَ البَحْرَيْنِ، وَأَمَّرَ عَلَيْهِمُ العَلاَءَ بْنَ الحَضْرَمِيِّ، فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بِمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَسَمِعَتِ الأَنْصَارُ بِقُدُومِهِ، فَوَافَتْهُ صَلاَةَ الصُّبْحِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا انْصَرَفَ تَعَرَّضُوا لَهُ، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ رَآهُمْ، وَقَالَ: «أَظُنُّكُمْ سَمِعْتُمْ بِقُدُومِ أَبِي عُبَيْدَةَ، وَأَنَّهُ جَاءَ بِشَيْءٍ» قَالُوا: أَجَلْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَأَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ، فَوَاللَّهِ مَا الفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ، وَلَكِنْ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ عَلَيْكُمُ الدُّنْيَا، كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا، وَتُلْهِيَكُمْ كَمَا أَلْهَتْهُمْ»

புகாரி 6425. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.  பனூ ஆமிர் இப்னு லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களை, ஜிஸ்யா(காப்பு) வரி வசூலித்துக் கொண்டு வரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா இப்னு அல்ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியான ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதருடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்து நபி(ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தங்கள் எண்ணத்தை சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு அபூ உபைதா வந்துவிட்டார்; அவர் ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்என்றார்கள். அன்சாரிகள் ஆம், இறைத்தூதர் அவர்களே!என்று பதிலளித்தார்கள். அவ்வாறாயின் ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.17

صحيح البخاري 6438 عَنْ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ الزُّبَيْرِ، عَلَى المِنْبَرِ بِمَكَّةَ فِي خُطْبَتِهِ، يَقُولُ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «لَوْ أَنَّ ابْنَ آدَمَ أُعْطِيَ وَادِيًا مَلْئًا مِنْ ذَهَبٍ أَحَبَّ إِلَيْهِ ثَانِيًا، وَلَوْ أُعْطِيَ ثَانِيًا أَحَبَّ إِلَيْهِ ثَالِثًا، وَلاَ يَسُدُّ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»

புகாரி 6438. அப்பாஸ் இப்னு ஸஹ்ல் இப்னி ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.  அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும்போது சொல்லக் கேட்டேன். மக்களே! நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன்மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் மூடாது. மேலும், (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களிலிருந்து திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
எது உனது சொத்து?
***********************

மனிதன் என் சொத்து என் சொத்து என்கிறான் அவனுக்குறியது எதுவென்று விளக்கும் நபிமொழி
صحيح مسلم 3 - (2958)  عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْرَأُ: أَلْهَاكُمُ التَّكَاثُرُ، قَالَ: " يَقُولُ ابْنُ آدَمَ: مَالِي، مَالِي، قَالَ: وَهَلْ لَكَ، يَا ابْنَ آدَمَ مِنْ مَالِكَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ، أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ، أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ؟ "،

ஸஹீஹ் முஸ்லிம் 5665. அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ”மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டதுஎன்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், ”ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்...என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : أُهْدِيَ لَنَا شَاةٌ مَشْوِيَّةٌ ، فَقَسَّمْتُهَا كُلَّهَا إِلَّا كَتِفَهَا ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ ، فَقَالَ : " كُلُّهَا لَكُمْ إِلَّا كَتِفَهَا " ، رَوَاهُ التِّرْمِذِي
ُّ فِي الْجَامِعِ بِلَفْظٍ : أَنَّهُمْ ذَبَحُوا شَاةً ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " مَا بَقِيَ مِنْهَا ؟ " قَالَتْ : مَا بَقِيَ مِنْهَا إِلَّا كَتِفُهَا ، قَالَ : " بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا " ، وَقَالَ : حَسَنٌ صَحِيحٌ ، وَمَعْنَاهُ أَنَّهُمْ تَصَدَّقُوا بِهَا إِلَّا كَتِفَهَا .

ஆயிஷா( ரலி) கூறுகிறார்கள் சமைத்தஆடு ஒன்று எங்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டது.அதன் சப்பை ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் ( தர்மமாக) பங்கு வைத்து கொடுத்து விட்டேன். நபி ( ஸல்) அவர்கள் வந்த போது அவர்களிடம் அதை கூறினேன்
எதை நீ பங்குவைத்தாயோ அதுதான் நமக்குறியது
என்றார்கள்.
நல்ல நண்பன்
******************

மரணதருணத்தில் இருக்கும் மனிதன் தன் நண்பர்கள் மூவரை அழைத்து. முதல் நண்பனிடம் கேட்டான் நண்பா ! நான் இறந்து விட்டால் நீ என்ன செய்வாய் என்றான். அதற்கு அவன் நீ இருக்கும் வரை உன்னை நண்பனாக கொண்டிருந்தேன் நீ இறந்து விட்டால் வேறொருவனை நண்பனாக்கிக் கொள்வேனென்றான். இதைக்கேட்டு வருத்தமடைந்தான் இவ்வளவுதானா நம்முடைய நட்பு என்றான். பிறகு இரண்டாம் நண்பனிடம் இதே கேள்வியைக் கேட்டான் அதற்கவன் நண்பா! நீ இறந்து விட்டால் நல்ல முறையில் உன்னை குழிப்பாட்டி கபனிட்டு தொழ வைத்து அடக்கம் செய்வேனென்றான். இதைக் கேட்டவுடன் சந்தோஷமடைந்தான் இதையாவது நீ செய்கிறாய் என்றான்.பிறகு மூன்றாவது நண்பனிடமும் இதே கேள்வியை கேட்ட போது. நண்பா! நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது நீ இறந்து விட்டால் நானும் உன்னோடு வந்து விடுவேனென்றான். இதைக் கேட்டவன் நீதாண்டா உண்மையான நண்பன் எனக்கூறி பெரும்மகிழ்ச்சியடைந்தான். இந்த நண்பர்களில் முதல் நண்பன்தான் அவனுடைய செல்வம்.  இரண்டாவது நண்பன் அவனுடைய உறவுகள். மூன்றாவது நண்பன் அவன் செய்த அமல். இதே கருத்தை கீழ் வரும் ஹதீஸிலும் காணலாம்

صحيح مسلم 5 - (2960)  أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَتْبَعُ الْمَيِّتَ ثَلَاثَةٌ، فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى وَاحِدٌ، يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ»
தீனுடைய காரியங்களிள் அதிகம் ஈடுபடுபவர்களை குறைகூறாதே
********************************

நம்மில் சிலர் தீனுடைய வேலையில் அதிகம் ஈடுபடுபவர்களிடம் . எப்பொழுதும் தாங்கள் தப்லீக் என்று சென்று விடுகிரீர்களே! குடும்மத்தை யார் கவனிப்பது என்று குறை கூறுகிறார்கள். அவ்வாறு சொல்வதை தவிற்க வேண்டும். அவர்கள் அதற்கான ஏற்பாட்டை செய்துவிட்டுத்தான் செல்கிறார்கள் இவர்கள் தீனுடைய வேலையில் ஈடுபடுவதினால் குடும்பத்திற்கான தேவையை இவர்களின் பிள்ளைகளிடம் இறைவன் அதிகப்படுத்தி தறுவான் அவர்களின் தேவையை பூர்த்தி செய்பவன் அல்லாஹ்

سنن الترمذي 2267  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ أَخَوَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَحَدُهُمَا يَأْتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ يَحْتَرِفُ فَشَكَا الْمُحْتَرِفُ أَخَاهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَعَلَّكَ تُرْزَقُ بِهِ

புதுக்கணக்கு
*****************


மனிதர்கள் ஈடுபடும் துறையில் ஆண்டுக்கொருமுறை ஏப்ரலில் புதுக்கணக்கு போடுகிறார்கள்.சிரிய குடும்பத்தை நிர்வகிப்பவர் முதல் நாடாளும் அரசியலார் வரை அனைவரும் புதுக்கணக்கு போடுகிறார்கள். ஆனால் சொற்ப லாபமளிக்கும் இந்த துறைகளில் லாபநஷ்டக் கணக்குப் பார்கும் மக்கள் ஏனோ கணக்கற்ற லாபந் அளிக்கும் மறுமை வியாபாரத்தில் கணக்குப் பார்க்க தவறி விடுகிறார்கள்.
தத்துவமேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு மனிதனும் இரவு துயில் கொள்ளச் செல்லும் போது இன்று எத்தனை நன்மையான காரியங்கள் செய்தோம் எத்தனை பாவமான காரியங்கள் செய்தோமென்று கணக்குப் பார்த்து மறுநாள் நன்மை அதிகமாக வேண்டும் பாவங்கள் குறைய வேண்டுமென்று கூறுகிறார்கள்
அமீருல் மூமினீன் உமர் ( ரலி) அவர்களின் அந்திம காலத்தில் .அவர்கள் பகைவனால் குத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு நண்பர் அமீருல் மூமினீன் அவர்களே! சுவனத்தைக் கொண்டு மங்களச் செய்தி கூறுகிறேன். தாங்கள் நாயகத்தின் பிரதிநிதியாக உயிர் பொருள். ஆவி அனைத்தையும் இறைவனுக்காக தியாகம் செய்தவர்களாகவுமிருக்கிறீர்களெனக் கூறினார். அதைச் செவியுற்ற உமர் ( ரலி) அவர்கள். நண்பரே! நான் அவ்வாறு நினைக்கவில்லை எனது நன்மையும் தீமையும் சரி நிகராக ஆகியிருந்தாலே நான் மகிழ்ச்சியடைவேன் என்று பதிலளித்தார்கள்.


புதன், 23 மார்ச், 2016

முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டும்

بسم الله الرحمن الرحيم 

  முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டும்
وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْۢبِــُٔوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ (2:31)
عن ابي هريرة رضي الله عنه عن النبي صلي الله عليه وسلم علموا ولاتعنفوا فان المعلم خير من المعنف( الجامع الصغير)


முன்னுரை
*************

எந்த ஒரு சமூகமும் கல்வியைக் கொண்டுதான் மாற்றம் காணமுடியும். கல்விதான் உலகிலுள்ள செல்வங்களில் தலைசிறந்தது. உலகத்தின் வளர்ச்சியில் இஸ்லாமியர்கள் பல்வேறு துறைகளில் தமது பங்களிப்பை அளித்துள்ளார்கள். கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் இஸ்லாமிய சமுதாயத்திற்கு இணையான வேறு எந்த சமுதாயமும் திகழ்ந்ததில்லை. இவ்வாறு கல்விக்கு முக்கியத்துவம்  அளிக்கும் சமூகமாக திகழ்ந்திருக்கும் வேளையில். இன்றய சமுதாயம் கல்வியில் எவ்வாறு உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
கல்வி முன்னேற்றம் என்பது வெறும் அறிவை மட்டும் வளர்கும் முயற்சி அல்ல. கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும். அரசு நி்ர்வாகத்தில் நுழைந்து நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும் கடந்த அறுபது ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும் பொருளாதாரத்திலும் பின் தங்கி வருகின்றது.இந்தியாவில் வாழும் அனைத்து பிற்பட்ட சமூகங்களை விட முஸ்லிம் சமுதாயம் பின்தங்கி உள்ளது. தலித் சமுதாயம் மற்றும் மலைவாழ் மக்களை விட முஸ்லிம் சமுதாயம் பின் தங்கியதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் கல்வியைப் பற்றிய போதிய விழிப்புணர்விண்மை. கல்வியை மறந்ததால் இந்த சமூகம் கடைசி நிலையில் உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை எவரொருவர் தனது பெயரை எழுதவும் கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என வகைப்படுத்தப்படுகிறார். இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில் 55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான உத்திரபிரதேசம். பீகார். அஸ்ஸாம். ஜம்மு- காஷ்மீர். மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது.
சச்சார் குழு அறிக்கை
@@@@@@@@@@@@@

2006-
ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8 ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15% - +2 வரை படித்தவர்கள் 7.8% . டிப்ளோமாவரை படித்தவர்கள் 4.4% - பட்டப்படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே - 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர். கிராமபுற முஸ்லிம்களில்  62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர். பாதுகாப்புத் துறையில் 4% பேர் முஸ்லிம்கள். தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர்கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி) கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.மருத்துவ துறையில் முஸ்லிம்கள் 4.4% தான் உள்ளனர்.சங்பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று முஸ்லிம் கர்பிணி பெண்களுக்கு தவறான மருந்தை கொடுத்து எதிர்கால முஸ்லிம் சமுதாயத்தை ஊனமுற்ற சமுதாயமாக மாற்றவேண்டும். மேலும் முஸ்லிம்களுக்கு தவறான மாத்திரைகளை கொடுத்து உடல் ரீதியாக அவர்களை பலவீனப்படுத்த வேண்டும்  என்று ஒரு இரகசிய சுற்றறிக்கையை இந்தியா முழுவதும் அனுப்பியது. இது சில இடங்களில் நடந்து கொண்டும் இருக்கிறது. ஆகவே அதிகமான முஸ்லிம் மருத்துவர்களை உருவாக்குவது மிகவும் அவசியமானது.

1)    பயனுள்ள அனைத்து கல்வியையும்  கற்றுக் கொள்ள தூண்டும் இறைவனசங்கள்.
@@@@@@@@@@@@@@@@@

முதன் முதலில் இறங்கிய குர்ஆன் வசனம்  இக்ரஃ  படியுங்கள் என்றும் எழுதக் கற்றுக் கொடுத்தவன் இறைவன் என்றுதான் துவங்குகிறது.

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَق(1) خلق الانسان من علق(2) 
اقرأ وربك الاكرم (3) الذي علم با القلم (4)
َ‌ۚ‏ 
முதன் முதலில் ஆதம் ( அலை)  அவர்களுக்கு கல்வியைத்தான் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்

وعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْۢبِــُٔوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ (2:31)
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏(2:32)  
قَالَ يٰٓـاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآٮِٕهِمْ‌ۚ فَلَمَّآ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآٮِٕهِمْۙ قَالَ اَلَمْ اَقُل لَّـكُمْ اِنِّىْٓ اَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْن(2:33)َ


வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு கல்விகளைப் பற்றி குர்ஆன் பேசுகிறது
அறிவியலைப்பற்றி பேசும் அல்குர்ஆன்
உயிரின் ஜீவநாடியான மரபணுவைக்கூட செயற்கையாக உருவாக்கும் அளவுக்கு அறிவியல் வளர்ந்து கொண்டே வருகிறது அறிவியல் வளர வளர அல்லாஹ்வின் அருள் மறையின் மதிப்பும் உயர்ந்து கொண்டே போகிறது
மனிதன் மன்னால் ஆனவன் என்பது பற்றியும் தாயின் கருவறையில்குழந்தையின் படிப்படியான வளர்ச்சி பற்றியும் எடுத்துக்கூறும் அல் குர்ஆன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@َ

يايُّهَا النَّاسُ اِنْ كُنْـتُمْ فِىْ رَيْبٍ مِّنَ الْبَـعْثِ فَاِنَّـا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمْ‌ ؕ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ْ

மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். 
(
அல்குர்ஆன் : 22:5)

3208-  صحيح البخاري قَالَ عَبْدُ اللَّهِ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهْوَ الصَّادِقُ الْمَصْدُوقُ قَالَ: ((إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا، فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، وَيُقَالُ لَهُ اكْتُبْ عَمَلَهُ وَرِزْقَهُ وَأَجَلَهُ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ. ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الْجَنَّةِ إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ
)).

3208.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.  உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:  உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை -  போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுதுஎன்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும்.
புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடிக்க தூண்டும் அல் குர்ஆன்
@@@@@@@@@@@@@@@@@@@

وَالْاَنْعَامَ خَلَقَهَا‌ ۚ لَـكُمْ فِيْهَا دِفْ ٴٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَاْكُلُوْن(16:5)َ‏  
وَلَكُمْ فِيْهَا جَمَالٌ حِيْنَ تُرِيْحُوْنَ وَحِيْنَ تَسْرحون  16:6                  
وَتَحْمِلُ اَثْقَالَـكُمْ اِلٰى بَلَدٍ لَّمْ تَكُوْنُوْا بٰلِغِيْهِ اِلَّا بِشِقِّ الْاَنْفُسِ‌ؕ اِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌۙ‏ (16:7) 
وَّالْخَـيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيْرَ لِتَرْكَبُوْهَا وَزيْنَةً‌ ؕ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ‏
       --------------------------------

குர்ஆன் அருளப்பட்ட போது மக்கள் பயன்படுத்திய வாகனங்களைப்பற்றி மேற்படி வசனத்தில் கூறப்பட்டுள்ளது தற்போது உள்ள இரயில் விமானம் ஆகியவற்றை கூறியிருந்தால் அது அவர்களுக்கு புரியாது ஆகவே இன்னும் நீங்கள் அறியாத புதியவைகளை அல்லாஹ் உருவாக்குவான்  என்ற வாக்கியத்தில் நவீன ரக வாக னங்கள் அனைத்தும் உள்ளடங்கி விடும் மேலும் அவைகளை கண்டுபிடிப்பதற்கான கல்வியை கற்றுக் கொள்ளும் படியும் தூண்டுகிறது.
தாவரவியல் பற்றி பேசும் குர்ஆன் அதை சிந்திக்கும்படி தூண்டுகிறது.
@@@@@@@@@@@@@#@@@@@@@@@@@

وَهُوَ الَّذِىْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً‌ ۚ فَاَخْرَجْنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَىْءٍ فَاَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا‌ ۚ وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ‌ ؕ اُنْظُرُوْۤا اِلٰى ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَيَنْعِهٖ ؕ اِنَّ فِىْ ذٰ لِكُمْ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏(6:99)

இவ்வாறு அனைத்து கல்விகளைப் பற்றியும் குர்ஆனில் கூறப்பட்டு அவைகளை கற்றுக் கொள்ளவும் தூண்டுகிறது
நம் சமுதாயம் கல்வியில் முன்னேற சில ஆலோசனைகள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

1)
அல்லாஹ்விடம் கல்வி வளர்ச்சிக்காக துஆ செய்ய வேண்டும்

رَّبِّ زِدْنِي عِلْمًا 

இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” 20:114

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي    وَيَسِّرْ لِي أَمْرِي  وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي   يَفْقَهُوا قَوْلِي 

இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!” “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!” “என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக!” “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!” 20:25-28

رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ   وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ  وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ 

இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87
2) கல்வியை தேடுவதில் ஆர்வமும் முயற்சியும் வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@

يٰيَحْيٰى خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ وَاٰتَيْنٰهُ الْحُكْمَ صَبِيًّا ‌‏  

(அதன் பின்னர்) யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
(
அல்குர்ஆன் : 19:12)

وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ‌ؕ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ 

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.
(
அல்குர்ஆன் : 29:69)
மூன்று சாராரின் முயற்சி இருந்தால்தான் கல்வியில் முன்னேற முடியும்.

A.கற்கக்கூடிய மாணவர்களின் முயற்சி.
-----------------------------------------------------------------------

நான் இந்த கல்வியை கற்றே தீருவேன் அதற்காக பெரும் முயற்சியை மேற்கொள்வேன் என் லட்சியம் இதுதான் எனறு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் அதற்கான தைரியத்தையும் மனோபலத்தையும் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.
B.கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியரின் முயற்சி
-----------------------------------------------------------------------

ஆசிரியர்கள் மாணவர்களை நன்கு திறமையானவர்களாக உருவாக்க மாணவர்களை ஆர்வப்படுத்த வேண்டும் மேலும் அவர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு புரியும்படி தேவையான விளக்கங்களை எளிதாக கற்றுக் கொடுக்க வேண்டும்.

عن ابن عباس رضي الله عنه عن النبي صلي الله عليه وسلم علموا ويسروا ولا تعسروا وبشروا ولاتنفروا واذا غضب احدكم فليسكت
( الجامع الصغير)
عن ابي هريرة رضي الله عنه عن النبي صلي الله عليه وسلم علموا ولاتعنفوا فان المعلم خير من المعنف( الجامع الصغير)


மாணவர்களுக்கு மென்மையான முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் கண்டிப்பும் வேண்டும்.அந்த கண்டிப்பினால் மாணவன் கல்விகற்காமல் ஓடிவிடக்கூடிய நிலை ஏற்பட்டு விடக்கூடாது.
C.பெற்றோர்களின் முயற்சி 
-----------------------------------------------

الحديث.الرجل راع علي اهل بيته وهو مسؤل عنهم( بخاري
)

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்காணித்து எதனைப் படிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதையெல்லாம் கவனமாக கவனித்துக் கொண்டே வரவேண்டும்.அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதையும்.கவனிப்பதுடன் பிள்ளைகளுடன் சேர்ந்து உட்கார்ந்து உரையாடி அவர்களின் நண்பர்களைப் பற்றியும் பள்ளி முடிந்ததும் அவர்கள் வேறு எங்கும் செல்கிறார்களா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
அவர்கள் படிக்கும் நிலையில் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமலிருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிவதுடன் அவர்கள் தீய நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனரா? தீய இடங்களுக்கு செல்கின்றனரா புகை பிடித்தல் பழக்கம் உள்ளனவா என அவர்கள் அறியாத வண்ணம் கண்காணித்து பிள்ளைகளிடம் மென்மையான முறையில் தீய பழக்கத்தின் கெடுதிகளை உணர்த்தி நேர் வழியின் பக்கம் கொண்டு வரவேண்டும்.
3)மாணவர்களிடத்தில் பேணுதல் வரவேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இன்றய கல்விக்கூடங்களில் ஆண் பெண் இரு பாலரும் ஒன்றாகவே கலந்திருக்க கூடிய நிலைதான் உள்ளது சில இடங்களில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் தனியாக பிரித்தாலும் காலேஜ் என்று வரும்போது ஒன்றாகவே இருபாலரையும் இனைத்து விடுகிறார்கள். அங்கே இருசாராரும் ஆண் பெண் பாகுபாடின்றி பழகுவதும் பேசுவதும் காதல் வசப்படுவதும் ஏற்படுகிறது. இதனால் கல்வியில்
முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.எனவே தான் மார்க்கம் பேணுதலையும் இறையச்சத்தையும் உண்டாக்கிக் கொள்ள வேண்டுமென்று அறிவுரை கூறுகின்றது.

قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏ (24:30) 
وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ (24:31)
روي بعضهم حديثا فى هذا الباب عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: من لم يتورع فى تعلمه ابتلاه الله تعالى بأحد ثلاثة أشياء: إما أن يميته فى شبابه، أو يوقعه فى الرساتيق، أو يبتليه بخدمة السلطان( تعليم المتعلم)

பெண்களைவிட  ஆண்களுக்கு அறிவை அல்லாஹ் அதிகமாகவே கொடுத்துள்ளான். அவ்வாறிருந்தும் பெண்கள் அளவுக்கு ஆண்கள் அக்கறை செலுத்துவதில்லை.மதிப்பெண்களிலும் அவர்களைவிட குறைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். ஆண்களின் மூளை சராசரியாக 1350 முதல்1450 வரை இருக்கும்.பெண்களின் மூளை சராசரியாக 1250 முதல் 1350 வரை இருக்கும்  இயல்பாக பெண்ணை விட ஆணுக்கு அறிவுத்திறன் அதிகம். ஆனால் ஆண்கள் பொழுது போக்கான அம்சங்களிலும் கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலும் அதிகம் மூழ்குவதால் அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை.
4)ஞாபக சக்தியை உண்டாக்க வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@


கல்வியில் முன்னேற்றம் அடைய ஞாபகசக்தி அதிகம் ஏற்பட சில வழிமுறைகளை பெரியார்கள் நமக்கு கற்றுத் தறுகின்றார்கள் அவைகளில் சிலவற்றை காண்போம்.
A)
உணவை கட்டுப்பாடாக சாப்பிடுவது குறிப்பாக காலை உணவை குறைவாக சாப்பிட வேண்டும்

عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ. بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ» سنن الترمذي

வயிற்றை மூன்று பாகமாக பிரி்த்து ஒரு பகுதி உணவு.ஒரு பகுதி தண்ணீர்.ஒரு பகுதி மூச்சுவிடுவதற்காக. 
B) தஹஜ்ஜத் தொழுகையை கடைபிடிப்பது.அந்த நேரத்தில் எழுந்து துஆ செய்து விட்டு படிப்பதும் ஓதுவதும் ஞாபக சக்தியை உண்டாக்கும்.
C) அதிகமாக குர்ஆன் ஓதுவது.
ஷத்தாத் இப்னு ஹகீம் ( ரஹ்) அவர்கள் தங்கள் சகோதரர்கள் சிலரை கணவில் கண்டு எந்த செயலின் காரணமாக அதிகம் பலன் அடைந்தீர்கள் என கேட்டபொழுது. அதிகமாக குர்ஆன் ஓதியதனால்  என்று பதி்ல் கூறினார்கள் ( تعليم المتعلم)
பாடம் படிக்குமுன் இந்த தஸ்பீஹை ஓதிக் கொள்வது நல்லது 

بسم الله وسبحان الله والحمد لله ولااله الا الله والله اكبر ولاحول ولاقوة الا با الله العلي العظيم

இன்னும் ஒவ்வொரு பர்ளு தொழுகைக்குப் பின்பும் கீழ் வரும் தஸ்பீஹை ஓதுவதும் நபி ( ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதுவதும் ஞாபக சக்தியை உண்டாக்கும்.

امنت بالله الواحد الاحد الحق وحده لاشريك له
இமாம் ஷாஃபிஈ ( ரஹ்) கூறுகின்றார்கள். நான் வகீஃ ( ரஹ்) அவர்களிடம் எனக்கு ஞாபக சக்தி குறைந்து வருகிறது என்ன செய்ய வேண்டும் என்றேன். அதற்கு அவர்கள் பாவங்களை விட்டும் நீங்கியிருக்க வேண்டும். ஞாபக சக்தி என்பது அல்லாஹ்வுடைய அருளாகும். பாவம் புரிபவருக்கு அல்லாஹ்வுடைய அருள் கிட்டாது என்றார்கள்.
மேலும் மிஸ்வாக் செய்வது. தேன் சாப்பிடுவது. சக்கரையுடன் பால் சாப்பிடுவது.ஒவ்வொரு நாளும் சிகப்பு நிர உலர்ந்த திராட்சை 21 சாப்பிடுவது. இவைகளெல்லாம் ஞாபக சக்தியை உண்டாக்கும் நோய்களுக்கு நிவாரணியாகவும் ஆகும்.(تعليم المتعلم)
5) சமுதாய அக்கறை கொண்ட தலைவர்கள்  வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நம் சமுதாயம் கல்வியின் பின் தங்கி இருப்பதற்கு இன்னொரு காரணம். தலைமை பதவியில் இருப்பவர்கள் சமுதாய அக்கறை இல்லாமல் இருப்பது. உலகம் முழுவதும் வாழும் சிறுபான்மை இனத்தவரின் நிலையை ஆய்வு செய்த திருமதி ஸ்மித் என்ற சமூகவியல் விஞ்ஞானியை கொச்சியில் பத்திரிக்கை நிருபர் பேட்டி கண்ட போது இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரைப்பற்றி கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களைப் பற்றி கூறும்போது கல்வி பொருளாதார ரீதியாக அசைக்க முடியாத ஒரு அடித்தளத்தை அமைத்து சக்தி வாய்ந்த குழுக்களாக வளர்ந்து வரும் சமூகம் என்றும். முஸ்லிம்களைப் பற்றி கூறும்போது பாரம்பரியமாக நிலை நின்று வந்த செல்வாக்கு கலாச்சார சுவடுகள் என அனைத்தையும் இழந்து அவைகளின் நஷ்டக் கணக்குகளை மட்டும் கைவசம் வைத்திருக்கும் பலவீனமான மக்கள். சமுதாய அக்கறை இல்லாத தலைமைதான் இதற்கு காரணம் என்று கூறினார்.
الحديث الامير الذي علي الناس راع وهو مسؤل عنهم( بخاري)

தலைவர் .மக்களுக்கு பொருப்பாளர் அவர்கள் சம்மந்தமாக கேள்வி கேட்கப்படுவார் என்ற ஹதீஸின் அடிப்படையில் தலைவர்கள் செயல்பட வேண்டும்.
அந்தந்த மஹல்லாவில் இருக்கும் தலைவர் மற்றும் நிர்வாகம் அங்குள்ள மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு கல்வி வழிகாட்டல் நடத்த வேண்டும். அவர்கள் எந்த துறையில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.  என்ன படிப்புக்கு நல்ல வேலை வாய்ப்புள்ளது. எந்த காலேஜில் சேரலாம் என்ற ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.தேவைப்பட்டால் இவர்களே காலேஜ்களில் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும்.  மேற்படிப்பை தொடர முடியாத ஏழை மாணவ மாணவிகளுக்கு பொருளாதார உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
6) இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@

நம் சமுதாயத்தில் படித்த பட்டதாரிகளை உருவாக்கினாலும் அரசு வேலை வாய்ப்புகளில் நாம் அதிகம் இடம்பெற முடிவதில்லை நமக்கு குறைந்த அளவே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கு காரணம் நம் சமுதாயம் பல இயக்கங்களாக பிரிந்து கிடப்பதுதான் என்று அனைவர்களும் ஏற்றுக்கொண்ட உண்மை. இதை சரி செய்வதற்கு இஸ்லாமிய அனைத்து இயக்கங்களையும் ஒன்றுகூட்டி ஒவ்வொரு கட்சியிலிருந்தும். இயக்கங்களிலிருந்தும் ஒரு நபரை தேர்வு செய்து ஒரே அணியை உருவாக்க வேண்டும். அதற்கு முடியாவிட்டால் ஒரே கூட்டணியையாவது அமைக்க வேண்டும் .இதற்கும் முடியாவிட்டால் குறைந்த பட்சம் இஸ்லாமிய அனைத்துக் கட்சிகளும் ஒன்றினைந்து ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும். இவ்வாறு நாம் ஒன்றுபட்டால் நமக்கான இட ஒதிக்கீட்டை பத்து சதவீதம்வரை நாம் பெற முடியும் வரக்கூடிய தேர்தலிலும் அதிகமான தொகுதிகளில் முஸ்லிம்கள் போட்டியிட முடியும். மேலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் நாம் அதிகம் இடம்பெற முடியும்.

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌ۚ‏  

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
(
அல்குர்ஆன் : 8:46)