புதன், 9 மார்ச், 2016

இஸ்லாமும் நுகர்வோர் உரிமைகளும்

بسم الله الرحمن الرحيم

وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ [الرحمن: 9]
 2139 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ أَخِيهِ» صحيح البخاري
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒவ்வோரு வருடமும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினமாகும்.

நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது; அதன் மீது நடவடிக்கை எடுத்தல்; சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள்

1. நுகர்வோர் என்பவர் யார்?

தன்னுடைய பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட விலை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்யும் அல்லது சேவையை பெறும் எந்த ஒரு தனி நபரும் நுகர்வோர் என அழைக்கப்படுவார். ஆனால் அதனை தயாரிப்பவர் அல்லது மறுவிற்பனை செய்யும் நோக்கில் வாங்குபவர் நுகர்வோராக கருதப்படமாட்டார்.
பொருட்களைத் தயாரிப்பவர்கள் உற்பத்தியாளர்கள். அவற்றை சந்தை படுத்தும் நோக்கில் கொள்முதல் செய்து விற்பவர்கள் வியாபாரிகள். அதை வாங்கி  பயன்படுத்துபவர்கள், நுகர்வோர்கள் ஆவர். நாம் வாழ்நாள் முழுவதும் நுகர்வோர்களாக இருக்கிறோம். உணவு, மருந்து, துணி, வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைபேசி வசதி, மருத்துவ சேவை, மின்சார சேவை போக்குவரத்து வசதி போன்ற பல சேவைகளைப் பெறுகிறோம். 
நாம் உபயோகிப்பதற்காக விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொரு சாமான்/சேவை உரிய பலனைத் தருகின்றதா; நாம் கொடுக்கும் விலைக்கு உரியதுதானா; நாம் ஏமாற்றப்பட்டுள்ளோமா என்பனவற்றை அறியும் உரிமை நமக்கு இருக்கிறது. தரம் குறைந்த சாமான்களை நமக்குத் தந்து விட்டு, அதன் தயாரிப்பாளரோ கடைக்காரரோ நம்மை ஏமாற்றுவது குற்றம்.

அதுபோலவே பேங்குகளிலோ ஆஸ்பத்திரிகளிலோ அல்லது பஸ், ரெயில், டாக்ஸி, ஆட்டோ, அல்லது விமானம் போன்றவற்றிலோ நாம் பெறும் சேவைகளில் குறைபாடுகளோ குளறுபடிகளோ இருந்தால் அவையும் நம் உரிமையைப் பாதிக்கும் செயல்களாகும்.

சில சாமான்கள் நம் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்குமானால் அந்தச் சாமான்களின் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது நுகர்வோர் உரிமை மீறல் குற்றம் சாட்டலாம்.


1960 ஆம் ஆண்டில் லண்டனை மையமாகக் கொண்டு சர்வதேச நுகர்வோர் Consumers International (CI) எனும் அமைப்பு  ஆரம்பிக்கப் பட்டது. இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்ற நாடுகள் இணைந்து நுகர்வோர் உரிமைக்கு வலுவான அடித்தளமிட்டன.  1962 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, அமெரிக்க காங்கிரஸில் (நம் நாடாளுமன்றம் போன்றது) நுகர்வோர் உரிமை பற்றிப் பேசினார். அவர்தாம் நுகர்வோர் உரிமைகளுக்கு வழி வகுத்த முன்னோடியவார்.

நுகர்வோர் உரிமை என்ன?
1. கொள்முதல் செய்யப்படும் பொருள்/சேவை பற்றிய முழு விவரங்களை பெறுவதற்கான உரிமை.
2. தமக்கு தேவையான பொருட்களை/சேவையை தெரிவு செய்வதற்கான உரிமை.
3. குறைபாடான பொருள் அல்லது சேவையினால் பாதிக்காமல் காத்துக்கொள்ளும் உரிமை
4.குறைபாடான பொருட்கள்/சேவையை பெற்றிருந்தால் அது பற்றி கேட்பதற்கான உரிமை.
5.இந்த குறையை தீர்ப்பதற்காக நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் உரிமை.
இவையனைத்தும் இஸ்லாத்தில் முன்பிருந்தே வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மூலம் அறியலாம்.
2110 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ، قَالَ: سَمِعْتُ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا» صحيح البخاري
"விற்பவரும் வாங்குபவரும் பிரியும்வரை (முறித்துக் கொள்ளும்) உரிமை படைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை)த் தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் அவர்களுக்கு பரக்கத் செய்யப்படும். அவ்விருவரும் பொய் கூறி(எதையேனும்) மறைத்தால் அவர்களுக்கு வியாபாரத்தின் பரக்கத் நீக்கப்படும்'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரி 2110. 
ஷுஐப் (அலை) அவர்களின் சமுதாயத்தினர் அளவை, நிறுவையில் மோசடி செய்ததையும் அவர்களின் அழிவுக்கு அதுவே காரணமாக அமைந்தது என்றும் அல்குர்ஆன் கூறுகிறது..

وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ الأعراف: 85
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ وَلَا تَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِنِّي أَرَاكُمْ بِخَيْرٍ وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٍ (84) وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ [هود: 85]
أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ الْمُخْسِرِينَ (181) وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ (182) وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ  [الشعراء: 183]
நுகர்வோர் நலனை பாதிக்கும் காரணங்களை ஆராய்நது அதை தடை செய்துள்ளது இஸ்லாம்
ஏமாற்று
وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا [الإسراء: 35]
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ [الرحمن: 9]
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَجُلًا ذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ يُخْدَعُ فِي البُيُوعِ، فَقَالَ: «إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ» صحيح البخاري

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி(ஸல்) அவர்கள். 'நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் 'ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!" என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)" என்றார்கள்.  ஸஹீஹுல் புஹாரி 2117. 
கலப்படம்
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي» صحيح مسلم

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் "உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அவர்கள், "ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள்.  ஸஹீஹ் முஸ்லிம் 164. 
கலப்படம் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகளில் சில.....
பெங்களூரு: கர்நாடகாவில், 10 ஆயிரத்து, 750 உணவு பொருட்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 1,076 உணவு பொருட்கள் தரம் குறைந்தவை அல்லது கலப்படமானவை என்பது தெரிய வந்தது,” என, உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரி சிவகுமார் தெரிவித்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1418328

உணவு பொருட்களில் என்ன கலப்பட பொருள் சேர்க்கப்படுகிறது என சில புள்ளிவிவரங்களிலிருந்து அறியலாம். பாலில் தண்ணீர் ஸ்டார்ச், அரிசியில் கல், பருப்பில் கேசரி பருப்பு, மஞ்சள் பொடியில் லீடு குரோமேட், தானியா பொடியில் சாணி பொடி மற்றும் ஸ்டார்ச், நல்ல மிளகுவில் காய்ந்த பப்பாளி விதைகள், வத்தல் பொடியில் செங்கல் மற்றும் மரப்பொடி, தேயிலையில் மரப்பொடி மற்றும் உளுந்து தோல், கடுகில் ஆர்ஜிமோன் விதைகள், பச்சை பட்டாணியில் பச்சை சாயம், நெய்யில் வனஸ்பதி போன்ற கலக்கப்படுகின்றன. http://www.dinamalar.com/news_detail.asp?id=1372537
Published: September 30, 2015 
கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் பிரபல நிறுவனங்கள் விற்றுவரும் பல பாக்கெட்களில் பாமாயில், பருத்திவிதை எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது நுகர்வோர் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தூய்மையான கடலை எண்ணெய், நல்லெண்ணைய்யை சமையலில் சரியான அளவில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லதுஎன்று சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒருசில எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் விலை குறைவான பாமாயில், பருத்திவிதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்து கடலை எண்ணெய் என்ற பெயரில் விற்பது இந்திய நுகர்வோர் சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திருச்சி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் 14 நிறுவனங்களின் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்களை எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் சோதனை செய்தனர். தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கிவரும் சென்னை கிண்டி கிங்க்ஸ் பரிசோதனைக் கூடம் உட்பட 3 பரிசோதனைக் கூடங்களில் இவை சோதனை செய்யப்பட்டன. அவற்றின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
கடலை எண்ணெய்என்று விற்கப்பட்ட 4 பிராண்டுகளின் பாக்கெட்களில் முழுக்க பாமாயில் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் பருத்திவிதை எண்ணெய் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் 90 சதவீதம் பாமாயில், 10 சதவீதம் கடலை எண்ணெய் இருந் தது. ஒரு சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50 சதவீதம் பாமாயில், 50 சதவீதம் பருத்திவிதை எண்ணெய் இருந்தது..
இவ்வாறு எம்.ஆர்.கிருஷ்ணன் கூறினார். http://tamil.thehindu.com/tamilnadu/
போட்டி
2140 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلاَ يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، وَلاَ تَسْأَلُ المَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَكْفَأَ مَا فِي إِنَائِهَا» صحيح البخاري
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
"
கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை எற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்!" என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!" ஸஹீஹுல் புஹாரி 2140
2139 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ أَخِيهِ» صحيح البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"
ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது!" 
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரி 2139. 
ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது; ஒருவர் விலைபேசிக் கொண்டிருக்கும் போது மற்றொருவர் அதிக விலை பேசக் கூடாது; முன்பு விலை பேசியவர் அனுமதித்தால் அல்லது வியாபாரத்தை முறித்து விட்டால் குறுக்கிடலாம்.
பதுக்கல்
عَنْ مَعْمَرِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَحْتَكِرُ إِلَّا خَاطِئٌ» صحيح مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாவியே பதுக்கல் செய்வான். ஸஹீஹ் முஸ்லிம் 3282. 
قَالَ النَّوَوِيُّ: الِاحْتِكَارُ الْمُحَرَّمُ هُوَ فِي الْأَقْوَاتِ خَاصَّةً بِأَنْ يَشْتَرِيَ الطَّعَامَ فِي وَقْتِ الْغَلَاءِ وَلَا يَبِيعُهُ فِي الْحَالِ بَلْ يَدَّخِرُهُ لِيَغْلُوَ، فَأَمَّا إِذَا جَاءَ مِنْ قَرْيَتِهِ أَوِ اشْتَرَاهُ فِي وَقْتِ الرُّخْصِ وَادَّخَرَهُ وَبَاعَهُ فِي وَقْتِ الْغَلَاءِ فَلَيْسَ بِاحْتِكَارٍ وَلَا تَحْرِيمَ فِيهِ وَأَمَّا غَيْرُ الْأَقْوَاتِ فَلَا يَحْرُمُ الِاحْتِكَارُ فِيهِ بِكُلِّ حَالٍ مرقاة المفاتيح شرح مشكاة المصابيح
பதுக்கல் ஹராம் என்பது உணவு பொருட்களில்தான் மற்றவைகளில் அல்ல. மேலும் விலை எகிறி வரும் சூழலில் கொள்முதல் செய்து விற்காமல், விலை ஏற்றத்தை எதிர்பார்த்து பதுக்குவதுதான் ஹராம். மாறாக விலை குறைந்திருக்கும் காலங்களில் கொள்முதல் செய்து விலை எகிறி வரும் காலத்தில் விற்று விடுபவர்களுக்கு இது பொருந்தாது என்று இமாம் நவவி ]ரஹ்[ கூறியுள்ளார்கள். [மிர்காத்]
அனாவசியமான இடைத்தரகர்கள்
வாங்கும் நோக்கமின்றி) விலையை உயர்த்திவிடுவது அருவருக்கத் தக்கதாகும்.
6963 - عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنِ النَّجْشِ» صحيح البخاري
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
(
வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திவிடுவதற்காக ஏலம் மற்றும் பிற பேரங்களின் போது) விலையை அதிகமாகக் கேட்பதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஸஹீஹுல் புஹாரி 6963. 
2158 - عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَلَقَّوُا الرُّكْبَانَ، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ» ، قَالَ: فَقُلْتُ لِابْنِ عَبَّاسٍ: مَا قَوْلُهُ «لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ» قَالَ: لاَ يَكُونُ لَهُ سِمْسَارًا صحيح البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"(
சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!" 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
"
கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!" என்பதன் பொருள் என்ன?' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள்  'இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)' என பதிலளித்தார்கள்" என்று தாவூஸ்(ரஹ்) கூறினார். 
கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலி வாங்கிக் கொண்டு விற்றுக் கொடுக்கக் கூடாது. ஸஹீஹுல் புஹாரி 2158. 
2160 - عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «لاَ يَبْتَاعُ المَرْءُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ» صحيح البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"
ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது! (வாங்கும் நோக்கமின்றி) விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே விலை கேட்காதீர்கள்! (விலையை உயர்த்துவதற்காக ஆளமர்த்தி அதிக விலை கேட்கச் செய்வதும் கூடாது!) கிராம வாசிகக்காக நகரவாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!" 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரி 2160. 
இன்றைய நிலை
நுகர்வோர் உரிமை பற்றி அதிகம் பேசவேண்டியது காலத்தின் கட்டாயம். இன்றைய சூழலில் எவண்டா கிடைப்பான்; ஏமாற்றலாம் என்றே பல சேவைகளும் நடக்கின்றன.  சாதாரணக் காய்ச்சலுக்கும் ஸ்கேன் செய்யச்சொல்லும் ஆஸ்பத்திரிகளும், சுண்டு விரல் வீக்கத்திற்குக் கூடபொட்டலம் பொட்டலமாக மருந்து எழுதித் தள்ளும் டாக்டர்களும் மலிந்து விட்டனர். அதுபோலவே டாக்ஸி மற்றும் ஆட்டோ மீட்டர்களில் தில்லுமுல்லுகள் செய்கின்றனர். அரசு நடத்தும் ட்ரான்ஸ்போர்ட் ஸர்வீஸிலும்கூட  சேவைக்குறைபாடு அதிகம். ஏ.சி டீலக்ஸ் பஸ் எனச்சொல்லி டிக்கட் தந்தபின் ஏ.சி இயங்காமல் இருப்பது போன்ற சேவைக்குறைபாடுகள், உரிய சமயத்துக்குச் சென்று சேராமை போன்ற அலட்சிய நடத்தைகள் போன்றவை நுகர்வோர் உரிமைக்கு எதிரானவையாகும்.

நுகர்வோராகிய நமக்குப் பல உரிமைகள் இருப்பதைப் போன்றே கடமைகளும் இருக்கின்றன. நாம் வாங்கும் சாமான்களின் தரம் அவற்றின் விலை மற்றும் உறுதிப்பாடு போன்றவற்றைப் பரிசோதிக்க வேண்டும். ஐ எஸ் ஐ போன்ற முத்திரைகள் உள்ளனவா, சாமான்களின் விலை என்ன, உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் அச்சிடப்பட்டுள்ளனவா, அந்தச் சாமான்களின் தயாரிப்பு விபரங்கள், அதில் அடங்கியுள்ள பிற துணைப்பொருட்கள் போன்றவற்றை அறிவதோடு நாம் கொடுக்கும் விலைக்குத் தரும் ரசீதில் வரி உட்பட சரியான விபரங்கள் உள்ளனவா எனப்பார்க்கும் கடமையும் நமக்கு இருக்கிறது.
நுகர்வோர் நலனும் உரிமையும்  பாதுகாக்கப்பட வேண்டுமாயின்  உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், நுகர்வோர் மூன்று தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
Ø உற்பத்தியாளர்கள் தரமானவைகளையே உற்பத்தி செய்யவேண்டும்.
Ø வியாபாரிகள் நாணயம் தவறாமல் நடந்து கொள்ள வேண்டும்.
Ø நுகர்வோர் தங்களுக்கான உரிமை பற்றி அறிந்து வைத்திருப்பதுடன் தங்கள் மீது உரிமை மீறல் நடந்து விடாதபடி வழிப்புடன் இருக்க வேண்டும். உரிமை மீறல் நடந்து விட்டால் அந்த உரிமையை மீட்டெடுக்கும் வழிமுறை பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.