بسم
الله الرحمن الرحيم
உயிரை விட உயர்ந்த மார்க்கம்
*********************************
قال الله تعالى:إن الدين عند الله الاسلام.
وقال تعالى:ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو
في الآخرة من الخاسرين.
அல்லாஹூ தஆலா இவ்வுலகில் மனிதகுலத்தைப்படைத்து அவர்களுக்கு அழகிய வழிமுறைகளை தனது திருத்தூதர்களின் மூலம் வழங்கினான்.அவற்றை ஏற்றுக்கொண்டோர் அவ்வழிமுறைகளைப்பின்பற்றி தங்களின் வாழ்வை அழகாக்கிக்கொண்டனர்.மனிதனுக்குத்தேவையான அனைத்து நலவுகளையும் முழுமையாக உள்ளடக்கிய மார்க்கம் இது.
அனைத்து நல்ல விஷயங்களும் இம்மார்க்கத்தில் ஏவப்பட்டுள்ளன.அனைத்து தீய விஷயங்களும் இதில் தடுக்கப்பட்டுள்ளன.
இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒரு நல்ல விஷயம் வேறொரு மதத்தில் உள்ளது என்றோ அல்லது இஸ்லாத்தில் தடுக்கப்படாத ஒரு தீய விஷயம் வேறொரு மதத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்றோ எவராலும் காட்ட முடியாது.
அல்லாஹூ தஆலா கூறுகிறான்
ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ
وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ
اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ ۙ فَإِنَّ اللَّهَ غَفُورٌ
رَحِيمٌ. 5-Al-Ma'ida : 3
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.
( அல்குர்ஆன் 5:3)
இஸ்லாத்தின் பரிபூரணத்துவம் பற்றி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவார்கள்.
ما تركت شئا يقربكم الي الله الا وقد أمرتكم به،وما
تركت شئا يبعدكم عن الله الا وقد نهيتكم عنه
அல்லாஹூ தஆலாவின்பால் உங்களை நெருங்கச்செய்யும் எதனையும் நான் உங்களுக்கு எடுத்துரைக்காமல் விட்டதில்லை.அல்லாஹூதஆலாவை விட்டும் தூரமாக்கும் எதனையும் நான் உங்களுக்கு தடுக்காமல் விட்டதில்லை.
முந்தைய உம்மத்தினருக்கு அல்லாஹூ தஆலா அவர்களின் சூழ்நிலைக்குத்தக்கவாறு பல்வேறு சட்டங்களைவழங்கியிருந்தான்.ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டு கடைசியில் முழுவடிவம் பெற்று நமக்கு தரப்பட்டுள்ளது.
நபிமூஸா( அலை) அவர்களின் உம்மத்தினருக்கு சிரமமான சில சட்டங்கள் கடமையாக்கப்பட்டிருந்தன.உதாரணமாக,1.நான்கில் ஒரு பகுதி ஜகாத் கடமை
2அசுத்தம் உடையில் பட்டு விட்டால் அந்த இடத்தையே கத்தரித்து விட வேண்டும்
3.சனிக்கிழமை அவர்களுக்கு ஓய்வுநாள்.அதில் உலக அலுவல்கள் எதிலும் ஈடுபடக்கூடாது.
4.இபாதத்துகளை தங்களின் ஆலயங்களில் மட்டுமே அவர்கள் நிறைவேற்றவேண்டும்.
5.மாதவிடாய் உள்ள பெண்ணை சுத்தமாகும் வரை விலக்கி வைக்கவேண்டும்.
6.கொலையாளியை பதிலுக்கு கொலை செய்வது கடமையாகும்.
ஆதாரம்:நூருல்அன்வார்( பக்கம்-5)
வேறு சில உம்மத்தினருக்கு மிக இலகுவான சட்டங்கள் தரப்பட்டிருந்தன.
இவற்றுக்கு மத்தியில் இறுதிஉம்மத்தான நமக்கு நடுநிலையான அதேசமயம் பரிபூரணமான சட்டங்கள் தரப்பட்டுள்ளன.
எனவே இறுதிநாள்வரை வரக்கூடிய மனிதசமுதாயம் முழுமைக்கும் இம்மார்க்கம் சீரான வழிமுறைகளைக்காட்டித்தர வல்லது என்பதில் ஐயமேதுமில்லை.
ஆனால் மனிதக்கரங்களால் உருவாக்கப்பட்ட பிற மதங்களில் உள்ள சட்டங்கள் பலவும் காலமும் மனிதமனோபாவங்களும் மாறும்போது பயனளிக்காமல் நாளடைவில் அவற்றுள்பல மண்மூடிப்போன வரலாறுகள் அனந்தம்.இன்னும் சில மதங்களில் காலத்துக்கொவ்வாத சட்டங்கள் இருப்பதை தெரிந்தும் அவற்றைப்பின்பற்றுவோர் பிடிவாதமாக அதனைப்பிடித்துக்கொண்டு தமது மதமே உயர்ந்தது என்று நம்பிவருவதைப்பார்க்கிறோம்.
அல்லாஹூ தஆலாவினால் நமக்கு தரப்பட்டுள்ள சட்டங்கள் தூரநோக்குடையவை.அவற்றில் சில நமது சிற்றறிவுக்கு புலப்படாமல் போனாலும் பல்வேறு நலவுகள்அதில்உண்டு என்ற நம்பிக்கை ஒவ்வொரு முஃமினின் உள்ளத்திலும் வரவேண்டும்.
மார்க்கம் தெளிவானது
************************
அல்லாஹூ தஆலா நமக்கு வழங்கியுள்ள தீனுல் இஸ்லாம் மிகத்தெளிவான மார்க்கமாகும்.இந்த மார்க்கம் வந்தபின் முந்தைய மார்க்கங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டன.இனி அவற்றைப்பின்பற்றுவதற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது.
(حديث مرفوع) وَقَدْ رَوَيْنَا عَنْ مُجَالِدٍ ، عَنِ
الشَّعْبِيِّ ، عَنْجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّ عُمَرَ أَتَاهُ ، فَقَالَ : إِنَّا نَسْمَعُ
أَحَادِيثَ مِنَ الْيَهُودِ تُعْجِبُنَا أَفَتَرَى أَنْ نَكْتُبَ بَعْضَهَا ؟
فَقَالَ : " أَمُتَهَوِّكُونَ أَنْتُمْ كَمَا تَهَوَّكَتِ الْيَهُودُ
والنَّصَارَى ؟ لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةً ، وَلَوْ كَانَ
مُوسَى حَيًّا مَا وَسِعَهُ إِلا اتِّبَاعِي". (பைஹகி164)
رقم الحديث: 437
(حديث مرفوع) أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ،
حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ مُجَالِدٍ ، عَنْ عَامِرٍ ، عَنْ جَابِرٍ رَضِيَ
اللهُ عَنْهُ ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ أَتَى
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنُسْخَةٍ مِنْ التَّوْرَاةِ
، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، هَذِهِ نُسْخَةٌ مِنْ التَّوْرَاةِ ، فَسَكَتَ
، فَجَعَلَ يَقْرَأُ وَوَجْهُ رَسُولِ اللَّهِ يَتَغَيَّرُ ، فَقَالَ أَبُو بَكْرٍ
رَحْمَةُ اللَّهِ عَلَيهِ : ثَكِلَتْكَ الثَّوَاكِلُ ، مَا تَرَى مَا بِوَجْهِ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فَنَظَرَ عُمَرُ إِلَى
وَجْهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : أَعُوذُ
بِاللَّهِ مِنْ غَضَبِ اللَّهِ ، وَمِنْ غَضَبِ رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ ، رَضِينَا بِاللَّهِ رَبًّا ، وَبِالْإِسْلَامِ دِينًا ، وَبِمُحَمَّدٍ
نَبِيًّا ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : "
وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ ، لَوْ بَدَا لَكُمْ مُوسَى
فَاتَّبَعْتُمُوهُ وَتَرَكْتُمُونِي ، لَضَلَلْتُمْ عَنْ سَوَاءِ السَّبِيلِ ،
وَلَوْ كَانَ حَيًّا وَأَدْرَكَ نُبُوَّتِي لَاتَّبَعَنِي " (.தாரமி 437)
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பரிசுத்த தீனுல் இஸ்லாத்தைக்கொண்டு வந்த பிறகு நேர்வழியின்பால் மக்களை அழைத்த ஓர் இறைத்தூதரின் வழிமுறையையே பின்பற்றக்கூடாது எனில் ஷிர்க்,குஃப்ரில் இருப்போரின் வழிமுறைகளையும் கலாச்சாரத்தையும் பின்பற்றுவது எங்கனம் கூடும்?
பிற சமூகத்திற்குஒப்பாகுதல் கூடாது
***************************************
பிற சமூகத்தின் வழிமுறைகளைப்பின்பற்றுவது மட்டுமல்ல,நாம்செய்யும் இபாதத்துகளில் கூட மாற்றார்களுக்கு ஒப்பாக நடந்து கொள்ளக்கூடாது என்று நாம் பணிக்கப்பட்டிருக்கிறோம்.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
عن ابن عمر قال : قال رسول الله صلى الله عليه وسلم «
من تشبه بقوم فهو منهم » رواه أبو داود (اللباس / 3512) قال الألباني في صحيح أبي
داود : حسن صحيح . برقم (3401)
جاء التشريع بتحريم تشبه المسلمين بالكفار ، سواء في
عباداتهم أو أعيادهم أو أزيائهم الخاصة بهم .
وهذه قاعدة عظيمة في الشريعة الإسلامية ، خرج عنها
اليوم - مع الأسف - كثير من المسلمين ، جهلاً بدينهم ، أو اتباعاً لأهوائهم ، أو
انجرافاً مع العادات والتقاليد المخالفة للشرع.
ومن العجيب أن هذا الأصل ـ الذي يجهله كثير من المسلمين
اليوم ـ قد عرفه اليهود الذين كانوا في المدينة مع النبي صلى الله عليه وسلم ،
عرفوا أنه صلى الله عليه وسلم يريد أن يخالفهم في كل شؤونهم الخاصة بهم .
சில உதாரணங்கள்:
*ஆஷூரா நோன்பை இரண்டாக ஆக்கியது.
*மாற்றார்கள் வணங்கும் நேரத்தில் தொழக்கூடாது என்று தடை செய்தது.
*கப்ரை முன்னோக்கித்தொழுவதை தடுத்தது.
*காஃபிர்களின் ஜனாஸாவைப்பார்த்தால் எழக்கூடாது என்ற கட்டளை.
*தொழுகை அறிவிப்பு சம்பந்தமாக ஆலோசனை செய்தபோது மணியடிப்பது,கொம்பு ஊதுவது,நெருப்புமூட்டுவது போன்ற கருத்துக்களை ஏற்காதது.
*ஆண்கள் காவிஉடை அணிவது,பூணூல்அணிவது கூடாது என்ற சட்டம்.
இவ்வாறு பல விஷயங்களில் مشابهةதை மார்க்கம் தடை செய்துள்ளது.
ஷரீஅத்தே நமது உயிர் மூச்சு
*******************************
தீனுல் இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டஏதேனுமொரு சட்டத்தை விட்டுவிடவோ,அதனை மாற்றிக்கொள்ளவோ,அல்லது கூடுதல்-குறைவுசெய்யவோ முஸ்லிம்கள் யாருக்கும் உரிமையில்லை.
علي المرء المسلم السمع و الطاعة فيما احب وكره مالم
يؤمر بمعصية.(متفق عليه)
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى
اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ
وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا.
33-Al-Ahzab : 36
மக்காவில் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இறைப்பிரசாரத்தில் ஈடுபட்டுவந்த போது,குரைஷித்தலைவர்கள் சிலர் வந்து பெருமானாரிடம் "எங்களின் தெய்வங்களை சிலகாலம் நீங்கள் வணங்கிப்பாருங்கள்.உங்களின் இறைவனை சில காலம் நாங்கள் வணங்குகிறோம்.பிடித்திருந்தால் நாம் மாறிக்கொள்ளலாம் என்று கூறியபோது சூரத்துல் காஃபி்ரூன் இறங்கியது.
நமது உயிரினும் மேலான ஷரீஅத்தில் கைவைக்க எவருக்கும் அதிகாரமில்லை.
அதனை மாற்றி பொதுசிவில்சட்டம் கொண்டுவரத்துடிக்கும் மதியில்லா மத்திய அரசுக்கு எதிராக ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் கண்டன பொதுக்கூட்டங்களில் அணிதிரண்டு மாநிலஅளவில் நமது எதிர்ப்பை பதிவு செய்வோம் வாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.