வெள்ளி, 30 செப்டம்பர், 2016

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே!

بسم الله الرحمن الرحيم
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே!
http://dawoodiaalimkalsangamam.blogspot.in/

وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰـرَكًا فَاَنْبَـتْـنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِيْدِ ۙ‏( 50:9)
1178- ٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَسْقَى قَالَ: ((اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ وَانْشُرْ رَحْمَتَكَ وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ)). هَذَا لَفْظُ حَدِيثِ مَالِكٍ ( رواه ابوداود).
1 .@@@@@@@

நீரின்றி அமையாது உலகு என்பது முதுமொழி.
மனிதனுக்கு மட்டுமின்றி பிற உயிரினங்களுக்கும் மிக முக்கியமான வாழ்வாதாரம் தண்ணீர். பூமியின் செழிப்புக்கு, உணவு உற்பத்திக்கு என்று எல்லாவற்றுக்கும், தண்ணீர் அடிப்படை என்பதால்தான் தண்ணீர்த் தேவையை சுலபமாக நிறைவேற்ற அல்லாஹ் வழிவகை செய்து பூமியின் மொத்த பரப்பளவில் 71% தண்ணீராக வைத்துள்ளான்

தண்ணீரை தறுபவன் அவனே!

கடல்,ஆறு, ஏரி போன்ற வற்றிலிருந்து தண்ணீர் திரவ நிலையிலிருந்து நீராவிக்கு மாறி காற்றில் கலந்து மேலே சென்று பின்பு மேகங்களை உருவாக்குகிறது. இதை நீர் சுழற்சி என்பர்.

أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنفُسُهُمْ  ۖ أَفَلَا يُبْصِرُونَ

அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? 32:27


பரக்கத்தான தண்ணீர்
وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُّبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ

 அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம். 50:9

ஓடையி்ல் ஆறுகளில் தண்ணீரை ஓடச் செய்கிறான்.
اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتْ اَوْدِيَةٌ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّيْلُ زَبَدًا رَّابِيًا‌
அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; (அல்குர்ஆன் : 13:17)

2.@@@@@@@

            அல்லாஹ்வின் இந்த அற்புத ஏற்பாட்டால் கிடைக்கும் தண்ணீரை சுமூகமாக பங்கிட்டு பயன் படுத்த மனிதனால் முடியவில்லை. தண்ணீர்ப் பிரச்சனையால் அண்டை மாநிலங்கள் சண்டை மாநிலங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.

இத்தனை கலவரம் எதற்காக? காவிரி நீர் பிரச்சினை உண்மையில் எப்படிப்பட்டது

1960-1980களுக்கு இடையில், காவேரி நதியில் கர்நாடக அரசு நான்கு அணைகளைக் கட்டியது. ஹேமாவதி, ஹரங்கி, கபினி மற்றும் சுவர்ணாவதி என்பவையே அவை.

காவிரி நதி:
கர்நாடகாவின் குடகுமலையில் தொடங்குகிறது காவிரி நதி. ஆறும் அதன் பிரிவுகளும், ஹாசன், மாண்டியா, மைசூரு மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டணம், தஞ்சாவூர் மற்றும் சில தமிழக மாவட்டங்கள் வழியாகவும் பாயும். இதில் பெரும்பாலான மாவட்டங்கள் பாசனத்திற்கு காவிரி நதியை நம்பியே இருக்கின்றன. பெங்களூரு மாவட்டமும் தனது நீர் தேவைக்கு காவிரியையே சார்ந்திருக்கிறது.

3 . @@@@@@@

காவிரி பிரச்சனையின் சுருக்கமான வரலாறு:

1924-இல் மெட்ராஸ் மாகாணம் மற்றும் மைசூர் மாநிலத்திற்கு இடையில் நீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அது 1974-இல் காலாவதியானது. 1960 மற்றும் 1980களுக்கு நடுவில், காவிரியில் கர்நாடகா நான்கு அணைகளைக் கட்டியது. இதனால், நீர்வழிக்குரிய குறைந்த வழியில் உள்ள தமிழ்நாடு, நிலையற்ற நிலையில், கர்நாடகத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை வந்தது. இதனால், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

உச்சநீதிமன்றம், மே மாதம், 1990 -இல் காவிரி நீர் நடுவர் மன்றத்தை அமைக்குமாறு மத்திய அரசிற்கு வழிகாட்டியது. ஜூன் மாதம், 1991-இல், CWDT இடைநிலை உத்தரவை அளித்து, ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டுக்கு 205 tmc நீரை அளிக்க உத்தரவிட்டதால், பிரச்சனை வெடித்தது.

1990 முதல் 2013 வரை இதுதான் குறைவாகவோ, அதிகமாகவோ நடந்து வருகிறது. ஒவ்வொருமுறையும் கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு குறைவான நீரை திறந்துவிட்டும், அதற்கு காரணமாக எங்களது மாநிலத்தின் சேமிப்பில் போதிய நீர் இல்லை என்றும், அது எங்களுக்கே போதுமானதாக இல்லை என்றும் கூறி வருகிறது.

2007-இல், காவிரி நதிநீர் நடுவர் மன்றம் தனது கடைசி உத்தரவை அளித்தது. மொத்தமாக இருக்கும் 740 tmc தண்ணீரில், பகிர்வை பங்கிட்டு அளித்தது:

தமிழ்நாடு - 419 tmc 

கர்நாடகா - 270 tmc 

கேரளா - 30 tmc 

புதுச்சேரி- 7 tmc 

இதற்கு அப்பால், 10 tmc தண்ணீர் சுற்றுச்சூழல் நோக்கங்களுக்காகவும், 4 tmc நீர் கடலில் எப்படியாகிலும் கலந்துவிடும் என்பதாக பங்கிடப்பட்டது. இதைப்பொறுத்த வரையில், ஒவ்வொரு வருடமும் 192 tmc தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டே ஆகவேண்டும். இந்த உத்தரவு, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் சொல்கிறது. எடுத்துக்காட்டாக, ஆகஸ்ட் மாதத்தில், கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு 50 tmc நீரை வழங்க வேண்டும்.

4 . @@@@@@@

இந்த வருடம் ஏன் இவ்வளவு போராட்டம்:

இந்த வருடம், கர்நாடகா தனது நான்கு அணைகளின் நீர்த்தேக்கத்தில் 80 tmc நீர் குறைவாக இருப்பதால், தண்ணீர் தர முடியாது என்று அறிவித்துவிட்டது. இதற்கு பிறகுதான் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழகத்திற்கு நீரை வழங்கும்படி ஆணையிட்டது.

பயிர் சாகுபடிக் காலங்கள்

தமிழ்நாட்டில் சாகுபடிக் காலங்கள் மூன்று: குறுவை (ஏப்ரல் முதல் ஜூலை) சம்பா (ஆகஸ்ட் முதல் நவம்பர்) மற்றும் நவரை (டிசம்பர் முதல் மார்ச் வரை).

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போகும் போது, காவிரி பிரச்சனை தலைதூக்குகிறது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்தில் பொழிய வேண்டும். ஆனாலும், அதற்கு முன்னர் அது தன் நீர் தேவைகளுக்கு கர்நாடகாவையே சார்ந்திருக்கிறது.

தெளிவற்ற மேலாண்மை யுக்தி

காவிரி நடுவர் மன்றத்தின் கூற்றுப்படி, பருவமழை பொய்க்கும் காலங்களில், தண்ணீர் சரிசமமாக பங்கிட்டுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இது நடப்பதில்லை. இரண்டு மாநிலங்களும் தனக்கு எவ்வளவு நீர் தேவை மற்றும் எவ்வளவு நீரை விட்டுக்கொடுக்க முடியும் என்பதை பொதுவாகவே அமர்ந்து பேசிக்கொள்வதில்லை
நன்றி : The News Minute

5 . @@@@@@@

அண்டை மாநிலத்தின் உரிமை

المعجم الكبير للطبراني  750- عن                            أَنَس بن مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا آمَنَ بِي مَنْ بَاتَ شَبْعَانًا وَجَارُهُ جَائِعٌ إِلَى جَنْبِهِ وَهُوَ يَعْلَمُ بِهِ.


عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه.رواه الحاكم في المستدرك وصححه الذهبي في التلخيص، والألباني في صحيح الأدب المفرد.

அண்டை வீட்டான் பசியில் வாட தான் மட்டும் வயிறு நிரப்புபவன் உண்மை விசுவாசியல்லஎனும் இறைத்தூதர் )ஸல் (அவர்களின் வாக்கு உணவுக்கு மட்டுமல்ல தண்ணீருக்கும் தான். பக்கத்து வீட்டுக்கு மட்டுமல்ல பக்கத்து காட்டுக்கும்தான் நாட்டுக்கும்தான்.

6 . @@@@@@@

தண்ணீரைத் தடுத்தவன் அல்லாஹ்வின்                               அருளைவிட்டும் தூரமானவனாவான்

2995 -[5] (ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ) ﻭﻋﻨﻪ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﺛﻼﺛﺔ ﻻ ﻳﻜﻠﻤﻬﻢ اﻟﻠﻪ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﻭﻻ ﻳﻨﻈﺮ ﺇﻟﻴﻬﻢ ﺭﺟﻞ ﺣﻠﻒ ﻋﻠﻰ ﺳﻠﻌﺔ ﻟﻘﺪ ﺃﻋﻄﻲ ﺑﻬﺎ ﺃﻛﺜﺮ ﻣﻤﺎ ﺃﻋﻄﻲ ﻭﻫﻮ ﻛﺎﺫﺏ ﻭﺭﺟﻞ ﺣﻠﻒ ﻋﻠﻰ ﻳﻤﻴﻦ ﻛﺎﺫﺑﺔ ﺑﻌﺪ اﻟﻌﺼﺮ ﻟﻴﻘﺘﻄﻊ ﺑﻬﺎ ﻣﺎﻝ ﺭﺟﻞ ﻣﺴﻠﻢ ﻭﺭﺟﻞ ﻣﻨﻊ ﻓﻀﻞ ﻣﺎء ﻓﻴﻘﻮﻝ اﻟﻠﻪ: اﻟﻴﻮﻡ ﺃﻣﻨﻌﻚ ﻓﻀﻠﻲ ﻛﻤﺎ ﻣﻨﻌﺖ ﻓﻀﻞ ﻣﺎء ﻟﻢ ﺗﻌﻤﻞ ﻳﺪاﻙ « ﻭﺫﻛﺮ ﺣﺪﻳﺚ ﺟﺎﺑﺮ ﻓﻲ» ﺑﺎﺏ اﻟﻤﻨﻬﻲ ﻋﻨﻬﺎ ﻣﻦ اﻟﺒﻴﻮﻉ "

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான் (அவர்கள் வருமாறு:) (ஒருவன், தன் பொருளை (அதிக விலைக்கு) விற்பதற்காக (அதைக் கொள்முதல் செய்த போது) வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன் ஆவான். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பின் (மக்கள் கூடும் நேரத்தில்) முஸ்லிம் ஒருவரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்தவன் ஆவான். இன்னொருவன், தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி, 'உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போன்றே இன்று நான் என்னுடைய அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன்" என்று அல்லாஹ் கூறுவான். என ஜாபிர் (ரலி) அறிவித்தார்.


'(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்ததாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். முஸ்லிம்

2359، 2360- حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ حَدَّثَنَا اللَّيْثُ قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شِرَاجِ الْحَرَّةِ الَّتِي يَسْقُونَ بِهَا النَّخْلَ فَقَالَ الأَنْصَارِيُّ سَرِّحِ الْمَاءَ يَمُرُّ فَأَبَى عَلَيْهِ، فَاخْتَصَمَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلزُّبَيْرِ: ((اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ أَرْسِلِ الْمَاء إِلَى جَارِكَ)).

Bukari : 2359 2360. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.  மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ஹர்ரா“ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், “தண்ணீரைத் திறந்து ஓட விடுஎன்று கூறினார். ஸுபைர்(ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறையையொட்டி) நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி(ஸல்) அவர்கள், “ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 42. முஸாக்காத் - நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்

7 .@@@@@@@

தண்ணீர் தர்மத்தை விட பெரும்கூலி                                                கிடைக்கும் தர்மம் எதுவுமில்லை

سنن أبي داود  1431 عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ الْمَاءُ
قَالَ فَحَفَرَ بِئْرًا وَقَالَ هَذِهِ لِأُمِّ سَعْدٍ

سنن أبي داود 1432 - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا مُسْلِمٍ كَسَا مُسْلِمًا ثَوْبًا عَلَى عُرْيٍ كَسَاهُ اللَّهُ مِنْ خُضْرِ الْجَنَّةِ وَأَيُّمَا مُسْلِمٍ أَطْعَمَ مُسْلِمًا عَلَى جُوعٍ أَطْعَمَهُ اللَّهُ مِنْ ثِمَارِ الْجَنَّةِ وَأَيُّمَا مُسْلِمٍ سَقَى مُسْلِمًا عَلَى ظَمَإٍ سَقَاهُ اللَّهُ مِنْ الرَّحِيقِ الْمَخْتُومِ

தன்னைப் போன்றே மற்றவர்களையும் யோசி

தனக்கு மட்டும் தாகம் தீர்ந்தால் போதுமென்று நினைப்பது சுயநலம் தன்னைப்போன்றே மற்றவர்களும் தாகம் தீர வேண்டுமென நினைப்பதே பொதுநலமாகும்.

2363- صحيح البخاريٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((بَيْنَا رَجُلٌ يَمْشِي فَاشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَنَزَلَ بِئْرًا فَشَرِبَ مِنْهَا، ثُمَّ خَرَجَ فَإِذَا هُوَ بِكَلْبٍ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ: لَقَدْ بَلَغَ هَذَا مِثْلُ الَّذِي بَلَغَ بِي فَمَلأَ خُفَّهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، ثُمَّ رَقِيَ، فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ)). قَالُوا يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا قَالَ: ((فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ))
.
2363. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?“ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 42. முஸாக்காத்

4961 -[15] (ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ) ﻭﻋﻦ ﺃﻧﺲ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻭاﻟﺬﻱ ﻧﻔﺴﻲ ﺑﻴﺪﻩ ﻻ ﻳﺆﻣﻦ ﺃﺣﺪ ﺣﺘﻰ ﻳﺤﺐ ﻷﺧﻴﻪ ﻣﺎ ﻳﺤﺐ ﻟﻨﻔﺴﻪ» . ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ

     இறைவிசுவாசிகளாகிய நாம், சொற்ப வாழ்வின் தண்ணீர்ப் பிரச்சனையை பெரிதாக்கி சொர்க்க வாழ்வின் தண்ணீர்ப் பிரச்சனையை மறந்து விடக்கூடாது.

6576- صحيح البخاري عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ، وَلَيُرْفَعَنَّ رِجَالٌ مِنْكُمْ ثُمَّ لَيُخْتَلَجُنَّ دُونِي فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِي. فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ)).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் உங்களுக்கு முன்பே ('அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!' என்பேன். அப்போது 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது' எனக் கூறப்படும். 
இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

8 . @@@@@@@

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே!

தண்ணீர் பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம் பருவகாலத்தில் தேவையான மழை பொழியாததே!
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போகும் போது காவிரி பிரச்சினை தலைதூக்குகிறது.
எனவே இத்தருணத்தில் மழைக்காக துஆச் செய்வதே பிரச்சினைக்கு முடிவாக அமையும்

1013- صحيح البخاري عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَذْكُرُ أَنَّ رَجُلاً دَخَلَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ باب كَانَ وُجَاهَ الْمِنْبَرِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُغِيثُنَا. قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ فَقَالَ: ((اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا)). قَالَ أَنَسٌ وَلاَ وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ وَلاَ قَزَعَةً وَلاَ شَيْئًا، وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلاَ دَارٍ، قَالَ فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ. قَالَ وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ الْمُقْبِلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا، قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ ثُمَّ قَالَ: ((اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ)). قَالَ فَانْقَطَعَتْ وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ.
قَالَ شَرِيكٌ فَسَأَلْتُ أَنَسًا أَهُوَ الرَّجُلُ الأَوَّلُ قَالَ لاَ أَدْرِي.

1033. அனஸ்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமையன்று மிம்பரில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஒரு கிராமவாசி எழுந்தார். இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குடும்பத்தினர் பட்டினியில் வாடுகின்றனர். எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்று அவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் (பிரார்த்திப்பதற்காகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். அப்போது வானத்தில் மேகம் எதுவும் இருக்கவில்லை. திடீரென மலைகளைப் போன்று மேகங்கள் திரண்டன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள் அவர்களின் தாடி வழியாக மழைத் தண்ணீர் வடிந்ததை கண்டேன். அன்றைய தினமும் மறுநாளும் மூன்றாவது நாளும் அதற்கடுத்த ஜும்ஆவரையுள்ள நாள்களிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. அப்போது அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்துவிட்டன. செல்வங்கள் மூழ்கிவிட்டன. எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தினார்கள். இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இதைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக இதை ஆக்கிவிடாதேஎன்று கூறினார்கள். அவர்கள் வானத்தை நோக்கித் தம்கையால் சைகை செய்த போதெல்லாம் மேகங்கள் விலகிச் சென்றன. முடிவில் மதீனா ஒரு குன்றின் மீது அமைந்திருப்பதைப் போல் மாறியது. கனாத்எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. எப்பகுதியிலிருந்து வரக்கூடியவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலில்லை.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 15. மழை வேண்டுதல


9 .@@@@@@@

மழை வேண்டும் போது நபியவர்கள் ஓதிய துஆக்கள்

1178- ٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَسْقَى قَالَ: ((اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ وَانْشُرْ رَحْمَتَكَ وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ)). هَذَا لَفْظُ حَدِيثِ مَالِكٍ.َ

பொருள் : யா அல்லாஹ்! உன் அடியார்களுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் புகட்டுவாயாக! மேலும் உனது அருளை பரப்புவாயாக! வறண்டு கிடக்கும் இந்த உனது ஊருக்கு உயிர் கொடுப்பாயாக!
ஆதாரம் : அபூதாவுத்

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا ، مَرِيئًا مُرِيعًا ، نَافِعًا غَيْرَ ضَارٍّ ، عَاجِلًا غَيْرَ آجِلٍ
பொருள் : யா அல்லாஹ்! எங்களுக்கு உதவிகரமான, மகிழ்ச்சிகரமான, பசுமை ஏற்படுத்தக்கூடிய மழையைப் பொழிய செய்வாயாக! நன்மை தரக்கூடிய நட்டம் ஏறபடுத்தாத விரைவான தாமதமாகாத மழையை பொழியச் செய்வாயாக!.
ஆதாரம் : அபூதாவூத்                        


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.