بسم الله الرحمن الرحيم
*துண்டு பட்டால் உண்டு வீழ்ச்சி.*
**********************************
பொதுவாக இரு கையும் இணைந்தால் தான் ஓசை வரும்
எல்லோரும் பரஸ்பரம் ஒற்றுமையோடு இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் . ஒற்றுமை
இழந்து துண்டு பட்டால் எல்லாத்தையும் இழக்க வேண்டிய பெரும் இழிநிலை ஏற்படும் .
எதிரிகள் நம்மை அடக்க / அழிக்க அன்று முதல்
இன்று கையாளக்கூடிய மிகப்பெரிய ஒரு ஆயுதம் என்னவென்றால் பிரித்தாளும் சூழ்ச்சி
தான் . இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டுமென்றால் பரஸ்பரம் புரிந்துணர்வு
வேண்டும் ஒருவர் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் .
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا
وَّلَا تَفَرَّقُوْا وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ
اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ
اِخْوَانًا وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ
فَاَنْقَذَكُمْ مِّنْهَا كَذٰلِكَ
يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ
இன்னும், நீங்கள்
எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ்
உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை
மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் -
நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை
உங்களுக்கு தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் : 3:103)
@@@@@@@
ஊர் ரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا
تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ وَاصْبِرُوْا اِنَّ
اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்;
(துன்பங்களைச்
சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ்
பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 8:46) .
ஒற்றுமை என்பது மிக நிர்ப்பந்தம் என்பதை
உணர்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா முனவ்வரா சென்றவுடன் முதன்
முதலில் செய்தது இணைப்பு-சமாதான உடன் படிக்கைதான் செய்தார்கள் .அதனால் பரஸ்பரம் மனசு களையும் ஆள்களையும் இணைத்தார்கள் . அதில் மதம் / இனம் / நிறம்
பார்க்காமல் எல்லோரையும் முதலில் ஒரே குடையின் கீழ் பிணைத்தார்கள் .
பரஸ்பரம் ஒன்றுபடாமல் துண்டுபட்டு நின்றால்
நாட்டிலும் சரி குடும்பத்திலும் சரி மார்க்கத்திலும் சரி மிகப்பெரிய வீழ்ச்சியை
சந்திக்க நேரிடும் .
@@@@@@@
உஹது போரின் போது அம்மலை குன்றின் மேல்
நிறுத்தப்பட்ட ஐம்பது பேரும் ஒத்த கருத்தோடு நின்றவரை கிடைத்தது வெற்றி . இங்கேயே
நிற்க வேண்டுமா / கீழே இறங்கிவிடலாமா என கருத்து வேறுபட்டு துண்டுபட்ட நேரத்தில்
ஏற்பட்டது தோல்வி . கூத்தாடி(காபிர்)களுக்கு கொண்டாட்டமாக மாறியது .
اﻟﺒﺮاء ﺑﻦ ﻋﺎﺯﺏ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﻳﺤﺪﺙ ﻗﺎﻝ: ﺟﻌﻞ
اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ اﻟﺮﺟﺎﻟﺔ ﻳﻮﻡ ﺃﺣﺪ، ﻭﻛﺎﻧﻮا ﺧﻤﺴﻴﻦ ﺭﺟﻼ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ
ﺟﺒﻴﺮ، ﻓﻘﺎﻝ: «ﺇﻥ ﺭﺃﻳﺘﻤﻮﻧﺎ ﺗﺨﻄﻔﻨﺎ اﻟﻄﻴﺮ ﻓﻼ ﺗﺒﺮﺣﻮا ﻣﻜﺎﻧﻜﻢ، ﻫﺬا ﺣﺘﻰ ﺃﺭﺳﻞ ﺇﻟﻴﻜﻢ، ﻭﺇﻥ
ﺭﺃﻳﺘﻤﻮﻧﺎ ﻫﺰﻣﻨﺎ اﻟﻘﻮﻡ ﻭﺃﻭﻃﺄﻧﺎﻫﻢ، ﻓﻼ ﺗﺒﺮﺣﻮا ﺣﺘﻰ ﺃﺭﺳﻞ ﺇﻟﻴﻜﻢ»، ﻓﻬﺰﻣﻮﻫﻢ، ﻗﺎﻝ: ﻓﺄﻧﺎ
ﻭاﻟﻠﻪ ﺭﺃﻳﺖ اﻟﻨﺴﺎء ﻳﺸﺘﺪﺩﻥ، ﻗﺪ ﺑﺪﺕ ﺧﻼﺧﻠﻬﻦ ﻭﺃﺳﻮﻗﻬﻦ، ﺭاﻓﻌﺎﺕ ﺛﻴﺎﺑﻬﻦ، ﻓﻘﺎﻝ ﺃﺻﺤﺎﺏ ﻋﺒﺪ
اﻟﻠﻪ ﺑﻦ ﺟﺒﻴﺮ: اﻟﻐﻨﻴﻤﺔ ﺃﻱ ﻗﻮﻡ اﻟﻐﻨﻴﻤﺔ، ﻇﻬﺮ ﺃﺻﺤﺎﺑﻜﻢ -
- ﻓﻤﺎ ﺗﻨﺘﻈﺮﻭﻥ؟ ﻓﻘﺎﻝ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺟﺒﻴﺮ:
ﺃﻧﺴﻴﺘﻢ ﻣﺎ ﻗﺎﻝ ﻟﻜﻢ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ؟ ﻗﺎﻟﻮا: ﻭاﻟﻠﻪ ﻟﻨﺄﺗﻴﻦ اﻟﻨﺎﺱ،
ﻓﻠﻨﺼﻴﺒﻦ ﻣﻦ اﻟﻐﻨﻴﻤﺔ، ﻓﻠﻤﺎ ﺃﺗﻮﻫﻢ ﺻﺮﻓﺖ ﻭﺟﻮﻫﻬﻢ، ﻓﺄﻗﺒﻠﻮا ﻣﻨﻬﺰﻣﻴﻦ،
3039. பராஉ இப்னு
ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின்போது அப்துல்லாஹ் இப்னு
ஜுபைர்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் காலாட்படையினருக்குத் தலைவராக
நியமித்தார்கள். அவர்கள் (மொத்தம்) ஐம்பது பேர் இருந்தனர். '(நாங்கள் போரில் கொல்லப்பட்டு) எங்க(ள் சடலங்க)ளைப் பறவைகள் கொத்திச் செல்வதை
நீங்கள் பார்த்தால் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய
இடத்தைவிட்டு நகராதீர்கள். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து (போர்க் களத்தில்
செத்து வீழ்ந்து கிடக்கும் அவர்களை) மிதித்துச் செல்வதை நீங்கள் பார்த்தாலும் கூட
நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இடத்தைவிட்டு நகராதீர்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள். முஸ்லிம்கள் இணைவைப்பவர்களைத் தோற்கடித்துவிட்டனர். பெண்கள் தங்கள்
ஆடையை உயர்த்தியவர்களாக, அவர்களின் கால் தண்டைகளும் கால்களும்
வெளியில் தெரிய ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு
ஜுபைர்(ரலி) அவர்களின் சகாக்கள்,
'போர்ச்
செல்வங்கள்! மக்களே! போர்ச் செல்வங்கள்! உங்கள் தோழர்கள் வெற்றி
பெற்றுவிட்டார்கள். இன்னும் எதைத் தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?' என்று (உரக்கக்) கூறலாயினர். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் மறந்து
விட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மக்களிடம் சென்று போர்க்களத்திலுள்ள பொருட்களை
எடுத்துக் கொள்வோம்' என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடம்
சென்றபோது அவர்களின் முகங்கள் திருப்பப்பட்டு (எங்கிருந்து வந்தார்களோ அந்த
இடத்திற்கே திருப்பியனுப்பப்பட்டு) தோற்றுப் போய் சென்றுவிட்டனர்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்
@@@@@@@
எனவே தான் தலைமைக்கு கீழ் பணிதல் / விட்டுக்
கொடுத்தல் என்பது மிகப் பிரதானமாக போதிக்கப்படுகின்றது அதனை உணர்ந்த சஹாபாக்கள்
தங்களுக்கு மத்தியில் சொத்து தகராறு இருந்தாலும் அல்லது கணவன் மனைவி பிரச்சினையாக
இருந்தாலும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து துண்டுபடாமல் காத்துக் கொண்டார்கள் .
சிதைந்து விடாமல் பார்த்துக் கொண்டார்கள் .
சான்றாக வரலாற்றில் பல செய்திகளை நம்மால்
பார்க்க முடியும் .
ﺳﻤﻌﺖ ﺃﺑﺎ اﻟﺪﺭﺩاء، ﻳﻘﻮﻝ: ﻛﺎﻧﺖ ﺑﻴﻦ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﻭﻋﻤﺮ
ﻣﺤﺎﻭﺭﺓ، ﻓﺄﻏﻀﺐ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻋﻤﺮ ﻓﺎﻧﺼﺮﻑ ﻋﻨﻪ ﻋﻤﺮ ﻣﻏﻀﺐا، ﻓﺎﺗﺒﻌﻪ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻳﺴﺄﻟﻪ ﺃﻥ ﻳﺴﺘﻐﻔﺮ
ﻟﻪ، ﻓﻠﻢ ﻳﻔﻌﻞ ﺣﺘﻰ ﺃﻏﻠﻖ ﺑﺎﺑﻪ ﻓﻲ ﻭﺟﻬﻪ، ﻓﺄﻗﺒﻞ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﺇﻟﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ، ﻓﻘﺎﻝ ﺃﺑﻮ اﻟﺪﺭﺩاء ﻭﻧﺤﻦ ﻋﻨﺪﻩ: ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺃﻣﺎ
ﺻﺎﺣﺒﻜﻢ ﻫﺬا ﻓﻘﺪ ﻏﺎﻣﺮ» ﻗﺎﻝ: ﻭﻧﺪﻡ ﻋﻤﺮ ﻋﻠﻰ ﻣﺎ ﻛﺎﻥ ﻣﻨﻪ، ﻓﺄﻗﺒﻞ ﺣﺘﻰ ﺳﻠﻢ ﻭﺟﻠﺲ ﺇﻟﻰ اﻟﻨﺒﻲ
ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﻗﺺ ﻋﻠﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ اﻟﺨﺒﺮ، ﻗﺎﻝ ﺃﺑﻮ
اﻟﺪﺭﺩاء: ﻭﻏﻀﺐ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﺟﻌﻞ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻳﻘﻮﻝ: ﻭاﻟﻠﻪ ﻳﺎ ﺭﺳﻮﻝ
اﻟﻠﻪ ﻷﻧﺎ ﻛﻨﺖ ﺃﻇﻠﻢ، ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻫﻞ ﺃﻧﺘﻢ ﺗﺎﺭﻛﻮﻥ ﻟﻲ
ﺻﺎﺣﺒﻲ، ﻫﻞ ﺃﻧﺘﻢ ﺗﺎﺭﻛﻮﻥ ﻟﻲ ﺻﺎﺣﺒﻲ، ﺇﻧﻲ ﻗﻠﺖ: ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻨﺎﺱ، ﺇﻧﻲ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺇﻟﻴﻜﻢ
ﺟﻤﻴﻌﺎ، ﻓﻘﻠﺘﻢ: ﻛﺬﺑﺖ، ﻭﻗﺎﻝ ﺃﺑﻮ ﺑﻜﺮ: ﺻﺪﻗﺖ " ﻗﺎﻝ ﺃﺑﻮ ﻋﺒﺪ اﻟﻠﻪ: " ﻏﺎﻣﺮ:
ﺳﺒﻖ ﺑﺎﻟﺨﻴﺮ
"
4640. அபுத்
தர்தா(ரலி) அறிவித்தார்.
(ஒரு சமயம்) அபூ
பக்ர்(ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த வாக்குவாதத்தில் அபூ
பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களை கோபப்படுத்திவிட்டார்கள். அப்போது உமர்(ரலி)
கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். உடனே அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி)
அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தம்மை மன்னித்து விடுமாறு வேண்டினார்கள். ஆனால், உமர்(ரலி) மன்னிக்காமல் அபூ பக்ர்(ரலி) அவர்களின் முகத்திற்கு முன்னால் (தம்
வீட்டுக்) கதவைச் சாத்தினார்கள். எனவே, அபூ பக்ர்(ரலி)
இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள்.
(அப்போது)
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அபூ பக்ர்(ரலி) வருவதைக் கண்ட)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இதோ உங்கள் தோழர் வழக்காடிவிட்டு
வந்திருக்கிறார்' என்று கூறினார்கள். (பிறகு) உமர்(ரலி)
அவர்களும் தம்மால் ஏற்பட்டுவிட்ட செயலுக்கு வருந்தியவராக நபி(ஸல்) அவர்களை நோக்கி
வந்து சலாம் (முகமன்) கூறி அமர்ந்தார்கள். (நடந்த) செய்தியை இறைத்தூதர்(ஸல்)
அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். (அப்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கோபப்பட்டார்கள். (இதைக் கண்ட) அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின்
மீதாணையாக! (வாக்கு வாதத்தை தொடங்கி வைத்ததால் உமரை விட) நானே அதிகம்
அநீதியிழைத்தவனாகி விட்டேன்,
இறைத்தூதர்
அவர்களே!' என்று கூறலானார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் , '(மக்களே!) என் தோழரை
எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டுவிடுவீர்களா? (ஒரு காலத்தில்) 'மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று சொன்னேன். அப்போது நீங்கள் 'பொய் சொல்கிறீர்' என்று கூறினீர்கள். ஆனால்,
அபூ பக்ர்
அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்' என்றார்கள்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்)
கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின்
மூலத்திலுள்ள) 'ஃகாமர' எனும்
சொல்லுக்கு 'நன்மையில் முந்தினார்' என்று பொருள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை .
@@@@@@@
ஒற்றுமை குந்தகம் விளைய காரணம் தவறான
புரிந்துணர்வு / தப்புக் கணக்கு(-எண்ணம்) ஆகும்.
எனவே சரியானதை புரிந்து கொண்டு உடனே
இணைந்த்து கொள்ள வேண்டும்.
6064 - ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ
ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺇﻳﺎﻛﻢ ﻭاﻟﻈﻦ، ﻓﺈﻥ اﻟﻈﻦ ﺃﻛﺬﺏ اﻟﺤﺪﻳﺚ، ﻭﻻ ﺗﺤﺴﺴﻮا، ﻭﻻ ﺗﺠﺴﺴﻮا، ﻭﻻ
ﺗﺤﺎﺳﺪﻭا، ﻭﻻ ﺗﺪاﺑﺮﻭا، ﻭﻻ ﺗﺒﺎﻏﻀﻮا، ﻭﻛﻮﻧﻮا ﻋﺒﺎﺩ اﻟﻠﻪ ﺇﺧﻮاﻧﺎ»
6064. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்'
(ஆதாரமில்லாமல்
பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி
ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள்.
கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,)
அல்லாஹ்வின்
அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
6073 - ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﻴﻤﺎﻥ، ﺃﺧﺒﺮﻧﺎ ﺷﻌﻴﺐ،
ﻋﻦ اﻟﺰﻫﺮﻱ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ ﻋﻮﻑ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﺑﻦ اﻟﻄﻔﻴﻞ ﻫﻮ اﺑﻦ اﻟﺤﺎﺭﺙ، - ﻭﻫﻮ اﺑﻦ ﺃﺧﻲ ﻋﺎﺋﺸﺔ
ﺯﻭﺝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻷﻣﻬﺎ - ﺃﻥ ﻋﺎﺋﺸﺔ، ﺣﺪﺛﺖ: ﺃﻥ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﻗﺎﻝ:
ﻓﻲ ﺑﻴﻊ ﺃﻭ ﻋﻄﺎء ﺃﻋﻄﺘﻪ ﻋﺎﺋﺸﺔ: ﻭاﻟﻠﻪ ﻟﺘﻨﺘﻬﻴﻦ ﻋﺎﺋﺸﺔ ﺃﻭ ﻷﺣﺠﺮﻥ ﻋﻠﻴﻬﺎ، ﻓﻘﺎﻟﺖ: ﺃﻫﻮ ﻗﺎﻝ
ﻫﺬا؟ ﻗﺎﻟﻮا: ﻧﻌﻢ، ﻗﺎﻟﺖ: ﻫﻮ ﻟﻠﻪ ﻋﻠﻲ ﻧﺬﺭ، ﺃﻥ ﻻ ﺃﻛﻠﻢ اﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﺃﺑﺪا. ﻓﺎﺳﺘﺸﻔﻊ اﺑﻦ
اﻟﺰﺑﻴﺮ ﺇﻟﻴﻬﺎ، ﺣﻴﻦ ﻃﺎﻟﺖ اﻟﻬﺠﺮﺓ، ﻓﻘﺎﻟﺖ: ﻻ ﻭاﻟﻠﻪ ﻻ ﺃﺷﻔﻊ ﻓﻴﻪ ﺃﺑﺪا، ﻭﻻ ﺃﺗﺤﻨﺚ ﺇﻟﻰ
ﻧﺬﺭﻱ. ﻓﻠﻤﺎ ﻃﺎﻝ ﺫﻟﻚ ﻋﻠﻰ اﺑﻦ اﻟﺰﺑﻴﺮ، ﻛﻠﻢ اﻟﻤﺴﻮﺭ ﺑﻦ ﻣﺨﺮﻣﺔ، ﻭﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ اﻷﺳﻮﺩ ﺑﻦ
ﻋﺒﺪ ﻳﻐﻮﺙ، ﻭﻫﻤﺎ ﻣﻦ ﺑﻨﻲ ﺯﻫﺮﺓ، ﻭﻗﺎﻝ ﻟﻬﻤﺎ: ﺃﻧﺸﺪﻛﻤﺎ ﺑﺎﻟﻠﻪ ﻟﻤﺎ ﺃﺩﺧﻠﺘﻤﺎﻧﻲ ﻋﻠﻰ ﻋﺎﺋﺸﺔ،
ﻓﺈﻧﻬﺎ ﻻ ﻳﺤﻞ ﻟﻬﺎ ﺃﻥ ﺗﻨﺬﺭ ﻗﻄﻴﻌﺘﻲ. ﻓﺄﻗﺒﻞ ﺑﻪ اﻟﻤﺴﻮﺭ ﻭﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﻣﺸﺘﻤﻠﻴﻦ ﺑﺄﺭﺩﻳﺘﻬﻤﺎ،
ﺣﺘﻰ اﺳﺘﺄﺫﻧﺎ ﻋﻠﻰ ﻋﺎﺋﺸﺔ، ﻓﻘﺎﻻ: اﻟﺴﻼﻡ ﻋﻠﻴﻚ ﻭﺭﺣﻤﺔ اﻟﻠﻪ ﻭﺑﺮﻛﺎﺗﻪ -
- ﺃﻧﺪﺧﻞ؟ ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ: اﺩﺧﻠﻮا، ﻗﺎﻟﻮا:
ﻛﻠﻨﺎ؟ ﻗﺎﻟﺖ: ﻧﻌﻢ، اﺩﺧﻠﻮا ﻛﻠﻜﻢ، ﻭﻻ ﺗﻌﻠﻢ ﺃﻥ ﻣﻌﻬﻤﺎ اﺑﻦ اﻟﺰﺑﻴﺮ، ﻓﻠﻤﺎ ﺩﺧﻠﻮا ﺩﺧﻞ اﺑﻦ
اﻟﺰﺑﻴﺮ اﻟﺤﺠﺎﺏ، ﻓﺎﻋﺘﻨﻖ ﻋﺎﺋﺸﺔ ﻭﻃﻔﻖ ﻳﻨﺎﺷﺪﻫﺎ ﻭﻳﺒﻜﻲ، ﻭﻃﻔﻖ اﻟﻤﺴﻮﺭ ﻭﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ
ﻳﻨﺎﺷﺪاﻧﻬﺎ ﺇﻻ ﻣﺎ ﻛﻠﻤﺘﻪ، ﻭﻗﺒﻠﺖ ﻣﻨﻪ، ﻭﻳﻘﻮﻻﻥ: ﺇﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻧﻬﻰ ﻋﻤﺎ
ﻗﺪ ﻋﻠﻤﺖ ﻣﻦ اﻟﻬﺠﺮﺓ، ﻓﺈﻧﻪ: «ﻻ ﻳﺤﻞ ﻟﻤﺴﻠﻢ ﺃﻥ ﻳﻬﺠﺮ ﺃﺧﺎﻩ ﻓﻮﻕ ﺛﻼﺙ ﻟﻴﺎﻝ» ﻓﻠﻤﺎ ﺃﻛﺜﺮﻭا
ﻋﻠﻰ ﻋﺎﺋﺸﺔ ﻣﻦ اﻟﺘﺬﻛﺮﺓ ﻭاﻟﺘﺤﺮﻳﺞ، ﻃﻔﻘﺖ ﺗﺬﻛﺮﻫﻤﺎ ﻧﺬﺭﻫﺎ ﻭﺗﺒﻜﻲ ﻭﺗﻘﻮﻝ: ﺇﻧﻲ ﻧﺬﺭﺕ، ﻭاﻟﻨﺬﺭ
ﺷﺪﻳﺪ، ﻓﻠﻢ ﻳﺰاﻻ ﺑﻬﺎ ﺣﺘﻰ ﻛﻠﻤﺖ اﺑﻦ اﻟﺰﺑﻴﺮ، ﻭﺃﻋﺘﻘﺖ ﻓﻲ ﻧﺬﺭﻫﺎ ﺫﻟﻚ ﺃﺭﺑﻌﻴﻦ ﺭﻗﺒﺔ، ﻭﻛﺎﻧﺖ
ﺗﺬﻛﺮ ﻧﺬﺭﻫﺎ ﺑﻌﺪ ﺫﻟﻚ، ﻓﺘﺒﻜﻲ ﺣﺘﻰ ﺗﺒﻞ ﺩﻣﻮﻋﻬﺎ ﺧﻤﺎﺭﻫﺎ
6073. 6074. 6075. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர்
ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார் ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது
தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக
வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்)
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின்
மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது நான் அவரைத் தடுத்து
நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம்
தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஆயிஷா(ரலி), 'அவரா இப்படிக் கூறினார்?'
என்று
கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர்.
அப்போது ஆயிஷா(ரலி), 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும்
பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள். நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது
ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு
ஸுபைர்(ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய)
பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக்
கொள்ளவுமாட்டேன்' என்று கூறிவிட்டார்கள்.
ஆயிஷா(ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை
நிறுத்தி நீண்ட நாள்களாம்விட்டபோது பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு
மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி
யகூஸ்(ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர்(ரலி), 'அல்லாஹ்வை
முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்)
ஆயிஷா(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை
முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு
அனுமதிக்கப்பட்டதல்லவே!' என்று கூறினார்கள். எனவே, மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை
அணிந்துகொண்டு இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள்.
(அங்கு சென்ற)
உடனே 'அஸ்ஸலாமு அலைக்கி வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு' என்று சலாம் சொல்லிவிட்டு,
'நாங்கள் உள்ளே
வரலாமா?' என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா(ரலி), 'உள்ளே வாருங்கள்' என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள்
(மூவரும்) 'நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?' என்று கேட்டனர். ஆயிஷா(ரலி),
'ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்'
என்று அவர்கள்
இருவருடனும் இப்னு ஸுபைர்(ரலி) இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.
அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர்(ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து
அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர்(ரலி)
அவர்களும் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர்(ரலி)
அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை
ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.
மேலும், அவர்கள் இருவரும், 'ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது
அனுமதிக்கப்பட்டதன்று' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை
தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்'
என்று
கூறினார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து)
கசப்பூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி)
அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா(ரலி) அழலானார்கள்.
மேலும், '(நான் அவரிடம்
பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்' என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆயிஷா(ரலி) இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர்.
இறுதியில் ஆயிஷா(ரலி) (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு
ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக
நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை
நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்.
6077 - ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﺃﺧﺒﺮﻧﺎ
ﻣﺎﻟﻚ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﻋﻦ ﻋﻄﺎء ﺑﻦ ﻳﺰﻳﺪ اﻟﻠﻴﺜﻲ، ﻋﻦ ﺃﺑﻲ ﺃﻳﻮﺏ اﻷﻧﺼﺎﺭﻱ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ
ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " ﻻ ﻳﺤﻞ ﻟﺮﺟﻞ ﺃﻥ ﻳﻬﺠﺮ ﺃﺧﺎﻩ ﻓﻮﻕ ﺛﻼﺙ ﻟﻴﺎﻝ، ﻳﻠﺘﻘﻴﺎﻥ:
ﻓﻴﻌﺮﺽ ﻫﺬا ﻭﻳﻌﺮﺽ ﻫﺬا، ﻭﺧﻴﺮﻫﻤﺎ اﻟﺬﻱ ﻳﺒﺪﺃ ﺑﺎﻟﺴﻼﻡ "
6077. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்'
ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு)
மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும்
சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு
செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்.
என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.