வெள்ளி, 26 ஜனவரி, 2018

ஆட்சி, அதிகாரத்தை நமதாக்குவோம்

بسم الله الرحمن الرحيم

ஆட்சி, அதிகாரத்தை நமதாக்குவோம்:
****************************
முன்னுரை:
இந்தியா என்பது ஓரு ஜனநாயக நாடு. இந்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு இந்தியனுக்கும் அவன் சார்ந்துள்ள மதத்தைப் பின்பற்றுவதற்கும் அதனை மற்றவர்களுக்கு பரப்புதற்கும் முழு உரிமை உண்டு. இந்த உரிமையை அரசியல் அமைப்புச் சட்டம் வழங் கியுள்ளது. ஆனால் இவ்வுரிமை இந்நாட்டில் வாழுகின்ற மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்கின்றதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதுபோல் இந்தியாவில் வாழுகின்ற பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்கின்ற சலுகைகள் சிறுபான்மையினருக்கு கிடைக்கின்றதா? அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு கிடைக்கின்றதா? என்றால் சச்சாரின் அறிக்கை இல்லை என்பதை பட்டவர்த்தமாக தெரிவிப்பதுடன் மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் நம்முடைய உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதற்கு காரணம் முஸ்லிம்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இல்லாததே! இதனை மாற்றியமைத்தால் மட்டுமே நமது மார்க்கத்தையும், உரிமைகளையும், எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல நிலையையும் விட்டுச் செல்ல முடியும்.

(ஆட்சி என்பது மக்களால் தேர்வு செய்யப்படும் ஆட்சியாளர்கள், அதிகாரம் என்பது கல்வியால் அதிகாரிகளாக பணியாற்றுவது)

ஆட்சி பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.
قُلِ اللَّهُمَّ مالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشاءُ وَتُعِزُّ مَنْ تَشاءُ وَتُذِلُّ مَنْ تَشاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيرٌ تُولِجُ اللَّيْلَ فِي النَّهارِ وَتُولِجُ النَّهارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَنْ تَشاءُ بِغَيْرِ حِسابٍ (آل عمران : 26 -27)

நபியே! நீங்கள் கூறுவீராக எங்கள் இறைவனே! நீ நாடியவருக்கு ஆட்சி அதிகாரத்தை தருகிறாய், நாடியவரிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறாய்....

1. ஆட்சி, அதிகாரத்தின் முக்கியத்துவம் பற்றி!
فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكاً عَظِيماً (النساء:54).
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوا أَنَّى يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِنَ الْمَالِ قَالَ إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ ( البقرة :247)
அவர்களுடைய நபி அவர்களிடம் நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்என்று கூறினார்.

அதிகாரம் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

وَقالَ الْمَلِكُ ائْتُونِي بِهِ أَسْتَخْلِصْهُ لِنَفْسِي فَلَمَّا كَلَّمَهُ قالَ إِنَّكَ الْيَوْمَ لَدَيْنا مَكِينٌ أَمِينٌ *  قالَ اجْعَلْنِي عَلى خَزائِنِ الْأَرْضِ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ (يوسف : 54 - 55)

யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
(தகுதியற்றவர்களிடம் அதிகாரம் இருக்கையில் அதனை கைப்பற்ற முயற்சிக்கலாம்)

அநியாயக்கார அரசன், பாதிக்கப்படும் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

إِنَّ فِرْعَوْنَ عَلا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَها شِيَعاً يَسْتَضْعِفُ طائِفَةً مِنْهُمْ يُذَبِّحُ أَبْناءَهُمْ وَيَسْتَحْيِي نِساءَهُمْ إِنَّهُ كانَ مِنَ الْمُفْسِدِينَ (4) وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوارِثِينَ (5) وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهامانَ وَجُنُودَهُما مِنْهُمْ مَا كانُوا يَحْذَرُونَ (القصص : 4 - 5)

நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டுஅந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.
நபி (ஸல) அவர்கள் மக்காவில் பத்தாண்டுகள் அழைப்புப் பணியை செய்து விட்டு, மதீனாவில் ஆட்சி அமைத்தார்கள். அதன் பின்னர்தான் இஸ்லாமிய வலர்ச்சி வேகம் பிடித்தது.

அரசியல் என்றால் என்ன?
முதலில் அரசியல்என்றால் என்ன என ஆய்வோம். ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்தான் அரசு இயல் (Constitution) எனப்படுகிறது.
அரசின் அமைப்பு குடிமக்களின் உரிமை அரசின் கடமை அதிகாரம் முதலியவற்றை வரையறுக்கும் அடிப்படை சட்டமே (Politics) அரசியல் சாசனம், அல்லது அரசியல் சட்டம் எனப்படுகிறது.

ஜனநாயக நாட்டில் நாம் முஸ்லிம்களின் நிலை?
1. உரிமைகளை இழந்திருக்கின்றோம்.
2. முஸ்லிம்கள் தங்களின் ரப்பை வணங்க பள்ளிவாசலை விரும்பிய கட்டுவதற்கான உரிமையை இழந்துள்ளோம்.
3. பாபரி பள்ளி முதற்கொண்டு பல பள்ளிவாசல்களை இழந்துள்ளோம்.
4. பாபரி பள்ளியை இடித்த குற்றவாளிகள் அரியணையில் உள்ளனர்.
5. குஜராத் முதலிய மாநிலத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களளுக்கு கிடைக்க வேண்டிய நீதியை இழந்து நிற்கின்றோம்.
6. ஜம்மு கஷ்மீரில் நித்தம் நித்தம் மரணித்துக் கொண்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களின் உயிரிழப்பை தடுத்து நிறுத்த முடிய வில்லை.
7. தமிழகம் முதலிய மாநிலங்களில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்போர்களை மீட்டெடுக்க முடியாத நிலை.
8. கல்வி, வேலை வாய்ப்பு முதலிய விஷயங்களில் மிகவும் பின் தங்கிய நிலையில், சச்சாரின் அறிக்கைக்குப் பின்னும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
9. இன்னும் இன்னும்……………….


உள்ள உரிமைகளும் ஒன்றன்பின் ஒன்றாக பறிக்கப்படும் அவலம்
1. முஸ்லிம் தனியார் சட்ட உரிமை
2. முத்தலாக்
3. பலதார மணம்
4. இன்னும் இன்னும்……
5. முஸ்லிம்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு தங்களுக்குள்ளேயே பேசி தீர்க்க ஏற்படுத்தப்பட்ட ஷரீஅத் கோர்டுகளுக்கு தடை

இனி வரும் காலங்களில்
1. இராமர் கோவில் கட்ட முயற்சி
2. பொது சிவில் சட்டம் அமல்படுத்த முயற்சி
3. மதரஸாக்களுக்கு கட்டுப்பாடுகள்
4. பலதார மணத்தை தடுத்து நிறுத்த முயற்சி
5. அரசியலில் முஸ்லிம்கள் மேலெழக்கூடாது என்பதற்காக முஸ்லிம்கள் பெருவாரியாக வாழக்கூடியாக தொகுதிகளில் இந்துக்களின் பிரதிநதிகள் வெற்றி பெரும் வகையில் தொகுதி மறு சீரமைப்புகள் செய்யப்பட்டுள்ளது.
6. முஸ்லிம்களைப் பற்றி இந்துக்களின் உள்ளங்களின் வெறுப்பேற்ற தொடர் முயற்சி
7. அதிகாரிகளாக உள்ளவர்கள் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தட்டிப்பரிக்கின்றார்கள். உதாரணமாக! முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஒதுக்கி வழங்குவதில் பாகுபாடு காட்டுவது.
8. இன்னும் இன்னும்…………

நாம் செய்த தவறுகள்
1. அரசியலுக்கும் நமக்கும் தொடர்பு இல்லை என்று நம் சமுதாய தலைவர்களும், உலமாக்களும் மற்றும் பொது மக்களும் ஒதுங்கி கொண்டார்கள்.

2. முஸ்லிம்களின் அரசியல் பாதுகாவலர்களாக மாநிலத்தில் திமுக வையும், மத்தியில் காங்கிரசையும் ஆக்கிக் கொண்டோம். இதன் நீட்சியாகவே மீலாது விழாக்களில் திமுகவினர் அழைக்கப்பட்டார்கள்.

3. உயர் கல்வியில் முஸ்லிம்கள் தடம் பதிக்கவும், அரசுத்துறைகளில் வேலை வாய்ப்பினை பெறவும் தவறி விட்டோம். நம்மில் பெரும்பாலோர் படித்து விட்டு வளைகுடா நாடுகளை நோக்கிச் சென்று விட்டோம். அல்லது மாத சம்பளத்திற்கு தனியார்களிடம் பணிக்கு அமர்ந்தோம்.

4. மாற்று மதத்திலுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தவும், அவர்களின் உரிமைகளுக்காக போராடவும் தவறினோம். ஆனால் இன்று நமக்காக போராட அவர்களை அழைக்கின்றோம். இது எவ்வகையில் நியாயம்?

இனி நாம் என்ன செய்ய வேண்டும்?

1. ஈமானையும், நல்லமல்களையும் வலிமைப்படுத்த வேண்டும்.

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضى لَهُمْ (النور: 55)
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.

2. உள்ளாட்சி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் நமது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். ஒரு உவைசி மட்டும் குரல் கொடுக்க போதாது.

3. ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் சட்டப்பூர்வ போராட்டம் நடத்த நமது சமுதாயத்திலிருந்து வலிமையான வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும். ஒரு சுப்ரமணியன் ஸ்வாமி என்னென்ன வெல்லாம் செய்கிறார்?

4. அதிகாரத்தில் அதிகாரிகளாக நமது மக்கள் அமர்ந்திட நம் குழந்தைகளை பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதை விட்டு விட்டு அதிகாரம் செலுத்துகின்ற துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

5. முஹல்லாக்களை, ஜமாஅத்களை ஒருங்கிணைத்து, பலப்படுத்த வேண்டும்.
6. பிற சமுதாய மக்களுக்காகவும் போராட வேண்டும். அப்பொழுதுதான் நமக்காக அவர்கள் போராடுவார்கள்.

7. நீண்ட நாள் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும்.

முடிவுரை:
நாம் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்ற வில்லையானால் நமது நிலை கேள்விக்குறிதான்.
அல்லாஹ் கூறுகின்றான்.

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِم
ْ (الرَّعْدِ: 11)

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْماً غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثالَكُمْ  (مُحَمَّدٍ: 38)

எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.