بسم الله الرحمن الرحيم
*நவீனயுகத்தில் இன்றைய பெண்கள்*
*****************************************
முன்னுரை:
உலகலாவிய அளவில் பெண்கள் அற்பப் பொருளாக
கருதப்பட்ட காலத்தில் பெண்களுக்கும் கண்ணியம், உரிமைகள் மற்றும்
கடமைகள் உண்டு என்று பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் இஸ்லாம் கூறியதுடன்
அவர்களுக்கான நியாயமான வாழ்க்கை முறைகளையும் அல்லாஹ் மார்க்கமாக்கினான். அந்த
வகையில் பெண்களுக்கு பல கட்டங்களில் சம உரிமைகளை (உம்: பிறப்புரிமை, வாழ்வுரிமை, கல்வி கற்கும் உரிமை) வழங்கிய இஸ்லாம் சில
இடங்களில் அவர்களின் உள்ளம் மற்றும் உடல் ரீதியிலான பலவீனங்களை அறிந்து அவற்றில்
அவர்களுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. (உம். மஹ்ரம், பாகப்பிரிவினையில் அவர்களுக்கான பங்கு மற்றும் உடை கட்டுப்பாட்டில் அவர்கள்
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் முதலியவைகளை சொல்லலாம்)
அதே சமயம் பெண்களை ஒரு மனிதனாகவே மதிக்காமல், அவர்களை போகப்பொருளாக மட்டுமே கருதிய மேற்கத்தியர்கள் முதற் கொண்டு பலரும் பல
போராட்டங்களுக்கு பின்னர் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்க முன்வந்தனர். அதன்
பின் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள். ஆண்களுக்கு தங்களைப் பற்றியும், தங்களின் வாழ்க்கையைப் பற்றியும் முடிவெடுக்கும் உரிமைகள் இருப்பது போல்
பெண்களுக்கும் இருக்கின்றது. அவர்களின் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை
இல்லை எனும் நிலையை நவீன யுகத்தில் உருவாக்கினார்கள். இக்கொள்கையின் முடிவாக நடைமுறை காலத்தில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி
வருகின்றது. (إفراط – تفريط-மிக
நெருக்கடியான கட்டுப்பாடு ' அறவே கட்டுப்பாடின்றி கட்டவிழ்த்து விடுவது
எனும் இரு நிலைகள் சமூகத்தை மிக மோசமாக பாதிக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்)
இதனால் கடந்த காலங்களை விட நிகழ் காலத்தில் வாழும் பெண்கள் உடல் மற்றும் மன
ரீதியாக பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதன்படி நிகழ்கால பெண்களின்
வாழ்க்கை அவலங்களை அறிய வேண்டுமானால் கடந்த காலத்திற்குச் சென்று இரண்டு கால
வாழ்க்கை முறையையும் ஒப்பீட்டு அளவில் அறிந்து கொள்வது அவசியமாகும்.
*மகளிரின் தேக வலிமை
– அன்றும் இன்றும்.*
***************************************
கடந்த கால பெண்கள் உடல் வலிமை கொண்டவர்களாக
காணப்பட்டிருக்க, நிகழ்கால பெண்களோ உடல் வலிமையற்று காணப்படுகின்றார்கள்.
அதன் அடையாளமாகவே
ü அன்று நீண்ட ஆயுள் - இன்று அற்ப ஆயுள்.
ü அன்று நோயற்ற வாழ்க்கை - இன்று பெயர் சொல்ல முடியாத நவீன வகை நோய்கள்.
ü அன்று வீட்டில் சுகப்பிரசவம் - இன்று
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை.
ü அன்று இரட்டை இலக்க குழந்தைகள் - இன்று ஒன்று
அல்லது இரண்டு குழந்தைகள்.
ü அன்று தாய்மார்கள் தம்
பெண் பிள்ளைகளுக்கு பிரசவம் முதலிய ஒத்துழைப்பு வழங்கினார்கள் - இன்று அவர்கள்
நோயுற்றிருக்கிறார்கள் அல்லது மரணித்திருக்கிறார்கள்.
ü அன்று பேரப்பிள்ளைகளை
பராமரித்தல் - இன்று தங்களையே மற்றவர்கள் பராமரிக்கும் நிலை.
ü மற்றும் பல
காரணம் என்ன?
பதில்: ஆரோக்கியமான உணவு
மற்றும் வாழ்க்கை முறையேயாகும்.
1. *உணவு எப்படி இருக்க
வேண்டும்?*
அல்லாஹ் கூறுகின்றான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ
طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ
تَعْبُدُونَ (البقرة : 172)
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு
அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள்
அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்தி வாருங்கள்.
பழமையான உணவு மற்றும் வாழ்க்கை முறையும் நவீன
உணவு மற்றும் வாழ்க்கை முறையும்.
அன்று : இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, கம்பு, கேள்வரகு, சாமை, உளுந்து மற்றும்
இயற்கையான உணவுகள் மற்றும் இளநீர், ஆற்றுநீர், மோர் முதலிய இயற்கை பானங்கள்.
இன்று : பீட்சா, பர்கர், சாண்ட்விஜ், புரோட்டா மற்றும் செயற்கை சுவையூட்டிகள் நிரம்பப் பெற்ற உணவுகள் மற்றும்
பெப்ஸி கோக் போன்ற குளிர்பானங்கள்.
2. *உடல் உழைப்பின்மை:*
அன்று : மாவாட்டுதல், நெல்லு குத்துதல், அம்மி அரைத்தல், துணிகளை துவைத்தல், விறகு அடுப்பில் சமைத்தல் விவசாயம் செய்தல்
முதலிய தற்சார்பு வாழ்க்கை முறை.
عن علي، أن فاطمة عليها السلام اشتكت ما تلقى من
الرحى مما تطحن، فبلغها أن رسول الله صلى الله عليه وسلم أتي بسبي، فأتته تسأله
خادما، فلم توافقه، فذكرت لعائشة، فجاء النبي صلى الله عليه وسلم، فذكرت ذلك عائشة
له، فأتانا، وقد دخلنا مضاجعنا، فذهبنا لنقوم، فقال: «على مكانكما». حتى وجدت برد
قدميه على صدري، فقال: «ألا أدلكما على خير مما سألتماه، إذا أخذتما مضاجعكما
فكبرا الله أربعا وثلاثين، واحمدا ثلاثا وثلاثين، وسبحا ثلاثا وثلاثين، فإن ذلك
خير لكما مما سألتماه» بخاري : 3113
அலீ(ரலி)அறிவித்தார்கள். (என் துணைவியாரான) 'பாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து
முறையிடுபவர்களாக இருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள்
கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே
பங்கிடவிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை
(தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா(ரலி) அவர்களால் அந்த
நேரத்தில் சந்திக்க முடியவில்லை. எனவே, ஆயிஷா(ரலி)
அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபி(ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா(ரலி) விஷயத்தைச் சொன்னார்கள்.
(விபரமறிந்த) நபி(ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால்
எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க
முனைந்தோம். நபி(ஸல்) அவர்கள், '(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே
இருவரும் இருங்கள்' என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின்
பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள்
அருகில் வந்து அமர்ந்தார்கள்.) பின்னர், 'நீங்கள் இருவரும்
என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது 'அல்லாஹு அக்பர் -
அல்லாஹ் பெரியவன்' என்று முப்பத்து நான்கு முறையும், 'அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்விற்கே' என்று முப்பத்து மூன்று முறையும், 'சுப்ஹானல்லாஹ் -
அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்' என்று முப்பத்து
மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள்
இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்' என்றார்கள்.
இன்று : அனைத்து வேலைகளுக்கும் இயந்தரங்கள்.
உடல் உழைப்பு இல்லாமல் துரித உணவுகளை சாப்பிடும் போது நோய்களின் இருப்பிடமாக
பெண்களின் உடல் ஆக்கப்படுகின்றது. வியர்வை சுரக்காததால் தண்ணீர் தேவையில்லாமல்
போகவே கிட்னி பெயிலியர் ஆகிவிடுகின்றது. கிட்னி சீராக இயங்க போதிய தண்ணீர் மிகமிக
முக்கியம். போதிய தாகம் எடுக்க, வியர்வை வெளியேற்றப்பட வேண்டும். வியர்வை
வெளியேற உடலுழைப்பு அவசியம்.
3. *பெருத்துவிட்ட பேராசைகளும் அதன் பரிசாக வந்த மன அழுத்தங்களும்*
அன்று : கணவனின் வருமானத்திற்கேற்பவும், உள்ளதைக் கொண்டு
போதுமாக்கிக் கொள்ளும் மன நிலையிருந்தது. அதற்கேற்ப குழந்தைகளையும் உருவாக்கும்
நிலை இருந்தது. அதனால் கழுத்தை நெறிக்கும் கடன் இல்லை. நிம்மதியான உறக்கம் மற்றும்
வாழ்க்கை இருந்தது.
இன்று : இன்று பொருளாதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு நாம்
எவ்வகையிலும் குறைந்தவர்களல்ல என்பதை காட்டும் வகையில் நினைத்ததை அனுபவிக்க வேண்டும்
என்ற எண்ணம். இவ்வெண்ணத்தின் பின்புலத்தில் முதலாளிகளின் பொருளாதார பேராசையில்
மூழ்கி இன்ஸ்டால்மென்ட் எனும் மாயவலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். ஆதனால் கடன்
முற்றி மனஅமைதியை இழந்து வாழ்கிறார்கள்.
أَلْهَاكُمُ التَّكَاثُرُ (1) حَتَّى زُرْتُمُ
الْمَقَابِرَ (التكاثر : 1- 2)
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை
விட்டும்) பராக்காக்கி விட்டது. நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «قَدْ أَفْلَحَ مَنْ
أَسْلَمَ، وَرُزِقَ كَفَافًا، وَقَنَّعَهُ اللهُ بِمَا آتَاهُ» مسلم : 1054
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்கள்
அறிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தன் (ரப்புக்கு) அடிபணிந்து, போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் தான்
வழங்கியதைக் கொண்டு போதுமாக்கச் செய்தவன் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டான்.
4 . *பெண்களின் வாழ்க்கை
திசைகளை மாற்றிய ஊடகங்கள்*
முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை நம்முன்னோர்கள்
மிகவும் சிறப்பாக வடிவமைத்திருந்தார்கள். அந்த வடிவமைப்பை நவீன ஊடகங்கள் அப்படியே
தலைகீழாக மாற்றிவிட்டது.
சினிமாவை மற்றும் நாடகங்களை அறியாத அன்றைய
பெண்களின் வாழ்க்கை முறையும் அதில் மூழ்கிப் போன இன்றைய பெண்களின் வாழ்க்கை
முறையும்:
5 . *அன்று : பெண்ணின் இலக்கணமே வெட்கம்தான். அது அன்று
அவர்களிடம் நிறைவாகவே காணப்பட்டது.*
قال الله تعالي : وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ
وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ
امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى
يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ * فَسَقَى لَهُمَا ثُمَّ
تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ
خَيْرٍ فَقِيرٌ (القصص : 24)
28:23 .இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்)
அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால்
நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர்
புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; ''உங்களிருவரின்
விஷயம் என்ன?'' என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு; ''இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு)
விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும்
எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்'' என்று அவ்விருவரும்
கூறினார்கள்.
28:24 .ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்)
தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி; ''என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான்
தேவையுள்ளவனாக இருக்கின்றேன்'' என்று கூறினார்.
ஷூஐப் (அலை) அவர்களின் இரு மகள்களும்
வெட்கப்பட்டு ஒதுங்கி நின்றதாக இறைவன் இந்த ஆயத்தில் குறிப்பிடுகிறான். இக்காலமாக இருப்பின் நாம் ஒதுங்க வேண்டிய நிலை ஏற்படும்..!
عن عائشة رضي الله عنها قالت: ' كنت أدخل بيتي الذي
فيه رسول الله صلى الله عليه وسلم، وإني واضع ثوبي وأقول: إنما هو زوجي وأبي، فلما
دفن عمر معهم فوالله ما دخلت إلا وأنا مشدودة علي ثيابي حياء من عمر رضي الله عنه
«هذا حديث صحيح على شرط الشيخين ولم يخرجاه» حاكم : 4402
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்)
அவர்கள் (மரணித்தப்பின்) இருக்கும் என் வீட்டில் நான் நுழைந்து, என் ஆடைகளை கழட்டி வைப்பேன். மேலும் (எனக்குள்) இவர்கள் என் கணவரும், தந்தையும்தானே என்று சொல்லிக் கொள்வேன். பின்னர் அவர்களுடன் உமர் (ரழி)
அவர்கள் அடக்கம் செய்யப்பட்டவுடன் அல்லாஹ்வின் மீதானையாக! உமர் (ரழி) அவர்களின்
மீதுள்ள வெட்கத்தால் என் ஆடையை இருக்கக் கட்டிக் கொண்டே உள்ளே நுழைவேன். (ஹாகிம்: 4404)
عن أبي سعيد الخدري، قال: «كان النبي صلى الله عليه
وسلم أشد حياء من العذراء في خدرها، فإذا رأى شيئا يكرهه عرفناه في وجهه» بخاري :
6102
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)
அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாக
இருந்தார்கள். தாம் விரும்பாத ஒன்றை அவர்கள் பார்த்துவிட்டால், அந்த வெறுப்பினை அவர்களின் முகத்திலிருந்தே நாங்கள் அறிந்துவிடுவோம்.
இன்று : இன்றைய பெண்களிடம் வெட்கம் இல்லா நிலை ஏற்பட்டுள்ளது. விளைவு
1. *அந்நிய ஆண்களிடம் குலைந்து பேசுவது:*
يَانِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ
النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي
فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (الأحزاب : 32 )
33:32 .நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள்
இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன்
நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான
நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசங்கள்.
2. *ஆபாச உடைகளை அணிவது:*
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْواجِكَ
وَبَناتِكَ وَنِساءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلابِيبِهِنَّ
ذلِكَ أَدْنى أَنْ يُعْرَفْنَ فَلا يُؤْذَيْنَ وَكانَ اللَّهُ غَفُوراً رَحِيماً
(الأحزاب : 59)
33:59 .நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம்
பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு (போர்த்திக்
கொள்ளுமாறு) கூறுவீராக! அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை
செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
3. *அவசியமின்றி கடை வீதிகளில் சுற்றுவது:*
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ
تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ
وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ
الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا (الأحزاب : 33)
(நபியின் மனைவிகளே!)
நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான
காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும்
கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும்
அசத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசத்தமாக்கி விடவே அல்லாஹ்
நாடுகிறான்.
4 . *அன்று:* *பெண்கள் கல்லூரிக்குச் சென்று படிக்காவிட்டாலும்
மார்க்கத்தில் இறைபக்தி, சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ்தல் மற்றும்
ஒழுக்கமுள்ளவர்களாகவே இருந்தார்கள்.*
இன்று: இன்றைய பெண்கள் கல்லூரிக்குச் சென்று கல்வி கற்றாலும் அவர்களிடம் ஒழுக்கம், பண்பாடு, மார்க்கப் பற்று என்று எதுவும் காணப்படுவதில்லை.
அன்று: திருமணத்திற்கு முன் பெற்றோரின் கட்டுப்பாட்டிலும், அரவணைப்பிலும் தம்மை ஆக்கிக் கொண்டார்கள். ஆதலால் பெற்றோருக்கு தெரியாமல்
எதையும் செய்ய மாட்டார்கள். இதன் பலனாக எந்த அந்நிய ஆண்களுடனும் அவர்களுக்கு
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இருந்ததில்லை. மேலும் பெற்றோர்
முடிவெடுக்கும் இளைஞருக்கு வாக்கப்படுதல். (இதில் சில தவறுகளும் நடந்திருக்கின்றன
உம்: பெண்ணின் சம்மதமின்றி ஒருவனை அவளுக்கு மணமுடித்து வைத்தல்)
5 . இன்று : அவர்களின் பார்வையில் பெற்றோர்கள் ஒன்றும்
அறியாதவர்கள். அவர்களுக்கும் நாமே வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணம். மேலும் பெண்கள்
சுய சுதந்திரம் பெற்றவர்கள். ஆதலால் தம் வாழ்க்கை தொடர்பாக அனைத்து விஷயங்களிலும்
முடிவெடுக்கவும், அதனை நடைமுறைப்படுத்தவும் அவர்களுக்கே முழு
உரிமை உண்டு. ஆதலால்தான் தன் கணவரை தானே தேர்வு செய்வது, பிடிக்காவிடில் குலா வாங்கிக் கொண்டு இன்னொறுவருடன் வாழ்க்கையை அமைத்துக்
கொள்வது மற்றும் பல...
6 . *திருமணத்திற்குப்
பின் கணவனின் கட்டுப்பாட்டில் தம்மை ஆக்கிக் கொண்டார்கள்*
அன்று : கணவருக்கு கட்டுப்படுதல். கணவரின் விருப்பத்திற்கேற்ப தம்மை ஆக்கிக்
கொள்ளுதல்.
عن أسماء بنت أبي بكر رضي الله عنهما، قالت: تزوجني
الزبير، وما له في الأرض من مال ولا مملوك، ولا شيء غير ناضح وغير فرسه، فكنت أعلف
فرسه وأستقي الماء، وأخرز غربه وأعجن، ولم أكن أحسن أخبز، وكان يخبز جارات لي من
الأنصار، وكن نسوة صدق، وكنت أنقل النوى من أرض الزبير التي أقطعه رسول الله صلى
الله عليه وسلم على رأسي، وهي مني على ثلثي فرسخ، فجئت يوما والنوى على رأسي،
فلقيت رسول الله صلى الله عليه وسلم ومعه نفر من الأنصار، فدعاني ثم قال: «إخ إخ»
ليحملني خلفه، فاستحييت أن أسير مع الرجال، وذكرت الزبير وغيرته وكان أغير الناس،
فعرف رسول الله صلى الله عليه وسلم أني قد استحييت فمضى، فجئت الزبير فقلت: لقيني
رسول الله صلى الله عليه وسلم، وعلى رأسي النوى، ومعه نفر من أصحابه، فأناخ لأركب،
فاستحييت منه وعرفت غيرتك، فقال: والله لحملك النوى كان أشد علي من ركوبك معه،
قالت: حتى أرسل إلي أبو بكر بعد ذلك بخادم تكفيني سياسة الفرس، فكأنما أعتقني '
بخاري: 5224
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார் என்னை ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) (மக்காவிலிருக்கும் போதே) மணந்துகொண்டார்கள்.
இந்த பூமியில் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு
எச்சொத்து பத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் அவருக்கு இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் சுமலையைத்தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என்
அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள்
உண்மையாளர்களாக ஆகியிருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய்
மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து - நானே பேரிச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை
மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில்
இருந்தது.
(ஒரு நாள்) நான் என்
தலை மீது பேரிச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான், இறைத்தூதர்(ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான அன்சாரிகளில் சிலர்
அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை
அழைத்தார்கள். எனக்குத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக 'இஃக், இஃக்' என்ற சொல்லித் தம்
ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன்
செல்ல வெட்கப்பட்டேன். மேலும், நான் (என் கணவர்) ஸுபைர்(ரலி) அவர்களையும், அவரின் ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக
இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்துகொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
சென்றார்கள். நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து '(வழியில்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தலையில் பேரிச்சங்கொட்டைகளிருக்க என்னைச்
சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். நான்
ஏறிக்கொள்வதற்காக(த் தம் ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு
வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினேன். அதற்கு என் கணவர், 'அல்லாஹ்வின்
மீதாணையாக! நபி(ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிட பேரிச்சங்கொட்டைகளை நீ
சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது'' என்று கூறினார். (இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நானே
மேற்கொண்ட வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர்(ரலி) எனக்கு ஓர் அடிமையை
(உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை
ஏற்றார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது.
7. *இன்று கணவருக்கு நான் ஏன் கட்டுப்பட வேண்டும். இதுவும்
ஒருவகையான பெண் அடிமைத்தனம் தான். ஏனெனில் என்னை விட எவ்வகையில் அவர் சிறந்தவர்? அவரும் பொருளீட்டுகிறார். நானும் பொருளீட்டுகிறேன். ஆதலால் வீட்டு வேலைகள், குழந்தைகளை பராமரித்தல் உள்ளிட்ட வேலைகளை இருவரும் சமஅளவில் பகிர்ந்து கொள்ள
வேண்டும் எனும் மனநிலை. உடை முதலிய ஆண்களின் தனிப்பட்ட விஷயங்களில் நாங்கள்
தலையிடாதிருப்பது போல் எங்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் அவர்கள்; தலையிடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
عن أبي هريرة رضي الله عنه، عن النبي صلى الله عليه
وسلم قال: «خير نساء ركبن الإبل صالح نساء قريش، أحناه على ولد في صغره، وأرعاه
على زوج في ذات يده» بخاري : 5082
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக்குல பெண்களாவர். அவர்கள் குழந்தைகளின் மீது அதிகப் பாசம்
கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக்
காப்பவர்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
عن أَنَسٌ، قَالَ: جَاءَتْ بِي أُمِّي أُمُّ
أَنَسٍ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ أَزَّرَتْنِي
بِنِصْفِ خِمَارِهَا، وَرَدَّتْنِي بِنِصْفِهِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ،
هَذَا أُنَيْسٌ ابْنِي، أَتَيْتُكَ بِهِ يَخْدُمُكَ فَادْعُ اللهَ لَهُ، فَقَالَ:
«اللهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ» قَالَ أَنَسٌ: فَوَاللهِ إِنَّ مَالِي
لَكَثِيرٌ، وَإِنَّ وَلَدِي وَوَلَدَ وَلَدِي لَيَتَعَادُّونَ عَلَى نَحْوِ
الْمِائَةِ، الْيَوْمَ . مسلم : 2481
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயார்
என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது தமது
முக்காட்டுத் துணியில் ஒரு பகுதியை எனக்குக் கீழாடையாகவும் மற்றொரு பகுதியை எனக்கு
மேல் துண்டாகவும் போர்த்திவிட்டிருந்தார்கள். என் தாயார், "அல்லாஹ்வின் தூதரே! இவர் என் (செல்ல) மகன் அனஸ். தங்களுக்குச் சேவகராகப்
பணியாற்றுவதற்காக இவரை உங்களிடம் அழைத்து வந்துள்ளேன். இவருக்காகப்
பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக!" என்று
பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தில்
என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளுடைய
பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் நூறை எட்டியிருக்கிறது.
8 . அன்று : கணவரின் குடும்பத்தினர்களுக்கு உதவி வந்தார்கள்.
(உ.ம்) கணவரின் தாய், தந்தை மற்றும் அவர்களின் உடன் பிறந்தவர்களைக்
கவனித்துக் கொள்ளுதல்.
عن جابر بن عبد الله رضي الله عنهما، قال: كنت مع
النبي صلى الله عليه وسلم في غزاة، فأبطأ بي جملي وأعيا، فأتى علي النبي صلى الله
عليه وسلم فقال «جابر»: فقلت: نعم، قال: «ما شأنك؟» قلت: أبطأ علي جملي وأعيا،
فتخلفت، فنزل يحجنه بمحجنه ثم قال: «اركب»، فركبت، فلقد رأيته أكفه عن رسول الله
صلى الله عليه وسلم، قال: «تزوجت» قلت: نعم، قال: «بكرا أم ثيبا» قلت: بل ثيبا،
قال: «أفلا جارية تلاعبها وتلاعبك» قلت: إن لي أخوات، فأحببت أن أتزوج امرأة
تجمعهن، وتمشطهن، وتقوم عليهن، بخاري : 2097
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்:
நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டு)
இருந்தேன்; அப்போது என்னுடைய ஒட்டகம் களைத்து பலமிழந்து
போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து. 'ஜாபிரா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'என்ன விஷயம் (ஏன்
பின்தங்கிவிட்டீர்)?' என்று கேட்டார்கள். 'என் ஒட்டகம் களைந்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!' என்றேன். நபி(ஸல்)
அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் என்னுடைய ஒட்டகத்தை; தட்டி (எழுப்பி)னார்கள். பிறகு 'ஏறுவீராக!' என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி(ஸல்) அவர்களை விட என்னுடைய
ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'நீர் மணமுடித்து விட்டீரா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'கன்னியையா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான்!' என்றேன். நபி(ஸல்)
அவர்கள், 'கண்ணிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் விளையாடலாமே!' என்று கூறினார்கள்.
நான், 'எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்!
அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்!' என்றேன். …
இன்று : என்னால் உங்களுக்கும், என் குழந்தைகளுக்கு மட்டும்தான் பணிவிடை செய்ய
முடியும். மற்றவர்களுக்கெல்லாம் செய்ய முடியாது. நீங்கள்
வேண்டுமானால் அவர்களுக்கு ஒரு வேலைக்காரியை நியமித்துக் கொள்ளுங்கள் என சொல்லும்
அவல நிலை.
9 . அன்று : உறவுகளோடு
இணைந்த வாழ்வு. ஆதலால் குழந்தை வளர்ப்பு, அவர்களுக்கு
ஏதேனும் நோய் ஏற்பட்டால் வீட்டிலுள்ள பாட்டிகளால் மருத்துவம் செய்தல் போன்ற
பலன்களை அவர்களுக்கு கிடைத்தன. மேலும் குழந்தைகளுக்கும் தங்களின் பாரம்பரியத்தை
அறிந்து கொள்ளவும், அவர்களின் மீது அன்பு செலுத்தவும் வாய்ப்புகள்
கிடைத்தன. மேலும் இஸ்லாமிய நாகரீகங்களையும், கலாச்சாரங்களையும்
குழந்தைகள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தன.
முதியோர் இல்லம் என்றால் என்னவென்றே அறியாத
வகையில் வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து, அவர்களை அரவணைக்கும் நடைமுறை இருந்தது.
இன்று : தனிக்குடித்தனம். தாய், தந்தையின் பெற்றோர்களுக்கு பேரப்பிள்ளைகளைப்
பற்றி தெரியாது. அவர்களுக்கு தம் பாரம்பரியம் தெரியாது. தன் முன்னோர்கள் முதியோர்
இல்லங்களில் தள்ளப்பட்டுள்ளனர். மாற்று மதத்தவர்களால் நடத்தப்படும்
பள்ளிக்கூடங்களில் பயிலும் முஸ்லிம் பிஞ்சுகளுக்கு இஸ்லாமிய நாகரீகமும், பண்பாடும் தெரியாது. இடது கையில் உண்ணுவது முதலிய அனைத்தும் மாற்று
மதக்கலாச்சாரம். சமீபத்தில் முதியோர் இல்லங்களுக்கு செல்லும்
வாய்ப்பு கிடைத்தது. அப்போது அங்கிருந்தவர்கள் படித்த பட்டதாரி ஆசியர்கள்.
அவர்களின் ஏக்கம் தங்களின் பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட வேண்டும் என்பதாகவே
இருந்தது.
10 . அன்றும், இன்றும்: முஸ்லிம் பெண்கள் தங்களில் இல்லங்களில் குர்ஆன் ஓதுதல், தொழுதல் போன்ற பழக்கங்களை கொண்டிருந்தார்கள். தற்போது அவ்வணக்க வழிபாடுகளை
சினிமாக்களும், நாடகங்களும் ஆக்கிரமித்து விட்டன். பெரும்பாலான
முஸ்லிம்களின் இல்லங்களில் பெண்கள் குர்ஆன் இல்லாமல் இருந்து விடுவார்கள். எனினும்
கேபிள் கனெக்க்ஷன் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. முஸ்லிம் பெண்களையும்
வருங்கால இளம் தலைமுறையினரையும்
இஸ்லாத்திலிருந்து
திசை திருப்ப வேண்டும் என்ற தங்களின் திட்டங்களில் எதிரிகள் வெற்றி
பெற்றிருக்கிறார்கள்.
ஸ்மார்ட் போன் :
உலகிலுள்ள அனைத்து ஆபாசங்கள் மற்றும்
வழிகேடுகளின் ஊற்றுக்கண் நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்தான்.
இதன் தீமைகள்
ü அந்நியர்களுடன் தொடர்பு கொள்ள வழிவகுக்கின்றது.
ü அந்நியர்களுடன் எல்லையில்லா உரையாடல்களுக்கு
துணை புரிகின்றது.
ü பெண்கள் தமது போட்டோ முதலிய அந்தரங்கங்களை
பகிர்ந்து கொள்ள முடிகின்றது. பல இளம் பெண்கள் ஆண்களின் தவறான வார்த்தைகளுக்கு
மயங்கி தங்களின் அந்தரங்க போட்டோக்களை அவர்களுடன் பகிர்ந்து, தங்களின் வாழ்வை இழந்துள்ளார்கள்.
§ இண்டர்நெட் :
ü ஆபாசங்களை அள்ளிக் கொட்டுகின்றது.
ü பல நாட்டவர்கள், மதத்தவர்கள், கொள்கைகளைக் கொண்டவர்களின் இஸ்லாத்திற்கு முரணான கலாச்சாரத்தை கண்முன்னே
காட்டுகின்றது.
ü பெற்றோர் மற்றும் கணவருக்கு தெரியாமல் பலருடன்
தொடர்பு கொள்ள துணை புரிகின்றது.
ü உறவுகளுடனான உறவாடலில் நாட்டமில்லை.
ü எதிரே உட்கார்ந்திருப்போருடன் உரையாட
விருப்பமில்லை.
ü தொடர் தவறுகளுக்கு வழிவகுக்கின்றது.
ü இளைஞர்களின் ஆற்றலை வீணடிக்கின்றது.
விளைவுகள் :
ü பெற்றோர் சம்மதம் இல்லாத ஹராமான திருமணம்.
ü மார்க்கத்தை விட மனோ இச்சைக்கே முதலிடம் எனும்
வகையில் மாற்று மதத்தவர்களுடன் திருமணம்.
ü காதல் ' கள்ளக்காதல்
ü கணவருடன் சுமூகமான உறவை இழப்பது.
ü அநாதையாக விடப்படும் குழந்தைகள்
ü முதியோர் இல்லங்கள்
ü மகள் மற்றும் மனைவியின் தவறால் பாதிக்கப்படும்
பெற்றோர்கள் மற்றும் கணவன்மார்கள்.
ü தற்கொலைகள்
ü பட்டியல் நீளுகின்றது.
முடிவுரை : நவீன யுகத்தில்
பெண்கள் தங்களையும் தங்களை சார்ந்துள்ளோர்களையும் பாதுகாக்க வேண்டிய நிலையில்
உள்ளனர். இந்நிலையில் பெண் பிள்ளைகளிடம் நவீன யுகத்தின் எதார்த்தங்களை புரிய வைக்க
வேண்டும். மொபைல், நெட் போன்றவற்றிலிருந்து அவர்களை விலக்கியே
வைக்க வேண்டும். பெண்கள் மட்டுமே பயிலும் கல்லூரிகளில் படிக்க வைக்க வேண்டும்.
மறுமையைப் பற்றி அவர்களிடம் அடிக்கடி பேச வேண்டும். அவர்களின் ஈருல நல்வாழ்விற்காக
துஆச் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.