புதன், 7 செப்டம்பர், 2016

குர்பானி & பெருநாள் & புனித நாட்களின் சிறப்புகள் & அமல்கள்


ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏ 
இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.(அல்குர்ஆன் : 22:32)

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ‏ 
(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:37)
@@@@@@@

1.அரபா நாள் எப்படி ?
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ وَالْفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ وَالْأَضْحَى يَوْمَ تُضَحُّونَ روى الترمذي  633وأبو داود  1979وابن ماجه1650
நபி ஸல் கூறினார்கள். (கவணிப்பு பெரும்பான்மைக்க்கே .சிறுபான்மைக்கு அல்ல.) நோன்பின் (ஆரம்பம்) நாள் என்பது நீங்கள் (பெரும்பான்மையான மக்கள்) எந்த நாள் நோற்கின்றீர்களோ அதுவே . நோன்பை (பூர்த்தி செய்து) நிறுத்தி விடுவது என்பதும் நீங்கள் எந்த நாள் நிறுத்து கிறீர்களோ அதுவே. குர்பானி கொடுக்கும்(ஹஜ் பெரு)நாள் என்பதும் நீங்கள்   எந்த நாள் குர்பானி கொடுப்பீர்களோ அதுவே ஆகும் .திர்மிதி633.அபூ தாவூத்1979.இப்னு மாஜஹ்1650.

عَنْ كُرَيْبٍ أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا وَاسْتُهِلَّ عَلَيَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ فَرَأَيْتُ الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ مَتَى رَأَيْتُمْ الْهِلَالَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ فَقَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ أَوْ نَرَاهُ فَقُلْتُ أَوَ لَا تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ فَقَالَ لَا هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَكَّ يَحْيَى بْنُ يَحْيَى فِي نَكْتَفِي أَوْ تَكْتَفِي-  مسلم 1819

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு
பாடம் : 5 ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே  (கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்). ஓர் ஊரில் பிறை  பார்த்தால்,வெகு தொலைவில் உள்ளவர்களுக்கு அது பொருந்தாது.

1983. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த  முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவுசெய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்)பிறை  எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன். பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்துசேர்ந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம்  விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், ”நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்என்று பதிலளித்தேன். அவர்கள், ”நீயே அதைக் கண்டாயா?” என்று கேட்டார்கள். நான், ”ஆம் (நானும் கண்டேன்).  மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ”ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை  நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்என்று சொன்னார்கள். அதற்கு நான், ”முஆவியா (ரலி) அவர்கள் (முதல்பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கு, ”இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு
@@@@@@@

2.அரபா தினத்தை போன்றே முன் பின் வரும் நாட்களிலும் நல்அமல்கள் பேணவேண்டும் .தீயதை தவிர்கனும்.

صحيح البخاري  969 - عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَا العَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ؟» قَالُوا: وَلاَ الجِهَادُ؟ قَالَ: «وَلاَ الجِهَادُ، إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ»
969. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
”(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்லஎன்று நபி(ஸல்) கூறினார்கள். ஜிஹாதை விடவுமா?” என்று நபித் தோழர்கள் கேட்டனர்.தன்உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 13.இருபெருநாள்கள்

இடம் காலம் அனுசரித்து நன்மை பெருகுவது போல் தீமையும் வீரியம் பெரும் .
எனவே இன்டெர் நெட் பேஸ் புக் போன்றதில் நேரம் பாழாக்காமல் பீடி சிகரெட் கைவிட்டு பேணுதலாக இருக்கனும் .

பொதுவாக ஒரு தவறை நினைத்தால் தண்டனை இல்லை . செய்தால் தான் தண்டனை. ஆனால்

وَمَنْ يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍ} [الحج: 25]
ஹரம் (-மக்கா) ஏரியாவில் மட்டும் எந்த தவறையும் செய்ய நினைத்தாலே அவனுக்கு கடும் வேதனை கொடுப்போம்.(22:25)
@@@@@@@

3.தக்பீர் தஸ்பீஹ்  அதிகம் சொல்லனும்

المجموع شرح المهذب : التكبير نوعان مرسل ومقيد (والمقيد) هو الذى يقصد به الاتيان في ادبار الصلوات (فالمرسل) ويقال له المطلق هو الذى لا يتقيد بحال بل يؤتى به في المنازل والمساجد والطرق ليلا ونهارا وفى غير ذلك
தக்பீர் இருவகை உண்டு :
1. المقيدமுகைய்யத் பர்ளு தொழுகைக்கு பின்பு ஓத ப்படும் தக்பீர்.
2.المطلق முத்லக் எல்லா நேரங்களிலும்/எல்லா இடங்களிலும் ஓதப்படும் தக்பீர்.
அதாவது முகைய்யத் என்பது துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் பஜ்ரிலிருந்து 13 ம் நாள் அஸர் வரைக்கும் ஒவ்வொரு பர்ளு தொழுகைக்குப் பின்பும் ஓதப்படக்கூடிய தக்பீர்.


المعجم الكبير للطبراني  10953 - عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ، وَلا أَحَبُّ إِلَيْهِ الْعَمَلُ فِيهِنَّ مِنْ أَيَّامِ الْعَشْرِ، فَأَكْثِرُوا فِيهِنَّ التَّسْبِيحَ، وَالتَّكْبِيرَ، وَالتَّهْلِيلَ. وقي رواية أحمد6154 عَنْ ابْنِ عُمَرَ"وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ"
துல்ஹஜ் முதல் பத்து நாட்களுமே மிக சிறப்பான நாட்களே .எனவே இந்த பத்து நாளுமே தக்பீர்.தஹ்லீல் (-لا إله إلا الله).தஸ்பீஹ் தஹ்மீத் இவை யாவையுமே அதிகம் ஓதுங்கள் என நபி ஸல் கட்டளை யிட்டார்கள் .அஹ்மத்6154 தப்ரானி10953 .

திக்ரை சின்ன சப்தமிட்டு சொல்வது பிறரையும் நினைவூட்டல் ஆகிடும்
صحيح البخاري: َوَكَانَ ابْنُ عُمَرَ، وَأَبُو هُرَيْرَةَ: «يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ العَشْرِ يُكَبِّرَانِ، وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا»
இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) அவர்களும் கடை வீதியிலும் திக்ரை சொல்லி கொண்டு நடப்பார்கள் . இவர்களின் தக்ப்பீரை கேட்டவுடன் மக்களும் தக்பீரை ஓதுவார்கள்.
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا (4)
அந்நாளில் அது தன் மீது நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும்.(அல்குர்ஆன் : 99:4)

@@@@@@@

4.முடி நகம் நீக்காமல் இருப்பது
عدم إزالة الشعر والظفر
صحيح مسلم -39 - (1977) عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلَتِ الْعَشْرُ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلَا يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا»، قِيلَ لِسُفْيَانَ: فَإِنَّ بَعْضَهُمْ لَا يَرْفَعُهُ، قَالَ: «لَكِنِّي أَرْفَعُهُ»
3997. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 35.குர்பானிப் பிராணிகள்

@@@@@@@

5.ஹஜ் பெருநாள் தொழுகைக்கு எதுவும்            சாப்பிடாமல செல்வது ஸுன்னத்

مشكاة المصابيح بتحقيق الألباني  1440 - [ 15 ] ( صحيح )
عن بريدة قال : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ وَلَا يَطْعَمُ يَوْمَ الْأَضْحَى حَتَّى يُصَلِّيَ. رواه الترمذي وابن ماجه والدارمي
நோன்பு பெருநாள் தொழுகைக்கு சாப்பிட்டு விட்டு செல்வார்கள். ஹஜ் பெருநாள் தொழுகைக்கு ஒன்றும் சாப்பிடாமல் செல்வார்கள்.

@@@@@@@

6.வேறு வழியில் திரும்புவது
صحيح البخاري 986 قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيقَ»
986. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 13. இருபெருநாள்கள்
@@@@@@@

7.ஈத் தொழுகை முன் பின் எந்த தொழுகையும் இல்லை அது ஈத்காவாக இருந்தால் .
لا صلاة قبل صلاة العيد ولا بعده ان لم يكن في المسجد
صحيح البخاري 964عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمَ الفِطْرِ رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا، ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ بِلاَلٌ، فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلْنَ يُلْقِينَ تُلْقِي المَرْأَةُ خُرْصَهَا وَسِخَابَهَا»
964. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்) விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 13.இருபெருநாள்கள்

 @@@@@@@

8.திட்டுவது நன்றி கெட்டு நடப்பதால்                  சொர்க்கம் இழக்க நேரிடும்.
صحيح البخاري 1462عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَضْحًى أَوْ فِطْرٍ إِلَى المُصَلَّى، ثُمَّ انْصَرَفَ، فَوَعَظَ النَّاسَ، وَأَمَرَهُمْ بِالصَّدَقَةِ، فَقَالَ: «أَيُّهَا النَّاسُ، تَصَدَّقُوا»، فَمَرَّ عَلَى النِّسَاءِ، فَقَالَ: «يَا مَعْشَرَ النِّسَاءِ، تَصَدَّقْنَ، فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ» فَقُلْنَ: وَبِمَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ العَشِيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ، أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الحَازِمِ، مِنْ إِحْدَاكُنَّ، يَا مَعْشَرَ النِّسَاءِ
1462. அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கன் நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். மக்களே! தர்மம் செய்யுங்கள்!என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமகா இருப்பதை பார்த்தேன்!என்றார்கள். இறைத்தூதர் அவர்களே! ஏன் இந்நிலை?” எனப் பெண்கள் கேட்டதும், ”நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்: கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்: கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையிலும்) குறையுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கி விடுகிறீர்கள்என்று நபி(ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள். இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்(ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினார். இறைத்தூதர் அவர்களே! ஸைனப் வந்திருக்கிறார்என்று கூறப்பட்டது. எந்த ஸைனப்?” வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினார். எந்த ஸைனப்என்று நபி(ஸல்) அவர்கள் வினவ, ”இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்!என்று கூறப்பட்டது. அவருக்கு அனுமதி வழங்குகங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) இறைத்தூதர் அவர்களே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தம் குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார் (என்ன செய்ய?)” என்று கேட்டார். இப்னு மஸ்வூத் கூறுவது உண்மை தான்! உன் கணவரும் உன் குழந்தைகளுமே உன்னுடைய தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள்

@@@@@@@

9.விழா வாக கொண்டாட இரு பெருநாட்கள் மட்டுமே

 سنن النسائي -1538 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ لِأَهْلِ الْجَاهِلِيَّةِ يَوْمَانِ فِي كُلِّ سَنَةٍ يَلْعَبُونَ فِيهِمَا فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ قَالَ كَانَ لَكُمْ يَوْمَانِ تَلْعَبُونَ فِيهِمَا وَقَدْ أَبْدَلَكُمْ اللَّهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ الْأَضْحَى

அஹ்லுல் ஜாஹிலிய்யாவுக்கு இருந்த 2நாட்களுக்கு பகரம் அல்லாஹ் உங்களுக்கு இரு பெருநாள் தந்துவிடடான் என நபி(ஸல)சொன்னாங்க. ஹதீஸ் நஸஈ 1538.

@@@@@@@

10.பெருநாளில் விளையாடி கொண்டாடுவது
جواز اللعب يوم العيد

صحيح البخاري  952 - عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلَ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتِ الأَنْصَارُ يَوْمَ بُعَاثَ، قَالَتْ: وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ، فَقَالَ أَبُو بَكْرٍ: أَمَزَامِيرُ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا بَكْرٍ، إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا»
__________ 
[تعليق مصطفى البغا]
909 (1/324) -[  ش (بما تقاولت الأنصار) بما قاله كل فريق من فخر بنفسه أو هجاء لغيره. (وليستا بمغنيتين) ليس الغناء عادة لهما وحرفة ولا هما معروفتان بذلك ولا تغنيان بتمتطيط وتكسر وتهييج وحركات مثيرة وبغناء فيه تعريض بالفواحش أو تصريح بها أو ذكر الهوى والمفاتن مما يحرك الساكن ويبعث الكامن في النفس فهذا وأمثاله من الغناء لا يختلف في تحريمه لأنه مطية الزنا وأحبولة الشيطان]
[ر 443]
ஸஹீஹ் புகாரி 952. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?”என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள்.
இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும் என்று கூறினார்கள். 

صحيح البخاري  949 - عَنْ عَائِشَةَ، قَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثَ، فَاضْطَجَعَ عَلَى الفِرَاشِ، وَحَوَّلَ وَجْهَهُ، وَدَخَلَ أَبُو بَكْرٍ، فَانْتَهَرَنِي وَقَالَ: مِزْمَارَةُ الشَّيْطَانِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ عَلَيْهِ السَّلاَمُ فَقَالَ: «دَعْهُمَا»، فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا فَخَرَجَتَا،

950 - وَكَانَ يَوْمَ عِيدٍ، يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالحِرَابِ، فَإِمَّا سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِمَّا قَالَ: «تَشْتَهِينَ تَنْظُرِينَ؟» فَقُلْتُ: نَعَمْ، فَأَقَامَنِي وَرَاءَهُ، خَدِّي عَلَى خَدِّهِ، وَهُوَ يَقُولُ: «دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ» حَتَّى إِذَا مَلِلْتُ، قَالَ: «حَسْبُكِ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَاذْهَبِي»

949. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புஆஸ்” (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து நபி(ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?” என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரை நோக்கி அவ்விருவரையும்விட்டு விடுங்கள் என்றனர். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும வெளியேறிவிட்டனர்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 13.இருபெருநாள்கள்

950. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.
(பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோதுஉனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ!என்று கூறினார்கள். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 13.இருபெருநாள்கள்

صحيح مسلم : 1485 - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ بَيْنَمَا الْحَبَشَةُ يَلْعَبُونَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِرَابِهِمْ إِذْ دَخَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَأَهْوَى إِلَى الْحَصْبَاءِ يَحْصِبُهُمْ بِهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْهُمْ يَا عُمَرُ

ஸஹீஹ் முஸ்லிம் 1625. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபிசீனியர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் ஈட்டியெறிந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அங்கு வந்து, அவர்கள்மீது எறிவதற்காகக் குனிந்து சிறு கற்களை எடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அவர்களை விட்டுவிடுங்கள், உமரே! (விளையாடட்டும்) என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 8. பெருநாள் தொழுகை

@@@@@@@

11.வெடி பட்டாசு கூடாது
407 - ﻭﻋﻦ ﺃﺑﻲ ﺑﺮﺯﺓ - ﺑﺮاء ﺛﻢ ﺯاﻱ - ﻧﻀﻠﺔ ﺑﻦ ﻋﺒﻴﺪ اﻷﺳﻠﻤﻲ - ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ - ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﺰﻭﻝ ﻗﺪﻣﺎ ﻋﺒﺪ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﺣﺘﻰ ﻳﺴﺄﻝ ﻋﻦ ﻋﻤﺮﻩ ﻓﻴﻢ ﺃﻓﻨﺎﻩ؟ ﻭﻋﻦ ﻋﻠﻤﻪ ﻓﻴﻢ ﻓﻌﻞ ﻓﻴﻪ؟ ﻭﻋﻦ ﻣﺎﻟﻪ ﻣﻦ ﺃﻳﻦ اﻛﺘﺴﺒﻪ؟ ﻭﻓﻴﻢ ﺃﻧﻔﻘﻪ؟ ﻭﻋﻦ ﺟﺴﻤﻪ ﻓﻴﻢ ﺃﺑﻼﻩ؟». ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ، (2417). 2340 ﻭﻗﺎﻝ: «ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ». )

நான்கு காரியம் பற்றி பதில் சொல்லாத வரை கியாமதில் அசைய முடியாது அதில்1.எவ்வாறு சமபாதித் தாய்? 2. எவ்வாறு செலவழித்தாய்?
@@@@@@@

12.குர்பானி இறைச்சியை யார் யாருக்கு கொடுக்கலாமா?

فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَـرَّ ‌ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَـكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ 
(குர்பானி-)அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதைக் கேட்டவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும்  பொருட்டு இவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம். (அல்குர்ஆன் : 22:36)

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28)
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்);

எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.( அல்குர்ஆன் : 22:28)

********
கேள்வி: குர்பானி இறைச்சியை முஸ்லிமல்லாதவருக்கு கொடுக்கலாமா?
பதில்: கொடுக்கலாம். ஆனால் நல்லதல்ல.       
                  ஃபதாவா ரஹீமிய்யா 6/165

@@@@@@@

13.குர்பானித்தோல்
குர்பானி இறைச்சி / தோல் / எலும்புகள் இவைகளில் எதையுமே குர்பானி அறுப்பவருக்கோ தோலை உரிப்பவருக்கோ கூலியாக கொடுப்பது கூடாது.

குர்பானி தோல்களை விற்பனை செய்தால். அவைகளுடைய பணங்களை.தானும் பயன்படுத்தக்கூடாது.செல்வந்தர்களுக்கும் கொடுப்பது கூடாது அதை முற்றிலும் தர்மம் செய்துவிட வேண்டும்.

இஸ்லாமிய மார்க்க கல்வி பயிலும் மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற இப்பணங்களை செலவிடுவது மிகச்சிறந்த செயலாகும். அவர்களுக்கு அதை உரிமை படுத்துகின்ற முறையில் செலவிட வேண்டும்.

குர்பானி தோல்களின் பணங்களைக் கொண்டு பள்ளிவாசல் பராமரிப்பு செய்வது.சம்பளமாக கொடுப்பது கூடாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.