بسم الله الرحمن الرحيم
முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டும்
وَعَلَّمَ اٰدَمَ
الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ
اَنْۢبِــُٔوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (2:31)
عن ابي هريرة رضي الله عنه عن النبي صلي الله عليه وسلم علموا ولاتعنفوا فان المعلم خير من المعنف( الجامع الصغير)
عن ابي هريرة رضي الله عنه عن النبي صلي الله عليه وسلم علموا ولاتعنفوا فان المعلم خير من المعنف( الجامع الصغير)
முன்னுரை
*************
*************
எந்த ஒரு சமூகமும் கல்வியைக் கொண்டுதான் மாற்றம் காணமுடியும். கல்விதான் உலகிலுள்ள செல்வங்களில் தலைசிறந்தது. உலகத்தின் வளர்ச்சியில் இஸ்லாமியர்கள் பல்வேறு துறைகளில் தமது பங்களிப்பை அளித்துள்ளார்கள். கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் இஸ்லாமிய சமுதாயத்திற்கு இணையான வேறு எந்த சமுதாயமும் திகழ்ந்ததில்லை. இவ்வாறு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகமாக திகழ்ந்திருக்கும் வேளையில். இன்றய சமுதாயம் கல்வியில் எவ்வாறு உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
கல்வி முன்னேற்றம் என்பது வெறும் அறிவை
மட்டும் வளர்கும் முயற்சி அல்ல. கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில்
முன்னேற முடியும். அரசு நி்ர்வாகத்தில் நுழைந்து நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்ய
முடியும். சிறந்த சமூக
கட்டமைப்பை உருவாக்க முடியும் கடந்த அறுபது ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து
கல்வியிலேயும் பொருளாதாரத்திலும் பின் தங்கி வருகின்றது.இந்தியாவில் வாழும்
அனைத்து பிற்பட்ட சமூகங்களை விட முஸ்லிம் சமுதாயம் பின்தங்கி உள்ளது. தலித்
சமுதாயம் மற்றும் மலைவாழ் மக்களை விட முஸ்லிம் சமுதாயம் பின் தங்கியதற்கு முக்கிய
காரணம் முஸ்லிம்களின் கல்வியைப் பற்றிய போதிய விழிப்புணர்விண்மை. கல்வியை
மறந்ததால் இந்த சமூகம் கடைசி நிலையில் உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை எவரொருவர் தனது பெயரை
எழுதவும் கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என
வகைப்படுத்தப்படுகிறார். இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள
மொத்த முஸ்லிம்களில் 55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில்
வசிக்கும் மாநிலங்களான உத்திரபிரதேசம். பீகார். அஸ்ஸாம். ஜம்மு- காஷ்மீர். மேற்கு
வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது.
சச்சார் குழு அறிக்கை
@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@
2006- ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8 ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15% - +2 வரை படித்தவர்கள் 7.8% . டிப்ளோமாவரை படித்தவர்கள் 4.4% - பட்டப்படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே - 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர். கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர். பாதுகாப்புத் துறையில் 4% பேர் முஸ்லிம்கள். தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர்கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி) கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.மருத்துவ துறையில் முஸ்லிம்கள் 4.4% தான் உள்ளனர்.சங்பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று முஸ்லிம் கர்பிணி பெண்களுக்கு தவறான மருந்தை கொடுத்து எதிர்கால முஸ்லிம் சமுதாயத்தை ஊனமுற்ற சமுதாயமாக மாற்றவேண்டும். மேலும் முஸ்லிம்களுக்கு தவறான மாத்திரைகளை கொடுத்து உடல் ரீதியாக அவர்களை பலவீனப்படுத்த வேண்டும் என்று ஒரு இரகசிய சுற்றறிக்கையை இந்தியா முழுவதும் அனுப்பியது. இது சில இடங்களில் நடந்து கொண்டும் இருக்கிறது. ஆகவே அதிகமான முஸ்லிம் மருத்துவர்களை உருவாக்குவது மிகவும் அவசியமானது.
1)
பயனுள்ள அனைத்து கல்வியையும் கற்றுக் கொள்ள
தூண்டும் இறைவனசங்கள்.
@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@
முதன் முதலில் இறங்கிய குர்ஆன் வசனம் இக்ரஃ படியுங்கள் என்றும் எழுதக் கற்றுக் கொடுத்தவன் இறைவன் என்றுதான் துவங்குகிறது.
اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَق(1) خلق الانسان من علق(2)
اقرأ وربك الاكرم (3) الذي علم با القلم (4)َۚ
முதன் முதலில் ஆதம் ( அலை) அவர்களுக்கு
கல்வியைத்தான் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்
وعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْۢبِــُٔوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (2:31)
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ(2:32)
قَالَ يٰٓـاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآٮِٕهِمْۚ فَلَمَّآ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآٮِٕهِمْۙ قَالَ اَلَمْ اَقُل لَّـكُمْ اِنِّىْٓ اَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْن(2:33)َ
வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு கல்விகளைப் பற்றி குர்ஆன் பேசுகிறது
அறிவியலைப்பற்றி பேசும் அல்குர்ஆன்
உயிரின் ஜீவநாடியான மரபணுவைக்கூட செயற்கையாக உருவாக்கும் அளவுக்கு அறிவியல் வளர்ந்து கொண்டே வருகிறது அறிவியல் வளர வளர அல்லாஹ்வின் அருள் மறையின் மதிப்பும் உயர்ந்து கொண்டே போகிறது
மனிதன் மன்னால் ஆனவன் என்பது பற்றியும்
தாயின் கருவறையில்குழந்தையின் படிப்படியான வளர்ச்சி பற்றியும் எடுத்துக்கூறும் அல்
குர்ஆன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@َ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@َ
يايُّهَا النَّاسُ اِنْ كُنْـتُمْ فِىْ رَيْبٍ مِّنَ الْبَـعْثِ فَاِنَّـا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمْ ؕ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ْ
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்)
மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்)
மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக்
கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்
வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்.
(அல்குர்ஆன் : 22:5)
(அல்குர்ஆன் : 22:5)
3208- صحيح البخاري قَالَ عَبْدُ اللَّهِ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهْوَ الصَّادِقُ الْمَصْدُوقُ قَالَ: ((إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا، فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، وَيُقَالُ لَهُ اكْتُبْ عَمَلَهُ وَرِزْقَهُ وَأَجَلَهُ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ. ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الْجَنَّةِ إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ)).
3208. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது” என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும்.
புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடிக்க தூண்டும்
அல் குர்ஆன்
@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@
وَالْاَنْعَامَ خَلَقَهَا ۚ لَـكُمْ فِيْهَا دِفْ ٴٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَاْكُلُوْن(16:5)َ
وَلَكُمْ فِيْهَا جَمَالٌ حِيْنَ تُرِيْحُوْنَ وَحِيْنَ تَسْرحون 16:6
وَتَحْمِلُ اَثْقَالَـكُمْ اِلٰى بَلَدٍ لَّمْ تَكُوْنُوْا بٰلِغِيْهِ اِلَّا بِشِقِّ الْاَنْفُسِؕ اِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌۙ (16:7)
وَّالْخَـيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيْرَ لِتَرْكَبُوْهَا وَزيْنَةً ؕ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ
--------------------------------
குர்ஆன் அருளப்பட்ட போது மக்கள் பயன்படுத்திய
வாகனங்களைப்பற்றி மேற்படி வசனத்தில் கூறப்பட்டுள்ளது தற்போது உள்ள இரயில் விமானம்
ஆகியவற்றை கூறியிருந்தால் அது அவர்களுக்கு புரியாது ஆகவே இன்னும் நீங்கள் அறியாத
புதியவைகளை அல்லாஹ் உருவாக்குவான் என்ற வாக்கியத்தில் நவீன ரக வாக னங்கள் அனைத்தும் உள்ளடங்கி
விடும் மேலும் அவைகளை கண்டுபிடிப்பதற்கான கல்வியை கற்றுக் கொள்ளும் படியும்
தூண்டுகிறது.
தாவரவியல் பற்றி பேசும் குர்ஆன் அதை
சிந்திக்கும்படி தூண்டுகிறது.
@@@@@@@@@@@@@#@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@#@@@@@@@@@@@
وَهُوَ الَّذِىْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَخْرَجْنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَىْءٍ فَاَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا ۚ وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ ؕ اُنْظُرُوْۤا اِلٰى ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَيَنْعِهٖ ؕ اِنَّ فِىْ ذٰ لِكُمْ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ(6:99)
இவ்வாறு அனைத்து கல்விகளைப் பற்றியும் குர்ஆனில் கூறப்பட்டு
அவைகளை கற்றுக் கொள்ளவும் தூண்டுகிறது
நம் சமுதாயம் கல்வியில் முன்னேற சில
ஆலோசனைகள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
1) அல்லாஹ்விடம் கல்வி வளர்ச்சிக்காக துஆ செய்ய வேண்டும்
رَّبِّ زِدْنِي عِلْمًا
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” 20:114
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي
“இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!” “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!” “என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக!” “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!” 20:25-28
رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக.
மேலும், ஸாலிஹானவர்களுடன்
(நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை
எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில்
(ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில்
என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87
2) கல்வியை தேடுவதில் ஆர்வமும் முயற்சியும் வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
يٰيَحْيٰى خُذِ
الْكِتٰبَ بِقُوَّةٍ وَاٰتَيْنٰهُ الْحُكْمَ صَبِيًّا
(அதன் பின்னர்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்
கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும்
போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
(அல்குர்ஆன் : 19:12)
(அல்குர்ஆன் : 19:12)
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ؕ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ
மேலும் எவர்கள் நம்முடைய வழியில்
முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே
இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 29:69)
(அல்குர்ஆன் : 29:69)
மூன்று சாராரின் முயற்சி இருந்தால்தான்
கல்வியில் முன்னேற முடியும்.
A.கற்கக்கூடிய மாணவர்களின் முயற்சி.
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
நான் இந்த கல்வியை கற்றே தீருவேன் அதற்காக
பெரும் முயற்சியை மேற்கொள்வேன் என் லட்சியம் இதுதான் எனறு உறுதி எடுத்துக் கொள்ள
வேண்டும் அதற்கான தைரியத்தையும் மனோபலத்தையும் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.
B.கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியரின்
முயற்சி
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
ஆசிரியர்கள் மாணவர்களை நன்கு திறமையானவர்களாக
உருவாக்க மாணவர்களை ஆர்வப்படுத்த வேண்டும் மேலும் அவர்கள் முனைப்போடு செயல்பட
வேண்டும். மாணவர்களுக்கு புரியும்படி தேவையான விளக்கங்களை எளிதாக கற்றுக் கொடுக்க
வேண்டும்.
عن ابن عباس رضي الله عنه عن النبي صلي الله عليه وسلم علموا ويسروا ولا تعسروا وبشروا ولاتنفروا واذا غضب احدكم فليسكت
( الجامع الصغير)
عن ابي هريرة رضي الله عنه عن النبي صلي الله عليه وسلم علموا ولاتعنفوا فان المعلم خير من المعنف( الجامع الصغير)
மாணவர்களுக்கு மென்மையான முறையில் கற்றுக்
கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் கண்டிப்பும் வேண்டும்.அந்த கண்டிப்பினால் மாணவன்
கல்விகற்காமல் ஓடிவிடக்கூடிய நிலை ஏற்பட்டு விடக்கூடாது.
C.பெற்றோர்களின் முயற்சி
-----------------------------------------------
-----------------------------------------------
الحديث.الرجل راع علي اهل بيته وهو مسؤل عنهم( بخاري)
பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்காணித்து எதனைப் படிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதையெல்லாம் கவனமாக கவனித்துக் கொண்டே வரவேண்டும்.அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதையும்.கவனிப்பதுடன் பிள்ளைகளுடன் சேர்ந்து உட்கார்ந்து உரையாடி அவர்களின் நண்பர்களைப் பற்றியும் பள்ளி முடிந்ததும் அவர்கள் வேறு எங்கும் செல்கிறார்களா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
அவர்கள் படிக்கும் நிலையில் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமலிருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிவதுடன் அவர்கள் தீய நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனரா? தீய இடங்களுக்கு செல்கின்றனரா புகை பிடித்தல் பழக்கம் உள்ளனவா என அவர்கள் அறியாத வண்ணம் கண்காணித்து பிள்ளைகளிடம் மென்மையான முறையில் தீய பழக்கத்தின் கெடுதிகளை உணர்த்தி நேர் வழியின் பக்கம் கொண்டு வரவேண்டும்.
3)மாணவர்களிடத்தில் பேணுதல் வரவேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்றய கல்விக்கூடங்களில் ஆண் பெண் இரு
பாலரும் ஒன்றாகவே கலந்திருக்க கூடிய நிலைதான் உள்ளது சில இடங்களில் ஐந்தாம்
வகுப்பிற்கு மேல் தனியாக பிரித்தாலும் காலேஜ் என்று வரும்போது ஒன்றாகவே
இருபாலரையும் இனைத்து விடுகிறார்கள். அங்கே இருசாராரும் ஆண் பெண் பாகுபாடின்றி
பழகுவதும் பேசுவதும் காதல் வசப்படுவதும் ஏற்படுகிறது. இதனால் கல்வியில்
முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.எனவே தான் மார்க்கம் பேணுதலையும் இறையச்சத்தையும் உண்டாக்கிக் கொள்ள வேண்டுமென்று அறிவுரை கூறுகின்றது.
முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.எனவே தான் மார்க்கம் பேணுதலையும் இறையச்சத்தையும் உண்டாக்கிக் கொள்ள வேண்டுமென்று அறிவுரை கூறுகின்றது.
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ (24:30)
وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا (24:31)
روي بعضهم حديثا فى هذا الباب عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: من لم يتورع فى تعلمه ابتلاه الله تعالى بأحد ثلاثة أشياء: إما أن يميته فى شبابه، أو يوقعه فى الرساتيق، أو يبتليه بخدمة السلطان( تعليم المتعلم)
பெண்களைவிட ஆண்களுக்கு அறிவை அல்லாஹ் அதிகமாகவே
கொடுத்துள்ளான். அவ்வாறிருந்தும் பெண்கள் அளவுக்கு ஆண்கள் அக்கறை
செலுத்துவதில்லை.மதிப்பெண்களிலும் அவர்களைவிட குறைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.
ஆண்களின் மூளை சராசரியாக 1350 முதல்1450 வரை இருக்கும்.பெண்களின் மூளை சராசரியாக 1250 முதல் 1350 வரை இருக்கும் இயல்பாக பெண்ணை
விட ஆணுக்கு அறிவுத்திறன் அதிகம். ஆனால் ஆண்கள் பொழுது போக்கான அம்சங்களிலும்
கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலும் அதிகம் மூழ்குவதால் அவர்கள் அதிக மதிப்பெண்கள்
பெறுவதில்லை.
4)ஞாபக சக்தியை உண்டாக்க வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@
கல்வியில் முன்னேற்றம் அடைய ஞாபகசக்தி அதிகம்
ஏற்பட சில வழிமுறைகளை பெரியார்கள் நமக்கு கற்றுத் தறுகின்றார்கள் அவைகளில்
சிலவற்றை காண்போம்.
A) உணவை கட்டுப்பாடாக சாப்பிடுவது குறிப்பாக காலை உணவை குறைவாக சாப்பிட வேண்டும்
A) உணவை கட்டுப்பாடாக சாப்பிடுவது குறிப்பாக காலை உணவை குறைவாக சாப்பிட வேண்டும்
عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ. بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ» سنن الترمذي
வயிற்றை மூன்று பாகமாக பிரி்த்து ஒரு பகுதி
உணவு.ஒரு பகுதி தண்ணீர்.ஒரு பகுதி மூச்சுவிடுவதற்காக.
B) தஹஜ்ஜத் தொழுகையை கடைபிடிப்பது.அந்த நேரத்தில் எழுந்து துஆ
செய்து விட்டு படிப்பதும் ஓதுவதும் ஞாபக சக்தியை உண்டாக்கும்.
C) அதிகமாக குர்ஆன் ஓதுவது.
ஷத்தாத் இப்னு ஹகீம் ( ரஹ்) அவர்கள் தங்கள் சகோதரர்கள் சிலரை கணவில் கண்டு எந்த செயலின் காரணமாக அதிகம் பலன் அடைந்தீர்கள் என கேட்டபொழுது. அதிகமாக குர்ஆன் ஓதியதனால் என்று பதி்ல் கூறினார்கள் ( تعليم المتعلم)
ஷத்தாத் இப்னு ஹகீம் ( ரஹ்) அவர்கள் தங்கள் சகோதரர்கள் சிலரை கணவில் கண்டு எந்த செயலின் காரணமாக அதிகம் பலன் அடைந்தீர்கள் என கேட்டபொழுது. அதிகமாக குர்ஆன் ஓதியதனால் என்று பதி்ல் கூறினார்கள் ( تعليم المتعلم)
பாடம் படிக்குமுன் இந்த தஸ்பீஹை ஓதிக்
கொள்வது நல்லது
بسم الله وسبحان الله والحمد لله ولااله الا الله والله اكبر ولاحول ولاقوة الا با الله العلي العظيم
இன்னும் ஒவ்வொரு பர்ளு தொழுகைக்குப் பின்பும் கீழ் வரும்
தஸ்பீஹை ஓதுவதும் நபி ( ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதுவதும் ஞாபக சக்தியை
உண்டாக்கும்.
امنت بالله الواحد الاحد الحق وحده لاشريك له
இமாம் ஷாஃபிஈ ( ரஹ்) கூறுகின்றார்கள். நான்
வகீஃ ( ரஹ்) அவர்களிடம் எனக்கு ஞாபக சக்தி குறைந்து வருகிறது என்ன செய்ய வேண்டும்
என்றேன். அதற்கு அவர்கள் பாவங்களை விட்டும் நீங்கியிருக்க வேண்டும். ஞாபக சக்தி
என்பது அல்லாஹ்வுடைய அருளாகும். பாவம் புரிபவருக்கு அல்லாஹ்வுடைய அருள் கிட்டாது
என்றார்கள்.
மேலும் மிஸ்வாக் செய்வது. தேன் சாப்பிடுவது.
சக்கரையுடன் பால் சாப்பிடுவது.ஒவ்வொரு நாளும் சிகப்பு நிர உலர்ந்த திராட்சை 21 சாப்பிடுவது. இவைகளெல்லாம் ஞாபக
சக்தியை உண்டாக்கும் நோய்களுக்கு நிவாரணியாகவும் ஆகும்.(تعليم المتعلم)
5) சமுதாய அக்கறை கொண்ட தலைவர்கள் வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நம் சமுதாயம் கல்வியின் பின் தங்கி இருப்பதற்கு இன்னொரு காரணம். தலைமை பதவியில் இருப்பவர்கள் சமுதாய அக்கறை இல்லாமல் இருப்பது. உலகம் முழுவதும் வாழும் சிறுபான்மை இனத்தவரின் நிலையை ஆய்வு செய்த திருமதி ஸ்மித் என்ற சமூகவியல் விஞ்ஞானியை கொச்சியில் பத்திரிக்கை நிருபர் பேட்டி கண்ட போது இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரைப்பற்றி கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களைப் பற்றி கூறும்போது கல்வி பொருளாதார ரீதியாக அசைக்க முடியாத ஒரு அடித்தளத்தை அமைத்து சக்தி வாய்ந்த குழுக்களாக வளர்ந்து வரும் சமூகம் என்றும். முஸ்லிம்களைப் பற்றி கூறும்போது பாரம்பரியமாக நிலை நின்று வந்த செல்வாக்கு கலாச்சார சுவடுகள் என அனைத்தையும் இழந்து அவைகளின் நஷ்டக் கணக்குகளை மட்டும் கைவசம் வைத்திருக்கும் பலவீனமான மக்கள். சமுதாய அக்கறை இல்லாத தலைமைதான் இதற்கு காரணம் என்று கூறினார்.
الحديث الامير
الذي علي الناس راع وهو مسؤل عنهم( بخاري)
தலைவர் .மக்களுக்கு பொருப்பாளர் அவர்கள் சம்மந்தமாக கேள்வி கேட்கப்படுவார் என்ற ஹதீஸின் அடிப்படையில் தலைவர்கள் செயல்பட வேண்டும்.
அந்தந்த மஹல்லாவில் இருக்கும் தலைவர் மற்றும் நிர்வாகம் அங்குள்ள மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு கல்வி வழிகாட்டல் நடத்த வேண்டும். அவர்கள் எந்த துறையில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். என்ன படிப்புக்கு நல்ல வேலை வாய்ப்புள்ளது. எந்த காலேஜில் சேரலாம் என்ற ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.தேவைப்பட்டால் இவர்களே காலேஜ்களில் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். மேற்படிப்பை தொடர முடியாத ஏழை மாணவ மாணவிகளுக்கு பொருளாதார உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
6) இஸ்லாமிய
இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@
நம் சமுதாயத்தில் படித்த பட்டதாரிகளை உருவாக்கினாலும் அரசு வேலை வாய்ப்புகளில் நாம் அதிகம் இடம்பெற முடிவதில்லை நமக்கு குறைந்த அளவே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கு காரணம் நம் சமுதாயம் பல இயக்கங்களாக பிரிந்து கிடப்பதுதான் என்று அனைவர்களும் ஏற்றுக்கொண்ட உண்மை. இதை சரி செய்வதற்கு இஸ்லாமிய அனைத்து இயக்கங்களையும் ஒன்றுகூட்டி ஒவ்வொரு கட்சியிலிருந்தும். இயக்கங்களிலிருந்தும் ஒரு நபரை தேர்வு செய்து ஒரே அணியை உருவாக்க வேண்டும். அதற்கு முடியாவிட்டால் ஒரே கூட்டணியையாவது அமைக்க வேண்டும் .இதற்கும் முடியாவிட்டால் குறைந்த பட்சம் இஸ்லாமிய அனைத்துக் கட்சிகளும் ஒன்றினைந்து ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும். இவ்வாறு நாம் ஒன்றுபட்டால் நமக்கான இட ஒதிக்கீட்டை பத்து சதவீதம்வரை நாம் பெற முடியும் வரக்கூடிய தேர்தலிலும் அதிகமான தொகுதிகளில் முஸ்லிம்கள் போட்டியிட முடியும். மேலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் நாம் அதிகம் இடம்பெற முடியும்.
وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ وَاصْبِرُوْا ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَۚ
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் -
நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு)
நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன்
இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 8:46)
(அல்குர்ஆன் : 8:46)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.