புதன், 27 மார்ச், 2019

எனதருமைச் சமுதாயமே!



بسم الله الرحمن الرحيم

*எனதருமைச் சமுதாயமே!*
************************************

قال الله تعالي وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌َ‏ ( القران 3:103)

عن عبد الله ابن عمر رضي الله عنهما قال ,قال رسول الله صلى الله عليه وسلم" يد الله مع الجماعة" رواه البخاري

உலகிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஈமானிய்யத்தான சகோதரர்களாவார்கள். அவர்கள் சகோதரத்துவத்துடனேயே வாழ வேண்டும் என்று இஸ்லாம் பணிக்கின்றது அவர்களுக்குள் எந்தவித ஜாதி வேறுபாடுகளும் கிடையாது இன்றைய அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் போன்ற இலாபத்திற்காக முஸ்லிம்களை லெப்பை என்றும் ராவுத்தர் என்றும் மரைக்காயர் என்றும் பல பிரிவுகளாக்கி வைத்திருக்கின்றனர் . ஆனால் இஸ்லாமியர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்ற பெயரைத்தவிற அவர்களுக்கு வேறில்லை என்பதுதான் உண்மை. மேலும் ஒவ்வொரு முஸ்லிமும் சமுதாய அக்கரை உள்ளவனாக வாழ வேண்டும் என்றும் மார்க்கம் வலியுருத்துகின்றது. ஆனால் தற்காலத்தில் மார்கத்தையே காரணமாக்கி மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம் நாம்.

சமுதாயம் உனக்கு என்ன செய்தது ? என்று கேளாதே? சமுதாயத்திற்கு நீ என்ன செய்தாய் என்று கேள்! என்று ஒரு அறிஞர் கூறினார்.
சமுதாயம் வேறு  நீ வேறல்ல! சமுதாயமும் நீயும் நன்கு இறுகிய கயிறு போன்றாகும் . நீ செய்யும் ஒவ்வொன்றிலும் சமுதாய நோக்கை கருத்தில் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

நீ உனக்காக வாழாதே சமுதாயத்திற்காக வாழ் என்ற தத்துவத்தை நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் இப்படி கூறுவார்கள்.

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة، ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة، ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة، والله في عون العبد ما كان العبد في عون أخيه

சக முஸ்லிமின் உலகத் துன்பங்களில் ஒன்றை அகற்றுபவருக்கு மறுமையின் துன்பங்களில் ஒன்றை இறைவன் அகற்றுவான் . வறியவருக்கு வசதி செய்து கொடுப்பவருக்கு  உலகிலும் மறுமையிலும் இறைவன் வசதி செய்து கொடுப்பான். பிற முஸ்லிமின் குறையை மறைப்பவருக்கு அவரின் குறையை உலகிலும் மறுமையிலும் இறைவன் மறைப்பான் . ஒரு மனிதன் தனது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் இறைவன் அவனுக்கு உதவுவான்.
(நூல் முஸ்லிம்)

*தனிமரம் தோப்பாகாது*
********************************
ஒருவர் எவ்வளவு தான் உயர்ந்தவராக; பண்பாடு மிக்கவராக பக்தி சீலராக இருந்தாலும் சமுதாய சிந்தனையின்றி தனியாக வாழ்வது அவருக்கு நன்மை பயக்காது.

நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் ஒரு தற்காப்பு யுத்தத்திலிருந்து திரும்பி வரும்போது உடன் வந்தவர்களில் ஹஜ்ரத் அபூதர்ருல் கிபாரி ( ரலி) என்ற தோழரைக் காணாமல் எங்கே அபூதர்என்று விசாரித்தார்கள். அவர் தனியே வருகிறார் என்று நண்பர்கள் பதிலளித்தார்கள். அதைச் செவியுற்ற நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள். அவர் எப்போதும் தனிமையையே விரும்புகிறார். மரண நேரத்திலும் அவர் தனிமையாகவே விடப்படுவார் என்று கூறினார்கள்.

ஹஜ்ரத் அபூதர்ருல் கிபாரி ( ரலி) அவர்கள் மக்களை விட்டும் ஒதுங்கியே வாழ்ந்ததின் விளைவு மரண வேளையின் போதும்  கண்டார்கள்.  தனிமையான காட்டில் அவர்கள் தங்கியுருக்கும்போது அவர்களுக்கு இறப்பின் அறிகுறி தோன்றுகிறது . எனவே வீதியின் ஓரத்தில் மண்ணின் மீது

هذا صاحب رسول الله  صلي الله عليه وسلم ابوذر الغفاري رضي الله

இது நாயகத் தோழர் அபூதர்ருல் கிபாரி (உடல்)ஆகும் என்று தானே எழுதி வைத்(து விட்டு வபாத்)தானார்கள்.

ஹஜ் கடமையை நிறைவேற்றும் முகமாக அவ்வழியாக வந்த இப்னு மஸ்ஊது( ரலி) அவர்கள் அந்த எழுத்துக்களை வைத்து அந்த புனித உடலை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.  அவர்களுக்கு பெருமானாரின் முன்னறிவிப்பு நினைவுக்கு வரவே கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

*சமுதாய ஒற்றுமை இல்லாததினால் ஏற்பட்ட விளைவு*
**************************************************
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌َ‏ 
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;
(அல்குர்ஆன் : 3:103)

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌‏

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 8:46)

கி.பி.712 லிருந்து கி.பி. 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் நீதிமிக்க ஆட்சி நிலைத்திருந்தது.
இன்றும் ஸ்பெயின் நாட்டு மக்கள் பேசிடும் ஸ்பானிஷ் மொழியில்கூட  அரபு உச்சரிப்புகளின் சாயல் மேலோங்குவதை காணமுடியும்.

இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப்பாதுகாப்பு திட்டம். பொருளாதாரப் பாதுகாப்பு திட்டம் போன்றவை இன்றைய ஸ்பெயின் வாழ் மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல ஐரோப்பாவின் சமூக பொருளாதார திட்டத்திலும் ஊடுருவி நிலைத்து நிற்கின்றது. அதன்பின் வேறோடு இஸ்லாமியர்கள் அங்கே பிடுங்கி எரியப்படுகிறார்கள் . இது எப்படி சாத்தியமானது.?

ஒரு நாட்டையே ஆண்டு வந்தவர்கள் அதே மண்ணில் அவர்களின் சுவடுகளைக் கூட இழக்க முடியுமா? என்ற கேள்விக்கு வரலாறு பதில் கொடுத்திருக்கின்றது. எதிரிகள் இதனை கைப்பற்ற செயல் படுத்தியது ஐந்தாண்டு திட்டமோ பத்தாண்டு திட்டமோ அல்ல சுமார் 120 ஆண்டிகள் தீட்டப்பட்டதாகும் இப்படியொரு நீண்டகால திட்டத்தை தீட்டி  அதன் வழியில் அந்தச் சதிகாரகும்பல் செயல்பட்டது . தன் திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றியது.

இஸ்லாம் எப்பொழுதும் யாரையும் நிர்பந்தபடுத்தி இஸ்லாத்தில் நுழைய வைத்தது கிடையாது தங்களின் மார்க்கத்தின் கொள்கைகளையும் நற்போதனைகளையும் எடுத்துக்கூறும் அதனை புறிந்து மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை அன்புடன் வரவேற்கும் இதுதான் இஸ்லாத்தின் பண்பாடு.
அந்த வகையில் ஸ்பெயினை இஸ்லாமியர்கள் ஏற்றத்துடன் ஆட்சி செய்து கொண்டிருந்த போது ஐரோப்பிய கிருத்தவ பாதிரிகள் ஸ்பெயினில் குடியேறுவதற்கும் அவர்களின் மதத்தின்படி கிருத்தவ ஆலயங்களில் வணக்க வழிபாடுகள் நடத்துவதற்கும் அனுமதி வழங்கியது. பாதிரிகளின் வருகையையொட்டி கிருஸ்தவர்கள் பலரும் ஸ்பெயினில் குடியேறினார்கள். முஸ்லிம்களிடம் நட்போடு பழகுவதைப்போல் பாசாங்கு செய்து முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமைகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தினார்கள்.
சிறு சிறு கருத்து வேற்றுமைகளைக் கூறி சண்டையை மூட்டினார்கள். உதாரணமாக : கஹ்புவாசிகளின் நாய் என்ன நிறம் என்று ஒரு சாராரிடம் கேட்பார்கள் அதற்கு அது வெள்ளை என்பார்கள் ஆம் நீங்கள் சொல்வதுதான் சரி இதோ அந்த பள்ளியின் இமாம் அதை கருப்பு என்கிறார் என்பார்கள். அவர்களிடம் சென்று இதே கேள்வியை கேட்பார்கள் அவர்கள் கருப்பு என்று கூறியவுடன் நீங்கள் சொல்வதுதான் சரி ஆனால் அந்த பள்ளியின் இமாம் அதை வெள்ளை என்கிறார் என்பார்கள் இதுபோன்று பல கருத்து வேற்றுமைகளைக் கூறி முஸ்லிம்களுக்கு மத்தியில் சண்டையை ஏற்படுத்தி கடைசியில் ஆட்சியையே கைப்பற்றினார்கள்.

ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் கிடைத்தவுடன் முஸ்லிம்களுக்கு பலவகையில் நெருக்கடிகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்ல தடைவிதித்தார்கள் மதரஸாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது எனக்கூறி மதரஸாவை மூடினார்கள். பள்ளிவாசலில் தொழுக தடைவிதித்தார்கள்.  முஸ்லிம்கள் தங்களை இஸ்லாமியன் என காட்டிக் கொள்ள முடியாத மோசமான சூழலை ஏற்படுத்தினார்கள் இவ்வாறாக அங்கு இஸ்லாமியர்கள் அழிக்கப்பட்டார்கள்.

ஸ்பெயினிலே முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது முஸ்லிம்கள் இந்த உலகில் அதிகாரமற்றவர்களாக இருக்கவில்லை மாறாக உலகில் பெரும்பகுதியை ஆட்சி செய்தவர்களாகவே வாழ்ந்தார்கள்.

துருக்கி மற்றும் பால்கன் தீபகற்பம் முழுவதும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. மிகுந்த படைபலமும் பணபலமும் கொண்டதொரு ஆட்சியை எகிப்தில் முஸ்லிம்கள் செய்து கொண்டிருந்தார்கள். பாரசீக பேரரசோ தன் அரசியல் வாழ்வின் உச்ச கட்டத்தில் நின்று ஒளி வீசிக் கொண்டிருந்தது. இந்தியத் துணைக்கண்டமோ முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இப்படி உலகின் பெரும் நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போதுதான் ஸ்பெயினில் முஸ்லிம்கள் கூண்டோடு அழிக்கப்பட்டார்கள்.

சுருக்கமாக சொன்னால் இன்றைய பாலஸ்தீன இனப்படுகொலைக்கு ஐக்கிய அரபு நாடுகள் எந்த மனநிலையில் உள்ளதோ அது போலவே இருந்தார்கள்.

இரண்டாம் உலகப்போரில் பல இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதை பெரும் இன அழிப்பாக கூக்குரலிடும் உலகம்  அதற்கு முன் நடந்த திட்டமிட்ட இஸ்லாமிய இன அழிப்பை இலாவகமாக மறைத்து விட்டது. இதில் இன்னும் வேதனைக்குரியது என்னவென்றால் இன்றைய இளம் தலைமுறைக்கு ஸ்பெயினில் இஸ்லாம் இருந்ததும் தெரியாது. ஆண்டதும் தெரியாது அழிந்ததும் தெரியாது.  ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் எப்படி நசுக்கப்பட்டு. விரட்டப்பட்டு கொல்லப்பட்டு தடம் தெரியாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை உலக முஸ்லிம்கள் ஆய்வு செய்தார்களோ இல்லையோ இந்தியாவின் இந்துத்துவ சக்திகள் நன்றாகவே ஆய்வு செய்தார்கள்.

அதனையே இங்கு செயல்படுத்தி முஸ்லிம்களற்ற இந்து தேசமாக மாற்றிவிடலாம்  என தன் சதிகார செயல் திட்டத்தை 1920 களிலேயே ஆரம்பித்து இன்று பெருமளவு அதில் வெற்றியும் கண்டுவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
ஆனால் இங்குள்ள முஸ்லிம்கள் அதுபற்றி சிந்தித்து தன் சமுதாயத்தை காத்துக்கொள்ள வழியென்ன என்பதையெல்லாம் சிந்திக்காமல் தான்தோன்றித்தனமாக கூறுகூறாக சிதறிக்கிடக்கிறார்கள் . மேலும் சரியான பாதையில் செல்வதாகவும் நம்பவைக்கப்படுகிறார்கள்.

*வட மாநிலங்களின் நிலை*
************************************
ஏதோ தமிழ்நாட்டில் பாசிச வாதிகளின் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும் வட மாநிலங்களின் நிலை மிக மோசமாக உள்ளது
.
பொருளாதாரத்தை பெருக்கக்கூடிய பாசிசவாதிகள் பலரின் மூலதனமே
மாட்டுக் கறி / அதன் தோல் ஏற்றுமதி தான்.
அவ்வாறிருக்க (இந்தியாவில்)
மாட்டிறைச்சி உண்பதை தடைவிதிக்கின்றனர்.
ஏன் ஆட்டிறைச்சி வைத்திருந்த முஸ்லிமை மாட்டிறைச்சி வைத்திருந்ததாககூறி கொலை செய்தனர். ஹோலிப்பண்டிகையை முன்னிட்டு ஜும்ஆ தொழுகையை தள்ளிவைக்கச் சொன்னதை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தி பள்ளிவாசலையும் 250 வீடுகளையும் தீயிட்டு கொழுத்தினர் .

கோத்ரா இரயில் சம்பவத்தை முன்னிட்டு அதை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்ற அவதூரைப் பரப்பி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தனர்.

இன்னும் ஏராளம் ஏராளம். இதையெல்லாம் பார்த்து முஸ்லிம்களின் உள்ளம் துடிக்கின்றது துடிக்கத்தான் வேண்டும் காரணம் முஃமின்கள் அனைவர்களும் ஒரே உடம்பை போன்றவர்களல்லவா?

6011- حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا زَكَرِيَّاءُ عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((تَرَى الْمُؤْمِنِينَ فِي تَرَاحُمِهِمْ وَتَوَادِّهِمْ وَتَعَاطُفِهِمْ كَمَثَلِ الْجَسَدِ إِذَا اشْتَكَى عُضْوًا تَدَاعَى لَهُ سَائِرُ جَسَدِهِ بِالسَّهَرِ وَالْحُمَّى))
6011. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.  இதை நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

உறுப்புக்களுக்கு மத்தியிலுள்ள இந்த பாசம் சமுதாயத்தின் அனைத்து அங்கத்தினர் இடையேயும் இருக்க வேண்டுமென்பதையே இந்த நபிமொழி விளக்குகிறது.

6026- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي بُرْدَةَ بُرَيْدِ بْنِ أَبِي بُرْدَةَ قَالَ: أَخْبَرَنِي جَدِّي أَبُو بُرْدَةَ عَنْ أَبِيهِ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ، يَشُدُّ بَعْضُهُ بَعْضًا)). ثُمَّ شَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ.

. 6026. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்  “இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறதுஎன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காண்பித்தார்கள்.42
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

இந்த நபிமொழியில் முஸ்லிம் சமுதாயத்தை ஒரு கட்டிடத்துடன் ஒப்பிட்டு வர்ணிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு கட்டிடத்தின் செங்கற்கல்  எப்படி ஒன்றோடொன்று  இணைந்துள்ளனவோ அவ்வாறே முஸ்லிம்கள் தமக்கிடையே இணைந்தே வாழவேண்டும்; ஒரு செங்கல் எப்படி இன்னொரு செங்கலுக்கு வலுவூட்டவும் துணைநிற்கவும் செய்கின்றதோ அவ்வாறே அவர்களும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டும். எப்படி சிதறிக்கிடக்கும் செங்கற்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு வலிமை வாய்ந்த கட்டடமாக உருவெடுக்கின்றனவோ அவ்வாறே முஸ்லிம்களின் வலிமை அவர்கள் ஒன்றிணைந்து இருப்பதில் தான் உள்ளது.

عن أبي هُرَيْرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "المؤمن مرآة أخيه المؤمن، المؤمن أخو المؤمن حيث لَقِيَه يكُفُّ عنه ضَيْعَتَه ويَحوطه من ورائه"

அண்ணல் நபி( ஸல்) அவர்கள் அருளினார்கள் ஓர் இறைநம்பிக்கையாளன் மற்றோர் இறைநம்பிக்கையாளனுக்கு கண்ணாடியாவான். ஓர் இறைநம்பிக்கையாளன் மற்றோர் இறைநம்பிக்கையாளனின் சகோதரன் ஆவான்.  அவன் தன் சகோதரனை அழிவிலிருந்து காப்பாற்றுகிறான்  அவனுக்குப் பின்னாலிருந்து அவனைப் பாதுகாக்கின்றான்.( முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு கண்ணாடியாவான் என்பதன் கருத்து அவனுக்கு நேரும் துன்பத்தை தனக்கு நேர்ந்து விட்ட துன்பமாகக் கருதுவான் எப்படி அவன் துன்பத்தால் துடிக்கின்றானோ அதுபோன்று இவனும் துடித்தெழ வேண்டும் அதனை நீக்கிட முயலவேண்டும்.

*வேற்றுமையில் ஒற்றுமை*
*************************************
இவ்வுலகில் கருத்து முரண்பாடு என்பது இயற்கையான ஒன்றாகும். இரு நண்பர்கள் முதல் இரு தேசத்திற்கு இடையில் கருத்து வேறுபாடு தோன்றலாம்.
அது அழகிய முறையில் கலந்துரையாடப்பட்டால் நல்ல தீர்வை அடைந்தால் அவை வரவேற்கப்பட வேண்டியவைதான்.

சஹாபாக்களுக்கு மத்தியில் பல்வேறு கருத்து வேற்றுமைகள் ஆரம்ப காலத்தில் தோன்றின.

* யாரை கலீஃபாவாக நியமிப்பது என்பதில் நபித்தோழர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு

*குர்ஆனை ஒன்றுதிரட்டுவதா வேண்டாமா?

* ஜகாத் மறுப்பாளர்களுடன் போர் செய்ய வேண்டுமா? வேண்டாமா?

* உஸ்மான் ( ரலி)அவர்களின் படுகொலைக்கு உடனடி விசாரனை வேண்டுமா? வேண்டாமா?

இப்படியாக ஸஹாபாக்களிடமே பல கருத்து வேற்றுமை இருகத்தான் செய்தது. ஆனாலும் யாரையும் யாரும் குரோதமாகவோ எதிரியாகவோ பார்க்கவில்லை தேவை ஏற்படும்போது அனைவர்களும் ஒன்றுபட்டு செயல்பட்டார்கள் அந்த நிலை இன்றைய இஸ்லாமிய தலைவர்களிடம் வரவேண்டும்.

*இஸ்லாமிய சமூகம் பகைமை மறந்து இறைவனுக்காக  ஒன்று பட்டிருந்த காலமெல்லாம் உலகையே ஆட்சி செய்து கொண்டிருந்தது.*

حينما وقع الخلاف المشهور بين علي بن أبي طالب -رضي الله عنه- ومعاوية بن أبي سفيان، وكان الحقّ مع أمير المؤمنين عليّ، حاول قيصر الروم استغلال الفرصة ليتوصّل إلى مآربه،
فأرسل إلى معاوية يقول: "من قيصر ملك الرّوم إلى معاوية بن أبي سفيان، أمّا بعد، علِمنا بما وقع بينكم وبين علي بن أبي طالب، فلو أمرتني أرسلت لك جيشا يأتون إليك برأسه"،
فردّ عليه معاوية: "من معاوية بن أبي سفيان إلى هرقل، أمّا بعد: أخَوان تشاجرا فما بالك تدخل فيما بينهما، إن لم تخرس، أرسلت إليك بجيش أوله عندك وأخره عندي، يأتونني برأسك أقدّمه لعلي بن أبي طالب".
(تاريخ الإسلام)
இஸ்லாமிய கலீஃபா ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் அவர்களிடம் கருத்து வேற்றுமை கொண்டிருந்த  ஹஜ்ரத்  அமீர் முஆவியா ரலி அவர்களுக்கு ரோமானிய மன்னன் ஹிர்கலிடமிருந்து கடிதம் வந்தது 'தான்  படையை அனுப்பி அலீ  ரலி கொலை செய்து அவர்களின் தலையை கொண்டு வர உதவுவதாக  எழுதப்பட்டிருந்ததுஹஜ்ரத்  முஆவியா ரலி அவர்கள் பதில் எழுதினார்கள்! '"சகோதரர்கள் இருவருக்கு மத்தியில் நடக்கும் உள் பிரச்சினையில் நுழைய நீ யார்நீ விலகிக் கொள்ளவில்லை என்றால் நான்  உனக்கு எதிராக  ஒரு  பெரும்படையை அனுப்புவேன் அதன் துவக்கம் என் மண்ணில் இருந்து உன் நாடு வரை பரவியிருக்கும் அவர்கள் உன் தலையை கொய்து வருவார்கள் அதை அலீ ரலி அவர்களிடம் நான்  சமர்ப்பிப்பேன்'" என்று கூறினார்கள்.


எனவே தான் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்களை  இஸ்லாமிய எதிரிகளால்  வீழ்த்த முடியவில்லை. மார்க்கம் என்று வந்து விட்டால் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டிருந்தார்கள் ஸஹாபாக்கள்.

*அல்லாஹ்வின் உதவி ஒன்றுபடுவதில் உள்ளது.*
عن عبد الله ابن عمر رضي الله عنهما قال ,قال رسول الله صلى الله عليه وسلم" يد الله مع الجماعة" رواه البخاري
وفي رواية.....
إن الله لا يجمع أمتي أو قال : أمة محمد على ضلالة ويد الله مع الجماعة ، ومن شذ شذ إلى النار

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ்வின் உதவி ஒன்றுபட்டு செயல்படுவதில் இருக்கிறது.
என் சமூகம் வழிகேடுகளில் ஒன்றிணையாது. யார் ஒன்று படுவதிலிருந்து விலகி தனித்திருப்பாரோ அவர் நரகிலும் தனித்திருப்பார்"
(நூல் : புகாரி )

எனவே வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் பாசிசவாதிகளை தோற்கடிப்பதற்கு இஸ்லாமியர்கள் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.  அதற்கு நம்முடைய வாக்குகள் சிதறிவிடக்கூடாது. பாசிசவாதிகளுக்கு நேர் எதிர்கட்சியாக உள்ள பலமான கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

*BJP க்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக பேசும் முஸ்லிம்களுக்கு இறைவன் கூறும் அறிவுரை*

وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌ وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏ 
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் : 5:2)

*அடக்கு முறை ஆட்சியை விட்டும் பாதுகாப்பு பெற சில முக்கியமான திக்ருகளை நாம் அதிகம் ஓதி வரலாம்*

1) யா ஹய்யு யாகய்யூம் يا حي يا قيوم என்பதை அதிகம் ஓதிவர வேண்டும் இவை சோதனையான சூழ்நிலையில் ஓத வேண்டிய முக்கியமான தஸ்பீஹாகும்.

2) ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் حسبنا الله ونعم الوكيل என்ற திக்ரையும் அதிகம் ஓதி வரவேண்டும் இவை எதிரிகள் பெரும்படையுடன் வருகிறார்கள் என்று நயவஞ்சகர்கள் பயமுறுத்தியபோது முஸ்லிம்கள் ஓதிய திக்ராஹும்


رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ‌ اِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَاد        ( 3
இந்த வசனத்தை ஒவ்வொரு நாளும் 80 தடவை ஓதி துஆச்செய்யுமாறு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க இதையும் ஓதி வரலாம்.

*முடிவுரை*
***************
இஸ்லாமியர்களை அழிப்பதன் மூலமாக இஸ்லாத்தை அழித்து விடலாம் என நினைத்தை கொண்டு இஸ்லாமிய எதிரிகள் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். அவர்கள் அறிய மாட்டார்கள் இஸ்லாமியர்களை அழித்தாலும் இஸ்லாம் ஒரு போதும் அழியாது.

يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல் குர்ஆன் - 9: 32)

இதை பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் தன்வசம் வைத்துள்ளான்.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
(அல் குர்ஆன் - 15:9)

இந்த வேதத்தையும் இந்த வேதத்தில் கூறப்பட்ட இறைவனின் அங்கீகாரம் உள்ள இஸ்லாமிய  மார்க்கமும் அழிந்து விடாமல் இறைவன் பாதுகாப்பதால் அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது.

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
(அல்குர்ஆன் - 3:139)