வெள்ளி, 18 ஜனவரி, 2019

தஃவாவின் முக்கியத்துவம்


தஃவாவின் முக்கியத்துவம்

முன்னுரை:
உலகில் எண்ணற்ற படைப்புகளை படைத்துள்ள அல்லாஹ் அவற்றுள் மனிதனையும் படைத்து, மற்ற படைப்புகளுக்கு வழங்கப்படாத தனித்துவங்களை மனிதனுக்கு வழங்கியுள்ளான். அவற்றுள் மிக முக்கியமானவை பகுத்தறிவு மற்றும் சுதந்திரமாகும். பகுத்தறிவு குறித்து அல்லாஹ் கூறுகின்றான்.

وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
( النحل : 78)
உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு -  அவனே அமைத்தான்.
(அல்குர்ஆன்: 16:78)

சுதந்திரம் குறித்து அல்லாஹ் கூறுகின்றான்...

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ وَمَنْ يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِنْ مُكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ (الحج: 18)

வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அலலாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். (அல்குர்ஆன். 22:18)

மனிதனுக்கு வழங்கப்பட்ட பகுத்தறிவு மற்றும் சுதந்திரம் என்ற இவ்விரண்டு தனித்துவங்களையும் பயன்படுத்தி சிலர் (இப்றாஹீம் (அலை) அவர்களைப் போல) நேர்வழியையும், பலர் தவறான வழியையும் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். இதில் வழிகேடுகளை தேர்ந்தெடுக் கொண்டவர்கள் வழிகேட்டிலேயே சென்று விடக்கூடாது என்பதற்காகவும், மறுமையில் அல்லாஹ்வைப் பற்றி யாரும் தம்மிடத்தில் சொல்ல வில்லை என்று காரணங்கள் கூறி தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவும் அல்லாஹ் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் தூதர்களை அனுப்பியுள்ளான்.

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ (النحل :36)

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.  (அல்குர்ஆன்.16:36)

رُسُلًا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (165)

தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங்கள் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்.4:165.)

நபிமார்களில் இறுதியாக வந்த முஹம்மது (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களின் சமுதாயத்தை நேர்வழியில் செலுத்த வேண்டிய பொறுப்பு நம்மைச் சார்ந்ததாகும்.

தஃவாவின் முக்கியத்துவம்.

وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (آل عمران : 104)
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன்.3:104)

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ  (سورة فصلت (41) : الآيات 33)

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து; ''நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?'' (இருக்கின்றார்?) (அல்குர்ஆன். 41:33)

عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ - وَهَذَا حَدِيثُ أَبِي بَكْرٍ - قَالَ: أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلَاةِ مَرْوَانُ. فَقَامَ إِلَيْهِ رَجُلٌ، فَقَالَ: الصَّلَاةُ قَبْلَ الْخُطْبَةِ، فَقَالَ: قَدْ تُرِكَ مَا هُنَالِكَ، فَقَالَ أَبُو سَعِيدٍ: أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ». م : 49

தாரிக் இப்னு ஷிஹாப் அவர்கள் அறிவிக்கிறார்கள் முதன் முதலாக ஈதுடைய நாளில் (நபிகள் நாயகம் ஸல் அவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக) தொழுகைக்கு முன்பு குத்பா ஓதியவர் மர்வான் இப்னு ஹகம் (என்ற உமய்யா ஆட்சியாளர்) தான் ஒரு மனிதர் அவரை நோக்கி குத்பாவுக்கு முன் தொழுகை நடத்த வேண்டும் என்று கூறினார் அதற்கு மர்வான் அது விடப்பட்டு விட்டது என்றார் அச்சமயம் அபூசயீத் ரலி அவர்கள் இதோ இந்த நபர் (கேள்வி எழுப்பியவர்) தனது பொறுப்பை நிறைவேற்றி விட்டார் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன். "உங்களில் தீமையைக் காண்பவர் அதனை தம் கரத்தால் தடுக்கட்டும். அது அவருக்கு முடியாவிட்டால் தன் நாவால் அதனை அவர் தடுக்கட்டும். அதுவும் அவருக்கு முடியாவிட்டால் தன் உள்ளத்தால் அதனை அவர் (வெறுக்கட்டும்) இதுவே ஈமானின் மிகவும் பலவீனமானதாகும். (முஸ்லிம்: 49)

சமூகத்தின் நிலை:

சமூகத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ள வேண்டிய  இரு பிரிவுகள் உண்டு
1. முஸ்லிம்கள்
2. காஃபிர்கள்
முஸ்லிம்களை பொறுத்த வரை பிறப்பால் முஸ்லிம்களாக இருப்பவர்களில் பலருக்கு இஸ்லாமும் தெரிவதில்லை, ஈமானும் தெரிவதில்லை.
அல்லாஹ் கூறுகின்றான்.

فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَاللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَاكُمْ (محمد : 19)

நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக!    (அல்குர்ஆன். 47:19)

ஈமான் என்பது தவ்ஹீதுடைய கலிமாவை பொருளறிந்து மனதால் உறுதி கொண்டு நாவால் வெளிப்படுத்தி மொழிவதற்கு சொல்லப்படும் இத்தகைய நிலையில் எல்லா முஸ்லிம்களும் இல்லை .


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نزلَ عَلَى رَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي أَنزلَ مِنْ قَبْلُ (النِّسَاءِ: 136)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும் இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;.  (அல்குர்ஆன். 4:136)

விளைவு:
1. நாற்பெரும் கடமைகளை (தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்) நிறைவேற்றுவதில்லை.
2. தர்ஹாக்களில் சினிமா கச்சேரிகள்
3. நேர்த்திக்கடன் செலுத்துதல்
4. தட்டம்மைப் போன்ற வியாதிகளுக்கு நிவாரணம் பெற கோவில்களுக்குச் செல்லுதல்.
5. பெண்கள் அந்நிய ஆண்களை காதலித்து மணந்து கொள்ளுதல்.
6. விபச்சாரம்.
7. மது
8. வட்டி
9. காதலுக்காகவும், பணத்திற்காகவும் மதம் மாறுதல்
10. இன்னும் எத்தனை எத்தனையோ மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியங்களை செய்கின்றார்கள்.
முஸ்லிம்களை முஸ்லிம்களாக வாழவைப்பதற்காக முஸ்லிம்களிடம் தஃவா மற்றும் தர்பிய்யா செய்ய வேண்டியுள்ளது. இதைத்தான் தஃவத் தப்லீக் எனும் பெயரில் கடந்த பல ஆண்டுகளாக பல அறிஞர்கள், அவர்களின் வழிகாட்டுதல்களில் இலட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதில் பல வெற்றியையும் பெற்றிருக்கிறார்கள். எனினும் நன்மையை ஏவுவதுடன் தீமையை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஒலியை உண்டாக்கிவிட்டால் இருள் தாமாக அகன்று விடுவது போல் நன்மையை மட்டும் ஏவினால் போதும் தீமை தாமாக அகன்றும் விடும் என்ற கருத்து ஏற்புடையதல்ல.
இது இறைவசனத்திற்கே எதிரானதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்.

وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ (التوبة : 71)

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும்,
ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன். 9:71)

இந்த திருமறை வசனம் தீமைகளை தடுப்பது பிரதானப் பணி என்பதை தெளிவு படுத்துகிறது.

இஸ்லாத்தை நோக்கி ஒருவரை அழைத்து வருவது முக்கியமாக இருப்பது போல் இஸ்லாத்திலிருந்து ஒருவன் வெளியேறிவிடாமல் அவனை பாதுகாப்பது அதை விட மிக முக்கிய பணியாகும்.

காஃபிர்களை பொறுத்த வரையில் இந்தியாவில் அவர்களை இஸ்லாத்தை நோக்கி அழைப்பது மிகவும் எளிதான காரியம்தான். ஏனெனில் நமது நாட்டில்தான் வர்ணாசிரம கொள்கையின்படி மக்கள் பல ஜாதிகளாக பிரிந்துள்ளார்கள். அந்த ஜாதிகளின் மூலம் பல தொல்லைகளையும் அனுபவிக்கின்றார்கள். எனவே அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் பணியை முடுக்கி விட வேண்டும்.

ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ (النحل: 125)
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்குர்ஆன். 16:125)

தஃவா செய்யும் முறை:

1. வாழ்ந்து காட்டுவது:

عن سعد بن هشام بن عامر قال أتيت عائشة فقلت يا أم المؤمنين أخبريني بخلق رسول الله صلى الله عليه وسلم قالت : كان خلقه القرآن أما تقرأ القرآن قول الله عز وجل { وإنك لعلي خلق عظيم } قلت فإني أريد أن أتبتل قالت لا تفعل أما تقرأ { لقد كان لكم في رسول الله أسوة حسنة } فقد تزوج رسول الله صلى الله عليه وسلم وقد ولد له. حم : 24645

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது. (முஸ்னத் அஹ்மது : 24645)

2. இஸ்லாத்தை நோக்கி அழைப்பது.

3. அழகிய முறையில் விவாதித்து அழைப்பது :

ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ( النحل :125)
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்குர்ஆன். 16:125)

4. அவர்களுக்காக துஆச் செய்வது, குறிப்பாக அவர்களில் ஆற்றலுள்ளோர்களுக்கு
பிரத்யேகமாக துஆச் செய்வது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَدِمَ الطُّفَيْلُ وَأَصْحَابُهُ فَقَالُوا: يَا رَسُولَ اللهِ إِنَّ دَوْسًا قَدْ كَفَرَتْ وَأَبَتْ، فَادْعُ اللهَ عَلَيْهَا فَقِيلَ: هَلَكَتْ دَوْسٌ فَقَالَ: «اللهُمَّ اهْدِ دَوْسًا وَائْتِ بِهِمْ» م : 2524

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: துஃபைல் பின் அம்ர் அத்தவ்ஸீ (ரலி) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! (எங்கள்) தவ்ஸ் குலத்தார் (இஸ்லாத்தை ஏற்க) மறுத்து நிராகரித்துவிட்டார்கள். அவர்களுக்கெதிராகப் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டுக்கொண்டனர்.
அப்போது 'தவ்ஸ் குலத்தார் அழிந்தனர்' என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! தவ்ஸ் குலத்தாரை நல்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டுவந்து சேர்ப்பாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: 'اللَّهُمَّ أَعِزَّ الدِّينَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ: بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ، أَوْ عُمَرَ بْنِ الْخَطَّابِ'، فَكَانَ أحبهما إليه عمر بن الخطاب (صحيح إبن حبان : 6881  )

நபி (ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள்  இறைவா! அபூஜஹ்ல் பின் ஹிஷாம் அல்லது உமர் பின் கத்தாப் ஆகிய இவ்விருவரில் உனக்கு மிகவும் பிரியமானவரைக் கொண்டு இம்மார்க்கை நீ வலுப்படுத்துவாயாக! அவர்கள் இருவரில் உமர் ரலி அவர்கள் அல்லாஹ்விடம் மிகப் பிரியமானவராக இருந்தார்கள். (நூல் :இப்னு ஹப்பான்)

5. மத்ரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய பள்ளிக்கூடங்களை நிறுவி, அதில் முஸ்லிம் மாணவர்களுக்க இஸ்லாமிய கல்வியுடன் இதர கல்வியையும் வழங்க வேண்டும்.

தஃவாவின் பலன்கள்:

1. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்ட நன்மை.

2. மகத்தான் இறைக்கூலி.

عن سهل  رَضِيَ اللَّهُ عَنْهُ، يَعْنِي ابْنَ سَعْدٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ: «لَأُعْطِيَنَّ الرَّايَةَ غَدًا رَجُلًا يُفْتَحُ عَلَى يَدَيْهِ، يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ»، فَبَاتَ النَّاسُ لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَى، فَغَدَوْا كُلُّهُمْ يَرْجُوهُ، فَقَالَ: «أَيْنَ عَلِيٌّ؟»، فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ، فَبَصَقَ فِي عَيْنَيْهِ وَدَعَا لَهُ، فَبَرَأَ كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ، فَأَعْطَاهُ فَقَالَ: أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا؟ فَقَالَ: «انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ، فَوَاللَّهِ لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ» خ: 3009

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
(கைபர் போரின் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகிறேன். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியை அளிப்பான்' என்று சொன்னார்கள். எனவே மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். காலையானதும மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி(ஸல்) அவர்கள் 'அலீ இப்னு அபீ தாலிப் எங்கே?' என்று கேட்டார்கள். மக்கள் 'அவருக்குக் கண்வலி இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் 'அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி) வந்தவுடன் அவர்களுடைய இரண்டு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அவர்களின் களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். மேலும் இஸ்லாத்தில் அவர்களின் மீது கடமையாகிற அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை அளிப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்' என்று கூறினார்கள்.

3. மற்றவர்களின் நற்செயலிலும் பலன் பெறுதல் (நிரந்தர நன்மை)

عن أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ دَعَا إِلَى هُدًى، كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ، كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا» م :2674
5194. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு அவரைப் பின் தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது.  இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4. அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வது:

عَنْ حُذَيْفَةَ بْنِ اليَمَانِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ المُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عِقَابًا مِنْهُ ثُمَّ تَدْعُونَهُ فَلَا يُسْتَجَابُ لَكُمْ»ت :  2169
ஹூதைபா (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் உயிரை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் நன்மையை ஏவி தீமையை தடுத்திடுங்கள். (அவ்வாறு இல்லையாயின்) அல்லாஹ் தன் வேதனையை உங்கள் மீது அனுப்பி விடுவான். பின்னர் நீங்கள் அவனிடம் பிரார்த்திப்பீர். எனினும் அது உங்களுக்காக ஏற்கப்படாது.
(திர்மிதி:2169)

முடிவுரை: முஸ்லிம்களில் பெருவாரியானவர்கள் குறிப்பாக இளைஞர்கள், இளைஞிகள் வழிதவறிச் செல்லும் இக்காலத்தில் அவர்களை இஸ்லாத்தில் ஸ்தரப்படுத்துவதும், இஸ்லாத்திற்கு விரோதமாக சர்வதேச மற்றும் தேசிய அளவில் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோர்களின் உள்ளங்களில் தவறான சிந்தனைகளை விதைக்கப்படும் இக்காலத்தில் தஃவா மிகமிக முக்கியம். இதனை உலமாக்கள் தலைமையில் உலகம் முழுவதும் செய்யப்படவேண்டும். அதற்கு நாம் உழைப்போமாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.