புதன், 30 மார்ச், 2016

காயமே! இது பொய்யடா!

بسم الله الرحمن الرحيم

காயமே! இது பொய்யடா!

 يَا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ، فَلاَ تَغُرَّنَّكُمُ الحَيَاةُ الدُّنْيَا، وَلاَ يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الغَرُورُ،  [فاطر: 6] "
صحيح البخاري 6421  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ: حُبُّ المَالِ، وَطُولُ العُمُر





 ஏப்ரல் 1 ஐ முட்டாள் தினமாகவும் ஏமாற்று தினமாகவும்   அனுசரிக்கப்படுகிறது.இது உருவானதற்கான காரணம் கூறுகையில்
ஜனவரி 1 ஐ புத்தாண்டாக 1562ஆம் ஆண்டுமுதல் கொண்டாடினர். ஆனால் இதை அறியாத ஜெர்மனி மற்றும் சில நாடுகள் ஏப்ரல் 1 ஐ பழைய முறைப்படி புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். ஏப்ரல் 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கருதுபவர்களை ஏப்ரல் பூல் எனக் கேலியும், கிண்டலும் செய்தனர். ஆகவே இத்தினத்தில் உண்மையில்லாத வதந்திகளையும்  ஏமாற்றுதலையும் உலகம் முழுவதும் பரப்பி வந்தனர் இதுவே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வதந்திகளைபரப்புவது. ஏமாற்றுவது. ஏமாறுவது இவையனைத்தும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டஒன்று 


பொய் ஏமாற்று மோசடி இவைகள் முனாபிக்கின் தன்மைகள் .
எனவே தான் مَنْ غَشَّ فَلَيْسَ مِنَّا எவன் ஏமாற்றுகிறானோ (மோசடி செய்கிறானோ) அவன் நம்மை (-இஸ்லாத்தை )சார்ந்தவன் அல்ல (திர்மிதி 1236).
ஏமாற்றும் நோக்கம் இன்றி சும்மா /தமாஷ் என்ற நோக்கில் கூட அது கூடாது
صحيح البخاري 6478  عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ
6478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்
இந்த தருணத்தில் மனித சமுதாயம் உலக ஆசைகளில் மூழ்கி அது மறுமைச் சிந்தனையை விட்டும் நம்மை ஏமாற்றி விடுவதையும் நாம் ஏமாந்து போவதையும் நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
உலக மோகம் மனிதர்களை ஏமாற்றி விடாமல் எச்சரிக்கையாக இருக்க தூண்டும் இறை வசனங்கள்
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {يَا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ، فَلاَ تَغُرَّنَّكُمُ الحَيَاةُ الدُّنْيَا، وَلاَ يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الغَرُورُ، إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا، إِنَّمَا يَدْعُو حِزْبَهُ لِيَكُونُوا مِنْ أَصْحَابِ السَّعِيرِ} [فاطر: 6] "
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ، وَأُدْخِلَ الجَنَّةَ فَقَدْ فَازَ، وَمَا الحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الغُرُورِ} [آل عمران: 185] وَقَوْلِهِ: {ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا، وَيُلْهِهِمُ الأَمَلُ فَسَوْفَ يَعْلَمُونَ} [الحجر: 3
]

உவமை கூறுவதில் உவமையற்று விளங்கும் திருக்குர் ஆன் உலக வாழ்க்கைக்கு ஓர் அழகிய உதாரணம் கூறுகின்றது

إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ مِمَّا يَأْكُلُ النَّاسُ وَالْأَنْعَامُ حَتَّى إِذَا أَخَذَتِ الْأَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَا أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا أَتَاهَا أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا حَصِيدًا كَأَنْ لَمْ تَغْنَ بِالْأَمْسِ كَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (24)

ஆசைப்பட்டதை அடைவதற்காக அல்லும் பகலும் உழைத்த மனிதன் அந்த ஆசை கை கூடிவரும் போது அதை அனுபவிக்க முடியாது அவனுடைய வாழ்க்கை முடிந்துவிடுவதை இந்த உதாரணம் சித்தரிக்கிறது.மழை பொழிந்து வளம் கொழிக்கும் தருணத்தில் அனைத்தும் பதராக மாறிவிடுவதைப் போன்று. அற்ப ஆயுளில் மனித வாழ்வு முடிந்து விடுகிறது.
உலக வாழ்க்கைக்கும் அதன் இன்பங்களுக்கும் இ்மாம் கஸ்ஸாலி( ரஹ்) கூறக்கூடிய  ஓர் உதாரணம்
**************************************

ஒரு மனிதன் கிணற்றுச் சுவரின் ஒரத்தில் இருக்கும் மரக்கிளையை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறான். கீழே கிணற்றுக்குள் பார்கின்றான் ஒரு முதலை அவன் விழுந்தவுடன் அவனை விழுங்க தயாராக வாயை பிளந்து கொண்டிருக்கிறது.மேலே பார்கிறான் ஒரு சிங்கம் இவனை தாக்க தயார் நிலையில் நிற்கிறது.இதற்கிடையில் இவன் தொங்க கூடிய கிளையை கருப்பு எலியும் வெள்ளை எலியும் கொரித்துக் கொண்டு இருக்கிறது. இவன் கை வலி தாங்காமல் அங்கும் இங்கும் அசைகின்றான் அப்போது இவன் தொங்கும் கிளை ஒரு தேன் கூட்டின் மீதுபட்டு அதிலிருந்து சில தேன் துளிகள் இவன் நாவில் விழுகிறது. மேலே சிங்கம் என்பதுஇஸ்ராயீலைப் போல இவன் ஆயுள் முடிந்தவுடன் உயிரை கைப்பற்ற தயாராக உள்ளார். கீழேஉள்ள முதலை இவனுடைய கப்ரைப் போல இவனுக்காக காத்திருக்கிறது. வெள்ளை எலி கருப்பு எலி இரவு பகல். அது இவன் ஆயுலை குறைத்து வருகிறது. இந்த நிலையில் அவன் சாப்பிடும் தேன் இதுதான் உலக இன்பம் என்றார்கள்.
உலக மோகத்தில் மூழ்கி விடாமல் இருக்க அண்ணலார் கூறிய அறிவுரைகள்
صحيح البخاري 6416 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ» وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ»
ஒருசம்பவம்
***************
நபி ஈஸா (அலை) அவர்களுக்கு சொந்த வீடு சொந்த ஊர் கிடையாது அனைத்து ஊர்களுக்கும் சென்று ஏகத்துவத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களிடம் இருந்த பொருள் இரண்டு 1 படுத்து உரங்க ஒரு தலையனை. தண்ணீர் அருந்த ஒரு பாத்திரம். இவைகள்தான் அவர்களிடம் இருந்தது. ஒரு நாள் ஓர் வழியாக போய்க் கொண்டு இருக்கும் பொழுது ஒரு மனிதர் கையில் தலைவைத்து உரங்குவதை கண்டார்கள். ஒரு மனிதன் தலையனை இல்லாமலே உரங்கமுடியுமென்றால் இந்த தலையனை எதற்கு என்று அதையும் தர்மம் செய்து விட்டார்கள். மற்றொரு நாள் ஒரு ஆற்றின் வழியாகச் சென்றார்கள் அங்கே ஒருவன் தன் இரு கரத்தினால் தண்ணீர் அல்லி பருகிக் கொண்டிருந்தான். இதைக் கண்ட  அவர்கள் ஒருவன் பாத்திரம் இல்லாமலே தண்ணீர் பருக முடியுமென்றால் இந்த பாத்திரம் எதற்கு என்று அதனையும் தர்மம் செய்து விட்டார்கள்.
وَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: «ارْتَحَلَتِ الدُّنْيَا مُدْبِرَةً، وَارْتَحَلَتِ الآخِرَةُ مُقْبِلَةً، وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا بَنُونَ، فَكُونُوا مِنْ أَبْنَاءِ الآخِرَةِ، وَلاَ تَكُونُوا مِنْ أَبْنَاءِ الدُّنْيَا، فَإِنَّ اليَوْمَ عَمَلٌ وَلاَ حِسَابَ، وَغَدًا حِسَابٌ وَلاَ عَمَلٌ
صحيح البخاري 6421  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ: حُبُّ المَالِ، وَطُولُ العُمُرِ " رَوَاهُ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ
புகாரி 6421. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:  1. பொருளாசை.  2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.  என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பேராசை  பெறும்நஷ்டம்
*****************************
பொருளை தேட வேண்டாமென்று மார்கம் கூறவில்லை. மாறாக உலகச்செல்வங்களை தேடுவதிலேயே மூழ்கி மறுமையை மறந்து விடக்கூடாது என்று அறிவுரை கூறுகின்றது.

صحيح البخاري  6425 -  حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ المِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَهُ: أَنَّ عَمْرَو بْنَ عَوْفٍ، وَهُوَ حَلِيفٌ لِبَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ، كَانَ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ إِلَى البَحْرَيْنِ يَأْتِي بِجِزْيَتِهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ صَالَحَ أَهْلَ البَحْرَيْنِ، وَأَمَّرَ عَلَيْهِمُ العَلاَءَ بْنَ الحَضْرَمِيِّ، فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بِمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَسَمِعَتِ الأَنْصَارُ بِقُدُومِهِ، فَوَافَتْهُ صَلاَةَ الصُّبْحِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا انْصَرَفَ تَعَرَّضُوا لَهُ، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ رَآهُمْ، وَقَالَ: «أَظُنُّكُمْ سَمِعْتُمْ بِقُدُومِ أَبِي عُبَيْدَةَ، وَأَنَّهُ جَاءَ بِشَيْءٍ» قَالُوا: أَجَلْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَأَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ، فَوَاللَّهِ مَا الفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ، وَلَكِنْ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ عَلَيْكُمُ الدُّنْيَا، كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا، وَتُلْهِيَكُمْ كَمَا أَلْهَتْهُمْ»

புகாரி 6425. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.  பனூ ஆமிர் இப்னு லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களை, ஜிஸ்யா(காப்பு) வரி வசூலித்துக் கொண்டு வரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா இப்னு அல்ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியான ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதருடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்து நபி(ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தங்கள் எண்ணத்தை சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு அபூ உபைதா வந்துவிட்டார்; அவர் ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்என்றார்கள். அன்சாரிகள் ஆம், இறைத்தூதர் அவர்களே!என்று பதிலளித்தார்கள். அவ்வாறாயின் ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.17

صحيح البخاري 6438 عَنْ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ الزُّبَيْرِ، عَلَى المِنْبَرِ بِمَكَّةَ فِي خُطْبَتِهِ، يَقُولُ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «لَوْ أَنَّ ابْنَ آدَمَ أُعْطِيَ وَادِيًا مَلْئًا مِنْ ذَهَبٍ أَحَبَّ إِلَيْهِ ثَانِيًا، وَلَوْ أُعْطِيَ ثَانِيًا أَحَبَّ إِلَيْهِ ثَالِثًا، وَلاَ يَسُدُّ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»

புகாரி 6438. அப்பாஸ் இப்னு ஸஹ்ல் இப்னி ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.  அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும்போது சொல்லக் கேட்டேன். மக்களே! நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன்மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் மூடாது. மேலும், (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களிலிருந்து திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
எது உனது சொத்து?
***********************

மனிதன் என் சொத்து என் சொத்து என்கிறான் அவனுக்குறியது எதுவென்று விளக்கும் நபிமொழி
صحيح مسلم 3 - (2958)  عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْرَأُ: أَلْهَاكُمُ التَّكَاثُرُ، قَالَ: " يَقُولُ ابْنُ آدَمَ: مَالِي، مَالِي، قَالَ: وَهَلْ لَكَ، يَا ابْنَ آدَمَ مِنْ مَالِكَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ، أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ، أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ؟ "،

ஸஹீஹ் முஸ்லிம் 5665. அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ”மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டதுஎன்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், ”ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்...என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : أُهْدِيَ لَنَا شَاةٌ مَشْوِيَّةٌ ، فَقَسَّمْتُهَا كُلَّهَا إِلَّا كَتِفَهَا ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ ، فَقَالَ : " كُلُّهَا لَكُمْ إِلَّا كَتِفَهَا " ، رَوَاهُ التِّرْمِذِي
ُّ فِي الْجَامِعِ بِلَفْظٍ : أَنَّهُمْ ذَبَحُوا شَاةً ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " مَا بَقِيَ مِنْهَا ؟ " قَالَتْ : مَا بَقِيَ مِنْهَا إِلَّا كَتِفُهَا ، قَالَ : " بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا " ، وَقَالَ : حَسَنٌ صَحِيحٌ ، وَمَعْنَاهُ أَنَّهُمْ تَصَدَّقُوا بِهَا إِلَّا كَتِفَهَا .

ஆயிஷா( ரலி) கூறுகிறார்கள் சமைத்தஆடு ஒன்று எங்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டது.அதன் சப்பை ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் ( தர்மமாக) பங்கு வைத்து கொடுத்து விட்டேன். நபி ( ஸல்) அவர்கள் வந்த போது அவர்களிடம் அதை கூறினேன்
எதை நீ பங்குவைத்தாயோ அதுதான் நமக்குறியது
என்றார்கள்.
நல்ல நண்பன்
******************

மரணதருணத்தில் இருக்கும் மனிதன் தன் நண்பர்கள் மூவரை அழைத்து. முதல் நண்பனிடம் கேட்டான் நண்பா ! நான் இறந்து விட்டால் நீ என்ன செய்வாய் என்றான். அதற்கு அவன் நீ இருக்கும் வரை உன்னை நண்பனாக கொண்டிருந்தேன் நீ இறந்து விட்டால் வேறொருவனை நண்பனாக்கிக் கொள்வேனென்றான். இதைக்கேட்டு வருத்தமடைந்தான் இவ்வளவுதானா நம்முடைய நட்பு என்றான். பிறகு இரண்டாம் நண்பனிடம் இதே கேள்வியைக் கேட்டான் அதற்கவன் நண்பா! நீ இறந்து விட்டால் நல்ல முறையில் உன்னை குழிப்பாட்டி கபனிட்டு தொழ வைத்து அடக்கம் செய்வேனென்றான். இதைக் கேட்டவுடன் சந்தோஷமடைந்தான் இதையாவது நீ செய்கிறாய் என்றான்.பிறகு மூன்றாவது நண்பனிடமும் இதே கேள்வியை கேட்ட போது. நண்பா! நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது நீ இறந்து விட்டால் நானும் உன்னோடு வந்து விடுவேனென்றான். இதைக் கேட்டவன் நீதாண்டா உண்மையான நண்பன் எனக்கூறி பெரும்மகிழ்ச்சியடைந்தான். இந்த நண்பர்களில் முதல் நண்பன்தான் அவனுடைய செல்வம்.  இரண்டாவது நண்பன் அவனுடைய உறவுகள். மூன்றாவது நண்பன் அவன் செய்த அமல். இதே கருத்தை கீழ் வரும் ஹதீஸிலும் காணலாம்

صحيح مسلم 5 - (2960)  أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَتْبَعُ الْمَيِّتَ ثَلَاثَةٌ، فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى وَاحِدٌ، يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ»
தீனுடைய காரியங்களிள் அதிகம் ஈடுபடுபவர்களை குறைகூறாதே
********************************

நம்மில் சிலர் தீனுடைய வேலையில் அதிகம் ஈடுபடுபவர்களிடம் . எப்பொழுதும் தாங்கள் தப்லீக் என்று சென்று விடுகிரீர்களே! குடும்மத்தை யார் கவனிப்பது என்று குறை கூறுகிறார்கள். அவ்வாறு சொல்வதை தவிற்க வேண்டும். அவர்கள் அதற்கான ஏற்பாட்டை செய்துவிட்டுத்தான் செல்கிறார்கள் இவர்கள் தீனுடைய வேலையில் ஈடுபடுவதினால் குடும்பத்திற்கான தேவையை இவர்களின் பிள்ளைகளிடம் இறைவன் அதிகப்படுத்தி தறுவான் அவர்களின் தேவையை பூர்த்தி செய்பவன் அல்லாஹ்

سنن الترمذي 2267  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ أَخَوَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَحَدُهُمَا يَأْتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ يَحْتَرِفُ فَشَكَا الْمُحْتَرِفُ أَخَاهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَعَلَّكَ تُرْزَقُ بِهِ

புதுக்கணக்கு
*****************


மனிதர்கள் ஈடுபடும் துறையில் ஆண்டுக்கொருமுறை ஏப்ரலில் புதுக்கணக்கு போடுகிறார்கள்.சிரிய குடும்பத்தை நிர்வகிப்பவர் முதல் நாடாளும் அரசியலார் வரை அனைவரும் புதுக்கணக்கு போடுகிறார்கள். ஆனால் சொற்ப லாபமளிக்கும் இந்த துறைகளில் லாபநஷ்டக் கணக்குப் பார்கும் மக்கள் ஏனோ கணக்கற்ற லாபந் அளிக்கும் மறுமை வியாபாரத்தில் கணக்குப் பார்க்க தவறி விடுகிறார்கள்.
தத்துவமேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு மனிதனும் இரவு துயில் கொள்ளச் செல்லும் போது இன்று எத்தனை நன்மையான காரியங்கள் செய்தோம் எத்தனை பாவமான காரியங்கள் செய்தோமென்று கணக்குப் பார்த்து மறுநாள் நன்மை அதிகமாக வேண்டும் பாவங்கள் குறைய வேண்டுமென்று கூறுகிறார்கள்
அமீருல் மூமினீன் உமர் ( ரலி) அவர்களின் அந்திம காலத்தில் .அவர்கள் பகைவனால் குத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு நண்பர் அமீருல் மூமினீன் அவர்களே! சுவனத்தைக் கொண்டு மங்களச் செய்தி கூறுகிறேன். தாங்கள் நாயகத்தின் பிரதிநிதியாக உயிர் பொருள். ஆவி அனைத்தையும் இறைவனுக்காக தியாகம் செய்தவர்களாகவுமிருக்கிறீர்களெனக் கூறினார். அதைச் செவியுற்ற உமர் ( ரலி) அவர்கள். நண்பரே! நான் அவ்வாறு நினைக்கவில்லை எனது நன்மையும் தீமையும் சரி நிகராக ஆகியிருந்தாலே நான் மகிழ்ச்சியடைவேன் என்று பதிலளித்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.