வியாழன், 24 ஜனவரி, 2019

வார்த்தையில் கவனம் தேவை.

بسم الله الرحمن الرحيم
வார்த்தையில் கவனம் தேவை.

قول الله عز و جل : "ما يلفظ من قول إلا لديه رقيب عتيد"

6475 - ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﻛﺎﻥ ﻳﺆﻣﻦ ﺑﺎﻟﻠﻪ ﻭاﻟﻴﻮﻡ اﻵﺧﺮ ﻓﻠﻴﻘﻞ ﺧﻴﺮا ﺃﻭ ﻟﻴﺼﻤﺖ، ﻭﻣﻦ ﻛﺎﻥ ﻳﺆﻣﻦ ﺑﺎﻟﻠﻪ ﻭاﻟﻴﻮﻡ اﻵﺧﺮ ﻓﻼ ﻳﺆﺫ ﺟﺎﺭﻩ، ﻭﻣﻦ ﻛﺎﻥ ﻳﺆﻣﻦ ﺑﺎﻟﻠﻪ ﻭاﻟﻴﻮﻡ اﻵﺧﺮ ﻓﻠﻴﻜﺮﻡ ﺿﻴﻔﻪ (رواه البخاري ومسلم )

புகழனைத்தும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒருவனுக்கு மட்டும் உரித்தாகட்டுமாக அவனுடைய சலாத்தும் சலாமும் இறுதித் தூதர் முஹம்மத் நபி ஸல் அவர்கள் மீதும் அவர்களின் பரிசுத்த குடும்பத்தார்கள் சத்திய ஸஹாபாக்கள் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்.

இன்று உலகில் நாம் எதிர்கொள்ளும் அநேக தீங்கைகள் நம் நாவால் நாம் வாங்கிக் கொண்டதே . தற்காலத்தில் கருத்துக்கள் சொல்வது, மறுத்துப் பேசுவது, பிறரை விமர்சனம் செய்வது என அனைத்திலும் கட்டுப்பாடற்ற வார்த்தைப் பிரயோகங்கள் பரவலாகிப் போனது உலமாக்களும் இதில் விதிவிலக்கல்ல என்று கூறும் அளவுக்கு சபை நாகரீகம், சூழலறிந்து பேசுவது, பிறர் மனம் புண்படாதவாறு கருத்துச் சொல்வதும் எடுத்துச் சொல்வதும் அருகிப் போய்விட்டது.

இச்சூழலில் வார்த்தைகளில் கவனம் எவ்வளவு அதிகமாக நமக்கு தேவை என்பதை குறித்து நாம் பேசியாக வேண்டும். திருமறை குர்ஆனிலும், நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன்மொழிகளிலும் நாவடக்கத்தை பேணுவதன் அவசியம் குறித்து மிகவும் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.(திருக்குர்ஆன்- 50: 18)

நாம் பேசக் கூடிய அனைத்து சொற்களும் பதிவு செய்யப்படுகிறது அது நலவாக இருந்யால் நமக்கு சாதகமாகவும், தீங்காக இருந்தால் நமக்கு பாதகமாகவும் அமையும்
@@@@@@@
எனவே வார்த்தைகளில் கவனம் தேவை.

6475 - ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﻛﺎﻥ ﻳﺆﻣﻦ ﺑﺎﻟﻠﻪ ﻭاﻟﻴﻮﻡ اﻵﺧﺮ ﻓﻠﻴﻘﻞ ﺧﻴﺮا ﺃﻭ ﻟﻴﺼﻤﺖ، ﻭﻣﻦ ﻛﺎﻥ ﻳﺆﻣﻦ ﺑﺎﻟﻠﻪ ﻭاﻟﻴﻮﻡ اﻵﺧﺮ ﻓﻼ ﻳﺆﺫ ﺟﺎﺭﻩ، ﻭﻣﻦ ﻛﺎﻥ ﻳﺆﻣﻦ ﺑﺎﻟﻠﻪ ﻭاﻟﻴﻮﻡ اﻵﺧﺮ ﻓﻠﻴﻜﺮﻡ ﺿﻴﻔﻪ (رواه البخاري ومسلم )

6475. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். ( அல்குர்ஆன் 49:12)
@@@@@@@

நம்முடைய  குடும்பத்தினர் உறவுகள் மாணவர்கள் குறித்து தவறான வார்த்தைகள் கூறாமல் தவிர்ந்திருத்தல் அவசியம்.

وَيَدْعُ الْإِنْسَانُ بِالشَّرِّ دُعَاءَهُ بِالْخَيْرِ ۖ وَكَانَ الْإِنْسَانُ عَجُولًا
மனிதன். நன்மையாக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.( அல்குர்ஆன் - 17: 11)
@@@@@@@
காரண காரியங்கள் சாதகமாக இல்லாவிட்டாலும் நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும்.  அதுவே துஆவாக ஆகி சாதகமாக மாற்றி வெற்றியை தரும்.

إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۖ فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تروها...
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், "கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்;( அல்குர்ஆன் 9: 40)

وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ‌  سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ‏
நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, “இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதல்ல; ஸுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூய்மையானவன்! பெரும் அவதூறாயிற்றே இது!என்று ஏன் நீங்கள் கூறிடவில்லை? (அல்குர்ஆன் : 24:16)

3616 - ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ: ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺩﺧﻞ ﻋﻠﻰ ﺃﻋﺮاﺑﻲ ﻳﻌﻮﺩﻩ، ﻗﺎﻝ: ﻭﻛﺎﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﺫا ﺩﺧﻞ ﻋﻠﻰ ﻣﺮﻳﺾ ﻳﻌﻮﺩﻩ ﻗﺎﻝ: «ﻻ ﺑﺄﺱ، ﻃﻬﻮﺭ ﺇﻥ ﺷﺎء اﻟﻠﻪ» ﻓﻘﺎﻝ ﻟﻪ: «ﻻ ﺑﺄﺱ ﻃﻬﻮﺭ ﺇﻥ ﺷﺎء اﻟﻠﻪ» ﻗﺎﻝ: ﻗﻠﺖ: ﻃﻬﻮﺭ؟ ﻛﻼ، ﺑﻞ ﻫﻲ ﺣﻤﻰ ﺗﻔﻮﺭ، ﺃﻭ ﺗﺜﻮﺭ، ﻋﻠﻰ ﺷﻴﺦ ﻛﺒﻴﺮ، ﺗﺰﻳﺮﻩ اﻟﻘﺒﻮﺭ، ﻓﻘﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻓﻨﻌﻢ ﺇﺫا.

3616. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால், 'கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்' என்று கூறுவார்கள். (தம் அந்த வழக்கப்படியே) நபி(ஸல்) அவர்கள் கிராமவாசியிடம், 'கவலை வேண்டாம். இறைவன் நாடினால் உங்களைத் தூய்மைப்படுத்தும்' என்று கூறினார்கள். (இதைக் கேடட்) அந்தக் கிராமவாசி, 'நான் தூய்மை பெற்று விடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கிற சூடாகிக் கொதிக்கிற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் ஆம். (அப்படித்தான் நடக்கும்.)' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

7370 - ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ: " ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﻄﺐ اﻟﻨﺎﺱ ﻓﺤﻤﺪ اﻟﻠﻪ ﻭﺃﺛﻨﻰ ﻋﻠﻴﻪ ﻭﻗﺎﻝ: ﻣﺎ ﺗﺸﻴﺮﻭﻥ ﻋﻠﻲ ﻓﻲ ﻗﻮﻡ ﻳﺴﺒﻮﻥ ﺃﻫﻠﻲ، ﻣﺎ ﻋﻠﻤﺖ ﻋﻠﻴﻬﻢ ﻣﻦ ﺳﻮء ﻗﻂ "، ﻭﻋﻦ ﻋﺮﻭﺓ ﻗﺎﻝ: ﻟﻤﺎ ﺃﺧﺒﺮﺕ ﻋﺎﺋﺸﺔ ﺑﺎﻷﻣﺮ، ﻗﺎﻟﺖ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﺃﺗﺄﺫﻥ ﻟﻲ ﺃﻥ ﺃﻧﻄﻠﻖ -[ 114]- ﺇﻟﻰ ﺃﻫﻠﻲ؟ ﻓﺄﺫﻥ ﻟﻬﺎ، ﻭﺃﺭﺳﻞ ﻣﻌﻬﺎ اﻟﻐﻼﻡ، ﻭﻗﺎﻝ ﺭﺟﻞ ﻣﻦ اﻷﻧﺼﺎﺭ: ﺳﺒﺤﺎﻧﻚ ﻣﺎ ﻳﻜﻮﻥ ﻟﻨﺎ ﺃﻥ ﻧﺘﻜﻠﻢ ﺑﻬﺬا، ﺳﺒﺤﺎﻧﻚ ﻫﺬا ﺑﻬﺘﺎﻥ ﻋﻈﻴﻢ

7370. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'என் வீட்டாரை இகழ்ந்து பேசுகிற சிலரைப் பற்றி நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை சொல்கின்றீர்கள்? ஒருபோதும் என் வீட்டாரிடம் நான் தீமை எதையும் அறிந்தில்லை' என்றார்கள்.
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா(ரலி) அவர்களிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டபோது அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் தாய்வீட்டிற்குச் செல்ல எனக்கு அனுமதியளிக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அவ்வாறே நப(ஸல்) அவர்கள் ஆயிஷாவுக்கு அனுமதியளித்து அவர்களுடன் பணியாளையும் அனுப்பி வைத்தார்கள். அன்சாரிகளில் ஒருவர், 'இறைவன் தூயவன். இப்படி (அவதூறு) பேசுவது நமக்குத் தகாது. இறைவன் தூயவன். இது மாபெரும் அபாண்டம்' என்றார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 96. இறைவேதத்தையும் நபிவழியையும் கடைப்பிடித்தல்.
@@@@@@@
முஃமின்களின் வார்த்தைகள் சாதாரணமானதல்ல அது இறைவனிடம் சாட்சியாக இருக்கிறது.

1367 - عن ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻳﻘﻮﻝ: ﻣﺮﻭا ﺑﺠﻨﺎﺯﺓ، ﻓﺄﺛﻨﻮا ﻋﻠﻴﻬﺎ ﺧﻴﺮا، ﻓﻘﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻭﺟﺒﺖ» ﺛﻢ ﻣﺮﻭا ﺑﺄﺧﺮﻯ ﻓﺄﺛﻨﻮا ﻋﻠﻴﻬﺎ ﺷﺮا، ﻓﻘﺎﻝ: «ﻭﺟﺒﺖ» ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ: ﻣﺎ ﻭﺟﺒﺖ؟ ﻗﺎﻝ: «ﻫﺬا ﺃﺛﻨﻴﺘﻢ ﻋﻠﻴﻪ ﺧﻴﺮا، ﻓﻮﺟﺒﺖ ﻟﻪ اﻟﺠﻨﺔ، ﻭﻫﺬا ﺃﺛﻨﻴﺘﻢ ﻋﻠﻴﻪ ﺷﺮا، ﻓﻮﺟﺒﺖ ﻟﻪ اﻟﻨﺎﺭ، ﺃﻧﺘﻢ ﺷﻬﺪاء اﻟﻠﻪ ﻓﻲ اﻷﺭﺽ.
1367. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது' என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள். உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்' எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்.

உலகில் அர்த்தமற்ற விளையாட்டுக்கள் நிறைந்து போயிருக்கிறது அது அல்லாஹ் ரஸூலின் விஷயத்திலும் வந்து விட்டால் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் அல்லாஹ் நம்மை எச்சரிக்கை செய்கின்றான்...
@@@@@@@
முனாபிக்குகள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் கேலி கிண்டல் செய்து ஏழனம் செய்தார்கள்
من فتح القدير
ﻭﺃﺧﺮﺝ ﺃﺑﻮ ﻧﻌﻴﻢ ﻓﻲ اﻟﺤﻠﻴﺔ ﻋﻦ ﺷﺮﻳﺢ اﺑﻦ ﻋﺒﻴﺪ ﺃﻥ ﺭﺟﻼ ﻗﺎﻝ ﻷﺑﻲ اﻟﺪﺭﺩاء: ﻳﺎ ﻣﻌﺸﺮ اﻟﻘﺮاء! ﻣﺎ ﺑﺎﻟﻜﻢ ﺃﺟﺒﻦ ﻣﻨﺎ ﻭﺃﺑﺨﻞ ﺇﺫا ﺳﺌﻠﺘﻢ، ﻭﺃﻋﻈﻢ ﻟﻘﻤﺎ ﺇﺫا ﺃﻛﻠﺘﻢ؟ ﻓﺄﻋﺮﺽ ﻋﻨﻪ ﺃﺑﻮ اﻟﺪﺭﺩاء، ﻭﻟﻢ ﻳﺮﺩ ﻋﻠﻴﻪ ﺑﺸﻲء، ﻓﺄﺧﺒﺮ ﺑﺬﻟﻚ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ، ﻓﺎﻧﻄﻠﻖ ﻋﻤﺮ ﺇﻟﻰ اﻟﺮﺟﻞ اﻟﺬﻱ ﻗﺎﻝ ﺫﻟﻚ، ﻓﺄﺧﺬﻩ ﺑﺜﻮﺑﻪ ﻭﺧﻨﻘﻪ ﻭﻗﺎﺩﻩ ﺇﻟﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﺎﻝ اﻟﺮﺟﻞ: ﺇﻧﻤﺎ ﻛﻨﺎ ﻧﺨﻮﺽ ﻭﻧﻠﻌﺐ، ﻓﺄﻭﺣﻰ اﻟﻠﻪ ﺇﻟﻰ ﻧﺒﻴﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﻭﻟﺌﻦ ﺳﺄﻟﺘﻬﻢ ﻟﻴﻘﻮﻟﻦ ﺇﻧﻤﺎ ﻛﻨﺎ ﻧﺨﻮﺽ ﻭﻧﻠﻌﺐ.

அல்லாஹ் அவர்களை கண்டிக்கும் வண்ணம் பேசுகிறான்
وَلَئِنْ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ
நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், "நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். "அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?" என்று (நபியே!) நீர் கேட்பீராக. ( அல்குர்ஆன் 9:65)
@@@@@@@
விளையாட்டு வினையாகுவது இப்படி

6478 ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺇﻥ اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺭﺿﻮاﻥ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﺮﻓﻌﻪ اﻟﻠﻪ ﺑﻬﺎ ﺩﺭﺟﺎﺕ، ﻭﺇﻥ اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺳﺨﻂ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﻬﻮﻱ ﺑﻬﺎ ﻓﻲ ﺟﻬﻨﻢ .

6478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்

2482 - ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻛﺎﻥ ﺭﺟﻞ ﻓﻲ ﺑﻨﻲ ﺇﺳﺮاﺋﻴﻞ ﻳﻘﺎﻝ ﻟﻪ ﺟﺮﻳﺞ ﻳﺼﻠﻲ، ﻓﺠﺎءﺗﻪ ﺃﻣﻪ، ﻓﺪﻋﺘﻪ، ﻓﺄﺑﻰ ﺃﻥ ﻳﺠﻴﺒﻬﺎ، ﻓﻘﺎﻝ: ﺃﺟﻴﺒﻬﺎ ﺃﻭ ﺃﺻﻠﻲ، ﺛﻢ ﺃﺗﺘﻪ ﻓﻘﺎﻟﺖ: اﻟﻠﻬﻢ ﻻ ﺗﻤﺘﻪ ﺣﺘﻰ ﺗﺮﻳﻪ ﻭﺟﻮﻩ اﻟﻤﻮﻣﺴﺎﺕ، ﻭﻛﺎﻥ ﺟﺮﻳﺞ ﻓﻲ ﺻﻮﻣﻌﺘﻪ، ﻓﻘﺎﻟﺖ اﻣﺮﺃﺓ: ﻷﻓﺘﻨﻦ ﺟﺮﻳﺞا، ﻓﺘﻌﺮﺿﺖ ﻟﻪ، ﻓﻜﻠﻤﺘﻪ ﻓﺄﺑﻰ، ﻓﺄﺗﺖ ﺭاﻋﻴﺎ، ﻓﺄﻣﻜﻨﺘﻪ ﻣﻦ ﻧﻔﺴﻬﺎ، ﻓﻮﻟﺪﺕ ﻏﻼﻣﺎ ﻓﻘﺎﻟﺖ: ﻫﻮ ﻣﻦ ﺟﺮﻳﺞ، ﻓﺄﺗﻮﻩ، ﻭﻛﺴﺮﻭا ﺻﻮﻣﻌﺘﻪ، ﻓﺄﻧﺰﻟﻮﻩ ﻭﺳﺒﻮﻩ، ﻓﺘﻮﺿﺄ ﻭﺻﻠﻰ ﺛﻢ ﺃﺗﻰ اﻟﻐﻼﻡ، ﻓﻘﺎﻝ: ﻣﻦ ﺃﺑﻮﻙ ﻳﺎ ﻏﻼﻡ؟ ﻗﺎﻝ: اﻟﺮاﻋﻲ، ﻗﺎﻟﻮا: ﻧﺒﻨﻲ ﺻﻮﻣﻌﺘﻚ ﻣﻦ ﺫﻫﺐ، ﻗﺎﻝ: ﻻ، ﺇﻻ ﻣﻦ ﻃﻴﻦ "

2482. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த 'ஜுரைஜ்' என்று அழைக்கப்பட்டு வந்த ஒருவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்கு பதில் கூற ஜுரைஜ் மறுத்துவிட்டார். 'நான் அவருக்கு பதிலளிப்பதா, அல்லது தொழுவதா?' என்று (மனத்திற்குள்) கூறினார். பிறகு (மீண்டும்), அவரின் தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்க வில்லையே என்ற கோபத்தில்), 'இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே' என்று கூறினார். (ஒரு நாள்) ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், 'நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்' என்று கூறினாள். அதற்காக, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள அழைத்துப்) பேச முனைந்தாள். அவர் (இணங்க) மறுத்துவிட்டார். எனவே, அவள் ஒர் இடையனிடம் சென்று, தன்னை அவனுடைய ஆளுகைக்குள் ஒப்படைத்துவிட்டாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, 'இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்' என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்தனர்; (கோபாவேசத்தில்) அவரின் ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்துவிட்டனர்; அவரை (அவரின் அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர். ஜுரைஜ் உளூச் செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, 'குழந்தையே! உன் தந்தை யார்?' என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), '(இன்ன) இடையன்' என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், 'உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித் தருகிறோம்' என்று (ஜுரைஜிடம் அனுமதி) கேட்டார்கள். அதற்கு ஜுரைஜ், 'இல்லை; களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும்' என்று கூறிவிட்டார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்.
@@@@@@@
7505 ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " ﻗﺎﻝ اﻟﻠﻪ: ﺃﻧﺎ ﻋﻨﺪ ﻇﻦ ﻋﺒﺪﻱ ﺑﻲ "
7505. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.147
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு


من مسلم
ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ الله (3009) ﺳﺮﻧﺎ ﻣﻊ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﻏﺰﻭﺓ ﺑﻄﻦ ﺑﻮاﻁ، ﻭﻫﻮ ﻳﻄﻠﺐ اﻟﻤﺠﺪﻱ ﺑﻦ ﻋﻤﺮﻭ اﻟﺠﻬﻨﻲ، ﻭﻛﺎﻥ اﻟﻨﺎﺿﺢ ﻳﻌﺘﻘﺒﻪ ﻣﻨﺎ اﻟﺨﻤﺴﺔ ﻭاﻟﺴﺘﺔ ﻭاﻟﺴﺒﻌﺔ، ﻓﺪاﺭﺕ ﻋﻘﺒﺔ ﺭﺟﻞ ﻣﻦ اﻷﻧﺼﺎﺭ ﻋﻠﻰ ﻧﺎﺿﺢ ﻟﻪ، ﻓﺄﻧﺎﺧﻪ ﻓﺮﻛﺒﻪ، ﺛﻢ ﺑﻌﺜﻪ ﻓﺘﻠﺪﻥ ﻋﻠﻴﻪ ﺑﻌﺾ اﻟﺘﻠﺪﻥ، ﻓﻘﺎﻝ ﻟﻪ: ﺷﺄ، ﻟﻌﻨﻚ اﻟﻠﻪ، ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﻫﺬا اللاعن ﺑﻌﻴﺮﻩ؟» ﻗﺎﻝ: ﺃﻧﺎ، ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﻗﺎﻝ: «اﻧﺰﻝ ﻋﻨﻪ، ﻓﻼ ﺗﺼﺤﺒﻨﺎ ﺑﻤﻠﻌﻮﻥ، ﻻ ﺗﺪﻋﻮا ﻋﻠﻰ ﺃﻧﻔﺴﻜﻢ، ﻭﻻ ﺗﺪﻋﻮا ﻋﻠﻰ ﺃﻭﻻﺩﻛﻢ، ﻭﻻ ﺗﺪﻋﻮا ﻋﻠﻰ ﺃﻣﻮاﻟﻜﻢ، ﻻ ﺗﻮاﻓﻘﻮا ﻣﻦ اﻟﻠﻪ ﺳﺎﻋﺔ ﻳﺴﺄﻝ ﻓﻴﻬﺎ ﻋﻄﺎء، ﻓﻴﺴﺘﺠﻴﺐ ﻟﻜﻢ .
நமக்கெதிராக, நம்முடைய வாகனங்களுக்கு எதிராக நம் பிள்ளைகளுக்கு எதிராக நம் பொருளாதாரங்களுக்கு எதிராக அமையும் படியான எந்த துஆக்களையும் நாம் செய்து விடக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் ஏனெனில் அல்லாஹ்விடம் ஒரு நேரமிருக்கிறது அந்த நேரத்தில் அந்த துஆக்கள் அமைந்து விட்டால் ஏற்கப்பட்டு விடும்.(ஸஹீஹ் முஸ்லிம் ).

அல்லாஹ் இடம் பொருளறிந்து கவனமாக பேசும் பக்குவத்தை நமக்கு தந்தருள்வானாக நம் நாவால் யாருக்கும் சங்கடம் ஏற்படுத்தாமல் பிறர் நாவிலும் குறிப்பாக நல்லவர்களின் நாவில் விழாமல் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக ஆமீன்.