புதன், 31 ஜனவரி, 2018

குடியாட்சியும் முடியாட்சியும்

குடியாட்சியும் முடியாட்சியும்.

قول الله عز و جل : إن الله يأمركم أن تؤدوا الامانات الي أهلها.....
قول النبي صلي الله عليه وسلم : المسلم من سلم المسلمون من لسانه ويده... (رواه البخاري )


புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனக்கே! அவனுடைய சலாத்தும் சலாமும் இறுதித் தூதர்  முஹம்மத் நபி ஸல் அவர்கள் மீதும் அவர்களின் பரிசுத்த குடும்பத்தார்கள் மற்றும் சத்திய ஸஹாபாக்கள் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்.

குடியாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு  மக்களுக்காக நிறுவப்படும் ஆட்சி முறையாகும். எனவே  மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.

முடியாட்சியில் தனக்கு பின் தனது வாரிசு என்று மக்களின் மீது ஆட்சியாளர்களை திணிக்கும் நடைமுறைக்கு  மாற்றாகத் தான் குடியாட்சி முறை ஒரு சில நாடுகள் தவிர மற்ற எல்லா நாடுகளிலும்   பரவியிருக்கிறது.
ஆனால் குடியரசுகளின் அடக்கு முறைகளையும், அநீதத்தையும் பார்க்கும் போது இதற்கு அந்த மன்னராட்சி முறையே பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.

மக்களை ஆளும் அரசர் நற்குணமுள்ளவராக இருந்து விட்டால் அந்த மக்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக  அமைந்து விடும்.
வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கீழ் மக்கள் அப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள் என்பதை காணலாம்.

ஹஜ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தனது ஆட்சியாளர்களை அழைத்து உத்தரவு பிறப்பித்தார்கள் அனைத்து விதமான வரிகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் நாடு திவாலாகிப் போகுமென்று புலம்பினார்கள். ஆனால் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் உறுதி படக் கூறினார்கள் வரிகளை ரத்து செய்வதால் அப்படி ஒரு நிலை வந்தாலும் நாம் எதிர் கொள்வோம் மக்களின் மீது அநீதமாக வரி வசூலிக்க எனது ஆட்சியில் இடமில்லை என்று கூறி விட்டு ஜகாத் பொருட்களை முறையாக வசூலித்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்கள் இரண்டே ஆண்டுகளில்  கவர்னர்களிடமிருந்து கடிதம் வருகிறது ஜகாத் வாங்கத் தகுதியானவர்கள் யாருமில்லை என்று உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள் அப்படியானால் உங்கள் ஆட்சிப் பகுதியில் உள்ள அடிமைகளை விடுதலை செய்ய இந்த ஜகாத் பொருட்களை பயன்படுத்துங்கள் என்று அதற்குப் பிறகும் ஜகாதுடைய பொருட்கள் மீதமிருந்தது. எஞ்சிய பொருட்களை மதீனாவிற்கு ஆட்சியாளர்கள் அனுப்பி வைத்தார்கள் என்று நாம் பார்க்கிறோம்.

(நூல்: தாரீகுல் குலஃபா)

மக்களுக்கு பணி செய்வதையே  தம் வாழ்வின் நோக்கமாக கொண்ட எண்ணற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருந்துள்ளார்கள். ஏனெனில் இஸ்லாம் ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு கடமைகளை விதித்துள்ளது.

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ ۚ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ ۗ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 4:58)

ففي صحيح مسلم مرفوعا: اللهم من ولي من أمر أمتي شيئا فشق عليهم فاشقق عليه، ومن ولي أمر أمتي فرفق بهم فارفق به.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் துஆ செய்தார்கள் " யா அல்லாஹ்! யார் என் சமூக மக்களை ஆட்சி செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு சிரமம் தரும்  விதமாக நடந்து கொண்டாரோ அவர்களுக்கு நீ சிரமத்தை ஏற்படுத்துவாயாக! யார் என் சமூக மக்களை ஆட்சி செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டு அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டாரோ அவர்களிடம் நீயும் மென்மையாக நடந்து கொள்வாயாக! (நூல்: முஸ்லிம் )

மேலும் புகாரீ ஷரீஃபின் ரிவாயத்தில் வருகிறது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரலி அவர்களை யமன் தேசத்திற்கு இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு அனுப்பிய போது...
"நீங்கள் மக்களுக்களிடம் எளிதாக நடந்து கொள்ளுங்கள்! கடினமாக நடக்க வேண்டாம்! சுபச் செய்தியை கூறுவீராக!
அவர்கள் வெறுக்கும் படியாக பேச வேண்டாம்! மேலும் மக்களிடம் ஜகாத் வசூலிக்கும் போது அவர்கள் விரும்பும் உயர்ந்த பொருளை வாங்க வேண்டாம்! (மாறாக நடுத்தரமான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்) மேலும் அநீதி இழைக்கப்பட்ட மனிதனின் சாபத்தை பயந்து கொள்ளுங்கள் ஏனெனில் அவருக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் எந்த திரையும் இல்லை (துஆ ஏற்கப்படும் விஷயத்தில்) என்று கூறினார்கள்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இந்த வார்த்தைகளை பயந்து தான் இஸ்லாமிய ஆட்சியாளர்களில் பெரும்பான்மையானோர் நடந்து கொண்டார்கள்.
ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள் தன் ஆட்சியில் கவர்னர்களுக்கு கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்தினார்கள்
'நீங்கள் உயர் தரமான உணவுகளை உண்ணக்கூடாது, உயர்தரமான ஆடைகளை உடுத்தக் கூடாது, உயர்ந்த வாகனங்களில் பிரயாணிக்கக் கூடாது,
உங்களின் வாயில்கள் எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்ற திறந்தே இருக்க வேண்டும்' என்று கட்டளையிட்டார்கள்.

இந்தியாவை ஆட்சி செய்த முஹம்மத் இப்னு காசிம் ரஹ் அவர்கள் மக்களிடம் பரிவோடு நடந்து நேர்மையான முறையில் ஆட்சி செய்தார்கள். முந்தைய ஆட்சியாளர்களின் கொடுமையான ஆட்சியில் இருந்து இப்போது தான் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்று மக்கள் அவரை பாராட்டினார்கள்.
அவர் இந்தியாவிலிருந்து கிளம்பிய போது மக்கள் அவரை தடுத்து நீங்கள் தான் எங்களை ஆட்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது அவர்கள் கூறினார்கள் நான் மட்டுமல்ல எங்களது எல்லா ஆட்சியாளர்களும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் ஏனெனில் எங்களுக்கு ஆட்சி செய்வது நோக்கமல்ல மக்களை நல்வழிப் படுத்துவது தான் நோக்கம் என்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய வரலாற்று நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம்.
(நூல் : இஸ்லாமிய கலைக் களஞ்சியம்)

இன்றும் கூட சில  இஸ்லாமிய நாடுகளில்  வரிகள் கிடையாது  புர்னை சுல்தான் தன் நாட்டு மக்களுக்கு வரிகள் இல்லாமல்  மக்களுக்கு தேவையான உணவு , தண்ணீர், இருப்பிடம், மின்சாரம் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி நல்லாட்சி செய்து வருகிறார்.

ஏன் இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னர்கள் எல்லோரும் மக்களிடம் நியாயமான முறையில் நடந்து கொண்டார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் நிறைந்துள்ளது. இவர்களின் ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் மிகவும் சுதந்திரமாக நடத்தப் பட்டார்கள்.
ஆலம்கீர் அவுரங்ஜீப் ரஹ் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வந்தது இன்று சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோ‌யில் அவர்களின் காலத்தில் கட்டப்பட்டது தான்.
இவர்கள் சிறுபான்மை மக்களை அனுசரிக்காமல் இருந்திருந்தால் இன்று அவர்கள் சிறுபான்மையினராகவும், நாம் பெரும்பான்மை மக்களாகவும் இருந்திருப்போம்.

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் யாரும் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளில் வாழும் மக்களை இஸ்லாத்தை ஏற்க நிர்பந்தித்ததில்லை!
ஏனெனில் இஸ்லாம் அதை விரும்பவில்லை மனமுவந்து இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்பதால் தான் நேர்வழிகாட்டும் உயர்பணிகளில் மட்டுமே ஈடுபட்டார்கள்.

இந்தியாவின் முதல் பிரதமரான நேரு தனது "DISCOVERY OF INDIA" என்ற நூலில் 'இந்திய மக்கள் தங்களுக்கு நியாயம் வேண்டும் நீதி வேண்டும் என்று மற்ற மதங்களை ஏற்றுக் கொண்டு ஏமாற்றம் அடைந்த போது இஸ்லாம் தான் அந்த மக்களுக்கு சமத்துவத்தை நீதியை நியாயத்தை கொடுத்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நம் நாட்டில்  குடியாட்சி என்ற பெயரில் மக்களை பலவிதமான வரிகள் விதித்து நசுக்கிடும் ஆட்சியாளர்களை நாம் பார்த்து வருகிறோம்.
ஒடுக்கப் பட்ட சிறுபான்மை மக்களின் நிலை மிகவும் பரிதாப நிலையில் இருந்து வருகிறது.  அவர்களின் உணவு முதல் வணக்க வழிபாடுகள் வரை அனைத்திலும் ஆட்சியாளர்களின் தலையீடு இருந்து வருகிறது.

இதே நிலை தொடர்ந்தால் இந்த மண்ணில் சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும்.

விவசாயிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடியும் உரிமையை பெறமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள.
ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி, பணமதிப்பிழப்பால் மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் நிலையில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வை மாநில அரசும் மத்திய அரசும் அறிவித்து அந்த சுமைகளை பஸ் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று மக்களின் மீது திணித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த சூழலில் குடியரசு தினக் கொண்டாட்டம் வேறு.

திமஷ்கில் இஸ்லாமிய ஆட்சியாளர் 'தாஹிர்' என்பவர் பொருளாதார நெருக்கடியை கருதி வரி விதிக்க முற்பட்ட போது அப்போதிருந்த உலமாக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உங்களுடைய செலவுகளை குறைத்து பொருளாதார நெருக்கடியை சமாளியுங்கள் என்று  கூறினார்கள் அவ்வாறே நெருக்கடி சீர்செய்யப்பட்டதாக நாம் வரலாற்றில் பார்க்கிறோம். (நூல் : தாரீகே திமஷ்க்)

ஆனால் இப்போதைய ஆட்சியாளர்கள் அதற்கெல்லாம் இசைவதாகத் தெரியவில்லை அவர்களுடைய ஆடைகள் பல இலட்சங்களிலும், அவர்கள் வாகனிக்கும் சொகுசு விமானங்கள் பல கோடியிலும் இருக்கிறது. வெளிநாட்டு பயணங்களில் பல கோடிகள் செலவாகிறது இவற்றை குறைத்தாலே இந்த அநியாய வரி விதிப்புகளை தவிர்க்கலாம்.

இந்தியாவில் ஒரு கட்சித் தலைவரின் மகன் செய்த ஊழலை அம்பலப்படுத்திய நீதிபதி மர்மமான முறையில் இறந்து போகிறார். ஆனால் ஹஜ்ரத் உமர் ரலி அவர்களின் ஆட்சிக் காலத்தில் தனது மகன் மது அருந்தியதற்காக தண்டனை கொடுக்க முற்பட்டார்கள் அவரை மன்னித்து விடலாமே என்று உடனிருந்தவர்கள் கூற கலீஃபாவின் மகன் தவறு செய்தால் அவருக்கு இருமடங்கு தண்டனை தரப்பட வேண்டும் என்று அவ்வாறே தண்டனையை நிறைவேற்றினார்கள் அதற்கு பிறகு அவர் இறந்து போனார்.
தன் மகனாக இருந்தாலும் நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதை ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள்.

ففي مجموع الفتاوى لشيخ الإسلام ابن تيمية ما يلي:

وقد روي عن عمر بن الخطاب أن ابنه عبد الرحمن لما شرب الخمر بمصر وذهب أخوه إلى أمير مصر عمرو بن العاص ليجلده الحد جلده الحد سرا، وكان الناس يجلدون علانية فبعث عمر بن الخطاب إلى عمرو ينكر عليه ذلك ولم يعتد عمر بذلك الجلد حتى أرسل إلى ابنه فأقدمه المدينة فجلده الحد علانية ولم ير الوجوب سقط بالحد الأول وعاش ابنه بعد ذلك مدة ثم مرض ومات ولم يمت من ذلك الجلد ولا ضربه بعد الموت كما يزعمه الكذابون. انتهى.

அந்த ஆட்சிக்கும், நேர்மைக்கும் எதிர்மறையான போக்கை இப்போதைய ஆட்சியாளர்கள் கையிலெடுக்க நம்முடைய பலஹீனமான நம்பிக்கையும் செயல்பாடும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய கால சூழலில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

ஹதீஸ் ஷரீஃபில் வருகிறது

هذا الحديث أخرجه الطبراني في "المعجم الأوسط" (8962) ومن طريقه أبو نعيم في "حلية الأولياء" (2/ 388) عن الْمِقْدَام بْن دَاوُدَ ، قَالَ: ثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ الرَّقِّيُّ ، قَالَ: ثَنَا وَهْبُ بْنُ رَاشِدٍ ، قَالَ : ثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ، عَنْ خَلَاسِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِنَّ اللهِ عَزَّ وَجَلَّ يَقُولُ: أَنَا اللهُ لَا إِلَهَ إِلَّا أَنَا مَالِكُ الْمُلْكِ وَمَالِكُ الْمُلُوكِ قُلُوبُ الْمُلُوكِ بِيَدِي ، وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّأْفَةِ وَالرَّحْمَةِ ، وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالسَّخَطِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ ، إِذًا فَلَا تَشْغِلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ وَلَكِنِ اشْغَلُوا أَنْفُسَكُمْ بِالذِّكْرِ وَالتَّفَرُّغِ إِلَى أَكْفِكُمْ مُلُوكَكَمْ ) .

அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹூ சொல்கிறான்" நான் தான் அல்லாஹ் என்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவருமில்லை ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளன் அரசாளுபவர்களின் உள்ளங்கள் என் கைவசமே இருக்கிறது அடியார்கள் எனக்கு வழிப்பட்டு நடந்தால் அவர்களுக்கு ஆட்சியாளர்களின் உள்ளங்களை அவர்களின் மீது இரக்கம் பரிவு கொண்டதாக நான் மாற்றி விடுவேன்! அவர்கள் எனக்கு மாறு செய்தால் ஆட்சியாளர்களின் உள்ளங்களை அவர்களின் மீது கடுமையானதாக, பழிவாங்கும் விதமாக மாற்றி விடுவேன்!  அதனால் அவர்களை மிகவும் வேதனை செய்வார்கள்.
எனவே ஆட்சியாளர்களுக்கு எதிராக துஆவில் ஈடுபட வேண்டாம் மாறாக  உங்களை என் நினைவிலும், என்னை நெருங்குவதிலும் ஈடுபடுத்துங்கள்  உங்களுடைய ஆட்சியாளர்களை உங்களுக்கு நான் போதுமாக்குவேன்.

மேலும் குர்ஆனில் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا ۚ وَمَنْ كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; "அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;" இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.  (அல்குர்ஆன்- 24:55)

அல்லாஹ்வின் வாக்குறுதி மிக உண்மையானது உறுதியானது எனவே  அவன் வாக்குறுதியின் மீது  நாம் நம்பிக்கை வைத்து நம் செயல்பாடுகளை சீர்திருத்திக் கொண்டு செயல்படுவோம்
ஆட்சியாளர்களின் தீங்கிழிருந்து நம்மை பாதுகாக்க அல்லாஹ்வின் உதவி நமக்கு போதுமானதாக இருக்கும்.

وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَنْ قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

மேலும், "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.
(அல்குர்ஆன் 3:147)